( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

சித்தர்கள் மலையில் தவம் செய்வது ஏன்?

     மது புராணங்களும், வேதங்களும் கைலாய மலையை சிவனின் வாஸ்த தலமாக சொல்கிறது.

   அதே போன்றே திருமாலின் அம்சமாக திருமலை கருதப்படுகிறது. 

  திருவண்ணாமலை கூட அல்ல அல்ல அந்த ஊரில் உள்ள ஒவ்வொரு துளி மண் கூட சிவலிங்கமாக மதிக்கப்படுகிறது.

  ஒரு வைணவ பெரியவர் கால்களால் மிதிக்காமல் முழங்காலிட்டே திருமலை ஏறியுள்ளார்.

 காரைக்கால் அம்மையாரும் தலையால் ஊர்ந்தே கைலாச மலையை அடைந்துள்ளார்.

  திருநாவுக்கரசரும் திருவண்ணாமலையை கால்களால் தீண்டுவது பெரும் பாவம் என அரகண்டநல்லூர் அதுல்யநாதேஸ்வர் ஆலயத்திலிருந்தே அண்ணாமலையை தரிசித்துள்ளார்.

  அன்னை ஆதிபராசக்திக்கு விந்தியா சல நிவாசினி என்று ஒரு பெயர் உள்ளது.  அதன் பொருள் என்னவென்றால் விந்திய மலையில் வாசம் புரிபவள் என்பதாகும்.

 உச்சி பிள்ளையாரும், ஐயப்பனும் மலையிலேயே இருக்கிறார்கள்.

 குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என வழிபடப்படுகிறது.

 பராம்பரியமான சந்நியாசகளின் ஒரு பிரிவினருக்கு கிரி என்ற மலை பெயரே சந்நியாச நாமமாக கொடுக்கப்படுகிறது.

 இவை எல்லாம் இந்து பராம்பயத்தில் மலைக்கு கொடுக்கும் முக்கியத்துவமாகும்.

 ஏசுநாதர் கூட கொல்கொதா மலையில் தான் முதல் பிரசங்கத்தை துவங்கினார்.

 கல்வாரி மலையில் தான் சிலுவையில் அறையப்பட்டார். 

   ஆகவே மலைகளுக்கும் ஆன்மீக உணர்விற்கும் மிக நெருக்கமான உறவு உலகம் முழுவதும் இருந்து வருகிறது.

   அதற்கு காரணம் என்ன? மலைகள் மனிதனால் அதிகமாக சஞ்சாரம் செய்யாத பகுதி ஆகும்.

    மனித மனதிலிருந்து உற்பத்தியாகும் பல வகையான எண்ண அலைகள் மலை பகுதிகளில் குறைவாகவே இருக்கும்.

   இதனால் தவம் புரிவதற்கும், தியானம் செய்வதற்கும் மலைகள் பேருதவி புரிகின்றன.  இதனாலேயே கடவுள் அம்சமாக மலை கருதப்படுகிறது.

     மந்திர அனுபவங்கள் படிக்க இங்கு செல்லவும்

+ comments + 14 comments

Dear Sir,
what are the places to be seen in and around Thiruvannamalai please

very interesting.We must thing about the holy Hills our thoughts also growing high.

VISWAM
09:45

அருமை

VISWAM
09:50

அருமை

அருமை

Dhanasekaran Arumugam
12:04

குருஜி அவர்களுக்கு வணக்கம் .தங்கள் கருத்து அருமையாக இருந்தது .

நல்ல, ஆனால் தெரியாத விளக்கம்.
தகவலுக்கு நன்றிகள்..

திருவண்ணாமலையில் இருந்து சுமார் 30-35 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மல்லிகார்ஜுனர் ஆலயம் அமைந்துள்ள பர்வதமலையும் மிகவும் சக்தி வாய்ந்த தலமாகும்

Anonymous
23:27

ஏன் சன்யாசிகள் மலைகள் தேடி செல்கின்றனர் ? சன்யாசிகள் தன்னை சாமான்யனை விட மேன்மயானவனாய் உயர்ந்தவனாய் நினைத்து கொள்கின்றனர். அருள்வாக்கு சொல்பவன்னும், பஞ்சாயத்து பேசுபவனும் பள்ளத்தில் இருந்து சொல்ல மாட்டன் .. யாருமே தன்னை தேடி வரக்கூடாது என்பவன் காடுகளை தேடி செல்லலாம். மலைகளை தேடி செல்வது மக்களுக்குள் தான் மேன்மையானவன் என்பதை சொல்லத்தானே தவிர வேறொரு வெங்காயமும் இல்லை.

Anonymous
04:39

இயேசு முதலில் பிரசங்கம் செய்தது கோல்கொதா மலை கிடையாது, அவர் சிலுவையிலே அறையப்பட்ட இடம் தான் கோல்கொதா என்ற மலை, அதற்கு செல்லும் பாதையின் பெயர் கல்வாரி....தயவு செய்து தகல்வல்களை சரி பார்த்து எழுதவும்....reference..http://www.allaboutjesuschrist.org/where-was-jesus-crucified-faq.htm

கல் போன்ற மனசு என்கிறார்களே . உண்மை சொல்லாதவன் மனசு பாறை என்கிறார்களே? மலை ஒரு அரக்க மனம் படைத்த ஒரு மனிதனே. அங்கே சபிக்கப்பட்டு அப்படி இருக்கிறான். அவனுக்கு பாவ விமோசனம் பெறவேண்டியே தெய்வமும் சித்தர் பெருமக்களும் ஷூச்மா வடிவில் தவம் செய்கிறார்கள். மேலும், ஓயாது வம்பு பேசும் மக்கள் அரக்க குணம் படைத்த இடத்தில யாரும் இருக்கமாட்டார்கள். அரக்க குணம் கொண்ட மனிவியை விட்டு கணவன் ஓடிபோவதுபோல் சித்தர்கள் ஜனசந்தடி இல்லாத இடம் தேடி பாறை, குகை என்று ஒளிந்துகொண்டு தவம் செய்கிறார்கள்

//காரைக்கால் அம்மையாரும் தலையால் ஊர்ந்தே கைலாச மலையை அடைந்துள்ளார். ///

இதன் உண்மையான விளக்கம் உங்களுக்கு தெரியுமா? இங்கே "தலை" என்பதன் பொருள் தெரிந்து விளக்கம் தாருங்கள் அய்யா.

ஹல்லோ ராஜ்,காடும் மலையும் ஒன்றை ஒன்று சார்ந்து தான் காணப்படுகிறது. தியானத்தின் முக்கிய அம்சமே அலைபாயும் மனத்தை ஒரு முகப்படுத்துவது தான். அதர்க்கு தனிமையும்,ஆளரவமில்லாத சூழலும் துணை செய்யும். மக்கள் நெருக்கம் மிகுந்த இடத்தில் தவம்,தியானம் செய்யும் போது,நம்மை சுற்றியிருப்பவர்களின் எண்ண அலைகள் பாதிப்படைய செய்யும். மனம் ஒருநிலை படாது. இதெல்லாம் உங்களுக்குப் புரியாது.

குருஜிக்கு இனிய வணக்கம்.

ஈசுநாதர் இந்தியாவிற்கு அதாவது இமயமலைக்கு வந்த வருடம் எப்போது?
அவர் தங்கிஎருந்த நாள் எவ்வளவு?
அவரை சந்தித்தவர்கள் யார் யார்?

இதை சற்று ஆதார பூர்வமாக தெரிவிக்கவும்.

நன்றி.

இப்படிக்கு,
கைலைமாமணி சரவணன்
திருச்சி.


Next Post Next Post Home
 
Back to Top