( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

கனவாகிப்போன புதையல்

  நாளந்தா பல்கலை கழகத்தை பற்றி நம்மில் பலர் அறிந்திருப்போம் ஆனால் மிக புகழ் பெற்ற அந்த நாளந்தா பல்கலை கழகம் எப்போது எங்கே இருந்தது?  அதன் சிறப்புகள் என்ன? என்பது பலருக்கு தெரியாதுதற்போதைய பீகார் மாநில தலைநகரமான பாட்னாவின் ஆதிகால பெயரே பாடலிபுத்திர நகரம்.இங்கு இருந்த நாளந்தா  பல்கலை கழகம் எல்லோர் நினைவிலும் எளிதாக வரும்.  இன்று கேம்பிரிட்ஸ் பல்கலை கழகத்தில் பயின்ற மாணவர்களுக்கு எத்தகைய மதிப்பும் மரியாதையும் உலகளவில் தரப்படுகிறதோ அதை விட பத்து மடங்கு மரியாதை நாளந்தா பல்கலை கழக மாணவர்களுக்கு அக்காலத்தில் இருந்தது. 
 ஆரம்பத்தில் நாளந்தா இருந்த இடம் பிரம்மாண்டமான மாந்தோப்பாக இருந்தது.  அதை பத்து கோடி தங்க நாணயங்கள் கொடுத்து ஐநூறு வணிகர்கள் வாங்கி கௌதம புத்தருக்கு தானமாக கொடுத்தனர்.  புத்தரின் காலத்திற்கு பிறகு மகதநாட்டு அரசன் சக்கராதித்தனும் அவனது வழித்தோன்றல்களான புத்த குப்த, தகாத குப்த, பால நித்யா, வஞ்சரா ஆகியோர்கள் நாளந்தாவை பிரம்மாண்ட வடிவில் கட்டி முடித்தனர்.  கி.பி. நானூறு ஆண்டளவில் சீனாவிலிருந்து வந்த பாகியான் நாளந்தா சென்றுள்ளார்.  அவர் அதை சீன மொழியில் நாளோ என்று அழைக்கிறார் நாளந்தா பல்கலை கழகத்தின் மைய மைதானத்தில் புத்தரின் நேரடி சீடரான சாரி புத்தன் சமாதி இருந்ததை தான் பார்த்ததாக எழுதி வைத்துள்ளார்.
   இந்த பல்கலைக் கழகத்தின் ஆசியர்களாக ஆயிரம் பௌத்த துறவிகள் இருந்தார்கள். கல்வி போதிப்பதற்கு பகல் பொழுது மட்டும் போதாமல் இரவு வேளையிலும் வகுப்புகள் நடத்தப்பட்டதாக யுவாங்-சுவாங் கூறுகிறார்.  பல வெளிநாட்டு மாணவர்களும் அங்கு இருந்திருக்கிறார்கள்.  தர்ம பாலர், சந்திர பாலர், பிராக மித்திரர், ஜீன மித்திரர், ஞான சங்கீரர், சீலா கார் போன்ற புகழ் பெற்ற பேராசிரியர்கள் பணி புரிந்ததாகவும் யுவான்-சுவாங் கூறுகிறார்.  கி.பி. அறுநூற்று எழுபத்தி ஐந்தில் இந்தியாவிற்கு வந்த ட்சிங் என்ற சீன யாத்திரிகர் நாளந்தாவில் பத்து வருடம் தங்கியிருந்திருக்கிறார்.  அவர் நாளந்தா கட்டிட அமைப்பு எட்டு மண்டபங்களும் முன்னூறு தங்குமிடங்களும் பல நூறு வகுப்பறைகளும் இருந்ததாகவும் 200 கிராமங்களிலிருந்து கிடைக்கிற வருவாய், நிர்வாக செலவிற்கு பயன்பட்டதாகவும், மூவாயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் இருந்ததாகவும் எழுதுகிறார்.
 நாளந்தாவில் எல்லா விதமான கல்வியும் துறை வாரியாக போதிக்கப்பட்டது. மிக குறிப்பாக பௌத்த மெய் பொருளியிலும், பௌத்த தந்ர யோகமும் போதிக்கப்பட்டது.  சீனா, கொரியா, திபெத், ரஷ்யாவின் சிலப் பகுதிகளிலிருந்தும் மாணவர்கள் வருகை தந்தார்கள். வந்தவர்கள் அனைவருமே நாளந்தாவில் சேர்க்கப்படுவதில்லை.  பல தகுதி தேர்வுகள் நடத்தப்பட்டு நூற்றுக்கு இருபது பேர் மட்டுமே கல்வி பயில சேர்க்கப்பட்டனர்.  தற்போது நாளந்தா இருந்த இடத்தில் புதை பொருள் ஆய்வு நடத்தும் போது பல தெய்வ திருவுறு சிலைகள் கிடைக்கப்பட்டிருப்பதை வைத்து அங்கு சடங்கு முறை பயிற்சியும் வழங்கப்பட்டதாக தெரிகிறது.  ஒவ்வொரு மாணவனும் குறைந்தது ஏழு வருடமாவது நாளந்தாவில் படித்தனர்.  படிக்கும் காலத்தில் மாணவர்களிடமிருந்து எந்த கட்டணமும் வசூலிக்கப்படவில்லை. மாறாக அவர்களுக்கு உணவு, தங்குமிடம், உடை, வைத்திய செலவு எல்லாமே இலவசமாக கொடுக்கப்பட்டது. ஆதிகால இந்தியர்கள் கல்வியை அறிவு வளர்ச்சிக்கான கருவியாக கருதினார்களே தவிர வயிறு வளர்ச்சிக்கான பொருளாக கருதவில்லை. எப்போது கல்வி திறமையுள்ளவனுக்கு இல்லாமல் வரியவன் என்பதற்காக கிடைக்காமல் போய்விட்டதோ அப்போதே நாடு கெடத் துவங்கி விட்டது.  நாளந்தாவின் பெருமையை பேசுவதினால் எந்த பயனும் இல்லை.  அது காட்டிய வழியில் அறிவு கரூவூலத்தை யார் மக்களுக்காக தானமாக கொடுக்கிறார்களோ அவர்களே நமது கண் எதிரே தெரியும் கடவுள்கள் ஆவார்கள். 
+ comments + 5 comments

தெரியாத, ஆனால் பயனுள்ள தகவல்கள்.
நன்றி.

why don you initiate an action program since India is now capable of reviving

நம் நாட்டின் மிக பெரிய பொக்கிசத்தை நய வஞ்சகர்கள் அழித்து விட்டார்கள்... பதிவுக்கு நன்றி ஐயா


Next Post Next Post Home
 
Back to Top