Store
  Store
  Store
  Store
  Store
  Store

ஆடை ஆபரணம் ஆண்டவனுக்கு வேண்டுமா...?

   டவுள் சிலைகளுக்கு நகைகள் போடுவதும், பட்டாடை அணிவிப்பதும் வீண் ஆடம்பரம் அல்லவா?

 அந்த செலவிற்கு பசியால் வருந்தும் ஏழைகளுக்கும் முதியோர்களுக்கும் உதவலாம் அல்லவா என்று தோன்றும்

 அது சரியான சிந்தனை தான் ஆனால் இறைவனுக்கு காணிக்கை செலுத்துவதில் வேறொரு காரணமும் உண்டு

தாய் தந்தையர் இடத்திலும் மனைவி மக்கள் இடத்திலும் நாம் அன்பு காட்டுவது எதற்காக?


  உண்மையில் ஆழமாக சிந்தித்தால் அந்த அன்பில் அவர்களின் நலம் இருப்பதை விட நமது சுயநலமே அதிகமாக இருப்பதை உணரலாம்.

   பெற்றவர்களுக்கு சோறு போடாதவன் இவன்

 பெண்டாட்டி பிள்ளைகளை பாதுகாக்காதவன் இவன்  என ஊரார் நம்மை பார்த்து ஏசாமல் இருப்பதற்கும்

 ஆயிரம் கஷ்டம் வந்தாலும் சொந்த பந்தங்களை கைவிடாமல் பாதுகாக்கிறான் பார் என மற்றவர்கள் புகழ்வதை ஏற்பதற்கும் தான் நாம் அன்பு செலுத்துகிறோம்.

 அல்லது எனது பாசத்திற்கு உரியவர்கள் கஷ்டப்பட்டால் என் மனம் தாங்க முடியாத வேதனையை தருகிறது


 அவர்களை விட்டு விட்டு நான் மட்டும் அனுபவிக்கும் சுகம் நிமிர்ந்து பார்க்க முடியாத குற்ற உணர்வை தருகிறது

 அல்லது அவர்கள் நம் மீது காட்டும் அன்போ நாம் அவர்கள் மீது காட்டும் அன்போ நமக்கு சந்தோசத்தை தருகிறது .

  மனிதனாக பிறந்த ஒவ்வொருவனும் இன்பமாக வாழ்வதற்கு என்ன வழி என தேடுவதிலேயே காலத்தை கழிக்கிறான். 

  தத்தி தத்தி நடந்து வரும் பச்சை குழந்தைக்கு பட்டாடை அணிவித்து பார்ப்பதில் எனக்கு சந்தோஷம்

  சந்திரன் போல் பிரகாசிக்கும் அழகான மனைவியின் முகம் இன்னும் மலர வேண்டும் என்பதில் எனக்கு சந்தோஷம்,

  தள்ளாடி நடக்கும் தகப்பனாரின் தோள்களை அரவனைத்து நடப்பதில் எனக்கு சந்தோஷம்.


   கடன் சுமையில் மூச்சு விட முடியாமல் தத்தளிக்கும் நண்பனின் துக்கத்தை போக்குவது எனக்கு சந்தோஷம். 

   இப்படியெல்லாமே என் சந்தோஷத்திற்காக தான் எனது செயல்பாடுகள் அமைகின்றன.

  மனித மனம் எல்லா நேரங்களிலும் தன்னை மட்டுமே பிரதானமாக கொண்டு சிந்தனை செய்கிறது.

  இறைவழிபாட்டிலும் கடவுளுக்கு நகை போடுவதிலும் ஆடை அணிவிப்பதிலும் நமது இன்பமே மேலோங்கி நிற்கிறது. 

  கண்ணாடியில் நமது முகத்தை பார்க்கிறோம்.  பொட்டு இல்லாத நெற்றி மொட்டையாக தெரிகிறது.

 அதனால் கண்ணாடிக்கு யாராவது பொட்டு வைப்பார்களா?

  பிம்பத்தின் அவலட்சணம் என்பதும் அழகு என்பதும் நம்மை சார்ந்ததாகவே இருக்கிறது.

 நான் முட்டாள்கள் இடத்திலும், வறியவர்கள் இடத்திலும், நோயாளிகள் இடத்திலும் வாழ விரும்பவில்லை.


 இதனால் அறியாமை விலக நோய் அகல வளமை வளர உழைக்க ஆரம்பிக்கிறேன்.

 இது தான் சமூக சேவையின் அடிப்படை மனோதத்துவம்

 வெங்கடாஜலபதிக்கு போட்ட வைர மாலையும், மீனாட்சி அம்மனுக்கு சாத்திய பட்டாடையும் பார்க்கும் எனக்கு மட்டும் இன்பம் தரவில்லை.  பார்ப்பவர் அனைவருக்குமே தருகிறது.

  மற்றவர்களுக்கு தொல்லை தராத சந்தோஷமே என் சந்தோஷம் என்பதினால் அபிஷேகம் செய்வதிலும் கோடி தீபாரதனை நடத்துவதிலும் என் மனதை மகிழ செய்கிறது என்பது மட்டுமல்ல கொடுக்கும் சுகத்தை இன்னதென எனக்கு காட்டி வளப்படுத்துகிறது.

  அதனால் தெய்வங்களுக்கு கொடுக்கப்படும் நகையும் பட்டும் பரோபகாரத்தின் அன்பின்  வெளிப்பாடேயாகும்.



Contact Form

Name

Email *

Message *