( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )21 ஞாயிறு ஜூலை அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

காங்கிரஸ் இப்படித்தான் அழியுமா?

  ழல் முறை கேடுகள் லஞ்ச லாவண்ய பேயாட்டம் என்பது எல்லாம் நமது நாட்டுக்கு ஒன்றும் புதியது அல்ல

சாணக்கியன் துவங்கி மன்மோகன் சிங் காலம் வரையில் இவைகள் புதிய பரிணாமம் பெற்று வளர்ந்து வருகிறது

ஒரு காலத்தில் பொது சொத்துக்களை கொள்ளை அடிப்பது பாவம் என்றும் அப்படி செய்பவர்கள் கேவலம் ஆன பிறவிகள் என்றும் மக்கள் பேசுவார்கள்

 இன்று கதை முற்றிலும் தலைகீழாக உள்ளது நேற்று வரை போலீஸ் நிலைய மதில் சுவற்றில் சாய்ந்து நின்று கட்டை பீடி அடித்தவன் இன்று எம்.எல்.ஏ ஆனவுடன் கோடி கோடியாக சம்பாதித்தால் அது அவன் திறமையாகவும் அறிவாகவும் பேசப்படுகிறதே தவிர அந்த பணம் எங்கே இருந்து வந்தது எப்படி வந்தது என்பதை பற்றி யாரும் வாய் திறப்பது இல்லை 


இன்னும் சொல்லப்போனால் அதை நினைத்து பார்ப்பது கூட கிடையாது ஊழல் செய்யாதே என்று யாராவது சொன்னால் அவரை மன நோயாளியாக பார்க்கும் கொடுமை நம் நாட்டில் மட்டும் தான் இருக்கிறது

ஊழலுக்கு எதிராக வாய் திறந்தால் அடி உதை கிடைப்பது இங்கு மட்டும் தான் பாபா ராம்தேவ் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் நிலை இதை நமக்கு உறுதிப்படுத்துகிறது

 அப்படி என்ன தவறான விஷயத்தை ராம்தேவ் கேட்டு விட்டார்?

  குத்ரோச்சிக்கும் சோனியா காந்திக்கும் உள்ள பண உறவை பற்றி கேட்டாரா?

  காமன் வெல்த் போட்டியில் காங்கிரஸ் காரர்கள் சம்பாதித்த பணத்தில் பங்கு கேட்டாரா?


 அலைக்கற்றை ஊழலில் கட்டுக் கட்டாக சுருட்டியதை தன்னிடம் கொடுத்துவிடுங்கள் என அடம் பிடித்தாரா?

 எதுவும் இல்லையே! நாட்டில் உள்ள கருப்பு பண முதலைகளை அடையாளம் காட்டுங்கள் ஊழலுக்கு எதிராக எதையாவது உருப்படியாக செய்யுங்கள் என்றுதானே கேட்டார்

 மக்கள் நலனை விரும்புகின்ற ஒரு அரசு தானாக செய்ய வேண்டிய ஒரு காரியத்தை நாட்டு குடி மகன் ஒருவன் கேட்டால் அதில் என்ன தவறு இருக்கிறது

 ஒன்று செய்கிறோம் என உறுதி மொழி தரலாம் அல்லது செய்ய மாட்டோம் என அறிவிக்கலாம் இரண்டும் இல்லாமல் இரவோடு இரவாக உண்ணாவிரத பந்தலுக்குள் நுழைந்து அநாகரிகமான ஒரு செயலை இந்த அரசு செய்திருப்பது இதன் பெயரில் மக்களுக்கு உள்ள நம்பக தன்மையை அழித்து விட்டது எனலாம்


 மத்திய அரசு முழுக்க முழுக்க ஊழல் நிறைந்தது ஊழல் வாதிகளுக்கு ஊக்கம் தருவது என்பது இந்தசெயல் மூலம் உறுதியாகி விட்டது

 ராம்தேவின் உண்ணா விரதம் சட்ட பூர்வமானது அல்ல என்றால் கபில் சிபில் சொல்வது போல் அவர் மக்களை ஏமாற்றுகிறவர் என்றால் அவரிடம் மத்திய அமைச்சர்கள் ஏன் தூது போக வேண்டும்?

உண்ணா விரதம் இருக்காதிர்கள் என்று ஏன் மன்றாட வேண்டும்?

 ஒரு வேளை ஊழலுக்கு எதிராக ஒருவர் பேசிவிட்டால் அவர் மன்மோகன் அரசாங்கத்தின் பார்வையில் ஏமாற்று பேர்வழியா?

 ராம்தேவ் மருத்துவ சான்றிதழ் இல்லாமல் புற்று நோய்க்கு மருந்து அளித்து மக்களை எமற்றுகிறாராம்

பல ஆயிரம் கோடி ரூபாய் சொத்து சேர்த்து வைத்துள்ளாராம்


 தனது இருப்பிடத்தில் பல கோடி ரூபாய் கருப்பு பணத்தை பதுக்கி வைத்துள்ளாராம்

 இப்படி அரசாங்கம் சொல்கிறது சரி இதை ஒரு வாதத்திற்கு ஏற்று கொள்வோம்

ஏன் இதற்காக இத்தனை நாட்கள் பாபா ராம்தேவ் மீது அரசு எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை

 ஒரு வேளை ராம்தேவின் முறை அற்ற செயலுக்கு அரசாங்கம் இதுவரை துணை போனதா?

 அல்லது நாட்டில் நடப்பது என்ன என்பதை அறியாத மூடத்தனத்தில் இருந்ததா?

 ஊழலுக்கு எதிராக பாபா போர் கொடி தூக்கிய பின் இந்த குற்ற சாட்டுக்களை சொல்ல வேண்டிய அவசியம் என்ன?

 வேறொரு தரப்பார் ராம்தேவ் ஆர்.எஸ்.எஸ்.சின் மறு வடிவம் என்கிறார்கள்

 அப்படி அவர் இருந்து விட்டு போகட்டுமே அதற்காக தவறுகளை தட்டி கேட்க கூடாது என்று எதாவது சட்டம் இருக்கிறதா?


  இந்த நாட்டில் முறை கேடுகளை தட்டி கேட்பவன் எல்லோருமே ஆர்.எஸ்.எஸ் என்றால் காங்கிரசுக்கு எதிரான எல்லோருமே இந்துத்துவா வாதிகளா?

குறைகளை யாருமே கேட்க கூடாது என்பவன் ஜனநாயக வாதி அல்ல சர்வதிகாரி ஆவான்

 ஆங்கில அரசாங்கம் கூட காந்தியின் உண்ணா நோன்பை தைரியமாக எதிர் கொண்டதே தவிர காந்தியின் மீது புழுதி வாரி கொட்டியது கிடையாது

 ராம்தேவ் ஊழலுக்கு எதிராக குண்டு வைக்க வில்லை துப்பாக்கியை தூக்கி காட்டி மிரட்டவும் இல்லை தன்னை வருத்தியே போராட்டத்தை துவங்கினார்

 இதில் எந்த வகையிலும் வன்முறை இல்லை ஆனால் அரசாங்கத்தின் கோழைத்தனம் தேச நலம் விரும்பும் பலரின் மனதை கொதிப்படைய செய்திருக்கிறது

  ஒரு வேளை சோனியா காந்தியும் மன்மோகன் சிங்கும் திமுகவின் ஊழல் அரசுக்கு எதிராக தமிழக மக்கள் ஓட்டுப்போட்டதை கூட சட்ட விரோதம் என்பார்கள்

 காரணம் அலைக்கற்ற ஊழலின் கருணாநிதி குடும்பம் என்பது சிதறி விழுந்த சர்க்கரை துண்டுகளை சுவை பார்த்த எறும்புகளே ஆகும்

 பெரிய வெல்ல துண்டை பதுக்கி வைத்திருப்பது சோனியா குடும்பமே

 ராம்தேவ் அவர்கள் கேட்டப்படி கருப்பு பண வாதிகளை வெளியிட்டால் காங்கரஸின் பல மூத்த தலைவர்களின் உண்மை முகம் வெட்ட வெளிச்சம் ஆகிவிடும்

 இதை தவிர்ப்பதற்காகதான் ஆரம்பத்தில் பாபாவிற்கு இரத்தின கம்பளம் விரித்து வரவேற்பு கொடுத்தார்கள் இப்போது காவல் துறையை ஏவி விட்டு துரத்தியும் அடிக்கிறார்கள்

 இவை எல்லாம் மக்கள் அறியாதது அல்ல புரியாததும் அல்ல

 வரும் நாடாளுமன்ற தேர்தலில் வாக்கு சீட்டு என்ற ஆயுதம் மக்கள் கையில் தான் உள்ளது என்பதை மத்திய அரசு மறந்து விட்டது

 அதை இப்போதாவது நினைத்து கொண்டால் திமுகவை போல் முற்றிலும் அழியாமல் தப்பிக்கலாம்

 இல்லை என்றால் காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் முற்று புள்ளி வைத்து விடுவார்கள்


+ comments + 22 comments

வணக்கம் குருஜி. இன்றைய கால கட்டத்தில் ஊழல் புரிந்து ஆட்சி செய்பவனே உண்மையான அரசியல்வாதி என்று மக்களைகாட்டிலும் தத்தம் கட்சிகள் நம்புகின்றன. எந்த ஒருவிஷயத்தை நாம் நேர்மையாக தட்டி கேட்டால் கேட்பவர்கள் மீது அரசாங்கம் என்ற போர்வையில் அராஜகம் நடக்கிறது. எப்படி நாம் கடந்த ஐம்பது வருஷத்தில் இயற்கையை நாம் உதாசீனப்படுத்தி, நம்முடைய சுய லாபத்திற்காக, உலகத்தை முன்னேற்றம் என்ற போர்வையில் சீரழித்துக்கொண்டு இருப்பதுபோல், அரசியலையும் ஒட்டு என்ற உரிமையை நமக்கு நாமே குழிவெட்டி கொள்கிறோம். எனவே ஒட்டு போடுவது மக்களின் கைகளில் இருப்பது போல், யார் அரசியலில் கருப்பு பணத்தை பதுக்கி வைக்கின்றார்களோ, அவர்களுக்கு ஓட்டுபோடுவது போல், அவர்களின் தலைகளில் கொட்டு போடுவதும் குடிமக்களின் கைகளில் உள்ளது. எனவே பாபா ராம்தேவ் போன்றவர்கள் நல்ல துவக்கத்தை ஏற்படுத்தி இருந்தாலும், எயிட்ஸ் கிருமி எப்படி வேகமாக பரவுவதுபோல், குடிமக்களாகிய நாம் ஊழலுக்கு எதிராக நாம் பரவி நிற்கவேண்டும் இந்த பரந்த உலகத்தில். மிகவும் அருமையான பதிவு குருஜி. மிக்க நன்றி.

Anonymous
03:31

எல்லாம் தேச பக்தி இல்லாதவர்களிடம் நாட்டை ஒப்படைத்ததால் வந்த வினை..இனி இந்தியாவை கடவுள்தான் காப்பாத்த வேண்டும்

Anonymous
03:53

ஒரு கசப்பான உண்மை இந்தியாவில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருந்திருந்தால் இதை போன்ற கேவலமான சம்பவம் நடந்திருக்காது..பாபா ராம்தேவ் ஒரு இந்து சந்நியாசி என்பதால்தான் துணிந்து தடியடி நடத்தி அமைதியாக நடந்த உண்ணாவிரதத்தை தடுத்திருக்கிறார்கள்,கலைத்திருக்கிறார்கள்...இதற்கு முக்கிய காரணம் இந்துக்கள் அமைதியாக இருந்துவிடுவர்கள் எந்த எதிர்ப்பும் தெரிவிக்க மாட்டார்கள் என்பதால் தான் இது நடந்தது..இதுவே முஸ்லிம் பெரும்பான்மையாக இருந்து முஸ்லிம் மத தலைவர் ஒருவர் உண்ணாவிரதம் இருந்திருந்தால் துணிந்து தடியடி நடத்தி உண்ணாவிரதத்தை கலைத்திருக்க மாட்டார்கள்.. முஸ்லிம்களின் எதிர்ப்புக்கு பயந்து அவ்வாறு நடந்திருக்காது

Anonymous
07:46

@AnonymousIt's true

Srinivasan
09:46

Dear Guruji,
Nice article.Everybody supporting Baba Ramdev, and is fight against Corruption, is wellcome move. But there is lot of Read between the lines, hidden inside, which is not open to public eyes.Baba Ramdev is not a, poor person, struggling for food, money,for every day living/Survival. He is a Man/ Yoga master/ Guru, sitting upon 1000cr wealth, with many followers in the nothern regions, who can easily arrange this kind of Thamasha spending Lakhs/ Crore. At the Expense of Govt,. flight, and all security personals, he has stage managed Advertisement Mela for his Yoga ashram. Similarity is,Recent sensation, A sanyasi preaching Bhramacharyam, with a Film Actress beside him. All are similar.Please go through is Demands, and see for yourself. Example: Abolish English and spread Hindi all over the Nation. Nice comedy,Ho God save India

கொடுமைகளை எதிர்க்கும் ஆத்திரம் எல்லா இந்தியர்களுக்குள்ளும் கோபமாக வெளிவர தயங்குகிறது .எந்தகாரியத்திர்க்கும் நமக்கு ஒரு தலைமை ஏற்க்க ஒருவரை நாம் அவதாரமாக வரவேண்டும் என ஏங்குகிறோம் .மத ஒற்றுமை இல்லை என்று பயபடுகிறோம் .....நிச்சயமாக பாபா ராம்தேவ் மிகநல்ல மனிதரும் ,தேச பக்தரும் ,ஆன்மிக மற்றும் அன்பானவரும் அதனால் தான் =====உழல பெருச்சாளிகள் பயம் காரணமாகவே தடால் அடி செய்துகொள்ளு கிறார்கள் .=== கண்டிப்பாக எல்லாவரும் அவத்தலைமை ஏற்று இந்த போராட்டத்திற்கு ஆதரவு கொடுப்போம் ---தமிழ்மன்னன்

இந்த போராட்டத்திற்கு ஆதரவு கொடுப்போம்

kanipakkaaa congressss aliyuuumm

nice brother . . .arasiyal ellamay cheating than

bookkadaya iruntha nam thesathay sakkadaya mathina brumay nam arsiyalvathikaluku maddume ulla thiramay ,eenabiraviyay birantha intha naddin arasiyal vathikaluku maanam enkirunthu varapohirathu

Anonymous
11:47

துங்கிக் கொண்திருந்த குழந்தைகள் பாலகர்கள் பெண்கள் எல்லாரையும் நடு இரவில் பதம் பார்த்திருக்கிறது பயிற்சிபெற்ற போலீஸ் எனும் காட்டுமிராண்டிக் குண்டர் கும்பல்; 30க்கும் மேலானவர்கள் ஆஸ்பத்திரியில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.நூற்றுக் கணக்கானோர் படுகாயமுற்றிருக்கிறார்கள். இதெற்கெல்லாம் அவர்கள் செய்த பாவம் ஜனநாயகத்தின் பேரால் சோனியா சர்வாதிகார அரசாக செயல்பட்டுக்கொண்டிருக்கும் ஊழல் அரசை ஊழல் ஒழிக்கக்கூறி குரல் கொடுத்து காந்தீய வழியில் உண்ணாவிரதம் இருந்ததுதான்.
ஆட்சி செய்யும் திருடர்களின் கும்பல் தலைவர்களாக விளங்கும் கொடிய திருடர்களைத் திருட்டை ஒழி என்று போராடினால் என்ன நடக்கும் என்பதையே இக்காட்டுமிராண்டித் தாக்குதல், கொலைவெறித்தாக்குதல் காட்டுகிறது. நேர்மையும் நாட்டுப் பற்றும் ஏழைகள்மேல் அன்பும் இரக்குமும் மிகுந்த சுயநலமற்ற ஒரு மகாயோகியையும் அவரின் ஆதரவாளர்களையும் இப்படித்தாக்குதல் நடத்தி ஒடுக்கப் பார்க்கும் இக்கொடிய கும்பல் ஒழிந்தே தீரும். அவர் கோடிகோடியாகச் சம்பாதிக்கிறாராம்! என்ன அவர் நேர்மையற்றா சம்பாதிக்கிறார். ஓ அவரைக் குற்றம் சொல்லி நரகத்திற்கு டிக்கட் வாங்கிவிட்ட ஓ பாவிகளே!அவர் நேர்மையோடு சம்பாதித்ததை அவரின் சொகுசு வாழ்க்கைச் சுயநலத்திற்காகவா பயன்படுத்துகிறார்? உங்கள் கொடிய செயலுக்குக் கொடிய தண்டனை பெற்று துடிதுடித்து வருந்தும் காலம் வெகு தூரத்தில் இல்லை ஓ பாவிகளே!

Anonymous
12:33

hey its not a right thing, if u wanna a afose anything u should in right area , if baba want to clear all things in poltics and soxcial things then he should be appear in poltics then should he do

ஊழல் செய்யாதே என்று யாராவது சொன்னால் அவரை மன நோயாளியாக பார்க்கும் கொடுமை நம் நாட்டில் மட்டும் தான் இருக்கிறது

ஊழலுக்கு எதிராக வாய் திறந்தால் அடி உதை கிடைப்பது இங்கு மட்டும் தான் பாபா ராம்தேவ் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் நிலை இதை நமக்கு உறுதிப்படுத்துகிறது yes thats why our Indians are fear to stand against the govt , scandles and curruptions

15:11

அதை இப்போதாவது நினைத்து கொண்டால் திமுகவை போல் முற்றிலும் அழியாமல் தப்பிக்கலாம்


திமுக 'முற்றிலும்' அழிந்துவிட்டது என்பது தவறான கூற்று.. அது இம்முறை வெற்றிவாய்ப்பை இழந்திருக்கிறது.. அவ்வளவே..

'நிரந்தர முதல்வர்' என்று வர்ணிக்கப்பட்ட ஜெயாவே முன்பின் தெரியாத சுகவனத்திடம் மண்ணைக் கவ்வவில்லையா.. அதன்பின் ஆட்சியைப் பிடிக்கவில்லையா..?

மக்களுக்கு மறதி உள்ளவரை, இங்கு திமுக, அதிமுக இரண்டையும் அழிக்க முடியாது..

17:01

வெளி நாடுகளில் சர்வாதிகாரத்திற்க்கு எதிரான எழுச்சி இணையத்தின் வாயிலாகத்தான் மக்களை ஒருங்கிணைத்தது அதைபோல் இங்கும் ஊழல் மட்டுமல்லாமல் அரசியல் எழுச்சியும் இணையம் வாயிலாக பரவ வேண்டும்.

Anonymous
18:48

ராம் தேவ் எனும் ஹனுமான் வாலில் வைத்த தீ உழல்கள் என்ற அரக்கர்கள் நிறைந்த காங்கிரஸ் எனும் இலங்கையை அழித்தேதிரும் ... பாவம் காங்கிரஸ், முதலில் சோனியாவின் பாஸ்போர்ட் முடக்கவேண்டும்
சென்னை - ராமஜயம்

ஊழல் எங்கிருந்தாலும் நாட்டுக்கு ஆபத்து தான்
ஊழல் மற்றும் கருப்பப் பணத்திற்கு எதிராக
அதனை ஆதரிப்பவரை அதாவது ஊழலை எதிர்ப்பவைரை
அவரது மூலத்தை பார்ப்பது என்பது
சரியான தீர்வாகாது.

வீடு தீப்பற்றி ஏறியும் ்போது தண்ணீர் ஊற்றி அணைப்பவரை அவரது கொள்கையையோ அவரது பிறப்பையோ பற்றி சிந்திப்பது என்பது
வீடு இன்னும் எறியட்டும் என்ற எண்ணம் கொண்டவாகளாகவே பிற்கால சந்ததியினர் கருதுவர்.
நாடு அவர்களை மன்னிக்காது.

@Srinivasan
So,what? Let him float on wealth but which has been earned not by corruption nor by any illegal means nor at the expense of your labour but by thankfully paid by the people who have been benefiting by his Yoga and Ayur Vedic Medicine etc.
you are shamelessly throwing blemish on the Great pure Yogi like thowing filth at the Sun, which will fall on your face only.
By your comment you are mercelessly supporting the corrupted thieves and police gundas who lathi charged on sleeping your children, mothers and sisters.
please humanely think before write or speak.

Anonymous
19:50

வரும் நாடாளுமன்ற தேர்தலில் வாக்கு சீட்டு என்ற ஆயுதம் மக்கள் கையில் தான் உள்ளது என்பதை மத்திய அரசு மறந்து விட்டது

2013-ல் காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் முற்று புள்ளி வைத்து விடுவார்கள்

ஏ ஆர் ஆர் கூறுவதில் உண்மை இருக்கிறது. ஏதாவது ஒரு வகையில் திமுக இயங்கிக்கொண்டிருக்கும். ஆனால் ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கனிமொழிக்கோ ராஜாவுக்கோ, தயாநிதிக்கோ தண்டனை என்று வந்தால் பின் திமுக மேலும் சிறு துண்டுகளாக உடையும் என்று எதிர்பார்க்கலாம்! கலைஞருக்குப் பின்னும் ஸ்டாலின்/அழகிரி/கனிமொழி/தயாநிதி+கலாநிதி தகராறில் திமுக உடையும் என்று எதிர்பார்க்கலாம்!

அரசியல் விளக்கம் தந்தமைக்கு மிக்க நன்றி....


Next Post Next Post Home
 
Back to Top