( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )21 ஞாயிறு ஜூலை அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

வளையவும் மாட்டேன் மாறவும் மாட்டேன்...!


  கமங்கள் என்ற வார்த்தையை மத நூல்களும் மத பெரியவர்களும் பல முறை பயன் படுத்துகிறார்கள் நம்மில் பலருக்கு அதன் அர்த்தம் விளங்குவது இல்லை

மத கொள்கைகளை எளிமையாக விளக்குவதற்கும், வழிபாட்டு முறைகளை விரிவாக சொல்வதற்கும் எழுந்த நூல்களே ஆகமங்களாகும்.

  இந்து மதத்தில் உள்ள வைஷ்ணவம், சாக்தம், சைவம் ஆகிய முப்பெரும் பிரிவுகளுக்கு ஆகமங்கள் அடிப்படையாக அமைந்துள்ளன.


  சிவனை வழிபடுவோர்கள் இருபத்தியெட்டு ஆகமங்களை ஏற்று கொள்கிறார்கள்.

 அவைகளில் காமிகாகமம் என்பது மிகவும் முக்கியமானது.

 தமிழ்நாட்டு சைவ முறையாகிய சைவ சித்தாந்தமும், பிரத்திய பிஞ்சா முறையாகிய காஷ்மீர சைவமும் வேதங்களுக்கு கொடுக்கும் மரியாதையை ஆகமங்களுக்கும் கொடுக்கின்றன.

  சக்தி வழிபாட்டு முறைமைக்கு தந்திரங்கள் என்று சொல்லபடும் இருபத்தியேழு ஆகமங்கள் உள்ளன.

  சாக்த மதத்தினர் அன்னை பராசக்தியை உலக தாயாக கருதுகிறார்கள். 


 அத்தோடு அறிவுக்கு எட்டாத புலனுக்கு அகப்படாத சில வழிமுறைகளையும் போதிக்கிறார்கள்

  அந்த வழிமுறைகள் மந்திரம் சார்ந்ததாகவும், ஞானம் முக்தி, போன்றவற்றை தருவதாகவும் உள்ளன.

  இன்று சக்தி வழிபாடானது சிவ வழிபாட்டோடு கலந்து விட்டதனால் தந்திர ஆகமங்களுக்கும், சைவ ஆகமங்களுக்கும் தனித்தனியான வேற்றுமைகளை யாரும் கூறுவதில்லை.

  வைஷ்ணவர்கள் பாஞ்ச ராத்திர ஆகமங்களை பிரமாணா நூல்களாக கொண்டிருக்கிறார்கள்

.  இந்த ஆகமங்களை முழுமுதற் கடவுளான நாரயணனே நேரில் அருளியதாக நம்புகிறார்கள்.


  பொதுவாக ஆகமங்கள் சமய கொள்கைகளையும் வழிபாட்டு முறைகளையும் சொல்வதோடு அல்லாமல் ஆலய நிர்மானம், சமய சின்னங்கள், பக்தனின் லட்சணம் போன்றவைகளையும் விரிவாக பேசுகிறது. 

இன்றைய காலக் கட்டத்தில் ஆகம கொள்கைகள் மாற்றம் இல்லாமல் கடைபிடிக்கப் படுகிறது என சொல்லிவிட முடியாது.

  காலந்தோறும் பல மாறுதல்கள் ஆகம கருத்துக்களில் சேர்க்கப்பட்டுள்ளன என்பதை ஏற்று கொண்டு தான் ஆக வேண்டும்.


 நமது இந்து மதம் ஆயிரம் எதிர்ப்புகள் வந்தாலும் அழிவு சக்திகள் ஆக்ரோஷோத்தோடு மோதினாலும் நிலையாக நிலைத்து நிற்ப்பதற்கு அதன் மாறும் தன்மையே முக்கிய காரணம் ஆகும்

 வளைய மாட்டேன் மாற மாட்டேன் என்று புயல் காற்றோடு மோதி நின்றால் மரம் எப்படி ஒடிந்து விழுந்து விடுமோ அப்படியே நம் மதமும் என்றோ காணாமல் போயிருக்கும்

 அப்படி எதுவும் நிகழாமல் தாங்கி பிடித்து நிலை நிறுத்த ஆகமங்கள் எப்போதுமே துணை நிற்கிறது 

 

+ comments + 30 comments

ஆகமங்கள் என்றால் ஹிந்து சமூகத்தில் உள்ள மூன்று பெரிய பிரிவுகளான சைவம், வைணவம், மற்றும் சாக்தம் ஆகிய சமய கொள்கை விளக்கம் பற்றியும், மற்றும் வழிபாட்டு முறையும் பற்றிய நூல். இவை நமது தென் இந்தியாவிலேயே கடைப்பிடிக்க பட்டு வந்தாலும், சமஸ்கிரித மொழியிலேயே உள்ளன. ஆகமம் என்பது ஒரு வட மொழி சொல்லாகும். 9-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து சென்ற மாணிக்கவாசகர்கூட இது பற்றி சொல்லியுள்ளாரே!

மனிதன் இயற்றும் சட்டங்கள் காலத்துக்கு ஏற்றவாறு - சூழ்நிலைகளுக்கு தகுந்தவாறு வளைந்து நெளிந்து செல்லலாம்! காரணம், நேற்று இருந்த சூழல் இன்று இல்லை. நாளைய சூழல் இன்றுபோல இருக்குமா? என்பது மனித அறிவுக்கு புலப்படாது - தெரியாது.

ஆனால், முக்காலத்தையும் உணர்ந்த இறைவன் இயற்றிய சட்டங்கள் அவ்வாறு வலிந்து நெளிந்து செல்லலாமா??? பிறகு, சாதாரண மனிதனுக்கும், சர்வ சக்தி கொண்ட இறைவனுக்கும் என்னதான் வித்தியாசம்???

இறைவன் எக்காலத்தும் மனிதன் (சிலதகுதிகளைபெற்றிந்தவர்கள் )வாயிலாகவே எதையுமே மனிதனுக்காக வெளிப்படுத்தீருக்கிறான் .
அவர்களின் மொழி யின் மூலமாக. அதில் சிலவைகள் அரபியிலும் கிரேக்கத்திலும், பலவற்றை சமஸ்கிருதம் ஹிந்தி தமிழ் என வேறு வேறு மொழிகளிலும் வெளிப்படுத்த பட்டுள்ளன .....இனியும் வெளிப்படும் !.
இறைவனே காலத்திற்கும் ,மனிதர்களின் வாழும் தன்மைக்கும் ஏற்றவாறு பல வித்தியாசமான வற்றினை பல மதங்கள் வழியாக தொடர்ந்தும் தந்து கொண்டே இருக்கிறான் -மாற்றங்கள் அனுமதியமாகின்றன --தமிழ்மன்னன்

இறைவன் மனிதனைப் படைத்து, அந்த மனிதன் தன்னை (இறைவனை) வணங்க வேண்டும் என்ற நோக்கத்தில், இறைவன் என்றால் யார்? என்று விளக்கம் அளிக்க ஒரு தூதரையும் அம்மக்கள் மத்தியில் படைத்து அனுப்பியுள்ளான்.

ஒவ்வொரு சமூக மக்களுக்கும், ஒவ்வொரு பகுதிக்கும், ஒவ்வொரு கால கட்டத்திலும், இறைவன் தனது தூதர்களை படைத்து அனுப்பியுள்ளான்.

ஆனால், மக்களோ, அம்மாதிரியான தூதர்களை நிராகரித்து உள்ளனர். எனவே, அந்த மக்களை நம்ப வைப்பதற்காக, சாதாரண மனிதர்களுக்கு இல்லாத சில அற்புத சக்திகளை, இறைவன் அந்த தூதர்களுக்கு படைத்து அனுப்பினான். (உதாரணம்: அசாதாரணமான பலம், அறிவு, மந்திர சக்திகள் போன்ற சில). இதுபோன்ற நிலைகளில், அம்மக்கள் அந்த தூதர்களையே, இறைவனுக்கு மாறாக, இறைவனாகவே நினைத்து வணங்க - வழிபட தொடங்கினர். அவர்களுக்கு அவ்வளவுதான் அறிவு இருந்துள்ளது.

இவ்வளவு ஏன்? இந்த நவீன கம்ப்யூட்டர் யுகத்தில்கூட, காற்றில் இருந்து எதையோ வரவைக்கிறார்! வாயிலிருந்து எதையோ எடுக்கிறார்! என்றெல்லாம் நம்பும் இக்கால (கல்வியறிவு மற்றும் அறிவியல் நிரம்பிய இக்கால) மக்களே நம்பும்போது, பல ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கேட்கவே வேண்டாம்.

வெறும் ஏழே வார்த்தைகளில், அதுவும் வெறும் இரண்டே வரிகளில் பல பல விசயங்களை உள்ளடக்குவது என்பது, இந்த நவீன அறிவியல் காலத்தில்கூட சாத்தியம் இல்லாதது. ஆனால், அதை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் திருவள்ளுவர் சாத்தியம் என்று நிரூபித்து உள்ளார் என்றால், ஒருவேளை, திருவள்ளுவர்கூட, இறைவனின் அற்புத சக்தி படைத்த தூதுவராக இருந்திருக்க சாத்தியங்கள் உண்டு!! ஆனால், அதற்கான, ஆதாரங்கள்தான் நம்மிடம் இல்லை. நல்லவேளை, அவரை யாரும் கடவுளாக வழிபடவும் இல்லை.

சில அற்புதங்கள் செய்து காட்டிய இயேசு நாதரையே கடவுளாக கிறிஸ்தவர்கள் வழிபடுகிறார்கள். ஒரே ஒரு அற்புதம், அதுவும், கடைசி அற்புதம் (நிலவை இரண்டாக பிளந்து காட்டிய அற்புதம்) செய்த முஹம்மத் அவர்களை முஸ்லிம்கள் இன்றுவரை தூதராக மட்டுமே மதிக்கிறார்கள் - கடவுளாக வழிபடவில்லை.

Anonymous
12:54

maratha manithanai iraivan padaithana. marukinramanithanukku aetratpotthan seyatpadukalum mara vendum. illaiyel kulappam, kalavaram. maraviddal iyakkam illai

Anonymous
20:55

சக்தியை வழிபடு கடவுளாகக் கொள்ளும் சமயமே சாக்தம் ஆகும். சக்தியே தெய்வம், மற்ற தெய்வங்கள் கிடையாது என்பது இவர்களின் சமயக் கருத்தாகும். அவரைத் தாயாக வழிபட வேண்டும் என்ற கோட்பாட்டை உடையது.இச்சமயத்தினர் தங்களை சக்தி தாசர்கள் என்றும் அழைத்துக் கொள்வர். செவ்வாடை,குங்குமமும் அணியும் வழக்கம் இவர்களிடம் உண்டு.

இறைவன் நம் அனைவருக்கும் மூளையைக் கொடுத்துள்ளான். எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு என்று வள்ளுவர் சொல்கிறார். கடவுளே கூறியதாக இருந்தாலும் அது சரியா தவறா என்று ஆராய்ந்து பார்க்க இந்து மதம் கூறுகிறது. இரண்டாயிரம் ஆண்டுக்கு முன் ஒருவர் கூறியதை அப்படியே நம்பிக்கொண்டு என் மதம் மாறாத மதம் என்று கூறுவது முட்டாள்தனம். அப்படி பார்த்தால் எல்லா நாடுகளிலும் அனைத்து முஸ்லீம்களும் ஒரே வகையான வழிபாட்டுமுறைகளை, பழக்கவழக்கங்களை, சடங்கு சம்பிரதாயங்களைக் கொண்டு இருக்க வேண்டும். ஏன் அவர்களுக்குள் விதவிதமான வித்தியாசங்கள் இருக்கின்றன? ஷியா பிரிவினரின் வழிபாட்டை சன்னி பிரிவினர் ஏன் எதிர்க்கிறார்கள்.?

நான் சிறுவனாக இருந்தபோது இனிப்புகளை அதிகம் சாப்பிட்டேன். இப்போது எனக்கு நீரிழிவு. இனிப்புகளை சாப்பிடக்கூடாது. சாப்பிடாமல் இருந்தால் நான் அறிவாளி. சாப்பிட்டால் நான் முட்டாள். ஒரு காலத்தில் எனக்கு பிடித்த இனிப்பு இப்போது பிடிக்காமல் போய்விட்டது. இனிப்பை சாப்பிட வேண்டுமா வேண்டாமா என்று தீர்மானிக்க வேண்டியது நான். மற்றவர்கள் ஆலோசனை சொல்லலாம். செயல்படுத்துவது என்னுடைய விருப்பம். அவ்வாறே தெய்வங்களை வணங்குவதும். எந்த தெய்வத்தை, மதத்தை பின்பற்ற வேண்டும் என்பது அவரவர் விருப்பம். நான் இந்த வழிபாட்டுமுறையை பின்பற்றுகிறென். அதைத்தான் நீங்களும் பின்பற்ற வேண்டும் என்று மிரட்டுவது பண்புடைய மனிதன் செயல் இல்லை.

//வளைய மாட்டேன் மாற மாட்டேன் என்று புயல் காற்றோடு மோதி நின்றால் மரம் எப்படி ஒடிந்து விழுந்து விடுமோ அப்படியே நம் மதமும் என்றோ காணாமல் போயிருக்கும்//

இதுவே இந்து மதத்தின் சிறப்பாகும். எத்தனையோ பேர் இந்து மதத்தை கிண்டல் செய்தும் பழித்தும் தூற்றியும் இருந்தாலும் அதனால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை மாறாக நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே செல்கிறது. இந்து மதம் அழிந்து விடும் என்று சிலர் கூற படித்து இருக்கிறேன்.. அவர்கள் கூறுவதை எல்லாம் கேட்டால் சிரிப்பு தான் வருகிறது.

நாத்திகர்கள் அனைவரும் குறி வைப்பது இந்து மதத்தை தான்..அதற்க்கு காரணம் இங்கு தான் யாரும் எதையும் கண்டுகொள்வதில்லை..அதனால் கூறிக்கொண்டு இருக்கிறார்கள்.. அவ்வாறு கூறுபவர்களுக்கு தெரியவில்லை இவர்கள் கிண்டலாக கூறுவதையும் யாரும் பொருட்படுத்தவில்லை என்று.

Anonymous
11:22

@கிரி
//நாத்திகர்கள் அனைவரும் குறி வைப்பது இந்து மதத்தை தான்//

நண்பரே தமிழ்நாட்டில் நாத்திகம் பேசுபவர்கள் பெரும்பலானவர்கள் உண்மையான நாத்திகர்கள் இல்லை அந்த பரதேசிகள் போலி நாத்திகர்கள்.. அந்த போலி நாத்திக நாதாரிகள் கிறிஸ்துவர்களின் கூலி கும்பல்..அந்த போலி நாத்திக நாதாரிகள் கிறிஸ்துவர்களிடம் துட்டு வாங்கி கொண்டு நாத்திக முகமூடியில் இந்து மதத்தை விமர்சிக்கிறார்கள்..ஆனால் அந்த போலி நாத்திக நாதாரிகளால் இந்துகளிடம் ஒற்றுமை ஏற்பட்டுள்ளது..

Anonymous
21:41

@PAATTIVAITHIYAM
// கடவுளே கூறியதாக இருந்தாலும் அது சரியா தவறா என்று ஆராய்ந்து பார்க்க இந்து மதம் கூறுகிறது.//

சகோதரரே, இஸ்லாமும் இதையே தான் கூறுகிறது.

"அவர்கள் இந்த குர்ஆனை (கவனமாக) சிந்திக்க வேண்டாமா, (இது) அல்லாஹ் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால், இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள். "
(அல் குர் ஆன், அத்தியாயம் 4, வசனம் 82 )

// இரண்டாயிரம் ஆண்டுக்கு முன் ஒருவர் கூறியதை அப்படியே நம்பிக்கொண்டு என் மதம் மாறாத மதம் என்று கூறுவது முட்டாள்தனம்.//

ஆயிரத்து ஐநூறு ஆண்டுக்கு முன் ஒருவர் கூறியதை ஆய்ந்து பார்த்ததில் உண்மை என விளங்கியதால் ஏற்றுக் கொண்டேன், பிறகு என் மதம் மாறாத மதம் என்று கூறுவதில் என்ன தவறு உள்ளது? கொண்ட கொள்கையில் உறுதியுடன் இருப்பது முட்டாள் தனமா? அல்லது காலத்துக்கு காலம் (ஒத்து வரவில்லை என்பதால்)கொள்கைகளை மாற்றிக் கொண்டிருப்பது முட்டாள் தனமா???.

// அப்படி பார்த்தால் எல்லா நாடுகளிலும் அனைத்து முஸ்லீம்களும் ஒரே வகையான வழிபாட்டுமுறைகளை, பழக்கவழக்கங்களை, சடங்கு சம்பிரதாயங்களைக் கொண்டு இருக்க வேண்டும்.//

இஸ்லாமிய வழிபாட்டில் மிக முக்கியமானது தொழுகை, தினமும் ஐந்து நேரம் இறைவனை தொழ (வணங்க) வேண்டும் என்பது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கட்டளை, இதற்கு
மாற்றமாக எந்த நாட்டில் வித்தியாசமாக தினமும் 6வேளை தொழும், அல்லது 3வேளை தொழும், வழிபாட்டு முறைகளை கண்டீர்கள் என்பதை தாங்கள் தான் விளக்க வேண்டும்.

// பழக்கவழக்கங்கள், சடங்கு சம்பிரதாயங்கள் // தாங்கள் எதை கூறுகின்றீர்கள் என்பதை விளக்கினால் நல்லது.

// ஷியா பிரிவினரின் வழிபாட்டை சன்னி பிரிவினர் ஏன் எதிர்க்கிறார்கள்.?//

ஷியா, சன்னி, கொள்கை ரீதியாக பிரிந்தவர்கள், ஒருவர் மற்றவரின் வழிபாட்டை எதிர்ப்பது தவறானது.

என்றும் அன்புடன்,
அ. ஹாஜாமைதீன்.

@அ. ஹாஜாமைதீன்.,

//// கடவுளே கூறியதாக இருந்தாலும் அது சரியா தவறா என்று ஆராய்ந்து பார்க்க இந்து மதம் கூறுகிறது.//

சகோதரரே, இஸ்லாமும் இதையே தான் கூறுகிறது.//

5:101. ஈமான் கொண்டவர்களே! சில விஷயங்களைப்பற்றி (அவசியமில்லாமல்) கேட்டுக் கொண்டிராதீர்கள். (அவை) உங்களுக்கு வெளிப்படுத்தப்படுமானால் உங்களுக்கு (அது) தீங்காக இருக்கும்; மேலும் குர்ஆன் இறக்கப்படும் சமயத்தில் அவை பற்றி நீங்கள் கேட்பீர்களானால் அவை உங்களுக்குத் தெளிவாக்கப்படும்; (அவசியமில்லாமல் நீங்கள் விசாரித்ததை) அல்லாஹ் மன்னித்து விட்டான்; அல்லாஹ் மிக்க மன்னிப்போனும், மிக்க பொறுமை உடையோனுமாவான்.

5:102. உங்களுக்கு முன்னிருந்தோரில் ஒரு கூட்டத்தார் (இவ்வாறுதான் அவர்களுடைய நபிமார்களிடம்) கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்தார்கள்; பின்னர் அவர்கள் அவற்றை (நிறைவேற்றாமல்) நிராகரிப்பவர்களாகி விட்டார்கள்.
இஸ்லாம் கேள்வி கேட்க கூடாது என்கிறது.

//ஆயிரத்து ஐநூறு ஆண்டுக்கு முன் ஒருவர் கூறியதை ஆய்ந்து பார்த்ததில் உண்மை என விளங்கியதால் ஏற்றுக் கொண்டேன், பிறகு என் மதம் மாறாத மதம் என்று கூறுவதில் என்ன தவறு உள்ளது? கொண்ட கொள்கையில் உறுதியுடன் இருப்பது முட்டாள் தனமா? அல்லது காலத்துக்கு காலம் (ஒத்து வரவில்லை என்பதால்)கொள்கைகளை மாற்றிக் கொண்டிருப்பது முட்டாள் தனமா???. //
முட்டாள் தனமே.

இந்த புத்தகத்தில் ஒருவர் பிறந்து வளர்ந்து மடியும் எல்லா விஷயங்களும் இதில் , ஒருவர் பிறப்பதற்கு முன்பே எழுதி இருக்குமாமே.! அப்படியா? . அதை எழுதியது யார் அல்லாவா?

அப்படி என்றால் , அந்த புத்தகத்தில் எழுதி இருப்பதை மீறி ஒருவரால் நடக்க முடியாது அல்லவா? அப்படி நடந்தால் அது அல்லாவை எதிர்த்து நடப்பது போல் அல்லவா ஆகிவிடும்? என்று கேட்டேன்.

அதற்கு அந்த முஸ்லிம் கொடுத்த பதில்..
//தமிழன் அவர்களே உங்கள் மீது அந்த ஓரிறையின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக. உங்களுக்கு மரணம் என்று வரும் போதும் சரி எனக்கு மரணம் வரும் போதும் சரி நாம் கண்டிப்பாக அந்த மறுமை நாளை சந்திப்போம்.//

சரி , திரும்பவும் கேட்கிறேன். நான் நரகத்துக்கு போவேன் என்று அல்லா அந்த புத்தகத்தில் எழுதி இருந்தால் - நான் என்ன செய்தாலும் சுவர்கத்துக்கு போக முடியாது. அதையும் மீறி முகமதுவின் சிபாரிசால் / மற்றும் அல்லாவின் கருணையால் நான் சுவர்க்கத்துக்கு சென்றால். அந்த புத்தகத்தில் எழுதி இருப்பது தவறான ஒன்றாக மாறிவிடும். இந்த கிறுக்குதனத்தை என்ன என்று சொல்ல....
முதலில் இதற்கு பதில் சொல்லுங்கள்.

//ஷியா, சன்னி, கொள்கை ரீதியாக பிரிந்தவர்கள், ஒருவர் மற்றவரின் வழிபாட்டை எதிர்ப்பது தவறானது.//
அது என்ன கொள்கை -- கொஞ்சம் விளக்கமாக கூறவும்.

Anonymous
23:28

@தமிழன்
நண்பரே சில நாட்களாக உங்களை காணவில்லையே.உங்களுடைய பின்னுடங்கலினால் பலர் தெளிந்துள்ளார்கள்.தொடரட்டும் உங்கள் விழிப்புணர்வு பிரசாரம்..வாழ்த்துக்கள்

குரானில் முகமது வாள் எடுத்துக்கொண்டு போரில் எதிரிகளை வெட்டினார். தன் தொண்டர்களை வெட்டச்சொன்னார். துப்பாக்கி எடுத்து சுட்டுக்கொல்ல சொல்லவில்லை. ஆனால் இன்றைய ஜிகாதிகள் துப்பாக்கியையும் வெடிகுண்டுகளையும் தூக்கிக்கொண்டு அலைகிறார்கள். முகமது சொன்னது போல் வாளைத்தூக்கிக்கொண்டு போரிட்டால் மண்ணாகிவிடுவார்கள். காலத்திற்கேற்றபடி நவீன ஆயுதங்களைத்தானே பயன்படுத்துகிறார்கள்.

ஆயிரத்து ஐநூறு ஆண்டுக்கு முன் ஒருவர் கூறியதை ஆய்ந்து பார்த்ததில் உண்மை என விளங்கியதால் ஏற்றுக் கொண்டேன், பிறகு என் மதம் மாறாத மதம் என்று கூறுவதில் என்ன தவறு உள்ளது?
நீங்கள் ஆராய்ந்து பார்த்த லட்சணம் அவ்வளவுதான். நன்றாக ஆராய்ந்து அலி சினா அவர்கள் எழுதியுள்ள புத்தகத்தைப் படித்துப் பாருங்கள். விலை 920 ரூபாய். www.alisina.org என்ற இணையதளத்தில் சென்று பாருங்கள்.

சடங்குகள் சம்பிரதாயங்கள் என்பது குழந்தை பிறந்தவுடன் பெயரிடும் சடங்கு, திருமணத்தில் தாலிகட்டுதல் போன்ற சடங்குகள் உலகத்தில் உள்ள எல்லா முஸ்லீம்களாலும் ஒரே மாதிரியாக பின்பற்றப்படுகிறதா?

Anonymous
23:11

@Tamilan

// இஸ்லாம் கேள்வி கேட்க கூடாது என்கிறது, தமிழன்.//

மேலும் அவர்கள் இந்தக் குர்ஆனை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா? அல்லது அவர்கள் இருதயங்கள் (இருக்கின்றனவே) அவற்றின் மீது பூட்டுப் போடப்பட்டு விட்டனவா?
(அல் குர் ஆன், அத்தியாயம் : 47 வசனம் : 24 )

'இறைத்தூதர் அவர்களே! இஸ்லாத்தில் சிறந்தது எது?' என்று நபித்தோழர்கள் கேட்டதற்கு
'எவருடைய நாவிலிருந்தும் கரத்திலிருந்தும் பிற முஸ்லிம்கள் பாதுகாப்புப் பெற்றிருக்கிறாரோ அவரின் செயலே சிறந்தது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" என அபூ மூஸா(ரலி) அறிவித்தார். புகாரி:பாகம் 1, அத்தியாயம் 2, எண் 11

'ஒருவர் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம்
'இஸ்லாத்தில் சிறந்தது எது' எனக் கேட்டதற்கு, '(பசித்தோருக்கு) நீர் உணவளிப்பதும் நீர் அறிந்தவருக்கும் அறியாதவருக்கும் ஸலாம் கூறுவதுமாகும்' என்றார்கள்" என அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்.
புகாரி:பாகம் 1, அத்தியாயம் 2, எண் 12

'நபி(ஸல்) அவர்கள் தங்களின் இறுதி ஹஜ்ஜின்போது மினாவில் நின்றிருந்தார்கள். மக்கள் அவர்களிடம் கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்தனர். அப்போது ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து 'நான் மார்க்கச் சட்டங்கள் அறிந்தவனல்ல. எனவே, மினாவில் குர்பானி கொடுப்பதற்கு முன் என் தலைமுடியைக் களைந்து விட்டேன்' என்றார். அதற்கவர்கள்
'பரவாயில்லை; நீர் இப்போது குர்பானி கொடுக்கலாம்' என்றார்கள். அப்போது இன்னொருவர் நான் அறியாதவன் எனவே, கல் எறிவதற்கு முன்பே நான் குர்பானி கொடுத்து விட்டேன்' என்றார். அதற்கு நபியவர்கள் 'பரவாயில்லை; எறிந்து கொள்ளும்!' என்றார்கள். முந்தியோ பிந்தியோ செய்துவிட்டதாகக் கேட்கப்பட்ட போதெல்லாம்
'பரவாயில்லை! செய்து கொள்ளுங்கள்' என்றே பதில் கூறிக் கொண்டிருந்தார்கள்"என அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னி ஆஸ்(ரலி) அறிவித்தார். புகாரி: பாகம் 1, அத்தியாயம் 3, எண் 83

'உம்முஸுலைம்(ரலி) என்ற பெண்மணி நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! நிச்சயமாக அல்லாஹ் சத்தியத்தை எடுத்துச் சொல்வதற்கு வெட்கப்படுவதில்லை. ஒரு பெண்ணுக்கு ஸ்கலிதமானால் அவளின் மீது குளிப்பு கடமையாகுமா?' என்று கேட்டதற்கு 'ஆம்! அவள் நீரைக் கண்டால்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (இதைக் கேட்டுக் கொண்டிருந்த) உம்மு ஸலமா(ரலி) தம் முகத்தை (வெட்கத்தால்) மூடிக் கொண்டு, 'பெண்களுக்கும் ஸ்கலிதம் ஏற்படுமா' என்று கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள், 'நன்றாய் கேட்டாய்! ஆம்! அப்படி இல்லையென்றால் அவளுடைய குழந்தை எதனால் அவளைப் போன்றும் இருக்கிறது?' என்று கேட்டார்கள்" என ஸைனப் பின்து உம்மு ஸலமா(ரலி) அறிவித்தார்.
புகாரி: பாகம் 1, அத்தியாயம் 3, எண் 130


என்றும் அன்புடன்,
அ. ஹாஜாமைதீன்.

Anonymous
23:15

// இஸ்லாம் கேள்வி கேட்க கூடாது என்கிறது, தமிழன் Said...//

பகுதி : 2
அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார் நான் நபி(ஸல்) அவர்களிடம், 'அல்லாஹ்விடம் பாவங்களில் மிகப் பெரியது எது?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'அல்லாஹ் உன்னைப் படைத்திருக்க, அவனுக்கு நீ இணை கற்பிப்பது' என்று கூறினார்கள். நான், 'நிச்சயமாக அது மிகப் பெரிய குற்றம் தான்' என்று சொல்லிவிட்டு, 'பிறகு எது?' என்று கேட்டேன். 'உன் குழந்தை உன்னுடன் (அமர்ந்து உன் உணவைப் பங்குபோட்டு) உண்ணும் என அஞ்சி அதனை நீ கொல்வது' என்று கூறினார்கள். நான், 'பிறகு எது?' என்று கேட்க, அவர்கள், 'உன் அண்டை வீட்டானின் மனைவியுடன் நீ விபசாரம் செய்வது' என்று கூறினார்கள்.
புகாரி: பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4477


(A ) 'நஜ்த் என்ற ஊரைச் சார்ந்த ஒருவரை தலை பரட்டையாக நபி(ஸல்) அவர்களிடம் வந்தார். அவரின் குரல் செவியில் ஒலித்தது. ஆனால் அவர் என்ன சொல்கிறார் என்பது புரியவில்லை. நபி(ஸல்) அவர்களின் அருகில் வந்ததும் இஸ்லாத்தைப் பற்றிக் கேட்டார். அப்போது நபி(ஸல்) அவர்கள் 'இஸ்லாம் (என்பது) இரவிலும் பகலிலும் ஐவேளைத் தொழுகைகள்" என்றார்கள். உடனே அவர் 'அத்தொழுகையைத் தவிர வேறு (தொழுகை) ஏதாவது என் மீது கடமை உண்டா?' என்றார். அதற்கவர்கள் 'நீர் விரும்பிச் செய்தாலே ஒழிய வேறு இல்லை" என்றார்கள்.
தல்ஹா இப்னு உபைதுல்லாஹ்(ரலி) அறிவித்தார்.
புகாரி: பாகம் 1, அத்தியாயம் 2, எண் 46

(B ) பேரீச்ச மட்டை ஒன்றைக் கையில் ஊன்றியவர்களாக, நபி(ஸல்) அவர்கள் மதீனாவில் மக்கள் சஞ்சாரம் இல்லாத ஒரு பாழ் வெளியில் சென்றபோது அவர்களுடன் நானும் சென்று கொண்டிருந்தேன். அப்போது யூதர்களின் குழு ஒன்றை அவர்கள் கடந்து சென்றார்கள். அப்போது அவர்களில் ஒருவர் மற்றவரிடம் 'ரூஹை
(உயிர்) பற்றி அவரிடம் கேளுங்கள்' என்றார். அவர்களின் இன்னொருவர் 'அவரிடம் அதைப் பற்றிக் கேட்காதீர்கள்; உங்களுக்குப் பிடிக்காத எதையும் அவர் சொல்லப் போவதில்லை' என்றார். அவர்களில் மற்றொருவரோ, '(இல்லை!) இறைவன் மீது ஆணையாக நாம் (அதைப் பற்றி) அவரிடம் கேட்டே விடுவோம்' என்றார். (முடிவில்) அவர்களில் ஒருவர் எழுந்து, 'அபுல் காஸிம் அவர்களே! ரூஹு என்றால் என்ன? என்று கேட்டார். புகாரி: பாகம் 1, அத்தியாயம் 3, எண் 125

(C ) அனஸ்(ரலி) அறிவித்தார்
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (மதீனாவுக்கு) வந்திருக்கும் செய்தி (யூத அறிஞராயிருந்த) அப்துல்லாஹ் இப்னு சலாம் அவர்களுக்கு, அவர்கள் ஒரு (தோட்ட) நிலத்தில் பழம் பறித்துக் கொண்டிருந்தபோது எட்டியது. உடனே அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் வந்து,
'தங்களிடம் நான் மூன்று விஷயங்களைப் பற்றிக் கேட்கப் போகிறேன். அவற்றை ஓர் இறைத்தூதர் மட்டுமே அறிவார்' என்று கூறினார்கள். பிறகு, '1. இறுதி நாளின் அடையாளங்களில் முதலாவது அடையாளம் எது? 2. சொர்க்கவாசிகள் உண்ணும் முதல் உணவு எது? 3. குழந்தை தன் தந்தையின் சாயலில், அல்லது தாயின் சாயலில் இருப்பது எதனால்?' என்று கேட்டார்கள்.
புகாரி: பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4480

(D )நபி(ஸல்) அவர்களிடம் (கல்லெறியும் இடமான) ஜம்ரத் என்ற இடத்தில் கேள்வி கேட்கப்பட்டதை கண்டேன். அப்போது ஒருவர் 'இறைத்தூதர் அவர்களே!
நான் (கல்) எறிவதற்கு முன்பே (பிராணியைப்) பலியிட்டு விட்டேன்' என்றார், அதற்கவர்கள்
குற்றமில்லை; இப்போது கல்லெறிந்து விடும்" என்றார்கள். அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்.
புகாரி: பாகம் 1, அத்தியாயம் 3, எண் 124

குறிப்பு: (A , B , C,D ) நீண்ட ஹதீஸின் சிறு பகுதியை மட்டும் இங்கு குறிப்பிட்டுள்ளேன்.) இத்தனை ஹதீஸ்களை எதற்காக கொடுத்துள்ளேன் என தமிழன் என்ற பெயரில் ஒளிந்துள்ளவருக்கு புரிந்தால் சரி.

என்றும் அன்புடன்,
அ. ஹாஜாமைதீன்.

Anonymous
23:18

//ஆயிரத்து ஐநூறு ஆண்டுக்கு முன் ஒருவர் கூறியதை ஆய்ந்து பார்த்ததில் உண்மை என விளங்கியதால் ஏற்றுக் கொண்டேன், பிறகு என் மதம் மாறாத மதம் என்று கூறுவதில் என்ன தவறு உள்ளது? கொண்ட கொள்கையில் உறுதியுடன் இருப்பது முட்டாள் தனமா? அல்லது காலத்துக்கு காலம் (ஒத்து வரவில்லை என்பதால்)கொள்கைகளை மாற்றிக் கொண்டிருப்பது முட்டாள் தனமா???.//
முட்டாள் தனமே. தமிழன் said...

அய்யா தமிழன் அவர்களே, ஒத்த வரியில் முட்டாள் தனமே என பதில்கூறி இருக்கிறீர்களே,
காலத்துக்கு காலம் (ஒத்து வரவில்லை என்பதால்)கொள்கைகளை மாற்றிக் கொண்டிருப்பது முட்டாள் தனமா??? என நான் கேட்டது இந்து மதத்தைப் பற்றி உங்களது பதிலும்
அதற்குத்தானே.

என்றும் அன்புடன்,
அ. ஹாஜாமைதீன்.

ஹாஜாமைதீன் அவர்களே ,

நான் உங்கள் இடத்தில் ஒரு கேள்வி கேட்க வேண்டும் அதாவது குரான் படி வாழ்ந்தால் மட்டுமே சொர்கமோ அல்லது அல்லாவையோ அடைய முடியும் என்றால் இந்த உலகில் அடர்ந்த காட்டில் வாழும் எத்தனையோ ஆதி வாசிகளின் நிலை என்ன ? அவர்களுக்கு உங்கள் குரானை பற்றி எதுவும் தெரியாது அவர்களுக்கு தெரிந்தெல்லாம் இயற்க்கை ஒன்றே.... அதையே அவர்கள் இறைவனாக வழிபடுகிறார்கள் .....இது அவர்கள் குற்றமும் அல்ல ஏன் என்றால் அல்லா அங்கே ஒரு நபியை பிறவி செய்யவில்லை அவர்களுக்கென்று வேதமும் அழிக்க வில்லை எனவே அவர்கள் வேதங்களின் படி வாழவும் இல்லை ...அப்படி இருக்க அவர்களும் மறுமை நாளில் தண்டிக்க படுவார்களா ? .. அவர்களுக்கு தண்டனை வழங்கினால் அவருக்கு பெயர் இறைவனா? .....

இப்படிக்கு ,
சங்கர் சேட்

Anonymous
11:06

தமிழன் என்ற பெயரில் ஒளிந்துள்ளவரே!

தமிழன் said.....
// இந்த புத்தகத்தில் ஒருவர் பிறந்து வளர்ந்து மடியும் எல்லா விஷயங்களும் இதில் , ஒருவர் பிறப்பதற்கு முன்பே எழுதி இருக்குமாமே.! அப்படியா? . அதை எழுதியது யார் அல்லாவா? //

// அப்படி என்றால் , அந்த புத்தகத்தில் எழுதி இருப்பதை மீறி ஒருவரால் நடக்க முடியாது அல்லவா? அப்படி நடந்தால் அது அல்லாவை எதிர்த்து நடப்பது போல் அல்லவா ஆகிவிடும்? என்று கேட்டேன். //

// சரி , திரும்பவும் கேட்கிறேன். நான் நரகத்துக்கு போவேன் என்று அல்லா அந்த புத்தகத்தில் எழுதி இருந்தால் - நான் என்ன செய்தாலும் சுவர்கத்துக்கு போக முடியாது. அதையும் மீறி முகமதுவின் சிபாரிசால் / மற்றும் அல்லாவின் கருணையால் நான் சுவர்க்கத்துக்கு சென்றால். அந்த புத்தகத்தில் எழுதி இருப்பது தவறான ஒன்றாக மாறிவிடும். இந்த கிறுக்குதனத்தை என்ன என்று சொல்ல....
முதலில் இதற்கு பதில் சொல்லுங்கள். //

நண்பரே! இஸ்லாம் கூறும் ஏக இறைவனை, ஏதோ இந்து மத கடவுள் ரேஞ்சுக்கு நினைத்துக் கொண்டு நீங்கள் எழுப்பி இருக்கும் கேள்வி உங்களது அறியாமையை வெளிச்சம் போட்டு காட்டுகிறது,
"வரம் கொடுத்த சாமியின் தலையில் கை வைக்க முயன்ற கதை எல்லாம்" இஸ்லாத்தில் கிடையாது, அல்லாஹ்வின் புத்தகம்
என்பது நமது அரசியல் சாசனம் போன்றதல்ல தேவைக்கேற்ப அடித்து திருத்தி மாற்றி எழுத.

நீங்கள் எங்கே ஆரம்பித்து, எப்படி முடிப்பீர்கள் என்பதைக்
கூட அறியாதவன் நிச்சயமாக
கடவுளாக இருக்க முடியாது, இஸ்லாம் அறிமுகப்படுத்தும் இறைவன் இது போன்ற மனித பலகீனங்களுக்கு அப்பாற்பட்டவன் என்பதை தாங்கள் புரிந்து கொள்வது நன்று.

பூமியிலோ, அல்லது உங்களிலோ சம்பவிக்கிற எந்தச் சம்பவமும் - அதனை நாம் உண்டாக்குவதற்கு முன்னரே (லவ்ஹுல் மஹ்ஃபூள்) ஏட்டில் இல்லாமலில்லை; நிச்சயமாக அது அல்லாஹ்வுக்கு மிக எளிதானதேயாகும்.
அல் குர் ஆன்: அத்தியாயம் 57: வசனம் 22.)

சிந்திக்கும் ஆற்றல் உள்ள மனிதன் என்னவெல்லாம் செய்வான் என்பதை தன் ஞானத்தால் அறிந்தவன்
இறைவன், இஸ்லாத்தின்
கடவுள் கொள்கையைப் பற்றி
என்னவென்றே விளங்காமல் //இந்த கிறுக்குதனத்தை என்ன என்று சொல்ல....// என எழுதும் உங்களைப் பார்த்து சிரிப்புதான் வருகிறது நண்பரே!.

என்றும் அன்புடன்,
அ. ஹாஜாமைதீன்.

@ ஹாஜாமைதீன் அவர்களே ,

நீங்கள் நான் கேட்ட கேள்விக்கு இன்னும் பதில் தரவில்லை ...உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன் ...

எனது கேள்வி இதோ ...

"அதாவது குரான் படி வாழ்ந்தால் மட்டுமே சொர்கமோ அல்லது அல்லாவையோ அடைய முடியும் என்றால் இந்த உலகில் அடர்ந்த காட்டில் வாழும் எத்தனையோ ஆதி வாசிகளின் நிலை என்ன ? அவர்களுக்கு உங்கள் குரானை பற்றி எதுவும் தெரியாது அவர்களுக்கு தெரிந்தெல்லாம் இயற்க்கை ஒன்றே.... அதையே அவர்கள் இறைவனாக வழிபடுகிறார்கள் .....இது அவர்கள் குற்றமும் அல்ல ஏன் என்றால் அல்லா அங்கே ஒரு நபியை பிறவி செய்யவில்லை அவர்களுக்கென்று குரானும் கொடுக்கவில்லை எனவே அவர்கள் குரான் படி வாழவும் இல்லை ...அப்படி இருக்க அவர்களும் மறுமை நாளில் தண்டிக்க படுவார்களா ? .. அவர்களுக்கு தண்டனை வழங்கினால் அவருக்கு பெயர் இறைவனா? ....."

Anonymous
21:31

சகோதரர் சங்கர் அவர்களே,

நலமுடன் இருக்கின்றீர்களா, சகோதரர் தமிழனின் கேள்விக்குரிய பதிலை பதிவு செய்த உடன் வேறு சில அலுவல்களின் காரணத்தால், இனையத்தை விட்டு சென்று விட்டேன், மீண்டும் தற்போது வந்த போதுதான் தாங்களது இரண்டு பின்னூட்டங்களையும் கண்டேன், தாங்களது முதல் பின்னூட்டத்திற்கும், எனது பின்னூட்டத்திற்கும் "ஏழு நிமிட" வித்தியாசம் உள்ளது, அதாவது நாம் இருவரும் அந்த நேரத்தில்
உஜிலா வலைப்பூவில் இருந்துள்ளோம், தொடர்ந்து நான் வலைப்பூவில் இருந்து கொண்டு தாங்களது வினாவிற்கு விடையளிக்கவில்லை
என நினைத்து இரண்டாவது பின்னூட்டத்தை
இட்டுள்ளீர்கள் என நினைக்கின்றேன், சரி விசயத்திற்கு வருவோம்.....

// "அதாவது குரான் படி வாழ்ந்தால் மட்டுமே சொர்கமோ அல்லது அல்லாவையோ அடைய முடியும் என்றால் இந்த உலகில் அடர்ந்த காட்டில் வாழும் எத்தனையோ ஆதி வாசிகளின் நிலை என்ன ? அவர்களுக்கு உங்கள் குரானை பற்றி எதுவும் தெரியாது அவர்களுக்கு தெரிந்தெல்லாம் இயற்க்கை ஒன்றே.... அதையே அவர்கள் இறைவனாக வழிபடுகிறார்கள் .....இது அவர்கள் குற்றமும் அல்ல ஏன் என்றால் அல்லா அங்கே ஒரு நபியை பிறவி செய்யவில்லை அவர்களுக்கென்று குரானும் கொடுக்கவில்லை எனவே அவர்கள் குரான் படி வாழவும் இல்லை ...அப்படி இருக்க அவர்களும் மறுமை நாளில் தண்டிக்க படுவார்களா ? .. அவர்களுக்கு தண்டனை வழங்கினால் அவருக்கு பெயர் இறைவனா? ....." //

சிந்திக்க வேண்டிய அருமையான கேள்வி, இதற்குரிய பதிலை குர் ஆனிலிருந்தே தருவது தான் சிறப்பு.

எகிப்தை ஆண்டு வந்த இரண்டாம் ரமேஸஸ் என்ற பாரோ மன்னனிடம் ஒரே கடவுளைப் பற்றி எடுத்து கூறுவதற்காக இறைவனின் தூதர் மோஸே என்கிற மூஸாவும், அவருக்குத் துணையாக அவரின் தம்பி ஹாரூனும் சென்றனர், அவர்களிடம் (ஃபிர்அவ்ன் என்ற) அந்த பாரோ மன்னன் கேட்ட அதே கேள்வியை சற்று மாற்றிக் கேட்டுள்ளீர்கள், இறைத்தூதர் மூஸா கூறியதாக அல்லாஹ் குர் ஆனில் குறிப்பிடும் அந்த
வசனத்தையே உங்களுக்கு பதிலாக தருகின்றேன்.

(இதற்கு ஃபிர்அவ்ன்) "மூஸாவே! உங்களிருவருடைய இறைவன் யார்?" என்று கேட்டான்.

"ஒவ்வொரு பொருளுக்கும் அதற்கான அமைப்பை வழங்கி பின்னர் வழிகாட்டியிருக்கிறனே அவன்தான் எங்கள் இறைவன்" என்று கூறினார்.

"அப்படியென்றால் முன் சென்ற தலைமுறைகளின் நிலைமை என்ன?" என்று கேட்டான்.

"இது பற்றிய அறிவு என்னுடைய இறைவனிடம் (பதிவுப்) புத்தகத்தில் இருக்கிறது என் இறைவன் தவறுவதுமில்லை மறப்பதுமில்லை" என்று (மூஸா பதில்) சொன்னார்.
அல் குர் ஆன், அத்தியாயம் : 20௦ வசனங்கள் : 49
முதல் 52 வரை)


என்றும் அன்புடன்,
அ. ஹாஜாமைதீன்.

@அ. ஹாஜாமைதீன், வணக்கம் நண்பரே நலமா.

// இஸ்லாம் கேள்வி கேட்க கூடாது என்கிறது, தமிழன்.

மேலும் அவர்கள் இந்தக் குர்ஆனை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா? அல்லது அவர்கள் இருதயங்கள் (இருக்கின்றனவே) அவற்றின் மீது பூட்டுப் போடப்பட்டு விட்டனவா?
(அல் குர் ஆன், அத்தியாயம் : 47 வசனம் : 24 )

தானே ஆப்பு அடித்து கொள்வது என்பது இது தான்.

47:20. இன்னும், ஈமான் கொண்டவர்கள் கூறுகிறார்கள்: “(புனிதப் போர் பற்றி) ஓர் அத்தியாயம் இறக்கி வைப்படவேண்டாமா?” என்று. ஆனால் உறுதிவாய்ந்த ஓர் அத்தியாயம் இறக்கப்பட்டு அதில் போர் புரியுமாறு பிரஸ்தாபிக்கப் பட்டால், எவர்களுடைய இருதயங்களில் (நயவஞ்சக) நோய் இருக்கிறதோ அவர்கள் மரண (பய)த்தினால் தனக்கு மயக்கம் ஏற்பட்டவன் நோக்குவது போல் உம்மை நோக்குவதை நீர் காண்பீர்! ஆகவே, இத்தகையவர்களுக்குக் கேடு தான்.

47:21. (ஆகவே, இறைதூதருக்கு) வழிபட்டு நடப்பதும், நன்மையான சொல்லுமே (மேலானதாகும்) எனவே, ஒரு காரியம் உறுதியாகி விட்டால், அல்லாஹ்வுக்கு அவர்கள் உண்மையாக நடந்து கொண்டால் அதுவே அவர்களுக்கு நன்மையாக இருக்கும்.

47:22. (போருக்கு வராது) நீங்கள் பின் வாங்குவீர்களாயின், நீங்கள் பூமியில் குழப்பம் உண்டாக்கி உங்கள் சுற்றத்தாரை (அவர்களுடன் கலந்து உறவாடுவதிலிருந்தும்) துண்டித்து விடவும் முனைவீர்களோ?

47:23. இத்தகையோரைத் தாம் அல்லாஹ் சபித்து, இவர்களைச் செவிடாக்கி இவர்கள் பார்வைகளையும் குருடாக்கி விட்டான்.

47:24. மேலும் அவர்கள் இந்தக் குர்ஆனை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா? அல்லது அவர்கள் இருதயங்கள் (இருக்கின்றனவே) அவற்றின் மீது பூட்டுப் போடப்பட்டு விட்டனவா?

47:25. நிச்சயமாக, எவர்கள் நேர்வழி இன்னதென்று அவர்களுக்குத் தெளிவானபின், தம் முதுகுகளைத் திருப்பிக் கொண்டு போகிறார்களோ, (அவ்வாறு போவதை) ஷைத்தான் அழகாக்கி, (அவர்களுடைய தவறான எண்ணங்களையும்) அவர்களுக்குப் பெருக்கி விட்டான்.

அதாவது உங்களது அல்லா - போர் புரியச்சொல்லும்போது( ஜிகாத்) (இறப்பதற்கு பயந்து போய்) பயந்து ஒதுங்குபவர்களை பற்றி நீர் கூறிய வசனம் இருக்கிறது. அதாவது கேள்வி கேட்காமல் நிரபராதி மக்களை கொல்லவேண்டும்.
மேலும் அவர்கள் இந்தக் குர்ஆனை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா? [ இங்கு இந்த வசனம் எதிர்மறை நோக்கத்தில் சொல்லப்பட்டிருக்கிறது- அல்லாவுக்காக சாவது புனிதமானது அதை புரிந்துகொள் என்கிறது -- எதற்காக அல்லாவுக்காக (முகமதுக்காக) இறக்கவேண்டும் என்று கேள்வி கேட்ககூடாது என்கிறது]

////ஆயிரத்து ஐநூறு ஆண்டுக்கு முன் ஒருவர் கூறியதை ஆய்ந்து பார்த்ததில் உண்மை என விளங்கியதால் ஏற்றுக் கொண்டேன், பிறகு என் மதம் மாறாத மதம் என்று கூறுவதில் என்ன தவறு உள்ளது? கொண்ட கொள்கையில் உறுதியுடன் இருப்பது முட்டாள் தனமா? //

முட்டாள் தனமே -- நான் கூறியது இஸ்லாமின் முட்டாள்தனமான் கொள்கைகளுக்காக. இன்றும் சில இஸ்லாமிய மூடர்கள பூமி தட்டை என்று நம்பிக்கொண்டு இருக்கிறார்கள் , ஏன் என்றால் குரானில் அப்படித்தான் இருக்கிறது ( ஜாகிர் நாயக்கின் விளக்கத்தை கொடுக்கவேண்டாம் - அது ஒரு தக்கியா - மற்றவர்களை ஏமாற்றுவதற்கு- அல்லாவை காப்பாற்றுவதற்கு திரித்து சொல்லப்பட்டது) இன்றைய விஞ்ஞான யுகத்தில் அறிவியல் கண்டுபிடிப்புகள் வந்துவிட்டபின் முகமது உளறியது தான் சரி என்று இருக்க கூடாது.

@அ. ஹாஜாமைதீன் --

// இந்த புத்தகத்தில் ஒருவர் பிறந்து வளர்ந்து மடியும் எல்லா விஷயங்களும் இதில் , ஒருவர் பிறப்பதற்கு முன்பே எழுதி இருக்குமாமே.! அப்படியா? . அதை எழுதியது யார் அல்லாவா? //

// அப்படி என்றால் , அந்த புத்தகத்தில் எழுதி இருப்பதை மீறி ஒருவரால் நடக்க முடியாது அல்லவா? அப்படி நடந்தால் அது அல்லாவை எதிர்த்து நடப்பது போல் அல்லவா ஆகிவிடும்? என்று கேட்டேன். //

// சரி , திரும்பவும் கேட்கிறேன். நான் நரகத்துக்கு போவேன் என்று அல்லா அந்த புத்தகத்தில் எழுதி இருந்தால் - நான் என்ன செய்தாலும் சுவர்கத்துக்கு போக முடியாது. அதையும் மீறி முகமதுவின் சிபாரிசால் / மற்றும் அல்லாவின் கருணையால் நான் சுவர்க்கத்துக்கு சென்றால். அந்த புத்தகத்தில் எழுதி இருப்பது தவறான ஒன்றாக மாறிவிடும். இந்த கிறுக்குதனத்தை என்ன என்று சொல்ல....
முதலில் இதற்கு பதில் சொல்லுங்கள். //

நண்பரே, இதற்கான் பதில் என்ன?? நீர் கூறியது பதில் அல்ல. மழுப்பல்.

@ ஹாஜாமைதீன் அவர்களே ,

\\"இது பற்றிய அறிவு என்னுடைய இறைவனிடம் (பதிவுப்) புத்தகத்தில் இருக்கிறது என் இறைவன் தவறுவதுமில்லை மறப்பதுமில்லை" என்று (மூஸா பதில்) சொன்னார்.\\

ஆகமொத்தம் நான் கேட்ட கேள்விக்கும் , தமிழன் கேட்ட கேள்விக்கும் மற்றும் ஃபிர்அவ்ன் என்ற மன்னன் கேட்ட கேள்விக்கும் இன்னும் பதில் இல்லைதானே ....

நான் கேட்ட கேள்வி இஸ்லாம் கூறும் அந்த மறுமை நாளில் குரான் படி நடக்காமல் இருக்கும் ஆதிவாசி மக்களின் நிலை என்ன ?


இப்படிக்கு,
சங்கர் சேட்

சாதாரண மனிதனுக்கும், சர்வ சக்தி கொண்ட இறைவனுக்கும் என்னதான் வித்தியாசம்??சாதாரண மனிதனுக்கும், சர்வ சக்தி கொண்ட இறைவனுக்கும் என்னதான் வித்தியாசம்??? அத்வைதம் சொல்வது..மனிதன் வேறு ,இறைவன் வேறு என்பது உண்மையல்ல.வெறும் மாயை! இரண்டுமொன்றே! இந்த மாயை நம் மனத்திலிருந்து அகலும் போது முக்தி அதாவது இறைவனிடமொன்றுவது(தன்னையறிதல்) கிடைக்கிறது! இறைவன் பரலோகத்தில் மட்டுமல்ல. தூணிலும் இருக்கிறான் . துரும்பிலும், இன்னும் நம்மால் இப்போது மாயையில் உணர்ந்துகொள்ள முடியாத உருவம், அருவம் அனைத்திலும் உள்ளான். இவை அனைத்தும் ஒன்று சேர்த்துப் பாருங்கள் அதுவே இறைவன்!எனவே இறைவனில் மனிதன் இருக்கிறன். மனிதனுள் இறைவன் உள்ளான்! சாத்தான் எங்கும் இல்லை!இன்பத்தையும், துன்பத்தையும் ஒன்றாக எண்ணும் பக்குவம் வரும்போது இது உமக்கு விளங்கும்!

Anonymous
04:26

@Tamilan
பக்கம், பக்கமாக குர் ஆன் ஹதீஸை ஆதாரம் காட்டக்கூடிய நண்பரே!, ஒத்தை வரியில்
"மழுப்பல்" என்று சொன்னால் சரியா?, எனது பின்னூட்டத்தை வரிக்கு, வரி விமர்சிக்க வேண்டியது தானே?

எனது பதில் மழுப்பல் என்றால்!!! உங்களது கேள்வி மிகவும் அறிவுப்பூர்வமானதா???

தங்களது கேள்வி:
பொய்யிலே வடிகட்டிய கற்பனையானது.

எனது பதில்:
இஸ்லாம் கூறும் கடவுள் கொள்கையின்
அடிப்படையிலானது.

என்றும் அன்புடன்,
அ. ஹாஜாமதீன்.

Anonymous
05:20

@shankar
சங்கர் அவர்களே ,

//ஆகமொத்தம் நான் கேட்ட கேள்விக்கும் , தமிழன் கேட்ட கேள்விக்கும் மற்றும் ஃபிர்அவ்ன் என்ற மன்னன் கேட்ட கேள்விக்கும் இன்னும் பதில் இல்லைதானே....//

சங்கர் சேட் அவர்களே, தாங்களும் ஃபிர்அவ்னும்
கேட்டது நல்ல கேள்வி, ஆனால் தமிழன் கேட்டது வரட்டு வாதம்.


//நான் கேட்ட கேள்வி இஸ்லாம் கூறும் அந்த மறுமை நாளில் குரான் படி நடக்காமல் இருக்கும் ஆதிவாசி மக்களின் நிலை என்ன?//

இறைவனின் அதிகாரத்தில் தலையிடும்
உரிமை எந்த மனிதனுக்கும் இல்லை.

என்றும் அன்புடன்,
அ. ஹாஜாமதீன்.

\\இறைவனின் அதிகாரத்தில் தலையிடும்
உரிமை எந்த மனிதனுக்கும் இல்லை.\\

போச்சி மாட்டிகிட்டாக நம்ம ஆளு......

இதற்கான பதில் ஏன் திருகுரானில் இல்லை ? எல்லாவற்றையும் விளக்கிய அல்லா இதை எப்படி மறந்தார் ?

எல்லாவற்றையும் சமாளித்த நீங்கள் இந்த சிறிய கேள்விக்கு மடங்கிவிட்டிரே ..........


இப்படிக்கு ,
சங்கர்

@அ. ஹாஜாமதீன் ,
//ஆனால் தமிழன் கேட்டது வரட்டு வாதம்.// இதற்கு பதில் சொல்லமுடியாது . அப்படி சொன்னால் இஸ்லாமிய கடவுள் கொள்கையே தவறானதாக மாறிவிடும். அதனால் தான் வரட்டு வாதமோ.
கணனி மொழியில் எழுத்வேண்டுமானால் (logic)
"சுவர்க்கம்"
"நரகம்"
தமிழன்= நரகம்.(தமிழன் நரகத்துக்கு போவான் புத்தகத்தில் முன்பே எழுதப்பட்டுவிட்டது)இது மாற்றமுடியாதது(Constant)(Not Variable)
இதை நான் என்ன செய்தாலும் மாற்ற முடியாது. தமிழன் இப்படித்தான் இருப்பான், இப்படித்தான் நடந்துகொள்வான் முடிவில் நரகத்துகு போவான் என்று எழுதி இருந்தால் இந்த தமிழனால் ஒன்றுமே செய்யமுடியாது இல்லையா?. அதனால் தான் சொல்கிறேன் அல்லா என்பது கடவுள் கிடையாது. அல்லா என்ற கடவுள் கொள்கையை உருவாக்கியது முகமது என்ற மேனியாக் (Maniac). இதில வேறே என்னை மாதிரியான மக்கள் முடிவில்லாமல் நெருப்பில் எரிந்துகொண்டு இருப்பார்களாம்.

4:56. யார் நம் வேதவசனங்களை நிராகரிக்கிறார்களோ, அவர்களை நாம் நிச்சயமாக நரகத்தில் புகுத்தி விடுவோம்; அவர்கள் தோல்கள் கருகிவிடும் போதெல்லாம் அவையல்லா (வேறு) தோல்களை, அவர்கள் வேதனையைப் அனுபவிப்பதற்கென, அவர்களுக்கு நாம் மாற்றிக் கொண்டே இருப்போம் - நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனாகவும் ஞானமுள்ளவனாகவும் இருக்கின்றான்.

5:37. அவர்கள் (நரக) நெருப்பை விட்டு வெளியேறிவிட நாடுவார்கள்; ஆனால் அவர்கள் அதைவிட்டு வெளியேறுகிறவர்களாக இல்லை; அவர்களுக்கு (அங்கு) நிலையான வேதனையுண்டு.

14:16. அவனுக்கு முன்னால் நரகம் தான் இருக்கிறது, இன்னும் அவனுக்கு (துர் நாற்றமுள்ள) சீழ் நீரே குடிக்கக் கொடுக்கப்படும்.

14:17. அதை அவன் (சிரமத்தோடு) சிறிது சிறிதாக விழுங்குவான்; எனினும் அது அவன் தொண்டையில் எளிதில் இறங்காது; ஒவ்வொரு திசையிலிருந்தும் அவனுக்கு மரணம் வந்து கொண்டிருக்கும்; எனினும் அவன் இறந்து விடுபவனும் அல்லன்; அன்றியும் அவன் முன்னே (மிகக்) கொடிய வேதனையும் உண்டு.

இது தான் கடவுளா !!!!


Next Post Next Post Home
 
Back to Top