( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )21 ஞாயிறு ஜூலை அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

ராமதாசின் சாயம் வெளுத்து விட்டதா...?


   டிக் காற்றில் அம்மி பறந்தது என்பார்கள் ஆடி வருவதற்கு முன்பே வீசிய தேர்தல் காற்றில் தமிழகத்தில் முக்கியமாக இரண்டு தலைவர்கள் பறந்து விட்டார்கள் அல்லது காணாமல் போய்விட்டார்கள் நான் யாரையும் சொல்லவில்லை பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் டாக்டர் ராமதாசையும், விடுதலை சிறுத்தைகளின் தலைவர் திருமாவளவனையும் தான் சொல்கிறேன்.

 குத்துசண்டை மேடையில் போட்டி துவங்குவதற்கு முன்பு மேடையில் இங்கும் அங்கும் வீராவேஷமாக சுற்றுவார்கள் கைகளை மடக்கி, முறுக்கி காற்றை குத்துவார்கள். தோள்களையும், தொடைகளையும் தட்டி சிம்மக்குரல் எழுப்புவார்கள் போட்டி ஆரம்பித்து எதிராளி ஒரு குத்து விட்டவுடன் பூனைக்குட்டி போல பம்பிக் கொள்வார்கள். ராமதாசும், திருமாவளவனும் ஏறக்குறைய அப்படிதான் மக்கள் என்ற மாமல்லர்கள் விட்ட குத்தில் பேச்சி முச்சற்று பரிதாபமாக கிடக்கிறார்கள்.


 ஒரு விதத்தில் சொல்லப்போனால் தமிழ்நாட்டில் உள்ள ஜாதிகட்சிகள் எல்லாமே இப்படித்தான் கிடக்கிறது இவர்களுக்கு ஏன் இந்த நிலைமை இதை அவர்கள் எண்ணிப் பார்க்கிறார்களோ இல்லையோ பொதுமக்களாகிய நாம் நிச்சயம் எண்ணிப்பார்க்க வேண்டும் அலசி ஆராயவும் வேண்டும்.

                இந்திய முழுவதுமே ஜாதி பிரிவுகள் என்பதுதான் முக்கியமான சமூக அடையாளமாக கருதப்படுகிறது. எந்த ஒரு இந்தியனும் தன்னை இந்தியனாகவோ அல்லது வாழும் பிரதேசத்தின் பிரதிநிதியாகவோ அதாவது தன்னை மராட்டியன், தமிழன், மலையாளி என்று காட்டிக்கொள்வதற்கு பதிலாக குறிப்பிட்ட ஜாதிக்காரனாக காட்டிக் கொள்ளவே பிரியப்படுகிறான் தவிர்க்க முடியாத சுழலில் மட்டுமே தனது மாநிலம், மொழி, மதம் போன்றவற்றை வெளிக்காட்டுகிறான்.

 எவ்வளவு உயர்ந்த படிப்பாளியாக இருந்தாலும், பண்பாளனாக இருந்தாலும் இந்தியன் ஒவ்வொருவனின் மனதிலும் ஜாதி அபிமானம் என்பது அதிகமாகவே இருக்கிறது. நமது தமிழ்நாட்டை பொறுத்தவரை மறைந்த தலைவர்களை கூட ஜாதி பின்னணியில் தான் தற்போதய தலைவர்கள் பார்க்கிறார்கள். மக்களும் அதே சிந்தனையில் தான் இருக்கிறார்கள். ஒருவர் வீட்டில் அம்பேத்கார் போட்டோ மாட்டப்பட்டிருந்தால் அவர் நிச்சயம் தாழ்த்தப்பட்ட ஜாதியை சேர்ந்தவராகத்தான் பார்க்கப்படுகிறார்கள். அம்பேத்காரின் அறிவு, திறமை, தியாகம், செயல்பாடு எல்லாமே ஒரு ஜாதியின் எல்லைக்குள் தான் பார்க்கப்படுகிறதே தவிர பரந்த நோக்கில் யாரும் பார்ப்பதில்லை.


  மக்களின் மனதில் பலநூறு வருடங்களாக பதிந்து போய்விட்ட ஜாதிகளை பற்றிய நம்பிக்கை, ஜாதிகளின் மேலவுள்ள அபிமானம் அதிகமாக இருப்பதால்தான் பல ஜாதி தலைவர்கள் தோன்றி நாடு முழுவதும் வலம் வருகிறார்கள். தங்களது ஜாதிக்காராகள் அரசாங்கத்தால் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறார்கள், நாதியற்று கிடக்கிறார்கள் அதனால் நமது ஜாதியின் விடிவெள்ளியாக முளைத்திருக்கும் குறிப்பிட்ட கட்சிக்கு வாக்களித்து ஜாதியின் பெருமையை நிலைநாட்டுங்கள் அப்போது தான் அடிமைப்பட்டு கிடக்கும் நமது ஜாதி அரசியல் ரீதியாக விடுதலை பெற்று சமுதாயத்தில் தலை நிமிரும் என்றும் பேசுகிறார்கள்.

            உதாரணத்திற்கு ராமதாஸ் அவர்களையே எடுத்துக்கொள்வோம். இவர் தனது கட்சியை வளர்க்க வன்னிய மக்களிடம் எத்தனை மாயாஜால வார்த்தைகளை அள்ளி வீசினார். தமிழகத்திலேயே ஒடுக்கப்பட்ட மக்களாக வஞ்சிக்கப்பட்ட பிரஜைகளாக வன்னிய கவுண்டர்கள் மட்டும் தான் இருக்கிறார்கள் அவர்கள் விடுதலையடைய வேண்டும்மென்றால் பாமக வளர்ந்தால் தான் முடியும் என்ற ரீதியில் பேசினார்.


  அமைதியான ஜனங்களுக்கு வெறிவுணர்ச்சியை ஊட்ட நியாயப்படி வன்னியர்களுக்கு கிடைக்க வேண்டிய சலுகைகள் எல்லாவற்றையும் தாழ்த்தப்பட்ட ஆதிதிராவிட மக்கள் பறித்துக்கொள்கிறார்கள் என்ற வகையில் பேசி தம்மோடு இருந்த அப்பாவி அரிஜனமக்களையும், வன்னியர்களையும் நேருக்கு நேரான விரோதியாக மாற்ற முயர்ச்சித்தார்.

முரட்டுதனமான செயல் திட்டத்தால் அதாவது மரங்களை வெட்டி, சாலைகளை உடைத்து, அரசு சொத்துக்களை சேதாரம் செய்து வன்னியர்களின் போராட்ட குணத்தை தனக்கு சாதகமான முறையில் பயன்படுத்தி சட்டமன்றம் பாராளுமன்றத்தில் தனது உறுப்பினர் பலத்தை அதிகரித்துக் கொண்டார்.

 அமைச்சர் பதவியை அன்பு மகனுக்கு வாங்கி கொடுத்தது மட்டும் தான் ராமதாஸின் வன்னிய மக்களுக்கான ஒரே சேவையாகும். நமக்கு ஏராளமான உதவிகளை வாங்கி கொடுப்பார் ராமதாஸ் என கனவில் இருந்த படையாட்சி கவுண்டர்கள் வன்னிய குல காவலரின் செயலைக் கண்டு மலைத்துப் போய் நிற்கிறார்கள் அவர்களும் தான் எத்தனை காலம் இவரை நம்பி ஏமாந்து போவார்கள்?


  தனக்காக களை வெட்ட அனுப்பிய அண்ணன் வரப்பில் படுத்து தூங்குகிறான் என்றால் எத்தனை தம்பிகளால் அதை தாங்கி கொள்ள முடியும் தம்பி தன் வேலையை பார்க்க ஆரம்பித்து விட்டான். அண்ணனின் பொய் வேஷம் கலைந்தும்விட்டது.

 ஜாதி உணர்வுகளை மட்டுமே வைத்துக்கொண்டு பிழைப்பு நடத்திய டாக்டர் ராமதாசை மக்கள் புறகணிக்க ஆரம்பித்துவிட்டார்கள். அதன் அறிகுறி தான் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் பாமக வெற்றிகரமாக தோல்வியை தழுவியது அப்போது மக்கள் தன்னை அடையாளம் கண்டு கொண்டார்கள் என்ற ஞானம் தைலாபுரக் கனவான்களுக்கு வரவில்லை

 தங்களது தோல்விக்கான நிஜகாரணங்களை பார்க்க துணிச்சல் ஈன்றி அன்புமணி-ராமதாஸ் மத்திய அமைச்சராக இருந்த போது புகையிலையை ஒழிக்க படாதபாடுபட்டார். அதனால் பீடி, சுருட்டு கம்பெனிகள் அவர் கட்சி தோற்க வேண்டுமென்று சதிவேலைகளை செய்தன அதுதான் தோல்விக்கான முழுகாரணம் என்று கட்சி தொண்டர்களிடம் பூசி மழுப்பினார்கள் அந்த மழுப்பல் வேலைகள் எல்லாம் இந்த தேர்தலில் வெளுத்துவிட்டது.


  தாங்கள் போட்டியிட்ட 30 தொகுதிகளில் மூன்றே மூன்றில் மட்டும் பெற்றிருக்கும் வெற்றி இழுத்து பறித்த வெற்றி தான் வேட்பாளர்களின் சொந்த பலமும் கலைஞர் கொடுத்த காசு பலமும் தான் இந்த வெற்றியை தந்ததே தவிர ராமதாஸின் செயல்பாட்டுகாக கிடைத்தது அல்ல உண்மையில் வன்னிய மக்கள் அனைவருமே ராமதாஸின் முழுமையான சுயநல வடிவை கண்டு கலங்கிபோய் இருக்கிறார்கள். இனியும் அவர்கள் அவரை நம்புவார்கள் என்று சொல்ல முடியாது.

             பாமக ஓரம் கட்டப் பட்டது மட்டும் இந்த தேர்தலில் நடந்த நல்ல சங்கதி அல்ல தாழ்த்தப்பட்ட மக்களின் ஓரே காவலன் நாங்கள் தான் என மார்த்தட்டி மக்களின் முன் திரிந்த திருமாவளவனின் கூடாரமும் காலியாகி இருப்பது வரவேற்க தக்கதே ஆகும்

 ஒரு வேளை சோற்றுக்கும், ஒரு முழ துண்டிற்கும் வக்கத்துப்போய் எத்தனையோ மக்கள் சேரியில் துடித்துக் கொண்டுக்கிறார்கள் அவர்களின் வலியை வேதனையை மேடை தோறும் பேசி தீருமாவளவன் தன்னை வளர்த்துக் கொண்டாரே தவிர அந்த வறிய மக்களுக்காக ஒரு துரும்பைக் கூட கிள்ளி போட்டது இல்லை மேலும் அப்பாவி அரிஜன மக்கள் தங்களது பின்னால் அணிவகுத்து நிற்பதாக ஒரு மாயக் காட்சியை ஏற்படுத்தி அரசியல் கட்சிகள் இடத்தில் பெரிய கலக்கத்தை உண்டாக்கினார்.


  அரசியல்வாதிகளை மிரட்டுவதோடு மட்டும் விடுதலை சிறுத்தைகள் நின்றிருந்தால் மக்கள் கவலைப்பட்டிருக்க மாட்டார்கள் திருமாவளவனின் தளபதிகளும், போர்ப்படை வீரர்களும் ஒவ்வொரு கிராமத்திலும் கட்டப்பஞ்சாயத்து செய்து தொப்பைகளை வளர்த்தார்கள். இவர்களின் அராஜகத்தால் மற்ற ஜாதி மக்கள் மட்டுமல்ல அரிஜன மக்கள் கூட பல துயரங்களை அனுபவித்தார்கள். அதனால் தான் திமுக-வை அடித்த அதே சவுக்கால் திருமாவளவனையும் அடித்து உட்கார வைத்து விட்டனர்.

     பாமக, விடுதலை சிறுத்தைகளை முன்னுதாரமாக கொண்டு ஜாதி கட்சி நடத்திய பல பெரிய தலைகள் இருந்த இடம் தெரியாமல் ஓடி ஒளிந்து விட்டார்கள் தென் தமிழகத்தில் கணிசமாக வாழுகின்ற நாடார்களை குஷிபடுத்தி ஓட்டுகளை அறுவடை செய்யலாம் என திமுக போட்ட கணக்கு பொய்த்து போனது போலவே தேவர்கள், கொங்கு மக்கள் போன்றவர்களை வைத்துப் போட்ட கணக்கும் பிசுபிசுத்துப் போய்விட்டது.

         இங்கு நாம் சொல்கின்ற ஜாதி கட்சிகள் அனைத்துமே கலைஞரின் நிழலில் பவனிவந்தார்கள். அதை வைத்து தமிழ்நாட்டில் ஜாதி கட்சிகளுக்கான மவுசு குறைந்துவிட்டது என்று எப்படி சொல்ல முடியும் ஜெயலலிதா தலைமையில் போட்டியிட்ட நாடார் கட்சி, தேவர் கட்சி, கொங்கு மக்கள் கட்சி எல்லாமே வெற்றி பெற்றிருக்கிறதே என்று சிலர் கேட்கலாம்.


  நான் ஜாதி கட்சிகளின் கவர்ச்சி குறைந்து விட்டதாக சொல்லவும் இல்லை நம்பவும் இல்லை ஜாதிகளை வைத்து பிழைப்பு நடத்தியவர்களின் உண்மையான இலட்சணத்தை மக்கள் ஓரளவு புரிந்து கொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வருகிறேன். மேலும் ஜெயலலிதா தரப்பில் உள்ள ஜாதி கட்சிகளிள் எதுவுமே தங்களது சொந்த சின்னத்தில், சொந்த முகத்தில் மக்களை சந்திக்கவில்லை

 மாறாக அதிமுக-வின் சின்னத்தில் நின்று தான் வெற்றி பெற்று இருக்கிறார்கள். இவர்களில் எவரையும் தங்கள் ஜாதியின் பிரிதிநிதியாக மக்கள் பார்க்கவில்லை. திமுக-விற்கு எதிரான அதிமுக வேட்பாளராகவே இவர்கள் பார்க்கப்பட்டு வெற்றி பெற செய்தார்கள் என்பதே உண்மை நிலையாகும்.

 இதை சம்பந்தப்பட்ட அவர்களும் ஒத்துக்கொள்வார்கள். ஆக தற்காலிகமாகவாது ஜாதி தலைவர்களின் கூப்பாடுகள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. இது நிரந்தரமாக வேண்டும் என்பது தான் பலரின் விருப்பம்.

+ comments + 37 comments

”அதாவது தன்னை மராட்டியன், தமிழன், மலையாளி என்று காட்டிக்கொள்வதற்கு பதிலாக குறிப்பிட்ட ஜாதிக்காரனாக காட்டிக் கொள்ளவே பிரியப்படுகிறான்” மலையாளியை மட்டும் அப்படி சொல்லாதீர்கள் அவனுக்கு மொழி வெறி அதிகம் ஒட்டு மொத்த தமிழர்களையும் எதிரியாக பார்ப்பவன் சாதியை விட மொழி பற்று அதிகம்

நல்ல பதிவு.
மக்கள் ஜாதிக்காக வோட்டு போடுவதில்லை. தலைவர்கள் என்று நினைத்துக் கொண்டிருப்பவர்கள் வேண்டுமென்றால் அப்படி நினைத்துக் கொண்டிருக்கலாம்.
நன்றி.

In the name of eradicating caste ,political parties have seen to that Caste system exists to ensure their victory in each constituency by fielding candidates from the majority caste in each constituency.
The real electoral reform is to ban candidate being fielded from dominant caste in each constituency.When they want to take castewise census and reservation,how can caste be eradicated?

ஜாதிக் கட்சிகள் பலவற்றைப் பற்றி அலசிய கட்டுரையாளர், பா.ஜ.க..... பா.ஜ.க...... என்ற ஒரு பொது உடமை (!!??) கட்சியைப் பற்றி மறந்து விட்டாரா? அல்லது வசதியாக மறைத்து விட்டாரா??

மற்ற ஜாதிக் கட்சிகளாவது, தங்களது ஜாதி மக்களுக்காக அரசியலில் இருக்கிறார்கள். (உண்மையிலேயே அவர்கள் அந்த ஜாதி மக்களுக்கு நல்லது செய்கிறார்களா? இல்லையா? என்பது வேறு விஷயம்.)

ஆனால், பா.ஜ.க.-வின் கொள்கை, நோக்கம், குறிக்கோள் என்ன? என்று ஒரு வரிகூட கட்டுரையாளர் எழுதவில்லை.

எனக்கு தெரிந்தவரை அவர்களின் செயல்பாடுகள் எல்லாமே, ஒற்றுமையாக இருந்துவரும் ஹிந்து - முஸ்லிம் மத நல்லிணக்கத்தை சீர் குலைப்பதே!

நடந்து முடிந்த தமிழக சட்டப் பேரவை தேர்தலில் அவர்களும் போட்டியிட்டு, கட்டிய கோவணத்தோடு காணாமல் போய் விட்டார்களே!!

கட்டுரையாளர் அவர்களை ஏன் மறந்து விட்டார்? அல்லது ஏன் மறைத்து விட்டார்??

அப்துல் ரஹ்மான் கருத்து தான் என்னுடைய கருத்தும்
உங்கள் பார்வையில் B J .P என்ன கட்சி குரு ஜி

ஜாதிக் கட்சிகள் பலவற்றைப் பற்றி அலசிய கட்டுரையாளர், பா.ஜ.க..... பா.ஜ.க...... என்ற ஒரு பொது உடமை (!!??) கட்சியைப் பற்றி மறந்து விட்டாரா? அல்லது வசதியாக மறைத்து விட்டாரா??

மற்ற ஜாதிக் கட்சிகளாவது, தங்களது ஜாதி மக்களுக்காக அரசியலில் இருக்கிறார்கள். (உண்மையிலேயே அவர்கள் அந்த ஜாதி மக்களுக்கு நல்லது செய்கிறார்களா? இல்லையா? என்பது வேறு விஷயம்.)

ஆனால், பா.ஜ.க.-வின் கொள்கை, நோக்கம், குறிக்கோள் என்ன? என்று ஒரு வரிகூட கட்டுரையாளர் எழுதவில்லை.

எனக்கு தெரிந்தவரை அவர்களின் செயல்பாடுகள் எல்லாமே, ஒற்றுமையாக இருந்துவரும் ஹிந்து - முஸ்லிம் மத நல்லிணக்கத்தை சீர் குலைப்பதே!

நடந்து முடிந்த தமிழக சட்டப் பேரவை தேர்தலில் அவர்களும் போட்டியிட்டு, கட்டிய கோவணத்தோடு காணாமல் போய் விட்டார்களே!!

கட்டுரையாளர் அவர்களை ஏன் மறந்து விட்டார்? அல்லது ஏன் மறைத்து விட்டார்??

மதமாற்றத்தின் மூலமும்,வன்முறையின் மூலமும் இந்தியாவை ஒரு முஸ்லீம் நாடாகவோ,கிருஸ்தவ நாடாகவோ மாற்ற நினைக்கின்ற தேச விரோதிகளுக்கும்,பதவிக்காகவும், பணத்திற்காகவும்,பயங்கரவாதிகளிடம் பணிந்து போகும் ஓட்டுப் பொறுக்கிகளுக்கும் எதிரான பா,ஜ,க,வைப் பற்றி ஒன்றுமே இந்த கட்டுரையாளர் ஒன்றுமே சொல்லவில்லை.

Anonymous
15:39

அருமையான பதிவு குருஜி..ராமதாஸ் வன்னியர்களின் வளர்ச்சியை கவனிப்பதை விட தன்னோட குடும்ப வளர்ச்சிக்கு அதிகம் முக்கியத்துவம் குடுக்கிறாரு..இது வன்னியர்களுக்கு நால்லா தெரியும்..இனியும் இவர் வன்னியர்களை ஏமாற்ற முடியாது... எனவேதான் வன்னியர்கலாகிய நாங்கள் இந்த தேர்தலில் இவருக்கு ஓட்டு போடவில்லை

"ஆக தற்காலிகமாகவாது ஜாதி
தலைவர்களின் கூப்பாடுகள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. இது நிரந்தரமாக
வேண்டும் என்பது தான் பலரின் விருப்பம்."

நிச்சயமாக... நிறைவேறும்..

அப்துல் ரஹ்மான்,ஜாஹீர்,சொல்லுங்க ஹிந்துக்களிடம் மட்டுமல்ல உலகத்தில் உள்ள எந்த மக்களிடமாவது முஸ்லீம்கள் ஒற்றுமையாக இருந்ததாக வரலாறு உண்டா....???!!!உலகத்திலேயே வன்முறையை மட்டுமே கொண்ட மதம் இதுவாகத்தான் இருக்கும்....ஏதோ இந்தியாவில் உள்ள ஓட்டுப்பொறுக்கி அரசியல் நாய்கள் உங்களுக்கு ஜால்ரா போடுவதால் கொழிக்கிறீர்கள்..

சகோதரர் தியாக ராஜன் அவர்களே!

எடுத்த எடுப்பிலேயே ஏன் உலகத்திற்கெல்லாம் போகிறீர்கள்? முதலில் நீங்களும் நாங்களும் ஒன்றாக பிறந்து வளர்ந்த நமது மண்ணைப் பற்றியே பேசுவோமே!

நான் ஹிந்து மதத்தை தழுவ விரும்புகிறேன். அப்படி நான் தழுவினால் என்னை பிராமணனாக மாற்றிக் கொள்ள இயலுமா? நீங்கள் சம்மதிப்பீர்களா? ஆனால், எந்த ஒரு மனிதனும் இஸ்லாத்தை தழுவ விரும்பினால், 24 மணி நேரமும் கதவு திறந்தே இருக்கிறது - நீங்கள் உட்பட. வருக! வருக!!

ஒற்றுமையைப் பற்றி சில : எத்தனையோ ஊர்களில் ஹிந்து மத கோவில்களுக்குள் நுழைய ஹிந்துக்களுக்கே அனுமதி இல்லை. செத்தால் சுடுகாடுகூட இரண்டு. சில ஹிந்துக்கள் வசிக்கும் தெருவில் செருப்புடன் நடக்க அதே ஹிந்து மதத்தை சேர்ந்தவர்களுக்கே அனுமதி இல்லை!! எத்தனை எத்தனை ஊர்களில் இரட்டைக் குவளை முறை??

நம்ம சங்கராச்சாரியாரும் திருமாவளவனும் ஒற்றுமையாக ஒன்றாக அமர்ந்து ஒரே தட்டில் சாப்பிடுவார்களா?? இருவரும் ஹிந்துக்கள்தானே!!

முதலில் நமது ஊரிலிருந்து ஆரம்பித்து, பிறகு மற்ற மாநிலங்கள், மற்ற நாடுகள், உலகம் என்று அலசி ஆராய்வோம் சகோதரரே!

அன்புள்ள அப்துற் ரஹ்மான்,முதன் முதலில் இஸ்லாம் பிறந்த சவூதி நாட்டிற்கு செல்லும் ஒரு ஹிந்து முஸ்லீமாக மாறினால் அவனை சேக்குகள் தங்களில் ஒருவனாக நினைத்து சமமாக நடத்துவாரா.. ...??? முதலில் அரேபிய ஷேக் முஸ்லீம்கள்,உங்களை முஸ்லீம்களாக ஏற்றுக் கொள்கிறார்களா...??? இந்தியாவிலிருந்து செல்லும் ஒரு முஸ்லீம் ஒரு அரபு ஷேக் பெண்ணை திருமணம் செய்துகொள்ள முடியுமா...தலை இருக்குமா..?? பாகிஸ்தானுக்கு போனால் உங்களை உங்களை "ஷியா" வில் சேர்ப்பார்களா..?? "சுன்னி" யில் சேர்ப்பார்களா...???லெப்பை,ராவுத்தர்,பட்டானி இன்னும் எவ்வளவோ இருக்கு நண்பரே

சாயம்வெளுத்தாலும் உஜாலா இருக்கு. மீண்டும் ஜொலிப்போம்.

யோகி ஸ்ரீ ராமானந்த குரு
பா.ஜ.க..... பா.ஜ.க...... என்ற ஒரு பொது உடமை (!!??) கட்சியைப் பற்றி மறந்து விட்டாரா? அல்லது வசதியாக மறைத்து விட்டாரா??

எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே நம் நாட்டிலே..........சத்தியம் தவறாத உத்தமர் போலவே நடிக்கிறார் யோகி ஸ்ரீ ராமானந்த குரு


நடந்து முடிந்த தமிழக சட்டப் பேரவை தேர்தலில் அவர்களும் போட்டியிட்டு பா.ஜ.க.. 0 /231, கட்டிய கோவணத்தோடு காணாமல் போய் விட்டார்களே!!

கட்டுரையாளர் அவர்களை ஏன் மறந்து விட்டார்? அல்லது ஏன் மறைத்து விட்டார்??


டாக்டர் ராமதாசும் & திருமாவளவனும் தனது சமுதாயதத்க்கு நிறைவாய் செய்துள்ளார்கள்

Anonymous
13:07

தியாக ராஜன் சார்

சவூதி நாட்டிற்கு செல்லும் ஒரு ஹிந்து முஸ்லீமாக மாறினால் அவனை சேக்குகள் தங்களில் ஒருவனாக நினைத்து சமமாக நடத்துவாரா.. ...???

கண்டிப்பாக நடத்துவார்கள். வணக்க வழிப்பாடுகளில் ஒன்றாகவே ஒரே வரிசையில் தோளோடு தோள் சேர்ந்து தோழனாக நின்று தொழுவதை நீங்கள் கண்டிருந்தால் நீங்களும் அப்பொழுதே ஏன் முஸ்லிமாக நாம் மாறக்கூடாது என மன மாற்றம் கொண்டிருப்பீர்கள்
முதலில் அரேபிய ஷேக் முஸ்லீம்கள்,உங்களை முஸ்லீம்களாக ஏற்றுக் கொள்கிறார்களா...???

என்ன இப்படி கேட்டுவிட்டீர்கள் எத்தனையோ ஹிந்து கிருத்துவ சகோதரர்கள் முஸ்லிமாக மாறி அவர்கள் தொழுகைக்கு இமாமாக (தலைமை ஏற்று ) நிற்கும்போது அவர்கள் பின்னால் சாதரணமாக அரபுகள் தொழுவது சர்வ சாதாரணம் அன்பரே
இந்தியாவிலிருந்து செல்லும் ஒரு முஸ்லீம் ஒரு அரபு ஷேக் பெண்ணை திருமணம் செய்துகொள்ள முடியுமா...
முறைப்படி திருமணம் செய்துகொள்ள முடியும் அதற்கு தடையேதும் இஸ்லாமிய மார்கத்தில் இல்லை. நீங்களும் முயன்று பாருங்கள். நான்கு பெண்கள் வரை மணமுடிக்க தடையேதுமில்லை
தலை இருக்குமா.
தலையில் இருப்பது இருந்தால் கண்டிப்பாக தலை முழுமையாக இருக்கும் சந்தேகமே இல்லை.
பாகிஸ்தானுக்கு போனால் உங்களை உங்களை "ஷியா" வில் சேர்ப்பார்களா..?? "சுன்னி" யில் சேர்ப்பார்களா...???லெப்பை,ராவுத்தர்,பட்டானி இன்னும் எவ்வளவோ இருக்கு நண்பரே

இது ஒரு கேள்வியா
இந்திய முஸ்லிம்கள் யாரும் பாக்கிஸ்தான் என்ன எங்கு போனாலும் முஸ்லிம்களாகவே வரவேற்கப்படுவார்கள்.

இன்று நீங்கள் முஸ்லிமாக மாறுங்கள் நம் தாய் நாடான இந்தியாவிலேயே இருங்கள்.இந்த கேள்விக்கு உண்டான பதிலை நீங்களே உணர்வீர்கள்.
லெப்பை சப்பை குப்பை ராவ்தர் டவசர் பட்டாணி கடலை நிலக்கடலை தெக்னி சட்னி இதுவெல்லாம் வழி வகை தெரியாத அரசாங்கமே முன்னின்று பெரும்பான்மை மக்களில் பல பிரிவினை இருப்பது போல எல்லாவற்றிலும் இருக்கவேண்டும் என பிரித்தது.இது ஆங்கில ஆட்சியர்களின் சூழ்ச்சியை அறியாது பின்பற்றியதால் வந்த வினை. ஹசன் கூத்தாநல்லூர்

பொய் சொல்லதீர்கள் ஹசன்.. அரபு முஸ்லீம்கள் உங்களை தங்களில் ஒருவராக ஏற்பதே கிடையாது வேன்டுமானால் ஹிந்துக்களைவிட சற்று மேலாக நினைக்கலாம்..குற்றவியல் சட்டங்களில்கூட அரபுக்களுக்குத் தனிச்சலுகை மேலும் ஒரு இந்திய முஸ்லீம் அல்லது ஒரு பாகிஸ்தானிய,சோமாலிய முஸ்லீம் நிச்சயமாக ஒரு அரபு பெண்ணை நினைத்துக்கூட பார்க்க முடியாது ஒரே சலுகை யென்னவென்றால் தொழுகை செய்யும்போது மட்டுமே வேறுபாடு பார்க்க மாட்டார்கள்..முஸ்லீம்களிடம் வேறுபாடு இல்லையென்றால் பின் ஏன் ஹசன் குவைத் முஸ்லிம்.. ஈராக் முஸ்லீமை கொல்கிறார்கள்..??.பாகிஸ்தானில் அஹமதியா முஸீமைக் கொல்ல சொல்லி பஃத்வா கொடுக்கிறார்கள்,இவர்களைக் கொல்லவேண்டும் என்று (ஜூன் 11 PTI)நோட்டீஸ்கூட போட்டிருகாங்களே...அரபு முஸ்லீம்கள் வேறுபாடு பார்காதவர்கள் என்றால் ஏமன் அல் அக்தம் பிரிவினர் நாங்களும் முஸ்லீம்கள்தான் தீண்டத் தகாதவர்கள் அல்ல எங்களுக்கும் சம உரிமை வேண்டும் என்று ஏன் போராடுகிறார்கள்..??முஸ்லிம்களிடம் வேறுபாடு இல்லையென்றால் சில ஆண்டுகளுக்கு முன் மெக்கா பள்ளிவாசலுக்கு வந்தவர்களையெல்லாம் கொன்று குவித்தது யார்...ஹிந்துக்களா.....?? முன்பெல்லாம் எங்களுக்கு முஸ்லீம் நாடுகளில் என்ன நடக்கிறதென்று ஒன்றுந் தெரியாது நீங்கள் சொன்னதையெல்லாம் உண்மையென்று நம்பி வந்தோம் இப்போது inter net காலம் உலகத்தில் எது நடந்தாலும் அது அடுத்த நொடியே எல்லோருக்கும் தெரிந்து விடும்..

பொய் சொல்லதீர்கள் ஹசன்.. அரபு முஸ்லீம்கள் உங்களை தங்களில் ஒருவராக ஏற்பதே கிடையாது வேன்டுமானால் ஹிந்துக்களைவிட சற்று மேலாக நினைக்கலாம்..குற்றவியல் சட்டங்களில்கூட அரபுக்களுக்குத் தனிச்சலுகை மேலும் ஒரு இந்திய முஸ்லீம் அல்லது ஒரு பாகிஸ்தானிய,சோமாலிய முஸ்லீம் நிச்சயமாக ஒரு அரபு பெண்ணை நினைத்துக்கூட பார்க்க முடியாது ஒரே சலுகை யென்னவென்றால் தொழுகை செய்யும்போது மட்டுமே வேறுபாடு பார்க்க மாட்டார்கள்..முஸ்லீம்களிடம் வேறுபாடு இல்லையென்றால் பின் ஏன் ஹசன் குவைத் முஸ்லிம்.. ஈராக் முஸ்லீமை கொல்கிறார்கள்..??.பாகிஸ்தானில் அஹமதியா முஸீமைக் கொல்ல சொல்லி பஃத்வா கொடுக்கிறார்கள்,இவர்களைக் கொல்லவேண்டும் என்று (ஜூன் 11 PTI)நோட்டீஸ்கூட போட்டிருகாங்களே...அரபு முஸ்லீம்கள் வேறுபாடு பார்காதவர்கள் என்றால் ஏமன் அல் அக்தம் பிரிவினர் நாங்களும் முஸ்லீம்கள்தான் தீண்டத் தகாதவர்கள் அல்ல எங்களுக்கும் சம உரிமை வேண்டும் என்று ஏன் போராடுகிறார்கள்..??முஸ்லிம்களிடம் வேறுபாடு இல்லையென்றால் சில ஆண்டுகளுக்கு முன் மெக்கா பள்ளிவாசலுக்கு வந்தவர்களையெல்லாம் கொன்று குவித்தது யார்...ஹிந்துக்களா.....?? முன்பெல்லாம் எங்களுக்கு முஸ்லீம் நாடுகளில் என்ன நடக்கிறதென்று ஒன்றுந் தெரியாது நீங்கள் சொன்னதையெல்லாம் உண்மையென்று நம்பி வந்தோம் இப்போது inter net காலம் உலகத்தில் எது நடந்தாலும் அது அடுத்த நொடியே எல்லோருக்கும் தெரிந்து விடும்..

Anonymous
13:31

But everybody forgot the caste feeling that brahmins have still.
If others have that feeling, it's a crime and when brahmins have that is their rights? Why is this partiality?

Anonymous
16:21

@thiyagarajan

முஸ்லிம்களின் ஜாதிகள்

1 அஷ்ரப் அல்லது மேன்மக்கள்


அ) செய்ய்துகள்

ஆ) சேக்குகள்

இ) பதான்கள்

ஈ) மொகல்

உ) மாலிக்

ஊ) மிர்சா

2 அஜ்லப் அல்லது தாழ்ந்த மக்கள்


அ) பிராலி,தாக்ரே

ஆ) தர்சி,ஜோலகா,பக்கீர்,ரxரீஷ்

இ) பர்கி,பல்கியரா,சிக்,சுரிகர்,டாய்,தாவா,டுனியா,காடி,கலால்,கசாய்,குலா,

குஞ்சிரா,லகேரி,மகிபரோஸ்,மலா,நலியா,நிகாரி

ஈ) ஹஜாம்,மூசோ,நகர்சி,நால்,பன்வாரியா,மடாரியா,டுன்லியா,

அப்தல்,பாகோ,பேடியா,பால்,சாம்பா,டபாலி,டோபி,


3 அர்சால் அல்லது இழிந்த மக்கள்

பனார்,ஹலால்கர்,கிஜரா,கச்பி,லால் பெக்கி,மவுக்தா,மெக்தார்......

அரபு சமூகத்தில் தோன்றிய நபி முகமது மற்றும் அவர்தம் குடும்ப, சமய வாரிசுகளின் தொடர்ச்சியாக மார்க்கப் பிரச்சாரகர்களாக இந்தியாவுக்கு வந்த வம்சாவழியினர் அஷ்ரபுகளாக குறிக்கப்படுகின்றனர். இந்திய வகைப்பட்ட இந்து சாதியமைப்புகளிலிருந்து மதம் மாறிய முஸ்லிம்கள் அஷ்ரப் அல்லாதவர்களாக கருதப்படுகின்றனர். அஷ்ரப் என்பதற்கு உயர்ந்தவர்கள், அரபு ரத்தம் ஓடும் முஸ்லிம்கள், உயர்சாதிகளிலிருந்து மதம் மாறியவர்கள் எனப் பொருள் கொள்ளப்படுகிறது....

சாதியமைப்பு,,,,,அஷ்ரபுகளின் கிளைப் பிரிவுகளாக சையதுகள், ஷேக்குகள், மொகல்கள், பதான்ஸ் அடையாளப்படுத்தப்படுகின்றனர். சையதுகள் நபிமுகமதுவின் வழித்தோன்றல்கள், ஷேக்குகள், அரபு, பாரசீக பூர்வீகத்தினர், மொகல்கள் துருக்கி, முகலாய ஆட்சிப் பரம்பரையினர், பதான்ஸ் ஆப்கானிஸ்தான், வடமேற்கு பகுதி பூர்வீகத்தினர்


அஷ்ரப் அல்லாதவர்களில் ஒரு பகுதியினர் அஜ்லபுகள் என்று அழைக்கப்படுகின்றனர். இந்து இடைநிலை சாதிகளிலிருந்து மதம் மாறியவர்கள் பாரம்பர்ய மூதாதையர் தொழிலை செய்து வரும் சமூகங்கள் தாழ்ந்தவர்கள், புனிதமற்றவர்கள் என்று இதற்கு அர்த்தம் கொள்ளப்படுகிறது.


முஸ்லிம்களிடத்தில் நிலவும் மற்றுமொரு அடிநிலை சாதிப்பிரிவாக அர்சால்கள் உள்ளனர். தீண்டத்தகாத சாதிகளிலிருந்து இஸ்லாத்திற்கு மதம் மாறியவர்களாக கருதப்படுகின்றனர். பிற முஸ்லிம்களால் ஒன்றென கருதப்படாதவர்கள், பள்ளிவாசலுக்குள் நுழைய உரிமை மறுக்கப்பட்டவர்கள், பொதுமையவாடியை பயன்படுத்த தடை செய்யப்பட்டவர்களாக இவர்கள் இருக்கின்றனர். துப்புரவாளர்கள், உணர் மண்ணெடுக்கும் வண்ணார், நாவிதர், கழிவு சுத்தம் செய்பவர் உள்ளிட்ட அடிநிலை தொழில் செய்யும் தலித் முஸ்லிம்களாக அடையாளம் கொள்ளப்படுகிறார்கள்...
(தொடரும்)

Anonymous
16:23

தெற்காசிய முஸ்லிம் சமூகங்களில், குறிப்பாக இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம் நாடுகளிலும் சாதீய படிநிலை கட்டமைப்பு உள்ளது வங்காளப் பகுதியில் குவாகஸ் குலம் சடங்கியல் ரீதியாக கீழ் படிநிலை அமைப்பினை கொண்டுள்ளது. மனிதக்கழிவுகளை சுத்தப்படுத்தும் தொழில் சார்ந்து நிறுவப்பட்ட சுத்தம் - அசுத்தம் கருத்தாகி அடிப்படையில் கீழ்நிலையினர்களாக சொல்லபடுகிறார்கள்


ஒஞ்சிசாத் உயர்சாதி மற்றும் நீச்சிசாத் அடிநிலை சாதி உறவுகளும், இயங்கு முறைகளும் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட வடிவத்திலேயே உள்ளன. அதிகார உரிமை கொண்ட உயர்சாதிக்குழுக்கள் ஜஜ் மன்ஸ் சலுகை பெறும் அடிநிலை வர்க்க சாதிக்குழுக்கள் காமின் (எனவும் வகைப்படுத்தப்பட்டுள்ளனர். உயர்நிலை சாதியினரை அடிநிலை சாதியினர் தொட்டுவிட்டால் குளித்தல் சடங்கின் மூலம் அசுத்தம், சுத்தமாகிவிடுகிறது. இருபிவினருக்கும் மையவாடிகளும் தனித்தனியாகவே உள்ளன.


வங்காள முஸ்லிம்களிடையே நிலவும் பொதுஉணவு மறுப்பு, பொதுமையவாடி மறுப்பு, அகமணமுறை, தீட்டுக் கொள்கை கூறுகல் டபலிஸ் சாதியினர் லால்பெகிஸ் மக்களிடமிருந்து தண்ணீரோ உணவோ வாங்கிச் சாப்பிட மறுத்துவிடுவார்கள். சையதுகள் மற்றும் ஷேக்குகள் என்பதான உயர்சாதி முஸ்லிம் ஆண், அடிநிலை சாதியாக கருதப்படும் பிரிவின் பெண்களை திருமணம் செய்துக் கொள்ளலாம். ஆனால் அடிநிலைப் பிரிவு முஸ்லிம் ஆண் உயர்சாதி முஸ்லிம் பெண்ணை திருமணம் செய்ய முடியாது. முதல் நிலை பிரிவு கலப்பு திருமணத்தில் பிறக்கும் குழந்தைகள் சையது சாதா மற்றும் ஷேக்சாதா என்று குறிக்கப்படுகின்றனர்......
(தொடரும்)

Anonymous
16:24

இந்தியாவில் சூபி மரபுகளை தோற்றுவித்த ஞானிகள் பெரும்பான்மையும் அரபு பூர்வீக உரிச்மையைக் கோரும் சையதுகளாகவே இருக்கிறார்கள் அரபு குறைஷி இனக்குழு தொடர்போ, அரபு பூர்வீகமும், நபிமுகமதுவின் வழித்தோன்றல் மரபோ அல்லது அரபு அல்லது பாரசீக பகுதியிலிருந்து வந்த அடையாளமோ, இந்தியாவிற்கு வந்த முஸ்லிம் ஆட்சியாளர் படைத்தலைவர் வாசுகளாகவோ சையதுகள், ஷேக்குகள், மொசல்கள், பதான்ஸ்கள் நால்வகை பிவினர்களும் அஷ்ரபுகளாக கருதப்படுகிறார்கள்.


ஷெரினாபட்டி மற்றும் இம்தியாஸ் அகமது ஆய்வொன்றில் அஷ்ரபு சாதியினர் தவிர்த்த அடித்தள முஸ்லிம்கள் பற்றி சுட்டிக்காட்டுகிறார். ஜ÷லாஹஸ் - நெசவாளர், தர்சிஸ் - தையலர், டோபிஸ் -வண்ணார் சாதியினர்களும் அடிநிலையில் நட்ஸ் எனப்படும் இறந்த மிருகங்களின் தோல்களிலிருந்து இசைக் கருவிகளை செய்பவர்களும் உள்ளனர்.


மேலும் இசைக் கலைஞர்களில் ஒரு பிவினரான மிராசிஸ் அஷ்ரபு உயர்சாதியினருக்காக, அவர்களைப்போல் உடையணிந்து பாவனை செய்து உருது மொழியில் கலைகளை நிகழ்த்தக் கூடியவர்களாகும். ஆனால் நட்ஸ் எனப்படுவோர் பொதுமக்கள் மத்தியிலும், வட்டார மொழி வழக்கிலும் இக்கலைகளை நிகழ்த்துகின்றனர்.


பஞ்சாபின் சிஸ்தி பாரம்பர்ய குலம் என்பதும் ஒரு வகையில் சாதியக் குழுவின் அடையாளமாகவே மாறியுள்ளது. இங்கு சூபி ஞானி பாபா பரீதுத்தீண்ட (1265) தர்காவை மட்டுமல்ல நிலங்கள் மற்றும் விவசாயத்தையும் தங்களின் கட்டுப்பாட்டிலேயே வைத்துள்ளனர். சூபி சகோதரத்துவ உணர்வை இசையின் மூலம் பரப்பும் கவாலி இசைக் கலைஞர்கள் ஆன்மீகத் தன்மை கொண்ட அவர்களின் கவாலிப் பாடல்கள், இசைக்கருவிகளின் ஓசைகள் அனைத்தையும் இசைக்கும் இவர்கள் சூபிமரபின் தொடர்பை போற்றினாலும் உண்மையிலேயே தீண்டத்தகாத இசைக்கலைஞர்களாக கருதப்பட்டார்கள்..........

உத்திரபிரதேசத்தில் முஸ்லிம் தீண்டத்தகாத சாதியாக கருதப்படும் பங்கிகள் கழிவு சத்தம் செய்பவர் பற்றி எழுதுகிறார். எவ்வளவு சுத்தமாக இருந்தாலும் பள்ளிவாசலுக்கு உள்ளோ, முஸ்லிம் ஞானிகளின் தர்காவிற்கு உள்ளோ பங்கிகளை நுழைய அனுமதிப்பதில்லை. முஸ்லிம் பங்கிகளுக்கு உள்ளே ஒரே உரிமை என்பது குர்ஆனை கற்றுக்கொள்ளலாம் என்பது மட்டுமே. ஆனால் அவர்கள் குர்ஆனை கற்றுக் கொடுப்பவர்கள் ஆக முடியாது. அஷ்ரபுகள், முஸ்லிம் ராஜபுத்திரர்களிடத்தில் பங்கிகள் தங்கள் பாத்திரத்திலேயே உணவு சாப்பிடவேண்டும். அது இல்லையெனில் மண்சட்டியில் மட்டுமே உணவு வழங்கப்படும். பங்கிகள் தண்ணீர் குடிக்கும்போதுகூட உதடுகள் ஜார்களில் பட்டுவிடக்கூடாது என்பதான வரைமுறைகளும் உண்டு..

காட்மண்டுவில் வாழும் அஷ்ரபுகள், காஷ்மீரிகள், சூபிஞானிகளின் கலாச்சார சடங்குகளை பேணுகின்றனர். ஆனால் பள்ளத்தாக்கில் வாழும் அடிநிலை முஸ்லிம்களுடனான உறவுகளை மறுக்கிறார்கள். ஹிந்துஸ்தானி என அழைக்கப்படும் இந்த முஸ்லிம்கள் பல்வேறு கைவினைத் தொழில் சாதி குழுக்களிலிருந்து வந்தவர்களாகும். பொதுவான பள்ளிவாசல்கள், மையவாடி இந்த முஸ்லிம்களுக்கு மறுக்கப்பட்டுள்ளது........

பார்த்தீர்களா..! ஹஸன் (கூத்தாநல்லூர்) உங்களது தகவலுக்கு வந்த மறுப்பினை...சொந்தக் காசுல சூனியம் வச்சுக்கிறது...ன்னு சொல்லுவாங்கல்ல... அது இதுதான்..அது மட்டுமில்ல...கிராமத்தில இன்னொரு பழமொழியும் உண்டு..தண்ணிக்குள்ளாற இருந்து ...சு விட்டாலும் அது தலைக்கு மேலதான் வரும்....ன்னு..நான்ந்தான் சொன்னேன்ல இது inter net காலம்ன்னு

பார்த்தீர்களா..! ஹஸன் (கூத்தாநல்லூர்) உங்களது தகவலுக்கு வந்த மறுப்பினை...சொந்தக் காசுல சூனியம் வச்சுக்கிறது...ன்னு சொல்லுவாங்கல்ல... அது இதுதான்..அது மட்டுமில்ல...கிராமத்தில இன்னொரு பழமொழியும் உண்டு..தண்ணிக்குள்ளாற இருந்து ...சு விட்டாலும் அது தலைக்கு மேலதான் வரும்....ன்னு..நான்ந்தான் சொன்னேன்ல இது inter net காலம்ன்னு

பார்த்தீர்களா..! ஹஸன் (கூத்தாநல்லூர்) உங்களது தகவலுக்கு வந்த மறுப்பினை...சொந்தக் காசுல சூனியம் வச்சுக்கிறது...ன்னு சொல்லுவாங்கல்ல... அது இதுதான்..அது மட்டுமில்ல...கிராமத்தில இன்னொரு பழமொழியும் உண்டு..தண்ணிக்குள்ளாற இருந்து ...சு விட்டாலும் அது தலைக்கு மேலதான் வரும்....ன்னு..நான்ந்தான் சொன்னேன்ல இது inter net காலம்ன்னு

ARUL
22:30

YOU R TRULY CORRECT GUJI.

ARUL
MALAYSIA

சரியாகச் சொன்னீர்கள்! என்னைப் பொருத்த மட்டில் மக்கள் பெருந்தலைவர் காமராஜர் சொன்னது போல் செம்மறியாடுகள் தான்!

Anonymous
16:30

Anonymous said... @thiyagarajan

முஸ்லிம்களின் ஜாதிகள்......


1 அஷ்ரப் அல்லது மேன்மக்கள்


அ) செய்ய்துகள்

ஆ) சேக்குகள்

இ) பதான்கள்

ஈ) மொகல்

உ) மாலிக்

ஊ) மிர்சா

2 அஜ்லப் அல்லது தாழ்ந்த மக்கள்

அனாமதேய(பெயரில்லாதவ)ரே!

நீண்ட விளக்கத்திற்கு நன்றி!
முதலில் "ஜாதிகள்" என்றால் என்னவென்று சற்று விளக்கமாக சொல்லுங்களேன்.

என்றும் அன்புடன்,
அ. ஹாஜாமைதீன்.

வேணாம் முஸ்லீம் நண்பர்களே ...இனிமேலும் முழு பூசணிக்காய சோத்துல மறைக்க முயற்சி பண்ணாதீங்க..இப்ப நீங்க கேட்ட ஜாதின்னா என்னான்னு நாங்க பதில் சொல்லுவோம்..அதுக்கு நீங்க ஏதாவது சப்ப கட்டு கட்டுவீங்க..அப்புறம் ஒங்க மதத்த,குரான்,ஹதீஸ ஒங்கள விட நல்லா படிச்சு தெளிந்த எங்க தமிழன் அண்ணாச்சி...எழில் அண்ணாச்சி வந்து பதில் சொல்லுவாங்க அப்புறம் இது வளந்துகிட்டே போகும்....ஒங்களுக்கு ரொம்ப சங்கடமா போகும்...வேணாம்...

barathan
22:30

வணக்கம் முகமதிய நண்பர்களே,

நன் ஒரு இந்து தற்போது சவூதி அரபியாவில் இருக்கிறேன். என்னோடு முஸ்லிம் நண்பர்களும் இருக்கிறார்கள் அவர்கள் அல்லாவிடம் மன்றாடினாலும்
சவுதி பெண்ணை திருமணம் செய்ய முடியாது.அப்படி செய்தாலும் அந்த பெண்ணோடு இந்தியா வரமுடியாது. இங்கே திருமணம் செய்ய கைவிடப்பட்ட பெண்களே கிடைப்பார்கள்.சவுதியை பொறுத்தவரை இந்தியன், பாகிஸ்தானி,பெங்காலி,இந்தோநேசி,ஸ்ரீலங்கன் இவர்கள் அனைவரும் அடிமைகளே.இங்கிருக்கும் பெண்களை (கைவிடப்பட்ட பெண்கள்) திருமணம் செய்தவர்கள் சாகும்வரை இங்கேதான் இருந்தாகவேண்டும் இதுதான் இங்கு நீதி .நண்பர்களே நம்நாட்டில் மட்டும் தான் அனைவரும் சமம்.தயவு செய்து நீங்கள் இந்தியர்களாக வாழுங்கள் (முயற்சி செய்யுங்கள்) இந்தயாவில் இருந்துகொண்டு அரபியர்களாக வாழாதீர்கள் உண்ட வீடிற்கு உபத்திரவம் செய்யாதீர்கள்.

Anonymous
23:17

நண்பர்களே அ. ஹாஜாமைதீன் என்பவர் இலங்கை முஸ்லிம்..அவர் இந்தியன் கிடையாது

Anonymous
21:26

@thiyagarajan.

சகோதரர் தியாகராஜன் அவர்களே!
வாயில் நுழையாத பெயரை எல்லாம் எழுதி 3 பின்னூட்டமிட்ட அந்த " அனாமதேயருக்கு" தான் "ஜாதிகள்" என்றால் என்னவென்று சற்று விளக்கமாக சொல்லுங்களேன் என, ஒரு வினா தொடுத்தேன், அனாமதேயருக்கு பதிலாக தாங்களோ......
//வேணாம் முஸ்லீம் நண்பர்களே........ இப்ப நீங்க கேட்ட ஜாதின்னா என்னான்னு நாங்க பதில் சொல்லுவோம்..// என பின்னூட்டமிட்டீர்கள் குறைந்த பட்சம் நீங்களாவது விளக்கம் கொடுத்திருக்கலாம்.

//இந்தியாவிலிருந்து செல்லும் ஒரு முஸ்லீம் ஒரு அரபு ஷேக் பெண்ணை திருமணம் செய்துகொள்ள முடியுமா...தலை இருக்குமா..??//

//மேலும் ஒரு இந்திய முஸ்லீம் அல்லது ஒரு பாகிஸ்தானிய,சோமாலிய முஸ்லீம் நிச்சயமாக ஒரு அரபு பெண்ணை நினைத்துக்கூட பார்க்க முடியாது //

என்ன நண்பரே, எல்லா பின்னூட்டத்திலும்
அரபு பெண்ணை கல்யாணம் செய்ய முடியுமா?
கல்யாணம் செய்ய முடியுமா?? என ஒரே தோசையை திருப்பி, திருப்பி போடுறீங்களே, inter net காலத்துல இருக்குற உங்களுக்கு மெய்யாலுமே இதுக்கு பதில் தெரியாது!!!??????


//ஒரே சலுகை யென்னவென்றால் தொழுகை செய்யும்போது மட்டுமே வேறுபாடு பார்க்க மாட்டார்கள்..//

இது சலுகை இல்லை சகோதரரே, " கடமை " ஒவ்வொரு முஸ்லிமிற்கும் உள்ள சமூக கடமை, இறைவனுக்கு முன் அனைவரும் சமம் என்பதை
விளங்கி சக முஸ்லிம்களுக்கு தரும் கண்ணியம்
அனைத்து முஸ்லிம்களுக்கும் இஸ்லாம் விதிக்கு கட்டுப்பாடு,

என்றும் அன்புடன்,
அ. ஹாஜாமைதீன்.

Anonymous
21:33

@barathan

barathan said... வணக்கம் முகமதிய நண்பர்களே,

// நன் ஒரு இந்து தற்போது சவூதி அரபியாவில் இருக்கிறேன். //

// சவுதியை பொறுத்தவரை இந்தியன், பாகிஸ்தானி, பெங்காலி,இந்தோநேசி,ஸ்ரீலங்கன் இவர்கள் அனைவரும் அடிமைகளே.//

சகோதரர் பரதன் அவர்களே!
நீங்க ஒரு சவூதி அடிமையா!!?, பாவம் கேட்கவே வருத்தமா இருக்கு, பணத்துக்கு ஆசபட்டு அடிமை தனத்தை ஏற்றுக் கொண்டு சவுதியில் சந்தோசமா இருக்கின்றீர்களே ஏன்???

நம் நாட்டில் மணப்பெண்ணிடமிருந்து, மணமகன்
வரதட்சனை வாங்குவது போல, சவூதியில் மணமகனிடமிருந்து, மணப்பெண் வரதட்சனை வாங்குவாள் என்பதை சொல்ல மறந்துட்டீங்களே??? பொழைக்க போன எடத்துல
எதுக்கு ராசா பொண்ண தேடனும்???

சரி சரி நீங்க, உண்ட (சவுதி) வீட்டிற்கு உபத்திரவம் செய்யாம, ஊரப்பக்கம் (இந்தியா) வந்து சேருங்க....

என்றும் அன்புடன்,
அ. ஹாஜாமைதீன்.

Anonymous
21:41

@Anonymous
Anonymous said... // நண்பர்களே அ. ஹாஜாமைதீன் என்பவர் இலங்கை முஸ்லிம்..அவர் இந்தியன் கிடையாது. //

அனாமதேயரே! என்னை இந்தியன் அல்ல என்று அந்நியன் ஆக்கிவிட்டீர்களே! எங்கேயாவது மரத்தடியில் எனது பெயருக்கு கிளி ஜோசியம் பார்த்தீர்களா???

இனத்தால் நான் இந்தியன்
மொழியால் நான் தமிழன்
இறை நம்பிக்கையில் இஸ்லாமியன்

என்றும் அன்புடன்,
அ. ஹாஜாமைதீன்.

Anonymous
21:33

நான் ஒரு இந்து.


Next Post Next Post Home
 
Back to Top