Store
  Store
  Store
  Store
  Store
  Store

காணாத காட்சியை காண


  ன்றைய வெள்ளைக்கார துரைமார்கள் பச்சை மாமிசத்தை தின்று மரகிளையில் தூங்கிய போது ஒற்றைக்கைக்குள் சுருங்கி உட்காரும் பட்டுத்துணி நெய்வதற்கான தொழில் நுட்பம் கண்டவர்கள் பாரத புத்திரர்கள்

 அவர்களின் துறைசார்ந்த அறிவு நம்மை மலைக்க வைக்கிறது

 கண்களில் கண்ட காட்சியையும் காணாத காட்சியையும் கண்முன்னே நிருத்தும் ஓவியக்கலையில் கூட தனித்த சாதனை படைத்துள்ளனர்

அரசியல் நடத்துவதற்கு அர்த்த சாஸ்திரமும் சுக்ரநீதியும் எப்படி ஆதார நூல்களோ அதே போல ஓவிய கலைக்கு விஷ்ணு தர்மோதிரம் எழுதிய சித்ர சூத்திரமாகும்.

இந்து ஓவியக் கலையின் மிக முக்கிய அங்கமாக இந்த நூல் திகழ்கிறது. ஸ்ரேலா கம்பிட்ச் என்பவரால் 1937-ம் வருடம் இந்த நூல் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டது.

 சித்திர சூத்திரத்தின் சிறப்புகளை தாமோதர குப்தர் எழுதிய குட்டனி மதம், பிரம்ம சூத்திரத்திற்கு ஆதிசங்கரர் எழுதிய மகா பாடிய நூலிலும் சதுர்வர்த்தக சிந்தாமணி என்ற நூலிலும் கூறப்பட்டுள்ளதை பார்க்கும் போது நம்மால் நன்கு அறிந்து கொள்ள முடிகிறது.

ஓவியத்தின் குணாதிசயம் அதன் குறைபாடுகள் ரசிக்க வேண்டிய முறை ஓவிய வெளிபாட்டு பாணிகள் போன்றவற்றை விளக்குவதில் சித்திர சூத்திரம் தாரக மந்திரமாக அமைந்துள்ளது எனலாம்.

 மார்க்கண்டேய முனியவர்க்கும் வஜ்ர என்ற அரச குமாரனுக்கும் நடைபெறும் உரையாடலாக நூல் அமைந்துள்ளது.

 தன்னை நெருங்கிய தேவலோகத்து மங்கையொருத்தியின் எண்ணப்படி நடக்காமல் அவளை திசை திருப்புவதற்காக நாராயண முனிவர் என்பவர் தனது தொடையில் தேவலோக நர்த்தகியாகிய ஊர்வசியின் அழகிய உருவத்தை வரைந்து காட்டியதன் மூலம் ஓவியக் கலையின் இலக்கணத்தையும், தத்துவத்தையும் வெளிப்படுத்தினார் என்று சித்திர சூத்திரம் பேசுகிறது.


 ஓவியம் வரைவதன் நுட்பத்தை நாராயண முனிவர் விஸ்வகர்மாவிற்கு போதித்ததாகவும் விஸ்வகர்மாவே அதை உலகெங்கும் பரப்பியதாகவும் சொல்லும் சித்திர சூத்திரம் 287 ஸ்லோகங்களை கொண்டதாகும்.

 சாமுத்திரிகா சாஸ்திரம் என்ற அங்க லட்சணத்தை விவரிக்கும் தத்துவப்படி ஹம்சம், பத்மம், மாளவ்யம், சூசகம், சாகஸம் ஆகிய ஐந்து வகையான ஆண், பெண் உருவங்களின் ரோம அமைப்பு கண்களின் வடிவம் எப்படியெல்லாம் எழுதப்பட வேண்டும் என துல்லிய குறிப்புகள் தரப்பட்டுள்ளன.

 கடவுளுடைய படம் வரையப்படும் போது அந்த உருவத் தோற்றம் பதினாறு வயதுடைய இளமை பொலிவுடன் இருக்க வேண்டும் என்றும் புன்சிரிப்பு தவழும் இதழ்களும், தீட்சன்யமான விழிகளும் அமையக்கூடிய அளவுகளை குழந்தைகளுக்கு போதிப்பது போல சித்திர சூத்தரகம் போதிக்கிறது.


 ஒரு மனித உருவத்தின் ஜ்வகத, அன்ஜீ, சகிகத, அர்த்த விலோசன, பாஸ்வகத, பவிருத்த, பிஸ்டகத, பிவிருத்த, சமணத போன்ற ஒன்பது நிலைகள் விவரிக்கப்படுகின்றது.

 நேருக்கு நேரான பார்வை முறை என்பது ஜ்வதக ஆகும். முகத்தை தவிர மார்பு, வயிறு, இடை, தோள், தொடை போன்றவைகள் சற்று மறைந்திருக்கும் நிலை அன்ஜீ எனப்படும்.

 இதே போன்று உருவங்களின் பக்க வாட்டு தோற்றம், சிறு சிறு உறுப்புகளின் அளவீடு முறைகள் என்பன போன்ற விவரங்களெல்லாம் இந்த ஒன்பது வகைகளில் அடங்கியுள்ளன.

 ஓவியம் வரைவதற்கான வர்ண கலவைகள் பூச்சு முறைகள் போன்ற விவரங்களும் தரப்பட்டுள்ளன.

 களிமண்ணுடன் கலந்த செங்கல் தூள். தேன் மெழுகு, கருப்பஞ் சாறு, குசும்ப செடியிலிருந்து எடுக்கப்படும் சிவப்பு வண்ண திரவம் இவற்றுடன் சுண்ண பொடியை கலந்து பலவித வண்ணங்களை உருவாக்கும் முறைகள் விளக்கப்பட்டிருக்கிறது.

  சத்யம், வைணீகம், நாகரம், மிஸ்ரம் போன்ற நால்வகை ஓவிய வகைகளை பற்றி இந்த நூலின் 41-வது அத்தியாயம் பேசுகிறது.

இயற்கையான பிண்ணனியுடன் நெடுந்துயர்ந்த உருவங்களை வரைவது சத்யம் எனப்படும். அங்கங்களின் உண்மையான அளவுப் படியும் உணர்வுகளின் நிஜ வெளிப்பாட்டை மறைக்காமலும் எழுதுவது வைணீகம் ஆகும்.

 அதீத தோற்ற பொலிவும் இயல்பான வடிவத்தில் இல்லாமல் கற்பனையாக மட்டுமே காண கூடிய உருவங்களை வரைவது நாகர வடிவமாகும்.

 மிஸ்ரம் என்பது உருவங்களின் நிஜத்தன்மையை வெளிக்காட்டும் நிறச் சேர்க்கையாகும்.

 அங்க வேறுபாடுகள் விதவிதமான ஆடை அலங்காரங்கள், அணிகலன்களின் தோற்றங்கள், பருவ நிலை வேறுபாடுகள் போன்ற எல்லாம் மிகைப்படுத்தப்படாமல் இயற்கையான வடிவத்தில் எப்படியிருக்க வேண்டும் என்றெல்லாம் சித்திர சூத்திரம் விளக்குகிறது.

 சிருங்காரம், ஹாஸ்யம், கருணை வீரம், ரௌத்திரம், பயம், அருவறுப்பு, ஆச்சர்யம், சாந்தம் என்ற ஒன்பது பாவனைகளும் ஓவிய கோடுகளில் வெளிப்படும் விதத்தை ஒரு சித்திர பல்கலை கழகம் போலவே சித்திர சூத்திரம் விளக்கி தூரிகைகளின் திறமைக்கு உரம் போடுகிறது எனலாம்.

இன்றும் பல மரபு வழி ஓவியர்களும் நவீன ஓவியர்களும் சித்திர சூத்திர இலக்கணத்தையே பின் பற்றுகிறார்கள்



Contact Form

Name

Email *

Message *