( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

மாயஜாலசக்திகளை துறந்து ஆத்ம விடுதலை


  வாயிலிருந்து லிங்கம் எடுப்பதும், வெறும் கையில் விபூதி மற்றும் தங்க சங்கிலி எடுப்பதும் பல சாமியார்களின் சித்து வேலையாக இருக்கிறது.

இந்த சித்துக்கள் நிஜமானதா?

அப்படி செய்கின்றவர்களை குருமார்கள் என கருதலாமா? என்று பலருக்கு சந்தேகம் உண்டு

இன்னும் பலரோ சித்து வேலைகளை கண்டு பிரமித்து மயங்கி விடுகிறார்கள்

 நம்மால் செய்ய முடியாததை இத்தகைய சாமியார்கள் செய்யும் போது அவர்களிடம் விஷேச சக்தி இருப்பதாக நினைத்து மலைப்படைந்தும் விடுகிறார்கள்  பதஞ்சலி மகரிஷி என்பவர் யோக சூத்திரம் என்ற நூலை எழுதியுள்ளார்.

அந்த நூலில் கைவல்லிய பாகம் என்ற பகுதியில் இந்த மாதிரி பல சித்துக்களை பற்றி மிக விரிவாகவே சொல்கிறார்.

என்னென்ன சித்துக்கள் செய்யலாம்?  சித்து செய்யும் சக்தியை எந்த வகையில் பெறலாம் என்பதை பற்றியெல்லாம் விவரிக்கிறார்.

  முக்காலத்தையும் கூறுவது, தண்ணீல் நடப்பது, ஆகாயத்தில் பறப்பது என்று சித்துக்களின் மிக நீண்ட பட்டியலையும் தருகிறார்.

 அந்த நூலில் கடைசியாக மாபெரும் சித்து சக்தியாக அவர் எதை குறிப்பிடுகிறார் என்றால் தன்னையும், தன் புலனையும் அடக்கி மாயஜாலசக்திகளை துறந்து ஆத்ம விடுதலை பெறுவதே  அவர் கூறும் மாபெரும் சித்தாகும்.  

   யோக வாழ்க்கையில் நடுப்பகுதியில் யோகம் பயில்பவர்களுக்கு சில அதீத சக்திகள் உண்டாகும்.

 தரையிலிருந்து ஒரு அடி உயரமாவது எழுவது, நினைத்தது எல்லாம் நடப்பது, கேட்பதெல்லாம் கிடைப்பது, சொல்வதெல்லாம் பலிப்பது என்று இன்னும் சில சக்திகளை பெறலாம்.

 பெருவாரியான யோகிகள் இந்த சக்தி கிடைத்தவுடன் தாங்கள் முழுமை பெற்று விட்டதாக நினைத்து பொது ஜனங்களிடத்தில் பிரபலமடைந்து விடுகிறார்கள்.

 இதனால் அவர்கள் ஆத்ம விடுதலையை நோக்கி பயணபடாமல் சாதாரண உலக சுகங்களில் மயங்கி கிடக்கிறார்கள்.

  ஆண்டவனை அடைய நினைக்கும் யோகிக்கு ஆண்டவனை காண துடிக்கும் ஞானிக்கு சித்துக்கள் என்பது மலத்துக்கு சமமானது.


ஞானிகளுக்காக இறைவனே சில சித்துக்களை நடத்தி காட்டுவானே தவிர ஞானிகள் அதை செய்யமாட்டார்கள்.

யோக வாழ்க்கையில் முறைப்படியான பயிற்சி பெறுவதன் மூலம் சித்துக்கள் பெறுவது ஒருவகை. 

போலியாக பல சித்துக்களை செய்து காட்டுவது இன்னொரு வகை.

வாய்க்குள் இருந்து லிங்கம் எடுப்பதெல்லாம் சரியான மோசடியாகும். 

வெறுங்கையில் விபூதி வரவழைப்து, மலர்களை வரவழைப்பது, தங்க சங்கிலிகளை வரவழைப்பது என்பதில் பல மோசடிகள் இருந்தாலும் தாந்ரீக கலையில் ஓரளவு தேர்ச்சி பெற்ற சில சாமியார்கள் யட்சினி என்ற முக்கால் பங்கு பைசாசத்தை வசியப்படுத்தி இம்மாதிரியான காரியங்களை செய்கிறார்கள்.

வேறு சில சாமியார்கள் தங்களது ஆடைகளுக்குள்ளோ உடம்பிற்குள்ளோ பொருட்களை மறைத்து வைத்து கண்ணிமைக்கும் நேரத்தில் வெளியிலெடுத்துக் காட்டி நம்மை அதிசயத்தில் ஆழ்த்தி விடுகிறார்கள்
  
ஒரு உண்மையான சாது தன்னிடம் ஆயிரம் சித்து சக்தி இருந்தாலும் அதை தேவை இல்லாமல் தன்னை பெருமை படுத்திக் கொள்ளும் விதத்தில் வெளிப்படுத்த மாட்டார்

ஆனால் தன்னை முழுமையாக நம்பிய மனிதர்களுக்காக கடவுளின் திருவுள்ளத்தை உணர்ந்து பயன் படுத்துவார்

சில சாதுக்கள் அப்படி செய்தற்காக பயனாளிகளிடம் காணிக்கை கூட பெருவார்கள்

ஆனால் அந்தக் காணிக்கை அவர்களின் சொந்த உபயோகத்திற்கு எடுக்க மாட்டார்கள்

ஆலயத்திருப்பணிகள் சமூக சேவைகள் என்று செலவு செய்து விடுவார்கள்

இப்படிப்பட்ட நிறையபேர்களை நானறிவேன்

எனவே சித்து வேலைகள் செய்பவர்கள் அனைவரும் போலிகள் என்றும் கூற இயலாது

இந்தத் தரவரிசையில் அசலையும் போலிகளையும் அடையாளம் காணுவது சாதாரண மனிதர்களுக்கு சற்று கடினம்தான்


+ comments + 7 comments

மாபெரும் சித்து சக்தியாக அவர் எதை குறிப்பிடுகிறார் என்றால் தன்னையும், தன் புலனையும் அடக்கி மாயஜாலசக்திகளை துறந்து ஆத்ம விடுதலை பெறுவதே அவர் கூறும் மாபெரும் சித்தாகும்.//
fantastic.

வணக்கம் குருஜி. நிஜமாகவே ஆண்டவனை அடைய நமக்கு போதுமான தகுதி இருந்தால் எந்த சித்து வேலையும் தேவை இல்லை சாதாரண என்னை போன்ற மக்களுக்கு. ஒரு குருவிடமோ, அல்லது ஒரு ஞாநியிடமோ, செல்லும்போது அவர்கள் செய்கின்ற சித்து வேலை நமக்கு ஒரு நம்பிக்கையை ஆரம்பத்தில் கொடுக்கும். அதையே பிடித்துகொண்டு நாம் இருந்தோம் என்றால் நமக்கு சில சமயம் நம்பிக்கையை கொடுக்கும், எதிர்பார்ப்பை எப்போதும் உண்டு பண்ணும். நமக்கு ஆன்மீகத்தில் எது தேவையோ அதை முழுமையாக அடைய நாம் அவர்களிடம் முயற்சிசெய்தால் அதுவே பெரிய விஷயம். "அசலையும் போலிகளையும் அடையாளம் காணுவது சாதாரண மனிதர்களுக்கு சற்று கடினம்தான்". உண்மைதான். இன்றைய பதிவு மிகவும் அருமை. மிக்க நன்றி குருஜி.

Anonymous
13:29

நமஸ்தே! குரு ஜி

இது ஒரு அருமையான விளக்கம் .

ஒரு பிரபலமதைந்த பாபா கேமரா முன் பிற மதவாதிகளிடம் மாட்டயுள்ளர் .

அவர்கள் வேண்டுமென்றே அவரை சுட்டிக் காட்டினார்கள்.

இந்த மகான் இந்த சித்து விளையாட்டை விட்டு விட்டு எவ்வளவோ மேலே நல்ல சாதனைகளை செய்திருக்கலாம்


என் குரு இதைபற்றி எங்களுக்கு விளக்கினார்

நன்றி குரு ஜி


இவர்கள் இதை செய்வதைவிட ஏழைகளின் நோய்களை குணமாக்கலாம் .

அது ஒரு நல்ல தெய்வ தொண்டு

வாழ்க உங்கள் தொண்டு !!! வளர்க உங்கள் ஞானம் !!!

வினோத்
13:53

வாய்க்குள் இருந்து லிங்கம் எடுப்பதெல்லாம் சரியான மோசடியாகும்.

Smile

வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கைப் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடக் காத்திருக்கும் ஒரு சகபயணியாய் உங்களுடன் நான்...

VISWAM
13:54

"எனவே சித்து வேலைகள் செய்பவர்கள் அனைவரும் போலிகள் என்றும் கூற இயலாது" நல்லவர்களை நாடி நாம்தான் போகவேண்டும்


அருமையன அனுபவம் .
பகிரிந்தமைகு நன்றி
நன்றி குரு ஜி


Next Post Next Post Home
 
Back to Top