Store
  Store
  Store
  Store
  Store
  Store

மலையை உடைக்கும் சக்தி

  ஹாத்மா காத்தியிடம் நீங்கள் அடிக்கடி உண்ணா நோம்பு இருக்கிறீர்களே அதற்கான சக்தியும் உறுதியும் எங்கிருந்து பெறுகிறீர்கள் எனக்கேட்டப் போது

 நான் இடையறாது ராம நாம ஜெபம் செய்கிறேன் அதனால் மாறாத குன்றாத அளப்பறிய சக்தி பெறுகிறேன் என்றார்

 ராமா என்ற இரண்டெழுத்தில் இவ்வளவு மகத்துவம் உண்டா?

சாதாரண மனிதனையும் சாதனை படைக்க வைப்பது ராம நாமம்.

 கெட்டவனையும், கெட்ட புத்தி உடையவனையும் சுத்தனாக மாற்றுவது ராம நாமம். 


  நாலா புறமும் பற்றி எரியும் பெரு நெருப்பு குப்பை கூளங்களை எரித்து சாம்பலாக்கி விடுவது போல் மனதிற்குள் மண்டி கிடக்கும் ஆசை, கோபம், காமம், மோகம், பொறாமை, பயம் போன்ற கெடுமதிகளை சாம்பலாக்கி விடும்.

 உடலில் உள்ள பாவங்களை உயிரிலுள்ள பாவங்களை கங்கை புனிதப்படுத்துவது போல் ஆத்மாவில் படிந்துள்ள பாவங்களை ராம நாமம் கழுவி களைகிறது.

 ராமன் பிறப்பதற்கு முன்பே  வசிஷ்ட மகரிஷி தசரத குமாரனுக்கு இந்த பெயரை சூட்டுவதற்கு முன்பே ராம நாமம் இருக்கிறது.

  இன்னும் சொல்ல போனால் இந்த உலகத்தின் தோற்றமே ராம நாமத்திலிருந்து தான் ஆரம்பமாகிறது. 

காரணம் அகரம், உகரம், மகரம் இணைந்த ஒங்கார பிரணவமே ராம நாமமாகும்.


 ஹர என்ற சிவநாமமும் உமா என்ற அன்னை அகிலாண்டேஸ்வரியின் திரு நாமமும் ராமா என்ற நாமத்திற்குள் மறைந்து கிடக்கிறது.

  அப்படி கிடந்து கடவுளின் பெயர் சிவபெருமானும் அல்ல நாராயணனும் அல்ல ஓசை ஒளி எல்லாம் ஆன ராமா தான் படைத்தவனின் புனித பெயர் என நமக்கு சொல்லாமல் சொல்கிறது.

 ராமாவில் உள்ள ரா வை உச்சரிக்கும் போது பண்ணிய பாவமெல்லாம் வெளியாகும்.

  மா வை சொல்லும் போது வெளியேறிய பாவமெல்லாம் மீண்டும் உள்ளே வராமல் வெளியே நின்று விடும்.

ரா என்றால் நாராயணன், மா என்றால் மகாலஷ்மி,

ரா என்றால் ஆதிசிவன், மா என்றால் ஆதிசக்தி.

ரா என்றால் பிரம்ம தேவன், மா என்றால் சரஸ்வதி தேவி,

ரா என்றால் ஆத்மா, மா என்றால் ஜீவன்,

ரா என்றால் பரம பிரம்மம், மா என்றால் சிற்சக்தி

ரா என்றால் கடவுளை வணங்குதல்,மா என்றால் கடவுளை நினைத்தல்

ரா என்றால் பாவம் அழியும், மா என்றால் சாபம் ஓடும்

ரா என்றால் மரண பயம் விலகும், மா என்றால் மரணமே நடுங்கும்

  ராமா என்று முழுமையாக சொன்னால் சிறுமை அழியும் வறுமை ஒழியும், அறியாமை விலகும், ஆணவம் பொடி பொடியாகும், கர்வம் காத தூரம் ஓடும்.

  மலையே குறுக்கே வந்தாலும் ஓங்கி அடித்து தூள் தூளாக்கும்.  சக்தி பிறக்கும்.

 எண்ணமெல்லாம், செயல் எல்லாம், வார்த்தை எல்லாம் மங்களமாக மாறும்.

தீபங்கள் அணிவகுத்து வீடுகளை அலங்கரிப்பது போல் ஆறு குளங்களை அலங்காரப்படுத்துவது போல் மனிதனின் மனம் எல்லாம் அன்பு தீபங்கள் அணிவகுத்து அகிம்சை வெளிச்சம் உலகமெல்லாம் நிறையும்.

எனவே நாடு வளம் பெறவும் நாம் நலம் பெறவும் ராம நாம வேள்வி செய்வோம்





 

Contact Form

Name

Email *

Message *