( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

கடவுள் அரவாணியா...?

   லகில் உள்ள பெருவாரியான மதங்கள் கடவுளை ஆணாக மட்டும் தான் அடையாளம் காட்டுகிறது.

இஸ்லாமிய மதத்து புனித நூலான கூர்-ஆன் முழுமையும் ஆழ்ந்து படித்தோம் என்றால் கடவுளை அவர், இவர் என சொல்லிருப்பதை அறியலாம்.

  அவர், இவர் என்ற  பதங்கள் பெண்மையை குறிக்காது என்று நமக்கு தெரியும்.

   கடவுளுக்கு உருவமே இல்லை என்று கூறும் இஸ்லாம் அவரை ஆணாக பார்ப்பது விசித்திரமாக உள்ளது.

விவிலியம் என்ற கிறிஸ்துவ புனித நூலும் கடவுளை கர்த்தர் என்ற ஆண்பாலாலேயே அழைக்கிறது.

யுதர்களின் மதமான ஹீபுரு மதம் கூட கடவுளுக்கு ஜகோவா என்ற ஆண் பெயரையே சூட்டியிருக்கிறது.

இந்து மதத்தை போல மிக பழமையான ஐரோப்பிய மதமான சொராஸ்திரியம் கடவுளுக்கு அஸ்ரமஸ்ரா என்ற ஆண் பெயரையே கொடுத்திருக்கிறது.

  ஜப்பான், சீனா போன்ற நாடுகளிலும் கடவுள் ஆணாகவே கருதப்படுகிறார்.

  இந்து மதத்தில் கூட சிவன், விஷ்னு, பிரம்மா ஆகிய மும்மூர்த்திகள் ஆணாகவே இருக்கிறார்கள்.

   பெரும்பாலான மதங்கள் கடவுளை ஆணாக கருதிய போதும் நமது பகவத் கீதை, உபநிஷதங்கள், பிரம்ம சூத்திரம் போன்றவைகள் கடவுளை ஆணாக ஒத்து கொள்ளவில்லை.

  அதே வேளை துர்கை, லஷ்மி, சரஸ்வதி போன்ற பெண் தெய்வங்களாகவோ அல்லது பெண்ணாகவோ அல்லது ஆணும் அல்லாத, பெண்ணும் அல்லாத அரவாணியாகவோ நமது சாஸ்திரங்கள் கடவுளை ஏற்கவில்லை.

  மாறாக ஆண், பெண், அலி ஆகிய முப்பாலும் கடவுளுக்குள் அடக்கம். கடவுள் முப்பாலையும் தாண்டியது என்றும் சொல்கின்றன.

   கடவுளை உணர்ந்த ஞானிகளும் கடவுளை பேரொளியாக கருதுகிறார்களே தவிர ஆண், பெண், அலியாக கருதவில்லை.


+ comments + 22 comments

வணக்கம் குருஜி. மிகவும் அருமை.

//கடவுளுக்கு உருவமே இல்லை என்று கூறும் இஸ்லாம் அவரை ஆணாக பார்ப்பது விசித்திரமாக உள்ளது.//
உண்மையா சொன்ன போன அது என்ற வார்த்தையை தான் பிரயோகிக்க வேண்டும் அனால் அது மாறியதாக இருக்காது என்பதால் அவன் என்ற வார்த்தைபிரயோகிக்க படுகிறது
குரான் படி இறைவனுக்கு பால் இனம் இல்லை

தன் இனத்தை பரப்ப தான் ஒரு இனத்துக்கு பால் வேறுபாடு புணர்ச்சி ஆகியன வேண்டும்
ஆனால் நம்மை படித்த இறைவனுக்கு அது இருக்க தேவை இல்லையே
(நாமது நம்பிக்கை படி அவனே நம்மை படைத்தான் படைப்பாலனுக்கே தன இனைத்தை பெருக்க இன உறுப்பு எதக்கு) :P

09:42

அருமையான விளக்கம் குருஜி. எல்லா மதத்திலும் கடவுளை ஆணாகத்தான் உருவகப்படுத்தியிருக்கிறார்கள் யாரும் இதைப்பற்றி யோசிக்கவிலையோ என்னவோ.

ஆம் இறைவன் ஆணுமல்லன். பெண்ணுமல்லன். அலியுமல்லன்.

குணகர்மங்களுக்கு அப்பால்,உளதுக்கும், இலதுக்கும் அப்பால்-

எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் பரம்பொருளே இறைவன்.

வணக்கம் குருஜி.முதல் முறை வருகிறேன் மிகவும் அருமை.

Krishna moorthy
15:38

அவன் ஆணுமல்லன் பெண்ணுமல்லன் அலியும் அல்லன்
என படித்த நினைவு உள்ளது

அருமையான விளக்கம் குருஜி

Joshi Joshi Perumal Pillai
18:30

இல்லாத விசயங்களுக்கு எதற்கு இந்ந்த ஆராய்ச்சி

Anonymous
11:50

try to read Bible first...........

நமது ஜனாதிபதியை அவர் என்று சொல்வது போலவே தான் இதுவும்

Anonymous
19:50

பைபிள் ஏசுவையும், திருகுர்ஆன் நபிகளையும் இறைதூதர் என்கின்றது.

malathi
09:53

இந்து என்பது மதம் அல்ல. அதனால் தான் அதற்கு தேவதூதர்கள் இல்லை.அதனால் தான் அதற்கு கடுமையான சட்டதிட்டங்கல் இல்லை.அதனால் தான் ஒரு கூட்டம் பிழைப்புக்காக படம் வரைந்தது,சிலைவடித்தது மேலோர் கீழோர் என்று பிரித்து வைத்தது ஆண்,பெண்,அரவான் எல்லாம் கடந்தது
தானே இறை Clap

lathabaalu
09:54

ungal sindhanai vidhiyasmaga ulladhu sondha karuthu ena nambalama? Mrs.Lathabaalu

வினோத்
09:55

கடவுளை நாம் நம் வடிவிலேயே காண்கிறோம்
அதனாலேயே ஆணா பெண்ணா என்ற பாகுபாடு எல்லாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம். அவருக்கு ஆந்த பாகுபாடு எல்லாம் கிடையாது ஒளிவடிவமானவர் என்பதையே வேதம் வலியுறுத்துகிறது.

('அவர்' என்ற சொல்லை பெண்களை மரியாதையாக குறிக்கும் போதும் பயன்படுத்தலாம். இதிலும் ஆண் பெண் பாகுபாடு கிடையாது )

அவன் என்பது ஆண்பால்
அவள் என்பது பெண்பால்

அவர் என்பது பொதுவான மரியாதை கொடுத்துச்சொல்லும் சொல்..

வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கைப் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடக் காத்திருக்கும் ஒரு சகபயணியாய் உங்களுடன் நான்...

rajudranjit
09:56

விநோத் சொல்வது போலும் இருக்கலாம்!

karunakaran
10:48

அன்பு sriramanandaguruji அவர்களுக்கு, தெய்வதிற்கும் கடவுளுக்கும் வித்யாசமென்ன ?

"அதே வேளை துர்கை, லஷ்மி, சரஸ்வதி போன்ற பெண் தெய்வங்களாகவோ"

இவர்கள் கடவுள் இல்லையா ?

விளக்கவும்.

karunakaran6
11:04

அன்பு sriramanandaguruji அவர்களுக்கு, தெய்வதிற்கும் கடவுளுக்கும் வித்யாசமென்ன ?

"அதே வேளை துர்கை, லஷ்மி, சரஸ்வதி போன்ற பெண் தெய்வங்களாகவோ"

இவர்கள் கடவுள் இல்லையா ?

விளக்கவும்.

parakaalan
11:05

வணக்கம்
தெய்வம் என்ற சொல் திவ் ப்ரகாசனே க்ரீடனே என்ற தாதுவிலிருந்து பிறக்கின்றது, கடவுள் என்ற சொல் கடந்தும் உள்ளேயும் இருக்கின்றது என்ற பொருளில் கையாளப் படுகிறது, அணோர் அணீயான் மஹதோ மஹீயான் என்கிறது வேதம், அணுவுக்குள் அணுவாகவும் பெரியனவற்றுள் பெரியவனாகவும் உள்ளது என்ற பொருளில் ப்ரஹ்மம் என்று வேதம் குறிப்பிடுகிதது, முப்பரிமாணமுள்ள பிரபஞ்சத்தை ஆதாரமாகவும் அதற்கு ஆதாரமாகவும் இருப்பதால் புருஷ: என்ற சொல்லால் குறிப்பிடுகிறது, புரே திஷ்டதி இதி புருஷ: என்பது விளக்கம், காக்கும் காலை புருஷனாகவும் அரவணைக்கும் காலை தாயாகவும் விளங்குகின்றான், விஞ்ஞானமும் ஓவ்வொரு மனிதனிடத்தும் ஆண் தன்மையும் பெண் தன்மையும் கலந்தே தான் இருக்கின்றன என்கிறது, பக்தர்களின் விருப்பத்திற்கேற்ப வணங்குகின்றனர், இருப்பது ஒன்றே தான் அதனைத்தான் அறிந்தவர்கள் பலவாறாக வணங்குகின்றனர்,
அன்புடன்
பரகாலன்

Mrs.Lathabaalu
21:03

ungal sindhanai vidhiyasmaga ulladhu sondha karuthu ena nambalama? Mrs.Lathabaalu

malathi
21:04

வினோத் சொல்வதும் மாலதி சொல்வதும் போல்

ஆண்,பெண்,அரவான் என்ற பாகுபாடெல்லாம் கடந்தது
தான் இறைவன்.


Next Post Next Post Home
 
Back to Top