( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )



மிர்த தாரா மந்திர தீட்சை டிசம்பர் 18 ஞாயிறு அன்று கொடுக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post





உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

மாலை சுற்றினால் மாமனுக்கு ஆகாதா?

    சிலர் மாலை சுற்றிப் குழந்தை பிறந்தால் மாமனுக்குக் கண்டம் என்கிறார்களே, அது உண்மையா? ஜோதிட சாஸ்திரங்களில் அதற்கு எதாவது ஆதாரம் இருக்கிறதா என்று கேட்கிறார்கள்

குழந்தை மாலை சுற்றிப் பிறப்பது என்பது தொப்புள் கொடி குழந்தையின் உடலில் சுற்றிக் கொண்டு இருப்பது தான்.

 இது தாய் தவறுதலாகத் திரும்பிப் படுப்பதனாலோ அல்லது குழந்தை கருப்பைக்குள் எசகு பிசகாக நெளிவதனாலோ ஏற்படுகிற விஷயமே தவிர வேறு எந்தக் குறியீடும் அதாவது ஜாதகப்படி எதிர்காலப் பலன்களை உணர்த்தும் குறியீடோ அது அல்ல.

இருப்பினும் குழந்தையின் ஜனன நேரத்தில் அமைந்திருக்கும் சில கிரக நிலை தாய் மாமனுக்கும் நல்ல பலனையோ கெடுதியான பலனையோ கொடுக்க வாய்ப்புள்ளது


 உதாரணமாக சுபகிரஹங்களின் பார்வை இல்லாமல் லக்னத்திற்கு 5ம் இடத்தில் சூரியன், சந்திரன், சனி ஆகிய மூன்று கிரகங்கள் கூட்டாக அமர்ந்து இருந்தால் மாமனுக்குப் பாதிப்பு உண்டு.

 அதே நேரம் 5ம் இடத்தில் செவ்வாய் மட்டுமே தனித்து சுபப்பார்வை இல்லாமலிருந்தாலும் இதே நிலை மாமனுக்கு ஏற்படும்.

 அது மட்டுமல்ல தாய்மாமனைக் குறிக்கும் புதன் கிரகம் 3, 6, 8, 12 ஆகிய இடங்களில் நீச்சம் பெற்று இருந்தாலும் ஜாதகத்தில் பகை பெற்ற கிரகங்களோடோ மாரகம் ஏற்படுத்தும் கிரகத்தோடோ சேர்ந்திருந்தால் மாமனுக்குக் கண்டம் ஏற்படும் என்று சாஸ்திரங்கள் சொல்கின்றன.


ஆனாலும் இவைகள் பொதுவான விதிகள் தானே தவிர கட்டாயம் ஏற்பட்டே ஆகும் பலன்கள் என்று சொல்ல முடியாது.

 கட்டாயம் மாமனுக்குக் கண்டம் ஏற்படுமா ஏற்படாதா என்பதை ஜாதகக் கிரகங்களின் தன்மை, பார்வைகள், தசாபுத்தி, அந்தரம், ஆட்சி, உச்சம் இவைகளைத் துல்லியமாகக் கணக்கிட்டே சொல்ல முடியும்

. இது தவிர பொத்தாம் பொதுவாக மாலை சுற்றி குழந்தை பிறந்தால் மாமனுக்கு ஆகாது என்பது சாஸ்திர ஆதாரம் இல்லாத நம்பிக்கை ஆகும்







+ comments + 3 comments

அருமை,அருமை
உண்மையான கருத்துக்கள்அருமை,அருமை
உண்மையான கருத்துக்கள்

ஜோதிடம் என்பது.. மிக பெரிய சமுத்திரம்.கரையோரம் நின்று அலையோடு விளையாடுபவர்களுக்கு, இதை ஒருக்காலும் புரிந்துகொள்ளமுடியாது. என்னை பொருத்தவரை நம் சாஸ்திரம் ஒருகாலும் பொய்யாகாது. ஜோதிடம் சாஸ்திரம் உட்பட.! நான் சிம்மராசி. கடந்த 7 வருடமாக நான் பட்ட பாடு எனக்குதான் தெரியும்.அனாலும் , இறைவனை துணை இருந்தால்,பிரச்சனைகளை,கண்டிப்பாக சமாளிக்கலாம்.நானும் சமாளித்தேன்.சிறுவயது முதல் ஜோதிடம் படிப்பேன் அனால், கடந்த 7 வருடமாக அனுபவபூர்வமாக உணர்ந்தேன். ஒரு படத்தில்,நடிகர் ரமேஷ்கண்ணா சொல்வார்! ஜோசியம் பொய் சொல்லாது.அனால், ஜோசியக்காரன் பொய்சொல்வான் என்று. இதுவும் உண்மைதான். ஆகவே,நன்கு கற்று தேர்ந்த ஜாதக கணிப்பாளர்களிடம் நாம் ஜாதகத்தை அலசி ஆராய்ந்து,குறைகள்,இருந்தால், பரிகாரம்,செய்து, அதே நேரத்தில், நம் முயற்சிகளை கைவிடாமல் இறுதிவரை உழைப்புக்கு முன்னுரிமை கொடுத்து, இறுதியாக, இறைவன் மீது நம்பிக்கை வைத்து வாழ்கையை சீராக அமைத்து ,கொடுக்கப்பட்ட கடைமைகளை செய்து முடிப்போம்.

என்னைப் பொருத்தவரை, இந்த மாதிரி பல‌
ந‌ம்பிக்கைகள், ஏதோ எதுகை மோனையாபன‌
வெறும் வார்த்தை ஜாலங்கள் தான். எப்போதோ
நடந்த ஒரு சில சம்பவங்களை வைத்துக்கொண்டு
நம்பிக்கைகளை வளர்த்துக்கொள்வது விபரீத விளைவுகளை
உருவாக்கும்!

உதாரணத்துக்கு "அமாவாசையில்
பிறந்தவர்களை நம்பகக்கூடாது" என்ற கருத்து. அப்படி என்றால்
ஒட்டுமொத்தமாக அமாவாசையில்
பிறந்தவர்கள் எல்லோருமே எமாற்றுக்காரர்களா? எத்தனை அபத்தமான‌
நம்பிக்கை. இன்னும் சிலர், குறிப்பிட்ட நட்சத்திரத்தில் குழந்தை
வேண்டும் என்பதற்க்காக, சிசேரியன் அறுவை சிகிச்சை கூட‌
நாள் நட்சதிரம் பார்த்து செய்து கொள்கிறார்கள் என்று கேள்விப் பட்டேன்.


இதுமாதிரி வீண் நம்பிக்கைகள், ஜோதிட ர்க‌ளின்
மீது நம்பிக்கைகள் இதனால் வாழ்வில் வெற்றி பெற்றவர்களை விட, காசை விரயமாக்கி
மன உளைச்சல் அடைந்தவர்கள் தான் அதிகம். இது என் அனுபவத்தில்
பார்த்தது. விதி வலியது என்றால், விதிப்படி எல்லாம் நடக்கும் என்றால்
ஜோதிடம் எதற்க்கு, பரிகாரம் எதற்க்கு. எல்லாம் வெறும் பணம் பறிக்கும்
வழிகள் தான்.

சில வருடங்கள் முன்னால் சுனாமி வந்தபோது, ஒரு சில மணி நேரங்களில்
பல் நாடுகளில் லட்சக்கணக்கான் மக்களின் உயிர்
பறி போயிற்று. அப்படி என்றால், அவர்கள் எல்லாரும் ஒரே மாதிரி ஜாதகக் கோளாறு
உள்ளவர்களா? ஏன் ஒரு ஜோதிட சிகாமணி கூட முன் கூட்டியே சுனாமியைப் பற்றி
எச்சரிக்கவில்லை?


Next Post Next Post Home
 
Back to Top