( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )21 ஞாயிறு ஜூலை அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

விஞ்ஞானம் என்பதே ஆன்மிகம் தான்...!

  நெடு நாட்களாக முடிவே இல்லாமல் மனிதனுக்கு தேவையானது விஞ்ஞானமா மெஞ்ஞானமா என்ற விவாதம் நடந்து வருகிறது

ஆன்மிக வாதிகள் தங்களது வாதமே சரி என சண்டை போடுகிறார்கள்

அறிவியல் வாதிகளோ தாங்கள் தான் உலகத்தின் உண்மையான மேய்ப்பர்கள் என்று மார் தட்டுகிறார்கள்

 மனிதனுக்கு உண்மை தேவை எது அறிவியலா? ஆன்மிகமா?


கத்தரி வெய்யில் சுட்டெரிக்கிறது.  உடல் எங்கும் வியர்த்து கொட்டுகிறது.

வேலைகள் செய்ய முடியாத அளவுக்கு சோர்வாகயிருக்கிறது.

ஆன்ம நேயம், ஜீவ காருண்யம் என்று எல்லாம் பேசுகின்ற ஆன்மிகத்தால் வியர்வையை போக்கும் ஒரு விசிறி மட்டை கூட செய்து தர முடியவில்லை.

மார்கழி மாத கடுங்குளிரில் நடுங்கும் போது விஞ்ஞான கண்டுபிடுப்பான கம்பளி போர்வை தான் காப்பாற்றுகிறது 


  தவிர கடவுளா வந்து கனப்பு சட்டியில் நெருப்பு வைக்கிறார் என்று நமது மனம் பல நேரங்களில் நினைத்து தடுமாறுகிறது.

 காலராவை ஒழித்தது விஞ்ஞானம்.  கால் கடுக்க நடந்தவனுக்கு கார்களை தந்தது விஞ்ஞானம்.

  கண்டம் விட்டு கண்டம் தாவும் ஆயுதங்களை படைத்தது விஞ்ஞானம்.

  இத்தனையும் தந்த விஞ்ஞானத்தையும், விஞ்ஞானிகளையும் போற்றுவதை விட்டுவிட்டு 


  ஆலகால விஷம் உண்ட ஆண்டவா போற்றி என பாடுவது எந்த வகையில் நியாயமாகும்?

  அறிவு கலப்பையை அகலமாக உழுவதை விட ஆழமாக உழுதால் இந்த கேள்விக்கு எல்லாம் நல்ல பதில் கிடைக்கும்

வெப்பத்தில் வியர்க்கிறது.  வியர்வையினால் உடம்பில் உள்ளிருக்கும் கழிவு பொருள் எல்லாம் வெளியேறுகிறது. 

காற்றாடி கொண்டு வீசினால் சுகமாக இருக்கும்.  ஆனால் நாளடைவில் கழிவுகள் உடம்பில் தங்கி நோய்களாக வெளிவரும்.

  குளிரால் நடுங்கும் போது தசைகள் துடித்து முறுக்கேறுகிறது.  நரம்புகள் தாங்கும் திறனை அதிகரித்து கொள்கிறது.  

 கம்பளி குளிரை தடுக்கலாம்.  நோயை தடுக்காது.

    எப்படி பார்த்தாலும் விஞ்ஞானம் தருகின்ற கருவிகள் எல்லாம் மனிதர்களுக்கு தற்கால சுகத்தை கொடுத்து நெடுங்கால கஷ்டத்தை தருவதேயாகும்.

  ஆன்மிகம் துயரத்திலிருந்து தப்பிக்க வழி சொல்லாது.  அந்த துயரத்தோடு மோதி ஜெயிப்பதற்கு தான் வழிக்காட்டும். 

  நிரந்தரமான சந்தோஷம் தான் ஆன்மிகத்தின் இறுதி நோக்கம்.

   நாம் நினைப்பது போல விஞ்ஞானம் சுகமான வாழ்க்கையை நமக்கு தரவில்லை.


 மாறாக மனித சமுதாயம் இன்று அனுபவித்து கொண்டிருக்கும் கஷ்டங்களுக்கு எல்லாம் அதுவே ஒரு வகையில் காரணமாக இருக்கிறது.

 எல்லா துறைகளிலும் விஞ்ஞான மயமாகி கொண்டிருப்பது தான்.  மனிதன் மனதிலுள்ள கருணை நதி வற்றி போனதற்கு காரணமாகும்.

  அதற்காக விஞ்ஞானம் என்பதும் அறிவு தேடல் என்பதும் வேண்டாம் என்பது அர்த்தமல்ல.

  எல்லாமே விஞ்ஞான பூர்வமாக இருப்பது தான் சரி என்ற மனோபாவம் தவறு என்பதே கருத்தாகும்.


ஒரு வகையில் சொல்ல போனால் விஞ்ஞானம் என்பதே ஒரு வகை ஆன்மிகம் தான்.

  மக்கள் கஷ்டம் தீர்க்க புறப்பொருளை நாடுவது விஞ்ஞானம்.  அகப்பொருளை தேடுவது மெய் ஞானம் ஆகும்.

  சக்தி தான் சிவம், சிவன் தான் சக்தி.  இரண்டாக தெரிந்தாலும் இரண்டும் ஒன்று தான் என்கிறான் ஆன்மிகவாதி. 

  அறிவியல் வாதியோ பொருளும் பொருளின் சக்தியும் வேறு வேறானது அல்ல ஒன்று தான் என்கிறான். 

  சொல்லுகின்ற முறையில் தான் வார்த்தையில் தான் மாற்றம் இருக்கிறதே தவிர உள் கருத்து என்னவோ ஒன்று தான்.

  அதாவது மெஞ்ஞானி உண்மைகளை தத்துவங்களாக பேசுகிறான்.


விஞ்ஞானி அதே உண்மைகளையே பௌதிகமாக பேசுகிறான்.

மனிதனுக்கு அவனுடைய சுகத்திற்கு அறிவும் வேண்டும்.  உணர்வும் வேண்டும்.

விஞ்ஞானம் இல்லாத ஆன்மிகம் குருடானது.

ஆன்மிகம் இல்லாத விஞ்ஞானம் இதயம் இல்லாதது என்று ஆன்றோரின் வார்த்தையை உணர்ந்தால் சுகம் ஆன்மிகமா?  விஞ்ஞானமா?  என்பது புரியும்.

+ comments + 25 comments

வணக்கம் குருஜி. நீங்கள் கூறியபடி விஞ்ஞானம் என்பதே ஆன்மிகம் தான். உதாரணமாக எந்த ஒரு அறிவியல் சரிந்த விஷயமாக இருக்கட்டும். ஒரு கண்டுபிடிப்பு பற்றி ஒரு ஆராய்ச்சியாளர் சொல்லும்போது அவர் என்ன கூறுகின்றாரோ அதன் படி நாம் நம்புகின்றோம். உதாரணமாக ஒரு வேதியல் மாற்றம் பற்றி, அவர் இத்தனை டிகிரியில் நாம் உருக்கி செய்தால், இந்த உலோகம் உருவாகும் என்று சொல்லும்பொழுது நாமும் அதை எந்தவித சந்தேகம் இல்லாமல், அதனை ஒத்துக்கொள்கின்றோம். அதேபோல் தான் ஆன்மீகத்திலும், இந்த பிரார்த்தனையை இத்தனை நாள் மனம் உவந்து செய்தால் அதன் பலன் கிடைக்கும் என்று சொல்லும்போது நாம் ஒரு வித சந்தேகத்துடன் தான் செய்கின்றமே ஒழிய மனம் உவந்து செய்வது இல்லை. ஆன்மிகம் என்பது உணர்வு சம்பந்தப்பட்டது. விஞ்ஞானம் என்பது அறிவு சம்பந்தப்பட்டது. உணர்வும், அறிவும் சேரும்போது நம்பிக்கை வரும். மனது லேசாகி விடுகிறது. இன்றைய பதிவு மிகவும் அருமை குருஜி.

சிந்திக்க வைத்த கருத்துக்கள் குருஜி! நண்பர்கள் இதை பற்றி அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கதின் பக்தர் ஒருவர் ( கிருஸ்துவ மதத்திலிருந்து வேத தர்மத்துக்கு மாறிய வெள்ளைகார பக்தர் ) கூறும் சில விளக்கங்களை இங்கே காணலாம். http://www.youtube.com/watch?v=-5GhcwbsKZk

நாம் நினைப்பது போல விஞ்ஞானம் சுகமான வாழ்க்கையை நமக்கு தரவில்லையாம்!! மாறாக மனித சமுதாயம் இன்று அனுபவித்து கொண்டிருக்கும் கஷ்டங்களுக்கு எல்லாம் அதுவே ஒரு வகையில் காரணமாக இருக்கிறதாம்!!

ஆமாம்... ஏன் சொல்ல மாட்டானுங்க? நோகாமல் நொங்கு எடுப்பது போல எந்த சிரமும் இல்லாமல், சுகமாக ஒரு இடத்தில் இருந்து கொண்டு, லட்சக் கணக்கான வருடங்களுக்கு முந்தைய உளுத்துப்போன தத்து பித்து உளறல்களை மக்கள் மத்தியில் பரப்புவதற்கு மட்டும் விஞ்ஞான கண்டுபிடிப்பான கம்ப்யூட்டர், இன்டர்நெட், ஈமெயில் எல்லாம் இவனுங்களுக்கு வேண்டும். இவை அனைத்தையும் கண்டுபிடித்தவர்கள் வெள்ளைக்கார கிறிஸ்தவர்கள் என்பதால், மனதார ஒப்புக் கொள்ள மட்டும் மனது கூசுகிறதோ?

பல ஆயிரம் கோடி சொத்துக்களுக்கு சொந்தமான ஒரு முற்றிலும் துறந்த முனிவர்(!!) தான் 93 வயதுவரை உயிர் வாழ்வேன் என்று, மற்றவர்கள் நோய்க்கு மருந்தாக காற்றிலிருந்து பொடியை வரவழைத்து(!!) குணப்படுதினாராம். ஆனால், 93 வயதுக்கு முன்பே புட்டுக்கிட்டார். வேப்பிலை வைத்தியம் என்னவாயிற்று? அப்போது மட்டும் இவரை காப்பாற்ற அதிநவீன ஆங்கிலேயே மருத்துவ கண்டுபிடிப்புகள் தேவைப்பட்டது ஏனோ?

எந்த நவீன பொருளை பார்த்தாலும், சீனர்களும் வெள்ளைக்காரர்களும் கண்டுபிடித்ததாகவே இருக்கிறது. நமது கண்டுபிடிப்பு வெறும் புளியோதரையும் சாம்பார் சாதமும்தான்.

நிலாவை பாம்பு விழுங்குகிறது என்று இவர்கள் புருடா விட்டுக் கொண்டு இருந்த அதேவேளையில், அதே நிலாவிலேயே கால் பதித்து கொடியை நாட்டியது வெள்ளைக்காரர்கள்தானே!! யார் உண்மையான அறிவாளி?

கேட்டால் அதற்கும் ஒரு புளுகு மூட்டையை அவிழ்த்து விடுவார்கள். நாங்களெல்லாம் லட்சக் கணக்கான வருடங்களுக்கு முன்பே ராக்கெட் விட்டவர்கள் என்று. நீங்க எதை வேண்டுமானாலும் சொல்லுங்க பாஸூ.... அதையும் கேட்பதற்கு இன்னும் நாலு ஏமாந்த சோணகிரி இருக்கத்தானே செய்கிறார்கள்.

லொள் ! லொள்! லொள்! என்ற குரைக்கும் சத்தம் மலேசியா வரை கேட்கிறது! குறைக்கட்டும்.நன்றாக குறைக்கட்டும். 3 பேர் இறுதியாக சங்கிலியால் கட்டி எழுத்து போகும் வரை ஆசைதீர குறைக்கட்டும்!வாழ்துக்கள்.!

விஞ்ஞானம் இல்லாத ஆன்மிகம் குருடானது.

ஆன்மிகம் இல்லாத விஞ்ஞானம் இதயம் இல்லாதது என்று ஆன்றோரின் வார்த்தையை உணர்ந்தால் சுகம்

Really Truthful

[im]http://images.travelpod.com/users/jengeorgewells/1.1304880697.george-s-hindu-conversion.jpg[/im]

@JOHN KUMAR

JOHN KUMAR இந்த படத்தை பற்றி என்ன நினைக்கிறிங்க

[im]http://blogs.reuters.com/faithworld/files/2007/12/indians-with-cross.jpg[/im]

Anonymous
11:40

//விஞ்ஞான கண்டுபிடிப்பான கம்ப்யூட்டர், இன்டர்நெட், ஈமெயில் எல்லாம் இவனுங்களுக்கு வேண்டும். இவை அனைத்தையும் கண்டுபிடித்தவர்கள் வெள்ளைக்கார கிறிஸ்தவர்கள்//

இங்கே எப்படி வந்தது இந்த தலைப்பு

//நவீன பொருளை பார்த்தாலும், சீனர்களும் வெள்ளைக்காரர்களும் கண்டுபிடித்ததாகவே இருக்கிறது//அவன் உழைக்கிறான் வளர்கிறான் கண்டுபிடித்தான் தாங்கள்

ஏன் நண்பரே தாங்களும் (மெக்காலே முறையில் ) ஆங்கிலேயன் கல்வி முறையில் தானே படித்தீர்கள் இதுவரை எத்தனை கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியுள்ளீர் ?

அமெரிக்க வில் செவ்விந்த்தியர்களை கொன்றவர்கள் "இன்று நான் நூறு பேரை கொன்றேன் நான் ஐம்பது பேரை கொன்றேன் இருநூறு பேரை கொன்றேன் என்றார்களே" அப்போது எங்கே சென்றது மதம் ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தை காட்டு "ஏசு தத்துவம் எங்கே போனது" அவர்கள் கிருத்துவம் இல்லையா இல்லை இந்துக்களா ? வேறு யார்? கொள்கை என்பது மதத்தில் இல்ல அதனை கடைபிடிக்கும் மனித மனத்தில் உள்ளது எவன் எம்மதமாயினும் சகிப்பு தன்மை இல்லையேல் அவன் மனிதனே இல்லை நீங்கள் இதில் எந்த வகை முதலா ?

//நாலு ஏமாந்த சோணகிரி இருக்கத்தானே செய்கிறார்கள்.//

கேட்பவர் படிப்பவர் எல்லாம் சொனாகிரி என்றால் கலிலியோ உலகம் உருண்டை என்றபோது கல்லால் அடித்து கொன்றவர்கள் யார் தோழா இந்துக்களா ? அதிபுத்திசாலிகளா ? உலகத்தை தட்டை என்று சொன்னவர்கள் யார் ?
மாங்கனியை பெற உலகத்தை சுற்றி வந்து எமார்ந்ததாகவே கதை கேட்டுள்ளோம் காணமல் போனவர் பற்றி அல்ல ( தட்டை அல்ல உலகம் )

நம் ஆன்மிக நூற்களில் முக்கியமாக கருதப்படும் பகவத் கீதை பற்றி, கிருஸ்துவ , விஞ்ஞான ,மற்றும் தத்துவ அறிஞர்கள் என்ன கூறுகிறார்கள் என்பதை இங்கே படியுங்கள்! Albert Einstein: When I read the Bhagavad-Gita and reflect about how God created this universe everything else seems so superfluous.Henry David Thoreau: In the morning I bathe my intellect in the stupendous and cosmogonal philosophy of the Bhagavad-gita, in comparison with which our modern world and its literature seem puny and trivial.Dr. Albert Schweitzer: The Bhagavad-Gita has a profound influence on the spirit of mankind by its devotion to God which is manifested by actions.


Carl Jung: The idea that man is like unto an inverted tree seems to have been current in by gone ages. The link with Vedic conceptions is provided by Plato in his Timaeus in which it states..." behold we are not an earthly but a heavenly plant." This correlation can be discerned by what Krishna expresses in chapter 15 of Bhagavad-Gita.


Herman Hesse: The marvel of the Bhagavad-Gita is its truly beautiful revelation of life's wisdom which enables philosophy to blossom into religion.

@JOHN KUMARகுருஜி தவறாக இருப்பின் மன்னிக்க வேண்டும்

நண்பரே உங்கள் பெயரிலேயே குமரனின் பெயரை வைத்துள்ளீர் இதனை காணும்போது தாங்களோ அல்லது தங்கள் வம்சத்தினரோ இடைக்காலத்தில்தான் மதம் மாறி இருக்க வேண்டும் (இந்து மதத்தில் இருந்து ) இப்படி இருக்க தாங்கள் மல்லார்ந்து படுத்துக்கொண்டு உமிழ்வது போல் உள்ளது பார்த்து கொள்ளுங்க மேலே படாமல்

தொடர்ச்சி.


Ralph Waldo Emerson: I owed a magnificent day to the Bhagavad-gita. It was the first of books; it was as if an empire spoke to us, nothing small or unworthy, but large, serene, consistent, the voice of an old intelligence which in another age and climate had pondered and thus disposed of the same questions which exercise us.


Rudolph Steiner: In order to approach a creation as sublime as the Bhagavad-Gita with full understanding it is necessary to attune our soul to it.


Aldous Huxley: The Bhagavad-Gita is the most systematic statement of spiritual evolution of endowing value to mankind. It is one of the most clear and comprehensive summaries of perennial philosophy ever revealed; hence its enduring value is subject not only to India but to all of humanity.

எனது கேள்வி ஒன்றே ஒன்றுதான். சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய கிறிஸ்தவமும், சுமார் ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய இஸ்லாமும்தான் இன்று உலகின் மிகப் பெரிய இனமாக பல பல நாடுகளில் இருக்கிறது.

முறைப்படி பார்த்தால் பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய ஹிந்து மதம்தான் இன்று உலகம் முழுவதும் இருக்க வேண்டும். ஆனால், உலகில் இந்தியாவைத் தவிர வேறு எங்குமே ஹிந்து மதம் கிடையவே கிடையாது. புள்ளி விபரங்கள்படி இந்தியாவிலும்கூட ஹிந்துக்களின் எண்ணிக்கை சதவீதம் படிப்படியாக குறைந்து சிறுபான்மையை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. காரணம் என்ன?

ஹிந்து மத வேதங்கள் எல்லாம் வெறும் கற்பனை கதைகள், இட்டுக்கட்டப்பட்டவை என்று பெரும்பாலான ஹிந்துக்களே ஒப்புக் கொள்கிறார்கள். (உதாரணமாக: விநாயகர் அழுக்கில் பிறந்த கதை. ஐயப்பன் உருவான கதை.... அதைப் பற்றியெல்லாம் இங்கு இப்போது வேண்டாம்).

உதவாத பழையவற்றை தூக்கி எரிந்து விட்டு, புதிதாக வந்துள்ள பயனுள்ளவற்றைதானே மக்கள் தேர்ந்து எடுப்பார்கள்?

அதனால்தானே இன்று ஹிந்து மதம் ஒரு மறைந்து வரும் மதமாக ஆகிவிட்டது? இல்லையென்று யாராவது கூற முடியுமா நண்பர்களே? உலகில் ஏதாவது ஒரு நாட்டை ஹிந்து நாடு என்று காட்ட யாராலும் இயலுமா??

நண்பர் செல்வம் - மும்பை :

காவி உடைக்காரகள் சிலுவையை தூக்குவதை புண்ணியமாக கருதுகிறார்கள். இது வளரட்டும். தொடரட்டும். நல்ல ஒரு புகைப் படத்திற்கு மிக்க நன்றி.

யாரோ ஒரு வெள்ளைக்காரி கும்பிடுகிராளாம்?! நம்ம ஊர் மகாபலிபுரம் சென்று பாருங்கள். இதுபோன்று ஆயிரக் கணக்கில் பார்க்கலாம். அத்தனையும் போதையில் மிதக்கும் கஞ்சா பார்டி.

உஜிலாவின் சமீபத்திய பதிவுகளை நன்கு கவனித்து வருகிறேன்.

அவர் (முன்பு போல) மற்ற மதங்களை (இப்போதெல்லாம்) விமர்சனம் செய்வதில்லை. அப்படியிருக்க, அவரின் பதிவுக்கு சம்பந்தமில்லாத கருத்துக்கள் எதற்கு?

ஒருவர் நம்மை சீண்டாமல் இருக்கும்போது, அவர் மீது நாம் தாக்குதல் தொடுப்பது நாகரீமாக இல்லையே!

ஜான் குமார் அவர்களே! மொழியால் நாம் தமிழர்களாக இருந்தாலும், நிச்சயமாக உங்களது பாட்டனும், முப்பாட்டனும், எனது பாட்டனும், முப்பாட்டனும் நிச்சயமாக ஒரு குப்புசாமியோ அல்லது அப்புசாமியோ என்பதில் எந்தவித சந்தேகமும் கொள்ள வேண்டாம். மத கொள்கைகள் அடிப்படையில்தான் நாம் வேறு பட்டு இருக்கிறோமே தவிர, இனத்தால் நாம் அனைவரும் ஒன்றே!! ஒரு கன்னத்தில் (அவர்கள்) அறைந்தால் மறு கன்னத்தை (அவர்களுக்கு அடிக்க) காண்பியுங்கள் என்று அமைதியை போதித்த எங்கள் ஈசா நபி (அதாவது உங்கள் ஏசுநாதர்) வழி வந்தவரா நீங்கள்?

"அவர்கள் மார்க்கம் (மதம்) அவர்களுக்கு. நமது மார்க்கம் (மதம்) நமக்கு" என்ற அடிப்படை தத்துவம்கூட உங்களுக்கு தெரியவில்லையா?

[im]http://www.milligazette.com/image2003/2004/99_J&K-Sikh,christian,Musli.jpg[/im]

@JOHN KUMAR

///காவி உடைக்காரகள் சிலுவையை தூக்குவதை புண்ணியமாக கருதுகிறார்கள். இது வளரட்டும். தொடரட்டும். நல்ல ஒரு புகைப் படத்திற்கு மிக்க நன்றி.///

நண்பரே சமிபகாலமாக இந்துக்கள் என்ன செய்கிறார்களோ அதை அப்படியே கிறிஸ்தவர்களும் செய்கிறார்கள் இதுவும் அதே போன்று ஒரு படம் தான் காவி உடை அணிந்து சிலுவையை தூக்கிக் கொண்டு ஒரு கிறிஸ்தவ நண்பர் சென்று கொண்டு இருக்கிறார்


///யாரோ ஒரு வெள்ளைக்காரி கும்பிடுகிராளாம்?! நம்ம ஊர் மகாபலிபுரம் சென்று பாருங்கள். இதுபோன்று ஆயிரக் கணக்கில் பார்க்கலாம். அத்தனையும் போதையில் மிதக்கும் கஞ்சா பார்டி.///

நண்பரே இந்த படத்தில் உள்ள பெண் ஒரு கிறிஸ்தவ பெண் இந்துமதத்தில் உள்ள பெருமைகளை உணர்ந்து இந்துமதத்தில் மனதார இணைந்தவர் சற்று இதில் நீங்கள் கவனிக்க வேண்டியது காசுக்காகவும்,பொருளுக்காகவும் உங்களை மாதிரி இணைந்தவர் அல்ல என்று

Anonymous
19:33

வணக்கம் குருஜி

JOHN KUMAR சொல்வது போல் பார்த்தால் இந்து மதம் தான் உலகம் முழுவதும் பரவி இருக்க வேண்டும் .

ஆனால் இந்து மதம் யாரையும் மதம் மாற்றும் முயற்சில் ஈடுபடுவது இல்லை .

கிறிஸ்தவ பாதிரியார்கள் எழவு வீட்டிற்கு சென்றாலும் மதம் மாற்றும் வேலையிலேயே ஈடுபடுகிறார்கள்.

பாதிரியார்கள் மதம் மாற்றும் முயற்சியில் ஈடுபடாமல் இருந்திருந்தால் இந்தியாவில் ஒரு கிறிஸ்தவர் கூட
இருந்திருக்க மாட்டார்கள்

Anonymous
05:17

கிறிஸ்தவமும் இஸ்லாமும் மக்களைக்கொன்று குவித்தே பெரும்பான்மை ஆகியுள்ளன. இந்துக்கள் ஒரே இறைவனைத் தான் அனைவரும் வணங்குகிறோம் என்ற உண்மை புரிந்தவர்களாகையால் மதம் மாற்ற முயற்சிக்கவில்லை. தாமாக ஆன்மீக நாட்டம் உடையவர்கள் மட்டும் இந்துவாகிறார்கள். நாம் யாரையும் ஆசைகாட்டி ஏமாற்றவில்லை. வாள்முனையில் மதம் மாற்றவில்லை.
கிறிஸ்தவம் கற்பனையே இல்லாத அற்புதமான உண்மைக் கதையா? ஆதாம் ஏவாள் அவர்களின் மகன்கள் பேசியதை எல்லாம் ஒட்டுக்கேட்டு எழுதிய மகான் யார்? ஆதாம் ஏவாள் மகன்கள் யாரை மணந்து கொண்டனர் என்று சொல்ல முடியுமா? இயேசு இறந்தவுடன் தேவனால் எடுத்துக்கொள்ளப்பட்டு அவருடைய வலது பாரிசத்தில் அமர்ந்தார் என்று ஒரு அறிவாளி அருகிலிருந்து பார்த்தது போல் கூறுகிறார். அதை ஏன் மற்ற அறிவாளிகள் கூறவில்லை.
பைபிளைக் கிளறினால் ஆபாசக்களஞ்சியம். அபத்தக்களஞ்சியம். அதை நம்பும் உம்மை என்ன என்று சொல்வது?
ராஜா

vinoth
06:25

அன்றைய விஞ்ஞானமே ஆன்மீகக்கருத்துகளாய் பரவிக்கிடக்கிறது. அதை இன்றைய ஆராய்ச்சியாளர்கள் இன்னும் ஆராய்ந்து தெளிவது மிக நல்லது

Ragavan
06:26

அப்படி என்றால் எதுக்கு விஞ்ஞானத்தின் உச்சமான இணையத்திலிருந்து இதை சொல்கிறீர்கள்...
ஐயா, சிறு வயதில் கஷ்டப்பட்ட நீங்கள் இப்பொழுது நலமாய் இருப்பதற்க்கு காரணமே விஞ்ஞானம் தான்...
மனிதனை சிந்திக்க விடுங்கள். முடிந்தால் சிந்திக்க வையுங்கள்.
கடவுள்.. கடவுள்.. கடவுள்......
வேறு எதுவுமே உருப்படியாக இல்லையா...
போர் தேவை இல்லாத நாட்டில் விதம் விதமான ஆயுதங்கள் தயாரிப்பதைப் போல் ஒரு சதவிதம் கூட உதவாத, தேவை இல்லாத ஒன்றை எதற்கு இப்படி தேடுகிறீர்கள்....

gorito
11:48

Science is fully exists things only

Anonymous
12:02

கத்தி கத்தி மதம் பரப்பியது கிறிஸ்தவம். பாவம் வழி தவறிய ஆடு தான் JOHN KUMAR

அட...நான் நேற்று தான் இது சம்பந்தமான ஒரு பதிவிட்டேன் இன்று பார்த்தால் நீங்கள் ஏற்க்கனவே ஒரு பதிவு இட்டு இருக்கிறீர்கள்....என்ன ஒரு அலைவரிசை நமக்குள்..........
நேரம் கிடைத்தால் இங்கே வாருங்கள்
http://kelviyumnaaneypathilumnaaney.blogspot.com/2011/06/blog-post_27.html
நன்றி

இது வரை இந்து மதத்திற்கு ஆள் சேர்க்கும் பனி நடக்கவில்லை . ஆனால் மற்ற மதங்களுக்கு நன்றாகவே நடக்கிறது அதை நாம் இன்றும் டிவியிலும் மற்ற மிடியாக்களிலும் நன்றாகவே பார்க்க முடிகிறது . ஒரு பக்கம் குறை சொல்லியே ஆல் சேர்க்க பார்கிறார்கள் மற்றொரு பக்கம் ஒப்பாரி வெச்சே ஆள் சேர்க்க பார்கிறார்கள் .

கிறிஸ்தவ பாதிரியார்கள் எழவு வீட்டிற்கு சென்றாலும் மதம் மாற்றும் வேலையிலேயே ஈடுபடுகிறார்கள்.


Next Post Next Post Home
 
Back to Top