( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

கீழ் சாதிகாரன் வீட்டில் உணவு அருந்துவது கௌரவ குறைச்சலா...?

வைதீக பிராமணர்கள் அந்நிய வீட்டில் சாப்பிட மாட்டார்கள் அது ஏன்?

    ஒரே உணவு அதனுடைய தன்மை, அது வைக்கப்பட்டிருக்கும் பாத்திரத்தை பொறுத்து மாறுபாடு அடைகிறது.

   செம்பு பாத்திரத்தில் தண்ணீரை வைத்து குடிப்பது மிகவும் நல்லது.  ஆனால் அதே  செம்பு பாத்திரத்தில் மோரை குடித்தால் அது விஷமாகி வயிற்றை கெடுத்துவிடும்

.  உப்பை எதில் போட வேண்டுமோ அதில் தான் போட வேண்டும்.

  உப்பில்லாத பண்டம் குப்பையிலே என்பதற்காக பசும்பாலில் உப்பை போட்டு குடிக்க முடியுமா?  பால் திரிந்து போய் விடும். 

எனவே உணவு என்பது உடலுக்கு அமிர்தம் என்றாலும் அது இருக்கும் பாத்திரத்தை பொறுத்து விஷமாக கூட மாறிவிடும்.

  தெருவெல்லாம் சண்டை நடக்கிறது வெட்டு, குத்து, இரத்த வெள்ளம் ஊரே கலவரமாகயிருக்கிறது.  அந்த நேரத்தில் டீக்கடையில் நின்று அமைதியாக தேநீர் சாப்பிட முனைபவன் நிச்சயமாக முட்டாள் தான்.

 வீட்டில் எல்லோரும் சோகமகயிருக்கிறோம்.  ஏதோ ஒரு குழப்பம் குடும்பத்தில்.  அந்த நேரத்தில் விருந்தினர்களை உபசரிக்கிறோம்.  நம் பிரச்சனை அவர்களுக்கு தெரியாது என்றாலும் அவர்களால் நிம்மதியாக சாப்பிட முடியாது.

   அது ஏன்?  பலருக்கு இறப்பு ஏற்பட்ட வீட்டில் சாப்பிட பிடிக்காது.  மீறி சாப்பிட்டாலும் ஒத்துக் கொள்ளாது. 

  அது ஏன்?  எல்லாம் மன நிலை தான் காரணம் என்று சுலபமாக சொல்லி விடலாம்.

   ஆனால் அதில் ஓரளவு தான் உண்மையிருக்கிறது.  பெரியவர்கள் ஆசிர்வாதம் செய்யும் போது தலையில் கை வைத்து ஆசிர்வதிப்பார்கள். 

  அதற்கு காரணம் மனித எண்ணங்கள் கை விரல்கள் வழியாக அடுத்தவரையோ, அடுத்த பொருளையோ சென்றடைகிறது.

 சமைக்கும் போதும் சரி, பரிமாறும் போதும் சரி விரல்கள் உணவில் நிச்சயம் படும். 

  அப்போது அவர்களின் எண்ணங்கள் உணவு வழியாக நம்மை வந்தடைகிறது.

 அந்த எண்ணத்தின் பிரதிபலிப்பு உணவு சுவையாகவோ, சுவையற்றோ, சுவையாக இருந்தாலும் சாப்பிட பிடிக்காமலோ ஆகிவிடுகிறது. 

இதை தான் நமது பெரியவர்கள் கை பக்குவம் என்று சொன்னார்கள்.  அன்போடு சமைத்த அல்லது பறிமாறிய பழம் சாதம் கூட தேவாமிர்தம் ஆகிவிடும். 

    இதனால் தான் எல்லோர் வீட்டிலும் அநாவசியமாக சாப்பிடக் கூடாது என சொன்னார்கள்.  ஆனால் அந்த பழக்கம் இன்று சாதி முறையாகி விட்டது. 

   கீழ் சாதிகாரன் வீட்டில் உணவு அருந்துவது கௌரவ குறைச்சல் என போலியான வாழ்க்கை முறை வந்து விட்டது.

இந்த விஷயம் விபரம் அறிந்த பல வைதீகர்களுக்கே இப்போது தெரிவதில்லை

  அதனால் தான் காபி குடிப்பதற்கு கூட பிராமணாள் ஓட்டலைத் தேடி ஓடுகிறார்கள்

   பாதகம் நிறைந்த ஒரு பிராமணன் சமைத்த உணவு செறுப்புத் தைக்கும் தொழிலாளி சமைத்த உணவை விட மேலானது அல்ல!

  இது பலருக்குப் புரிவதில்லை

     மந்திர அனுபவங்கள் படிக்க இங்கு செல்லவும் 


 
+ comments + 15 comments

Well Said Guruji!!!

//கீழ் சாதிகாரன் வீட்டில் உணவு அருந்துவ//
சுவாமி கீழ் சாதிக்காரன் என்று யாருமே இல்லை, "தாழ்த்தப்பட்ட"வர்கள் என்று தான் அழைக்கப்பட வேண்டும், நாம் பயன்படுத்தும் சொற்களில் கவனம் தேவை, தானாகவேகீழ் சாதி என்ற ஒன்றில்லை சில சாதிகளை பிறர் தாழ்த்துவதால் தாழ்த்தப்பட்ட என்பதே சரியானதாக இருக்கு, கீழ்சாதி என எழுதி பேசி அப்படியான இல்லாத ஒன்றை இருப்பதாக நிலைப்படுத்திவிடக்கூடாது...

//பாதகம் நிறைந்த ஒரு பிராமணன் சமைத்த உணவு செறுப்புத் தைக்கும் தொழிலாளி சமைத்த உணவை விட மேலானது அல்ல//


மிகச் சரியான நெத்தியடி,இதை அனைவரும் அறிந்தாலே சாதீயம் அழிந்துவிடும்
மிக்க நன்றி குருஜி

"பாதகம் நிறைந்த ஒரு பிராமணன் சமைத்த உணவு செறுப்புத் தைக்கும் தொழிலாளி சமைத்த உணவை விட மேலானது அல்ல"

- சத்தியமான வார்த்தை....

இட்டலியின்னுடாக ஆன்மீகவாதி ஒருவரின் தொடர்பு கிடைத்ததையிட்டு மகிழ்ச்சியடை கின்றேன். சித்தர்களின் வழியில் உலகையும் எம்முள்ளுள்ள இறை சக்கியையும் ஆராய்ந்து வந்த நோக்கத்தை அடைவோம். நன்றி.

இட்டலியின்னுடாக ஆன்மீகவாதி ஒருவரின் தொடர்பு கிடைத்ததையிட்டு மகிழ்ச்சியடை கின்றேன். சித்தர்களின் வழியில் உலகையும் எம்முள்ளுள்ள இறை சக்கியையும் ஆராய்ந்து வந்த நோக்கத்தை அடைவோம். நன்றி.

@குழலி / Kuzhali
நாட்டில் ஒவ்வொரு சாதிக்கும் ஒரு கட்சி உண்டு. இப்படி ஜாதியை கட்சி போட்டு, சங்கம் வைத்து இக்காலத்தில் மிகக் கொழு கொழு என்று வளர்நது கொண்டுள்ளது; அரசாங்கமும் பள்ளிகளிலிருந்து அலுவலகங்கள்வரை applicationஇல் என்ன ஜாதி என்றுதான்
கேட்கிறது. எந்த அரசியல் கட்சி ஜாதிகளின் ஓட்டில்லாமல் வளர்கிறது?
சும்மா வெறும் சொல் ஜாலம் வேண்டாம் அன்பர்களே. சுவாமியின் கருத்து மேல் ஜாதிக்காரனின் மூடத்தனத்தை அறிவியல் ரீதியாக சுட்டிக்காட்டுகிறது. அதை உணர்ந்து கீழ்ஜாதிக்காரர்கள் மேல்ஜாதிகாரர்கள் யாராயிருந்தாலும் உள்ளும் புறமும் தூய்மை கொள்ளவேண்டும் என்பதே சுவாமி அவர்களின் நோக்கம்.

K Subramanian
12:02

i am a brahmin. i have friends in every so called caste. But i am not in a position to eat and be together with certain caste people because of the way in which they prepare & keep things. Some how my conscience does not accept . i don't bluntly say this to the other person. But shall keep away . Is it correct or not correct. Please advise.

20:38

பாதகம் நிறைந்த ஒரு பிராமணன் சமைத்த உணவு செறுப்புத் தைக்கும் தொழிலாளி சமைத்த உணவை விட மேலானது அல்ல

Anonymous
07:41

Dear Mr Subramanian,
whatever may be the caste, internal and external purity is the criteria. If it is not available in a person or family it is not advisable to take food with them or from them whether they are by birth brahmin or otherwise. Here no "caste" can intrude. The thing that I am higher caste he is lower caste by birth is the culprit which is called Vasana or the past impressions. That you must, by intellectually studying, intellectually accept that caste feeling is utter foolishness and cause of doing all sins without giving way to sentimentalism and caste fanaticism. On the long run you will stand as a "man" or "human" being alone.

VISWAM
20:16

அருமை. பல நாள் குழப்பத்திற்கு விடை கிடைத்தது. நன்றி.

இ.குமரன்
20:17

இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.

swamy suresh
20:20

அருமையான கருத்து.நன்றி

malathi
20:21

கீழ் சாதிக்காரன் (ன்) பிராமனாள் (ள்)இங்கே ஆரம்பிக்கிறதோ வேறுபாடு.இறந்தவர் வீட்டில் சாப்பிட்டால் ஒத்துக்கொள்ளாது என்பவர் வீட்டில் யாருமே சாகமாட்டார்களா?இல்லை சாப்பிடமாட்டார்களா?

இலக்கை தீர்மானிப்பது அம்பின் வேலை அல்ல‌


Next Post Next Post Home
 
Back to Top