( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

இது கண்டணத்துக்குரியது!

  • தற்போது பெரும்பாலான கோவில்களில் டைல்ஸ் ஒட்டபடுகிறது,
  • அவற்றை கோவில் கருவறை முதல் அனைத்து பகுதிகளிலும் ஒட்டி விடுகிறார்கள் .
  • அது மட்டும் இல்லாமல் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் போன்ற கோவில்களிலும் தூண்களுக்கு வார்னிஷ் அடித்து பல நுற்றண்டுகளாக இருந்துவந்த சிறப்பை கெடுத்து விடுகிறார்கள்.
  • கோவில்களில் பதிக்கப்பட்டுள கற்களில் நடப்பதால் உடலின் ரத்த ஓட்டம் சீராகும்.
  • ஆனால் டைல்ஸ் மனிதனுக்கு உடல் நலனுக்கு தீமை தருகிறது. அது மட்டும் இல்லாமல் பழங்காலத்தில் எந்த வசதியும் இல்லாதபோது பாறைகளில் இருந்து கற்களை எடுத்துவந்து நடப்பதற்கு பதித்துள்ளனர் .
  • ஆனால் தற்போது பத்துரூபாய்க்கும் இருபதுரூபாய்க்கும் டைல்ஸ் வாங்கி கற்களின் மீதும் கருவறைலும் ஒட்டி விடுகிறார்கள் இவற்றை பாக்கும்போது வருத்தமாக உள்ளது .
  • இதுபற்றி தாங்கள் கண்டிப்பாக ஒரு பதிவு போடவேண்டும் .
பெயர் சொல்ல விரும்பாத வாசகர்

  ன்புள்ள நண்பரே முதலில் உங்களது இந்த கருத்துக்கு தனி பதிவு தான் போட நினைத்தேன் ஆனால் மனிதனை அவசரமும் பணிசுமையும் பற்றி கொள்ளும் போது நினைத்ததை செய்ய முடியாமல் போகிறது

 அதனால் தான் இதை உங்களது கேள்வியாக எடுத்து கொண்டு பதில் சொல்கிறேன்

  ஆரம்ப காலத்தில் நமது பாரத திரு நாட்டில் ஆலயங்கள் வழிப்பாட்டு கூடங்கள் என்பது மலை அடிவாரமாகவோ மலை முகடாகவோ கடல் மற்றும் நதிக்கரை ஓரமாகவோ தான் இருந்தது

  ரம்யமான வனப்பகுதிகளும் மக்களின் வழிப்பாட்டிற்கு ஏற்ற இடம்மாக கருதப்பட்டது

  ஆதி காலத்தில் வாழ்ந்த புராண புருஷர்கள் தங்கள் வாழ்நாளில் பல சாதனைகள் செய்ததாக படித்திருப்பிர்கள் ஆனால் அவர்களால் ஆலயங்கள் எதுவும் கட்டப்பட்டதாக படித்திருக்க முடியாது


 உதாரணமாக ராமர்,கிருஷ்ணர்,தர்மர்,கர்ணன் போன்ற யுக புருஷர்கள் யாராவாது கோவில் கட்டினார்கள் என்று மகாபாரதத்திலோ ராமாயணத்திலோ எந்த ஆதாரமும் சொல்லப்பட வில்லை

  வேதங்களில் கூட ஆலயங்கள் உருவாக்கப் பட்டதாக தகவல் இல்லை

  புராண காலத்திற்கு பிறகு தான் ஆலயங்கள் உருவானதாக தெரிகிறது

  அதாவது ஆகம காலத்தில் தான் முறைப்படியான கோவில்கள் உருவானதாக சொல்லலாம்

  ஆரம்ப காலகட்டத்தில் மக்கள் செம்மண்ணை குழைத்தே கோவில் கட்டி இருக்கிறார்கள்

  அதன் பிறகு தான் சுட்ட செங்கல்கள் கொண்டு கட்டப்பட்டு இருக்கிறது


  கருங்கல்லை செதுக்கி ஆலய கட்டுமானதிற்கு பயன்படுத்தியது சுமார் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்து தான்

  நமது தமிழகத்தில் அப்போது இருந்த பல சிவாலயங்களும் பெருமாள் கோவில்களும் செங்கல்கள் கொண்டே கட்டப்பட்டு இருந்ததாக சங்க இலக்கியங்கள் பல சான்று தருகின்றன

  மாமன்னன் ராஜா ராஜா சோழனின் காலம் தொட்டே ஆலய நிர்மாண பணிகளுக்கு முழுக்க முழுக்க கற்கள் பயன்படுத்த பட துவங்கினர்

  வடக்கத்திய கட்டிட கலை தமிழகத்தில் வந்த பிறகு கோவில் பணிகளுக்கு கிரானைட் மற்றும் மார்பல் கற்கள் பயன் பட துவங்கி இருக்கிறது

 வடமாநிலங்களில் பல கோவில்கள் பளிங்கு கற்களாலேயே எழுப்ப பட்டிருப்பதை காணலாம்


  அதாவது ஆலய நிர்மாணம் என்பது காலம் தோறும் பல மாற்றங்களுக்கு உள்ளாகியே வளர்ந்து வருகிறது

 எனவே புதியதாக கட்டப்படுகின்ற கோவில்களில் பக்தர்களின் விருப்பப்படி டைல்ஸ் பதிக்கப்படுவதை நான் எதிர்க்க வில்லை

  ஆனால் பழைய புராதான ஆலயங்களில் புதுமையை புகுத்துகிறேன் என்று யாராவது செயல் பட்டால் அது கண்டணத்துக்குரியது

  அதுவும் பழைய கோவில்களில் கருவறைகளில் மாற்றம் செய்ய நினைப்பது மன்னிக்க முடியாத குற்றமாகும்

 இதை அரசும் மக்களும் கண்டிப்பாக தடுக்க வேண்டும்

 மேலும் புதிய கோவில்களில் கருவறையில் டைல்ஸ் பதிப்பது தவறு என எனக்கு தோன்றவில்லை


   காரணம் ஆகமங்களில் ஒரு கருவறை இத்தனை அடி நீளத்தில் இத்தனை அடி அகலத்தில் இத்தனை அடி உயரத்தில் கட்டப்பட வேண்டும் என்ற நியதி வகுத்து சொல்லப்பட்டிருக்கிறதே தவிர கருவறை சுவர்கள் இதனால் தான் கட்டப்பட வேண்டும் என்று எதிலும் சொல்லியிருப்பதாக நான் அறிய வில்லை

 மேலும் நவீன முறைப்படி ஆலயங்களை கட்டுவதினால் இறை சானித்துவம் கிடைக்குமா என்று சிலர் யோசிக்கலாம்

  இறை சானித்துவத்தை கோவிலுக்குள் ஈர்ப்பது கோபுர கலசங்களும் விக்ரக பீடத்தில் ஸ்தாபிக்க பட்ட மூல சக்கரத்தின் வீரியமே ஆகும்

 இவை இரண்டும் சரியாக இருந்து விட்டால் நேற்று கட்டிய ஆலயமாக இருந்தாலும் ஆயிரம் வயதுடைய கோவிலாக இருந்தாலும் கடவுள் அருள் ஒன்றாகவே கிடைக்கும்

   எனவே நாம் புதுமையை வரவேற்கலாம் எந்த சூழலிலும் பழமையை அளித்து அதன் மேல் எழும்பும் புதுமையை ஏற்கவே முடியாது

  இதற்கான விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டியது நமது கடமை

+ comments + 16 comments

Anonymous
08:20

மிகவும் நன்றி குருஜி

உண்மையான + காலத்திற்கேற்ற பதில்..

வாழ்த்துக்கள்..

நன்றி குருஜீ..

http://sivaayasivaa.blogspot.com

சிவயசிவ

THIRUMURUGAN
09:53

அய்யா. ஒன்னு வேணும் அப்படிங்கனும் அல்லது வேணாம் அப்படிங்கனும்.
வேணும் ஆனா வேணாம் அப்படிங்கறது பதில் அல்ல.
நீங்க சொல்லும் கலசமும், மூலச்சக்ரமும் அதனை உருவக்குபவனின் இடத்திலேயே இறை சக்தியை ஈர்க்கலாமே.
ஆனால் அப்படி நடப்பதில்லை. காரணம் ஒவ்வொரு கல்லுக்கும் ஒரு விதமான சக்தி உண்டு. அப்படி பார்த்தல் ஏன் விக்ரகத்தை கல்லால் செய்ய வேண்டும். அதனையும் மண்ணிலோ, மர்பிழிலோ ஏன் வெறும் காகித கூழிலோ செய்யலாமே.
கருங்கல்லின் இயல்பு உங்களுக்கு தெரியாதது அல்ல. அதன் சக்தியை தக்க வைத்து வெளியிடும் தன்மை பற்றி பலரும் சொல்ல கேள்விபற்றிக்கிறேன்.
தங்களுக்கு கொஞ்சமாக தெரிந்த விசயங்களை கூட விலாவாரியாக விளக்கும் தாங்கள் ஏன் இப்படி மாற்றி பேசுகிறீர்கள் என்று தெரியவில்லை.
ஒரு வேலை நீங்கள் கட்டியுள்ள கோவிலிலும் யாரவது ஒரு ஸ்பான்சர் மார்பிலே போட்டுதந்துள்ளாரா?

Good message, Guruji!!

Anonymous
13:30

”சமச்சீர் கல்வி தரம் குறைவானது” என திட்டமிட்டு பரப்பப்படும் அவதூறுகளை கேள்வியேதும் கேட்காமல் ஏற்பவர்கள் இந்த கட்டுரையை வாசித்து பயன்பெறட்டும் !http://www.vinavu.com/2011/07/08/samacheer-kalvi-syllabus/#comment-45425

18:40

கருங்கல் கட்டிடங்கள் வெயில் காலத்தில் குளிர்ச்சியையும், குளிர்காலத்தில் வெப்பத்தையும் தரவல்லவை. கருங்கல் தரையில் செருப்பணியாமல் நடப்பது அக்குபங்சர் முறையில் உடலுக்கு நலத்தைத் தருகிறது. தரையில் டைல்ஸ் போடுவது வழுக்கி விழுவதற்கு ஏதுவாகிறது. சுவர்களில் அழுக்கைத் துடைப்பதற்கு எளிதாக இருக்கும் என்று டைல்ஸ் பதிக்கிறார்கள். எனவே தரையில் மட்டுமாவது டைல்ஸ் போடாமல் இருக்க வேண்டும் எனக் கருதுகிறேன்.

உண்மையில் நீங்கள் சொன்னதை போல் ஆகமவிதிகளின் படி கோவிலை கட்டினால் போதுமானாது. ஆனால் நான் பழைய கால கோவிலிருற்க்கு (குறிப்பாக சென்னையில், திருவான்மீயுர் மருதிஸ்வரர், மயிலை கபாலீஸ்வரர் ஆலயங்கள்) செல்லும் போது கிடைக்கும் திருப்தி ஏனொ புதிதாக கட்டப்பட்டிருக்கும் மார்பல் கோவிலுக்கு போகும் போது கிடைப்பதில்லை.

பழைய கோவில்களை தயவு கூர்ந்து அதான் பழைமை மாறாமல் பாதுகாப்பது நமது கடமை.


மேலும் நான் அறிந்ததிலிருந்து,

சிவன் கோவிலில் நாம் ஒரு வித உஷ்ணத்தை எல்லா பருவ நிலைகளிலும் காணலாம். அதே போல் விஷ்ணு ஆலயத்தில் எல்லா பருவ நிலைகளிலும் ஒரு வித குளிர்ச்சியை உணரலாம். சிவன் எப்பொழுதும் உஷ்ணமானவர், விஷ்ணு குளிர்ச்சியானவர் இதை ஆலயத்தின் கட்டுமானத்திலேயே வெளிபடுத்தி இருப்பது சிறப்பு. இவை அவ்வாலையத்தின் கட்டுமானத்தையும் அதற்க்கு பயன்படுத்தப்பட்ட காற்களையும் கொண்டே அமைக்கிறது.

எனவே சிறப்பு மிக்க ஆலயங்களின் சிறப்புக்களை கெடுக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்

Good post sir thank you..........

// இறை சானித்துவத்தை கோவிலுக்குள் ஈர்ப்பது கோபுர கலசங்களும் விக்ரக பீடத்தில் ஸ்தாபிக்க பட்ட மூல சக்கரத்தின் வீரியமே ஆகும் //

இந்து மார்க்கம் மோசமான மோசடி மார்க்கம் என்பதற்கு இந்த வரிகளே சாட்சி;தகடுகளையும் சக்கரங்களையும் நம்பி இந்த மார்க்கம் இருப்பதை நினைத்தால் அவமானமாக இருக்கிறது.

Anonymous
18:09

Dear Sir,
Thanakku thane guruji endrum yogi endrum peyar chuttikkondu chila perai chhedargalaka kondu ellam therindhavargalaippondru nadikkum nabare.
Padikkathavar, veshadhari enbhadhu nidharsanamaka therigirathu. Kovilkal enbadhu manithanal akkappattathu. athuvum mannargalal selavanthargalal akkappattathu. Matrangal manithan vazhvil erpatumpodhu athu ellavatrilum parinamikkirathu
mayam manthiramellam pesi mayakkum ungalukku etharkkaga mobile? Yogikalukku mobile thevaiyillai internet thevaiyillai! yogic powersinal anaivarudmum pesalam!!!!

balaravi@yahoo.com
Ungalaippondravargalal sanatana dharmathukko thani manithanukko oro pirayojanamum illai. Panththukkagavum sila pal vishayangalukkaga ungalai sutri kakkayaga irukkum men& womenukku enne payan endru ukikkamudikirathu!

Anonymous
09:33

மேஷ ராசிக்காரர்கள் வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகனையும், ரிஷப ராசியில் பிறந்தவர்கள் மஹாலஷ்மியையும், மிதுனத்தில் பிறந்தவர்கள் மஹாவிஷ்ணுவையும், கடகத்தில் பிறந்தவர்கள் பார்வதி தேவியையும், சிம்மத்தில் பிறந்தவர்கள் சிவபெருமானையும்,
கன்னியில் பிறந்தவர்கள் வெங்கடாஜலபதியையும்,
துலாமில் பிறந்தவர்கள் அலமேலு தாயாரையும்,
விருச்சிகத்தில் பிறந்தவர்கள் பாலமுருகனையும்,
தனுசில் பிறந்தவர்கள் தஷ்ணாமூர்த்தியையும்,
மகரத்தில் பிறந்தவர்கள் ஐயப்பனையும்,
கும்பத்தில் பிறந்தவர்கள் சாஸ்தா என்ற ஐயனாரையும்,
மீனத்தில் பிறந்தவர்கள் பிரகஸ்பதி என்ற குருவையும் வழிபட வேண்டும்.

திருக்கைலயங்கிரி என்ற தமிழ் இலக்கியம் போற்றும் திரிக்கைலாய மலை உள்ள பிரதேசம்தான் பூலோக சொர்க்கம்.

இது திபெத் பகுதியில் உள்ளது. சீனாவின் ஆக்கிரமிப்பிற்கு உட்பட்ட எல்லைப் பிராந்தியம்; `கைலாஸ் மானஸரோவர் எனும் இப்பிரதேசம்.

பாரதத்தின் கலை - கலாசார ஆன்மீகத்துறைகளுக்கு ஆதார சக்தியாக விளங்கி வந்திருக்கிறது இந்தப் பூலோக சொர்க்கம்.

இதற்கு பாரதத்தில், வழங்கிய புராதனப் பெயர் `த்ரிவிஷ்டபம் (திப்பெத்). சிருஷ்டியின் தொடக்கம் இப்பிரதேசத்தில் தான் ஏற்பட்டது என்று ரிக் வேதம் கூறுகிறது.

பூமியில் பேரதிர்வு ஏற்பட்டு, இமயமலை எழுந்ததும், கடல்கள் உருவானதும் இப் பகுதியிலிருந்துதான். ரிக் வேதத்தில் இத்தகவலைத் தரும் பல சூக்தங்கள் இருக்கின்றன.

`த்ரய:ஸுபர்ணா உபரஸ்ய மாயூ நாகஸ்ய ப்ருஷ்ட்டே. அதி விஷ்ட பிச்ரிதா:.. என்று தொடங்கும் சூக்தம், இந்தக் கருத்தை வெளியிடுகிறது.

``மூன்று தைவ சக்திகள் - அக்னி இடி மின்னல், சூரியன் இங்கு ஒன்று சேர்ந்து இயங்கியதால் ஜீவராசியின் சிருஷ்டி தொடங்கியது. இதுதான் சொர்க்க லோகம்;

இங்கு அமிர்த சக்தி இருக்கிறது. ஜீவர்கள் இந்த அமுத சக்தியைப் பெற்று வளர்கின்றன. இதனாலேயே இப்பகுதியை `த்ரவிஷ்டபம் (மூன்று தைவ சக்திகள் ஒருமித்த சொர்க்கம்) என்று அழைக்கிறோம்.

மகாபாரதத்தில் வியாச முனிவர் இந்த திப்பெத் பிரதேசத்தை `த்ரதவிஷ்டபம் என்றே குறிப்பிட்டு, ஆர்ய வர்த்தத்தின் நடுப்பகுதி, மிகப் புனிதமான புண்ய பூமி என்று கூறியிருக்கிறார்.

கிம் புருஷவர்ஷம். கின்னரதேசம், கந்தர்வ லோகம் என்றெல்லாம் இப்பகுதியில் உள்ள பிரதேசங்களை வர்ணிக்கிறார்.

கைலாஸ பர்வதத்தை ``ஹேம கூடம் என்று மகாபாரதமும் `கிரௌஞ்ச பர்வதம் என்று வால்மீகி ராமாயணமும் குறிப்பிடுகின்றன.

1950 வாக்கில் இப்பகுதியுடன் கிட்டத்தட்ட எண்பதாயிரம் சதுர மைல் பரப்புள்ள இந்தியப் பிரதேசத்தை சீனா ஆக்கிரமித்துக் கொண்டு விட்டதால் 1962-ல் ஏற்பட்ட சீனப் படையெடுப்பிற்குப் பின் கைலாஸ் மானஸ ரோவர் புனித யாத்திரை தடைப்பட்டு விட்டது.

-திரு. சௌரி எழுதிய `இந்தியாவின் கலையும் கலா சாரமும் என்ற நூல் - பக்கம் 145, 146 (வானதி பதிப்பக வெளியீடு)

நமது கேள்வி இதுதான்

பூலோக சொர்க்கம் என்று போற்றப்படுகின்ற இடம்! சிவபெருமான் உறைவதாகக் கூறப்படுகின்ற இடம்! மூன்று தைவ சக்திகள் ஒன்று கூடுவதாகக் கூறப்படும் இடம்.

இவ்வளவு அற்புத சக்தி வாய்ந்த இடத்தை அந்நியன் எப்படி ஆக்கிரமித்தான் - அதுவும் கடவுள் நம்பிக்கை இல்லாத நாத்திகனான சீனாக்காரனால் எப்படி ஆக்கிரமிக்க முடிந்தது?

அவன் படை எடுத்துவந்த நேரத்தில் சிவபெருமான் என்ன செய்து கொண்டிருந்தான்?

திரிபுரத்தை அவன் சிரித்தே அழித்ததாகக் கதை கட்டி இருக்கின்றார்களே - அந்த அபார சக்தி என்ன ஆயிற்று?

உண்மையிலேயே சிவபெருமான் என்று ஒருவன் இருந்து அவன் அபார சக்தி உடையவனாகவும் இருப்பது உண்மையானால், சீனாக்காரன் அந்த இடத்தைக் கைப்பற்றி இருக்க முடியுமா? இதிலிருந்து என்ன தெரிகிறது?

சீனாக்காரன் கையில் சிக்கிய சிவபெருமானும் ! சொர்க்க லோகமும் !! எப்போது எப்படி மீட்பது ?

//அதுவும் பழைய கோவில்களில் கருவறைகளில் மாற்றம் செய்ய நினைப்பது மன்னிக்க முடியாத குற்றமாகும்

இதை அரசும் மக்களும் கண்டிப்பாக தடுக்க வேண்டும்

மேலும் புதிய கோவில்களில் கருவறையில் டைல்ஸ் பதிப்பது தவறு என எனக்கு தோன்றவில்லை//

இதுவே என்னுடைய கருத்தும்.. எங்கள் ஊரில் உள்ள பழமை வாய்ந்த ஒரு முருகன் கோவில் புதுமைக்கு மாறாமல் அப்படியே இருப்பதால் தான் அதன் அழகு குறையாமல் இருக்கிறது. எனக்கு அடிக்கடி தோன்றும் இதை புதுமை என்கிற பெயரில் டைல்ஸ் ஒட்டி கெடுத்து விடுவார்களோ என்று..

அதே போல மார்பிள்ஸ் ஒட்டி புதிதாக கட்டப்பட்ட ஒரு கோவிலும் உள்ளது...அதுவும் அருமையாக உள்ளது. எனவே நீங்கள் கூறுவதை அப்படியே ஏற்கிறேன்.

mravi
11:43

அறிந்துகொள்ள வேண்டிய, அவசிய தகவல். நன்றி.

Please introduce software in the post a comment column,so that we can diretly type our comments in Tamil-using Bamini bonds, Why toggle between English and Tamil ?


Next Post Next Post Home
 
Back to Top