( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

குருஜியின் வாழ்வின் சில துளிகள்பெயர்: யோகி ஸ்ரீ இராமானந்த குரு               தந்தையார் வைத்த பெயர் லோகிதாசன் இது அவர்களின் குலதேவதையின் பெயராகும் ஆயினும் தாய் வழி பாட்டி ஸ்ரீதரன் என்று அழைத்ததனால் அப்பெயரே சில காலம் நீடித்தது பிறகு சிகிச்சை அளித்த மருத்துவர் தன்மருந்தை விட முருகனின் அருளே இவரை காப்பாற்றியதாக கருதி முருகன்       என பெயர் சூட்டினார் அந்த நாள் தொடங்கி சன்னியாசம் பெறுகின்ற நாள் வரை எம் பி ஸ்ரீதர் ஜெயமுருகன் என்றே அழைக்கப்பட்டார்பிறந்த தேதி :       1960-07-16
பெ ற்றோர் :        பாலு-அரிச்சந்திரக்கனி


தாக்கிய நோய்கள் :         ஒரு வயதிற்கு மேல் இளம்பிள்ளை வாதத்தால் பாதிக்கப்பட்டு இடுப்பிற்கு கீழ் உள்ள உறுப்புக்கள் செயலிழந்து விட்டன


கல்வித் தகுதி  :        ஏறக்குறைய 20 ஆண்டுகள் மருத்துவமனையிலேயே வாழ்க்கை கழிந்தாலும் அவ்வப்போது  வீடு திரும்பும் போது 5 ஆம் வகுப்பு வரை மட்டுமே கடின முயற்சியில் படிக்க முடிந்தது


படித்த  பள்ளிகள்  : 
       TDTA  நடுநிலைப் பள்ளி மற்றும் RC துவக்கப் பள்ளி


மனங்கவர்ந்த ஆசியர்கள்   :       திருமதி தேவநேசம் தங்கையா திருமதி சௌந்திரம்  அம்மாள் திரு ஜான்சன்


மறக்க முடியாத பள்ளித் தோழர்கள் :         காசிமுருகன், பூமியளந்த பெருமாள்,கோபால், செந்தூர் பாண்டியன், கிருஷ்ணவேல், ஜேம்ஸ்,சின்ன ஜமின்தார், அப்துல்ரஹ்மான், கேபிகே ராஜன், கிருஷ்டோபர், ஜெயசிங், க்ளோரிசாந்தினி,காமிலாபேகம்,மரகதம்,அன்னக்கிளி,முத்துக்குமார்,ஜெயக்குமார் மற்றும் கினேதா

                                               குழந்தை  பருவத்தில் யோகி ஸ்ரீ ராமானந்த குரு இலக்கிய நாட்டம்  :        மருத்துவமனையில் வலி மறப்பதற்காக தந்தை மற்றும் தமக்கையாரால் சொல்லப்பட்ட இராமாயணம் மற்றும் மஹாபாரதக் கதைகளால் சுயக்கற்பனையில் வளர்ச்சி ஏற்பட்டது


முதல் படைப்பு    :      கதை எழுதும் ஆர்வத்தில் 5 ஆம் வகுப்பு படிக்கும் போது பள்ளியின் மாணவர் மன்றம் ஏற்பாடு செய்த கலை விழாவில் கொள்ளைக்காரன் என்ற நாடகத்தை காலையில் எழுதி மாலையில் அரங்கேற்றியது


இலக்கிய அனுபவ வளர்ச்சி  :        கலையார்வ முடைய நண்பர்களான சேகர் ஜெயக்குமார் ஜெயராமன் ஆகியோரின் கூட்டுறவால் அமுதா ஒரு காவியக் கன்னி ,இராவணனின் மறுபக்கம்  சிலம்பரசி , பாஞ்சாலி சபதம் போன்ற மேடை நாடகங்களை எழுதி ஊர் பொது மேடைகளில் அரங்கேற்றினார் 1977 ல் ராணி வார இதழில் தூக்குகயிறு என்ற சிறுகதையும் மயக்கம் என்ற கவிதையும் பிரசுரரமாகி ஆர்வத்திற்கு துண்டுதல் செய்தனஆன்மீக அனுபவம்   :    1979 ஆம் வருடம் ஊமையன் என்ற சித்த புருஷன் உடலின் ஆதாரச் சக்கரங்களைத் தொட்டு விழிப்படைய செய்தார் அப்போதைய சூழலில் அதன் அர்த்தம் விளங்கா விட்டாலும் ஒருவித பரவச நிலையை உணர்ந்தார்


இடப் பெயர்ச்சி :    பிறந்த மண்ணை விட்டு தகப்பனார் வியாபாரம் செய்த விழுப்புரம் மாவட்டம் அரகண்ட நல்லூருக்கு 1980 ல் வந்தார் அதன் பின்னர் தான் சமூதாயத்தின் பல முகத்தையும் வாழ்வில் பல அனுபவங்களையும் காண பெற்றார் செல்வத்தால் ஏற்படும் அகங்காரமும் வறுமையால் உண்டாகும் தளர்ச்சியும் சமூகத்தில் ஊறிக்கிடக்கும் அறியாமையும் மூடத் தனமும் முதல் முறையாக இவர் காண நேரிட்ட போது அளவிட முடியாத அதிர்ச்சிக்கு உள்ளானார் இதுவரை தான் கொண்டிருந்த சமூக மதிப்பீடுகள் தவறானவைகள் என முடிவு செய்தார்.


                                       தாயார் மற்றும் சகோதரிகளுடன்  யோகி ஸ்ரீ ராமானந்த குரு  


 நாத்திக சிந்தனை :    அடிமைத் தனமும் மூட மதியும் வறுமையும் மக்களிடம் மலிந்து கிடப்பதற்கு மத நம்பிக்கைகளே மூலக்காரணம் என அவருக்கு தோன்றியது அந்தச் சூழலில் அவர் படித்த காரல்மார்க்ஸ், லெனின், மாவோ நூல்களும் அந்த சிந்தனைக்கு வலுசேர்த்தது


அரசியல் பிரவேசம்:   1980 களில் உருவான பொதுவுடமைச் சிந்தனை அவரை தீவிர அரசியல் செயல் பாட்டிற்கு இழுத்தது கம்யுனிஸ்ட் இயக்கங்களின் போராட்டம் மற்றும் அரசியல் நடவடிக்கைகளில் ஆர்வத்துடன் பங்காற்றினார் சிறிது காலத்தில் அந்த இயக்கங்களுக்கு உள்ளே நிலவும் அதிகார போட்டியும் வசூல் வேட்டையும் மனச் சங்கடத்தை ஏற்படுத்தியது இதனால் அவற்றின் மீதுள்ள ஈடுபாட்டை குறைத்துக் கொண்டு  அதி தீவிர போராட்டக் குழுக்களோடு உறவை நெருக்கமாக்கினார்.சித்தாந்த மாற்றம்:     ஒடுக்கப்பட்ட ஜனங்களுக்காக போராடுவதாக சொல்லிக் கொன்ட போராளிகள் முதலாளிகளின் கைக்கூலியாக செயல்படுவதை உடனடியாகவே புரிந்துக் கொண்டார் இத்தகைய அனுபவங்கள் பலவற்றை உடனுக்குடன் சந்தித்ததனால் பொதுவுடமை  சித்தாந்தம் பேசுவதற்கு சிறந்ததே தவி நடைமுறை வாழ்விற்கு உகந்தது அல்ல என்ற தெளிவிற்கு வந்தார் இந்த நிலையில் தகப்பனாரின் அறிவுரை நண்பர்களின் வேண்டுகோள் எல்லாம் சேர்ந்து காங்கிரஸ் கட்சியின் பால் ஈர்த்தது அக்கட்சியில் சேவா தளப் பிரிவில் இனைந்து சில காலம் பணியாற்றினார் இருப்பினும் அங்கிருந்த பதவிச் சண்டைகள் அவருக்கு பிடிக்கவில்லை எனவே அரசியலில் கவனம் செலுத்துவது வீண் கால விரயம் என்ற முடிவிற்கு வந்தார்


இலக்கணப் பயிற்சி:       அரசியல் ஈடுபாடு குறைந்ததனால் இலக்கிய ஆர்வம் அதிகரித்தது முறைப் படியிலான மொழிப் பயிற்சி இருந்தால் மட்டுமே இலக்கியங்களில் உள்ள நுட்பத்தை புந்து கொள்ளவும் பங்காற்றவும் முடியும் என தீர்மானித்து புலவர்  சு . கண்ணன் என்ற கவிஞர் பெண்ணைவளவன்  அவர்களிடம் தமிழ் இலக்கனம் கற்றார். அதே வேளையில் நண்பர் வேலு நாயக்கரிடம் ஆங்கிலமும், அரங்கநாதன் அவர்களிடம் சமஸ்கிருதமும் கற்றார்


வியாபார ஈடுபாடு:  தந்தையார் நடத்தி வந்த பல்பொருள் அங்காடியை முழுமையாக கவனித்தார் அதே நேரம் நண்பர் மஹேந்திர குமார் ஜெயினோடு இனைந்து  தங்க வியாபரத்திலும் ஈடுபட்டார்தற்கொலை முயற்சி:          1980 ஆம் ஆண்டு முதல் 1987 ஆம் ஆண்டு வரை அரசியல் இலக்கியம் வியாபாரம் என உற்சாகமாக சென்று கொண்டிருந்த யோகி ஸ்ரீராமானந்த குருவின் வாழ்கையில் 1987 மே மாதம் முதல் சூறாவளி அடிக்க ஆரம்பித்தது அதே ஆண்டு ஜூலை மாதம் 15 ஆம் தேதியில் பல தூக்க மாத்திரைகளை உட்கொண்டார் டாக்டர் புருஷோத்தமன் அவர்களின் மிகத் தீவிர சிகிச்சையால் காப்பாற்ற பட்டார்


சன்னியாசசங்கல்பம்:          தற்கொலை முயற்சி தோல்வி அடைந்த அவமானமும் மற்றவர்களின் கேலிக்கு ஆளாக நேடுமோ என்ற அச்சமும் பிரமாண்டமாய் அச்சுறுத்த சில நாட்கள் தனக்குள்ளேயே முடங்கி போனார் ஆனால் அவருக்கே உரிய போராட்ட குணம் பீறீட்டு எழ தன் வாழ்நாளை இறைவனுக்கும் மக்களுக்கும் அர்ப்பணிக்க உறுதி பூண்டு அந்திலி லஷ்மி நரஸிம்மர் முன்பாக ஸங்கல்ப்பம்1987 ஆகஸ்ட்டு 24 ஆம் தேதி எடுத்துக் கொண்டார்


ஆன்மீகபயிற்சிகள்:     கோதண்டபாணிபுரம் சிதம்பரம் பிள்ளையிடம் யோகாப்பியாசத்தின் சில நுனுக்கங்களும்; மதுரை விஜயரங்கராகவனிடம் முறைப்படியான தியானமும் கற்றுக்கொள்ள துவங்கினார் ஆயினும் அவருக்குள் எரிந்து கொண்டிருந்த ஆர்வ நெருப்பிற்கு இவர்களால் தீனி கொடுக்க முடியவில்லை இப்பயிற்சிகளில் தன்னிறைவு பெற தக்க குருவை தேடிக்கொன்டிருந்த போது அரகண்டநல்லூர் பச்சையம்மன் ஆலயத்தில் எதேச்சையாக சந்தித்த பெயர் சொல்ல விரும்பாத சித்தர் ஒருவர் குண்டலினி பயிற்சியை முறைப்படி குருஜி  உடல் நிலைக்கேற்றவாறு சொல்லிக்கொடுத்தார் 1988 ஜனவரி 24 முதல் தீவி பிரமச்சர்ய விரதத்தை மேற்கொண்டு 1991 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20ஆம் தேதி நள்ளிரவு 1-30 மணிக்கு குண்டலினி சிகரத்தை தொட்டார்


சாஸ்திர பயிற்சிகள்:     கோதண்டபாணிபுரம் சிதம்பரம் பிள்ளை; கடகால் துரைசாமி கவுண்டர் ; அரகண்டநல்லூர் பட்டுசாமி ஐயர் ஆகியோரிடம் ஜோதிடமும் ரேணுகொண்டா ராஜேந்திரன் ராஜூ; திருவனந்தபுரம் கிருஷ்ணமேனன் போன்றோரிடம் மந்திர சாஸ்திரமும் கீழையூர் பேபி (எ) மாதவனிடம் அதர்வண வேத பிரோயோகமும் கற்றார் இது தவி  சித்தர்கள், யோகிகள், மஹான்கள் பலரும்  இவரைத் தேடி வந்து ஞான மார்க்கத்தின் ரகஸிய வழிகள் பலவற்றை கற்பித்தனர்.


அமானுஷ்ய அனுபவங்கள்:     மந்திர யந்திர தேவதைகளின் தீவி உபாசனையால் சூட்சம சக்திகளின் நேரடி தரிசனங்களும் தொடர்பும் ஏற்பட்டது இதனால் பரகாய பிரவேசம் ஆஹாஷ சஞ்சாரம் ஐம்பூதக் கட்டுக்கள் போன்ற அரியக் கலைகளில் தேர்ச்சியும் நல்ல அனுபவமும் ஏற்பட்டது


வேறு அனுபவங்கள்:    நரிக்குறவர் ரங்காவிடம் வேட்டையாடுதல் காட்டு விலங்குகளின் இயல்புகள் பற்றியும் அரவாணி விமலாவிடம் அவர்களின் உணர்வுகள் வாழ்கை முறைகள் பற்றியும் பாலியல் தொழிலாளி ராஜேஸ்வரியிடம் விபச்சாரிகளின் நிலைப் பற்றியும் பிச்சைக்காரர் குப்புசாமியிடம் அவர்களின் மறுபக்கத்தையும் சிறைக்கைதி ரமேஸிடம் சிறை அனுபவங்களையும் தேச சஞ்சாரி வேதாந்தபுரியிடம் பல்வேறுபட்ட மக்களைப் பற்றியும் இரண்டு பாக்கிஸ்தான் யுத்தங்களில் போர் முனையில் பணிபுந்த ராணுவ அதிகாரி ராபர்ட் வின்சென்ட் அவர்களிடம் நவீன யுத்த தந்திரங்கள் பற்றியும் லாரி ஓட்டுனர் ஆரோக்கியசாமியிடம் நெடுஞ்சாலை ஓர வாழ்கை முறைகளையும் முழுமையாகத் தெரிந்துக் கொண்டார் மேலும் சமுதாயத்தில் மறைமுகமாகவும் நேரிடையாகவும் உள்ள பல்வேறு தரப்பட்ட விஷயங்களையும் அந்தந்த மனிதர்கள் மூலமாகவும் நேரிடை அனுபவமாகவும் தெரிந்துக்கொண்டார்முதல் ஆன்மீக சொற்பொழிவு:திருவண்ணாமலை அருணகிரிநாதர் விழாவில் 15-08-1994 ல்இந்து சமயம் கூறும் வாழ்க்கை நெறி என்ற தலைப்பில் உரையாற்றி பேராசிரியர்கள் சோ.சத்தியசீலன், அறிவொளி, ருக்மணிதேவி, பாடகர் பித்துக்குளி முருகதாஸ் டி.எம். சௌந்திரராஜன் உட்பட பலரின் பாராட்டை பெற்றார்


முதல் சன்மானம்:        கரிசல் நிலத்தில் கண்ணன் கீதம் என்ற கவிதையை பிரசுரம் செய்து 150 ரூபாய் சன்மானமும் சிறப்பு தரிசன அனுமதியும் கொடுத்தது திருமலை திருப்பதி தேவஸ்தான வெளியீடான ஸப்தகிரி மாத இதழ்.


முதல்    பரிசு:     சுமார்10 வயதில்திருவாசகம் ஒப்புவித்தல் போட்டியில் வெற்றி பெற்று திருமுருக கிருபானந்தவாரியார் அவர்களிடமிருந்து பரிசு பெற்றார்.


அறக்கட்டளை உதயம்: சமூக, சமய அறப்பணிகளுக்காக விவேகானந்தா சேவா சமிதி என்ற அறக்கட்டளை என்.சுப்பிரமணியன், வி.வி.சந்தானம், கே.ஆர்.பாபு, ஆர்.சக்திவேல், ஆர்.லக்ஷ்மிநாராயணன், கே.ஹரிஹரசங்கரன், எஸ்.செல்வபெருமாள், பி.நிர்மல்குமார், எஸ்.ராஜ்குமார், பி.ராதாகிருஷ்ணன் ஆகிய நண்பர்களை உறுப்பினர்களாக கொண்டு 1995 ஆம் வருஷம் அரகண்டநல்லூர் காவல் நிலையம் அருகில் உள்ள ஸ்ரீமங்கள விநாயகர் ஆயத்தில் துவக்கப்பட்டது

                                                              ஆலயத்தில் அறிமுக உரை


 சேவைகள்:     ஆலயங்கள் பலவற்றில் உழவாரப் பணிகள், பல நூறு பேர்களுக்கு கண் அறுவை சிகிச்சை செய்து கண் கண்ணாடிகள் வழங்கியது, ஊன முற்றோர்களுக்கு மூன்று சக்கர சைக்கிள் தொழில் உபகரணங்கள் உட்பட பல உதவிகள் வழங்கியது, விதவைகள் மற்றும் ஆதரவற்ற முதியவர்களுக்கு சுயதொழில் ஏற்பாடு செய்தது, ஏழைப் பெண்களுக்கு இலவச திருமணங்கள் நடத்தியது, கிராமங்கள் பலவற்றில் இலவச மாலைநேர வகுப்புக்கள் ஏற்படுத்தியது, தொழுநோய், யானைக்கால் நோய்களுக்கான தடுப்புமுகாம்கள், பொது மருத்துவ முகாம்கள்  புராண இதிஹாசங்கள் கீதை வகுப்புகள்; மாணவ மாணவிகளுக்கு சுயத்திறன் வளர்க்கும் பயிற்சிகள், தியான வகுப்புகள் என பல்வேறு வகையான தொண்டுகள்....


மறக்க முடியாத மனிதர்கள்:    திருவனந்தபுரம் மருத்துவ மனையில் தன்னோடு சிகிச்சை பெற்று அளவிட முடியாத பாசத்தைக் காட்டி மரணத்தின் கோர சித்திரத்தை மனதில் நிரந்திரமாய் தீட்டி 8 வயதில் இறந்து போன சிறுமி ஊர்மிளா, மருத்துவ மனை வாழ்வில் கண்டிப்போடு பராமரித்த செவிலித்தாய் அபர்ணா நாயர் அறிவிலும் வாழ்கைப் போராட்டத்திலும் எதிர்நீச்சல் செய்யும் மனோ வேகத்தை ஊட்டிய நண்பர் வேலு நாயக்கர் தனது ஆயுர்வேத திறமையால் இளம்பிள்ளை வாத நோயிலிருந்து இவரை மீட்டெடுத்தே தீருவேன் என போராடி விதியின் முன்னால் தோற்றுப் போன பால கிருஷ்ண பணிக்கர் இவன் விருப்பத்திற்கு எப்போதும் தடை போடாத தந்தை பாலு சோதனை மிகுந்த காலங்களில் பக்க பலமாய் நின்ற எம்.எஸ்.கே.அக்பர். திறமைக்கு முதலிடம் வேண்டும் என பல வாய்ப்புக்களை கொடுத்த திருவண்ணாமலை வி.தனுசு


துறவுபூனுதல்:      1997 ஆண்டு ஜனவரி 14ஆம் நாள் காலை 6-15 மணிக்கு               மஹாஅவதார் ஸ்ரீமத் ருத்ரபரமஹம்ஸரிடம் சன்னியாச தீட்ஷை பெற்றார்


ஆஸ்ரமம் உதயம்:     1999 ஆம் வருஷம் மார்ச் மாதம் மஹாஸ்ரீ இராமானந்த குரு மடத்திற்கான பூர்வாங்க வேலைகள் துவங்கி 2000 மாவது ஆண்டில் நிறைவு பெற்றது


                                                அயல் நாட்டு சீடர்களுடன்  யோகி ஸ்ரீ ராமானந்த குரு  ஆஸ்ரமப்  பணிகள்:  பரிபூரண அவதாரமான பஹவான் ஸ்ரீகிருஷ்ணனுக்கு நித்திய பூஜைகள், தனிமனித நலனுக்காகவும் சமுக ஷேமத்திற்காகவு யாகங்கள், ஹோமங்கள் நடத்துதல், மந்திர சாஸ்திரத்தின் அடிப்படையில் மனிதர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணுதல் சித்தா-ஆயுர்வேதா மருத்துவ ஆராய்ச்சி மற்றும் முழுநேர இலவச மருத்துவ சேவை, மறைபொருளாகிப் போன சாஸ்திரங்கள், அருங்கலைகள் போன்றவற்றை வெளியிட ஆய்வு, ஜோதிட சாஸ்திர ஆராய்ச்சி, இயற்கை வேளான்மை, கல்விப் பணி அரசியல் விழிப்புணர் பணி, மத நல்லிணக்கம் மற்றும் பல சமுகப்பணிகள்


சீடர்கள்:    தலைமைச் சீடர்களாக பொறியாளர் கே.கோவிந்தசாமி, டாக்டர் வி.வி,சந்தானம்

                                                          எழுதிய நூல்கள்                                1 உள்ளங்கையில் சிகரம்
                                2  இறப்பிற்கும் பிறப்பிற்கும் நடுவில்
                                 3   யார் ஞானி
                                 4 ஜோதிடப் பகாரங்கள்
                                 5 பிள்ளைகளை வழி நடத்தி செல்வோம்
.

எழுத்துலகில் திருப்புமுனை சீடர் ஆர். வெங்கட்டரமணன் மற்றும் சேலம் சீனிவாசனின் பெரும் முற்சியால் சி.எம்.ரத்தினசாமி அவர்கள் ஆசிரியராக இருந்த தெய்வீக ஆவிகள் அமானுஷ்ய மாத இதழில் இன்னொரு உலகம் என்ற தொடர் எழுதி அமெரிக்கா முதல் இலங்கை வரை பல வாசகர்களை பெற்றுதந்தது.


பத்திரிக்கைப் பணி:     தியான பூமி ஆன்மீக மாத இதழில் கௌரவ ஆசிரியர்
ஓம் பேசும் ஆவிகள், நலம்வள பேசும் ஆவிகள் போன்ற அமானுஷ்ய மாத இதழ்களின் ஆசிரியர் இலங்கை வீர கேசரி நாளிதழின் ஜோதிட கேசரியில் தலைமை ஜோதிட ஆலோசகர் பணி


                                                                  விஜய்  டிவி யில் நேர் காணல்தொலைக்காட்சி பங்களிப்பு:       விஜய் டிவியில் கேள்விகள் 1000 நிகழ்சியில் நேரடி ஒளிபரப்பில் பங்கேற்பு, மக்கள் டிவியில் உரிமைக்குரல் நிகழ்சியில் சிறப்பு விருந்தினர், வஸந்த் டிவியில் மெய்யா பொய்யா நிகழ்சியில் பலமுறை பங்கேற்பு, கலைஞர் டிவி யில் கருத்து யுத்தம் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர் மற்றும் பல நிகழ்ச்சிகளில் கலந்துள்ளார்.


தனித் தகுதிகள்:     மந்திரசாஸ்திரத்தில் பூரண தேர்ச்சி, ஜோதிடம்,வாஸ்து போன்ற துறைகளில் பூரண ஞானம் தேசிய மற்றும் சர்வதேசிய அரசியல் வரலாற்றுத் தெளிவு நவீன கலை இலக்கிய ஞானம் சுற்றுச்சூழல் ஆர்வம் கிராமப்புர மக்களின் பண்பாட்டுக் கூறுகளை ஆய்வு செய்து அவர்களின் நிஜமான எதிர்பார்ப்புக்களை நிவர்தித்தல் குடும்பங்களுக்கிடையில் ஏற்படும் மனச்சிக்கல்களை மனோ தத்துவ ரீதியில் அனுகி நீக்குதல் ஆன்மீக இலக்கிய சொற்பொழிவாற்றுதல்

                                                  ஆளுனரிடம் சாதனையாளர் விருது 

பெற்ற விருதுகள்:      அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர் சங்கம் சார்பில் கலைமாமணி விக்ரமன் முன்னிலையில் புதியப்  பார்வை ஆசியர் டாக்டர் மா. நடராஜன் அவர்களிடமிருந்து பாரதி பணிச்செல்வர் விருது, சிங்கப்பூரைச் சேர்ந்த அசன்டாஸ் நிறுவனம் சார்பில் தமிழக ஆளுனர் சுர்ஜித்சிங் பர்னாலா அவர்களிடமிருந்து வாழுங்கலை சாதனையாளர் விருது, அறிஞர் அண்ணா அறக்கட்டளை சார்பில் சென்னை மாநகர மேயர் மா.பாலசுப்பிரமணியன் அவர்களிடமிருந்து ஆன்மீக சேவா ரத்தினா விருது, தமிழ்நாடு சினிமா கலைமன்றம் சார்பில் மாநில தலைமை தேர்தல் ஆனையர் சந்திரசேகரன் முன்னிலையில் நடிகர் சாருஹாசனிடமிருந்து தத்துவப் பேராசிரியர் விருது எதிர்கால நோக்கம்:     வயிறு வளர்க்கும் கல்வி அல்லாது அறிவை வளர்க்கும் கல்வியை இளைஞர்களுக்கு வழங்க பாடுபட வேண்டும், ஆன்மீகத்தில் கலந்து விட்ட அரசியலை புறம்தள்ள வேண்டும் தாய் மொழி ஆர்வத்தை குலைக்கும் சக்திகளுக்கு எதிராக உழைக்க வேண்டும் நேர்மையும் தூய்மையும் பொதுவாழ்வில் கண்டிப்பாக கடைபிடிக்க மக்களுக்கு பயிற்சி அளிக்கவேண்டும் சுற்றுச்சூழல் மேம்பட தேசமெங்கும் மரமில்லாத வீடுகள் கூடாது என்றகட்டாயம் வர வேண்டும்அறிவு வளர்ச்சி பாதையிலுள்ள ஏற்றத்தாழ்வுகளை களையவேண்டும் பழங்கால விஞ்ஞானத்தையும் நவீன அறிவியலையும் ஒருங்கினைத்து புத்தம் புதிய உலகம் அமைய பாடுபட வேண்டும் விவசாய முன்னேற்றம் கைத்தொழில் மேம்பாடு போன்றவை வளரபாடுபட வேண்டும் பள்ளிக் கூடங்கள் கல்லூரிகள் கலாசாலைகள் அமைக்கவேண்டும் இன்னும் பல .............

                                  தலைமை  சீடர் Dr.V.V. சந்தானமுடன் யோகி ஸ்ரீ ராமானந்த குரு   


முகவரி

                         யோகி ஸ்ரீ இராமானந்த குரு
                         ஸ்ரீ குரு மிஷன்
                         விழுப்புரம் சாலை
                         காடகனூர் அஞ்சல் 605755
                         விழுப்புரம் மாவட்டம்
                         தமிழ்நாடு
                        தொலைபேசி எண்    +91- 9442426434                                                                                                தொகுப்பு  சதீஷ் குமார்
+ comments + 73 comments

Anonymous
08:32

உங்கள் வலைப்பக்கத்தில் உள்ள படைப்புகள் எல்லாம் ரொம்ப நல்லா இருக்கின்றது...


"தீதும் நன்றும் பிற‌ர் தர வாரா.."

என்றென்றும் அன்புடன்,
- ராகவன்..

நன்றி

நெகிழ்ச்சியான வரலாறு. நல்லதொரு தளத்தைக் கண்டத் திருப்தியில் மீண்டும் வருகிறேன்.
வாழ்த்துக்கள்.

Anonymous
16:39

அமானுஷ்ய அனுபவங்கள்: மந்திர யந்திர தேவதைகளின் தீவிர உபாசனையால் சூட்சம சக்திகளின் நேரடி தரிசனங்களும் தொடர்பும் ஏற்பட்டது இதனால் பரகாய பிரவேசம் ஆஹாஷ சஞ்சாரம் ஐம்பூதக் கட்டுக்கள் போன்ற அரியக் கலைகளில் தேர்ச்சியும் நல்ல அனுபவமும் ஏற்பட்டது


தங்களின் மிக நீண்ட அறிமுகத்திற்கும் நன்றிகள் யோகி அவர்களே,
தாங்கள் குறிப்பிட்டுள்ள பரகாய பிரவேசம் மற்றும் ஆகாஸ சஞ்சாரம் ஆகியவற்றில் தேர்ச்சியும் நல்ல அனுபவமும் கொண்டுள்ளதாக குறிப்பிட்டு உள்ளீர்கள்,அதை பற்றி எங்களுக்கு சற்று விளக்கமாக கூற முடியுமா

Anonymous
16:43

வணக்கம் திரு யோகி ஸ்ரீ இராமானந்த குரு...!

உங்களின் வாழ்க்கை பலருக்கு ஒரு உத்வேகத்தை அளிக்கும் என்பதில் ஐயமில்லை! இளம்பிள்ளை வாதத்தால் பாதிக்கப்பட்டு, 5-ம் வகுப்புவரை மட்டுமே படித்துள்ள் நீங்கள் இந்த அளவுக்கு முன்னேறி இருப்பது அனைத்து தமிழ் இளைஞர்களுக்கும் உங்கள் வாழ்க்கை வழிகாட்டியாக அமைந்தால் மகிழ்ச்சி!

உங்களின் புத்தகங்கள் இதுவரை படித்ததில்லை! மலேசியாவில் கிடைக்குமா? இல்லையெனில் தமிழகம் வரும்பொழுது வாங்க வேண்டும் என்ற ஆர்வம் கொண்டுள்ளேன்!

by siva

Anonymous
18:37

வணக்க்ம் குருஜி அவர்களே.... உங்களின் சுயசரிதையை படிப்பவர்கள் கண்டிப்பாக் கொஞ்ச நேரம் கண் கலங்குவார்கள்..
அதில் நானும் ஒருவன். நீங்கள் தேர்ந்தெடுத்த ஆன்மீகப் பாதை
மிகவும் புனிதமானது.. ஞானம் எல்லொருக்கும் கிட்டி விடாது. போன ஜென்மத்தில் நீங்கள் செய்த புண்ணியத்தின் வெளிப்பாடு இது. அனைவருக்கும் உங்களால் நன்மை ஏற்படட்டும்...வாழ்க உங்கள் தொண்டு....ஓம்

Ilayanila

குருஜிக்கு எனது நமஸ்காரங்கள்.

குருஜி..உங்கள் அறிமுக பக்கம் இப்போ படிச்சேன்..இவ்வளவு தடைகளை தாண்டிவிட்டு மேன்மையான உங்கள் நிலைக்கு வாழ்த்துக்கள்..உங்கள் சிந்தனைகளை பகிர்ந்து கொள்ளுவதற்கு நன்றிகள் ஐயா..!!

படிக்க படிக்க மிகவும் பிரமிப்பாக உள்ளது!!!! சோதனைகளை உங்கள் முயர்சிஆலும் குருவின் அனுக்ராஹதலும் மிக பெரிய சாதனைகள் புரிந்துலீர்கள்!!! மென் மேலும் சாதிக்க வாழ்த்துக்கள் குருஜி !!!!

இந்து மதமும் தமிழரும்..

தமிழ்(திராவிட} மக்களுக்கு ஒரு கடவுளும்,அக்கடவுள் இலக்கணத்தை கூறும் வேத ஆகமங்களும் இருக்குமானால் ,அந்த வேத ஆகமங்கள் தமிழ் (திராவிட ) மொழியிலும் ,அவற்றை ஆக்கியவர்கள் திரவிடர்களகதனே இருத்தல் வேண்டும்..இல்லையென்றால் தமிழ்(திராவிட) மக்களே வடமொழியை கற்று அம்மொழியில் திரவிடற்குரிய வேத ஆகமங்களை விளகினார்களா...? சத்தியமாக எனக்கு புரியவில்லை..

இன்றைய உலகிலே பல மதங்களும் ,அவை குறிக்கும் பல கடவுளரும் அவர்களின் இலகனங்களை விளக்கும் பல நூல்களும் உண்டாக்கபடிரிக்குது ..அவை எல்லாம் அந்தந்த நாடு மக்களால் அந்த்தந்த நாடு மொழிகளிலே உண்டாகிபடிருபது கண் கூடு...
எடுத்துக்காட்டாக கிருத்துவ மத கோட்பாடுகள் லத்தின் மொழில்லும் ,இஸ்லாம் மதம் அரபி மொழிலும் ,புத்த மொழி கோட்பாடுகள் பாலி மொழியலும் முதன் முதலில் செய்யப்பட்டன என்பதை யாரேனும் மறுக்க முடிமா.?

அடுத்து திராவிட் மதங்கள் என்று சொல்லப்படும் சைவ,வைணவ மதங்களில் சிவனையும்,திருமாலையும் குறித்து அவர்தம் இயல்புகளை விளக்கும் நூல் "இதுதான்" என்று கொள்வதற்கு பைபிள்,குரான் போன்ற தனி நூல் ஏதாவது இருகிறதா என்று பார்த்தால் அதுவும் இல்லை..

இதிலிருந்து ஒன்று புலபடுகிறது,... தமிழன் வழி தனி வழி என்றும் சொல்லும்படியாக கடவுளை பற்றிய (இயற்கையை..) கண்ணோட்டமும் மற்றவர்களிடம் இருந்து வித்தியசப்ட்டுதான் வழிபட்டு கொண்டிருந்தான்..

இடையில் சிலர் வந்து செய்த சூழ்ச்சியால் தமிழன் தடம் மாறி அதை விட முடியாமல்(இந்து மதத்தை) இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறான்..

http://mathimaran.wordpress.com/2010/09/11/article-332/

Sir,
Please discuss with SAIVA SIDDHANTHA ADDENAMS IN SOUTH INDIA and seek necessary clarifications from them
about your doubt.
EVEN BEFORE YOU AND I WERE BORN IN TAMILNADU GREAT SAINTS HAVE TAKEN BIRTH IN TAMILNADU.
HH.RAMALINGA ADIGALAR,HH.Ramanujar.
VARIOUS NAYANMARKAL & AZWARGAL.
THEY HAVE LEFT BEHIND Spiritual literature in Tamil.

yesterday i spoke to you sir i am really exited

sir iam johnprakash yesterday ispoke to you really i exited

குண்டலினி யோகம் பற்றி தங்கள் விளக்க உரை எழுதவும்
அன்புடன்
நெல்லை பெ. நடேசன்
அமீரகம்

உங்கள் வாழ்க்கை பற்றி படிக்கும்போது மற்றவர்கள் சொல்வதுபோல் துக்கமோ இல்லை பரிதாபமோ எனக்கு வரவில்லை நீங்கள் இந்த நிலையை அடைய தூண்டுதலாய் இருந்ததுதான் அந்த ஐந்து வயதில் நோயும் தற்கொலை முயர்ச்சியும், என்றோ விதைக்கப்பட்டது.

நன்றி உங்கள் வரலாறு என்னை கவர்தஹ்து

ஆதி சங்க்கரரின் காலம்
வாக்கியத்திற்க்கும் திருக்கணிதத்க்கும் பஞ்சாங்க வேறுபாடு
நடை முறையில் ஜாத்கர் அனுபவித்து வரும் பலனை வைத்துக்கொண்டு லக்னம் அல்லது ராசி உறுதி செய்யலாமே?
எனது இமெயில் விலாசம் naribala03@gmail.com

ஆன்மீகத்தில் அதிகம் நாட்டம் கொண்ட தாங்கள் அசிங்க அரசியலைப் பற்றியும் அரசியல்வாதிகளைப் பற்றியும் விமர்சிக்கிறீர்கள்.தங்களுக்கு இது உடன்பாடு ஏனோ?

Anonymous
16:48

இன்று ஒரு புது அனுபவம் , எனது தேடலில் ...

சிவராத்திரியின் மகிமைகள்
குருஜிக்கு எனது பணிவான வணக்கங்கள்,
சிவராத்திரியின் போதும் சொர்க்க வாசல் திறப்பின் கண் முழிக்கும் வழக்கமானது எவ்வாறு ஏற்பட்டது. இதனால் ஏற்படும் பலன்கள். இந்த கேள்வியை ரொம்ப நாளாக கேட்க வேண்டும் என்று தோன்றியது. தயவு செய்து பதில் அளிக்கவும்.

இப்படிக்கு
சோ. இராமகிருஷ்ணன்
Sharjah
United Arab Emirates.

AIYA NAAN UNGAL VAALKAI VARALATRAI PADITHTHEN UNGALUKKU UDAL MATTUMEA OONAM AANAAL ULLAM MEGAVUM SUTHTHAMANATHU AANAAL YEANAKKO UDAL NANTRAKAVE ULLATHU AANAAL YEANATHU MANAM MEGAVUM OONAMAGA ULLATHU ETHARKKU THAANGALTHAAN YEANAKKU NALL VALE SOLLA VEANDUMEANDRU MEGAVUM PANIVUDAN KEATTUK KOLGEREAN BY VINAYAGARAI MUNNAITHTHU UNGALAI VANANGUM MANAM KONDA ORUVAN..

Anonymous
23:01

I would like to join as a member in your your Ashram.
Before that I would like to meet you. Please advice me Guruji.
Sridharan.V. Chennai.

Anonymous
21:58

cd

rajan
17:49

கடவுள் இல்லை கடவுள் இல்லவே இல்லை , நம் ஆழ்மனம் தான் கடவுள் என்பது என் தனிப்பட்ட கருத்து ,நாம் ஒரு விஷயம் நடக்க வேண்டும் என்று ஆழ்மனதில் தினமும் நினைத்தால் அது கண்டிப்பாக நடக்கும் , அதை போல அது நடத்து முடித்தது போல காட்சிகளாக மனகணில் பதிவு செய்தால் அது கண்டிப்பாக நடக்கும் , ஆனால் இந்த கலை எல்லோருக்கும் சாத்தியம் கிடையாது , ஆகையால் கடவுள் விழிபாடு வந்து இருக்கலாம் , சாமி கும்பிடுபோது அனைவரும் கண்களை முடிகொண்டு தனக்கு நடக்கவேண்டிய விஷியத்தை மனதுக்குள் வேண்டிகொள்வார்கள் , அது அழ்மனிதில் பதியும் , முயற்சி இருதால் நிச்சியம் அது நடக்கும் .அதைப்போல பிரச்சனை உள்ள ஒரு மனிதன் தன் பிரச்சனைகளை யாரிடமாவது பகிர்த்து கொண்டால் அவனுக்கு மன அறுதல் கிடைக்கும் , சிலர் யாரிடம் பகிர்த்து கொள்ள மாட்டார்கள் , அது போல உள்ளவர்கள் மனதுக்குள கடவுள் முன்பு பகிர்த்து கொள்ளும் போது மன அழுத்தம் குறையும் .
இது ஒரு உளவியல் சார்த்த விஷியம் . தஞ்சை பெரிய கோயில் கட்டி 1000 ஆண்டு ஆகிவிட்டது ஆனால் இன்னும் நம்மால் அது அப்படி கட்டப்பட்டது என்று நிச்சியமாக சொல்ல முடியவில்லை , நம்மை விட அறிவில் சிறதவர்கள் நம் முனோர்கள் ஆகையால் கோயில் கட்ட கடவுள் விழிப்பட நிச்சியம் காரணம் இருக்கும் , அது இதுவாக இருக்கலாம் என்பது என் கருத்து. [ இது என் சொந்த கருத்து ]

என் கருத்து சரியா ! இல்லை என்றால் விளக்கவும்.

நன்றி
ராஜன் .சென்னை .

rajan
11:44

உங்களது யார் நீ ? வீடியோ பார்த்தேன் அதில் நீங்கள் யார் நீ என்று தேடுகள் என்று சொல்லி இருதிர்கள் , நான் ஒரு கணம் சில வினாடிகள் தேடினேன் எனக்கு கிடைத்த விடை , இன்று நான் நானாக இருபது நாளை நான் இல்லை நாளை நானாக இருபது நாளை மறுநாள் நான் இல்லை இப்படி மாறிக்கொண்டே போகிறது ?! ......

ராஜன் .

Anonymous
17:39

GURUPRASAD,
First let me wish you very good prosperity in the years to come from your 51st birthday.
I have sent today a detailed letter for using my agriculture land for the development of the mankind by cultivating a rare plants which saves many lives in the years to come. I am much interested to know about anjanam trees for universal beterment. Kindly give me an appointment to meet you in person.
with regards,
T.K. GURUPRASAD,
guruprasadtk@gmail.com, 9444005226

குருஜிக்கு எனது பணிவான வணக்கங்கள் மற்றும் என்ன இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...

Anonymous
21:17

இன்று போல் நீங்கள் என்றும் வாழ நாங்கள் இறைவனை பிராத்திக்கிறோம்!
எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் .உங்கள் வாழ்க்கை மேலோங்கி பிரகாசிக்கணும் என இன்று உங்கள் பிறந்த நாளில் வாழ்த்துகிறேன்

kumar Germany

Hello Guruji, Belated Birthday greetings to you.
First time, I came across your webpage and am delighted to read your biography. It's very scintillating to know your life-path so far and the way you have contributed to the Society despite your nature-driven biological limitations. Pray for your long and healthy life for many years to come, and your continued success in all your endeavors in public life.

i am really wondered.

தங்களின் வாழ்க்கை பதிவுகள் எங்களை போன்றோருக்கு படிப்பினைதான்...

எனது பதிவையும் பிரசுரித்ததற்கு நன்றிகள் பல..

நன்றியுடன்
sambathkumar.b
http://parentsactivitytamil.blogspot.com

Anonymous
12:17

ஐயா, வணக்கம். நான் தங்களைப் பற்றி அறிந்து சொல்லணா வியப்படைந்தது நிஜம்.நான் தங்களிடம் சமீபத்தில் தொலைபேசி வழி அறிவுரை பெற்றேன்.தாங்கள் இத்தகைய உடல் நலத்திலும் அயராத சமூகப் பணியும் ஆன்மீகப் பணியும் ஆற்றி வருவது தாங்களின் மேன்மையைப் பறைசாற்றுவதாக உள்ளது.உங்களைப் பாராட்ட வயதில்லை.வணங்கி பாக்கியம் பெறுகிறேன்.ஆசி வணங்கி அருள வேண்டுகிறேன்.எல்லாம் வல்ல எம்பெருமாள் ஸ்ரீமந் நாராயணன் தங்களுக்கு எல்லா நலத்தையும் வளத்தையும் பலத்தையும் அருளி எங்களையும் ஆசீர்வதிக்கட்டும்.

குருவே சரணம்

வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்...

ayya, thanglin varalaru padithen,thalaivangugiren. iraivan neradiyaga yarukkum edhuvum seyvadhillai, thangalaippondra gnanigalmoolamagathan makkalukku segirar. apparukku mudhumaiyil kidaitha gnanam ganasambandhaukku kuzandhai paruvathil kidaithadhu. thngalukku idaiyil kidaithulladhu. vanakkam.

guru bramma guru vishnu gurudevo maheswaraha guru saakshth parambramma thasmai sree gurave namo namaha please bless me 01/12/2011/ thursday 1.37pm s.natarajan chennai

தங்களின் உயரிய பணியினை படித்து வியப்படைந்தேன் .
நல்லோர் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு
எல்லோர்க்கும் பெய்யும் மழையாம்.
வள்ளுவன் வாக்கு என்றும் பொய்யாய் போனதில்லை.
அந்த நல்லோரில் தாங்களும் ஒருவர்

please send your e-mail to amaschoolsivathai@gmail.com
HM Sri muthumalaiamman Hr.Sec.School,Sivathaiyapuram,Thoothukudy dt.

While there are so many duplicates, I am really happy to see such a real good saint with a real good heart. Thank God.
Chandramohan.

Guruji, Wishing you a happy Birthday. You are my role Model.Currently i am leading good life only afgter I meet you.Really I am proud to tell that I am leading good life only because of your help only.Again HAPPY bIRTHDAY WISHES

குருஜி, வணக்கம்.
கடந்த வந்த தங்களின் வாழ்க்கைப் பதிவுகள் என்னை பிரமிப்பில் ஆழ்த்தியது. தங்களின் பிறந்த நாளின் போதே தங்களைப் படிக்க நேர்ந்தது மகிழ்ச்சிக்குரியது. தங்களுக்கு என் அன்பான பிறந்தநாள் வணக்கங்களை உரித்தாக்குகிறேன்.
- ரியாஸ், பத்திரிகையாளர்

வணக்கம் குருஜி!
தங்களின் கடந்தகால பதிவுகள் என்னை பிரமிப்பில் ஆழ்த்தியது. தங்களின் பிறந்த நாளான இன்று தங்களைப் பற்றி படிக்க வாய்த்தத் தருணம் மகிழ்வுக்குரியது. தங்களுக்கு என் அன்பான பிறந்தநாள் வணக்கம்.
- ரியாஸ், பத்திரிகையாளர்

vanakkam guruji,my name chandrasekaran en dob 17/10/1981 10.01am, when will i get marriage and good job pls send detail to sekar_pcs2006@yahoo.com...tk u

Dear JayaMurgan,
Manitha vala maan battai kurrikolaga kondulla neegal, entha manitharrkallal aalinthu varum Paravigal(Birds) and animals, entha iyarkaiyai nambi varkindrana ennru ungalluku naal theriyum.

Can you take some action to try to save these brids & animal around you? Instead of constructing Ashram/Madam/etc, why don’t you build small forest with water source? You can grow rare tree (which is dying today), rare furits tree for birds and don’t let any human’s enter into that forest. Those birds and animals will thankful to you forever….

Etha iyarkai alliyamal irruka pattupatum anaithu uyirekalukum nandri..!

~Prabu Kuppusamy

Anonymous
15:31

Guruji really you are great...

15:50

arumai..... vaazhkkaiyil oru puthiya thiruppam eppothum erpadalaam, eppadi vendumaanaalum erpadalaam... atharkku neengale uthaaranam.

Anonymous
14:48

guruvai therindhu konda thirupthi.nanri

ஒவ்வொருவர் வாழ்வும் மற்றவர்களுக்கு பாடம் , அந்த வகையில் தங்களின் வாழ்வின் துவக்கத் தடைகளை துவக்கத்திலேயே முறியடித்து வென்று நீங்கள் பெற்ற இமாலய சாதனையை மற்றவர்கள் தங்களுக்கு ஒரு பாடமாக கொண்டால் எனக்கு சந்தோஷமாக இருக்கும் .

அன்புடன் கருணாகரன்R.

தேவனுடைய அன்பால் ... காப்பாற்றப்படுகிறவன் .
20:26

மனம் திரும்புவோமாக!. பரலோக ராஜ்யம் சமீபித்திருக்கிறது. இயேசு கிறிஸ்துவின் மூலம் பிதாவாகிய தேவன் தம்மை உங்களுக்கு வெளிப்படுத்துவாராக. பக்தி உள்ளவனை தேவன் தமக்காக தெரிந்து கொண்டார் என்ற வார்த்தையின் படி உங்களை அவர் தெரிந்து கொள்வாராக!. உங்கள் இருதயத்தில் சமாதானம் உண்டாவதாக. மனம் திரும்புவோமாக!. ஆமென்(அப்படியே ஆகட்டும்).

enaku ungalin aasirvatham vendum...

மரபணு மாற்று பயிர்கள் பற்றி அரசு எடுத்திருக்கும் நகர்வினை மனசாட்சி உள்ள ஒவ்வொரு இந்தியக் குடி மகனும் எதிர்த்துக் குரல் எழுப்ப வேண்டும்....

வாழ்க வையகம்! ஓங்குக மனித நேயம்!!!

அய்யா நீங்கள் நீடூடி வாழ இறைவனை வேண்டிகொள்கிறேன்

அய்யா வணக்கம், நான் தங்களின் சீடன், மகாலிங்கம், கோபியிலிருந்து, தங்களின் ஆசி பெற்று நான் என் தொழிலில், முன்னேறிக்கொண்டு இருக்கிறேன் . மேலும் வளர்ச்சி பெருக தங்களின் ஆலோசனைகளை அவ்வப்போது நேரில் வந்து தங்களை சந்தித்து பெற்று வருகிறேன். எனக்கு ஐஸ்வர்யம் மட்டும் கையில் நிற்பதில்லை .இதற்கு ஒரு வழிகாட்ட வேண்டுகிறேன்.

என்றும் நன்றியுடன் உங்கள் சீடன்,

மகாலிங்கம், கோபி. 9442488539

சாகா கல்வியை பற்றிய தங்களது விரிவான கருத்துக்களை எங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். சித்தர் இலக்கியங்களையும், நாயன்மார்கள், ஆழ்வார்கள், சமய சித்தாந்தவாதிகள், இறை தத்துவத்தை முழுவதுமாக புரிந்துகொண்டதாக கூறுகின்ற தற்கால சமயவாதிகளாகட்டும், பல பீடங்களை நிறுவி சமய தொண்டு ஆற்றும் பீடாதிபதிகள் வரை அனைவரும் மரித்துதானே போனார்கள். அப்படியென்றால் சித்த பெருமக்கள் குறிப்பிடும் சாகாகல்வி பொய்யா? ஜீவ சமாதிகளில் அதிர்வலைகளை உணர்ந்ததால் குழப்பத்தில் இருக்கிறேன். தங்கள் வாயிலாக தெளிவை நாடுகிறேன்.

அறியொனாத ரிஷிமூலங்
குருவின் வாழ்வில்
அத்தனையும் புடம்போட்ட
அன்புவழிகாட்டி
அண்டமுவந்தளித்த
ஆற்றலில் வித்து
ஆழ்ந்த பணிவோடு
அடிபணிந்து போறுவமே!!!

How to get appointment in kuru jee

ஐயா உங்கள் அமிர்த தாரா மந்திரத்தை பற்றி கேள்வி பட்ட நாள் முதல் மிகுந்த ஆவல் கொண்டேன் எனக்கு பெரியதாக கோடிஸ்வரனாக ஆகா வேண்டும் என்பதில் ஆசை இல்லை எனக்கு இப்பொழுது பெரிய வசதியும் இல்லை இருபினும் எனது முயற்சிகள் பலித்து என்னால் பலருக்கு உதவும் வகையில் ஒரு நல்ல நிலைக்கு வரவேண்டும் ...
அதன் மூலம் இவுலகின் மக்களின் உயர்வு,தாழ்வு பாரபட்சம் அனைத்தையும் தகர்த்து அணைத்து மனிதர்களுக்கும் உதவிகளை செய்யவேண்டும் என்பதே எனது ஆசை.
என்னை அறிந்துகொள்ள உதவும் தங்கள் மந்திரத்தை தானம் பெற மிகுந்த ஆசை கொண்டுள்ளேன்.
ஆகையால் தங்களை பணிந்து வேண்டுகுறேன் எனக்கு அமிர்த தாரா தீட்சை தாருங்கள்.....

Respected Guruji Ayya , Yesterday (21.12.2015) i have got blessings from you and am very blessed getting " AMIRDHA THARA " from you.

Am sincerely thank you guruji

Yours sincerely
STALIN.A

Respected Guruji Ayya , Yesterday (21.12.2015) i have got blessings from you and am very blessed getting " AMIRDHA THARA " from you.

Am sincerely thank you guruji

Yours sincerely
STALIN.A

RESPECTED GURU JI AYYA ,
THANKS FOR " AMIRDHA THARA " GIVEN TO ME ON 20.12.2015, I THANK YOU FROM MY BOTTOM OF HEART.
STALIN.A

vanakam guruji
yen peyar jagadeshwari
thangalidam erundu yenaku yenda badilum varavillai
ungalai panivanbudan vendi ketukolgiren
yenaku arul puriyavendum ayya
nan anmeega valiyil sella virupapadugiren
thirumanathin meedu patrillai
migunda thalvudan ketuklgiren yenaku badil kurungal
yen anmeega valvuku vali sollungal ayya
edarku thangalidam yedenum manthiram erundal yenaku thandarula vendum
yen veetil yenaku thirumanam nichayikum munbu yenaku udavi seiyungal
uyir ullavarai thangalaiyum yen deivathaiyum maraka maten
plz plz ayya yenaku vidai kodungal

ayya ungalin badilukaga kathirukiren arulpuriya vendum

அஹம் பிரம்மாஸ்மி

Guruji ungal asirvatham onru pothum enaku na en life la nalla munneri elai kulanthigal neraya help panna asaipadukiren athu nadakuma

Kadaul arul irundal neengalum nanum sandippom.Palajanma thodarbupola irrukku.

guruji vanakkam en appa kudipalakkathirku addimai aakeveter athlerunthu vedupada vali kurunkal plz

குருவின் வாழ்வும் அர்பனிபும்

குருஜிக்கு எனது நமஸ்காரங்கள்

We as human being were given some powers and decision making capacities by Supreme consciousness ( Paramatma ) . It is sufficient for life. But you may face situation which is beyond your capacity , intelligent or even by mental powers.

Temples are built to cleanse our mental plane so also meditation, Yoga etc.,

There are more than proven 100 ways to alleviate our bodily or mental avasta ( sufferings). One of the ways going to temple and worship.

ஜெயசிங்.தி
00:24

குருஜீ அவர்களுக்கு வணக்கம் தாங்களின் சேவைகளை ஆசிரியர் பகுதியில் படித்து மிகவும் வியப்படைந்தேன் தாங்களின் மென்மேலும் வளர எல்லாம் வல்ல ஆண்டவனை பிராதிக்கிறேன் ஐயா

Anonymous
13:47

நன்று


Next Post Next Post Home
 
Back to Top