முத்தமிழ் மன்றம் இணையதளத்திலிருந்து சிவநிலா அம்மையார் யோகி ஸ்ரீ ராமானந்த குருவிடம் சில கேள்விகள் கேட்டிருந்தார் அந்தக் கேள்விகளும் அதற்கான குருஜியின் பதில்களும் இதோ உங்கள் முன்னால்...
|
- கடவுளின் படைப்பில் உடல் ஊனமுற்றவர்களும் உண்டு,அவர்களுக்கு உதவுபவர்களை ஒருசிலர் கடவுளே அவர்களுக்கு முற்பிறவியில் செய்த கொடுமைகளுக்கு தண்டனை வழங்கியுள்ளார்.நீங்கள் உதவி செய்து அத்தண்டனையை சரிவர நிறைவேற்ற விடாமல் செய்து மீண்டும் அவர்களை அடுத்தப் பிறவியிலும் இதுபோன்ற கஷ்டங்களை அனுபவிக்க வாய்ப்பளித்து விடாதீர்கள் எனக் கூறுகின்றனர்.இதைப் பற்றிய தங்களின் கருத்து என்ன?
ஏழைகளுக்கும் திக்கற்றவர்களுக்கும் உதவக்கூடாது என இந்துமதச் சாஸ்திரங்கள் எதுவும் கூறவில்லை அப்படி கூறியிருப்பதாக யாராவது சொன்னால் நிச்சயம் அவர்கள் இந்துமதத்தின் நிஜ விரோதியே ஆவார்கள் ஒருவனின் உதவியை பெறுவதன் மூலம் பிறவித்தளை தொடரும் என்றால் பலவிதமான தானங்களைப் பற்றி இந்து தர்மம் கூறுவானேன்? பிறவி பெறுங்கடலை நீந்திக் கடப்பதற்கு அக கட்டுப்பாட்டையும் புறவொழுக்கத்தையும் மட்டுமே வலியுருத்தும் நம்மதம் தானம் பெறுவதையோ தானம் இடுவதையோ தடையாக கூறவில்லை முத்திக்கு வழி சன்னியாச மார்க்கம் என அறிவுருத்தும் இந்துமதம் சன்னியாசிகளைக் கூட ஞான தானம் செய்ய சொல்வது ஏன்? மீண்டும் பிறவி எடுப்பதற்காகவா? எனவே இந்த கருத்து ஆதாரமற்றது
- தமக்குள்ளே மறைந்திருக்கும் இன்பத்தை அறியாமல் கோவில் கோவிலாகச் சென்று நிம்மதியைத் தேடும் மனிதர்களுக்கு தாங்கள் கூறும் ஆலோசனை என்னவோ?
சூரியனுக்கு நேராக முகம் பார்க்கும் கண்ணாடியை காண்பித்தால் அதிலிருந்து ஒரு பிரதிபலிப்பு வெளிச்சம் தோன்றும் பல நேரங்களில் பிரதிபலிப்பையே நிஜமென்று நம்பி வாழ்க்கை முழுவதும் ஏமாந்து போய்விடுகிறோம் வெளிச்சத்தை சூரியனால்தான் தரமுடியும் என்பது போலவே சந்தோஷம் நம்மனதிற்குள்தான் இருக்க வேண்டும் என்பதை உணர ஞானம் வேண்டும் அறிவை புத்தகத்தின் மூலம் பெற்று விடலாம் ஞானத்தை அனுபவம் மற்றும் உள்ளுணர்வு வழியாகத்தான் பெற முடியும் மனமானது ஒருநிலை படுகின்றவரை ஞானம் பிறக்காது எனவே கோயில் குளமெல்லாம் போகட்டும் அதில் தப்பில்லை ஆனால் உண்மையான தெளிவை பெற வேண்டுமென்றால் தினசரி கொஞ்ச நேரமேனும் தியானம் செய்யுங்கள் உங்களுக்குள் மறைந்திருக்கும் ஆனந்த ஸாகரத்தை தரிசிக்கலாம்
- அகால மரணம் அடைந்தவர்கள் ஆவியாக மாறி தங்களின் விருப்பம் நிறைவேறும்வரை ஆவியாகத் திரிகிறார்கள் என்ற ஒரு கருத்துக் கிராமப் புறங்களில் இருந்துவருகிறது.ஆவிகள் தொந்தரவால் பூஜை,மந்திரம் எனச் செய்து அவற்றை மண்கலயங்களில் அடக்கி குளத்திற்குள் புதைத்துவைத்து விடுவதாகவும் பின்னொருநாளில் குளத்து நீர் வற்றினால் மனையடியாக நிலத்தை உபயோகிக்கும் போது அந்த ஆவி திரும்பவும் வெளிவர வாய்ப்புள்ளது என்றேல்லாம் கருத்து நிலவி வருகிறது. இது எவ்வளவு தூரம் உண்மை.?அதைப் பற்றிய தங்களின் கருத்து என்ன?
அகால மரணமடைந்தவர்கள் தீய ஆவியாக மாறுவார்கள் என்பதை சாஸ்திரம் ஏற்றுக் கொள்ள வில்லை இன்னும் சொல்லப் போனால் கர்மா கொள்கைப்படி அகால மரணம் என்றே எதுவும் நிகழாது எல்லா மரணமுமே விதிப்படித்தான் நடைபெறுகிறது மேலும் மந்திர சாஸ்திரத்தின் படியோ தாந்ரீகப்படியோ பந்தனப்படுத்தப்பட்ட தீயசக்திகளை மண்ணில் புதைப்பது கிடையாது முடியாது இது தவறான தகவலால் ஏற்பட்டிருக்கும் ஆதாரமற்ற நம்பிக்கை
- ஒருவிதமான மனோவசியக் கலை பயின்றவர்கள் இறந்தவர்களுடன் பேசி அதாவது உறவு முறை ஆவி,நல்ல ஆவி என ஏதாவது ஆவிகளுடன் பேசி ஆலோசனை கூறுவதாக செய்திகள் இருந்துவருகின்றன. இந்தமாதிரி ஆலோசனைகள் ஆவிகளிடமிருந்து பெற முடியுமா?ஆவிகளில் நல்ல ஆவி கெட்ட ஆவி என இருக்கின்றனவா?தெளியப்படுத்துங்களேன்
ஆவிகளோடு பேசும் முறை விஞ்ஞானப்படி நிறுபிக்கப்பட வில்லை என்றாலும் எனது அனுபவத்தை பொறுத்தவரையில் உண்மை என்றே நம்புகிறேன் முன்னோர்களின் ஆத்மா மூலம் பல ஆலோசனைகளைப் பெறலாம் வாழ்க்கச் சவால்களை சமாளித்தும் கொள்ளலம் ஆவிகளில் நல்லவை கெட்டவை என்று உண்டு அது மனிதர்களின் இறப்பை பொறுத்து அமைவதில்லை வாழும் போது பெற்றிருக்கும் குணாதிசையத்தைப் பொறுத்தே அமைகிறது உதாரணமாக நல்லவன் ஒருவன் விபத்தில் இறந்துவிட்டாலும்கூட தீய ஆவியாக மாட்டான்
+ comments + 6 comments
ஆவிகள் குறித்த என் எண்ணம் இன்று படித்தவுடன் திருப்தியடைந்தது.
உஜிலாவைப் பற்றி சமீபத்தில்தான் கேள்விப் பட்டேன். உஜிலாவின் மற்ற பதிவுகளையும் இப்போதுதான் படித்து வருகிறேன்.
இதுவரை படித்த பதிவுகளில் இருந்து, உஜிலா எந்த ஒரு கேள்விக்கும் "BLACK & WHITE" விடையாக "YES (OR) NO" என்று தெளிவாக பதில் கூறத் தெரியாதவர், அல்லது, கழுவுகிற மீனில் நழுவுகிற ரகம் என்று தெரிகிறது.
ஆவிகளைப் பற்றி ஹிந்து மதம் என்ன சொல்கிறது? ஆவிகளைப் பற்றி ஹிந்து மதத்தின் நிலைப்பாடு என்ன? என்பதை ஹிந்து மத புனித நூல்களில் / வேதங்களில் இருந்து ஆதாரப் பூர்வமாக கட்டுரையாளர் கூறுவதற்கு பதிலாக, அவர் சொந்த கருத்தை - கணிப்பைத்தான் பட்டும் படாமலும் திணிக்கிறார்.
உதாரணமாக, ஆவியைப் பற்றிய அவரது முந்தைய பதிவைப் பாருங்கள்: http://ujiladevi.blogspot.com/2011/01/blog-post_30.html
உண்டா? இல்லையா?? என்று கூறுவதற்கு பதிலாக, ஒவ்வொரு வாக்கியத்திலும் எங்கு பார்த்தாலும், நாம் அறியலாம்... அமைந்து இருக்கிறது... நம்பிக்கையின் அடிப்படையில்தான்... மக்கள் கருதுகிறார்கள்... நம்பப்படுகிறது... இந்தோனேஷிய மக்களில் ஒரு பிரிவினரும் கருதுகிறார்கள்... என்றும் அவர்கள் நம்புகிறார்கள்... என்று கருதுகிறார்கள்... என்றுதான் முடிக்கிறார்.
போகிற போக்கில், வழக்கம்போல், கட்டுரையாளர், கிறிஸ்தவ மதத்தையும் இஸ்லாமிய மதத்தையும் தொட்டு வைக்க மறக்கவில்லை.
இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்ற நாடுகள் என்பது சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு ஒரே நாடுதான். எனவே, ஒரே நாடாக எண்ணிப்பார்த்தே இப்போதைக்கு பேசுவோம். அதாவது, இந்த நாடு(கள்) முழுக்க முழுக்க ஹிந்து மக்கள் வாழ்ந்த இடம்.
ஆயிரமாயிரம் ஆண்டுகள் சில பழக்கவழக்கங்களை செய்து பழக்கப்பட்ட மக்கள், சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு, கொள்கையின் அடிப்படையில் வேறு பிற மாற்று மதத்தை பின்பற்றினாலும், ஒரு சில பழக்கவழக்கங்கள் இன்னும் சற்று தொடரவே செய்கிறது. அவற்றில் சில, இறந்தவர்களின் சமாதிகளை தர்கா என்று, தேர் இழுப்பதை சந்தனக் கூடு என்று, தீர்த்தம் என்பதை நார்சா என்று அழைப்பது போன்றவை. (குறிப்பு: இந்த நம்பிக்கை - பழக்கவழக்கம் இஸ்லாமிலோ, கிறிஸ்தவத்திலோ அறவே கிடையாது. அவற்றில் அவ்வாறு கூறப்படவும் இல்லை).
மற்றபடி, "தர்க்காக்கள் என்று அழைக்கப்படும் அனைத்து இஸ்லாம் வழிபாட்டு இடங்களும் ஆவி வழிபாட்டுத் தலங்களே ஆகும்" என்பது கட்டுரையாளரின் சொந்தக் கற்பனை.
இன்னும் சொல்லப்போனால், ஆவிகள் மீது நம்பிக்கை வைப்பது, தர்கா வழிபாடு என்பது இஸ்லாத்திற்கு முற்றிலும் முரணானது.
சிலர் சட்டத்தை மீறினால், சட்டம் சரியல்ல என்று ஆகிவிடாது.
ஒருவன் "NO ENTRY" பாதையில் வாகனத்தை ஓட்டிச் செல்கிறான் என்றால், போக்குவரத்து சட்டங்கள் அனைத்துமே பொய் என்றாகி விடுமா?
இங்கு நான் ஹிந்து மக்கள் என்று என்று குறிப்பிட்டு இருப்பது, எல்லா ஹிந்து மக்களையும் ஒன்றாக கருதிதான்.
மற்றபடி, ஹிந்து என்றால் யார்? ஆரியரா? திராவிடரா?? என்று தேவையில்லாத சர்ச்சையை நாத்திக நண்பர்களோ, கம்யூனிச நண்பர்களோ தயவுசெய்து கிளப்ப வேண்டாம்.
ஆரோக்கியமான விவாதங்களே அறிவை வளர்க்கும். தேவையற்ற விதண்டாவாதங்கள் வீண் பகையையே வளர்க்கும் - அது நமக்கு வேண்டாமே நண்பர்களே!!
ராமதாஸ் போன்றவர்கள் இன்னும் திருந்த வேண்டும்
enaku oru uthavi veanum guruje
@Abdul Rahman
super nice sentence superly quoted/