Store
  Store
  Store
  Store
  Store
  Store

இந்தியாவை ஆள்வது பிணம்

   னிதன் கற்காலத்தில் வாழ்ந்த போது தான் சதைக்கு சதை ரத்தத்திற்கு ரத்தம் என்று அலைந்தான் அதனால் தான் அவனை காட்டு மிராண்டிகள் என்று அழைத்தார்கள்

 இன்றைய மனிதன் நாகரிகத்தில் எவ்வளோவோ முன்னேறி விட்டானாம் வான மண்டலத்தையும் தனது அறிவால் அடிமையாக்கி விட்டானாம் கடவுளை கூட உனது படைப்பு தொழிலை நிறுத்து அதை நான் பார்த்து கொள்கிறேன் என்று சொல்லும் அளவிற்கு உயர்ந்து விட்டானாம்

 இது நமக்கு நாமே சூட்டிக் கொள்ளும் பெருமை மிகு பாராட்டுரைகள்

  ஆனால் நிஜம் என்ன? மனிதனது செயலை உன்னிப்பாக கூட அல்ல மேலோட்டமாக பார்த்தாலே அவன் இன்னும் காட்டு மிராண்டி தன்மையில் இருந்து வளர வில்லை என்பதை தெளிவாக காண முடிகிறது


   என்னை ஒருவன் மேடையில் ஏறி நின்று ஏசுகிறான் என்றால் பத்திரிக்கையில் தாறுமாறாக எழுதிகிறான் என்றால் அதற்கு அவனை போலவே நானும் பேசியும் எழுதியும் மறுப்புரை சொல்ல வேண்டுமே தவிர மாறாக அவனை அடிப்பதற்கோ வதைப்பதற்கோ அல்லது வேறு வகை வன்செயலில் இறங்கினேன் என்றால் எனக்கு அறிவில்லை நான் முழு முட்டாள் என்பது அர்த்தமாகும்

 என்னை எதாவது ஒரு வகையில் காய படுத்தியவனையே வன்கொடுமைக்கு ஆளாக்க கூடாது எனும் போது சம்பந்தமே இல்லாத அப்பாவிகளை கொல்வதற்கோ கொடுமை செய்வதற்கோ எனக்கு என்ன உரிமை இருக்கிறது?

 இப்படி உரிமை இல்லாததை செய்ய துணிந்தால் என்னை மனிதனாக யார் ஏற்று கொள்வார்கள்?

 இப்படி மனிதனாக வாழ்வதற்கு எந்த தகுதியும் இல்லாத சில மிருகங்கள் மும்பையில் தொடர் குண்டு வெடிப்புகளை நடத்தி பல அப்பாவி உயிர்களை காவு வாங்கி இருக்கிறார்கள்

 இத்தகைய செயல்களை செய்தது யாராக இருந்தாலும் அவர்களை மனசாட்சி உடைய மனித சமூகம் ஏற்று கொள்ளாது

  அவர்கள் எந்த கொள்கைக்காக இப்படி பட்ட பாதக செயலை செய்திருந்தாலும் அந்த கொள்கைகள் உருப்படாமல் மண் மூடி போக வேண்டும் என சபிக்க தோன்றுகிறது


   மும்பை மக்களுக்கு குண்டு வெடிப்புகள் புதிது அல்ல தாவுத் இப்ராகிம் காலம் முதல் அதை அனுபவித்து வருகிறார்கள்

 ஆனால் இது வரை மத்திய மாநில அரசுகள் இப்படி பட்ட நிகழ்வுகள் தொடரத வண்ணம் தடுக்க துப்பில்லாமல் இருப்பது வெட்க கேடானது

 மக்களை காக்க வகை அறியாத அரசு இருப்பதை விட இல்லாமல் இருப்பதை மேலானது

 தாவுத் கும்பலையும் தாஜ் ஹோட்டல் தாக்குதல் கும்பளையும் இன்னும் முழுமையாக கைது செய்யாத போதே அடுத்த தாக்குதல் நடந்திருக்கிறது

இதையும் வழக்கம் போல் சில நாட்கள் கார சாரமாக பேசி விட்டு மறந்தும் போக போகிறார்கள்

 ஆனால் இதில் உயிரை உறவை உடல் உறுப்புகளை பறி கொடுத்தவர்கள் நிலைமையை யாரால் எப்படி ஈடு செய்ய முடியும்?

 தனது உயிரை போல் மக்களை காக்க வேண்டியது ஒரு அரசாங்கத்தின் கடமை என்று வள்ளுவர் சொல்லுவார் அப்படி காக்க முடியாத அரசனோ அரசாங்கமோ பிணத்திற்கு சமம் என்றும் அவரே சொல்லுவார் 


 ஆகவே வள்ளுவரின் கருத்து படி நம் நாட்டில் இப்போது பிணத்தின் ஆட்சிதான் நடை பெற்று கொண்டிருக்கிறது

 இதையே பாரதியார் பேய் அரசாட்சி செய்தால் பிணம் தின்னும் சாஸ்திரங்கள் என வேறொரு கோணத்தில் எளிமையாக எரிமலையாக சொல்வார்

 அதையே தான் இப்போது நாமும் சொல்ல வேண்டி உள்ளது





Contact Form

Name

Email *

Message *