( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )21 ஞாயிறு ஜூலை அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

தேதி,மாதம்,இல்லாத ஜாதகப் பலன்


   சிலருக்கு தாங்கள் பிறந்த தேதி,மாதம்,வருடம் எதுவும் தெரியாது இதனால் அவர்களால் ஜோதிடரீதியான வாழ்க்கை பலன்களை முழுமையாக அறிந்து கொள்ள இயலாது மனிதன் எப்போதுமே தனக்கு கிடைக்காத அல்லது கிடைக்க முடியாத பொருளின் மீது தான் அதிகமான ஆசையை வைப்பான் அதற்காக அதிகமாக கவலையும் அடைவான் இதை உணர்ந்து தான் நமது பெரியவர்கள் ஒருவன் பிறந்த கிழமையை வைத்து அவன் வாழ்க்கையை ஓரளவு ஜோதிடப்படி கணிக்க வழிவகை செய்துள்ளனர் ஒவ்வொருவரின் பிறந்த கிழமைக்கான பலனை சொல்லும் மிக பழமையான பெயர் சிதைந்து போன புத்தகம் ஒன்று சமீபத்தில் எனக்கு கிடைத்தது அதில் உள்ள விஷயங்களை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் இன்பம் அடைகிறேன் 


ஞாயிற்று கிழமையில் பிறந்தவர்களின் பலன்கள்

     பார்ப்பதற்கு அழகாகவும் கவர்ச்சியாகவும் இருப்பார்கள் உடலில் அடிக்கடி நோய் தாக்காது நல்ல ஆரோக்கியம் இருக்கும் மனதில் இயற்கையான துணிவு அதிகம் இருக்கும் எதையும் சத்தம் இல்லாமல் பேசமாட்டார்கள் ரகசியம் ஆனால் கூட உரத்த குரலில் பேசுவது தான் இவர்களுக்கு பிடிக்கும் பிறரை வெல்லத்தக்க வாக்கு திறமை நிறைய உண்டு தான் சொன்னது தான் சரி என்று சாதிப்பார்கள் ஆனாலும் மனதில் களங்கம் இருக்காது பிறரை கெடுக்கும் எண்ணம் சுத்தமாக இராது வாழ்வில் ஏற்ற தாழ்வுகள் அடிக்கடி வந்து போகும் பிறருக்கு உதவி செய்து துன்பம் படுவார் இந்த கிழமையில் பிறந்த பெண்கள் இல்லறத்தில் அமைதியும் கெட்டிக்கார தனத்தையும் கட்டி காப்பார்கள் வேலைகள் செய்வதில் சுணக்கம் சோம்பேறி தனம் இருக்காது கூட்டினால் ஒன்று என வரும் வயதில் அதாவது 10 ,19 ,28 ,37 ,46 .55 ,64 ,73 ஆகிய வயதுகளில் வாழ்க்கையில் திருப்பு முனையான சம்பவங்கள் நிகழும் அது நல்லதாகவும் தீயதாகவும் இருக்கும்

திங்கள் கிழமையில் பிறந்தவர்களின் பலன்கள்

   னம் எப்போதும் கலங்கிய வண்ணமே குழம்பிய வண்ணமே இருக்கும் எதிலும் அச்சத்தோடு தான் ஈடு படுவார்கள் மிருதுவாக பேசுவார்கள் எதிலும் சந்தேகம் இருக்கும் துணிந்து காரியம் செய்தால் தனக்கு துன்பம் வந்துவிடுமோ என எண்ணி தயங்குவார்கள் நட்பை விரும்பினாலும் நண்பர்களை சந்தேகப்படுவார்கள் மன சபலங்களை இடம்பொருள் பார்க்காமல் வெளிப்படுத்துவார்கள் மனதில் இரக்க சுபாவம் மிகுந்து இருக்கும் அச்சத்தோடு தெய்வ வழிப்பாட்டில் ஈடுபடுவதால் மூட நம்பிக்கை அதிகம் உண்டு சொந்த பந்தங்களை விட்டு கொடுக்க மாட்டார்கள் வாழ்க்கையில் நல்ல உயர்வு உண்டு இந்த கிழமையில் பிறந்த பெண்கள் மங்களமாக வாழ்வார்கள் வயதானாலும் கூட இளமை மாறாது தலை வலி ,சளி சம்பந்தப்பட்ட நோய்கள் அடிக்கடி தாக்கும் ஆடை ஆபரணங்களில் ஆர்வம் மிகுதி உண்டு 11 ,20 ,29,38,47,56,65 ,74 ஆகிய வயதுகளில் முக்கிய நிகழ்வுகள் நடை பெறும் 


 செவ்வாய் கிழமையில் பிறந்தவர்களின் பலன்கள்

  வர்கள் உடலும் மனதும் புத்தியும் உஷ்ணமாகவே இருக்கும் வெளிப்பார்வைக்கு அமைதியான தோற்றம் இருந்தாலும் உள்ளுக்குள் கோபக்காரராக இருப்பார்கள் சும்மா இருக்க பிடிக்காது வேலைகள் செய்து கொண்டே இருப்பார்கள் மற்றவர்களுக்கு அடங்கி போக மனம் வராது பிறரை தான் கேலி செய்வதோ தன்னை பிறர் கேலி செய்வதோ பிடிக்காது வாக்குறுதிகள் கொடுத்து விட்டு காப்பாற்ற முடியாமல் தவிப்பார்கள் செலவுகள் செய்வதில் மன்னர் பொய்களை சொல்வதில் நூதன மான நடைமுறையை பின்பற்றுவார்கள் வறுமை வந்தாலும் வெளிக் காட்டிக் கொள்ள மாட்டார்கள் இந்த கிழமையில் பிறந்த பெண்களுக்கு ஆண் குழந்தைகள் நிறைய உண்டு கணவனுக்கு அடிங்கி போக சிரமப் படுவார்கள் 45 வயதுக்கு மேல் நல்ல வாழ்க்கை அமையும்  9 ,18 ,27 ,36 ,45 ,54 ,63 ,72  போன்ற வயதுகள் முக்கியமானது ஆகும்

புதன் கிழமையில் பிறந்தவர்களின் பலன்கள்

   றிவும் அழகும் நிறைந்து இருக்கும் கடவுளை விட முயற்சியே மேலானது என்பார்கள் சுகந்திரமும் சுறு சுறுப்பும் இவர்கள் கூட பிறந்தது துன்பத்தை கண்டு மனம் தளர மாட்டார்கள் பழமையை வெறுக்கா விட்டாலும் புதுமையை ஆதரிப்பதில் முன் நிற்பார் பிறருக்கு வழி காட்டுவதில் வல்லவர் தொழில் ஆர்வம் மிகுந்து இருக்கும் சிக்கலான விஷயங்களையும் மிக சுலபமாக புரிந்து கொள்வார்கள் அரட்டை அடிப்பதிலும் மேடை பேச்சிலும் ஆர்வம் இருக்கும் இந்த கிழமையில் பிறந்த பெண்கள் படிப்பும் பண்பும் நிறைந்தவர்களாக இருப்பார்கள் எளிதாக காதல் வசப்படுவார்கள் உண்ணாமையை மறைக்க தெரியாததால் குடும்ப வாழ்க்கையில் சிக்கல் வரும் 14 ,23 ,32 ,41 ,50 ,68 ,77  ஆகிய வயதுகள் முக்கியமானது ஆகும் 


 வியாழன் கிழமையில் பிறந்தவர்களின் பலன்கள்

  ழுக்கம் நிறைந்தவர்கள் சட்டம் நீதிக்கு கட்டுப்பட்டவர்கள் குடும்பத்தை காப்பதில் வல்லவர்கள் விரைவில் திருமணம் ஆகும் பெண் குழைந்தைகளை விட அதிகமான ஆண் குழந்தைகளை பெறுவார்கள்  வாழ்க்கை போராட்டத்தை எதிர்த்து நின்று சமாளிப்பதில் தனித்திறமை இருக்கும் வாக்கு தவற மனம் வராததால் பல நேரங்களில் தர்ம சங்கடத்தில் அகப்பட்டு தவிப்பார்கள் பழிவாங்கும் எண்ணம் வந்தால் கூட அறிவை பயன் படுத்தி வெல்வார்களே தவிர வன்முறையை அணுக மாட்டார்கள் இந்த கிழமையில் பிறந்த பெண்கள் அதிஷ்டம் உடையவர்கள் கடவுள் பக்தி பரம்பரை நற்குணம் மிகுந்து இருக்கும் குடும்ப உறுப்பினர்களை அனுசரணை உடன் நடத்துவார்கள் குழந்தைகளை வளர்ப்பதில் அதிக அக்கறை காட்டுவார்கள் 12 ,21 ,30 ,48 .57 ,66 .75  ஆகிய வயதுகள் முக்கியமானது ஆகும்

வெள்ளி கிழமையில் பிறந்தவர்களின் பலன்கள்

  தாரளமான உதவிகள் செய்யும் மனம் உண்டு பெரிய மனிதர்கள் போல் நடந்து கொள்வார்கள் தனது சொல்லுக்கு கட்டுப்படுவர்களை மதிப்பார்கள் எல்லா உதவிகளும் அவர்களுக்காக செய்வார்கள் தன்னை வெறுப்பவர்களை குறை சொல்பவர்களை மன்னிக்க மாட்டார்கள் பழிவாங்க துடிப்பார்கள் தீய பழக்கங்களுக்கு சுலபமாக அடிமை ஆவார்கள் வசதியாக வாழ தவறுகள் செய்தாலும் தப்பில்லை என்பார்கள் பார்ப்பதற்கு கருப்பாக இருந்தாலும் கூட கவர்ச்சியாக இருப்பார்கள் தன்னையும் தன் சுற்று புறத்தையும் அலங்கரித்து வைத்து கொள்வதில் அலாதியான நாட்டம் உண்டு இந்த கிழமையில் பிறந்த பெண்கள் கணவனுக்கு மகிழ்வை ஏற்படுத்தி வசியப் படுத்துவார்கள் கணவனது சொத்து சுகம் அதிகம் ஆவதில் அக்கறை காட்டுவார்கள் பெண்வாரிசுகள் அதிகம் இருக்கும்  படிப்பில் கலையில் நல்ல ஆர்வம் இருக்கும் வெளிப் பார்வைக்கு அழகாக தெரிந்தாலும் சண்டை போடுவதில் வல்ல்வராவார் 15 ,24 ,33 ,42 ,51 ,60 ,78  ஆகிய வயதுகள் முக்கியமானது ஆகும் 


சனி கிழமையில் பிறந்தவர்களின் பலன்கள்

  நேர்மையாக நடக்க ஆசைப்படுவார்கள் சுறு சுறுப்பாக செயலாற்றுவார்கள் வாய்ப்புகளை தேடி நேரம் வரும் வரை காத்திருப்பார்கள் எதிலும் அதிகமான நிரந்தர மான ஆசை இருக்காது இன்பம்மான வாழ்க்கை அமைந்தாலும் கூட எதையோ இழந்தது போல காணப் படுவார்கள் நல்லவரோடு சேர்ந்தால் நல்லவராகவும் கெட்டவர்களோடு சேர்ந்தால் கெட்டவராகவும் மாறிவிடுவார்கள் மந்த புத்தியால் படிப்பு கெட்டாலும் புத்திசாலி தனம் அதிகம் இருக்கும் முறைப்படியான திருமணம் நடப்பது கடினம் இந்த கிழமையில் பிறந்த பெண்கள் ஒல்லியாகவும் சதைப் பிடிப்பு இல்லாமலும் இருப்பார்கள் குடும்பத்தில் அடிக்கடி கஷ்டம் வரும் கணவன் குழந்தைகள் சிரமப் படுவார்கள் கடவுள் பக்தி அதிகமாக இருக்கும் 17 .26 ,35 ,44 ,53 ,62 ,71  ஆகிய வயதுகள் முக்கியமானது ஆகும்


   இங்கே சொல்லி இருக்கும் பலன்கள் பொதுவானவைகள் தான் துல்லியமானவைகள் அல்ல சில பொருந்தி வரலாம் பல பொருந்தாமலும் இருக்கலாம் ஆனாலும் உண்மை இல்லாமல் இல்லை பிறந்த தேதி மாதம் வருடம் தெரியாதவர்களுக்கு வாழ்க்கை பலனை அறிந்து கொள்ள இன்னும் கூட சில துல்லியமான அதே நேரம் உண்மையான வழிமுறைகளும் ஜோதிட சாஸ்திரத்தில் உள்ளன அவைகளையும் அவ்வபோது உங்களுக்கு சொல்கிறேன் 
+ comments + 15 comments

மிக நல்ல குறிப்புகள் ஐயா..

ஜாதக குறிப்புகள் இல்லையே என வருந்துபவர்களுக்கு இவ்வாக்கம்
ஒரு வரப்பிரசாதம்..

வாழ்த்துக்களும் + நன்றிகளும்..

இவனுங்களே எதையாவது கிறுக்கி எளிதி விட்டு, மற்றொரு பெயரில் இவனுங்களே "அருமையான தகவல் குருவி... மன்னிக்கவும்... குருஜி" என்று பாராட்டி பின்னூட்டமும் எழுதுவார்களாம்.

கேட்கிறவன் கேனையனாக இருந்தால் இது மட்டுமா எழுதுவீர்கள்? ஏதாவது கேள்வி கேட்டால், அதை உடனே நீக்கி விட்டு, "அநாகரீமான கருத்துக்கள் நீக்கப்பட்டு விட்டது" என்று சொல்லுவார்களாம்.

நான் கோபப்படாமல் பணிவோடுதான் கேட்கிறேன். உஜாலாவோ... மீண்டும் மன்னிக்கவும், உஜிலாவோ அல்லது அவரது வாசகர்களோ பதில் தரவும்.

ஒன்றாக பிறந்த இரட்டைக் குழந்தைகள், வளர்ந்து பெரியவர்களாக இருக்கும்போது, ஒருவன் போலீசாகவும் மற்றொருவன் திருடனாகவும் இருக்கிறான். காரணம் என்ன? ஒன்றாக பிறந்த இருவருக்கும் ஒரே ஜாதகம்தானே! பிறகு ஏன் இவ்வளவு ஏற்ற தாழ்வு?

உதாரணமாக ஞாயிற்று கிழமை அன்று பிறந்தவர்கள் பார்ப்பதற்கு அழகாகவும் படு கவர்ச்சியாகவும் இருப்பார்களாம் - அதாவது நம்ம உஜிலா மாதிரி(!!) அதே ஞாயிற்று கிழமைகளில் பிறந்த வத்தல் - தொத்தல்களை எத்தனை பேரை உஜிலாவுக்கு காட்ட வேண்டும்? பத்து? நூறு?? ஆயிரம்??? ஞாயிற்று கிழமை அன்று பிறந்தவர்ககளுக்கு அடிக்கடி நோய் தாக்காதாம்!! எத்தனை எயிட்ஸ் நோயாளியை காட்ட? பத்து? நூறு?? ஆயிரம்???

சென்ற வருடம் இதே நேரங்களில் காற்றில் நடந்து, பன்னீரிலே குளித்து, பாலும் பழமும் சாப்பிட்ட ஆண்டிமுத்து ராசாவும், கனிமொழியும் இன்று திஹார் சிறையில் காய்ந்த சப்பாத்தி சாப்பிட்டுக் கொண்டு, கம்பி எண்ணிக் கொண்டு இருக்கிறார்களே! உங்கள் ஜாதகம் உண்மையாக இருந்தால், "அடுத்த வருடம் நீங்கள் கம்பி எண்ண போகிறீர்கள்" என்று சென்ற வருடமே சொல்லியிருக்க வேண்டுமே! ஏன் சொல்லவில்லை?

இவனுங்க ஜோசிய லட்சணமே இப்படிதான். //"இங்கே சொல்லி இருக்கும் பலன்கள் பொதுவானவைகள் தான் துல்லியமானவைகள் அல்ல சில பொருந்தி வரலாம் பல பொருந்தாமலும் இருக்கலாம்"//

அதாவது, "இப்படி மட்டுமே நடக்கும், ஒருவேளை நடக்காமலும் போகலாம்(!!)" பின்னே என்ன "ம_____க்கு" ஜோசியம் சொல்லணும்?

உஜிலாவை சிலர் கும்மு கும்முன்னு கும்மியடித்தும் இன்னும் மாறியதாக தெரியவில்லையே!! http://anubavajothidam.com/ujila-uyyalala/

வாசகர்களே! இன்னும் பத்து - பதினைந்து நிமிடங்களில் எனது இந்த பதிவை நீக்கி விடுவார். அவ்வளவு பயந்த உள்ளம்... மன்னிக்கவும், பரந்த உள்ளம்.

Anonymous
17:31

@abdul rahman
//இவனுங்களே எதையாவது கிறுக்கி எளிதி விட்டு, மற்றொரு பெயரில் இவனுங்களே "அருமையான தகவல் குருவி... மன்னிக்கவும்... குருஜி" என்று பாராட்டி பின்னூட்டமும் எழுதுவார்களாம்//

ஏன் நீயும் எதையாவது கிறுக்கி எழுதிவிட்டு மற்றொரு பெயரில நீயே ''அருமையான தகவல் கப்புதுல் கொக்குமான்..மன்னிக்கவும்..அப்துல் ரஹ்மான் என்று பாராட்டி பின்னுட்டமும் எழுதுவிய.

//கேட்கிறவன் கேனையனாக இருந்தால் இது மட்டுமா எழுதுவீர்கள்? ஏதாவது கேள்வி கேட்டால், அதை உடனே நீக்கி விட்டு, "அநாகரீமான கருத்துக்கள் நீக்கப்பட்டு விட்டது" என்று சொல்லுவார்களாம்//

கேட்கிற கேள்வி கேனதனமாகவும் நாகரீகமின்றியும் இருந்தா நீக்காம அவுங்க என்ன பண்ணுவாங்க..நீக்கப்பட்ட கருத்துகளை நீகபட்டதுன்னு சொல்லாம பின்ன நீகவில்லைனா சொல்லுவாங்க..என்னோட பின்னுட்டத்தை கூடத்தான் நீக்கி இருக்காங்க..

//நான் கோபப்படாமல் பணிவோடுதான் கேட்கிறேன். உஜாலாவோ... மீண்டும் மன்னிக்கவும், உஜிலாவோ அல்லது அவரது வாசகர்களோ பதில் தரவும்//

நீ கோவபட்டா எங்களுக்கு என்ன? பணிவில்லாம கேட்ட எங்களுக்கு என்ன? கப்புதுல் மீண்டும் மன்னிக்கவும், அப்துல் வாசகர்கள் பதில் தரோம்

//ஒன்றாக பிறந்த இரட்டைக் குழந்தைகள், வளர்ந்து பெரியவர்களாக இருக்கும்போது, ஒருவன் போலீசாகவும் மற்றொருவன் திருடனாகவும் இருக்கிறான். காரணம் என்ன? ஒன்றாக பிறந்த இருவருக்கும் ஒரே ஜாதகம்தானே! பிறகு ஏன் இவ்வளவு ஏற்ற தாழ்வு?//

அல்லா சொல்லிய படி நடக்கும் முஸ்லிம் குடும்பத்தில் ஒன்றாக பிறந்த இரட்டை குழந்தைகள் வளரும் போதே அல்லது வளர்ந்த பிறகு ஒருவன் ராணுவ வீரனாகவும் மற்றொருவன் தீவிரவாதியாகவும் இருக்கிறான் காரணம் என்ன? ஒன்றாக பிறந்த இருவரும் கும்பிடுவது ஒரே அல்லாவைத்தானே..பிறகு ஏன் இவ்வளவு ஏற்ற தாழ்வு?

//உதாரணமாக ஞாயிற்று கிழமை அன்று பிறந்தவர்கள் பார்ப்பதற்கு அழகாகவும் படு கவர்ச்சியாகவும் இருப்பார்களாம் - அதாவது நம்ம உஜிலா மாதிரி(!!) அதே ஞாயிற்று கிழமைகளில் பிறந்த வத்தல் - தொத்தல்களை எத்தனை பேரை உஜிலாவுக்கு காட்ட வேண்டும்? பத்து? நூறு?? ஆயிரம்??? ஞாயிற்று கிழமை அன்று பிறந்தவர்ககளுக்கு அடிக்கடி நோய் தாக்காதாம்!! எத்தனை எயிட்ஸ் நோயாளியை காட்ட? பத்து? நூறு?? ஆயிரம்???///

நானும் உதாரனம சொல்றேன்..இஸ்லாம் என்றால் அமைதின்னு அர்த்தம் சொல்றாங்க..அதாவது நம்ம அப்துல் மாதிரி(!!!!) அதே முஸ்லிம் மதத்தில் பிறந்த கேப்மாறி முள்ளமாறிகளை எதனை பேரை உனக்கு காட்ட வேண்டும்?..ஆயிரம்?? பத்தாயிரம்???? லட்சம்??????...முஸ்லிம்களுக்கு வன்முறை தெரியாதாம்!!!! எதனை தீவிரவாதிகளை காட்ட? ஆயிரம்? பத்தாயிரம்? லட்சம்?

//சென்ற வருடம் இதே நேரங்களில் காற்றில் நடந்து, பன்னீரிலே குளித்து, பாலும் பழமும் சாப்பிட்ட ஆண்டிமுத்து ராசாவும், கனிமொழியும் இன்று திஹார் சிறையில் காய்ந்த சப்பாத்தி சாப்பிட்டுக் கொண்டு, கம்பி எண்ணிக் கொண்டு இருக்கிறார்களே! உங்கள் ஜாதகம் உண்மையாக இருந்தால், "அடுத்த வருடம் நீங்கள் கம்பி எண்ண போகிறீர்கள்" என்று சென்ற வருடமே சொல்லியிருக்க வேண்டுமே! ஏன் சொல்லவில்லை?//

தப்பு பண்ணா தண்டனை இல்லைன்னு எங்கேயும் சொல்லலையே?..அவுங்க ஊழல் பண்ணங்க மாட்டிகிட்டாங்க...ஊழல் பண்ணா மாட்டிபோம்னு எல்லோருக்கும்தான் தெரியும்..இதுக்கு கூட ஒருத்தர் ஜாதகம் பாத்து சொல்லுவங்கள..

////இவனுங்க ஜோசிய லட்சணமே இப்படிதான். //"இங்கே சொல்லி இருக்கும் பலன்கள் பொதுவானவைகள் தான் துல்லியமானவைகள் அல்ல சில பொருந்தி வரலாம் பல பொருந்தாமலும் இருக்கலாம்"//..//////

இவனுங்களோட லட்சினமே இதுதான்..உண்மையை சொன்னகூட குத்தம் சொல்லுவானுங்க..

//அதாவது, "இப்படி மட்டுமே நடக்கும், ஒருவேளை நடக்காமலும் போகலாம்(!!)" பின்னே என்ன "ம_____க்கு" ஜோசியம் சொல்லணும்?//

அதாவது '' எப்படி நடக்கும்,அது எப்படி நாடாளும்னு(!!!!)" பின்ன என்ன ம____ருக்கு நீ இந்த கட்ட்ருரையை படிச்சிட்டு கேள்வி கேட்கிற?

//உஜிலாவை சிலர் கும்மு கும்முன்னு கும்மியடித்தும் இன்னும் மாறியதாக தெரியவில்லையே!! http://anubavajothidam.com/ujila-uyyalala/..//

எந்த பரதேசிக கும்மியடிகிரவனுங்க..அவனுங்களை இங்க வந்து கும்மி அடிக்க சொல்ல வேண்டியதுதானே?..உஜிலா எதுக்கு மாற தேவையில்லை. தேவைனா அந்த நாதாரிகளை மாற சொல்லு

Anonymous
20:50

சபாஷ் குருஜி, சரியான பதிலடி கொடுத்து இருக்கீங்க. நீங்க யாருன்னு உலகத்துக்கு நிரூபணம் பண்ணிடீங்க.

ஹிந்து அனானி

வணக்கம் உஜிலாதேவி வாசகர்களே சமிபகாலமாக அனுபவ ஜோதிடர் என்பவர் சுவாமிஜியி படைப்புகளில் சில மாற்று பெயர்களுடன் கருத்துக்களை தெரிவித்து வருகிறார் சற்று கவனித்து பதில் அளியுங்கள் நண்பரே சுவாமிஜியி கருத்துக்கள் பிடிக்காமலும் ஜோதிட விஷயங்கள் சுவாமிஜி எழுதுவதாலும் சில மாற்று பெயர்களில் கருத்தை தெரிவித்து வருகிறார் பொறமை பிடித்தவர்கள் அதிகம் உள்ள பூமியில் தான் நாம் இருக்கிறோம் சற்று கவனிக்கவும் நண்பர்கள் உஜிலாதேவி வாசகன்

@Abdul Rahman

நண்பரே தங்களின் கருத்தை தொடர்ந்து படித்து வருகிறேன் என்றுமே இந்த தளத்தில் தங்களின் கருத்தி நீக்கியது கிடையாது

சில நாள்களுக்கு முன்பு நீங்கள் சுவாமிஜியின் படைப்புகளில் உள்ள புகைப்படத்தை மாற்று மாறு கேட்டுக்கொண்டிர்கள் அதை நமது நண்பர் சதீஷ் உடனடியாக மாற்றியும் விட்டார்

தயவு செய்து மத ரீதில் உள்ள கோபத்தை இந்த தளத்தில் காட்டதிர்கள் மிகவும் கொச்சையான வார்த்தைகள் நாம் நினைத்து பார்க்காத அளவில் உள்ள தகாத வார்த்தைகளை மட்டுமே நீக்கப் பட்டுள்ளது

சில முஸ்லிம் நண்பர்கள் குருஜியியை பற்றியும் குருஜியின் படைப்புகளை பற்றியும் விமர்சித்து இருக்கிறார்கள் சற்று அதையும் படித்து பாருங்கள் அதை என்றுமே இந்த தளம் நீக்கியது கிடையாது தயவு செய்து படைப்புகளுக்கு சம்பந்தம் இல்லாத கருத்துக்களை இட வேண்டாம் உஜிலாதேவி வாசகன்

புதன் கிழமையில் பிறந்தவர்களின் பலன்கள்

அறிவும் அழகும் நிறைந்து இருக்கும் கடவுளை விட முயற்சியே மேலானது என்பார்கள்.சுகந்திரமும் சுறு சுறுப்பும் இவர்கள் கூட பிறந்தது துன்பத்தை கண்டு மனம் தளர மாட்டார்கள் பழமையை வெறுக்கா விட்டாலும் புதுமையை ஆதரிப்பதில் முன் நிற்பார் பிறருக்கு வழி காட்டுவதில் வல்லவர் தொழில் ஆர்வம் மிகுந்து இருக்கும் சிக்கலான விஷயங்களையும் மிக சுலபமாக புரிந்து கொள்வார்கள். அரட்டை அடிப்பதிலும் மேடை பேச்சிலும் ஆர்வம் இருக்கும் இந்த கிழமையில் பிறந்த பெண்கள் படிப்பும் பண்பும் நிறைந்தவர்களாக இருப்பார்கள் எளிதாககாதல் வசப்படுவார்கள் உண்மையை மறைக்க தெரியாததால் குடும்ப வாழ்க்கையில் சிக்கல் வரும்..நன்றாகவே ஒத்து போகிறது .
தகவலுக்கு நன்றிகள்...

ஞாயிற்று கிழமையில் பிறந்தவர்களின் பலன்கள்

பார்ப்பதற்கு
அழகாகவும் கவர்ச்சியாகவும் இருப்பார்கள் உடலில் அடிக்கடி நோய் தாக்காது
நல்ல ஆரோக்கியம் இருக்கும் மனதில் இயற்கையான துணிவு அதிகம் இருக்கும்
எதையும் சத்தம் இல்லாமல் பேசமாட்டார்கள் ரகசியம் ஆனால் கூட உரத்த குரலில்
பேசுவது தான் இவர்களுக்கு பிடிக்கும் பிறரை வெல்லத்தக்க வாக்கு திறமை
நிறைய உண்டு தான் சொன்னது தான் சரி என்று சாதிப்பார்கள் ஆனாலும் மனதில்
களங்கம் இருக்காது பிறரை கெடுக்கும் எண்ணம் சுத்தமாக இராது வாழ்வில் ஏற்ற
தாழ்வுகள் அடிக்கடி வந்து போகும் பிறருக்கு உதவி செய்து துன்பம் படுவார்
இந்த கிழமையில் பிறந்த பெண்கள் இல்லறத்தில் அமைதியும் கெட்டிக்கார
தனத்தையும் கட்டி காப்பார்கள் வேலைகள் செய்வதில் சுணக்கம் சோம்பேறி தனம்
இருக்காது கூட்டினால் ஒன்று என வரும் வயதில் அதாவது 10 ,19 ,28 ,37 ,46 .55
,64 ,73 ஆகிய வயதுகளில் வாழ்க்கையில் திருப்பு முனையான சம்பவங்கள்
நிகழும் அது நல்லதாகவும் தீயதாகவும் இருக்கும்


////////மிகவும் சரியாகவே இருக்கிறது.சத்தம் போட்டு பேசி தான் நிறைய இடத்தில் மாட்டி கொள்கிறேன்////

Anonymous
22:22

@ஹிந்து அனானி
//சபாஷ் குருஜி, சரியான பதிலடி கொடுத்து இருக்கீங்க. நீங்க யாருன்னு உலகத்துக்கு நிரூபணம் பண்ணிடீங்க.//

நண்பா அது குருஜி எழுதவில்லை.அதை நான்தான் எழுதினேன்

அறிவு கெட்ட முண்டம் அப்துல் ரகுமான்,

குருஜி சொன்னதெல்லாம் சொந்த கருத்து இல்ல. அதெல்லாம் பொது பலன்கள். மனிதர்களுக்கு மனிதர்கள் நிச்சயம் வேறு படும் பிறந்த கிழமைய பொறுத்து.
நானும் உன்ன ரொம்ப நாளா பாத்துகிட்டேன் இருக்கேன், ரொம்ப துள்ளிகிட்டே இருக்க.

அடக்க வாசி அப்துல் ரக்ஹுமான் அதுதான் நல்லது.

Anonymous
10:29

எல்லாம் விதி. பிறப்பதும் விதி இடையில் நடைபெறும் விடயங்களும் விதி. இறப்பதும் விதி. பேசாமல் இருங்கடா.

அய்யா எனக்கு ஒரு சந்தேகம் , ஒரு நாள் என்பது காலை 6 மணி முதல் மறுநாள் கலை 6 மணி வரையா, இல்லை நள்ளிரவு 12 மணி முதல் 12 மணி வரையா . எனது ஜாதக குறிப்பில் சனிகிழமை பின்னரவு 3.30 மணிக்கு பிறந்தேன் என உள்ளது. இதை எந்த நாளில் சேர்ப்பது . தங்களது விளக்கம் தேவை. தவறாக கேட்டு இருந்தால் மன்னிக்கவும்
lrvijaycool@gmail.com
Vijayakumar. R

சபாஷ் சரியான பதிலடி கொடுத்து இருக்கீங்க. நீங்க யாருன்னு உலகத்துக்கு நிரூபணம் பண்ணிடீங்க நன்றாகவே ஒத்து போகிறது .
தகவலுக்கு நன்றிகள்...


Next Post Next Post Home
 
Back to Top