( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

மாதா,பிதா,குரு தெய்வம்! எப்படி...?

   கைகளை கூப்பி வணக்கம் வைப்பது தீண்டாமையின் இன்னொறு வடிவம் என சில அறிஞர்கள் குறிப்பிடுவதை சுட்டிக் காட்டி அது தவறுதலான கருத்து என்று நாம் விளக்கி இருந்தோம்

 அதை படித்த பலர் பாராட்டுக்களை தெரிவித்தனர் அந்தப் பாராட்டு மொழிகளுக்கு நடுவில் தாய் தந்தை மற்றும் குருமாரை வணங்குவது கூட ஒருவித அடிமையுணர்ச்சி அது ஒழிக்கப்பட வேண்டும் என்று கூறுப்படுகிறது அது உண்மையா இல்லையென்றால் அதன் நிஜப் பொருளென்ன? என்றெல்லாம் சிலர் கேட்டிருந்தனர் அவர்களுக்காக இந்தப்பதிவு

     அம்மா நம்மை கருவில் சுமப்பதாக சொல்கிறார்கள்.  இந்த கரு சுமையை எல்லா பெண்களும் பெருமையாக பேசி கொள்கிறார்கள்.

   பிள்ளையை சுமப்பதில் உள்ள சிரமத்தால் அன்னை புனிதமானவள் என்று கருதப்படுகிறாள்.

   உண்மையில் நம் பிறப்பிற்கு அம்மா மட்டுமா காரணம்? 

    அப்பாவுக்கு அதில் பங்கே இல்லையா?

   அப்படி சொல்லி விட முடியாது.

   கருவறைக்கு வருவதற்கு முன்னால் அப்பாவின் அடிவயிற்றில் தான் நாம் இருந்தோம்.  அவர் மட்டும் வீரியமிக்கதாக நம்மை வைத்து கொள்ளவில்லையென்றால் எத்தனையோ கோடி அனுக்களில் ஒன்றாக செத்து மடிந்து இருப்போம்.

  ஆகவே நமது பிறப்பில் அப்பாவும், அம்மாவும் முக்கிய பங்கு ஆற்றுகிறார்கள். 

 உடலை தந்து அது வளர உயிரை தந்து, அளப்பெரிய ஆற்றலை தந்து வளர்க்கும் அவர்கள் கண்ணுக்கு தெரியும் கடவுள் என்றால் மிகையில்லை.

 ஒரு மனிதனின் வாழ்க்கைக்கு உடம்பு எந்த அளவு முக்கியமோ  அதே அளவு முக்கியம் அறிவும் ஞானமும் ஆகும்.

  நாம் யார்?  நாம் எங்கிருந்து வந்தோம்?  எங்கே போகிறோம்?  எதுவாக ஆவோம்?  என்ற கேள்விகளுக்கு எல்லாம் தெளிவை தந்து வாழ்க்கையை வளப்படுத்துவர் குரு. 

  எனவே அவரும் பார்க்கப்படும் பகவான் ஆகிறார். 

  இவர்களை வணங்குவதும் கடவுளை வணங்குவதும் ஒன்று தான் என நமது இந்து மதம் மட்டுமல்ல.  உலகத்தில் உள்ள எல்லா மதமும் சொல்கிறது.
     மந்திர அனுபவங்கள் படிக்க இங்கு செல்லவும்

+ comments + 3 comments

வணக்கம் குருஜி. என்னை பொறுத்தவரை அம்மா என்பவள் சத்தியம். அம்மா மூலமாகதான் அப்பா நமக்கு தெரியவருகிறது. எனவே அப்பா என்பவர் நம்பிக்கை. சத்தியமும், நம்பிக்கையும் சேர்வதால் தான் எல்லாருக்கும் வாழ்கை கிடைகிறது. எனவே வாழ்க்கையில் நன்றாக வாழவேண்டும் என்றால் அம்மா, அப்பாவின் ஆசீர்வாதம் வேண்டும். அடுத்து கடவுளிடம் என்னதான் கஷ்டம் போகவேண்டும் என்று வேண்டினாலும், அவரவர் கர்மவினைகளுக்கேற்ப தான் கடவுள் கொடுப்பார் என்று இந்து மதம் சொல்கிறது. ஆனால் குரு என்பவர் நமக்கு உண்மையிலேயே தகுதி இருந்தால், நம் கர்மவைமாற்றி நம் வாழ்க்கையை. உயர்வு நிலையை கொடுப்பவர். எனவே அவர் கடவுளை விட ஒரு படி மேலே. எனவே மாத,பிதா,குரு மூவரும் கடவுள் தான். அருமையான பதிவு குருஜி இன்று. மிக்க நன்றி.

வணக்கம் குருஜி சிறந்த பதிவு

Raja Ganesan
11:32

நண்பர்களுக்கு சமர்ப்பணம்.....
கல்லூரி விழாக்களில் குதூகலித்தது இறந்தகாலமாகிவிட்டது......!!!!!!
கல்லூரி விழாக்களை கண்களில் கண்ணீரோடு
வேடிக்கை பார்ப்பது நிகழ்காலமாய் உள்ளது......
திரும்பிச் செல்லமுடியுமா?????


Next Post Next Post Home
 
Back to Top