Store
  Store
  Store
  Store
  Store
  Store

மனிதன் சுருங்கி விட்டான்



புராண இதிகாச காலங்களில் மிருகங்கள் கூட விவேகமாக நடந்து இருக்கிறது.

  இன்றைய மனிதனுக்கு அந்த அளவிற்கு கூட விவேகம் இருப்பதாக தெரியவில்லை

 மனிதர்கள் இப்படியெல்லாம் ஆவர்கள் என பழைய நூல்களில் எழுதப்பட்டிருக்கிறதா? என்று நினைப்பவர்கள் நிறையபேர்

கிராமத்தில் ஒரு பழமொழி இருக்கிறது.  கழுதை தேய்ந்து கட்டெறும்பாக ஆன கதை.

 மனிதனின் நிலையும் இன்று அப்படி தான் இருக்கிறது.  


 பீமசேனனுக்கு எழுபது யானை பலம் என்று சொல்வார்கள். 

அதை நம்புவதற்கு கஷ்டமாக இருந்தாலும் கூட பண்டைய கால அரசர்களின் யுத்த கருவிகளை பார்க்கும் போது பீமனுக்கு உள்ளதாக சொல்லப்படும் பலம் கூட உண்மையாக இருக்குமோ என்று என்ன வைக்கிறது

 பத்மநாபபுர அரண்மனையில் உள்ள யுத்த கவசங்கள் இன்றைக்கு திடகரமான இரண்டு ஆண்களின் உடலை மறைக்கும்.

 ஆனால் அது சில நூறு வருடத்திற்கு முன்பு ஒரே ஒரு வீரனின் மார்பை மட்டுமே மறைத்திருக்கிறது.

 மனிதன் உடலாலும் மட்டுமே அல்ல மனதாலும் கூட ரொம்பவும் சுருங்கி போய் விட்டான். 


  இவன் இப்படி ஆவான் என சாஸ்திரங்களிலும் கூட மகாபாரதத்தில் உள்ள சாந்தி பர்வத்திலும் சொல்லப்பட்டிருக்கிறது. 

சதுர்யுகம் என்ற கணக்கு உங்களுக்கு தெரிந்து இருக்கலாம். 

அந்த யுகத்தில் முதல் யுகமான கிருத யுகத்தில் மனிதனின் உயரம் முப்பது அடி வரை இருந்ததாம்.

 பறவைகளோடும், மிருகங்களோடும் சகஜமாக பேசி பழகியருக்கிறார்கள் அப்போது .

 மனதில் கள்ளம், கபடம், அவனுக்கு இல்லையாம்.

 எப்போதும் ஆனந்தம் எதிலும் சந்தோஷம் இது தான் அந்த யுக மனிதனின் நிலை. 

  இரண்டாவது யுகம் திரேதாயுகம்.

 இந்த யுக மனிதன் முந்தைய யுகத்தை விட பத்தடி உயரம் குறைந்து விட்டான்.

 முந்தைய மனிதனிடம் இருந்த சாத்வீக குணம் போய் இவனிடம் சற்று மூர்க்க குணம் புதிதாக தோன்றியிருந்தது.

  கிருத யுகத்தில் நான்கு கால்களை ஊன்றி கம்பீரமாக நின்ற தர்மம் திரேதா யுகத்தில் ஒரு காலை இழந்து விட்டது.

 மூன்றாவதாக துவாபரயுகம்

இதில் மனிதன் பதினொரு அடி உயரம் இருந்திருக்கிறான்.

  மூர்க்க குணமும் சற்று பொறாமையும், மோகமும் இந்த யுக மனிதனின் குணங்களில் ஓங்கியதினால் தர்மம் தனது மூன்றாவது காலையும் இழந்து இரட்டைகாலில் நிற்க வேண்டிய நிலை வந்ததாம்.

 கடைசியாக நாம் வாழ்கின்ற இந்த கலியுகம்,

 இதில் மனிதர்களின் உயரம் நமக்கு தெரியும். 

நமக்கு இருக்கும் கெட்ட குணங்களை பட்டியலிட கடவுளால் கூட முடியுமா?  என்ற சந்தேகம் இருக்கிறது.

 ஒற்றுமை குலைந்து விட்டது. அகங்காரம் பெருகி விட்டது

தர்மத்திற்கு ஒரேயொரு கால் மட்டும் தான் இருக்கிறது. 

கலியுகத்தில் கொடுமைகளை பற்றி சுவாமி தோப்பு வைகுண்ட சாமி முதல் ஜெர்மானிய நார்ஷ்டடாம் வரையிலுள்ளவர்கள் ஏராளமாக சொல்லியிருக்கிறார்கள்.

 இருந்தாலும் கூட கேடுகள் சூழந்த கலியுகத்தில் ஒழுக்கமாக வாழும் முயற்சிக்கும் சாதாரண மனிதர்கள் தேவர்களுக்கு சமமாகவே கருதப்படுகிறான்.

 எனவே காலம் கெட்டு போனது என வருத்தப்பட்டு கொண்டு இருப்பதை விட

நமக்குள் இருக்கும் அரக்க குணத்தை சாகடிக்க முயல்வது சால சிறந்தது ஆகும்

இதனால் தர்ம தேவதையின் ஒற்றை காலாவது காப்பாற்ற படும்







Contact Form

Name

Email *

Message *