Store
  Store
  Store
  Store
  Store
  Store

புராணங்களை குப்பையில் போட்டுவிடலாமா?

கேள்வி : இன்றைய வாழ்விற்கு புராணங்கள், இதிகாசங்கள் தேவைதானா ?

   புராணங்களும், இதிகாசங்களும் எந்த சூழலிலும் மனித குலத்திற்கு வழிகாட்டக் கூடியதாகவே இருந்துள்ளது,வாழ்க்கையில் ஏற்படும் சந்தோஷங்கள் துக்கங்கள் அனைத்தும் இதிகாசங்களிலேயே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக “ஒருவன் பொதுவாழ்வில் இழக்கக் கூடாதது  பதவி. தனிப்பட்ட வாழ்வில் இழக்கக் கூடாது மனைவி” இவையிரண்டுமே ஒரே நேரத்தில் இழந்தவன் ஸ்ரீராமன், ஸ்ரீராமனுக்கு ஏற்பட்ட இதே நிலைமை இன்றும் பலருக்கு ஏற்படுகிறது அல்லவா? அப்படிப்பட்டவர்களுக்கு அவதார புருஷனாக மட்டுமல்லாது ஆறுதல் புருஷனாகவும் ஸ்ரீராமன் இருக்கிறார் அன்றோ? சொந்த சகோதரர்களையே எதிர்த்து நிற்கும் நிலை கர்ணனுக்கு மட்டுமா ஏற்படுகிறது? நமது பக்கத்து வீட்டு கந்தசாமிக்கும் கூட ஏற்படுகிறது.


           பெற்ற மகனையே தன் மகன் என்று கூறமுடியாத துர்பாக்கிய நிலை ‘குந்தி’க்கு மட்டும்தானா ஏற்பட்டது? வாழ்வில் மிக முக்கியமான காலகட்டத்தில் சோர்ந்து போய் நிற்பது அர்ஜீனன் மட்டுமா? உலகிலுள்ள அனைவரும் தானே? காயப்பட்டவனுக்கு மருந்து தேவை, அந்த மருந்தை தருவது இதிகாசங்கள், நோயிருக்கும் வரை வைத்தியனுக்கு வேலையுண்டு, உலகில் குழப்பங்கள் இருக்கும் வரை புராணங்களும். இதிகாசங்களும் இருக்கும், “ஆகவே நாம் இருக்கும் வரை நம்மால் முடிந்தவரை அந்த காலத்தால் அழிக்கமுடியாத பொக்கிஷமாகிய புராணங்களையும்,இதிகாசங்களையும் போற்றி பாதுகாப்போம்

Contact Form

Name

Email *

Message *