( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

எடு வேப்பிலையை! அடி பேயை!!


   பேய் ஓட்டும் இடங்கள் பலவற்றிக்கு நாம் சென்று இருக்கிறோம் அங்கே பேய்களை ஓட்ட மந்திரவாதிகள் வேப்பிலையை பயன்படுத்துவார்கள் ஏன் வேப்பிலையே பயன்படுத்துகிறார்கள் வேறு எதாவது இலைகளை பயன்படுத்தலாமே என்று நமக்கு தோன்றும்

வேப்பிலையை பயன்படுத்தி பேய்களை ஓட்டும் பழக்கம் நம் நாட்டில் மட்டும் அல்ல சில ஆப்பிரிக்கா நாடுகளிலும் இருக்கிறது.

  ஆனால் பெருவாரியான ஆப்பிரிக்க நாடுகளில் வேப்பிலைக்கு பதிலாக வேறு சில இலைகளையும் உபயோக படுத்துகிறார்கள்.


   பேய் ஓட்டுவதற்கு இலைகளை பயன்படுத்தும் விஷயம் இருக்கட்டும்.

  முதலில் மனிதர்களை ஏன் பேய்கள் பிடிக்கின்றன என்பதை பார்ப்போம்.

  இன்று இந்து மத கோவில்களில் மட்டுமல்ல தர்க்காகளிலும், ஜெப கூட்டங்களிலும், கத்தோலிக்க தேவாலயங்களிலும் பேய்கள் ஓட்டப்படுகின்றன.

  நான் பிறந்த ஊருக்கு பக்கத்தில் உவரி என்ற ஊர் இருக்கிறது.  அங்கு கடற்கரையோரமாக கீழ்பகுதி கப்பல் போலவும் அதன் மேலே விமானம் இறங்கி நிற்பது போலவும் ஒரு மாதா கோயில் உள்ளது.

  அருகிலேயே மிக பழமையான அந்தோனியார் தேவாலயமும் இருக்கிறது.

 இந்த தேவாலயத்தில் செவ்வாய் கிழமை தோறும் சிறப்பு திருப்பலி நடைபெறும்.

  அக்கம் பக்கத்து கிராமத்தை சேர்ந்த ஏராளமான மக்கள் மத பாகுபாடு இல்லாமல் திருப்பலியில் கலந்து கொள்வார்கள்.  


   பூஜை முடிந்ததும் பாதிரியாரால் மந்திரிக்கப்பட்ட புனித தைலம் என்ற தேங்காய் எண்ணெய் சிறிய பாட்டில்களில் தருவார்கள்.

 அதை பெறும் மக்கள் பேய் பிடித்ததாக கருதப்படுபவர்களின் கண்களில் எண்ணெயை ஊற்றுவார்கள்.

  சிறிது நேரத்தில் எண்ணையை ஊற்றப்பட்டவர்களில் பலர் உட்கார்ந்த நிலையிலேயே முன்னும் பின்னும் ஆட ஆரம்பிப்பார்கள்.

 நேரம் செல்ல செல்ல ஆட்டத்தின் வேகம் அதிகரிக்கும்.

 ஆடுபவர்களில் முக்கால் வாசி பேர் பெண்களாக தான் இருப்பார்கள்.

 ஒரு நீளமான கயிற்றில் கல்லை கட்டிக் கொண்டு சுற்றினால் எப்படி வீர்வீரென சத்தம் வருமோ அப்படி தலை சுற்றுகின்ற வேகத்தில் அவர்கள் நீளமான தலைமுடியும் சுற்றி வரும்.


  இரவு நேரத்தில் பேரிறைச்சல் போடும் கடற்கரையோரத்தில் நூற்றுக்கணக்கான பெண்கள் தலைவிரி கோலமாக ஆடுவதை பார்ப்பதே திகிலான அனுபவமாக இருக்கும்.

  நேரம் நடுநிசியை தொடும் போது ஆட்டம் திடீரென நிற்கும்.

  ஆலய மணி நிசப்தத்தை கிழித்து கொண்டு பேரோசையோடு ஒலிக்கும்.

   இப்படி எத்தனையோ காட்சிகள் நமது நாடெங்கும் காண முடியும்.

 ஆனால் உண்மையிலேயே ஆடுபவர்கள் அனைவருக்கும் பேய் பிடித்திருக்கிறதா என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும்.

  நமது யோக சாஸ்திரங்கள் ஒரு மனிதனின் உடலில் அமானுஸ்ய சக்தி புகுந்தால் அது பத்து முதல் பதினைந்து நிமிடம் வரையே உடலுக்குள் தங்க முடியுமென சொல்கிறது.


   மணிகணக்கில் பேய் ஆடுவதும், சாமியாடுவதும் நடைமுறைக்கு சாத்தியமில்லாத விஷயமாகும்.

  இவைகளை ஒருவித மனநோய் என்றே சொல்லலாம்.

  பேய் பிடித்திருப்பதாக சொல்லப்படும் நபர்களில் ஆயிரத்தில் ஒருவருக்கே உண்மையான பேய் பிடிக்க வாய்ப்புள்ளது. 

  காரணம் மனித உடம்பில் இருக்கும் எஸ்டோபிளாசம் என்ற ரசாயணம் அதிகமாக இருந்தால் தெய்வீக சக்திகளும், குறைவாகயிருந்தால் தீய சக்திகளும் அண்டும்.  சமமாக இருந்தால் எந்த சக்தியும் அண்டாது.

  பலருக்கு சமமாகவேயிருக்கும்.  மனைவியின் மேல் உள்ள கோபம், மாமியார் மற்றும் கணவன் மேல் உள்ள அதிருப்தி, பெற்றோர்களிடத்திலுள்ள பயம், படிப்பு மற்றும் வேலையின் மீதுள்ள வெறுப்பு போன்றவைகளே பலரை பேய்பிடித்தல் என்ற மன வியாதியில் தள்ளுகிறது.

  இந்த மன வியாதிக்கு மெல்லிய மின்சார அதிர்வு கொடுத்தால் தற்காலிக நிவாரணம் பெறலாம்.

  வேப்பிலை ஒரே சீராக மீண்டும் மீண்டும் நோயாளிகளின் தலையில் அடிக்கும் போது மிதமான மின் அதிர்வு ஏற்பட்டு மனதுக்கு இதம் அளிக்கிறது

.  இந்த மின்சார ரகசியம் பூசாரிக்கும் தெரியாது, நோயாளிக்கும் தெரியாது.

 இப்படி தெரியாமலேயே பல நூறு வருடங்களாக பேய் ஓட்டுவதற்கு வேப்பிலை பயன்படுத்தப்பட்டு வருகிறது. 

 ஆரோக்கியம் தரும் விஷயம் இது என்பதனால் பாராட்டினால் தவறில்லை. 
 
+ comments + 13 comments

Anonymous
03:36

இந்த கட்டுரை மூலம் நீங்கள் சொல்ல விரும்புவது என்னவென்றால் உங்களை தவிர மற்றவர்கள்(குறிசொல்லுபவர்கள்,மந்திரவாதிகள்,பாதிக்கப்பட்ட மக்கள்,etc ) எல்லாம் பொய் சொல்கிறார்கள் மேலும் மற்றவர்களுக்கு ஒன்றுமே தெரியவில்லை ஆன்மீகத்தில் உங்களுக்கு மட்டும்தான் எல்லாம் தெரியும் . நீங்கள் பகுத்தறிவுவாதி,ஆன்மீகத்தில் அனைத்தையும் கரைத்து குடித்தவர், என்பதைத்தான் நீங்கள் மறைமுகமாக சொல்ல விரும்பிகிறீர்கள் ..குருஜி உங்களை நினைத்தால் என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

Anonymous
07:26

சந்தேகம் இல்லாதவள் தாய்
சந்தேகமானவன் தந்தை
சந்தேகமும் , சந்தேகம் இல்லாதவனும் குரு
சந்தேகமே வடிவானவன் கடவுள்

இந்த சென்டன்ஸ் பெயரில்லா முகவருக்கும் பொருந்தும்

by பெயரில்லாதவன்

மிகச்சரியான விளக்கம் குருஜி.,

சாமியாடுபவர்களோ, பேயாடுபவர்களோ சற்றே கூர்ந்து பார்த்த மாத்திரத்திலே நம்மால் பிரித்து உணரமுடியும். வேப்பிலையின் காரணம் எனக்குத் தெரியாமல் இருந்தது.

இது போன்ற விளக்கங்களை தொடர்ந்து எழுதுங்கள்..வாழ்த்துகள் நண்பரே

சூப்பர் குரு.எஸ்டோபிளாசம்

நிறைய அறிந்திராத தகவல்கள் அறிந்து கொள்ள முடிந்தது. நன்றி ஸ்ரீராமானந்தகுருஜி.

வேப்பிலை ஒரே சீராக மீண்டும் மீண்டும் நோயாளிகளின் தலையில் அடிக்கும் போது மிதமான மின் அதிர்வு ஏற்பட்டு மனதுக்கு இதம் அளிக்கிறது.


இது எந்த அளவிற்கு உண்மை. இது எங்காவது நிருபிக்கப் பட்டிருக்கிறதா?

தலைப்பு சொல்லும் சேதி கடைசி நான்கு வரிகளில் சொல்லப்பட்டுள்ளது.


மகிழ்ச்சி

21:03

@சுப்ரமணியன் சேகர்

உலகில் உள்ள ஒவ்வொரு பொருளும் மின் அதிர்வை வெளிபடுத்தும். உதாரணத்திற்கு கிணறு தோண்டுவதற்கு நீர் ஆதாரம் பார்ப்பவர் கையில் ஒரு சொம்பு வைத்திருப்பார். அவர் அச் சொம்பை வைத்தபடி நிலத்தடி நீர் உள்ள இடத்தை நோக்கி நடப்பார். நிலத்தடி நீர் உள்ள இடத்தை அடைந்தவுடன் அச் சொம்பு அவர் கையில் வேகமாக சுழலும். கையில் சுழலும் அச் சொம்பு தெறித்து கீழே விழும். "There is a connection between the Copper Vessel and the Water vein. The connection is the vibration between them."

அது போலவே வேப்பிலையை ஒரே சீராக மீண்டும் மீண்டும் நோயாளிகளின் தலையில் அடிக்கும் போது மிதமான மின் அதிர்வு ஏற்பட்டு மன வியாதி உள்ளவர்க்கு மனதில் ஒரு இதம் அளிக்கிறது.

Anonymous
22:43

vanakam

Anonymous
23:39

வணக்கம்
உங்களுடைய செய்தியில் இருந்து பிசாசு என்பதில்லை என்று புலப்படுகின்றது அப்படியானால் பில்லிசூனியம் அல்லது செய்வினை போன்ற காரியத்தைக்குறித்து என்ன சொல்கின்றீர்கள்

குருஜி.,

கோயில்களிள் சாமி ஆடுவதுபத்தி விவரமாக கூற முடிமா?

Anonymous
18:49

அருமையான விளக்கம்!பேய் பிடித்தவர் என சொல்பவரும், சொல்லப்படுபவரும் படிக்க வேண்டியது

Saravanan
19:29

@Anonymous
Hello Mr. Anonymous, i jus cant understand you, A person is giving a good info about something and you are just scolding him. You dont have guts to show ur name itself. Guruji is telling something against the belief a wide people, don't under estimate him.


Next Post Next Post Home
 
Back to Top