Store
  Store
  Store
  Store
  Store
  Store

எப்போதடா இந்த ஆட்சி ஓழியும்


ரப்போகும் தேர்தலில் ஆளும் கட்சியின் நிலை எப்படி இருக்கும்?

  முதல்வரின் நடவடிக்கைகளை மேலோட்டமாக பார்க்கும் போது அவர் நல்ல நம்பிக்கையுடன் இருப்பதாகவே தெரிகிறது

   ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி கொடுத்திருக்கிறோம்

   மருத்துவக் காப்புறுதி திட்டத்தில் பலர் பயனடைந்துள்ளனர்

   பலருக்கு இலவச நிலங்கள் வழங்கப்பட்டுள்ளன

  கான்கிரீட் வீடுகள் கட்டிக்கொள்ள வைத்திருக்கிறோம்

  எல்லாவற்றிர்க்கும் மேலாக அரசு ஊழியர்களுக்கு சம்மள உயர்வையும் பலவித சலுகைகளயும் வழங்கி இருக்கிறோம்

   இவையெல்லாம் போதாத பட்ச்சத்தில் கையில் ஏகப்பட்ட பணம் இருக்கிறது

   காங்கிரசாரிடம் நல்ல செல்வாக்கு உள்ளது

   அதை வைத்து தேர்தலில் அரசு இயந்திரத்தை எப்படி வேண்டுமானாலும் பயன் படுத்தலாம்

  ஆறாவது முறையாக முதல்வர் நாற்காலியை எப்படியும் தக்கவைத்து காலத்தை ஓட்டி விடலாம் என்று கணக்குப் போட்டு சந்தோஷமாகவே தென்படுகிறார்

செல்வி. ஜெயலலிதா அவர்களின் நிலை எப்படி உள்ளது?

ஆளும் கட்சி போடுகின்ற அரிசி சமயலுக்கு உதவாத கோழித்தீவனம்

  அரிசி என்னவோ ஒருரூபாய்தான்

  ஆனால் அதற்கு வைக்கும் குழம்புச் செலவு 100 ரூபாய்

   நிலம் கொடுப்போம் என்ற வாக்குறுதிப்படி நிலத்தை எத்தனைபேர் பெற்றார்கள்?

   உருப்படியாக யாருமில்லை

  மருத்துவக் காப்புறுதி திட்டத்தில் நடந்த குழருபடிகள் என்னவென்று அதை நம்பி அறுவைசிகிச்சை செய்து கொண்ட எல்லோருக்கும் தெரியும்

  கான்கிரீட் வீட்டுக்கு ஆசைப்பட்டு கடன்காரர்களாக ஆனவர்கள் தான் தமிழ்நாட்டில் அதிகம்

   கலைஞர் அரசாங்கத்தின் திட்டங்கள் அனைத்துமே விளம்பரப்படுத்தப் பட்ட அளவிற்கு பயன் தரவில்லை

   மக்களின் கேலிக்கும் கிண்டலுக்குமே ஆளாகியுள்ளது

  கருணாநிதி குடும்பத்தார் அடிக்கும் விபரீத லூட்டிகள் மக்களை மட்டுமல்ல சொந்தக் கட்சிக்காரர்களேயே எரிச்சலடைய வைத்துள்ளது

  ஆயிரம் தான் பணம் விளையாடினாலும் மக்கள் கொதித்துப் போய் உள்ளனர்

   ஆட்சி மாற்றத்தை எல்லோருமே எதிர்பார்க்கின்றனர்

   இந்த நிலை நிச்சயம் அ.தி.மு.க.வுக்கு சாதகமாகத்தான் அமையும்

  விஜயகாந்த்தும் கூட்டணிக்கு வந்து விட்டால் வெற்றிக்கனியை யாரும் தட்டிப்பறிக்க முடியாது என்ற நம்பிக்கையில் தைரியமாக இருக்கிறார்

இவர்களைப் பற்றி மக்களின் நிலை எப்படியுள்ளது?

ஓரளவு படித்த விஷயம் தெரிந்தவர்கள் கலைஞர் மீது கடுங்கோபத்தில் இருக்கிறார்கள்

  தி.மு.க.வின் ஆரம்பக்கால ஆட்சியில் கரை வேட்டிக்களை கண்டு காவல் நிலையங்களே கதிகலங்கி கிடந்ததைப்போல காவல் நிலையங்களே கட்சி அலுவலகமாக இன்று மாறிவிடதைப் பார்த்து மக்கள் கதிகலங்கி உள்ளார்கள்

  ஆள்கடத்தல் மணற்கடத்தல் நிலமோசடிகள் அமைச்சர்களும் அவர்களின் அடிவருடிகளும் நடத்தும் அராஜகங்கள்  இன்னும்பல சட்டவிரோத நடவடிக்கைகளை கண்டும் கேட்டும் அறுவறுப்பு அடைந்துள்ளனர்

 எப்போதடா இந்த ஆட்சி ஓழியுமென்று நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்

  ஆனால் இப்படிபட்டவர்களில் எத்தனைபேர் ஓட்டுப்போட வெளியில் வருவார்கள்?

 தேர்தல் நடக்கும் நாளை விடுமுறை நாளாக எண்ணி வீட்டில் ஓய்வு எடுப்பவர்கள்தான் அதிகம்

  ஓட்டுப்போடப் போகும் பெறுவாரியான அடித்தட்டு மக்களின் மனநிலை கணிக்க முடியாத சுரங்கமாக இருக்கிறது

  கலைஞர் கொடுத்த இலவச தொலைக்காட்சிப் பெட்டியில் இவர்கள் மெகா சீரியல்களை மட்டுமல்ல அலைக்கற்றை ஊழலின் பிரம்மாண்டத்தையும் பார்த்து மலைத்துப் போகிறார்கள்

  இப்படிப்பட்டவர்களை நிச்சயம் வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்றும் கருதுகிறார்கள்

  ஆனாலும் கருணாநிதி கொள்ளை அடித்தாலும் சில நலத்திட்டங்களையாவது செய்கிறார் அம்மா ஆட்சிக்கு வந்தால் இது கூட கிடைக்காது

   அழகிரி ஸ்டாலின் கனிமொழி தயாநிதி ராசாத்தியம்மாள் கும்பலைப்போல சசிகலா கும்பல் நாட்டையே மொட்டை அடித்து விடும்

  முன்னரும் அவர்களின் ஆட்டங்களை கண்டவர்கள் தானே நாம் என்று ஒரு சாராரும்

  கருணாநிதி ஜெயலலிதா என்ற பெயர்கள்தான் வித்தியாசப்படுமே தவிற மற்றபடி எல்லாம் ஒன்றாகத்தான் இருக்கும்

 மக்கள் பணம் எப்போதும் போல் அரசியல்வாதிகளின் அகோரப்பசிக்கு இரையாகும்

  இந்த நிலையில் ஆட்சி மாறினால் என்ன மாறாவிட்டால் என்ன?

  யார் அதிகமாக பணம் தருகிறார்களோ அவர்களுக்கு ஓட்டைப் போட்டு விட்டு பழையபடி கஞ்சிக் குடிக்க வழியை பார்ப்போம் என்று இன்னொறு சாராரும் நினைக்கிறார்கள்

இந்தத் தேர்தல் எப்படி இருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

   கலைஞரின் ஆட்சி மாறி ஜெயலலிதாவின் ஆட்சி வந்தால் தமிழ்நாடே சொர்க்கமாக மாறிவிடும் என்று நினைப்பதற்கு நான் அப்பாவி அல்ல

  உண்மையைச் சொல்வதென்றால் கருணாநிதி வேட்டிக்கட்டிய ஜெயலலிதா

 ஜெயலலிதா புடவைகட்டிய கருணாநிதி என்ற கருத்தை உறுதியாக நம்புபவன் நான்.

  பொய் பித்தலாட்டம் கற்பனாவாதம் கவர்ச்சிக்காட்டல் சிந்தனையில் கூட சுயநலம் ஆகியவற்றின் ஓட்டுமொத்த உருவங்கள்தான் இரு கட்சிகளும்

 இவர்களின் ஆதி பிதாவான அண்ணாவும் பெரியாரும் கூட இந்த குற்றச்சாட்டுகளிலிருந்து தப்ப இயலாது

 இன்று தமிழகத்தில் உள்ள சிறுமைகள் அனைத்திற்கும் இவர்கள் எல்லோரும்தான் காரணம்

 ஆனால் சமீப காலத்தில் கலைஞரும் அவரின் குடும்பத்தினரும் கட்சிக்காரர்களும் செய்கின்ற செயல்கள் அனைத்துமே ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைத்து பணநாயகத்தை பட்டுக் கம்பளம் விரித்து வரவேற்கும் செயல்களாகும்

 இந்த மாநிலத்தின் வணிகம் சுகாதாரம் விவசாயம் தகவல் தொழில் நுட்பம் ஏன் கலைத்துரையைக்கூட ஆக்கிரமித்து சின்னா பின்னப்படுத்தி வருகிறார்கள்

  இத்தகைய அராஜக கும்பலின் அட்டகாசத்தை ஒழித்துக்கட்டும் அளவிற்கு பகையுணர்ச்சி ஜெயலலிதாவிடம் மட்டுமே இருக்கிறது

  அவரால் மட்டுமே எந்த நிலைக்கும் இறங்கி பழிவாங்க முடியும்

  அப்படி பழிவாங்கப்பட்டால்தான் நாளைக்கு வந்து அட்டுவழியம் செய்பவர்கள் சற்றேனும் அச்சப்படுவார்கள்

  அதனால் சிதறிக்கிடக்கும் சின்னச்சின்ன கட்சிகளைக் கூட விட்டுவிடாமல் கூட்டணியில் சேர்த்து வலுவுடன் மோத வேண்டும்

  அந்த மோதல் ஆளும் தரப்பின் பணபலத்தை நிச்சயம் சிதறடித்து விடும்

  படித்தவர்கள் பண்பாளர்கள் வாய்பேச்சு வீரர்கள் தின்னைத்தூங்கி சோம்பேறிகள் என்ற தேர்தலை கண்டுகொள்ளாத மேட்டுக் குடியினர் சற்றேனும் விழிப்படைந்து வீதிக்கு வந்து ஓட்டுப் போடவேண்டும்

   பணத்திற் ஆசைப்படும் சாமான்ய மக்களும் நிலமையை உணரத்தலைப்பட வேண்டும்

   யாரு எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை என்ற எண்ணத்தில் செயல்பட்டு கருணாநிதியை மீண்டும் ஆட்சியில் உட்கார வைத்தால் தமிழ் நாடு திறந்த வெளி வேட்டைக்காடாகி விடும்



Contact Form

Name

Email *

Message *