என்பதை
மறந்தவ செத்துக்கிடக்கிறாள்
எனக்கு
தாலிக்கயிற்றை தந்தவனை
சுமந்தவள் செத்துக்கிடக்கிறாள்
சொல்லுக்கு சொல்
என்னை சுட்டு ரசித்தவள்
வாய்மூடிக் கிடக்கிறாள்
வார்த்தையை நெஞ்சில்
அறைந்துக் கொன்றவள்
அணைந்துக் கிடக்கிறாள்
நாலணா கொடுத்தால்
அறைக்கும் அரிசியை
குத்தச் சொன்னவள்
முதுகு ஒடிய
குத்தி முடிச்சா
குற்றம் சொன்னவள்
வயிற்றில் பிள்ளையை
சுமந்தபோது
நெஞ்சில் மிதித்தவள்
என்
வாழ்க்கைத் துணையை
வாயைக்கட்டி
கல்லாய் சமைத்தவள்
வாரிசைக் கொண்டு
வாசலில் வந்தபோது
வரிசையை மட்டும்
வாங்கிக் கொண்டவள்
குறைந்த நகைக்கு
குத்திக்காட்டி
என்
குலத்தை பழித்தவள்
அக்கம் பக்கம்
வீடுகளில் எல்லாம்
வம்பை வளத்தவள்
வார்த்தைப் பேச
முடியாமல்
என் நட்பைக்
கெடுத்தவள்
இரும்புப் பெட்டி
சாவி கொண்டு
ஆட்சி செய்தவள்
இன்று
எறும்பு மொய்க்க
கட்டிலின் மீது
பிணமாய் கிடக்கிறாள்
ரத்தம் குறையும்
நரம்புத் தளரும்
என்று நினைத்தாளா?
சதையும் ஒட்டி
கண்ணும் மங்கும்
என கனவு கண்டாளா?
முட்டுத்தட்டி
மூலையில் விழுவோம்
என்பதை தெரிந்தாளா?
செத்தால் கூட
வருவது எதுவென
நினைத்துப் பார்த்தாளா?
பெட்டி நிறைய
உள்ளப் பத்திரம்
கூடவந்திடுமா?
நீ கட்டிக்காத்த
காசும் பணமும்
மூச்சைத் தந்திடுமா?
வட்டிப் பணத்தில்
வளர்ந்த உடம்பு
நெறுப்பில் குளிர்ந்திடுமா?
மாமியார் என்ற மரியாதையில்
மண்ணும் விட்டுடுமா?
வாழும்போது
வார்த்தையில் கொஞ்சம்
அன்பை சேர்த்திருந்தால்
வீழும்போது
என்நெஞ்சக் கூடு
விறகாய் எரிந்திடுமே!
பாழும் பணத்தை
பார்த்த
நீ என்னை
பெண்ணாய் பார்க்கலையே!
பாலு ஊற்றும்
பொழுதில் கூட
பாசம் பிறக்கலையே!
எனக்கு வந்த
மருமகளை
ஓரம் தள்ளாமல்
பிணக்கு வந்து
என்னை அவளும்
எட்டி உதைக்காமல்
உனக்கு வந்த
நிலையால்
கற்றுக் கொண்டேன் நான்

+ comments + 6 comments
நல்ல கவிதை சாமி! என்ன கொடுமைடா! சாமி! ஆமா சாமி, பெண்ணுக்கு எதிரியும் பெண்தானோ! மாமியார் இலலைன்னா, மருமகள். ஒவ்வொரு வீட்டிலும் ஒரு ....... சாமியோ! மருமகளை பத்தி எழுதுங்க சாமி! இதுல இடையில் மாட்டிக்கிட்ட மத்தளத்தோட கதி என்ன! குடும்பம் என்றால் குதறப்படுவது ஆண்களாக மாறி விட்டது! என்னம்மா! இதோ வரேன்டா, என் மனைவி, பார்க்கலாம்!
குருஜி உண்மையிலேயே இவ்வரிகள் சுமக்கும்
வார்த்தைகளை பத்து ,பதினைந்து வருடங்களுக்கு
முன்வரை பெருண்பாண்மை மருமக்கள்கள்
அனுபவித்தவை .காலத்தின் மாற்றத்தால்
இன்று சிலர் மட்டுமே சந்திக்கிறார்கள்
இன்றைய மருமகள் நாளைய மாமியார் ....
வாழ்க்கை ஒரு சக்கரம் என்பதை நிறையப்பேர்
மறந்து போகிறார்கள்
கவிதை மிக அருமை குருஜி
என்றும் கவியுடன்
அ .செய்யது அலி
மருமகளாய் இன்றிருப்பவர் நாளை மாமியார் ஆகும் போதும் அதையே செய்யாமல் இருந்திருந்தால் இந்தப் பிரச்னை தொடர்ந்து வந்திருக்கவே வாய்ப்பில்லையே! ஒரே தலைமுறையோடு இந்தப் பிரச்னை முடிந்து போயிருக்குமே!
கவிதை சுடுகின்றது.
இதுபோன்ற பிரச்சினைகள் மாமியாருக்கும் மருமகளுக்கும்தான் வருகிறது. ஏன் மாமனாருக்கும் மருமகனுக்கும் வருவதில்லை????
கவிதை நிதர்சனம் சொல்கிறது. நன்று.
கவிதைக்கான படங்களை எங்கிருந்து கிடைக்கப் பெறுகிறீர்கள் ஐயா?
ஆண்களாவது கத்தியில் ஒரே வெட்டு இல்ல ஒரே குத்து
ஆனா இந்த பொம்பளைங்கள் தினம் தினம் கொள்ளும்
நமக்குதான் உசுரு போகாது .