Store
  Store
  Store
  Store
  Store
  Store

கடவுளுக்கு காது செவிடா?


  கவான் நாமத்தை தைலதாரைப் போல இடைவெளி இல்லாமல் சொல்லும் நாம ஜெபம் சிறந்தது என்று நமது ஞானிகளும் சொல்கிறார்கள் சாஸ்திரமும் அப்பத்தான் பேசுகின்றன

ஆனால் அவ்வளவு உயரிய சிறந்த நாம ஜெபத்தை எப்படிச் சொல்வது?

வாய் விட்டுச் சொல்லலாமா? மனதிற்குள்ளேயே சொல்வதா என்று பலர் குழம்புகிறார்கள்

ஒரு கிறிஸ்துவ பாதிரியார் என்னை பார்க்க வந்தார். 


 உங்களுக்காக நான் ஜபம் செய்யட்டுமா என்று கேட்டார்.

பசுங்கன்றை அணைந்திருக்கும் பாலகிருஷ்ணனுக்கும், ஆட்டு குட்டியை அரவனைத்திருக்கும் ஏசு நாதருக்கும் வேற்றுமை பாராட்டுபவன் அல்ல நான்.

 எனவே நீங்கள் ஜபம் செய்யலாம் என்றேன். 

அவர் பைபிளை மார்போடு அணைத்தப்படி கண்களை மூடி மண்டியிட்டு அமர்ந்தார்.

 இந்த காட்சி எனக்கு தெய்வீக உணர்ச்சியை தூண்டிவிட்டு என்  கண்களை மூட செய்தது. 

அடுத்த வினாடி அந்த பாதிரியிடம் இருந்து ஏசுவே என்ற பெரும் சத்தம் வந்து என் காதுகளையும் நெஞ்சையும் ஒரே நேரத்தில் அசுர வேகத்தில் துடிக்க செய்தது.

 சுமார் அரை மணி நேரம் அவர் எனக்காக ஜபித்தார். 

அத்தனையும் பேரொலி, பேரோசை, பேரிரைச்சல், காதுகள் எல்லாம் புண்ணாகி விட்டது.

 ஏன் இப்படி பெரும் சத்தத்தில் அவர் ஜபம் செய்தார் என்று எனக்கு புரியவேயில்லை.   


ஒரு வேளை கடவுள் வானத்தில் இருக்கிறார்.  வானம் வரையில் தன் குரல் கேட்க வேண்டும் என்று செய்தாரா? 

அல்லது கடவுளின் காது மந்தமாகயிருக்குமோ என்று சந்தேகப்பட்டு அப்படி செய்தாரா?  ஒன்றும் புரியவில்லை. 

ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்.

 சத்தமாக செய்யும் எந்த பிராத்தனையும், ஜபமும் எதிர்பார்த்த பலனை தரவே தராது.

 கத்தியதனால் நமது சக்தி வீணாகுமே தவிர கடவுள் சக்தியை ஒரு துளி கூட பெற்று தராது.

 ஆனாலும் இந்த மாதிரியான ஜபங்களை மதபோதகர்கள் செய்வதற்கு முக்கியமான காரணம் மனிதர்களை கவரத்தானே ஒழிய கடவுளை கவர அல்ல.

  நமது சாஸ்திரங்கள் சத்தமாக செய்யும் ஜபத்தை அதர்மம் என்கிறது. 

உதடுகள் அசைந்து மெல்லிய ஓசையில் செய்யும் ஜபத்தை கூட மத்திமம் என்று தான் சொல்கிறது.

 உதடுகள் அசையாமல் நாக்கு உச்சரிக்காமல் மனதிற்குள் மனம் மட்டுமே செய்யும் ஜபமே உத்தமமானது என்று சொல்கிறது. 


கடவுளுக்கும் நமக்கும் உள்ள தொடர்பு கடவுளிடம் நாம் வைக்கும் விண்ணப்பம் வேறு யாருக்கும் தெரிய வேண்டிய அவசியமில்லை.

 ஜபம் செய்வது என்பது கடவுளை தொடர்ச்சியாக நினைப்பது தான்.

 நினைப்பை எல்லாம் வெளியில் சொன்னால் அது பக்தியின் அடையாளமாக இருக்காது.

 புத்தி மாறாட்டத்தின் அடையாளமாகவே கருதப்படும்.

உண்மையில் கிறிஸ்துவ மதம் கூட சப்தம் இட்டு ஜபம் செய்வதை அனுமதிக்கவில்லை.

 உன் அயலானுக்கு தெரியாத வண்ணமே என்னை பிராத்தனை செய் என பைபிள் சொல்கிறது.  


இதை உணராத பல கிறிஸ்துவர்கள் பாவம் தாங்கள் செய்வது என்னவென்று அறியாது இருக்கிறாரகள். 

சிலர் மந்திரம் ஜபம் செய்யும் போது விரல்விட்டு எண்ணுகிறார்கள் . 

சிலரோ ஜப மாலை பயன்படுத்துகிறார்கள்.

 இந்த இரண்டுமே சரியான முறையாகாது.

 விரல் கணுவை எண்ணி செய்யலாம் என்று  சாஸ்திரம் சொல்லுகிறது

  ஆனால் இது கூட மன ஒரு நிலைப்பாட்டிற்கு இடஞ்சல் தான். 

கடவுள் பெயரை இத்தனை முறை தான் ஜபிக்க வேண்டும் என கணக்கு இருக்கிறதா என்ன.

 கணக்கே இல்லாதவாறு சொன்னால் உண்ணும் சோறும், பருகும் நீரும், திண்ணும் வெற்றிலையும் நாராயண வடிவமாகவே ஆகும்.

 சொல்லும் சொல்பவனும் தெய்வமாவது தான் ஜபம்.



Contact Form

Name

Email *

Message *