( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )21 ஞாயிறு ஜூலை அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

ஜெயலலிதா புடவைக் கட்டிய கருணாநிதி!

தே.மு.தி.க.வுக்கும் அ.தி.மு.க.வுக்கும் கூட்டணி ஏற்படாமல் போயிருந்தால்...?
சரவணன் திருப்பூர்

  ஜெயலலிதா முதல்வராகும் வாய்ப்புக்கு இன்னும் சிலகாலம் காத்திருக்க வேண்டும் தமிழகத்தின் முக்கால்பங்கு கலைஞரின் குடும்ப சொத்தாகி இருக்கும்

விஜயகாந்த் வேட்பாளரை அடித்ததை ஜெயா டிவியிலும் திரும்பத் திரும்பக் காட்டியிருப்பார்கள் 
காங்கிரஸ் தி.மு.க உறவு முறிந்துப் போயிருந்தால்...?

வெங்கடேசன் திருவண்ணாமலை

  காங்கிரஸ் எதாவது இரண்டு தொகுதிகளில் இரண்டாவது அல்லது மூன்றாவது இடத்திற்கு வந்திருக்கும் மற்றப்படி போட்டியிட்ட எல்லா இடங்களிலும் டெபாசிட் தொகையை இழந்திருக்கும்

இது தவிற காங்கிரசுக்கு பெரிய பாதிப்புக்கள் எதுவும் ஏற்பட்டிருக்காது

ஆனால் கலைஞர் மத்தியில் செல்வாக்கு இல்லாமலாகிருப்பார் மந்திரிகள் அனைவரும் சொந்த ஊருக்கு நடையை கட்டியிருப்பார்கள்

அலைக்கற்றை விவகாரம் குடும்பத்தை ஆட்டிவைத்திருக்கும் பாவம் கலைஞர் தள்ளாத வயதில் பரிதவிக்க வேண்டிய நிலை வந்திருக்கும்


தேர்தலில் அ.தி.மு.க. அணி தோற்றால்...?

மணிவண்ணன் நாங்குநேரி

   ஜெயலலிதா கட்சியை காப்பாற்ற முடியாமல் தள்ளாடி விடுவார் ஒருவேளை சசிகலா உறவை மறுபசீலனை செய்யலாம்

இவைகளை விட கலைஞர் பாடுதான் திண்டாட்டம் ஆகி விடும் முதல்வர் பதவியை தனக்குத் தர வேண்டுமென ஸ்டாலின் ஒருபக்கம் இழுப்பார்

 தனக்குத்தான் தந்தாகனும் என அழகிரி முண்டாசு கட்டுவார் சிங்கம் புலிவாயில் அகப்பட்ட மானைப் போல திமுக தொண்டர்கள் கதறுவார்கள்
தி.மு.க. அணி தோற்றால்...?

செல்வம் மும்பை

   உண்மையில் கலைஞருக்கு நல்லது குடுப்பச் சண்டையிலிருந்து கட்சியை காப்பாற்றலாம்

எப்படியும் ஜெ. குடைச்சல் கொடுக்காமல் இருக்க மாட்டார் அதை வைத்தே மேடை தோறும் பேசி அனுதாபம் சம்பாதிக்கலாம்

 கட்சி நடத்துவதிலுள்ள சிறமங்களை வாரிசுகள் உணரும் வண்ணம் செய்து அவர்களுக்கும் அனுபவம் வரச்செய்யலாம்

ஆனால் நிஜமான நஷ்டம் பா. ம .க.வுக்கும் சிறுத்தைகளுக்கும் தான்

 அரசியலில் அனாதை என்ற பட்டத்தை பெற்றால் கூட மாற்றி விடலாம் அகதியாகி விட்டால் மாற்றுவது மகா சிறமம் அந்த நிலைதான் திருமாவளவனுக்கும் ராமதாசுக்கும் 
தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு எப்படி இருக்கும்...?

ரவிச்சந்திரன் சேலம்

  ரேஷன் கடை பெட்ரோல் பங்க் வரிசை குறையாது

சமையல் சிலிண்டருக்கான காத்திருப்பு மாறாது

குடி தண்ணீர் வளக்கம்போல் கிடைக்காது

கொசுத் தொல்லை சாக்கடை நாற்றம் மின்சார துண்டிப்பு தொடரும்

டீக்கடை வெட்டிப்பேச்சு சட்டசபை வெளிநடப்பு மேடையில் காட்டுக் கூச்சல் எல்லாம் அப்படியேதான் இருக்கும்

 ஒரு விஷயத்தை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும்

ஜெயலலிதா புடவைக் கட்டிய கருணாநிதி

கருணாநிதி வேஷ்ட்டிக் கட்டிய ஜெயலலிதா அவ்வளவுத்தான் வித்தியாசம்

+ comments + 5 comments

Anonymous
09:19

அருமையான நடுநிலை பதிவு குருஜி

//ஜெயலலிதா புடவைக் கட்டிய கருணாநிதி

கருணாநிதி வேஷ்ட்டிக் கட்டிய ஜெயலலிதா அவ்வளவுத்தான் வித்தியாசம்
//

மிக அருமை குருஜி.............

ஜெயலலிதா புடவைக் கட்டிய கருணாநிதி கருணாநிதி வேஷ்ட்டிக் கட்டிய ஜெயலலிதா very correct.

Anonymous
18:23

Miga Arumai


Next Post Next Post Home
 
Back to Top