( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )21 ஞாயிறு ஜூலை அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

பாம்பு உடம்பிற்குள் வாழும் சித்தர்கள்


  நாம் நாகத்தை பாம்பாக மட்டுமே பார்க்கிறோம்.  ஆனால் நமது பண்டைய கால ஞானிகள் பாம்பு வடிவத்தை மூலாதார சக்கரத்தில் உறங்கி கொண்டிருக்கும் குண்டலினி  சக்தியாக பார்த்தார்கள்.

 புற்றுக்குள் இருக்கும் பாம்பு சீண்டி விட்டால் சீறிக் கொண்டு எப்படி கிளம்புமோ அதே போலவே யோக பயிற்சியால் சீண்டப்படும் குண்டிலினி தண்டுவடத்தை பற்றிக் கொண்டு சரசரவென பிரம்ம கபாலத்தை நோக்கி எழும்பும் என்று சொன்னார்கள்.

 இதனால் தான் கடவுள்களின் உருவத்தோடு நாகத்தை சம்பந்தப்படுத்தினார்கள்.

 பரந்தாமனின் பாம்பு படுக்கை பரமசிவனின் பாம்மனி எல்லாமே குண்டலினி தத்துவத்தை விளக்க எழுந்ததே யாகும்

  இனி நாக வழிபாடு நம் நாட்டில் எப்போது இருந்து கடைப்பிடிக்கப்படுகிறது என்பதை சற்று ஆராய்வோம்.


  இந்திய துணைக்கண்டம் முழுவதுமே ஆதிகாலம் தொட்டே நாக வழிபாடு, இருந்து வருகிறது.

 சைவம், வைஸ்ணவம், பௌத்தம், ஜைனம் போன்ற மதங்கள் வளர்ச்சி அடைந்த காலத்தில் அந்தந்த சமயத்தின் சாயல்களை கொண்டு இந்திய துணைக் கண்டம் முழுவதுமே நாக வழிபாடு விரிவடைந்தன என சொல்லலாம்.

 திருமாலும் சிவபெருமானும் மட்டுமே நாகங்களை துணையாக கொள்ளவில்லை.  பல புத்தர் சிலைகளை பார்க்கும் போதும் மகாவீரரின் சில தோற்ற கோலங்களை காணும் போதும் ஐந்து தலை நாகம் அவர்களுக்கு குடைபிடித்து இருப்பது தெரிகிறது.

 சிந்து சமவெளி நாகரிக காலத்திலும் அதற்கு முன்னரும் கூட நாகங்களை மக்கள் வழிபட்டு இருக்க வேண்டும்.

  ஹரப்பாவில் கண்டெடுக்கப்பட்ட இரண்டு முத்திரைகளில் வழிபாட்டுக்குரிய நாகங்கள் செதுக்கப்பட்டிருப்பதை வைத்து நாம் இந்த முடிவுக்கு வரலாம். வேதங்களில் பல இடங்களில் பாம்புகளை பற்றி விரிவான குறிப்புகள் வருகின்றன.

வேதகால மக்கள் பாம்புகளை அஹீ என்ற பெயரில் அழைத்திருக்கிறார்கள்.  ரிக், சாம வேதங்களில் வணக்கத்துக்றியதாக பாம்புகள் சொல்லப்படவில்லை.

  ஆனால் யஜøர் வேதம் பாம்புகளை தெய்வ நிலையோடு ஒப்பிட்டு பேசுகிறது யஜூர் வேதம் பாஞ்சால நாடுகளில் தொகுக்கப்பட்டிருக்க வேண்டும்.

 பழங்கால பாஞ்சல தேசத்திடில் தலைநகரம் அஹீ சத்திரமாகும்.  அதாவது இதன் பொருள் பாம்புகளின் வீடு என்று சொல்லலாம். 

இந்த தேசத்தின் மன்னர்களாக விளங்கிய அக்னிமித்திரன், பானு மித்திரன் ஆகியோர்களின் காலத்து நாணயங்களில் பாம்பு முத்திரை பொறிக்கபட்டுள்ளது.  


 அதர்வண வேதத்தின் சில பகுதிகளில் பாம்புகளை தாந்திரிக நெறிக்கு பயன்படுத்தும் விபரங்கள் உள்ளன

  நாக வழிபாடு பற்றி நித்தேஷ என்னும் பௌத்த நூலும் பேசுகிறது.  அதில் சர்ஜீகோணோவில் உள்ள பகவா நாகோ என்ற வழிபாட்டுக்குரிய நாகத்தை பற்றி விளக்கங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன.

 குஷான மன்னர்களின் காலத்தில் இந்த நாக வடிவம் சிலை வடிவாக உருவாகியிருக்கலாம் என நம்பப்படுகிறது.

  மதுராவில் உள்ள அருங்காட்சியகம் ஒன்றில் கனிஷ்க மன்னனால் செதுக்கி வைக்கப்பட்ட நாக வடிவம் இன்றும் இருக்கிறது. 

கடவுளின் பிரதிநிதியாக கருதப்பட்ட நாகங்கள் காலப் போக்கில் இறந்தவர்களின் ஆவியோடு தொடர்பு படுத்தப் பட்டும் புதையல்களை மர்மமான முறையில் பாதுகாக்கப்படுகின்றன என்றும் நம்பிக்கை ஏற்பட்டது.


  பாம்புகளை பொறுத்த வரை எல்லா மதத்தினரும் அறிவு பூர்வமாகவும், மூடத்தனமாகவும் நம்பினர் என்றே சொல்ல வேண்டும். 

பண்டைய கால சிற்பங்களும், ஓவியங்களும், நாகர்களும், நாக கன்னிகளும் காட்டப்படுகிறார்கள்.

  இவர்கள் பாதி மனித உருவம், பாதி பாம்பு வடிவமும் பெற்றவர்கள்.

 பாலித்தீவில் நாக கன்னிகை மழை கடவுளான வருண தேவனின் பனிப்பெண்ணாக கருதுகிறார்கள்.

 மகாபாரதத்தில் அனுசாய பருவத்தில் நாகத்தை வழிபடுவதன் மூலம் விஷ்ணுவின் பத்து அவதாரங்களில் ஒன்றான வராக அவதாரத்தின் பலத்தை பெறலாம் என்று சொல்லப்படுகிறது.

 இதனாலேயே பிற்காலத்தில் உருவான வராக சிற்பத்தில் காலுக்கடியில் பாம்பு செதுக்கப்பட்டுள்ளது.


   தமிழர்களின் தனிப்பெரும் வாழ்க்கை முறையை விவரிக்கும் சங்க இலக்கியங்களில் நாக வழிபாடு சிறப்பாக கூறப்பட்டுள்ளதை காணலாம்.

  பொதுவாக பாம்புகளை வழிபடுவது இந்து மதத்தில் உள்ள யோக சார மார்க்கத்தின் வழிபாட்டு முறையேயாகும்.

  ஆனால் அந்த உண்மை நிலை மறைந்து இன்று கிராம தேவதைகளின் பட்டியலில் நாக தேவதைகள் சேர்ந்து விட்டன.

இதற்கு முக்கிய காரணம் இறந்தவர்களின் ஆன்மா பாம்பு வடிவத்தில் உலாவுவதாக உள்ள நம்பிக்கையே ஆகும்

நல்லப்பாம்பு என்ற நாகத்தை வீணாக சாகடிக்க கூடாது என்று சொல்வதில் பல அமானுஷ்ய உண்மைகள் உண்டு

சித்தர்கள் பரகாய பிரவேசம் என்ற கூடுவிட்டு கூடுபாயும் வித்தை தெரிந்தவர்கள் என நமக்குத் தெரியும் 


 மனித ஆத்மாவானது மனித சரீரத்தை தவிற காக்கை மற்றும் நாகப்பாம்பின் உடல்களில் சுலபமாக பிரவேசிக்கலாம் என்று சித்தர்களின் ரகஸிய சித்தாந்தங்கள் சொல்கின்றன

இதனால் தவ வாழ்வை எந்தத் தொந்தரவும் இல்லாமல் கழிக்க பாம்பின் உடல்களை தேர்ந்தெடுத்து பல சித்தர்கள் வாழலாம்

நாம் தெரியாத்தனமாக சர்ப்பங்களை சாகடித்தால் அவர்களின் தவத்தைக் கலைத்த பாவத்திற்கு ஆளாவோம்

 எனவேத்தான் பாம்புகளை சாகடிக்க வேண்டாமென முன்னோர்கள் சொன்னார்கள்
 
+ comments + 15 comments

வணக்கம் குருஜி. மிகவும் அருமை. எவ்வளவு விஷயங்களை ஒவ்வொரு பதிவிலும் மிக அழகாக பதிவு செய்கின்றீர்கள். மிக்க நன்றி குருஜி.

Anonymous
09:20

நல்ல பதிவு குருஜி..சில நாட்களுக்கு முன்புதான் தங்களின் இணையதளத்தை பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது..அதற்காக நான் இறைவனுக்கு நன்றி சொல்லி கொள்கிறேன்...குருஜி தங்களின் இணையதளத்தின் மூலம் இந்து மதத்தின் அரிய,உயர்ந்த கருத்துக்களை தெரிந்துகொள்ள முடிகிறது இதற்காக நான் தங்களுக்கு நன்றி கூறி கொள்கிறேன்

பாம்புகளை சாகடிக்கவேண்டாமென்று சொன்னதற்கு அவை "விவசாயிகளின் நண்பன்" என்பது மட்டுமே அறிவுபூர்வமான உண்மை;ஏனெனில் அவை பயிர்களை அழிக்கும் வயல் எலிகளை உணவாக உட்கொள்ளும்;மற்றபடி பாம்புக்கு பால் வார்ப்பது பாம்புக்குள் புகுந்துகொள்வது போன்ற மூடநம்பிக்கை ( வளர்ப்பவர்) களைக் கொல்லவேண்டுமே தவிர பாம்புகளைக் கொல்லக்கூடாது என்பது உண்மையே..!

Anonymous
12:28

chillsam என்ற கிருஸ்துவரே அனாவசியமாக அடுத்த மதங்களின் நம்பிக்கைகளில் தலையிட வேண்டாம் அதற்கான உரிமை உனக்கில்லை

Anonymous
13:59

நண்பர் chillsam கூறியதை போல இயேசுநாதன் இறந்த பின் 3 நாள் கழித்து இறந்து போன உடலில் இயேசுநாதனின் உயிர் புகுந்து கொண்டு சில பேருக்கு காட்சி தந்தான் என்றும்,விஷம் குடித்தால் மருத்துவரிடம் செல்லாமலே யேசுனாதனின் அருளால் விஷத்தால் எந்த சிறு பாதிப்பும் ஏற்படாமல் உயிர் பிழைத்து விடுவார்கள் என்பதை போன்ற மூட நம்பிக்கை(வளர்ப்பவர்)களை கொல்ல வேண்டும் என்பது உண்மையே

இந்து மதத்தில் எது செய்தாலும் அதில் ஆயிரம் அர்த்தம் இருக்கும் என்று எல்லோர்க்கும் தெரியும்,
அனால் அந்த ஆயிர அர்த்தங்களையும் தங்களது ஒவ்வொரு பதிவிலும் காண்கிறோம்.
இதனால் எங்களுக்கு தெரியாத பல விஷயங்கள் தெரிந்து கொள்கிறோம். நன்றி குருஜி.

எதிர்ம்ரையான கருதுக்கலுக்கு பதில் தரும்பொழுது கோபப்படலாம் ஆனால் அதர்க்காக யேசு வை அவ்ன் இவன் என்ரு கூருவதை தவிர்க்கலாம் மத சகிப்புத்தன்மை நாகரிகம் இல்லாத நிலை ஆரோக்கியமானது அல்ல‌

Anonymous
16:53

@super syed
உங்களின் கருத்து வரவேற்க்கதக்கது ஆனால் இதை நீங்கள் கூற வேண்டியது கிறிஸ்துவர்களிடம்தான் இந்துக்களிடம் இல்லை

குருஜிக்கு பல முரட்டு சீடர்கல் இருப்பஙக போல (டின் கட்டிட போராங்க)விடு ஜூட் சரிஙகொ

எங்க ஊர கேரளா விலே ஹரிப்பாடு .இங்கே மிஹப்பெரிய நாகரஜகொவில் இருக்கு, மன்னாரசாலை நாகராஜகொவில். வந்துதான் பாருங்களேன் ! மிக பெரிய கோவில் .எங்க பகுதியில் பாம்புகளும் அதிகம் .நாகராஜா மேல நம்பிக்கையும் அதிகம் .குழந்தை பேரு கிடைக்காதவர்களுக்கு அருள்புரியும் அற்ப்புதம் ! ஐப்பசி மாதம் ஆயில்யம் ரொம்ப்ப விஷேசம் .சென்னையில் இருக்கும் எண்டே தம்பி கதிரேசனுக்கு கல்யாணம் ஆயி 5 வருஷம் ஆஹியும் குழந்தை இல்லாம மன்னாரசல நாகராஜா வழிபாடு செய்த பதிரோவ வது மாதம் குழந்தை பிறந்தது ----தமிழ்மன்னன்

lalita
09:23

நாகவழிபாடு செய்யும் முறை பற்றி விளக்கமாக சொல்லுங்கள் குருஜு

Anonymous
14:22

How many years will u ppl live in this virtual world of magics which not scientifically proven... Avan Avan Nialvukku poga mudiyuma... Seivaiku poha mudiyumannu araichi pannikittu irukan neenga yennadanna innu pampu kulla sithar thoongurarunnu kathai vidureenga.. velanguma intha naadu

Intha naadum makkalum nasamai pohattum..

Anonymous
13:10

Dear sir,
Why god Vinayagar have two snake in both side?

எனக்கு அடிக்கடி கனவில் பாம்பு வருகிறது . இது எதனால் என்று கூறமுடியுமா குரு ஜி ?

Pavithrakumar Elumalai said...
மதிப்பிற்குரிய குரு ஜி அவர்களுக்கு,
என்னுடைய பணிவான வணக்கம்.
நான் பொதுவாகவே எந்த ஒரு ஜீவாராசிகளையும் கொல்ல மாட்டேன் அது சிறிய எரும்பானாலும்சரி. அப்படி இருக்கும் போது நேற்று வெள்ளிக்கிழமை ஒர் சம்பவம் நடந்தது. பொதுவாகவே என்னுடைய வயல்வெளிகளில் பாம்புகளின்
நடமாட்டம் இருக்கும் ஆனால் அவைகள் யாருடைய கண்களுக்கும் தென்படாது.அன்று ஒரு வியாபாரி வைக்கோல் போர் வாங்கி ஆட்களை வைத்து வைக்கோலை கட்டிக்கொண்டிருந்தார் அப்போது போருக்கு அடியில் ஓர் நல்லப்பாம்பு படுத்திக்கொண்டடிருந்த பாம்பை பார்த்த வேலை ஆள் ஒருவர் அருகில் இருந்த கொம்பை எடுத்து ஒர் அடி அடித்துவிட நான் பயந்துபோய் எழுந்து ஓடினேன், பிறகு அதை அடிப்பதற்கு நான் அனுமதிக்கவில்லை பிறகு நானே அதை ஒரு கொம்பெடுத்து தூரமாக தூக்கி போட்டேன், அது மெதுவாக நகர ஆரம்பித்தது, அப்போது ஒரே சலசலப்பு அடித்த பாம்பை கொல்ல வேண்டும் என்று எண்ணிடம் சண்டையிட ஆரம்பித்தனர் அப்போது வைக்கோல் வாங்கிய பெரியவர் வேகமாக சென்று அதை அடித்து கொன்றுவிட்டார். அந்த நிகழ்வு எனக்கு பெரும் வேதனையையும் மனவுளச்சலையும்
கொடுத்தது. அன்று மாலையே பூ,மஞ்சள் நீர்,பாலை எடுத்துக்கொண்டு எறிக்கப்பட்ட இடத்தில் முதலில் பூக்களை போட்டு பின் மஞ்சளை நீீரை தெளித்து பின் மூன்று முரை பால் விட்டு பின் சூடம் ஏற்றி வணங்கி மன்னிப்பு கேட்டேன்.
என் கேள்விகள் என்னவெனில்
1.நல்ல்ப்பாம்பை ஏன் அடிக்கக் கூடாது? குறிப்பாக வெள்ளிக்கிழமைகளில்.
2.அதை ஓர் அடித்துவிட்டால் கொன்றுவிடவேண்டுமா?
3.வெள்ளிக்கிழமைகளில் கொன்றுவிட்டால் ஏதேனும் தீங்கு நேருமா?
4.அப்படி நடந்தேரினால் அதற்கு பரிகாரம் அல்லது வேறு ஊபாயம் உண்டா?
5.அது ஒருவேளை மனை பாம்பாக இருந்தால் பரிகாரம் அல்லது சாபநிவர்த்தி உள்ளதா?
குருஜீீயின் பதிலை எதிர்ப்பார்து


Next Post Next Post Home
 
Back to Top