( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )21 ஞாயிறு ஜூலை அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

இதிகாசங்கள் பிராமணர்களின் சதியா...?


  திகாசம் என்ற வார்த்தையை நேரிடையாக தமிழில் மொழி பெயர்த்தால் நடந்த சரித்திரம் என்று சொல்ல வேண்டும். 

பொதுவாக இதிகாசங்கள் என்பது நமது இந்தியாவை பொறுத்த வரை இராமாயணம், மகாபாரதம் ஆகிய மாபெரும் காவியங்களை மட்டுமே குறிக்கும்.

  இன்று ராமாயணம் நடந்ததா மகாபாரதம் நடந்திருக்க முடியுமா?  என்ற வாத விவாதங்கள் சூடாகவே நடக்கிறது.

 சேது சமுத்திர திட்டம், ஆதம் பாலம் என்ற இராமர் பாலத்தை இடித்து தான் நிறைவேற்றப்பட வேண்டும் என்ற நிலை வந்த போதே இதிகாசங்களை பற்றிய சர்ச்சைகள் அதிகரிக்க துவங்கிவிட்டது.


   ராமாயணமும் மகாபாரதமும் வரவலாற்று நிகழ்வுகளே என்று ஒரு சாராரும், நிகழ்வுகளும் அல்ல, நிகழ்ச்சிகளும் அல்ல பார்ப்பனர்கள் கட்டி வைத்த கட்டுக்கதையே அவைகள் என வேறொரு சாராரும், லாவணி பாட ஆரமித்து விட்டார்கள். 

இதில் எது சரி, எது தவறு என்ற விவாதம் இப்பொழுது நமக்கு தேவையில்லை.

  ஆனால் இந்த இரண்டு காவியங்களுக்கு இணையான காவியங்கள் உலகத்தில் இன்று வரை தோன்றவில்லை எனும் போது வரலாற்று சான்றுகளுக்காக மூக்கை உடைத்து கொள்வது, சிலையின் அழகை ரசிப்பதை விட்டுவிட்டு உளியின் தரத்தை எடை போடுவதற்கு ஒப்பாகும்.


  இந்திய இலக்கியங்கள் எல்லாமே ஒரு வகையில் வேதங்களுக்கு விளக்கம் சொல்வதற்காகவோ அல்லது அவைகளை எதிர்ப்பதற்காகவோ உருவானவைகள் தான்.

  இந்த இதிகாசங்களும் வேத இலக்கியம் பாமரனுக்கும் புரிய வேண்டும் என்பதற்காக எழுந்தவைகளே ஆகும்.

  மக்களை நல்வழிப்படுத்துவதற்காக ஒழுக்கத்தின் உயர்வை சாதாரணமாக எல்லோரும் விளங்கி கொள்ள வேண்டும்.  என்பதற்காக உருவானவைகளே ராமாயணமும் மகாபாரதமும் ஆகும்.

 வால்மிகியால் எழுதப்பட்ட இராமாயணம், லட்சிய புருஷனான ராமனது உயர்ந்த சரீதத்தை சொல்லுகிறது.

  ஒரு மனிதன் தன்னை விட உயர்ந்தவர்களிடத்தில் எப்படி பழக வேண்டும். 

  சமமானவர்களோடு எப்படி நடந்து கொள்ள வேண்டும்,

 குறைந்தவர்களை எப்படி நடத்த வேண்டும்,

ஒரு நாட்டை ஆள்வது எப்படி, நல்லாட்சிக்கும், வல்லாட்சிக்கும் உள்ள வித்தியாசம் என்ன

ஒரு சமுதாயம் அமைதியாக வாழ என்ன செய்ய வேண்டும்.  எதை செய்ய கூடாது என்பன போன்ற புறம் சார்ந்த விஷயங்களையும்

 அன்பு என்றால் என்ன, விசுவாசம் என்றால் என்ன, ஒழுக்கம் என்றால் என்ன என்பன போன்ற அகம் சார்ந்த விஷயங்களையும் ராமாயணம் மிக விரிவாக பேசுகிறது. 

  இன்றைய பகுத்தறிவு வாதிகளால் அறிவு வளராத காலம் என்று சொல்லப்படும் ஆதிகாலத்திலேயே இன்றைய வாழ்க்கை இப்படி தான் இருக்க வேண்டுமென வாழ்க்கை சவால்களை இப்படி தான் சமாளிக்க வேண்டுமெனவும் ஒரு தனி மனிதன் சிந்தித்து அற்புத படைப்பை உருவாக்கியிருக்கிறான் என்றால் அவன் புத்திசாலியா? அவனிடம் குறை காணும் இவன் புத்திசாலியா? என்று நமக்கு கேட்க தோன்றுகிறது.

  ராமாயணம் சம்பந்தமேயில்லாத இருவருக்கிடையில் நடைபெறும் போரை பற்றி பேசுகிறது என்றால் மகாபாரகம் ரத்த சம்பந்தம் உள்ள பங்காளிகளின் போரை பற்றி பேசுகிறது.

 ராவணன் காமத்தின் வடிவம், துரியோதனன் பேராசையின் வடிவம்,

 இப்படி நடந்து தான் தர்மத்தை காக்க வேண்டும் என்பது ராமனின் சித்தாந்தம். 

  எப்படி நடந்தாவது தர்மத்தை காக்க வேண்டும் என்பது கிருஷ்ணனின் தத்துவம்.

  ராமாயணமும், மகாபாரதமும் பிராமணர்களின் சதிக் காவியங்கள் என வாதிடுபவர்கள் ஒரு விஷயத்தை சிந்தித்து பார்க்க வேண்டும்.

  பிராமணர்களின் உயர்வை பற்றி பிராமணீயத்தின் சிறப்பபைப் பற்றி பிரச்சாரப்படுத்த வேண்டும் என்ற நோக்கம் தான் முக்கியமென்றால் இதிகாச கதாநாயகர்கள் அனைவரும் பிராமணர்களாகவே இருந்திருக்க வேண்டும்

  ஆனால் ராமனே சத்ரியன், கிருஷ்ணனோ தாழ்ந்த ஜாதியென்று சொல்லப்படும் யாதவ குலத்தை சேர்ந்தவன்.

  ஆனால் கெட்டவனாகவும், வில்லனாகவும் காட்டப்படும் ராவணன் சுத்தமான பிராமணன்.

 இதை உணர்ந்தால் இதிகாசங்களின் மீது வெறுப்பு வராது இந்துக்களிடம் பிளவை ஏற்படுத்தவே பிராமணர் பிராமணர் அல்லாதவர் என்ற கதைகள் விஞ்ஞான பூர்வமாக சிருஷ்டித்து உலவவிடப் பட்டிருக்கிறது இதை உணர்ந்தால் பல உண்மைகளை அறியலாம்
 
+ comments + 115 comments

07:54

" வரலாற்று சான்றுகளுக்காக மூக்கை உடைத்து கொள்வது, சிலையின் அழகை ரசிப்பதை விட்டுவிட்டு உளியின் தரத்தை எடை போடுவதற்கு ஒப்பாகும்."

எளிமையான, அருமையான பதிவு
நன்றி குருஜி

எளிமையான, அருமையான பதிவு
நன்றி குருஜி

Anonymous
08:37

சரியாக சொன்னீர்கள் குருஜி .

நாம் என்ன சொன்னாலும் நல்லவற்றை எடுத்துக்கொள்ளாமல் கதை படி வாழ நினக்கிறார்களே தவிர அதன் உட்கருத்தை அறிந்து யாரும் செயல்படுவது இல்லை இதற்கு யாரை குறை சொல்வது தெரியவில்லை

//இதிகாசங்கள் பிராமணர்களின் சதியா...?//

பிராமணர்கள் என்றால் யாரு ? பிரம்மா முகத்தில் இருந்து பிறந்தவர்களா ? எனக்கு தெரிந்து எந்த ஒரு பார்பனரும் அவ்வாறு பிறக்கவில்லையே.......!

Anonymous
14:56

@Kanchi Press

எளிமையான, அருமையான பதிவு
நன்றி குருஜி

ஒரு மிகச்சிறந்த உண்மையான தைரியமான எழுத்தாளர்கள் தன்னுடைய எழுத்துக்களுக்கு வரும் ஆதரவை எப்படி சந்தோஷத்துடன் எற்றுக்கொல்கின்றனரோ , அதே போல விமர்சனங்கள் மற்றும் எதிர்ப்புகளையும் நேரடியாக சந்திக்க வேண்டும், நீங்கள் நான் கூறிய கருத்தை பதிவிலிருந்து எடுத்து விட்டீர்கள், இதிலிருந்து நீங்கள் ஒரு கோழை பயந்தாங்கோலி, விமர்சனங்களுக்கு பதில் அளிக்க தெரியாதவர் , என எனக்கு படுகிறது, இப்படி தானே உங்களுடைய ஆரிய முன்னோர்கள் எங்கள் திராவிட இனத்தின் இதிகாசங்களிலும் பதிவேற்றம், பதிவிறக்கம், இடை செருகல், எல்லாம் செய்து இருப்பார்கள் அந்த புத்தி அப்படியே உங்கள் மரபணுவிலும் வந்துள்ளது.

எதை வைத்து உலகத்தில் இதற்கு இணையான காவியம் இல்லை என்று சொல்ஹிரீர்கள்? பக்கத்தில் இருக்கும் கேரளா மற்றும் கர்நாடகா வை கேட்டாலே திருக்குறள் பற்றி தெரியவில்லை. ஆனால் உலக பொது மறை என்று சிலர் கூறுவது உண்டு. அது போலத்தான் இதிகாசங்களும்.

@sadakka இவர்கள் ஆரியர்களில் அடிமைகள் நமது முன்னோர்களான அறிவியல் மேதாவிகளே இன்றைய சித்தர்கள் அவர்களை ஹிந்துக்கலாக்கி அவர்கள் நமக்கு விட்டுசென்ற போக்கிழங்களையும் ஆரியர்களுடயதாக மாற்றிக்கொண்டனர்

இவ்வுலகில் திருக்குறள் அளவிற்கு எந்த ஒரு நூலும் ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டுமென்பதை கூறவில்லை, உங்கள் ராமாயணம் ,மகாபாரதம், இருப்பதிலேயே மிகவும் கீழ்த்தனமான, மட்டமான எப்படி வாழக்கூடாதோ அதெல்லாம் வாழ்ந்த ராமன், கிருஷ்ணனை உதாரணம் கட்டும் கேவலமான நூல்கள்

அது என்ன தசாவதாரத்தில் ராமன் ,கிருஷ்ணன் அவதாரங்களுக்கு மட்டும் இவ்வளவு விளம்பரம், அப்போ மற்றதெல்லாம் சீரியால்கலோ இந்த இரண்டு மட்டும் மூவியா.

Excellent comment.Unfortunately our politicians cling to the outdated and debunked theory of Aryan/Dravidian divide and try to confuse people.But when it comes to making use of beneficial items like Yoga or Aurveda,Dravidian leaders have no shame in making use of the benefits arising out of itwhile condemning the non existent Aryan culture

Anonymous
22:13

muttal post

Anonymous
00:49

surender kettkirar idhu serial or movieya yendru avarukku athai yeduvum theriyathu pola..mellum Thiruvallurai Yarrum paarthatillai athanal appadi oruvar illai yendru sollamudiyuma...avar nalla vazhkai vishyathai sollirrukirar yendruthan yeduthukollavendum....Ramayanam and Mahabharaththil ulla nalla vishyamkalai naam yedhuthu kollavendum avaluvuthan, athan piragu Ramar, krishnarai vanguvathum viduvatham avaravar sondha karthu...athai vittu vaaikku vanthapadi pesinal nagareegam illai...athu nonsense than...

Anonymous
01:14

Neengal kurrum thirukkural kuda "Kadavul vazhthuil" than thodangirathu apothu thiruvalluvar paguthariyatharva? avvar kuriya anithu vishyangalayum yetrukollum neengal athai mattu yenn puram thallukirirgal? Dravidargal vazhkai muraiya suringa solla sonnal ungalal solla mudiyuma surender?

Anonymous
01:34

Avar Paidhankoil irrukkattum neenga yenna periya vishyathai sollitinge? Yenna neenga seidha sathanai sollum? Summa Yellathukkum nottai sonnal Yedhuvum illai athai therinchikongo

Anonymous
01:39

நீர் என்ன பெரிய விஷயத்தை சொல்லிவிட்டீர் சுரேந்தர் அவர்களே யாரும் சொல்லாததை சொல்லிவிட்டிரா? போதும் போதும் நம்பரவர்கள் நம்பட்டும் உங்களுக்கு நம்பிக்கை இல்லன விட்டுவிடவும் அதுக்காக எது நீங்க தன இயற்கை படைத்தவர் போல பேசவேண்டாம் நீங்கள் என்ன தந்தை பெரியார் அவர்களை விட விஷயம் தெரிதன்வர ?

@Sriram, Bahrain
புது சாமியார் நீ எவ்ளோ சுருட்ட போற ? இவன் ஒரு பிராட்

தந்தை பெரியார் மட்டும் இல்லையேல் இந்நேரம் உங்களை போன்ற ஆரியப்பதர்கள் எங்களை விழுங்கி இருக்க மாட்டீர்கள, திராவிட கலாச்சாரத்தை இந்நேதென சொல்ல முடியாது, ஏனென்றால் அதை தான் நீங்கள் சுவடு இல்லாமல் அழித்து விட்டீர்களே குள்ள நரிகளா, ஆனால் ஆரியக்கலாச்சரத்தை என்னால் இனம் காண முடியும், திருவள்ளுவர் எந்த கடவுளை குறிப்பிட்டு கடவுள் வாழ்த்து பாடியுள்ளார் என சொல்லுமையா முதலில், திருவள்ளுவர் இருந்ததற்கு அடையாளம் இல்லாதது போல் பேசுகிறீரே அவர் கைப்பட எழுதியதை வைத்து அவரை அடையாளம் காண்கிறோம், உங்கள் இராமாயணம் என்ன ராமராலும், மகாபாரதத்தை கிருஷ்ணருமா எழுதினார்கள் வால்மீகி தானே எழுதினர், இல்லாத யாரோ ஒருவரை தெய்வமாக நினைக்கும் நீங்கள் என்னிடம் திருவல்லுவரைப்பற்றி கேள்வி எழுப்புகிரீரா? திராவிடர் என்றால் கடவுள் நம்பிக்கை இல்லதவர்கலேன யாரையா சொன்னது திராவிடர்களுக்கும் கடவுள் நம்பிக்கை உண்டு ஆனால் அது உங்களின் ராமர் , கிருஷ்ணர் , பரம சிவன் இல்லை, அதை தான் நாங்கள் சொல்கிறோம் முதலில் இந்த அறியாமையை போக்கி கொள்ளும், உங்கள் இதிகாசத்திலிருந்து நல்லதை மட்டும் எடுக்க வேண்டுமென சொல்கிறீரே, அப்படியானால் இன்று நிறைய செக்ஸ் புத்தகங்களும் , கதைகளும் வருகிறது, அதிலும் கடுகளவு நல்லது இருக்கும் தானே அதனால் அதிலிருக்கும் ஷகிலாவை கடவுளாக ஏற்கலாம ? ஏனென்றால் உங்கள் இதிகாசங்களிலும் இதை போன்ற கேவலமான பதிவுகள் உள்ளதல்லவா, என்னை எல்லாம் தெரிந்தவனா என கேட்கிறீர்கள் எல்லாமும் தெரிந்த சான்றோர்கள் நிறைந்த திராவிட இனத்தில் பிறந்த திராவிட குடிமகன் நான், நான் யாரென்பதை காலம் உங்களுக்கு விளக்கும்

எங்கள் திராவிட இணக்கடுவுள் யார் என்பது உலகமறியும், ஒன்று முருகன் ,இவருக்கு இரண்டாவது திருமணம் நடத்தி அதன் மூலம் தேவர்களுக்கு மருமகனாக்கி சிவனுக்கு மகனாக்கி ஆரியக்கடவுலாக்கிவிட்டீர்கள், அடுத்து ஐயனார், வீரன், சூரன், அப்புறம் மாறி , அங்காளம்மன், இவர்களையும் சிவனுக்கு, மனைவியராக்கி விடீர், இதம் மூலம் உங்கள் கடவுள்களையும் வணங்கசெய்து விட்டீர்கள் தெரியாத உங்களின் பிராட் தனம்,

எங்கள் முன்னோர்களை நரித்தந்திரத்தோடு வெற்றி கொண்டதன், வெற்றிப்படைப்பே ராமாயணம், மகாபாரதம் எல்லாம், இதை போற்றும் எந்த ஒரு திராவிட இனத்தில் பிறந்த கடைசி மனிதனும் ஆரிய இரத்தக்கலப்பினமே,

Anonymous
13:06

India was then with Antarctica during that split and on further tectonic plate shift India moved towards, Asia and Australia moved towards south east, the archipelago in between India and proves this fact.

Dravidian race was highly evolved one during that time and they started moving towards west searching, better resources. In this process some got mixed with the natives of the place.

Due to adverse situation, the mixed Dravidian race returned back to India. The returned Dravidians are called Aryans (ari= returned or outsider). There is nothing called separate Aryan race. Aryan invasion theory was disproved by many researchers.
To say exactly today’s NRIs are Aryans of ancient India

Anonymous
14:33

ஐயா சுரேந்தர் அவர்களே,
"திருவள்ளுவர் இருந்ததற்கு அடையாளம் இல்லாதது போல் பேசுகிறீரே அவர் கைப்பட எழுதியதை வைத்து அவரை அடையாளம் காண்கிறோம், உங்கள் இராமாயணம் என்ன ராமராலும், மகாபாரதத்தை கிருஷ்ணருமா எழுதினார்கள் வால்மீகி தானே எழுதினர், இல்லாத யாரோ ஒருவரை தெய்வமாக நினைக்கும் நீங்கள் என்னிடம் திருவல்லுவரைப்பற்றி கேள்வி எழுப்புகிரீரா?"

உங்களுக்கு எப்படி உரிமை இருக்கிறதோ ஆப்படி அனைவருக்கும் இருக்கிறது, அடுத்து 2 நுற்றாண்டில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களை பற்றி அப்போது உள்ளவர்கள் படிக்கும் போது இவற்றை என்ன எம்.ஜி.ஆர் எழுழிதினர் என்று கேட்பிர்களா? யார்ர் ஒருவர் அதை பற்றி எழுதினாலும் அதை மக்கள் போட்ட்ருவர்கள். இப்போவும் திரு எம்.ஜி.ஆர் அவர்களை பற்றி பல பிரபலங்கள் எழுதுகிறார்கள் ஆதனால் என்ன தப்பு. அதை போலவே கவி அரசர் கண்ணதாசன் புகழ் மிக்க பாடினார்கள், அது போல தான் திருவள்ளுவர் மக்களுக்கு வாழ வழிகளை சொல்லிவிட்டு போயிருக்கிறார் அது மிகவும் போற்றுதலுக்கு உரியது. ஆனால் நீங்கள் சொல்லுவது போல் அவர்களே எழுதவேண்டும் என்று அவசியம் இல்லை. மேலும் திருவள்ளுவரை நீங்கள் நேரில் பார்த்து இருகிரிகளா? நானும் அவரை பற்றி படித்து தெரிந்திகொண்டு அவரை போற்றுகிறேன், அதை தன நல்லதை எடுத்துகொள்ளுங்கள் என்று கூறினேன்.

Anonymous
15:32

@surendhar
///// உங்கள் ராமாயணம் ,மகாபாரதம், இருப்பதிலேயே மிகவும் கீழ்த்தனமான, மட்டமான எப்படி வாழக்கூடாதோ அதெல்லாம் வாழ்ந்த ராமன், கிருஷ்ணனை உதாரணம் கட்டும் கேவலமான நூல்கள்///////

சுரேந்தரு காசுக்காக மதம் மாறிய நீ படிக்கிற பாரு பைபிள் அதுதாண்டா கேவலமான நூல்.அந்த கேவலமான புக்கை படிக்கிற பாரு நீயும் கேவலமானவன்..
/////அது என்ன தசாவதாரத்தில் ராமன் ,கிருஷ்ணன் அவதாரங்களுக்கு மட்டும் இவ்வளவு விளம்பரம், அப்போ மற்றதெல்லாம் சீரியால்கலோ இந்த இரண்டு மட்டும் மூவியா////

இயேசுவை கும்மிடுற உனக்கெல்லாம் எதுக்குடா இது..சீரியலா இருந்தா என்ன மூவியா இருந்தா என்ன?..உன்னோட இயேசு மாதிரி டுபாகூர் இல்லை

/////
எங்கள் திராவிட இணக்கடுவுள் யார் என்பது உலகமறியும்/////

சுரேந்தரு நான் வன்னியர் ஜாதியை சேர்ந்தவன்..நான் என்ன திராவிடனா?.திராவிடர் என்று சொல்லி மக்களை பிரித்தவனே கால்டுவெல் என்ற கிறிஸ்துவ பாதிரியாருதான்..

////ஒன்று முருகன் ,இவருக்கு இரண்டாவது திருமணம் நடத்தி அதன் மூலம் தேவர்களுக்கு மருமகனாக்கி சிவனுக்கு மகனாக்கி ஆரியக்கடவுலாக்கிவிட்டீர்கள், அடுத்து ஐயனார், வீரன், சூரன், அப்புறம் மாறி , அங்காளம்மன், இவர்களையும் சிவனுக்கு, மனைவியராக்கி விடீர், இதம் மூலம் உங்கள் கடவுள்களையும் வணங்கசெய்து விட்டீர்கள் தெரியாத உங்களின் பிராட் தனம்////

நல்லாவே கதைவிடுற நீ..உன்னை மாதிரியான கிருஸ்துவ நா..களெலாம் இந்த மாதிரி ரீல் விடுறதில கெட்டிக்காரனுங்க தெரியாதா உங்க பிராடுத்தனம்

//// எங்கள் முன்னோர்களை நரித்தந்திரத்தோடு வெற்றி கொண்டதன், வெற்றிப்படைப்பே ராமாயணம், மகாபாரதம் எல்லாம்/////

உன் முன்னோர் யாரு ராவணனா? அவனை வெற்றிகொண்டதன் வெற்றிபடைப்ப்புதான் ராமாயணம்..ராவணன் ஒரு பார்பனன் அப்போ நீயும் பார்பனனா?..உன்னோட பாசையில சொல்றதுனா நீதான் ஆரியன்..

@Anonymousபெயரை குறிப்பிடாத பேடியே உன்னை நீ வன்னியர் என குறிப்பிடுகிறாய், ஆரியர்கள் வகுத்த ஜாதிக்குள் மாட்டிக்கொண்ட காவல் விலங்கு நீ, நீ வன்னியர் என்றதால் ஒன்று சொல்கிறேன் எதற்கும் பயம் கொள்ளாத, வீரமாக போரிட்டு தமிழர் மரபை வளர்த்தெடுத்த இனமட வன்னிய இனம், மாமல்லன் என ஒரு மன்னனிருந்தான் உனக்கு தெரியுமா வாய்ப்பேச்சு வெட்டிப்பயலே, அவன் தான் கட்டிய கோவிலுக்கு பார்ப்பனர்கள் இல்லாமல் குட முழக்கு நடத்தினான் என்பது தெரியுமா? அவன் உன் முன்னோர் தானடா அவர்கள் அப்படி இருக்க நீ மட்டும் எப்படி ஆரியர்களின் அடிமை ஆனாய் ஒருவேளை நீ ஆரிய இரத்தம் கலந்தவனோ , இந்த வன்னிய வரலாறை நான் தெரிந்து கொண்டதன் காரணம் நானும் வன்னியர் என சொல்லப்படுகின்ற அந்த இனத்தில் பிறந்தவனடா, காசுக்காக மதம் மாறுபவன் நானில்லை என்னை பொறுத்தவரையில் இந்து , முஸ்லிம் , கிறிஸ்துவம், இந்த மூன்று மதங்களும் தான் இப்போது எம் திராவிட கலாச்சாரத்தை அழித்தும் , அழித்துக்கொண்டுமிருக்கிறது ( என் மரபணு தமிழர் வழி இல்லையென்றால் மரணித்து மறுபடி பிறப்பேன் தமிழனாக ) உன்னால் முடியுமா ? பேடியே முதலில் உன் உண்மையான பெயரை போடா தைரியமில்லாதவன் நீ, நீ வன்னியனாக இருக்க வாய்ப்பே இல்லை,

தமிழினத்தை ஏற்க மறுக்கும் அடிமைகளே உண்மையான ஆராய்ச்சி ஒன்றை சொல்கிறேன் படித்து விட்டாவது திருந்துங்கள் தென்னிந்தியாவில்தான் முதல் முறையாக இந்தியர்கள் உருவானார்கள். அதன் பின்னரே வட இந்தியாவில் மக்கள் குடியேறத் தொடங்கினர் என்று புதிய மரபியல் ரீதியிலான ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
இந்திய மூதாதையர்கள் குறித்த ஆய்வு ஒன்றை ஹைதராபாத்தில் உள்ள மூ்லக்கூறு மற்றும் மூலக்கூறு உயிரியல் ஆய்வு மையமும் (), அமெரிக்காவின் ஹார்வர்டு மருத்துவப் பள்ளி, ஹார்வர்ட் பொது சுகாதார கல்லூரி, ஹார்வர்ட் பிராட் கழகம், மாசசூசட்ஸ் தொழில்நுட்பக் கழகம் (எம்.ஐ.டி) ஆகியவை இணைந்து நடத்தி வருகின்றன. இந்த ஆய்வு குறித்த மிகப் புதிய, அதேசமயம், பல வித்தியாசமான தகவல்களை இவர்கள் வெளியிட்டுள்ளனர். இந்த ஆய்வு முடிவுகள் நேச்சர் இதழில் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து ஹைதராபாத் மையத்தின் முன்னாள் இயக்குநரும், இந்த ஆய்வறிக்கையின் இணை ஆசிரியருமான லால்ஜி சிங் மற்றும் ஹைதராபாத் மையத்தின் மூத்த விஞ்ஞானியான குமாரசாமி தங்கராஜனும் கூறுகையில், இது வரலாற்றை திருத்தி எழுத உதவும் ஆய்வாகும்.
13 மாநிலங்களைச் சேர்ந்த 25 வித்தியாசமான இனக் குழுக்களைச் சேர்ந்த 132 பேரின் ஜீனோம்களிலிருந்து 5 லட்சம் மரபனு குறியீடுகளை ஆய்வு செய்தோம். அனைவருமே இந்தியாவின் பிரதான ஆறு மொழிகளைப் பேசும் இனக்குழுக்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். பழங்குடியினர், பல் வகை ஜாதி என அனைத்துப் பிரிவினரையும் உள்ளடக்கிய வகையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஆய்வுகளின்படி, இந்தியாவில், மிகவும் தொன்மையான 2 பிரிவினர் இருந்திருக்கக் கூடும் என்று கருதப்படுகிறது. இந்த தொன்மையான பிரிவினரை, தொன்மையான வட இந்திய மூதாதையர் என்றும் தொன்மையான தென்இந்திய மூதாதையர் என்றும் கூறலாம். தற்போது இந்தியாவில் உள்ள 4,635 மக்கள் இனங்கள் அனைத்தும் இந்த 2 தொன்மையான மூதாதையர்களிடம் இருந்து தனித்தனியாகவோ அல்லது இரண்டும் கலப்புற்றோ தோன்றி இருக்கலாம்.
வட இந்தியர்கள் ஐரோப்பியர்களுடன் ஒத்துப் போகிறார்கள்... இந்த இரு தொன்மையான இந்தியர்களில், தொன்மையான வட இந்தியர்கள் தற்போதைய மேற்கு ஆசிய மற்றும் ஐரோப்பிய மக்கள் இனத்தை மரபியல் ரீதியாக 40 முதல் 80 சதவீதம் வரை ஒத்து இருக்கிறார்கள்.
ஆனால் தொன்மையான தென் இந்தியர்கள் உலகில் எந்த இன மக்களோடும் மரபியல் ரீதியான தொடர்பு அற்றவர்களாக இருக்கிறார்கள். இதன் மூலம் தென் இந்தியர்கள்தான், தொன்மையான இந்தியாவின் முதல் குடிமக்கள் என்பது தெள்ளத் தெளிவாக விளங்குகிறது. அதேபோல, அந்தமானில் வசிக்கும் மிகப் பழங்குடியினரான `ஓன்கே' என்று அழைக்கப்படும் பிரிவினர் தொன்மையான வட இந்தியர்கள் மற்றும் தென் இந்தியர்களிடம் இருந்து தனித்து காணப்பட்டாலும், தொன்மையான தென் இந்தியர்களோடு சிறிது இணக்கமாக உள்ளனர் என்பது இவர்களுடைய ஆய்வின் முடிவு ஆகும்.
இதன் மூலம், தொன்மையான தென் இந்தியர்களும், அந்தமான் பழங்குடியின மக்களும் ஒரே மூதாதையரிடம் இருந்து பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து இருக்கக் கூடும் என்பதும் இந்த ஆராய்ச்சியாளர்களின் கருத்து.
இதை வைத்து சொல்லுங்கள் ஆரியர்கள் யார் திராவிடர்கள் யார் ?

Anonymous
17:35

@surendhar

ஹா ஹா ஹா அட மங்குஸ் நீ சொல்லிட்டா நான் பேடி ஆயிடுவேனா..அட வெட்டிபயலே யாருடா ஆரியர் வகுத்த ஜாதிக்குள் மாட்டி கொண்ட விலங்கு நானில்லைடா ..நீதான் கிறிஸ்துவர் வகுத்த ஆரியர் திராவிடர் என்ற பிரித்தாளும் சூழ்ச்சியில் மாட்டி கொண்டவன் நீ..ஏண்டா எங்க வன்னிய இனத்தின் வீரத்தை பத்தி எனக்கே நீ சொல்லிதறீயா..மாமல்லன் கோவிலைதானே கட்டினான் அதுக்கு எதுக்குடா பார்பான கூப்பிடனும்..நான் ஆரியர் அடிமை இல்லைடா நீதான் ராவணன் என்ற பாப்பானுக்கு அடிமை..நான் நெனைக்கிறேன் நீதான் ஆரிய இனத்தின் ரத்தம் கலந்தவன் என்று..ராவணன் என்ற பார்பானுக்கு கொடிபிடிக்கிற நீ வன்னியனாகவே இருக்க முடியாதுடா..நீ ராவணன் மாதிரி பார்பானாகதான் இருக்க வேண்டும்..

@Anonymousதர்க்கம் பேசும் நீ படிப்பறிவு இல்லாதவன் போலும் இந்த குரு ஜி போன்றவர்களின் கட்டுரையை படித்து விட்டு உளறாதே முதலில் பல நார்த்திகர்கள் எழுதிய ஆராய்ச்சி நூல்களை வாங்கிப்படி பின்னர் தெரியும் யார் ஆரியன் யார் திராவிடன் என்று

Anonymous
17:54

@surendhar
ராவணனை கொடிபிடிகிற பாப்பான் மங்குஸ் உனக்கு வன்னியர் வரலாறு
தெரியலனா கிழே படி
சீர்காழி வைத்தீஸ்வரர் கோவில் வளாகத்தில் காணப்படும் கல்வெட்டுகள் கீழ்கண்ட செய்திகளை தெரிவிக்கின்றன: புராணகாலத்தில் அசுரர்களான வாதாபி,மஹி என்பர்கள் உலகையே துன்புறுத்தி,கொடுஞ்செயல்கள் செய்து வந்தனர்.அவர்களை அழிக்க வேண்டி ஜம்பு மகாமுனி ஒரு யாகம் செய்தார்.அப்போது அந்த யாககுண்ட நெருப்பிலிருந்து வாளுடன் தோன்றிய வீரனொருவன் அந்த அசுரர்களை அழித்தான்.அவனின் வழிதோன்றல்கள் வன்னியராவர். இந்த வம்சத்தில் தோன்றிய ருத்ர வன்னிய மாகாராஜா தென்னிந்தியாவை ஆட்சி செய்தான்.
திருவள்ளுவர் காலத்தை சேர்ந்த கல்லாடம் என்ற நூலில் வன்னி என்ற சொல் அரசன் என்ற பதத்தை குறிக்க பயன்படுத்த்ப்ட்டிருப்பது குறிப்பிட தகுந்த ஒன்றாகும்.
மங்குனி பயலே அசுரனா யாரு தெரியுமா பார்பான்கள்தான் அதாவது றாவன் மாதிரியான பார்பான்கதான் அசுரர்கள்..தெரிசிகோ பார்ப்பானே

@Anonymousஇப்பொழுது தெரிகிறது இந்த பெயர் சொல்லாத பேடி ஒரு சரியான மூட நம்பிக்கை வாதியென அடேய் நான் என் தாத்தா சொல்ல வன்னிய புராணம் கேட்டு வளந்தவன் இருந்தும் நெருப்பில் பிறந்தோம் , பருப்பில் பிறந்தோம் என்ற மூடநம்பிக்கையை நம்பாத பகுத்தறிவாளன், நீ வேண்டுமென்றால் பருப்பில் பிறந்தவனாக இரு.

Anonymous
18:02

@surendhar
/////@Anonymousதர்க்கம் பேசும் நீ படிப்பறிவு இல்லாதவன் போலும் இந்த குரு ஜி போன்றவர்களின் கட்டுரையை படித்து விட்டு உளறாதே முதலில் பல நார்த்திகர்கள் எழுதிய ஆராய்ச்சி நூல்களை வாங்கிப்படி பின்னர் தெரியும் யார் ஆரியன் யார் திராவிடன் என்று/////

ஹா ஹா ஹா ஹா உலகத்திலேயே நீ மட்டும்தான் படிச்சிருக்கிற மத்தவங்க எல்லாம் படிக்காதவங்க மாதிரி பேசுற...கொய்யாலே இப்போதான் ப்ரெஷ்ஷா காலேஜ் படிச்சிட்டு வந்திருக்கேன்

Anonymous
18:08

@surendhar
////இப்பொழுது தெரிகிறது இந்த பெயர் சொல்லாத பேடி ஒரு சரியான மூட நம்பிக்கை வாதியென அடேய் நான் என் தாத்தா சொல்ல வன்னிய புராணம் கேட்டு வளந்தவன் இருந்தும் நெருப்பில் பிறந்தோம் , பருப்பில் பிறந்தோம் என்ற மூடநம்பிக்கையை நம்பாத பகுத்தறிவாளன், நீ வேண்டுமென்றால் பருப்பில் பிறந்தவனாக இரு////

ஹா ஹா ஹா சுரேந்தர் என்ற பேடியே மூட நம்பிக்கை மூடாத நம்பிக்கை எல்லாமே நீதாண்டா.. வன்னியர் புராணத்தை யாரு ராவணன் பரம்பரையில் வந்த பார்பனான உனோட தாத்தா சொன்னதா.

Anonymous
18:14

@surendhar
/////தர்க்கம் பேசும் நீ படிப்பறிவு இல்லாதவன் போலும் இந்த குரு ஜி போன்றவர்களின் கட்டுரையை படித்து விட்டு உளறாதே முதலில் பல நார்த்திகர்கள் எழுதிய ஆராய்ச்சி நூல்களை வாங்கிப்படி பின்னர் தெரியும் யார் ஆரியன் யார் திராவிடன் என்று////

ஹா ஹா ஹா ஹா மங்குனி சுரேந்தரு உலகத்திலேயே நீதான் படிச்சவன் மாதிரியும் மத்தவனெல்லாம் படிக்காத மாதிரி நீ நெனக்கும்போதே தெரியுது நீ ஒரு டுபாகூர் என்று
மங்குனி பயலே நான் இப்போதான் பிராஷ்ஹா காலேஜ் முடிச்சிட்டு வந்திருக்கேன் தெரிஞ்சிக்கோ பாப்ஸ்

@Anonymousவன்னியர் சங்கம் ஆரம்பித்த பொழுது மாணவர்களுக்கு வகுப்பெடுக்க ஒரு இயக்கம் ஆரம்பிக்க பட்டது அதன் பெயர் என்ன சொல் பார்க்கலாம், பிரஷ் ஆகா காலேஜு முடிச்ச முட்டாளே

@Anonymousஇராவணன் வேதம் படித்தான்; சிவபூசை செய்தான்; தேவ பாஷையில் பேசினான் என்று வால்மீகியில் காணப்படுவதாலேயே இராவணன் ஆரியன் என்கிறார். இது வால்மீகி எழுதியதே தவிர மற்றப்படி ஆராய்ச்சியில் பட்டதன்று. இராவணுக்கு எப்படி மூன்றரைக்கோடி வயதும் புலஸ்தியன் வம்சம் என்பதும் ஆகாயத்தில் தேரோட்டிக்கொண்டுவரும் தன்மையும் பூமியோடு பெயர்ந்து போனான் என்பதும் மற்றும் பல 'தெய்வீக' சக்தியும், இழி குணங்களும், வால்மீகியாலும், கம்பனாலும் கற்பிக்கப்பட்டிருக்கிறதோ அதுபோல் தான் இராவணன் வேதம்படித்தான் என்பதும் வடமொழியில் பேசினது முதலான சங்கதிகளுமே ஒழிய வேறல்ல. சேதுப்பிள்ளை அவர்கள் புராணங்கள் ஆதாரமாக வைத்துப் பேசித் தப்பித்துக் கொள்ளப் பார்க்கிறாரே தவிர ஆராய்ச்சியையோ, பகுத்தறிவையோ கொண்டு பேசி அவர் வாதத்தை நிலைநாட்டச் சக்தியற்றவராய்ப் போய்விட்டார். இராமன் தென்னாட்டுக்கு வருவதற்கு முன்பு இங்கு வேதம் இருந்திருக்க முடியுமா? வடமொழி இருந்திருக்க முடியுமா? இராவணனும் ஆரியனாக இருந்தால் சீதையைத் தூக்கிக் கொண்டு போக வேண்டிய அவசியம் என்ன வந்தது?

"இராவணனைக் கொல்வதற்காகவே நான் இங்கு வந்தேன்" என்று சொல்ல வேண்டிய அவசியம் இராமனுக்கு ஏன் வந்தது?

இதுபோன்ற பல விஷயங்களை வைத்துப் பார்த்தால் இராவணனை ஆரியன் என்று சொல்லலாமா என்பது சுலபத்தில் விளங்கும்.

- [பெரியார், 21.02.1943]
வேறென்ன ஆதாரம் வேண்டும் உனக்கு வேண்டுமென்றால் தனிப்பட்ட முறையில் வாய்மொழியாக வாதாட தயாரா நீ உன்னிடம் ஸ்கைப் போன்ற இனைய பேசும் கருவி உள்ளதா வாதாட நான் தயார் நீ தயாரா

Anonymous
18:49

@surendhar
////வன்னியர் சங்கம் ஆரம்பித்த பொழுது மாணவர்களுக்கு வகுப்பெடுக்க ஒரு இயக்கம் ஆரம்பிக்க பட்டது அதன் பெயர் என்ன சொல் பார்க்கலாம், பிரஷ் ஆகா காலேஜு முடிச்ச முட்டாளே////

ஏன் பாப்ஸ் வன்னிய சங்கம் ஆரபிக்கபட்ட போது படிச்சா ஆளுங்ககிட்ட போய் கேளுடா இப்போ படிச்ச எங்கிட்ட போய் கேட்கிற முட்டாள் மங்குனி பார்ப்பானே

Anonymous
18:59

@surendhar

நால்லாவே உன் முன்னோரான பார்பனன் ராவணனுக்கு வக்காலத்து வாங்குற..அதானே ஒரு பார்பான் இன்னொரு பார்பான விட்டுகொடுக்க மாட்டானே

humm vaathaada mudiyaamal thinarugiraan intha peyar illatha podiyan thambi po ippa thaana college mudicha innum konja naal pidikkum nee ellam therinjikka ellathayum padichittu vanthu pesu athukku munnadi unga aattha appanai unakku peyar vaikka soll

ivaru periyaara vida migapperiya mega uplodu appiye kottiduvaaru vanthuttan dei vaathaadina mothalla kekkara kelvikku bathil soll avan thaan nalla thiramai saali pattukkottai ku vazhi ketta kottai paakku vilai sollaatha periyaar sonnathaye aathaarama inga sollitten ithukku bathila sollu da illaatti un aathaarattha kaattuda illaya moodittu poi unakku oru nalla thamizh peyara thernthedu

வன்னியர் சங்கம் ஆரம்பித்த பொழுது மாணவர்களுக்கு வகுப்பெடுக்க ஒரு இயக்கம் ஆரம்பிக்க பட்டது அதன் பெயர் என்ன சொல் // intha kelvikku bathil theriyala ivaru vanni yarrram vanniyaru dei vanniyar sangatha patthiye theriyala unakkenga travidargal aariyargal , parppanan, thamizhn, raavanan,raaman ivangala patthi theriya pothu mothalla ithellam padichu mudichittu vaaa

Anonymous
20:39

சுவாமிஜி உங்கள் விளக்கம் பிரமாதம் !!!

கவியரசு கண்ணதாசன் கூட நாஸ்திகம் பேசி அங்கிரந்து வந்து அர்த்தமுள்ள இந்து மதம் என்னும் புத்தகம் எழுதினார், நடிகர் திலகம் சிவாஜிகணேசன் முதலில் நாஸ்திகததில் இருந்து திருப்பதி சென்று மொட்டை அடித்தார் என்பதும் காசி சென்று கங்கை நீராடினர் என்பது அனைவரும் அறிந்த செய்தி இது போலவே ஏராளமனோர்கள் நாஸ்திகததில் இருந்து விலகி வந்தவர்கள் தான், நீ என்னோமோ அதை காபி ரைட் எடுதவேன் போல பேசுகிறாய். தந்தை பெரியார் அவர்கள் கூட் பார்ப்பனீயம்தைத்தான் எதிர்தரே தவிர பார்பனர்களை அல்ல. சுரேந்தர் கண்ணா உன்னிடம் ஒரு கேள்வி ...வட இந்தியாவில் பிறந்தவர்கள் ஆரியர்களா அல்லது வேறு நாட்டில் இருந்து வந்தவர்களா. எனக்கு தெரியும் விஷயம் என்னவென்று உங்களுக்கு தெரிகிறதா என்று பார்போம். திராவிடர் நாகரீகம் எபோது தோன்றியது ஆரியர்கள் எப்போது திராவிட நாட்டில் இணைத்தார்கள் என்று சொல்லு பார்போம். ஆரியர்களில் பார்ப்பான் தவிர வேறு யார்ரும் இல்லையா?

நீ மரபுஅனு சோதனை நம்புகிறாய் ஆனால் அதே போல் ஆராட்சி செய்து வேதம் மற்றும் ராமாயண காலம் உண்மை தான் என்று சொன்னால் தப்பு என்ன ஒரு பகுத்தறுவு உன்னிடம.

ஆரியர் யார் , திராவிடர் யார், என்பதை என்னுடைய முந்தய ஆராய்ச்சி பதிலை முதலில் பாருங்கள் உங்களுக்கு விடை தெரியும், நான் ஆரியர்கள் அடிமை படுத்திய கதைகளையும், திராவிடத்தை மட்டம் தட்டுகிற இதிகாசங்களையும் , தமிழ் பொக்கிஷங்களில் இடை செருகல் செய்ததையும் தான் எதிர்க்கிறேன், தவிர பார்ப்பனர்களை அல்ல அப்படி என்றால் பாரதியை தந்தது யார்? அவர்களில் பல பேர் தமிழை வளர்த்துள்ளனர், தவிர கண்ணதாசன் போன்றோரை நானறிவேன், அவர் எழுதிய அர்த்தமுள்ள இந்து மதமும் நானறிவேன், நீங்கள் முதலில் மஞ்சை வசந்தன் எழுதிய அர்த்தமற்ற இந்து மதம் என்ற கண்ணதாசனுக்கு எதிர்ப்பு நூலை வாங்கிப்படியுங்கள் ராமாயணம் பொய்யோ மேயோ , எப்படியாகினும் அதில் மட்டம் தட்டி மாண்டவர் போல காமிப்பது என்னவோ எம் இனத்தவரை தானே நான் மனம், சூடு சுரணை மிக்கவன், என் முன்னோர்கள் தீயவராயினும் என் இரத்தங்கள் அவர்களின் எதிரி எனக்கும் எதிரியே, அனால் அவர்கள் தீயவர்கள் அல்ல அதற்க்கு பதிலளிக்க இராமாயண, மகாபாரத ஆராய்சிகள் பல உண்டு என்னிடம்.

Anonymous
21:59

@surendhar
///humm vaathaada mudiyaamal thinarugiraan intha peyar illatha podiyan thambi po ippa thaana college mudicha innum konja naal pidikkum nee ellam therinjikka ellathayum padichittu vanthu pesu athukku munnadi unga aattha appanai unakku peyar vaikka soll///

paravaayillaiye vaathaada mudiyaamal thirukindra intha paapaan unmaiyai appadiye oththukitaane..paaps mama naan eppo college mudichaa ennada unaku mothala nee ellaathaiyum therichikoda mama.mama enga appan aththa erkanave per vaichitaanga mama.unaku peyar ungappan aaththaathaan vachangalaa?

///ivaru periyaara vida migapperiya mega uplodu appiye kottiduvaaru vanthuttan dei vaathaadina mothalla kekkara kelvikku bathil soll avan thaan nalla thiramai saali pattukkottai ku vazhi ketta kottai paakku vilai sollaatha periyaar sonnathaye aathaarama inga sollitten ithukku bathila sollu da illaatti un aathaarattha kaattuda illaya moodittu poi unakku oru nalla thamizh peyara thernthedu///
dei paapaan mama mothalla puriyara maathiri eluthudaa..ennada mama thiramaiya paththi nee yellam pesathadaa paapaane..eendaa nee kaattithellam oru aathaaram poda thevatty thadiyaa.ithukku vera naaga aatharaththai kaatanumaa podaa paapaane..

///வன்னியர் சங்கம் ஆரம்பித்த பொழுது மாணவர்களுக்கு வகுப்பெடுக்க ஒரு இயக்கம் ஆரம்பிக்க பட்டது அதன் பெயர் என்ன சொல் // intha kelvikku bathil theriyala ivaru vanni yarrram vanniyaru dei vanniyar sangatha patthiye theriyala unakkenga travidargal aariyargal , parppanan, thamizhn, raavanan,raaman ivangala patthi theriya pothu mothalla ithellam padichu mudichittu vaaa///

dei gigarthendaa thalaiyaa nee ketkiraya thanjaavur kalvettulathaandaa porichi vaikkanum.. dei ketkura kelvi eppadi theriyumaa irukku un thaathaa pidicha beedi enna endru ketkura maathiri irukkudaa un kelvi.. dei vanniyar sangatha paththi naanga therichikirom nee mothalla un paarpaan parambaiya paththi nee therinchikodaa..dei nannaari payale naanga yellaathaiyum therichikirom nee mothalla ellaathaiyum padidaa punnnaakku

Anonymous
22:21

@surendhar
/////ஆரியர் யார் , திராவிடர் யார், என்பதை என்னுடைய முந்தய ஆராய்ச்சி பதிலை முதலில் பாருங்கள் உங்களுக்கு விடை தெரியும்///.

பாருடா பாப்ஸ் மாமா ஆராய்ச்சி எல்லாம் பண்ணி ஆரியர் யார் திராவிடர் யார்னு விடைய கண்டுபிடிசிகிராறு..பாப்ஸ் மாமா உனோட ரீலுக்கு ஒரே அளவே இல்லையா

////நான் ஆரியர்கள் அடிமை படுத்திய கதைகளையும், திராவிடத்தை மட்டம் தட்டுகிற இதிகாசங்களையும் , தமிழ் பொக்கிஷங்களில் இடை செருகல் செய்ததையும் தான் எதிர்க்கிறேன், தவிர பார்ப்பனர்களை அல்ல////

அதானே பார்த்தேன் ஒரு பார்பான் இன்னொரு பார்பானை எப்படி எதிர்ப்பான்.நீ ராவணன் என்ற பாப்பானுக்கு வக்காலத்து வாங்கும் போதே தெரியுதே ஒரு பாப்பான் இன்னொரு பார்பானை எதிர்க்க மாட்டான் என்பது

///// ராமாயணம் பொய்யோ மேயோ , எப்படியாகினும் அதில் மட்டம் தட்டி மாண்டவர் போல காமிப்பது என்னவோ எம் இனத்தவரை தானே நான் மனம், சூடு சுரணை மிக்கவன், என் முன்னோர்கள் தீயவராயினும் என் இரத்தங்கள் அவர்களின் எதிரி எனக்கும் எதிரியே, அனால் அவர்கள் தீயவர்கள் அல்ல////

அதானே ராவணன் என்ற பார்பானையும் அந்த பாப்பான் இனத்தை மாட்டம் தட்டுவதை இன்னொரு பாப்பான் எப்படி ஏத்துகுவான்..நெய் அதிகமா சாபிடுவதால் மானம் சூடு சொரணை அதிகம் இருக்கும் அதனாலே தன் பார்ப்பன முன்னோரான ராவணனை பார்பனர்கள் ஆதரரிபதில் ஆச்சிரியமில்லை..ஒரு பார்பான் இன்னொரு பார்பனனை தீயோன் என்று ஏற்றுகொள்ள மாட்டானுங்க

Anonymous
09:18

yaru da ivan vanniyar payal sunniyar payal dai unga ramados pachonthi payala patthi theriyaatha ravana papana dai sori pudicha monna naye surendhar kekarthukku bathila solluda raman varrathukku munnadi eppadi da tamilnattula vetham vanthu irukkum eppadi da ravanan vetham padicharu parppanunga panna sathi da ithu moothevi monna naaye

dai badu mothalla pallavargale thamizhanga illa ithula avanga pera pulla vanniya payalunga thamizhana vanniyar panniyar nu evanaavathu vaaya thoranthaa panni saani ya vechu amukkiduven domarungala

Anonymous
09:24

intha guru gi enna hindu mathatthoda makkera ithu appidi athu appidi nu solraaru avanunga munnor parppan pasanga ennamo pidikka intha guru g mathari aalunga ennamo mathari vanthuttanga

Anonymous
09:35

dai bathil solla theriyaatha paithiyame nee oru vetthuvettu da athan olarra surenthar avanukke bathil therila athanaala thaan bathil sollama vera etho olarinnu irukkan avanaanda poi innathuku neenga bathil pottunu irukinga antha daabara ennanda vidunga naa pathukkaren dai vanni moonjan vaada ennanda unakku olunga pathill sonna velaikki avathu onnu kutthala solren vaa

நண்பர்களே இங்கு தனிமனித தாக்குதலான கருத்துக்களை பதிவிட்டால் அனைத்து கருத்துக்களும் நீக்கப்படும் மன்னிக்க வேண்டும்

இப்படிக்கு
சதீஷ் குமார்

வன்னியர்களும் திராவிடர்களே இந்த விவாதத்தை வேறு விதத்தில் திசை திருப்ப முயற்சிக்க வேண்டாம் சரியான பதில் வரும் வரை நான் இந்த கட்டுரைக்கு பதிலளிக்காமல் நிறுத்திக்கொள்கிறேன் மிக்க நன்றி.

சதீஷ் சொல்வது சரிதான் இரண்டு நண்பர்களும் தங்களின் கருத்தை சரியான முறையில் தெரிவித்து உள்ளீர்கள் முட்டாளே,டேய்,.கொய்யாலே ... போன்ற வார்த்தைகள் பயன் படுத்தாமல் இருந்தால் மிகவும் நன்றாக தான் இருக்கும்

ஒன்று மட்டும் உண்மை! ஆங்கிலேயனும் அவனின் மத மாற்று கும்பலும் இந்தியாவை பிளவு படுத்த,கொள்ளையடிக்க கழித்த மலம் இந்த ஆரிய படையெடுப்பு என்பது! இந்த மலத்தை இப்போதும் நக்கிகொண்டு மீண்டும் மீண்டும் வாந்தி எடுக்கிறார் நம் முட்டாள் நண்பர் சுரேந்தரன்!

peyarai parthale therigiratu nanbar kamba thaasare antha kambar aariyanai kakka pidikka ramanai kadavulaaga thamizhar matthiyil uruvaga padutthinaan neengal indru ulla aariya kalaachara panbaattirkku adimaiyaaga ulleer ungal guru ji yidam kettu therinthu kollungal raamaayanatthil thasarathan aan kuzhanthai vendi asuvamethayaagam nadatthinaan antha yaagam eppadi nadanthathaaga vaalmigi kurippittirukkirar enbathai paditthu allathu intha guru ji yidam kettu therinthu kollungal unmayil yar malatthai nakki kondirukkireergal ena theriyum

Anonymous
22:57

INGE YAAR PADHUVU SEIDHALUM ORU ALAVU DECENCY MAINTAIN PANNUNGAPA PLS.IPPADI ANAGAREEGAMA PESINAL YENNA VILAINDHVIDA POGIRATHU? NAAM YELLORUM INATTU MANNARGAL AVALLUVAN...

VAZHLGA VAZHAMUDAN

நண்பர் சுரேந்தர் அவர்களே நீங்கள் சொல்லியது போல.. ராமாயணத்தில் தசரதன் குழந்தை வேண்டி செய்த அஸ்வமேத யாகம் பற்றி மூல சமஸ்க்ரிடம் ஸ்லோகத்துடன் உள்ள பகுதியை நான் ஏற்கனவே படித்திருக்கிறேன். niingalum அதை படியுங்கள். இந்த பகுதியில் நீங்கள் வெறுக்கும் அளவுக்கு அப்படி என்ன உள்ளது என்று எனக்கு தெரியவில்லை.நண்பரே இனவெறி மொழி வெறி என்ற சங்கிலியை அறுத்து கொண்டு வெளியே வாருங்கள்.! முழுக்க முழுக்க திராவிட மாயையில் வசபட்டுளிர்கள். நம் தமிழ் இலக்கியம் படைத்த பெரும் புலவர்கள் எல்லாம் வேதம், புராணம், இதிகாசம் போன்றவற்றை அவர்களின் பாடல்களில் நிறைய பாடியிருகிர்ரர்கள்.வேத இலக்கியம் நம் பாரத மக்களுக்கு உரியது.தமிழர்கள் உட்பட! ஆரியன்,ஆரியன் என்று இல்லாத ஒரு இனத்தையும் நடக்காத ஒரு படையெடுப்பையும் இன்னும் நம்பி கொண்டு வெறி பிடித்து திரியாதிர் ! உங்களிடம் அதிக வம்பழுக்க எனக்கு விருப்பம் இல்லை. உங்களை போல பல தமிழ் வெறியர்களை நான் கண்டிருக்கிறேன்.பேசியிருக்கிறேன்.யார் மீதும் எனக்கு கோபம் இல்லை.பரிதாபம்தான் வருகிறது. ராமாயணத்தில் உள்ள அஸ்வமேத யாகம் பற்றியும், முழு ராமாயணமும் இங்கே உள்ளது. அது மட்டும் இல்லை. ஆரிய படையெடுப்பு என்ற கட்டு கதையை பற்றியும் நீண்ட கட்டுரையும் உள்ளது.படித்து தெளிவு பெறுங்கள். நன்றி.


http://www.valmikiramayan.net/bala/sarga8/bala_8_frame.htm

http://www.hinduwisdom.info/aryan_invasion_theory.htm

tharkkam seibavaridam enna seiya mudiyum thangal alittha inaippirkku nandri

Anonymous
15:07

surender avargale, neengalum oru vagaiyil tharkkam thaan seikindrer, Naam solluvuthu perar methu impose seithal avargallum adhai maruppargal adhuvum oru vagai thargamthan...Neengal kuriya karthukku nandri

thangalin naagareegamaana vivaathatthirkku nandri matravargalum ithaippondru vivathitthirunthaal sirappanathaaga irunthirukkum

aanaal naangal tharkkam seiya villai neengal thaan ariviyalukku ovvathathu ena therinthum athai nambugireergal

நண்பர் சுரேந்தர் அவர்களும், மற்றும் வேதங்களை வெறுக்கும் நண்பர்களும், தமிழ் ஹிந்து தளத்தில் உள்ள இந்த கட்டுரையை கட்டாயம் படிக்கவேண்டும். அறிவியலுக்கு ஒவ்வாத விசயங்களை நாம் நம்புகிறோம் என்று நண்பர் சுரேந்தர் சொல்கிறார். அவர் சொல்வது போல, நம் சங்க இலக்கியத்தில் பல புலவர்கள், வேத இலக்கியங்களில் உள்ள விசயங்களை தங்கள் பாடல்களில் பல இடங்களில் பாடியிருகிரார்கள் . அப்படியெனில், நம் புலவர்கள் எல்லாம் அறிவு இல்லாதவர்கள் மூட நம்பிக்கை உள்ளவர்கள் என்று சொல்லலாமா? அப்படியென்றால் வேதங்களை வெறுப்பது போல நம் தமிழ் இலக்கியங்களையும் வெறுத்து ஒதுக்கலாமா? நண்பர்கள் யோசித்து பார்க்க வேண்டுகிறேன். நன்றி.


http://www.tamilhindu.com/2011/02/tamils-and-vedanta-1/

இந்த கட்டுரை மொத்தம் 4 பகுதி உள்ளது.அதையும் படிக்கவேண்டுகிறேன்

தொல்காப்பியத்துக்குப் பாயிரம் தந்துள்ள புலவர் பனம்பாரனார் தொல்காப்பியர் காலத்தவர். அவர் தம் பாயிர உரையில் 'ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன்' என்று குறிப்பிடுகிறார். ஐந்திரம் என்பது சமற்கிருத இலக்கணநூல். இது பாணினி எழுதிய சமற்கிருத இலக்கண நூலுக்குக் காலத்தால் முற்பட்டது. தொல்காப்பியர் காலத்தில் பாணினியம் தோன்றவில்லை. எனவே தொல்காப்பியர் பாணினிக்கு முந்திய நூலான ஐந்திரம் என்னும் நூலையும் அறிந்திருந்தார். தமிழில் இருந்த 'முந்துநூல்'(அகத்தியம்) கண்டிருந்தார். எனவே பாணினியின் காலமாகச் சொல்லப்படும் கி.மு. நாலாம் நூற்றாண்டுக்கு முற்பட்டவர் என்பது தெளிவு.

ippadi pala idai serugalgal sanga ilakkiyangalil seithathaal thaan aariyargalin mel veruppu engalukku ungalin katturaikku nandri kandippaga padikkiren

Anonymous
23:12

சுரேந்திர அவர்களே - இதுவும் ஒரு ஆராய்சியின் முடிவு தான் ஆகைனலே நீங்கள் யாரை குறை கூறுகிறிர்கள் ஆரியர்கள் என்று பொத்தாம் பொதுவாக சொன்னால் எப்படி ?

The term Arya means "noble" or "spiritual", and has been so used by Buddhists, Jains and Zoroastrians as well as Hindus. Religions that have called themselves Aryan, like all of these, have had members of many different races. Race was never a bar for anyone joining some form of the Arya Dharma or teaching of noble people.

ஆங்கிலேயன் இந்திய வருவதட்கு முன்.. ஆரிய படையெடுப்பு என்ற கதை இந்தியாவில் உள்ள எந்த சமூகத்திலும் அவர்களின் மொழியிலும் அறவே இல்லை. தமிழ் மொழி இலக்கியம் உட்பட.! ஆரியன் என்ற சொல் ஒரு இனத்தை குறிக்கும் சொல்லே இல்லை. எவன், நீதி, தர்மம்,வீரம்,புலன்னடக்கம் கருணை,பக்தி போன்ற குணங்களோடு வாழ்கிறானோ அவன் ஆரியன் என்று அறியப்படான். ஆங்கிலேயர்கள் இந்த ஆரியன் என்ற வார்தைக்கு இனம் மூலாம் பூசினர். அவர்கள் வந்தேறிகள் என்றும், அவர்கள்தான் வேத இலக்கியங்கள் எழுதி அதை திராவிடர்களிடம் திணித்தனர் என்றும் சொல்லி..ஆரிய திராவிட சண்டையை ஆரம்பித்து, இந்தியர்களை தங்கள் தாய் தர்மத்தை வெறுக்க செய்து, அதன் மூலம் தன் கிருஸ்துவ மதம் பரப்பி,நாட்டை அடிமை படுத்தி கொள்ளையடித்தான். நம் முன்னோர்கள், ஆங்கிலேயனிடம் அடிமையாக இருந்தார்கள். அவன் இப்போது போய்விட்டான். ஆனால் இன்றோ சுரேந்தர் போல நண்பர்கள், அவன் எழுதிய புழுத்து போன INTHA ஆரிய திராவிட கதைக்கு இன்னும் அடிமையாக உள்ளனர்! இந்த ஆரிய திராவிட கதையை மிகவும் நன்றாக பயன்படுத்தி கொண்டனர் நாசக்கார திராவிட இயக்கித்தினர் . பார்பான், பார்பான் என்று சொல்லியே இன்று வரை நம் நாட்டை கொள்ளையடித்து தமிழர்களை சிந்திக்க முடியாமல் ஆக்கிவிட்டனர்.நண்பர் சுரேந்தர் அவர்களே இதற்கு முன் நான் தந்த அந்த ஆரிய படையெடுப்பு என்ற கட்டுரையை பல தடவை படித்து , தயவு செய்து தெளிவு பெறுங்கள்.எவன், ஒருவன் சமஸ்கிரிடம் வேதம் புராணம் இதிகாசம் போன்றவற்றை ஏற்று கொண்டானோ..அவன் தமிழுக்கு, தமிழ் இலக்கியத்திற்கு ,திருக்குறள்,தொல்காப்பியம் போன்ற நூட்களுக்கு விரோதி என்ற மாயை இங்கே நிலவுகிறது.என்னை பொறுத்த வரை தமிழும் சமஸ்கிருதமும் எனது இரண்டு கண்கள்.நண்பர்களே.. தயவு செய்து வேத துவேசத்தை விடுங்கள்.வேதம் நம் அனைவருக்கும் பொதுவானது. பிற்காலத்தில் வந்த SILA ஜாதி வெறி பிடித்த பிராமணர்கள் செய்த தவறால் நாம் வேதங்களை வெறுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. தாய் தர்மம் காப்போம்.நன்றி!

மன்னிக்கவும் மீண்டும் வந்து விட்டேன்.. நண்பர் சுரேந்தர் அவர்களுக்கு ஒரு கேள்வி.. அறிவியலுக்கு ஒவ்வாத கதைகள் என்று கூறுகிறிர்கள்...சிலபதிகாரத்தின் கதாநாயகி தன் மார்பை திருகி வீசியவுடன் மதுரை மாநகரமே எரிந்து சாம்பலாகியது என்று உள்ளதே? இது அறிவியலுக்கு ஒவ்வும் கதையோ? அனால்.. இந்த கதையை நான் 100 சதவிகிதம் நம்புகிறேன்!.நம்முடைய சிறிய அறிவிற்கு ஒரு விஷயம் புரியவில்லை என்றால் அது, பொய்,மாயை, கட்டு கதை என்று பிதற்றுவதை தயவு செய்து விடுங்கள்.

ஆரியர் படையெடுப்பு, பிராமண வெறுப்பு,தமிழர் பூர்வகுடி,வேத இலக்கியங்கள் எல்லாம் கட்டுகதை,மாயை,பொய்,பித்தலாட்டம் என்று புலம்புவோர் கவனத்திற்கு,அருண் செளரி என்பவர் எழுதிய MISSIONARIES IN INDIA என்ற புத்தகத்தை வாங்கி படியுங்கள்.பல உண்மை வெளிவரும். அந்த புத்தகத்தில் உள்ள சிலவற்றை உங்களுக்கு கிழே தருகிறேன்.தெளிவு பெறுங்கள்.

காலனிய ஆட்சிக் காலத்தில் பிரிட்டிஷ் அரசு நிர்வாகம், கிறிஸ்தவ மிஷநரிகள் மற்றும் இந்தியவியலாளர்கள் (indologists) எனப்பட்ட வரலாற்றாசிரியர்கள் இவர்கள் மூவரும் எப்படி தங்களுக்குள் வேலைப் பங்கீடு செய்து கொண்டனர் என்பதை Missionaries நூலின் இரண்டாம் பாகம் விரிவாகவே பேசுகிறது. இந்த மூன்று குழுக்களுக்கும் இடையில் நிறைய கருத்து வேற்றுமைகள் இருந்தன. ஆனால் அவையெல்லாம் வழிமுறைகள், செயல்பாடுகளைப் பற்றித் தான். தங்களது இறுதி இலக்கு என்ன என்பது பற்றி அவர்களிடையே எந்தக் குழப்பமும் ஐயமும் இல்லை – இந்தியாவின் பாவிகள் அனைவரையும் கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றுவது, பிரிட்டிஷ் ஆட்சியை இந்தியாவில் நீடித்து நிலைபெறச் செய்வது, இவை இரண்டுமே இந்த இலக்குகள்.

கீழ்க்கண்ட விஷயங்களில் மூன்று தரப்பினருமே முழுமையாக உடன்பட்டனர்:

1. இந்தியா அறியாமை, பாகுபாடுகள் மற்றும் பொய்மையின் கூடாரம்.

2. இந்த நிலைக்குக் காரணம் இந்துமதம்.

3. இந்துமதத்தை நடத்திச் செல்வதில் பிராமணர்களுக்குப் பெரிய பங்கு இருக்கிறது. அதனால் இந்துமதத்தை வலுவிழக்கச் செய்ய, பிராமணர்களைக் குறிவைத்து வெறுப்புப் பிரசாரங்கள் முடுக்கப் படவேண்டும்.

4. இந்த இந்திய மக்கள் இப்பேர்ப்பட்ட துயரத்தில் இருப்பதாலும், ஏசு ஊழியம் செய்ய நம்மை அறைகூவியிருப்பதாலும், இவர்கள் அனைவரையும் கிறிஸ்தவத்திற்கு இட்டுச் செல்வது நமது புனிதக் கடமையாகிறது.

5. புனித சிலுவை வீரர்கள் இந்துமதம் என்ற இந்தக் கோட்டையின் உறுதியான சுவர்களை சுற்றிவளைத்து, பலமிழக்கச் செய்து, தகர்க்க வேண்டும் (பிரிட்டிஷ் அதிகாரியின் சொற்களில் - “The walls of the mighty fortress ..” are to be “encircled, undermined and finally stormed by the soldiers of the cross”).

6. புனிதக் கடமையை நிறைவேற்ற சிறந்த வழி பிரிட்டிஷ் அரசு அதிகாரத்தை விரிவாக்குவதும், உறுதிப் படுத்துவதும், நீடிக்கச் செய்வதுமே ஆகும்,

7. அரசே கிறிஸ்தவ மதத்தை அதிகாரபூர்வமாகப் பரப்புமானால், அது குடிமக்களிடத்தில் கோபத்தையும், கொந்தளிப்பையும் உண்டாக்கும், அதனால், அரசு நடுநிலையைக் கடைப்பிடிப்பதாகவே தன்னைக் காட்டிக் கொள்ள வேண்டும்.

8. ஆனால், அரசின் பங்களிப்பு மிக முக்கியமானதாக இருக்கும். அரசுப் பள்ளிகளில் ஆங்கிலக் கல்வி அளிப்பது என்ற விஷயமே ஏராளமானவர்களைக் கிறிஸ்தவம் நோக்கி வரச் செய்யும். மேற்கத்திய கலாசாரத்தையும், ஐரோப்பா அடைந்து வரும் நவீன முன்னேற்றங்களையும் பற்றி கல்வி கற்கும் இந்தியர்கள் அறிய வருவதே போதும், இந்து மதத்தை அது தீர்த்துக் கட்டிவிடும், ஏனென்றால் ”அந்த மதத்தால் அறிவுபூர்வமான பரிசோதனையை ஒரு கணநேரம் கூடத் தாக்குப் பிடிக்க முடியாது”! (Its not a religion that can stand a “moment’s scrutiny”)

9. அதே போன்று, மிஷநரிகளின் பங்களிப்பும் பிரிட்டிஷ் அரசுக்கு முக்கியமானதாக இருக்கும். மதம் மாறியவர்கள் மட்டுமல்ல, தொடர்ந்த கிறிஸ்தவ மதப் பிரசாரத்தின் தாக்கத்திற்கு உள்ளாகும் அனைவரும் பிரிட்டிஷ் அரசின் ஆதரவாளர்களாகவும், அந்த அரசை நீடிக்க வைப்பவர்களாகவும் விளங்குவார்கள்.

10. அறிஞர்களின் பணியும் இதே அளவுக்கு முக்கியமானதாக இருக்கும். மிஷநரி அறிஞர்கள், அறிஞர்கள் என்ற போர்வையில் இருக்கும் மிஷநரிகள் – இந்த இரண்டு தரப்பினரும் இணைந்து இந்து மதத்தின் தீமைகள் அனைத்தையும் அம்பலப் படுத்தி, அதனை வேரறுப்பதில் உதவுவார்கள்.

11. இயல்பாகவே, மிஷநரிகள் கீழ்சாதியினர் மற்றும் பழங்குடியினர் மீது அதிகக் கவனம் செலுத்துவார்கள். இந்து சமூகத்தை இது பல கூறுகளாக்கும்.

12. அறிஞர்களின் ஆய்வுகள் இதே பணியை வேறு தளத்தில் செய்யும். இந்துமதத்தில் நடைமுறையில் இருக்கும் சிறு தவறுகளைக் கூட அவை பூதாகாரமாக்கும். மக்களிடத்தில் இருக்கும் சிறு பிணக்குகளில் இருந்து பெரிய சமூக மோதல்களுக்கான நியாயங்களை அவை உற்பத்தி செய்யும். இவ்வகையில் பிரிட்டிஷ் ஆட்சியின் உறுதித் தன்மைக்கு அவை வலு சேர்க்கும்.

Missionaries நூல் (பக்கங்கள் 58-62) ஒரு விரிவான பட்டியலாக இந்த விஷயங்களைக் கூறுகிறது. அதன் சுருக்கமான வடிவத்தையே மேலே அளித்துள்ளேன். இந்த விஷயங்கள் ஒவ்வொன்றையும் ஆதாரபூர்வமாக நூலில் ஷோரி விளக்கிச் செல்கிறார். இறுதியில் இப்படிக் கூறுகிறார் -

“இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி பரவியது ஒருவகையிலான விபத்து; பிரிட்டிஷார்களே தயங்கினாலும் அப்போது இந்தியா இருந்த நிலையில் அவர்களை இழுத்துப் பிடித்து இந்தியர்களே ஆட்சி பீடத்தில் உட்கார வைத்திருப்பார்கள்” என்ற அளவில் தான் நான் பள்ளிப் பருவம் முதல் படித்துவரும் எல்லா வரலாறுகளும் கூறி வந்தன. எனவே, இப்படி ஒரு பட்டியலை யாராவது அளித்தால், இது பின் நிகழ்வுகளை வைத்து முன் தீர்மான்ங்களை வேண்டுமென்றே கட்டமைக்கும் விதமாக இருக்கிறது என்று தான் நானே கருதியிருப்பேன். ஆனால் அந்தக் கருத்து தவறு என்பதை நான் இந்த ஆய்வுகளில் மிக விரைவாகவே உணர்ந்து கொண்டேன்.. பிரிட்டிஷ் காலத்திய பிரதான அதிகாரிகள் மற்றும் முக்கிய அறிஞர்களின் எழுத்துக்களை ஒருமுறை படித்துச் செல்பவருக்கே எப்பேர்ப்பட்ட கச்சிதமான திட்டமிடுதல் இதில் இருந்தது என்று விளங்கும். அதோடு, அக்காலத்திய மிஷநரிகளின் சுற்றறிக்கைகள், மிஷநரி சொஸைட்டிகளின் ஆவணங்கள் இவற்றைப் படித்தால், இது தொடர்பான கொஞ்சநஞ்ச சந்தேகங்களும் தீர்ந்து விடும்”

Missionaries நூல் (பக்கங்கள் 58-62) ஒரு விரிவான பட்டியலாக இந்த விஷயங்களைக் கூறுகிறது. அதன் சுருக்கமான வடிவத்தையே மேலே அளித்துள்ளேன். இந்த விஷயங்கள் ஒவ்வொன்றையும் ஆதாரபூர்வமாக நூலில் ஷோரி விளக்கிச் செல்கிறார். இறுதியில் இப்படிக் கூறுகிறார் -

“இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி பரவியது ஒருவகையிலான விபத்து; பிரிட்டிஷார்களே தயங்கினாலும் அப்போது இந்தியா இருந்த நிலையில் அவர்களை இழுத்துப் பிடித்து இந்தியர்களே ஆட்சி பீடத்தில் உட்கார வைத்திருப்பார்கள்” என்ற அளவில் தான் நான் பள்ளிப் பருவம் முதல் படித்துவரும் எல்லா வரலாறுகளும் கூறி வந்தன. எனவே, இப்படி ஒரு பட்டியலை யாராவது அளித்தால், இது பின் நிகழ்வுகளை வைத்து முன் தீர்மான்ங்களை வேண்டுமென்றே கட்டமைக்கும் விதமாக இருக்கிறது என்று தான் நானே கருதியிருப்பேன். ஆனால் அந்தக் கருத்து தவறு என்பதை நான் இந்த ஆய்வுகளில் மிக விரைவாகவே உணர்ந்து கொண்டேன்.. பிரிட்டிஷ் காலத்திய பிரதான அதிகாரிகள் மற்றும் முக்கிய அறிஞர்களின் எழுத்துக்களை ஒருமுறை படித்துச் செல்பவருக்கே எப்பேர்ப்பட்ட கச்சிதமான திட்டமிடுதல் இதில் இருந்தது என்று விளங்கும். அதோடு, அக்காலத்திய மிஷநரிகளின் சுற்றறிக்கைகள், மிஷநரி சொஸைட்டிகளின் ஆவணங்கள் இவற்றைப் படித்தால், இது தொடர்பான கொஞ்சநஞ்ச சந்தேகங்களும் தீர்ந்து விடும்”

ungaludaya tharmam engalai sootthirargal athaavathu vesiyin magan engirathu naangal vetham karka kudathu engirathu, appadi sollavillai ena sollatheergal ramaayanatthil vetham katratharkkaaga ramana oru sootthiranai kolai seithirukkiraan

Anonymous
14:44

நண்பரே சுரேந்தர் தமிழில் தங்களின் கருத்துக்களை எழுதுங்கள் ஆங்கில தமிழின் கருத்துக்களை படிப்பதற்கு மிகவும் கடினமாக இருக்கிறது

சுரேந்தர் அவர்களே, நீங்கள் சூத்திரர்களா? யார் சொன்னது? தமிழர்கள் சூத்திரர்கள? நானும் தமிழன்தான்.அப்படியெல்லாம் நான் நினைக்கவில்லையே! நான் பிராமணனும் இல்லை. உங்கள் நினைப்புக்கு காரணம்,என்ன என்று ஆராய்ந்தால் இங்கே நெறைய எழுத வேண்டும்.வேதங்களை இயற்றிய வியாசரின் தாய் ஒரு மீனவ பெண்.ராமாயணத்தை எழுதிய வால்மீகி ஒரு வேடன்.ராவணன் தமிழன் என்று சொல்கிறிர்கள். உண்மை அதுவல்ல. ராவணன், இலங்கையை ஆட்சி செய்த அரக்கர் குலத்தை சேர்ந்தவன்.அவ்வளவுதான். இதற்கு இனம் மூலம் பூசாதிர்கள்.எந்த ராவணன் கொடியவன் என்று ராமாயணம் சொல்கிறதோ?அதே ராவணனின் ரத்தம் சம்பந்தம் உள்ள தம்பியை நல்லவன், தர்மம் அறிந்தவன் ,என்று ராமாயணம் சொல்கிறதே? அந்த விபிஷிணன் உங்கள் கூற்றுப்படி தமிழன் இல்லையா?தமிழனை இப்படி புகழ்ந்து பேசலாமா? ஒரு விஷயம் நன்றாக புரிந்து கொள்ளுங்கள். இதை உங்களால் புரிந்து கொள்ளமுடியவில்லைஎன்றால், உங்களுக்கு மிகுந்த ஆணவம் உள்ளது,உங்களால் இந்த பிறவியில் வேத இலக்கியத்தை அறிய முடியாது,அதற்கு பல பிறவிகள் தேவை.உங்கள் கர்மம் வினை அப்படி என்றுதான் சொல்லவேண்டும்.. வேதங்களில் கஸ்யப முனிவரின் 2
மாணவிகளுக்கு பிறந்த பிள்ளைகள் தேவர்கள் மற்றும் அசுரர்கள்.இவர்களிடையே நடத்த போரை அரியர் திராவிட போர் என்றும் தேவர்கள் ஆரியன் என்றும் அசுரன் திராவிடன் என்றும்.. கதை கட்டியது இந்த ஆங்கிலேயே மத மாற்று கூட்டம். அதை பல்லாண்டு காலமாக தமிழ் நாட்டில் பிரசாரம் செய்து பிழைப்பு நடத்தியது இந்த நாத்திக சண்டாள திராவிட இயக்கம்.பல்லாண்டு காலமாக இந்த பிரசாரத்தினால் வந்த விளைவே... தமிழன் சூத்திரன், அரக்கன்,என்ற மாயை.ராவணன், நரகசுரன் போன்றவர்களை தமிழன் என்று கதை அளந்து ஒரு வெறுப்புணர்ச்சியை உண்டாக்கிவிட்டார்கள் இந்த திராவிட இயக்கதினர்.இதையெல்லாம் நம்பித்தான், நீங்கள் இப்போது ஒப்பாரி வைகிரிர்கள் என்று நான் நன்றாக அறிவேன்..அது இருக்கட்டும். ரமாயநாட்டில் எந்த காண்டத்தில் வேதம் படித்த சூத்திரனை ராமன் கொன்றான் என்று சொல்லுங்கள். எந்த காண்டம்? எந்த சர்கம்? சூத்திரனின் பெயர் என்ன? எல்லாவற்றையும் சொல்லுங்கள்.நான் படித்து பார்கிறேன்.நான் குடுத்த இராமாயண தளத்தில் தேடி பாருங்கள் கிடைக்கும். ஒன்றை புரிந்து கொள்ளுங்கள்.பிறப்பால் இங்கே எவனும் பிராமணனும் இல்லை. சூத்திரனும் இல்லை.அவன் வாழும் வழியே அவன் யார் என்று சொல்லும்..அது சரி. நான் யார் தெரியுமா? சூத்திரன் இல்லை. பிராமணனும் இல்லை. பிராமணனை காட்டிலும் உயர்ந்த வைணவன். மன்னிக்கவும்.. வைணவனாக முயற்சிக்கிறேன்.அவ்வளவுதான்.! உங்களாலும் முடியும்.நீங்கள்,உங்களிடம் உள்ள இன வெறி மொழி வெறி, வேத வெறுப்பு. எதையும் ஆராயாமல் கருத்து கூறுவது, ஒருகொள்கையை கெட்டியாக பிடித்துவிட்டு கொண்டு.. மற்றது எல்லாவற்றையும் வெறுப்பது,இன்னும் பல விசயங்களை தவிர்த்தால் உங்களுக்கும் இந்த வேத ரகசியம் புலப்படும்.எம்பெருமான் ஸ்ரீமன் நாராயணன் உங்களிடம் கருணை காட்டட்டும்
.

Anonymous
16:49

@ kambathasan

நண்பரே அருமை..நீங்கள் கேட்பதற்கு யாரும் பதில் மாட்டார்கள்..அப்படியே சொன்னாலும் பைதியகாரதனமான பதிலாக இருக்கும்... உங்களை போன்று பல அறிஞர்கள் உருவாக வேண்டும்

நன்றி நண்பரே.. அனால் நான் அறிஞன் இல்லை. வேத சமுத்திரத்தில் ஒரே ஒரு துளியை பருகிய சாதாரண மானிட ஜந்து.அவன் அருள் இருந்தால்தான் அவனை அறிய முடியம்.அதற்கு முக்கிய தேவை, நான் இந்த உடல் இல்லை! நித்தியமான ஆத்மா என்று அறிவது முதல் படி.எவன் ஒருவன் தன்னை இனம், மொழி, நாடு சார்ந்து எண்ணுகிறானோ அவானால் ஒருக்காலும் இந்த வேத ரகசியத்தை அறிந்து கொள்ளமுடியாது. ஆரியர் படையெடுப்பு என்ற பித்தலாட்ட கதையை பற்றி என்னிடம் நெறைய கட்டுரை உள்ளது. என் மின் அஞ்சல் முகவரிக்கு உங்கள் முகவரியை அனுப்பினால் நெறைய கட்டுரை தருகிறேன்.படித்து பாருங்கள்.உண்மை புரியும். என் மின் அஞ்சல் முகவரி. kambathasantrader @yahoo .com நன்றி.

@kambathasanதவம் செய்து கொண்டிருந்த சம்பூகனை ராமன் கொன்றான், அவனைக்கொல்ல காரணம், அவன் சூத்திரன் , சூத்திரன் வேதம் ஓதக்கூடாது , வேள்வி இயற்றக்கூடது,தவம் செய்யக்கூடாது, என்ற சாத்திர விதி முறைகளை மீறி அவன் தவம் செய்தான் அந்த சம்பூகனைக்கொள்ள அதுவே காரணமாக கூறப்படுகிறது,
இது வால்மீகி எழுதிய ராமாயணத்தில் உத்தரகாண்டத்தில் சொல்லப்படுகிறது, கம்பர் இதைப்பற்றி பாடவில்லை ஏனென்றால் அப்போதிருந்த திராவிட மக்கள் முன்னிலையில் ராமனைக்கடவுளாக கட்டவேண்டுமேன்பதர்க்காக ஆரிய அடிமை கம்பன் அதை தவிர்த்து விட்டான், ஆரியர், திராவிடர் , என்பது கட்டுக்கதை என்றால் உங்கள் வேதங்களில் தஸ்யு என த்ராவிடர்களைக்குரிப்பிடுவது ஏன் , நீங்கள் ஹிந்து மதத்தில் பார்ப்பனர்களை விட உயர்ந்த வைணவர் என கூறுகிறீர்கள், இந்த தேசத்தில் சைவர்களுக்கும், வைணவர்களுக்கும் நடந்த போர் யாருக்கும் தெரியாமலிருக்காது, உங்கள் ஹிந்து மதத்திற்குள்ளேயே சைவர்கள் வைணவர்களின் வருகையும் வைணவர்கள் சைவர்களின் வருகையையும் எதிர்க்கும்போது திராவிடர்கள் ஆரியர்களை எதிர்க்காமலா இருந்திருப்பார்கள், பிறப்பால் இங்கு எவனும் பிராமணன் இல்லை, சத்ரியன் இல்லை என கூறும் நீங்கள் உங்களின் மகாபாரதத்தில் பிறப்பால் கர்ணன் சத்ரியன் இல்லை என்பதற்காக அவனை போட்டியில் தவிர்த்தது பற்றி அறிய வில்லையோ, நான் இன மொழி வெறியன் தான் என்னுடைய மொழியே மிகவும் பலம் வாய்ந்த மிகப்பழமையான மொழி என்ற செருக்கு உடையவன் நான், அனால் இங்கு இருக்கும் ஹிந்து மத வெறியர்கள் சாதாரண கதையில் சொல்லப்பட்ட ராம ராஜ்யத்தை கொண்டுவருவோம் என கங்கணம் கட்டி, பல கேவலமான செயலில் ஈடுபட்டிருக்கின்றனர் உண்மையில் உங்கள் ராமராஜ்யம் எது இமய மலைக்கும் , விந்தியமலைக்கும் இடைப்பட்ட சிந்துவும் , இராசமகால் குன்றுகளுக்கும் இடையில் பரவியிருந்த ஆரிய வர்த்தத்தில் 300 க்கும் மேற்ப்பட்ட ராஜ்ஜியங்களில் ஒன்று கோசலம் இது தஞ்சை மாவட்டம் அளவிற்கு இருந்திருக்கலாம் ஆனால் ஹிந்து வெறியர்களோ ஆசியாவில் பாதியை ராம ராஜ்ஜியம் என்கின்றனர், நாங்கள் அப்படி ஒன்றும் கூற வில்லை எங்களுடைய பாட்டன் எங்களுக்கு கொடுத்த நிலத்தை தான் எங்களுடையது என கூறுகிறோம் இது உங்களுக்கு வெறியாக படுகிறதா? 400வருடங்கள் ஆண்ட வெள்ளையன் எல்லோரையும் மதம் மாற்ற முயற்சித்தான் அதற்க்கு உருவான கட்டுக்கதை என்று நீங்கள் கூறும்போது , உங்கள் ஆரியர்களும் எங்கள் திராவிடர்களை ஆண்ட போது மதம் மாற்ற முயற்சித்திருக்க மாட்டார்களா? அவர்களும் கம்பன் மாதரியான ஆட்களை வைத்து ராமாயணம் மாதரியான கட்டுக்கதைகளை கட்டி ஹிந்து மதத்தை வளர்க்க முர்ப்பட்டிருக்க மாட்டார்களா? திராவிடர்களை வெள்ளையன் குறிப்பிட வில்லை உங்களுடைய வேதங்களே குறிப்பிடுகிறது.

நண்பர் சுரேந்தர் அவர்களே, நீங்கள் ஒரு கார்டுநீஸ் என்று அறிகிறேன்.உங்கள் கார்டூன் போல, நீங்கள் எழுதும் கருத்தும் எனக்கு சிரிப்பை உண்டாகுகிறது.ராமாயணத்தில் சம்பூகன் பற்றி கூரியிருகிரிர்கள்.தயவு செய்து அம்புலி மாமா புத்தகதில் வரும் சுப்பன் குப்பன் போன்ற கதைகளை 10 வயது குழந்தை படிப்பது போல ராமாயணத்தையும் மகாபாரதத்தையும் மற்றும் வேறு எந்த வேத இலக்கியத்தையும் படிகாதிர்கள்.உங்கள் ஆணவம், இனவெறி மொழி வெறி எல்லாம் அழிந்தால்தான் இவைகளை உங்களால் புரிந்துகொள்ளமுடியும்.கர்ணன் கதையும் இதுபோலத்தான்.இந்த கதைகளை நான் விளக்கினால் இந்த பின்னோட்டம் மிக நீளமாகும்.எனக்கு நேரம் போதவில்லை இங்கு.ஆகவே, தயவு செய்து வேதம் அறிந்த பெரியர்வர்களிடம் உங்கள் கேள்வியை தாழ்மையாக கேளுங்கள்.அனால் , நீங்கள் குறை கண்டு பிடிப்பதற்கே உங்கள் நேரத்தை செலவு செய்திர்கலானால் , கடைசி வரை உங்களுக்கு வேத ரகசியம் புரியாது....... தொடரும்.

அடுத்து கவிசக்ரவர்த்தி கம்பர் ஒரு ஆரிய அடிமை.!
அவர் மட்டும் இல்லை.அவரை ஆதரித்த சடையப்ப வள்ளல்,சோழ மன்னன் மற்றும் பல புலவர்கள், தமிழ் இலக்கியத்தில் வேத கருத்துக்கள் கூறிய சங்க கால தமிழ் புலவர்கள் எல்லாம் ஆரிய அடிமைகள்தான்.ரத்தம்,சதை,தோல்,அந்த தோளின் மேலே இருக்கும் ஒவ்வொரு மயிர்களிலும் இனவெறி மொழிவெறி கொண்டு சிந்திக்க வக்கற்றவர்களிடம் இருந்து வேறு எப்படிபட்ட வார்தையை எதிர் பார்க்க முடியும்?
தொடரும்....

அடுத்து, சைவம் வைணவம் வேத தாயின் இரு குழந்தைகள்.சகோதரர்களிடியே சிறு சிறு பிரச்சனை வரலாம்! இதை சாக்காக வைத்துகொண்டு தெருவில் போகிறவன் எல்லாம் தாயை பழித்தால் ,சகோதரர்கள் இருவரும் ஒன்று சேர்ந்து தெருவில் போகிறவனை அடித்து விரட்டுவார்கள்.என்ன சொல்ல வருகிறேன் என்று புரிகிறதா?
தொடரும்.

அடுத்து ,தமிழ் மொழியில் உங்களுக்கு வெறி செருக்கு எல்லாம் உள்ளது என்று ஒத்துகொண்டதுக்கு நன்றி.எனக்கு என் தாய் மொழி தமிழ் மீது பற்று மட்டுமே உள்ளது.வெறி இல்லை.அதனால்தான் என்னால் சிந்திக்க முடிகிறது. வேதம் புரிகிறது.உங்களால் அது முடியவில்லை.இதற்கு காரணம் அந்த வெறியும் செருக்கும்தான்.நான் இல்லை.ஆகவே என்னால் எதுவும் செய்வதற்கு இல்லை. தொடரும் ..

அடுத்து, ராமாயணம் சாதாரண கதையா? உங்களைபோல திராவிட வெறியர்களுக்கு அப்படி இருக்கலாம்.கோடானு கோடி பாரத மக்களுக்கு அப்படி இல்லை.சிலபதிகரத்தில் அருந்திறல் இழந்த அயோத்தி போல
பெரும்பெயர் நகரம் பெரும்பேதுற்றது

என்று 1500 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதிச் சென்றார் செந்தமிழ்ச் சேரநாட்டு இளவல் இளங்கோவடிகள். கோவலனும் கண்ணகியும் புகார் நகரைப் பிரிந்ததும் அது “ராமன் இல்லாத அயோத்தி போல” ஆயிற்று என்று உவமை சொல்கிறார்! அப்படி என்றால் எந்த அளவுக்கு ராமனும், அயோத்தியும் பழந்தமிழர் பண்பாட்டில் வேரூன்றியிருந்தனர் என்று ஊகிக்கலாம். தமிழ் நாடு மட்டும் இல்லை! பாரதம்,இலங்கை,கம்போடியா,தாய்லாந்து ,பர்மா,மலேசியா, இந்தோனேசியா போன்ற நாடுகளில் எல்லாம் அந்த நாட்டு மக்களின் கலாசாரத்தில் பின்னிபினைக்கபட்டது ராமாயணம். கிணறே உலகம் என்று கற்பனை செய்து வேத சமுத்திரம் அறியாத மூடர்களுக்கு இது புரியவில்ல என்றால்..அது அவர்களின் தவறு.அவர்களின் கர்ம வினை.பாவ செயலின் பலன்....... தொடரும்.

அடுத்து ராம ராஜ்யம் என்றால்,அன்பு,தர்மம்,அகிம்சை,சத்தியம் போன்றவற்றை உள்ளடக்கிய ராஜ்ஜியம். எங்கே ராமன் பிறந்தானோ..எங்கே வாழ்ந்தானோ .. எங்கே ஆட்சி செய்தானோ..எங்கே கோடானு கோடி மக்கள் அவனை தொழுகிறார்களோ... எந்த மக்கள் வாழ்வில், மூச்சில் அவன் சுவாசிக்க படுகிறானோ, அந்த மக்கள் வாழும் பாரத தேசத்தில்தான் இந்த ராஜ்ஜியம் வரவேண்டும்.அதைதான் கோடானுகோடி மக்கள் விரும்புகிறார்கள். நீங்கள் ரோம் ராஜ்யத்தின் அடிமை. அதற்குத்தான் தாசானு தாசனாக இருப்பேன் அல்லது ..2g sepctrum திராவிட கொள்ளையர்களின் ராஜ்யத்திற்கு சொம்பாக இருப்பேன் என்றால்..அது உங்கள் இஷ்டம். .. தொடரும்.

அடுத்து..உங்கள் பாட்டன் உங்களுக்கு கொடுத்த நிலமா? நான் அப்படி நினைக்கவில்லை.இந்த பூமி,அண்ட சராசரங்கள் எல்லாம் அந்த இறைவனின் சொத்து என்றுதான் நான் எண்ணுகிறேன்.பரந்த விரிந்த பாரத தேசத்தில் திராவிட தேசமும் ஒரு பகுதி என்று எனது வேதம் சொல்கிறது.உங்கள் வெறி அதை மறுத்து எது என் பாட்டன் சொத்து ,தாய்மாமன் சீதனம் என்று போலம்பினால்..உங்கள் அறியாமையை நினைத்து சிரிப்பதா,அல்லது உங்களுக்காக அனுதாப படுவதா? . நீங்கள் வாழும் அந்த நிலத்திலிருந்து உங்களை கட்டி எழுத்து செல்ல 3 பேர் வருவார்கள்.மறக்க வேண்டாம் நண்பரே.... தொடரும்...

அடுத்து.. தஸ்யு என்ற வார்டை திராவிடனை குறிப்பிடுகிறத? ஐயோ!ஐயோ! மீண்டும் மீண்டும் அதே வாந்தி..நாற்றம் தாங்க முடியவில்லை நண்பரே! இந்த கேள்விக்கு நான் தந்த அந்த ஆரிய படையெடுப்பு என்ற தளத்தில் இதற்கான பதில் உள்ளது.மீண்டும் சொல்கிறேன்.தயவு செய்து.. படித்து ஆய்வு செய்து, பிறகு கருத்து கூற வாருங்கள்.கேள்வி கேளுங்கள்.... தொடரும்.

அடுத்து, ஆரியர்கள் திராவிடர்களை ஆண்ட போது மதம் மாற்ற முயற்சிக்கமாட்டார்கள என்ற கேள்வி..நண்பரே...பலதடவை சொல்லியாயிற்று ! ஆரியன் என்ற ஒரு இனமே இல்லை..படையெடுப்பும் இல்லை, எவனும் எவனையும் ஆட்சி செய்யவில்லை.இவை எல்லாம் ஆங்கிலேயன் சூழ்ச்சி என்று சொல்லிவிட்டேன் இதை பற்றி நீங்கள் படித்து தெளிவு பெற அருமையான தளம் கொடுத்துவிட்டேன். அங்கே செல்லுங்கள்..மூளையில் இருக்கும் வெறி உணர்சியை சற்று தள்ளி வைத்து , அங்கே என்னதான் எழுத பட்டிருகிறது என்று ஆராய்ந்து சிந்தியுங்கள்.உண்மை விளங்கும்.இங்கே ஏன் இந்த புலம்பல்? ஏன் மீண்டும் அதே வாந்தி?... தொடரும்.

முருகன் தமிழ் கடவுள் ,அவன் அப்பன் சிவன் ஆரிய கடவுள், என்று மனநலம் சரியில்லாதவர் போல பிதற்றும், பைத்தியகார இனவெறி மொழிவெறி ஜந்துக்களிடம் இருந்து இப்படிபட்ட கேள்விதான் வரும் என்று எனக்கு புரியும்.ஆகவே சமாதானம் அடைகிறேன். கோபம் இல்லை.. உங்கள் மீது! இறுதியாக...ஒரு உண்மை சொல்கிறேன்.கேளுங்கள். பாரத தேசத்தில் பிறவி எடுக்க ஒரு மனிதன் பல பிறவி புண்ணியம் செய்திருக்க வேண்டும்.அனால் எனக்கு அந்த பாக்கியம் இல்லை.! ஆம்! நான் மலேசியாவில் பிறந்து வளர்ந்த மலேசியா தமிழன்.இது வரை பாரத தேசம் வந்ததில்லை. என் முன்னோர் வாழ்ந்த அந்த புண்ணிய பூமியின் சரித்திரம், தர்மம் எல்லாம் எனக்கு நன்றாக புரிகிறது. இறைவனின் கருணை இது. ஆனால். அந்த புண்ணிய தேசத்தில் பிறந்து அதன் காற்றை சுவாசிக்கும் நீங்களோ.. கொள்ளையடிக்க மதம் பரப்ப, அடிமை படுத்த,வந்த ஆங்கேலேயே வந்தேறிகளின் சூழ்ச்சிக்கு பலியாகி.. சொந்த தாய் தர்மத்தை வெறுத்து பாவங்களை பெற்று.. நாசமாய் போய்விட்டிர்களே! ஐயோ பாவம்! அந்தோ பரிதாபம்! ஆனாலும், காலம் இன்னும் நெறைய இருகின்றது.தயவு செய்து. இனவெறி மொழி வெறி, பூமி வெறி ,எல்லாவற்றையும். விட்டு.. இறைவன் பால் சரணடைந்து பக்தி செய்து, வேதம் படித்து ,புண்ணியம் பெறுங்கள். நன்றி.வருகிறேன்.

@kambathasanநன்றி உங்களின் பதில் சொல்ல முடியாமைக்கு, உங்களின் இணைப்பை படித்துகொண்டு தான் இருக்கிறேன் நீங்களும் இதிகாச புராண நூல் ஆராய்ச்சி நூல்கள் வாங்கி படியுங்கள், ஏனென்றால் அந்த நூல்களை எழுதியவர்களில் பார்ப்பனர்களும் உண்டு, ஏன் நேரு வும் , ரவீந்திரநாத் தாகூரும் கூட குறிப்பிட்டுள்ளனர் எங்கள் திராவிடத்தை நானும் தங்களுடன் வாதிட்டு என்னுடைய நேரத்தை வீணாக்க விரும்ப வில்லை.

Anonymous
13:17

ஆரியமும் இல்லை திராவிடமும் இல்லை போய் பொழப்ப பாருங்கட

Anonymous
13:33

எனக்கு தெரிஞ்சி பீஸ் போன வயதான கெளுடுங்கதான் ஆரியம் திரவிடம்னு சொல்லிட்டு திரியறானுங்க அவனுங்க கிழிஞ்சி போன பொக்க வாயை தச்சிட்டாலே சரியாயிடும்

Anonymous
13:33

எனக்கு தெரிஞ்சி பீஸ் போன வயதான கெளுடுங்கதான் ஆரியம் திரவிடம்னு சொல்லிட்டு திரியறானுங்க அவனுங்க கிழிஞ்சி போன பொக்க வாயை தச்சிட்டாலே சரியாயிடும்

நல்ல கருத்துக்கள்.
உண்மையில் ராமாயணம் மகாபாரதம் இரெண்டுமே பிரமாண்டம். மகாபாரதத்தின் கிளைக்கதைகளைப் பார்க்கும் போது பிரமிப்பாக இருக்கும். எத்தனை கதைகள், கதாபாத்திரங்கள், ஒன்றுக்கு ஓன்று பிணைந்து முரண்பட்டு. கட்டுக் கதையா நடந்ததா என்னவானால் என்ன? பல அருமையான விஷயங்கள் தாங்கி இன்றும் மக்களிடையே வாழ்கிறது.
மகாபாரதத்தில் இருந்து ஒரு கிளைக் கதையினை பற்றிய பதிவு
http://www.virutcham.com/2010/07/துரோணாச்சாரியர்-அந்தணரா3/

Sriram, Australia
07:43

வேதங்களையெல்லாம் தொகுத்த வேதவியாசர் மிகவும் கருப்பான உருவம் உள்ளவர். அவர் அந்தணர் என்பதாலேயே அவர் ஆரியர் என்பது அறிவீனம்! வள்ளுவன் சொன்னதுபோல் "அந்தணன் என்போன் அறவோன் மற்ற எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுகலான்" அவன் ஆரியன் அல்லன். கருணாநிதி போன்ற அரசியல்வாதிகள் சுயநலத்திற்காக மதத்தை பொய்யாக்கி இராவணன் திராவிடன் ராமன் ஆரியன் எனபேசிய மடையர்கள். உண்மையில் இராவணன் ஒரு அந்தணன். பொன்னிறமான உடல் உடையவன். ராமன் ஒரு சத்ரியன், கருப்பன். நமது வேதகாலத்தில் உடல் நிறத்தால் இனம் பிரிக்கப்படவில்லை. துருபத மன்னனின் மகன் பொன் நிறத்தன் ஆனால் அவன் மகள் திரௌபதையோ கருப்பானவள். அக்காலத்தில் பண் (வேதங்கள்) இசைத்தவனே பாணன் எனப்பட்டான். யாழ் என்னும் வீணைகொண்டு சாமவேதம் இசைத்த ராவணனின் ஊரே யாழ்ப்பாணம் ஆனது.

Sriram, Australia
07:55

தர்மனின் சபையில் யாகம் நடக்கையில் திராவிடர், ஆந்திரர் என்ற நாட்டினரும் வந்திருந்தனர் என்பது எப்படி இக்கால உத்திரப்பிரதேசம் அக்கால கோசலையோ அப்படி பாரத கண்டத்தில் ஒரு நாடாக இருந்ததே தவிர தனி இனமாக இல்லை. தன் குடும்பத்தில் தன்னைப்போல் தமிழ் பேசக்கூடிய ஆற்றலோடு ஒருவரையும் வளர்க்காத திருக்குவளை தலைவர் தன் பேச்சால் மதிமயக்கிட சொன்னதெல்லாம் உண்மை அல்ல. அவரின் அடிவருடிகள் இலக்கிய ஆரய்ச்சி என்னும் பெயரில் அவருக்குகந்த கருத்துக்களை பதிப்பித்தவை எல்லாம் உண்மை அல்ல! முதன் முதல் திருமாவளவன் என்றழைக்கப்பட்ட விஷ்ணு பக்தன் கரிகால் சோழனின் பேரன் ராஜராஜ சோழன் சிவா பக்தன். ஆனால் விஷ்ணு கோயில்களை இடிக்கவில்லை மாறாக மாபெரும் தஞ்சைப் பெரிய கோவிலைக் கட்டினான்.

Sriram, Australia
08:08

ஆனால் அவன் பேத்தி வயிற்று பேரன் குலோத்துங்கனோ தன்னை ராவணனின் வழித்தோன்றலாக (ஆம் அவன் தந்தை ஈழ தேசத்தவன்) எண்ணிக்கொண்டு விஷ்ணு கோவில்களையும் வைஷ்ணவர்களையும் கொன்றான் என்பது வரலாறு. அவனே சிவாச்சாரியர்களை (அந்தணர்களை) ஒன்றும் செய்யவில்லை. மொழி மதம் இரண்டுக்கும் முடிச்சுபோடக்கூடாது! தமிழன் மொழியால் தமிழன் மதத்தால் சனாதன தர்மம் என்னும் இன்றைய இந்து மதத்தவனகவே வாழ்ந்தான். வீரமாமுனிவர் தமிழ்ப் பெயர் சூட்டிக்கொண்டதால் பிறப்பால் தமிழன் ஆகிவிட முடியாது. அதுபோல் மொழி என்பது காலம்காலமாக உருவாகி வருவது. அதனால் இன்று தமிழ் பேசும் மக்கள் மட்டும் திராவிடர் பீகாரில் உள்ள தாழ்த்தப்பட்டவர் ஆரியர் என்பது புரட்டானது.

Sriram, Australia
08:18

புலவர் க. கோவிந்தன் அவர்கள் தமிழ்ப்படுத்திய திரு ஸ்ரீனிவாச ஐயங்கார் அவர்கள் எழுதிய தமிழர் வரலாறு என்னும் நூலில் உள்ளதுபோல் கிரேக்கரும், இத்தாலியரும் சிலப்பதிகாரக் காலத்திலேயே தமிழகத்தில் வந்து தங்கிவிட்டனர். அவர்களில் பெரும்பகுதியினர் அந்தணர்களாக (அநேகர் பரத்வாஜ கோத்திரத்தில்) இணைந்தனர் என்கிறார். இன்றைக்கு செல்வச் செழிப்பால் எப்படி அமெரிக்க தேசம் எல்லா நாட்டவரையும் கொண்டுள்ளதோ அதுபோல் பண்டைய இந்திய பல நாட்டவர்க்கும் புகலிடமாக இருந்தது என்பதே வரலாற்று உண்மை!

Sriram, Australia
08:32

500 வருடங்கள் பின்னோக்கிச் சென்றாலே அமெரிக்காவும் இங்கிலாந்தும் வல்லரசுகளாக இல்லாத இந்தியாவின் வணிகமும் செல்வச்செழிப்பும் உலகைக்கவர்ந்த்து தெரியவரும். பெட்ரோல் கண்டுபிடிக்குமுன் அரேபியர் இந்தியப் பொருட்களுக்கு "புரோக்கர்"களாக ஆனதால் இந்தியாவிற்கு கடல்வழி காண ஐரோப்பியர் முயன்றது எவரும் மறுக்கமுடியாத உண்மை. அதனால் அவர்கள் கண்டுபிடித்ததே அமெரிக்காவும், ஆப்பிரிக்காவும். இந்தியா சாதுக்கள் நிறைந்த அமைதியான தேசமாக இருந்ததால் தடிஎடுத்துக்கொண்டு வந்தவன் எல்லாம் தண்டல்காரன் ஆனான். மொகலாயர் பின்னர் வெள்ளையர் என நம்மை அடிமைப்படுத்தி ஆண்டனர். இதுபோன்ற வரலாற்று நிகழ்வுகளால் இந்து மதம் சமீபத்தில் சிதைக்கப்பட்டதும் உண்மை!

நானும் ஆயிரம் ஆதாரங்களை அடுக்கிவைக்க முடியும் இங்கு, ஏற்கனவே இங்க பலவிலக்கங்களை தந்துவிட்டேன், முக்கியமாக இனொன்று சொல்லிக்கொள்கின்றேன் நாங்கள் தமிழ், தமிழினம் என வாழ்பவர்கள் நன் ஒன்றும் ஆரிய அடிமைகள் அல்ல எவனோ அவிழ்த்துவிட்ட மூட்டைகளை நம்பிக்கொண்டு தர்க்கம் செய்வதற்கு, கருணாநிதி எழுதிய ரைசிங் சண் குட நான் படித்ததில்லை அப்படி இருக்கையில் திராவிட வாதிகளை கருணாநிதியுடன் முடிச்சு போடுவதை நிறுத்துங்கள், ஹிந்து மதவாதிகளை தவிர மற்ற அனைவரும் திராவிட ஆரியத்தை ஏற்றுக்கொள்கின்றனர் நேரு, ரவீந்தரநாத் தாகூர், போன்ற பலர் முதலில் உங்களின் மத வலயத்திற்குள் இருந்து வெளியே வாருங்கள் அப்பொழுது தான் புரியும் உங்களுக்கு, உலக அளவில் மொழியியலாளர்கள் சமஸ்கிரதம் பற்றி நிறையவே ஆஆய்ச்சி செய்துள்ளனர் , அது எந்த எந்த நாட்டுடன் ஒத்து போகிறது என்பதெல்லாம் நிறைய இருக்கிறது, அட திருவிடத்தை பற்றி சொல்ல ஒரு சின்ன விடயம் போதும், சமஸ்கிரதம் வேறு தமிழ் வேறு மொழி தான் அப்படி இருக்கையில் இவ்வினமும் வேறுபட்ட இனம் தான் இது இரண்டும் ஒன்று என நீங்கள் சொல்ல முற்ப்பட்டால் நீங்கள் தமிழுக்கே சமஸ்கிரதம் தான் தாய்மொழி என மாற்ற முயற்சிக்கும் ஆரியர் கூட்டத்தில் ஒருவர்.

Sriram, Australia
09:11

எனவே பார்ப்பனரெல்லாம் ஆரியர் என்னும் கருத்து முற்றிலும் தவறு. ஜமதக்கினியின் வழித்தோன்றலாகிய திரணதூமாக்கினி என்பவரே தொல்காப்பியர் என்பதே உண்மை என உணர்ந்து உண்மையான வாழ்வு வாழ்வதே முக்கியம்! பேய்க்கூச்சலிட்டு ஆரிய திராவிடப் பொய்களைப் பேசாது வாழுமாறு அன்புடன் வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்.

Sriram, Australia
09:40

ஐயா சுரேந்தர் நேருவையும் ரவீந்திரநாத் தாகூரையும் தவிர ஆதாரம் ஏதும் இருந்தால் எழதுங்கள். சும்மா பேச்சோடு நிறுத்திவிடாதீர்! உமது வாதம் எதுவும் வலுவானதாக இல்லை எனும்போது கோபம் வருவது சகஜம்தான். கருத்துக்கள் முக்கியமே தவிர பொய்யையே பலமுறை சொல்வதாலும் தான் கண்ணை மூடிக்கொண்டதால் உலகம் இருண்டது என்பதுபோலவும் பேசாதீர்! ஜெர்மனியனும் பிரெஞ்சுக்காரனும் மதத்துக்காகச் சண்டைபோடவில்லை. தமிழ் மறை என்னும் நமது திருக்குறளிலேயே எத்தனை இறைச் செய்திகள் உள்ளன. மடியில்லா மன்னவன் எய்தும்........ மலர்மிசை ஏகினான்...... ஔவையாரும், காரைக்கால் அம்மையாரும் தமிழரில்லையா? பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார் அந்தணர் அல்லர் என்பதை முதலில் அறிந்து கொள்ளும். கருணாநிதி நாற்பது ஆண்டுகள் தமிழகத்தை ஆண்டதனால் அனைத்து தமிழ் ஆராய்ச்சிகளும் அவரின் கல்தோன்றி மண்தோன்றா கருத்தையும் அவரின் மத எதிர்ப்பு கருத்துக்களையும் கொண்டே நிகழ்த்தப் பட்டுள்ளன. எனவே உமது கருத்துக்களும் அதை அடிப்படையாகக் கொண்ட கருத்துக்களின் பாற்பட்டதே!

Anonymous
10:01

சபாஷ் சரியான போட்டி !!!!!!!!!

ஐயா ஆஸ்திரேலியா முதலில் முதலிலிருந்து நடந்த விவாதத்தை படித்து விட்டு பிறகு வாரும் இப்போ நீங்கள் போகலாம்.

@Anonymous

நண்பர்களே தவறான வார்த்தைகளை பயன்படுத்திய பின்னூட்டத்தை நீக்கப் பட்டுள்ளது மன்னிக்கவும்

இப்படிக்கு
சதீஷ் குமார்

@சுரேந்தர்

நேரு இந்த நாட்டின் பிரதமராக இருக்கலாம் நாட்டு விடுதலைக்காக பாடு பட்டவராக கூட இருக்கலாம் ஆனால் அடிப்படையில் அவர் ஒரு ஐரோப்பிய பண் பாட்டின் விசுவாசியே ஆவார் அவர் வளர்க்கப்பட்ட விதம் வளர்ந்த விதம் எல்லாமே ஆங்கிலேயர்களை பின்பற்றி தான் எனவே அவருக்கு இந்து மதத்தை பற்றியோ இந்தியர்களின் வாழ்க்கை முறை பற்றியோ ஆத்ம பூர்வமாக எதுவும் தெரியாது

அதை உணரும் சக்தியும் அவருக்கு இல்லை அப்படி பட்ட ஒருவர் நிச்சயம் ஆரிய திராவிட விஷயத்தில் ஐரோப்பியர்களின் கருத்துக்களையே பிரதிப்பலிப்பார் எனவே இந்திய பண்பாட்டுக்கு நேருவை ஆதாரம் காட்டுவது அறிவுடைய செயல் ஆகாது ஆரியம் திராவிடம் என்பது நிலம் சார்ந்த வார்த்தைகளே தவிர இனம் சார்ந்த வார்த்தைகள் அல்ல இன்னும் ஆரிய திராவிட கருத்துக்களை ஒத்துக்கொண்டால் ஆரியர்கள் எப்படி இந்த நாட்டிற்கு அந்நியர்களோ அதே போலவே திராவிடர்களும் அந்நியர்கள் தான் பூர்வ குடிகளை அழித்து விட்டு குடிஏறியவர்கள் தான் உண்மையில் இதை பற்றி யாரும் பேசுவது இல்லை பேசினால் தமிழ் நாட்டில் வயிறு வளர்க்க முடியாது காரணம் ஆரியம் திராவிடம் பேசுவது தான் இங்கு நல்ல வியாபாரம்

Anonymous
11:40

தினமலர்
அகத்தியரின் வரலாறு கூறும் அறிவியல் உண்மை!
ஜூன் 21,2011
படித்தவர், பாமரர் அனைவரும் அகத்தியரை அறிவார்கள். ஆறுவகைச் சமயத்தினரும் அகத்தியரைப் போற்றுகின்றனர். குடுவையில் பிறந்தது, தென்புலம் தாழ்ந்த பொழுது பூமியைச் சமன் செய்தது, பார்வதி திருமணத்தைப் பொதிகையில் கண்டது, காவிரி கொணர்ந்தது போன்ற அகத்தியர் தொடர்பான வரலாறுகள் அனைத்திலும் அறிவியல் கூறுகள் பொதிந்துள்ளன.

சோதனைக்குழாய் குழந்தை

உலகின் முதல் சோதனைக்குழாய் குழந்தை அகத்தியர்தான் ! குடுவையில் கருத்தரித்து, வளர்ந்து வெளிப்பட்டதால் அவரை, கலயத்தில் பிறந்தோன் (கும்பசம்பவர்) என்றும், குடமுனி என்றும் கூறுவர். உயிர்கள் தாயின் கருப்பைக்கு வெளியே கருத்தரித்து வளர இயலும் என்ற அறிவியல் உண்மை, அகத்தியரின் பிறப்பிலேயே பொதிந்துள்ளது. அவ்வாறு, செயற்கை முறையில் உருவாக்கப்படும் உயிரினங்கள், தொடக்க நிலையில் இயல்புக்கு மாறான உருவத்தைப் பெற்றிருக்கும் என்பதும், இயல்பான வளர்ச்சி, மேம்பட்ட ஆய்வுகளுக்குப் பிறகே சாத்தியமாகும் என்பதும் அறிவியல் உண்மை. முதல் சோதனைக் குறைவானே உயரமே பெற்றிருந்தார் என்பது இந்த உண்மையை நிரூபிக்கிறது.

தொலைக்காட்சி பார்த்தவர்

முதன்முதலில் தொலைக்காட்சி பார்த்தவரும் அகத்தியரே ! பார்வதி - பரமசிவன் திருமணத்தைக் காண அனைவரும் இமயத்தில் கூடியதால் வடபுலம் தாழ்ந்தது. அதனைச் சமன்செய்ய, சிவபெருமான், அகத்தியரை தென்னாட்டிற்கு அனுப்பினார். அனைவரும் காணப்போகும் தங்கள் திருமண நிகழ்ச்சிகளை அடியேன் மட்டும் பார்க்க முடியாமல் போகுமே ? என்று வினவினார். அகத்தியர், இமயத்தில் நடைபெறும் எமது திருமண நிகழ்வுகளை உமக்குப் பொதிகையில் காட்டியருள்வோம் என்றார் ஈசன். அவ்வாறே, அகத்தியர் பார்வதி - பரமசிவன் திருமணக் காட்சியைப் பொதிகையில் கண்டு களித்தார். ஓரிடத்தில் நிகழும் நிகழ்ச்சியைப் பிறிதோர் இடத்தில் காணக்கூடிய சிந்திக்கத் தூண்டும் அறிவியல் கூறு இதில் அமைந்துள்ளது. அகத்தியர் கண்டது நேரடி ஒளிபரப்பு ! (லைவ் டெலிகாஸ்ட்). ஈசன் திருமணம் நடந்து பலநாட்கள் கழித்து அதனை மீண்டும் காண விரும்பினார். திருமால் ! சீர்காழியை அடுத்த ஒரு தலத்தில் சிவ பெருமான், திருமாலுக்குத் தனது திருமணக் கோலத்தை மீண்டும் காட்டியருளினான் ! திருமணத் திருக்கோலம் காட்டிய அந்தத் தலமே, திருக்கோலக்கா என்று பெயர் பெற்றது. இது பதிவு செய்த மறுஒளிபரப்பு!.

அணுவுருவில் நதிகள்

அகத்தியர் தென்னாட்டிற்குப் புறப்பட்டபொழுது, காவிரியை, அணுவுருவாக்கிக் கமண்டலத்தில் அடைத்து எடுத்து வந்தார் என்பது வரலாறு. மனிதன் தண்ணீர் இல்லாத வேறு கோள்களில் குடியேறும் காலத்தில், தண்ணீரை அணுவுருவாக்கி எடுத்துச் சென்று அங்கு, மீண்டும் தண்ணீரை உற்பத்தி செய்துகொள்ள வேண்டியிருக்கும் என்பது நவீன அறிவியல். நானோ - டெக்னாலஜி என்னும் தற்போதைய மூலக்கூறு தொழில் நுட்பத்திற்கு, இந்த சம்பவம் புராண ஆதாரம்.

Anonymous
11:56

@Anonymous
நண்பரே சுரேந்தர் மாதிரியாயான ஆளுங்களுக்குகெல்லாம் இவ்ளோ பெரிய விளக்கமெல்லாம் சொல்ல தேவை இல்லை..

Anonymous
11:25

it's good topic for my [url=http://livepaperhelp.com/collegeessays.html ]college essay[/url]

thalaivare, appo, thirugnanasambanthar, appar, sundarar, maanikkavasagarellam aariyara? avungellam sivan pathi paadirukangaley?!
when u r going to leave all these nonsenses? do u know Ur leader, Periyar was always saying that tamil was an uncivilised language, and, we all have to become English...now, we are not Tamilans, nor Dravidians, we are Indians...Unity is our power...u r killing yourself by this discrimination...
evano oruthan thinnaiyila padurhukitta sonna aariya/dravida kotpaadu nambi, naatukkula neenga moodathanama kalavaratha undakuringa!

thalaivare, appo, thirugnanasambanthar, appar, sundarar, maanikkavasagarellam aariyara? avungellam sivan pathi paadirukangaley?!
when u r going to leave all these nonsenses? do u know Ur leader, Periyar was always saying that tamil was an uncivilised language, and, we all have to become English...now, we are not Tamilans, nor Dravidians, we are Indians...Unity is our power...u r killing yourself by this discrimination...
evano oruthan thinnaiyila padurhukitta sonna aariya/dravida kotpaadu nambi, naatukkula neenga moodathanama kalavaratha undakuringa!

Anonymous
20:51

Very energetic blog, I enjoyed that a lot. Will there be a part 2?


Next Post Next Post Home
 
Back to Top