( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )21 ஞாயிறு ஜூலை அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

இப்போது இறந்து இனியும் பிறப்பதா?

சில நாட்களுக்கு முன்னர் ஒரு அன்பரிடமிருந்து மின்னஞ்சல் ஒன்று வந்தது

அதில் மனிதருக்கு பிறவிகள் பல என்று சொல்லப்படுகிறதே

குறிப்பாக ஏழு பிறவிகள் என்று சொல்கிறார்களே அது உண்மையா அதை விளக்க முடியுமா என வினவியிருந்தார்

மழை வருகிறது.  வானத்திலிருந்து தாரை தாரையாக தண்ணீர் கொட்டுகிறது.  பூமியில் வந்து விழுகின்ற மழைத்துளி இதற்கு முன்பு மழைத்துளியாக வந்ததேயில்லை.  இப்பொழுது தான் புதியதாக விழுகிறது என்று சொல்ல முடியுமா?

  மழைத்துளியாக விழுந்து வெள்ளமாக பெருகி நதியில் கலந்து கடலில் சங்கமித்து ஆவியாகி மீண்டும் மழைத்துளியாக தான் பூமியில் விழுகிறது.

  ஆத்மாவின் பிறப்பும் அப்படித்தான்.  நன்றாக படிக்காத பிள்ளையை ஒரே வகுப்பில் படிப்பு வரும் வரை உட்கார வைப்பது ஏன்? 

படிப்பில் பரிபூரண நிலையை அடைய வேண்டும் என்பதற்காக தான்.

  ஆத்மாவும் எண்ணங்களால் பரிபூரண நிலையை அடையும் வரை மீண்டும் மீண்டும் பிறப்பு எடுக்கிறது.

 நமது சாஸ்திரங்கள் ஆத்மா பிறக்கவும் இல்லை, இறக்கவும் இல்லை.  எப்பொழுதும் இருந்து கொண்டேயிருக்கிறது என்று சொல்கிறது.

  நிலையாக இருந்து கொண்டேயிருக்கும் ஒரு வஸ்து ஒரே ஒரு பிறப்போடு அழிந்து போகும் என்பது நடைமுறைக்கு உதவாதது ஆகும்.

 ஒரு உயிர் பிறக்கிறது பல பாவ புண்ணியங்களை செய்கிறது.

 இறந்த பிறகு பாவங்களுக்காக நரகத்தையோ, புண்ணியங்களுக்காக சொர்க்கத்தையோ அடைந்து விடுகிறது என்பதையும் ஏற்றுக் கொள்ள முடியாது.

  அதை ஏற்றுக் கொண்டால் ஆத்மா நிரந்தரமாக நரகத்திலோ சொர்க்கத்திலோ தங்கி விடும் என்பதை ஏற்பதாகும்.

அப்படி தங்கி விட்டால் நிரந்தர நரகவாசிகளுக்கு பாவ மன்னிப்பே கிடையாது என்ற நிலை வரும். 

 பிறகு கடவுள் மன்னிக்கும் தன்மையே இல்லாத கொடியவர் ஆகிவிடுவார்.

 அதன் பிறகு கடவுள் கருணையானவர் என்ற பெயரில் என்ன அர்த்தம் இருக்கிறது?

  நாம் நம்புகிறமோ இல்லையோ பிறப்பு, இறப்பு என்ற சக்கரம் சுழன்று கொண்டேயிருக்கிறது.

 ஒரு ஜீவன் கடவுளிடம் ஐக்கியமாகும் வரை பிறந்து கொண்டேயிருக்கிறது.

  இந்த உண்மை சாத்தியமானது.  இதை நிரூபிக்க வேண்டிய சாட்சி ஆதாரங்கள் ஊர் அறிய விளக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது.

நமது வாழ்க்கை அனுபவத்தில் நன்றாகவே உணர்ந்து கொள்ளலாம்.

இனி ஏழு பிறவிகளைப் பற்றிய விளக்கத்தைக் காணலாம்

புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன்...என்று சிவபுராணம் ஜீவனின் பிறவிகளைப்பற்றிய விளக்கங்களை கவிநயத்துடன் தருகிறது

இதிலுள்ள பிறவித்தன்மையை சாதாரணமாக எண்ணினாலே பத்துக்கு மேலே வருகிறது

அப்படி என்றால் ஏழ்பிறப்பு என்பதின் தத்துவம் என்ன?

மேலோட்டமாக சிந்தித்தாலே உண்மை நிலையை உணர்ந்துக் கொள்ளலாம்

ஏழு பிறப்பு என்பது ஜீவன் ஏழு முறை பிறப்பதை குறிப்பதல்ல

உயிரின் ஏழுவகையான படித்தரம் என்பதை அறியலாம்

அதாவது ஒருபிறவியில் கஞ்சனாக கருமியாக ஈகைக் குணமே இல்லாத லோபியாக இருப்பவன்

அடுத்துவரும் பிறவிகளில் அதற்கான கர்மப்பலனை அனுபவிக்க மீண்டும் மீண்டும் பிறவியெடுத்து கடைசியில்

தன்னிடமுள்ளதை யெல்லாம் வாரிக்கொடுக்கும் வள்ளல் என்ற நிலைக்கு வந்தப்பின்

கடவுளை அடையும் முயற்சியை எடுத்து முத்திப் பெற வேண்டும் என்பதாகும்

இவைதான் இந்துமத சாஸ்திரங்கள் சொல்லும் விளக்கமாகும்

+ comments + 10 comments

ஆத்மாவும் எண்ணங்களால் பரிபூரண நிலையை அடையும் வரை மீண்டும் மீண்டும் பிறப்பு எடுக்கிறது.
சிந்தித்துத் தெளிவு பெற வேண்டிய விஷயம்.

Anonymous
11:34

Appappa, Ivvalavu Irukka?
Guruji, very great.

Anonymous
13:59

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)

எவனுடைய கையில் ஆட்சி இருக்கின்றதோ அவன் பாக்கியவான்; மேலும், அவன் எல்லாப் பொருட்களின் மீதும் பேராற்றலுடையவன்.

உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன், மரணத்தையும் வாழ்வையும் படைத்தான்; மேலும், அவன் (யாவரையும்) மிகைத்தவன்; மிக மன்னிப்பவன்.

நிச்சயமாக எவர்கள் தங்கள் இறைவனை(ப் பார்க்காதிருந்தும்) அந்தரங்கத்தில் அவனுக்கு அஞ்சுகிறார்களோ, அவர்களுக்கு மன்னிப்புமுண்டு, பெரிய நற்கூலியும் உண்டு.

அதற்கவர்கள் கூறுவார்கள்: “ஆம்! அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர் திட்டமாக எங்களிடம் வந்தார்; ஆனால் நாங்கள் (அவரைப்) பொய்ப்பித்து, “அல்லாஹ் யாதொன்றையும் இறக்கவில்லை; நீங்கள் பெரும் வழிகேட்டில் அல்லாமல் வேறில்லை” என்று சொன்னோம்.”

வானத்தில் இருப்பவன் உங்களைப் பூமியில் சொறுகிவிடுவான் என்பதை பற்றி நீங்கள் அச்சமற்று இருக்கிறீர்களா? அப்போது (பூமி) அதிர்ந்து நடுங்கும்.

“உங்கள் மீது நியமிக்கப்பட்டிருக்கும், “மலக்குல் மவ்து”(உயிர் எதிக்கும் வானவர்) தாம் உங்கள் உயிரைக் கைப்பற்றுவார் - பின்னர் நீங்கள் உங்கள் இறைவனிடம் மீள்விக்கப்படுவீர்கள்” என்று (நபியே!) நீர் கூறும்.

அல்லாஹ்விற்கு யாரையும் இணை அக்கதீர்கள்.... அல்லாஹ் இணை வைப்பதை மன்னிப்பதே இல்லை.....

ஓ....மக்களே.....அறியாமையில் கிடக்காதீர்கள்.......மரணம் ஒரு முறை தான் வரும்.....மீண்டும் நாம் பிறக்க மாட்டோம்.......நாம் பூமிக்கு வந்த நோக்கமே மறுமை வாழ்விற்கு தயாரிப்பு செய்வதற்கே........

குர் ஆன் படிங்கள் உலகம் சுற்றி பாருங்கள்......நம்முடைய இறைவனை அறிந்து கொள்ளுங்கள்......

நான் உங்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவன் மட்டும் தான்.....

Anonymous
14:03

இது குர் ஆன் வசனங்கள்......

13:34

@Anonymous

Oh, Really the sentences are much power then any other sacred books like Gita, Bible and Puranas.... I should read Quran
Thanks for notifying

Anonymous
18:55

@Anonymous:
One Anonymous Praises Allah and another Anonymous says that comment is superb( for that allah praise) and says Quran is greater than Puranas , Bible etc.

R u people trying to project ur religion as the best?

God is one, u people project in different forms and fight 4 it!!

Anonymous
14:41

இன்றைய குர் ஆன் வசனங்கள்.......

அலிஃப், லாம், மீம்.

அகிலங்களின் இறைவனிடம் இருந்து அருளப்பட்டுள்ளது - இவ்வேதம் என்பதில் சந்தேகமில்லை.

அல்லாஹ் தான் வானங்களையும், பூமியையும், இவ்விரண்டிற்கும் இடையிலிருப்பவற்றையும் ஆறு நாட்களில் படைத்துப்பின் அர்ஷின் மீது அமைந்தான்; அவனையன்றி உங்களுக்கு உதவியாளரோ, பரிந்து பேசுபவரோ இல்லை. எனவே (இவற்றையெல்லாம்) நீங்கள் (நினைத்து) சிந்திக்க வேண்டாமா?

அவனே மறைவானதையும், வெளிப்படையானதையும் நன்கு அறிந்தவன்; (அன்றியும் அவனே யாவற்றையும்) மிகைத்தவன்; அன்புடையோன்.

அவனே தான் படைத்துள்ள ஒவ்வொரு பொருளையும் அழகாக்கினான்; இன்னும், அவன் மனிதனின் படைப்பைக் களி மண்ணிலிருந்து ஆரம்பித்தான்.

Manoharan
23:40

God - ஆங்கிலம், Allah - அரபி, Eeshwar - சமஸ்க்ருதம், இறைவன் - தமிழ் என அவரவர் தத்தம் மொழியிலும் மற்றும் எல்லா உயிரினங்கலும் தமக்கு இயன்ற ஒலியிலும் இறைவனைப் போற்றலாம் - நாடலாம். அனைத்தும் ஆகியவன், அனைத்துமாகி இருப்பவனுக்கு அரபிய மொழி மட்டும்தான் தெரியுமென்று சொல்ல வருகின்றாரா இந்த anonymous மத பிரசங்கி. Allah என்று அரபி மொழியில் அழைத்தால் மட்டுமே அவ்விறைவனை நாடமுடியுமென்றால் அது இறைவனாக இருக்கமுடியாது. சத்யம் - சிவம் - சுந்தரம்.

Anonymous
18:57

இன்றைய குர் ஆன் வசனங்கள்.......

அல்லாஹ் - அவனைத் தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் வேறில்லை; அவன் நித்திய ஜீவன்; என்றும் நிலைத்திருப்பவன்.

இன்னும்; உங்களைப்படைத்தவன் அல்லாஹ் தான், பின்னர் அவனே உங்களை மரிக்கச் செய்கிறான்; கல்வியறிவு பெற்றிருந்தும் (பின்) எதுவுமே அறியாதவர்களைப்போல் ஆகிவிடக் கூடிய மிகத் தளர்ந்த வயோதிகப் பருவம் வரையில் வாழ்ந்திருப்பவர்களும் உங்களில் உண்டு - நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தவனாகவும், பேராற்றல் உடையவனாகவும் இருக்கின்றான்.

நிச்சயமாக காஃபிர்களை (இறைவனை நிராகரிப்போரை) நீர் அச்சமூட்டி எச்சரித்தாலும் (சரி) அல்லது எச்சரிக்காவிட்டாலும் சரியே! அவர்கள் ஈமான் (இறை நம்பிக்கை) கொள்ள மாட்டார்கள்.

அல்லாஹ் அவர்களின் இதயங்களிலும், அவர்கள் செவிப்புலன்களிலும் முத்திரை வைத்துவிட்டான் இன்னும் அவர்களின் பார்வை மீது ஒரு திரை கிடக்கிறது; மேலும் அவர்களுக்கு கடுமையான வேதனையுமுண்டு.

(அவர்கள்) செவிடர்களாக, ஊமையர்களாக, குருடர்களாக இருக்கின்றனர். எனவே அவர்கள் (நேரான வழியின் பக்கம்) மீள மாட்டார்கள்.

வினோத் கன்னியாகுமரி
20:06

இங்கே பலரது பிரச்சனை என்றவென்றால் ஆன்மா என்ற ஒன்றே இல்லை என்பது தான். அவர்களைப்பொறுத்தவரை மூளை தன் செயலை நிறுத்திவிட்டால் எல்லாம் தீர்ந்தது.

ஜீவன் என்ற ஒன்றை ஏற்றுக்கொண்டால் தானே மறுபிறவியைபற்றி யோசிக்க வேண்டிவரும். அப்படி யோசித்தால் மதம் அங்கே வந்துவிடுமே.. எனவே யோசிக்க மறுப்பு..

அப்புறம் ஏழு பிறவி என்பதை ஈரேழு பதிநான்கு பிறவிகள் எனத்தான் கூறக்கேள்விப்பட்டுள்ளேன்.

வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கைப் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடக் காத்திருக்கும் ஒரு சகபயணியாய் உங்களுடன் நான்...

Next Post Next Post Home
 
Back to Top