( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )21 ஞாயிறு ஜூலை அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

முதலில் பூமியை உருண்டை என்றவர்...


   ண்டைய கால இந்தியர்களை பற்றி எப்போதும் பெருமையாக பேசுகிறிர்களே அவர்கள் அறிவின் திறத்தை நிரூபிக்க உங்களிடம் என்ன ஆதாரம் இருக்கிறது?

 நவீன கால விண்வெளி ஆய்வாளர்களை போல் அப்போது யாராவது ஒருவர் இருந்தார் என உங்களால் சுட்டி காட்ட முடியுமா என்றும் கேட்கிறார்கள்

இந்தியர்களுக்கு விண்வெளியைப் பற்றி எதுவுமே தெரியாது.  கிரேக்கர்களிடமிருந்து தான் அதைப் பற்றிய அறிவை சிறிது பெற்றிருந்தனர் என்ற கருத்தை உலகம் முழுவதும் ஐரோப்பியர்கள் ஒரு காலத்தில் பரப்பி வந்தனர். 


  வேதங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாக கிரகங்களை பற்றிய குறிப்பு இருக்கிறதே தவிர அதில் கூட சாரமற்ற தன்மை தான் உள்ளதே தவிர வேறொன்றும் இல்லையெனவும் பொய் பிரச்சாரம் செய்து வந்தனர்.

  இந்த நிலையில் கி.பி. ஆறாம் நூற்றாண்டை சார்ந்த பஞ்ச சித்தாந்திகா என்ற நூல் முழுமையாக கிடைத்தது. 

 வேத காலத்திற்கு முன்பிருந்த வானியல் ஆய்வுகளை பற்றி ஏராளமான தகவல்கள் அந்த நூலில் கிடைத்தது. 

அதையெல்லாம் ஆராய்ந்த வரலாற்று ஆய்வாளர்கள் உலக நாடுகளில் விண்வெளி அறிவை பொறுத்த வரை பண்டைய கால இந்தியர்களுக்கு இணையாக யாருமே இல்லை என ஒரு முடிவுக்கு வந்தார்கள். 


  தொன்மை காலத்தில் விண்ணியலைப் பற்றி ஏராளமான நூல்கள் எழுதப்பட்டிருந்தாலும் அவற்றில் ஒன்று கூட இன்று நமக்கு கிடைக்கவில்லை என்பது வேதனைக்குரிய செய்தியாகும்.

 ஆனால் ஆறாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் எழுதப்பட்ட ஆரிய பட்டியம் என்ற நூல் இந்தியர்களின் விண்வெளி அறிவை நாம் வியக்கும் வண்ணம் படம் பிடித்துக் காட்டுகிறது.

  ஏசுநாதர் பிறப்பதற்கு இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்ட வேதாங்க ஜோதிடம் என்ற நூல் முழுக்க முழுக்க விண்ணியலை பற்றியது என ஆரிய பட்டியம் நமக்கு அறிமுகம் செய்து வைக்கிறது.

  பஞ்ச சித்தாங்கிதம் வரகாகிமிகிரரால் எழுதப்பட்டதாகும்.


  இவர் கலிலியோ பிறப்பதற்கு பல நூறு வருஷங்களுக்கு முன்பே பூமி உருண்டை என்பதை கண்டுபிடித்து சொன்னார். 

அது மட்டுமல்ல பூமியின் எடை எவ்வளவு எனவும் பூமி உருவான விதம் எப்படி எனவும் அழகாக சொல்லியிருக்கிறார். 

இது தவிர சூரிய சித்தாந்தம், ரோமக சித்தாந்தம், பிதாமக சித்தாந்தம், புலிச சித்தாந்தம், வசிஷ சித்தாந்தம் போன்ற நூல்களும் பழங்கால மக்களின் விண்வெளி அறிவை நமக்கு எடுத்துக் காட்டுகின்றன. இன்னும் எராளமான அறிவு கருவுலம் இந்திய மண்ணில் கொட்டி கிடைக்கிறது அதை எடுத்து சொல்ல தான் ஆள் இல்லை.
 

+ comments + 9 comments

Good one Guruji!!

மிகவு அருமையான பதிவு குருஜி. கண்டுபிடிப்பது என்னவோ நாம், ஆனால் Copyright வாங்குவது ஐரோபியர்கள். பஞ்ச சித்தாங்கிதம் மற்றும் பல அறிய நூல்களில் உள்ள தகவல்களை பதிவுகளாக வெளியிடலாமே குருஜி?

குரு உங்களை வாழ்த்த வயதில்லை ,வணங்குகிறேன் .நன்றி குரு.

Anonymous
11:13

People like Devan (from USA) will not accept that
Christ attained Divine Power from Yogis of Himalayas.
Since because Himalaya is in India. If Himalaya was
somewhere in Europe, they may accept. There is a proof
that still there is a culvert depicting Christ's name.
Its unfortunate that Indian born foreigners like Devan
always criticize Hinduism.

Anonymous
13:50

நல்ல பதிவு குருஜி. இந்து மதத்தின் அறிய நூல்களை, பொக்கிசங்களை பாதுகாக்கவே தனியாக ஒரு அமைப்பை ஏற்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது..அப்பொழுதுதான் இந்து மதத்தின் அறிய பொக்கிசங்களை காப்பாற்ற முடியும்

அறிவு என்பது எல்லா உயிரினங்களுக்கும் பொதுவானது. ஒவ்வொரு காலகட்டத்தில் உலகின் ஒவ்வொரு பகுதியுள்ள மனிதர்களிடமும் வெளிப்படுகிறது. அதனால், அறிவை "இந்தியன் அறிவு", "ஐரோப்பிய அறிவு" என்று பிரித்து பார்க்காதீர்கள். அதே போல் எல்லா மொழிகளும் சமம். நாம் ஒவ்வொருவரும், பூமியின் ஏதோ ஒரு பகுதியில் பிறந்துதான் ஆக வேண்டும். எனவே, மொத்த பூமியும் அதில் உள்ள எல்லாவும் நம் அனைவருக்கும் சொந்தம். நாம் எப்படி இந்த பிரபஞ்சத்திற்கு சொந்தமோ, அவ்வாறே இந்த பிரபஞ்சமும் நமக்கு சொந்தம். நாம் வேறு ஐரோப்பியன் வேறல்ல. எனவே, எல்லோரும் இத்தகைய பட்டிமன்றங்களை நிறுத்தி கொள்ளுங்கள்.

Anonymous
20:59

ஐரோப்பியர்களுக்கு எப்போதும் தாங்கள் தான் புத்திசாலிகள் என்ற எண்ணம் உண்டு

ஆனால் அவர்கள் காட்டு வாசிகளாக வாழ்ந்த போது இங்கு அரசியல் நடந்ததும் அவர்களுக்கு மொழி இல்லாத போது இங்கு புலவர்கள் இருந்ததும் அவர்களுக்கு தெரியாது

உலகில் அணைத்து உயிர்களும் சமம் என்று நினைப்பவன் மட்டும் தான் நிம்மதியாக வாழ முடியும் ,தினமும் எறும்புக்கு ஒரு கை வெள்ளம் வைத்தாலே போதும்,அதுவே தர்மம் செய்வதன் பலன் நமக்கு தரும்.


பருத்த தொந்தி நமதென்று நாமிருப்ப நாய் நரிகள்
பேய் கழுகு தமதென்று தாமிருக்கும் தான்

-பட்டினத்தார்


Next Post Next Post Home
 
Back to Top