Store
  Store
  Store
  Store
  Store
  Store

இந்து குழந்தைகள் குரான் படிக்க வேண்டும்

  தப்பிரச்சனை என்பது நம் நாட்டில் மட்டுமல்ல உலகம் முழுவதும் உள்ளச் சிக்கலாகும்

ஆனால் இந்தியாவில் மட்டும் தான் அது நாட்டின் ஆத்மாவையே காயப்படுத்தும் சங்கதியாக உள்ளது

 இந்தியா முன்னேற வேண்டும் என்று நினைப்பவர்கள் மதச்சண்டைகளை நாட்டை விட்டுத் துறத்த வேண்டுமென விரும்புகிறார்கள்

ஆனால் அவர்களில் பலர் சண்டயிட்டு மண்டைகளை உடைத்துக் கொள்ளும் இந்துக்களையும் முஸ்லிம்களையும் சமாதானப் படுத்த வகைதெரியாது விழிக்கின்றனர்

அலெக்ஸ்சாண்டர் இந்த நாட்டிற்கு படையெடுத்து வருவதற்கு முன்பே பல நாட்டினர் நம் மீது படையெடுத்து உள்ளனர். 


  இந்த படையெடுப்புகள் எல்லாம் மன்னர்களின் நாடு பிடிக்கும் ஆசையினால் ஏற்பட்டது என்பதற்கு மாற்று கருத்து கிடையாது

என்றாலும் படையெடுத்து வந்த அந்நியர்கள் இந்தியாவில் இருக்கின்ற செல்வங்களையெல்லாம் தங்கள் நாட்டிற்கு கொண்டு போக முனைந்தார்களே தவிர இங்கேயே நிலையாக இருந்து அரசாள அவர்களில் பலர்  விரும்பவில்லை.

  ஆனால் முஸ்லிம் மன்னர்கள் தங்களது ஆட்சி அதிகாரத்தை இந்த நாட்டின் மீது சாஸ்வதமாக நிலை நிறுத்த முயன்றார்கள். 

அந்த முயற்சிக்கு பல இடையூறுகள் இருப்பதை கண்டார்கள்.

  மதம் என்பது முக்கிய இடையூறாக இருப்பதாக  கருதிய அவர்கள் தேசம் முழுவதும் இஸ்லாமிய மயம் ஆகிவிட்டால் தங்களது அதிகாரம் என்றென்றும் நிலைத்திருக்கும் எனக் கருதி அதற்கான முயற்சியில் ஈடுபட்டனர்.


  மனங்களை மாற்றி மதமாற்றம் செய்ய முயன்றனர்.  இதனால் மக்கள் இடையே வெறுப்புணர்ச்சி வளர்ந்து விட்டது.

  ஏறக்குறைய இஸ்லாமியர்கள் இந்தியாவிற்கு வந்து அறு நூறு வருஷங்களுக்கு மேல் ஆகிவிட்டாலும் கூட அவர்கள் மீதுள்ள வெறுப்புணர்ச்சி இன்றும் கூட மக்களிடத்தில் பரவலாகயிருக்கிறது.

  தென்னிந்தியாவில் இத்தகைய வெறுப்பை அதிமாக காண முடியாவிட்டாலும் வட இந்தியாவில் பல இடங்களில் பார்க்க முடிகிறது.

  இஸ்லாமிய மன்னர்களை வெறுக்க வேண்டிய இந்துக்கள், அப்பாவி முஸ்லிம்களை வெறுப்பது கடைந்தெடுத்த முட்டாள் தனமாகும்.

  மக்களின் இந்த முட்டாள் தனத்தை சில அரசியல் அமைப்புகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்கிறது.


   அரசாங்கமும் பல நேரங்களில் பக்க சார்போடு நடப்பதனால் இந்து மக்களின் மனதும் புண்படுகிறது.

  மதசார்பற்ற அரசாங்கத்தில் பெரும்பான்மை சமயத்தை கண்டு  கொள்ளாத அவல நிலை இந்தியாவில் மட்டுமே நிகழ்கிறது. 

இன்று முஸ்லிம்களாக இந்தியாவில் இருக்கும் எவரும் அரபு நாடுகளிலிருந்து வந்தவர்கள் அல்ல.

  நமது அண்டைய வீட்டு சகோதரர்களே ஆவார்கள்.

  இதை இந்துக்களும், முஸ்லிம்களும் மறந்தே போய்விட்டனர்.

 இந்து முஸ்லிம் ஒற்றுமை உருவாகாமல் இருப்பதற்கு இந்துக்கள் மட்டும் குற்றவாளிகள் அல்ல. சரிபங்கு குற்றம் முஸ்லிம்களையும் சாரும்.

 பல முஸ்லிம் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு இந்துக்களை காபிர்கள் ( கடவுளின் விரோதிகள் ) என்று அறிமுகப்படுத்துவதை நான் அறிந்திருக்கிறேன்.  


 எண்ணெய்யும் தண்ணீரும் ஒட்டாது என்பது போல முஸ்லிம்கள் நடந்து கொள்வது பெரிய தவறு.

  சிறுபான்மையினராக இருக்கும் ஒரு சமூகம் தங்களை காப்பாற்றிக் கொள்ள இத்தகைய தவறுகளை செய்வது இயற்கை தான் என்றாலும் இந்திய முஸ்லிம்கள் கொஞ்சம் அதிகப்படி.

  எனவே இந்து-முஸ்லிம் பிரச்சனை தீர வேண்டும் என்றால் அரசாங்கம் தான் எதாவது செய்ய வேண்டும். 

ஆனால் நமது அரசாங்கங்கள் உருப்படியான நடவடிக்கைகளை எடுக்கும் என்ற நம்பிக்கை அறிவாளிகளுக்கு போய்விட்டது. 

இத்தகைய பேதங்களை தொடர்ந்து வளர்த்தால் தான் தங்களது பிழப்பை நடத்த முடியும் என இந்து-முஸ்லிம் அரசியல்வாதிகள் பலர் கருதுகிறார்கள்.

  இந்த நிலை மாற வேண்டும்.

 சமயசார்பற்ற அரசு என்றால் மதங்களுக்கு அப்பாற்பட்டது என்று அர்த்தம் இல்லை.

 எல்லா மதங்களையும் சமமாக கருதுவது என்பது தான் அர்த்தமாகும்.

எனவே நமது அரசாங்கம் மக்களிடம் பகைமை மறைய வேண்டுமென உண்மையாக விரும்பினால் இந்து குழந்தைகளை கூர்-ஆன் படிக்க செய்ய வேண்டும்.

  இஸ்லாமிய குழந்தைகளை கீதை படிக்க செய்ய வேண்டும்.

 இரண்டு மதத்தை பற்றிய கருத்துக்கள் பரஸ்பரம் தெரியவந்தால் வருங்கால தலைமுறை தங்களை மதத்தவர்களாக பார்க்காமல் மனிதர்களாக பார்க்க துவங்குவார்கள்.





Contact Form

Name

Email *

Message *