( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )21 ஞாயிறு ஜூலை அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

ஜாதகம் பார்த்து திருமணம் செய்யலாமா...?

   ல்யாணம் கட்டி குழந்தை குட்டிகள் பெற்று வாழ்வதில் எவ்வளவு சிக்கல்கள் இருக்கிறது எத்தனை பிரச்சனைகள் இருக்கின்றன என்பது அனுபசாலிகளுக்கு நன்றாக தெரியும்

 கள்ளி செடியின் முள் குத்துகிறது என்பதற்காக எந்த ஒட்டகமாவது அதை விட்டு விடுமா? அதை போல தான் கஷ்டங்களும் துயரங்களும் நிறைந்ததாக இல்வாழ்க்கை இருந்தாலும் அதை பல பேர் விரும்பி ஏற்று கொள்கிறார்கள்

  சரியான வயதில் திருமணம் நடக்காதது பலருக்கு பெரிய குறையாகவே இருக்கிறது

  அவனுக்கு என்ன சார் வேலை இருக்கிறதோ இல்லையோ கல்யாணம் முடிந்து விட்டது வாழ்க்கையில் எப்படியோ ஓர் இடத்தில் உட்கார்ந்து விட்டான்


   நானும் தான் இருக்கிறேனே கைநிறைய சம்பாதிக்கிறேன் பார்ப்பதற்கும் ஒன்றும் மோசம் இல்லை இது வரை இருபத்தைந்து இடங்களில் ஏறி இறங்கி பஜ்ஜி சொஜ்ஜி சாப்பிட்டதோடு சரி

 பெண்ணுக்கு என்னை பிடித்தால் எனக்கு பிடிப்பதில்லை எனக்கு பிடித்தால் பெண்ணுக்கு பிடிப்பதில்லை எல்லாமே சேர்ந்து வந்தால் ஜாதகம் வரதட்ச்சனை என்று எதாவது ஒரு முட்டுக்கட்டை வந்துவிடுகிறது என அங்கலாயிப்பவர்களை தினசரி காண்கிறேன்

 எல்லாம் பொருந்தி வந்து அதாவது ஜாதகம் மற்றும் பொருளாதார அபிலாசைகள் நிறைவாகி திருமணம் முடிந்தால் உடனடியாக கணவன் மனைவிக்கிடையில் சின்ன சின்ன உரசல்கள் பெரிசாகி வீடே சாம்பலாகும் படி பற்றி கொள்கிறது

    வழக்கு பஞ்சாயத்து நீதிமன்றம் என்று ஏறி இறங்கி தங்களது ஈகோவை பெரிதாக்கி கொண்டு விவாகத்தை ரத்து செய்து விடுகிறார்கள் 


  பெண்ணும் பிள்ளையும் சம்பந்த பட்ட வீட்டு பெரியவர்கள் நல்லப்படியாக ஜாதக பொருத்தம் பார்த்து நல்ல நாளும் கிழமையும் பார்த்து தானே கல்யாணம் செய்து வைத்தோம் இப்படி இருவரும் சண்டி மாடுகளாக முட்டி மோதிக்கொள்கிறார்களே என அழுது புலம்புகிறார்கள்

 இன்றைய காலத்தில் இப்படி பட்ட அழுகையும் புலம்பலையும் தமிழக வீதிகள் முழுவதும் அடிக்கடி கேட்க்க முடிகிறது

   பொதுவாகவே இளைய தலைமுறையினருக்கும் முதியவர்களுக்கும் ஜாதகம் பார்த்து நடை பெரும் திருமணம் கூட சண்டையில் பிரிவில் போய் நிற்கிறதே பிறகு ஜாதகம் பார்த்தால் என்ன பார்க்காவிட்டால் என்ன என்ற சந்தேகம் குழப்பம் சலிப்பு அவ்வப்போது உண்டாகி விடுகிறது

   நானும் பிரிந்த தம்பதிகள் பலரை பார்த்திருக்கிறேன் அவர்களுக்கு கூட ஜாதக பொருத்தம் பார்த்து தான் திருமணம் ஆகியிருக்கிறது


  ஆனால் மணவாழ்க்கையை முறித்து கொண்டதோடு அல்லாமல் ஜென்ம விரோதிகளாகவே இருக்கிறார்கள்

   பின்னர் எதற்க்காக மணப்பொருத்தம் பார்த்து கால நேரத்தை வீணடித்து கொள்ளும் ஒரு வழக்கத்தை நமது முன்னோர்கள் ஏற்படுத்தினார்கள் என்று சிந்திக்கும் போது ஒரு உண்மை தெளிவாகியது

   பொதுவாக பெண்ணுக்கோ பிள்ளைக்கோ வரன் வந்து உடன் வரனின் ஜாதகத்தை எடுத்து கொண்டு ஜோதிடரிடம் செல்கிறோம் பெருவாரியான ஜோதிடர்கள் விவாக தசவித பொருத்தம் என்னும் நட்ச்சத்திர பொருத்தத்தை மட்டும் பார்த்து விட்டு திருமணம் நடத்தலாம் அல்லது வேண்டாம் என்று சொல்லி விடுகிறார்கள்

   நாமும் அதை நம்பி திருமணத்தை அவசரப்பட்டு நடத்தி விட்டு நிதானமாக கஷ்டப்படுகிறோம்

  அதன் பிறகு ஒரு பாவமும் அறியாத ஜோதிடத்தின் மீது காலம் முழுவதும் சேற்றை வாரி பூசும் பணியை செய்து வருகிறோம்


   உண்மையாக திருமண பொருத்தம் என்பது நட்ச்சத்திர பொருத்தம் மட்டும் அல்ல அதையும் தாண்டிய பல விஷயங்களை ஆராய வேண்டும்

   முதலில் ஆண் பெண் இரு ஜாதகத்திலும் எதாவது ஒரு கேந்திரம் வலுப்பெற்று இருக்கிறதா என்பதை பார்க்க வேண்டும்

   அதன் பிறகு ஆயுள் பாவமான எட்டாம் இடமும் களஷ்திர பாவமான ஏழாம் இடமும் சுத்தமாக இருக்கிறதா தீய கிரகங்களின் பார்வை படாமல் இருக்கிறதா என்பதை கவனிக்க வேண்டும்

   அடுத்ததாக பூர்வ புண்ணியஸ்தானம் புத்திரஸ்தானம் ஆகிய ஐந்தாம் இடம் வலுப்பெற்று இருக்கிறதா என்பதையும் ஆராய வேண்டும்

    இது தவிர இருவர் ஜாதகத்திலும் கிரக அமைப்பு லக்கிண அமைப்பு யோக அமைப்பு ஆகியவைகளும் மிக முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டும்


  மேலும் இருவர் ஜாதகத்திலும் திருமண நடைப்பெறும் காலத்திலும் ஒரே தசை நடக்க கூடாது தசா புத்தியும் ஒன்றாக இருக்க கூடாது

 இவைகளை நுணுக்கமாக ஆராய்ந்த பிறகே நட்ச்சத்திர பொருத்ததிற்கு வர வேண்டும்

 இதில் ஒன்றிரண்டு குறைகள் இருந்தாலும் பரவாயில்லை ஆனால் ரட்ச்சி பொருத்தம் என்ற மாங்கல்ய பொருத்தம் கண்டிப்பாக இருக்க வேண்டும்

  அதன் பிறகே திருமணத்திற்கான அடுத்த கட்ட செயலை துவங்க வேண்டும்

 இன்னும் சிலர் மிருகசீரிஷம் மகம் சுவாதி அனுஷம் ஆகிய நட்ச்சத்திரங்களில்  பிறந்த ஆண் பெண்ணிற்கு எந்த வித விவாக பொருத்தமும் பார்க்காமல் திருமணம் செய்யலாம் என சொல்கிறார்கள்

 இது முற்றிலும் தவறுதலான நடைமுறையாகும் இந்த நட்ச்சதிரங்களில் பிறந்தவர்களுக்கும் நிச்சயம் நான் மேலை சொன்ன விஷயங்களை அவதானித்தே திருமணத்தை நடத்த வேண்டும்

 அப்படி செய்தால் இறைவன் அருளால் எல்லா திருமணங்களும் நல்லறம் வளர்க்கும் இல்லறமாக திகழும் இதில் சந்தேகம் இல்லை

+ comments + 43 comments

பத்மவினாயகன்
06:02

வணக்கம் அய்யா! நீங்கள் சொல்வது முற்றிலும் சரி. பெரும்பாலான சோதிடர்கள் நட்சத்திர பொருத்தம் மட்டுமே பார்த்து தாராளமாக செய்யலாம் என்று சொல்லி மக்களை குழப்புகின்றனர். எல்லா கூறுகளையும் ஆராய்ந்து சொல்பவர்கள் மிகவும் குறைவு. இதனாலேயே மக்களுக்கு சோதிடம் மீது நம்பிக்கை குறைகிறது. நல்ல பதிவு. மிக்க நன்றி அய்யா!

மிகச் சரியான தகவல்கள் குருஜி..

சில சோதிடர்களும் இந்த தவறான அணுகுமுறையில் இருக்கிறார்கள்.

மக்களுக்கும் 5 நிமிடத்தில் பலன் சொல்லிவிட வேண்டும் என்ற
அவசரம்...

ஆக இந்த இரண்டுமே தவறுக்கு வித்திடுகிறது.

நன்றி.

http://sivaayasivaa.blogspot.com

சிவயசிவ

Baskar-Chennai
09:00

வணக்கம் குருஜி அவர்களே !
மிக அருமையான பதிவு எனினும் ஒரு சிறிய ஐயம் நீண்ட நாளாக என் மனதில் உண்டு
ஒருவரின் ஜாதகம் பார்பதற்கு முன் அந்த ஜாதகம் அவருக்கு பொருத்தமான ஜாதகம்தான என்பதை அறிய என்ன முறைகளை கையாளப்படுகிறது, ஒருவேளை பெற்றோர்கள் தவறான பிறந்த நேரத்தை கொடுத்து ஜாதகம் கணிக்க பட்டு இருக்கலாம் அல்லது சில ஜோதிடர்கள் கணிப்பில் தவறு செய்து இருக்கலாம் வேறுபல காரணங்களால் ஜாதகங்கள் மாற்றி எழுத பட்டிருக்கலாம் உண்மையான ஜாதகம் இது என கண்டறியும் முறை இருக்கிறதா அப்படி இருந்தால் விரிவான விளக்கத்தை தங்களிடம் இருந்து ஒரு பதிவாக வெளியிட்டால் அனைவருக்கும் உபயோகமாக இருக்கும் என கேட்டு கொள்கிறேன்

தமிழ்ப்ரியன் விஜி
10:36

அறிவியல் நம்பிக்கை போய் மூட நம்பிக்கை மேலோங்க ஆரம்பித்து விட்டது .


தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்

தலைப்புக்கு கீழே உள்ள படம் ..... :)... அருமை. முட்டாள் ஹிந்துக்களூக்கு புரிந்தால் சரி. யார் சொன்னாலும் அதை மாற்ற வேண்டாம்.

நாளை எப்படியிருக்கும்? என்பது, அந்த இறைவனைத் தவிர, வேறு யாருக்குமே தெரியாது! அறிந்து கொள்ளவும் முடியாது!!

எத்தனையோ பொருத்தங்கள் பார்த்து, நாள் பார்த்து, நட்சத்திரம் பார்த்து செய்து வைக்கப்படும் எத்தனையோ திருமணங்கள் பாதிவரைகூட நீடிக்காமல் விவாகரத்திலோ அல்லது விவகாரத்திலோ முடிகிறது.

எந்த பொருத்தமும் பார்க்காமல் செய்து வைக்கப்படும் எத்தனையோ திருமணங்கள் கடைசி காலம்வரை சிறப்பாகவும் இருக்கிறது.

எனவே, ஜாதகம் என்பது பொய்!!! இறைவன் நாட்டப்படிதான் எதுவும் நடக்கும் என்பது மட்டும் மெய்!!!

ஜாதகம் / ஜோதிடம் என்பதன் சூட்சுமமே "நிச்சயம் கட்டாயம் இப்படித்தான் நடந்தே தீரும்!! ஒருவேளை நடக்காமலும் போகலாம்" என்பதே.

அதாவது பூவா? தலையா? போட்டுப் பார்க்கும்போது, "நான் அடித்துச் சொல்கிறேன். நிச்சயமாக தலை மட்டும்தான் விழும். அல்லது பூ விழுந்தாலும் விழலாம்!!!" என்பது போல.

இது எப்படி இருக்கு??? (நம்ம ரஜினி ஸ்டைலில்!!!)

நம்ம கனிமொழியின் ஜாதகம், திஹார் சிறை பற்றி ஏன் முன்னெச்சரிக்கை செய்யவில்லை??

நம்ம ஆண்டிமுத்து ராசாவின் ஜாதகம், திஹார் சிறை பற்றி ஏன் முன்னெச்சரிக்கை செய்யவில்லை??

நம்ம நித்தியானந்தாவின் ஜாதகம், அவருக்கு போதாத காலத்தைப் பற்றி ஏன் முன்னெச்சரிக்கை செய்யவில்லை??

ஊருக்கெல்லாம் ஜோசியம் பார்த்து, நீ இந்த இந்த மாதிரி பரிகாரம் செய். செல்வம் கொட்டோ கொட்டுவென்று கொட்டும் என்று ஜோசியம் சொல்லும் ஜோசியக்காரர் மட்டும் அஞ்சுக்கும் பத்துக்கும் சிரமமப்படுகிறாரே!! அதே பரிகாரத்தை அவர் செய்து விட்டு, செல்வ செழிப்பில் அம்பானிக்கு போட்டியாக இருக்க வேண்டியதுதானே???

அந்தக் காலத்தில் மக்களின் அறியாமையை பயன்படுத்திக் கொண்டு சிலர் நாலு காசு பார்த்தனர். அது இந்தக் காலம்வரை சிறிதேனும் தொடரத்தான் செய்கிறது. காலப் போக்கில், மக்களுக்கு அறியாமை முற்றிலுமாக நீங்கிய பிறகு, இந்த கூத்துகள் எல்லாம், முற்றிலுமாக இல்லாமல் போய்விடும்.

prakash
13:41

Abdul Rahman(Dubai), u r wrote all 100% true.Thanks

தவறாக நினைக்க வேண்டாம். சம்பந்தப்பட்டவர்களிடமே நேரடியாக கேட்டு விட்டால், குழப்பம் தீர்ந்து விடும் என்றுதான் கேட்கிறேன்.

ஹிந்து சமூகத்தினர் திருமணம் செய்யும்போது சொல்லுகிற சம்ஸ்கிருத மந்திரத்தின் தமிழாக்கம் குறித்து திராவிட கழக நண்பர்கள் என்னென்னவோ சொல்கிறார்களே!? அது எந்த அளவிற்கு உண்மை என்பதை தெளிவுபடுத்தவும்.

சில திராவிட கழக இணையத் தளங்களுக்கு சென்றால், தொடர்ந்து படிப்பதற்கே அருவருப்பாக இருக்கிறது.

அவற்றின் நம்பகத்தன்மை / உண்மையான தமிழாக்கம் / மொழி பெயர்ப்பு பற்றியும் தெளிவு படுத்தவும்.

இங்கு பலருக்கு சமஸ்கிருதம் தெரியாது. காரணம், உலகில் யார் எந்த மொழியை வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளலாம்,
உதாரணமாக, சீன அதிபர்கூட சிங்களம் கற்றுக் கொள்ளலாம். மஹிந்த ராஜபக்சேகூட மலையாளம் கற்றுக் கொள்ளலாம். அமெரிக்க அதிபர்கூட அரபி கற்றுக் கொள்ளலாம். ஆனால், சமஸ்கிருதத்தை கற்றுக் கொள்ள மட்டும் தடைகள் உள்ளன??!! அதன் மர்மமும் புரியவில்லை.

//எனவே, ஜாதகம் என்பது பொய்!!! இறைவன் நாட்டப்படிதான் எதுவும் நடக்கும் என்பது மட்டும் மெய்!!!//
அப்போ அத்தனை விவகரத்துக்கும் காரணம் இறைவன் தான்... நல்ல இறைவன் அவன் ஒருத்தரையும் ஒழுங்கா வாழவிடாமல் செய்வது.

//தவறாக நினைக்க வேண்டாம். சம்பந்தப்பட்டவர்களிடமே நேரடியாக கேட்டு விட்டால், குழப்பம் தீர்ந்து விடும் என்றுதான் கேட்கிறேன்.

ஹிந்து சமூகத்தினர் திருமணம் செய்யும்போது சொல்லுகிற சம்ஸ்கிருத மந்திரத்தின் தமிழாக்கம் குறித்து திராவிட கழக நண்பர்கள் என்னென்னவோ சொல்கிறார்களே!? அது எந்த அளவிற்கு உண்மை என்பதை தெளிவுபடுத்தவும்.//

கேட்பதில் தவறில்லை. - இதை விளக்கி http://thiruchchikkaaran.wordpress.com/ ஒரு பதிவு போட்டிருந்தார். அதை அவரிடமே கேட்டு சொல்கிறேன் , காத்திருக்கவும்

//சில திராவிட கழக இணையத் தளங்களுக்கு சென்றால், தொடர்ந்து படிப்பதற்கே அருவருப்பாக இருக்கிறது.
//
அவர்களிடம் இது எந்த வேதத்தில் இருக்கிறது என்று கேளுங்கள் -- ஓடுவார்கள். அல்லது கிறிஸ்துவ(ஆங்கிலேயர் காலத்து) மொழிபெயர்ப்பில் இருந்து எடுத்ததாக் இருக்கும்.

மனு தர்மம் என்பது சட்ட நூல் ஆகும் . அதில் நிறைய இடைச்செருகல்கள் உள்ளது -- அவர்கள் அதைத்தான் காட்டுக்கிறார்கள். (Why Oppose Manu ) வலைத்தளத்தில் உள்ளது .. படித்து பாருங்கள்.

அதேபோல் மிக அதிகமாக இடைச்செருகல்கள் உள்ளது புராணக்கதைகள். யார் யாரொ எழுதியது ... இது பாமரமக்களுக்கு கடவுள்தத்துவத்தை சொல்ல உருவாக்கப்பட்டது...

(வேறொரு பதிவில் -- உங்களின் கேள்வி-- பின் எந்த நூலைப்படிப்பது ? ) வேதம்/ மற்றும் முக்கியமான உபனிஷத்துகள்

//சமஸ்கிருதத்தை கற்றுக் கொள்ள மட்டும் தடைகள் உள்ளன??!! அதன் மர்மமும் புரியவில்லை.//

யார் சொன்னது. சமஸ்கிருதமும் யார் வேண்டுமானாலும் படிக்கலாம்.!

http://www.thesundayindian.com/ta/story/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/54/70/

//கோயில்களின் நகரம் கும்பகோணம்.. பெரிய கடைத்தெருவில் கர்ணகொல்லை அக்ரஹாரத்தில் உள்ளடங்கி இருக்கிறது ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி ஓரியண்டல் மேல்நிலைப்பள்ளி. இங்கு 23 தலித் மாணவர்கள் உள்ளிட்ட 195 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் சமஸ்கிருதம் படிக்கிறார்கள். தமிழ், ஆங்கிலம்போல அதையும் ஒரு மொழியாக அம்மாணவர்கள் கற்கிறார்கள்.. இங்கு பழம் பூ விற்பவர்கள், தட்டுவண்டி வியாபாரிகள், சுமை தூக்குவோர், கொத்தனார், தச்சுவேலை செய்வோர் என சாதாரண பின்னணியிலிருந்து வரும் குழந்தைகளே படிக்கிறார்கள்.ஆசிரியர்களின் ஊதியத்தை மாநில அரசு கவனித்துக்கொள்கிறது. மற்றச் செலவுகளை காஞ்சிமடம் பராமரிக்கிறது.

“எங்கள் பள்ளி ரொம்பவும் நொடிந்துபோய் இருந்த நேரத்தில்தான் பெரியவர் ஜெயேந்திர சுவாமிகள் வந்தார்.. உங்களுக்கு என்ன தேவை என பள்ளிச் செயலரிடம் கேட்டுள்ளார். அதன்பயனாகவே 60 லட்சம் ரூபாய் மதிப்பில் பள்ளிக் கட்டடங்கள் எழுந்துள்ளன. நாங்கள் அதிக பணம் வசூலிக்கக்கூடாது என்று பெரியவர் கட்டளையிட்டுள்ளார்.. ஏழை எளிய மாணவர்கள்தான் ஆர்வத்துடன் அதிகம் படிக்கின்றனர். எந்தப் பள்ளியிலும் இடம்கிடைக்காமல் யார் இங்கு வந்தாலும் எல்லோரையும் சேர்த்துக்கொள்கிறோம்” என்கிறார் தலைமை ஆசிரியர் ஜெ.பாஸ்கரன்.

.. ஏழாம் வகுப்பில் சமஸ்கிருத ஆசிரியர் இல்லாத குறையை தீர்த்துக் கொண்டிருந்தாள் மாணவி வைஷ்ணவி. தலித் சமூகத்தைச் சேர்ந்த இந்த மாணவி ரகுவம்சத்திலிருந்து ஒரு சில வரிகளை எடுத்துக்காட்டி, ரகுவம்சத்து மன்னர்கள் கொடுப்பதற்காகவே சம்பாதித்தார்கள் என்று விளக்கம் சொல்லிக் கொண்டிருந்தாள். இச்சிறுமியின் அப்பா பழக்கடை வைத்திருக்கிறார். சமஸ்கிருத ஆசிரியை எஸ். பத்மாவதி சொல்லித்தந்த பாடங்களை பயிற்சி செய்ய மாணவர்களுக்கு எழுதிக் காட்டுகிறாள். சமச்சீர் கல்விக்காக சமஸ்கிருத பாடத்தைத் தயார் செய்யும் பணிக்காக சென்னை சென்றுள்ளார் ஆசிரியை.

ஆறாம் வகுப்புப் படிக்கும் பிரவின்குமாரின் அப்பா தச்சுவேலை செய்கிறார். சமீபத்தில் நடந்த அரையாண்டுத் தேர்வில் சமஸ்கிருதத்தில் 72 மதிப்பெண் பெற்றிருக்கிறார் பிரவீன். தலித் மாணவியான வளர்மதியின் தந்தை மூட்டைதூக்குகிறார். பத்தாம் வகுப்புப் படிக்கும் சந்தியா, கட்டட வேலை செய்பவரின் மகள். இம்மாணவி கடந்த தேர்வில் சமஸ்கிருதத்தில் பெற்ற மதிப்பெண் 82. இப்பள்ளியின் செயலர் ஆடிட்டர் என். ராமகிருஷ்ணன் தசஇயிடம், “பொதுவாக சொல்லப் போனால் மேல்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்த மாணவர்கள் யாரும் சமஸ் கிருதம் படிக்க முன்வருவதில்லை. வேலை கிடைக்காது என்று ஒதுங்கி விட்டார்கள். ஏழை, எளிய மற்றும் தலித் மாணவர்கள் தான் ஆர்வத்துடன் வருகிறார்கள். இங்கு சாதி, மத வித்தியாசம் கிடையாது. சென்ற ஆண்டு ஒரு முஸ்லிம் மாணவன் சமஸ்கிருதத்தில் முதலிடம் பெற்றான். கடந்த மூன்றாண்டுகளாக எங்கள் மாணவர்கள் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றுவருகிறார்கள்” என்கிறார்.//

http://www.youtube.com/watch?v=4TtODisiKP8
http://www.youtube.com/watch?v=F4kdjHFBvd4&feature=related

இந்தியாவில் வாழும் இந்துக்களுக்காக எழுதப்பட்டதுதான் இந்தப்பதிவு. நான்கில் ஒரு பகுதியாக வாழும் அவர்ணாக்களை இந்தப்பட்டியலில் அடக்க இயலாது தங்களால் அல்லது வேதங்களால். ஏனெனில் அவர்கள் பிறப்பின் அடிப்படையிலான பதிவில் கிடையாது. அவர்கள் தங்களது அப்பா அம்மாவுக்குப்பிறந்தவர்கள் பெரியார் பாணியில். ஜாதகம் என்பது ஒரு சாபக்கேடு. ஜோதிடந்தனை இகழ் என்று உரக்கக்கூறியவன் பாரதி.

அதே போல் தமிழில் சைவசித்தாந்தம்,

http://www.shaivam.org/siddhanta/sta.htm
போய் படித்து பாருங்கள் ...

Anonymous
18:01

///இங்கு பலருக்கு சமஸ்கிருதம் தெரியாது. காரணம், உலகில் யார் எந்த மொழியை வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளலாம்,
உதாரணமாக, சீன அதிபர்கூட சிங்களம் கற்றுக் கொள்ளலாம். மஹிந்த ராஜபக்சேகூட மலையாளம் கற்றுக் கொள்ளலாம். அமெரிக்க அதிபர்கூட அரபி கற்றுக் கொள்ளலாம். ஆனால், சமஸ்கிருதத்தை கற்றுக் கொள்ள மட்டும் தடைகள் உள்ளன??!! அதன் மர்மமும் புரியவில்லை///

நண்பரே சமஸ்கிருதத்தை கற்றுக் கொள்ள மட்டும் தடைகள் என்று யார் சொன்னது நண்பரே நீங்களே சொல்வது போன்று தான் எனக்கு தோன்றுகிறது

மொழி என்பது நமது தேவைகளுக்காக பயன்படுத்தப்பட்டது எந்த இடத்திலும் சமஸ்கிருதம் படிக்க கூடாது என்று எங்கு எழுதியுள்ளது தயவு செய்து நிரூபிக்கவும்

சில பெரியார்பக்தர்கள் பிராமணர்களையும் தங்களையும் வேருபடித்தி காட்டுவதற்க்காக தான் இதை கையில் எடுத்தியுள்ளனர்

எந்த பிராமணர்களும் சமஸ்கிருதம் படிக்க கூடாது என்று சொல்லவில்லை

அதை சொல்வதற்கும் அவர்களுக்கு உரிமைகள் கிடையாது உதாரணமாக ஆங்கிலம் படிக்க கூடாது என்று ஒரு ஆங்கிலயர்கள் சொன்னால் நீங்கள் ஏற்று கொள்விர்களா

சரி இந்த சமஸ்கிருதம் கற்றுக்க கூடாது என்று யார் சொன்னது என்று பார்த்தல் நம்முடைய கருப்பு சட்டை காரர்களாக தான் இருப்பார்கள் முதலில் சமஸ்கிருதம் கற்றுக்க வேண்டும் என்றால் பெரியார் பக்தர்களிடம் சம்மதம் வாங்குங்கள்

சுரேஷ் விருதுனார்

//ஆனால், சமஸ்கிருதத்தை கற்றுக் கொள்ள மட்டும் தடைகள் உள்ளன??!! அதன் மர்மமும் புரியவில்லை//

http://184.107.44.100/ta/story/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/70/

காலமாற்றத்தின் சாட்சி
சுந்தரபுத்தன் | Issue Dated: பிப்ரவரி 20, 2011
கோயில்களின் நகரம் கும்பகோணம். கலசங்களின் வரிசை என்று அதற்குப் பொருள் சொல்கிறார்கள். இந்த காவிரிக்கரை நகரின் பிரதான வீதியான பெரிய கடைத்தெருவில் கர்ணகொல்லை அக்ரஹாரத்தில் உள்ளடங்கி இருக்கிறது ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி ஓரியண்டல் மேல்நிலைப்பள்ளி. இங்கு 23 தலித் மாணவர்கள் உள்ளிட்ட 195 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் சமஸ்கிருதம் படிக்கிறார்கள். தமிழ், ஆங்கிலம்போல அதையும் ஒரு மொழியாக அம்மாணவர்கள் கற்கிறார்கள்.

பிராமணர்கள் மட்டுமே படிக்க முடியும் என்று இருந்து வந்த ‘தேவபாஷையை’ மிகவும் வறிய சூழலில் இருந்துவரும் அவர்கள் படிக்கிறார்கள். பிராமணர்களே இம்மொழியைப் படிக்காமல் கைவிட்ட காலத்தில் தலித் மாணவர்கள் ‘யாதாய சம்ப்ருதார்த்தாணாம்’ என்று காளிதாஸரின் ரகுவம்ச வரியை கேட்கும்போது காலம் நம்மை பின்னோக்கித் தள்ளுகிறது. “தந்தை பெரியார் பிராமணர்களின் ஆதிக்கத்தையும் அவர்கள் மதிக்கக்கூடிய சமஸ்கிருத மொழியையும் ஒருசேர எதிர்த்தார். தமி-ழகத்தில் இந்தி கட்டாயப் பாடமாக பள்ளிகளுக்கு வந்தபோது, 1937 இல் பெரும் இந்தி எதிர்ப்புப் போரை நடத்தியவர்கள் தமிழ் மாணவர்கள். திராவிட இயக்கத்தின் வரலாற்றை அறிந்தவர்கள் இந்தப் பள்ளியில் நடப்பது கண்டு வியப்பார்கள். சமஸ் கிருதத்தைக் காப்பாற்றுகிறவர்கள் பிராமணர்களாகத்தான் இருக்க வேண்டும் என்று அவசியம¤ல்லாமல் போய்விட்டது” என்கிறார் கலை விமர்சகர் தேனுகா.
1966 ஆம் ஆண்டு மகா பெரியவர் சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் முயற்சியால் 10 மாணவர்களைக் கொண்ட திண்ணைப் பள்ளியாக இது தொடங்கப்பட்டது. முதலில் டவுன் ஹைஸ்கூலில் ஆரம்பித்து கோபால்ராவ் நூலகத்துக்கு மாறி இன்று சொந்த கட்டடத்தில் இப்பள்ளி இயங்குகிறது. 450 மாணவர்கள் படிக்கிறார்கள். முதலில் காஞ்சி மடத்தின் அத்வைத சபாதான் இப்பள்ளியை நிர்வகித்தது. இப்போது காஞ்சி மடத்தின் நேரடிப்பார்வையில் இயங்குகிறது.அதற்கு ஒரு சுவாரசியமான கதை உண்டு.

இப்பள்ளியை தொடர்ந்து நிர்வாகம் நடத்த முடியாத சூழல் வந்தபோது, இங்கு 92 ஆம் ஆண்டுவாக்கில் வருகைதந்தார் ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள். எப்போதும் ஆசி வழங்கிவிட்டு உடனே சென்றுவிடும் இவர், முதல்முறையாக மாணவர்களிடம் சமஸ்கிருத ஸ்லோகங்களைச் சொல்லச் சொல்லி கேட்டார். ஏழாம் வகுப்பு படித்த சுந்தரபாண்டியன் என்ற தலித் மாணவர், இவர் முன்நின்று சமஸ்கிருத ஸ்லோகங்களை சரளமாகச் சொல்லியிருக்கிறார். அதில் அசந்து போய் ஒரு மணிநேரம் பள்ளியிலேயே செலவழித்த அவர், உங்களுக்கு என்ன தேவை என பள்ளிச் செயலரிடம் கேட்டுள்ளார். அதன்பயனாகவே 60 லட்சம் ரூபாய் மதிப்பில் பள்ளிக் கட்டடங்கள் எழுந்துள்ளன.
CONTD...

ஆசிரியர்களின் ஊதியத்தை மாநில அரசு கவனித்துக்கொள்கிறது. மற்றச் செலவுகளை காஞ்சிமடம் பராமரிக்கிறது. “எங்கள் பள்ளி ரொம்பவும் நொடிந்துபோய் இருந்த நேரத்தில்தான் பெரியவர் ஜெயேந்திர சுவாமிகள் வந்தார். இந்த ஒரு சிறுவன்தான் எங்களைக் காப்பாற்றி னான¢. நாங்கள் அதிக பணம் வசூலிக்கக்கூடாது என்று பெரியவர் கட்டளையிட்டுள்ளார். பத்தாம் வகுப்பு வரை சமஸ்கிருதம் சொல்லிக் கொடுக்கிறோம். ஏழை எளிய மாணவர்கள்தான் ஆர்வத்துடன் அதிகம் படிக்கின்றனர். எந்தப் பள்ளியிலும் இடம்கிடைக்காமல் யார் இங்கு வந்தாலும் எல்லோரையும் சேர்த்துக்கொள்கிறோம். சமஸ்கிருதம் படிப்பதை யாரும் சுமையாக நினைக்க வில்லை. கம்ப்யூட்டர் கல்விக்கும் இந்தி படிக்கவும் சமஸ்கிருதம் பயன் படும் என்பதால் மற்றப் பாடங்களைவிட சமஸ்கிருதத்தை கூடுதல் நேரத்தில் சொல்லிக்கொடுக்கிறோம்ÕÕ என்கிறார் தலைமை ஆசிரியர் ஜெ.பாஸ்கரன்.

இங்கு பழம் பூ விற்பவர்கள், தட்டுவண்டி வியாபாரிகள், சுமை தூக்குவோர், கொத்தனார், தச்சுவேலை செய்வோர் என சாதாரண பின்னணியிலிருந்து வரும் குழந்தைகளே படிக்கிறார்கள். நாம் பள்ளியில் நுழைந்தபோது 6ம் வகுப்பில் பாடம் நடத்திக் கொண்டிருந்தார் சமஸ்கிருத ஆசிரியர் திருமலை. இவர், சமஸ்கிருதத்தில் சிரோமணி, சாகித்ய சிரோமணி, சிக்ஷா சாஸ்திரி என எம்.ஏ., எம்.பில் வரை சமஸ்கிருதத்தைப் படித்துள்ளார். இப்பள்ளியின் முன்னாள் மாணவரான இந்த ஆசிரியர், “சமஸ்கிருதத்தில் அட்சராபியாசங்கள் முதல் சப்தங்கள், தாதுரூபங்கள் எனப்படும் இலக்கணம் வரை சொல்லித்தருகிறோம். ஏழாம் வகுப்பிலிருந்து ரகுவம்சம், குமாரசம்பவம், ஹர்ஷரின் ரத்னாவளி, கிராஜதாஜுன்யம், கௌமுதி, தர்க்கசங்கரகம், தசகுமார சரிதம், பிரதாப ருத்ரியம் என பிரபல சமஸ்கிருத இலக்கியங்களைச் சொல்லித் தருகிறோம். இசைமயமான இந்த மொழியை அந்தப் பிஞ்சுகளின் வாய்வழியாகக் கேட்பதில் ஓர் அலாதியான அனுபவம்” என்கிறார். இதுவரை இந்தப் பள்ளியில் யாரும் பொதுத்தேர்வில் தோல்வி அடைந்ததே இல்லையாம். சமஸ்கிருதம் படிக்கச் சிரமப்படும் குழந்தைகளுக்கு கூடுதல் கவனம் எடுத்துக்கொண்டு சிறப்புப் பயிற்சியும் தருகிறார்கள்.
ஏழாம் வகுப்பில் சமஸ்கிருத ஆசிரியர் இல்லாத குறையை தீர்த்துக் கொண்டிருந்தாள் மாணவி வைஷ்ணவி. தலித் சமூகத்தைச் சேர்ந்த இந்த மாணவி ரகுவம்சத்திலிருந்து ஒரு சில வரிகளை எடுத்துக்காட்டி, ரகுவம்சத்து மன்னர்கள் கொடுப்பதற்காகவே சம்பாதித்தார்கள் என்று விளக்கம் சொல்லிக்கொண்டிருந்தாள். இச்சிறுமியின் அப்பா பழக்கடை வைத்திருக்கிறார். சமஸ்கிருத ஆசிரியை எஸ். பத்மாவதி சொல்லித்தந்த பாடங்களை பயிற்சி செய்ய மாணவர்களுக்கு எழுதிக் காட்டுகிறாள். சமச்சீர் கல்விக்காக சமஸ்கிருத பாடத்தைத் தயார் செய்யும் பணிக்காக சென்னை சென்றுள்ளார் ஆசிரியை.

ஆறாம் வகுப்புப் படிக்கும் பிரவின்குமாரின் அப்பா தச்சுவேலை செய்கிறார். சமீபத்தில் நடந்த அரையாண்டுத் தேர்வில் சமஸ்கிருதத்தில் 72 மதிப்பெண் பெற்றிருக்கிறார் பிரவீன். தலித் மாணவியான வளர்மதியின் தந்தை மூட்டைதூக்குகிறார். பத்தாம் வகுப்புப் படிக்கும் சந்தியா, கட்டட வேலை செய்பவரின் மகள். இம்மாணவி கடந்த தேர்வில் சமஸ்கிருதத்தில் பெற்ற மதிப்பெண் 82. இப்பள்ளியின் செயலர் ஆடிட்டர் என். ராமகிருஷ்ணன் தசஇயிடம், “பொதுவாக சொல்லப் போனால் மேல்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்த மாணவர்கள் யாரும் சமஸ் கிருதம் படிக்க முன்வருவதில்லை. வேலை கிடைக்காது என்று ஒதுங்கி விட்டார்கள். ஏழை, எளிய மற்றும் தலித் மாணவர்கள் தான் ஆர்வத்துடன் வருகிறார்கள். இங்கு சாதி, மத வித்தியாசம் கிடையாது. சென்ற ஆண்டு ஒரு முஸ்லிம் மாணவன் சமஸ்கிருதத்தில் முதலிடம் பெற்றான். கடந்த மூன்றாண்டுகளாக எங்கள் மாணவர்கள் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றுவருகிறார்கள்” என்கிறார்.

கும்பகோணத்தில் பழைமையான நான்கு வேத பாடசாலைகள் உள்ளன. முதல் சமஸ்கிருத அச்சகம் ஒன்றும் சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு இங்கு செயல்பட்டிருப்பதாகச் சொல் கிறார்கள். அந்தப் பழம்பெருமையை இன்னமும் இந்நகரம் தக்க வைத்துக்கொண்டிருக்கிறது. இறந்த மொழியாகக் கருதப்படும் சமஸ்கிருத மொழியை மீட்டெடுக்க பல முயற்சிகள் நடக் கின்றன. இந்தப் பள்ளி இந்த முயற்சியில் நாட்டுக்கு அமைதியாக ஒரு பாடத்தைச் சொல்லிக் கொண்டிருக்கிறது.

Sanskrit thriving in UK schools
Read more at: http://www.ndtv.com/article/world/sanskrit-thriving-in-uk-schools-34267&cp

London: Sanskrit may be resource starved and may find fewer pupils in India, but there are schools and universities in the UK where the language is thriving.

At the St James Junior School in London, the number of students wanting to learn the language has grown by leaps and bounds.

This chain of schools has been teaching Sanskrit since 1975. Over the years, to their surprise, they have found an increasing number of children keen on learning the ancient language, even though the script and pronunciation is difficult for English speakers.

As young students here recite Sanskrit verses from the Upanishads at the Annual Sanskrit Speech Competition, proud parents and teachers applauding their efforts.

"It gives them brilliant linguistic training. Sanskrit scriptures are inspiring and full of philosophical concepts, which is why we teach it," said Warwick Jessop, the head of the school's Sanskrit department.

When asked if they find learning the language hard, most students said Sanskrit was their favourite as they enjoy the classes.

"Learning Sanskrit is unique. As not many people speak it now, it is special that we get to learn such a language. I enjoy learning Sanskrit because I suppose we are one of the few schools that study it and I feel that it benefits you in lots of different ways. As you saw, it helps in improving pronunciation and diction. I would say the spiritual benefits are also quite high. There are lots of different stories like the Ramayana and Mahabharata and there are lots of different ways of describing what was happening in the world ages ago," said a student of the school.

The curriculum at the James Junior School is set for student aged between four and 18. After completing their levels here, students can go for courses at prestigious universities like Oxford, Cambridge and Edinburgh.

http://www.youtube.com/watch?v=AsY3NVrviiw

ஜாதகம் போன்ற விசயங்களில், எனக்கு அதிக அறிவு கிடையாது.. அனால், கடந்த 7 வருடமாக நான் சந்தித்த அனுபவங்கள், இந்த ஜாதகம் முழுக்க முழுக்க உண்மை என்றே தோன்றுகிறது. என் அனுபவங்கள் எனக்குள்ளே இருக்கட்டும்.

கீழே நான் படித்த ஒரு கட்டுரை தருகிறேன்.அதை நீங்கள் படியுங்கள். இதை பற்றி சந்தேகம் இருந்தால் துக்ளக் ஆசிரியர் சோ, அவர்களை தொடர்பு கொண்டு கேளுங்கள்.

நடப்பதை முன்கூட்டியே சொன்ன ஜோதிடர்கள்-துக்ளக் சோ

ஜோதிட சாஸ்திரத்தின் கூர்மையை காட்ட ஒரு சில உதாரணங்களை கூறுகிறேன்...இவை நான் அறிந்தவை...கேள்விபட்டவை அல்ல...

சஞ்சய்காந்தி ,விமான விபத்தில் மரணம் அடைந்த போது துக்ளக் ஆஃபீஸில் ஓவியராக பணிபுரிந்து கொண்டிருந்த திரு ஸாரதி திகைத்துப்போனார் ஒரு பெரிய அதிசயம் ,எல்லோரும் கொஞ்சம் காத்திருங்கள் என்று கூறிவிட்டு தன் வீட்டிற்கு சென்று பாபுராவ் பட்டேலின் மதர் இந்தியா பத்திரிகையின் பழைய இதழ் ஒன்றை கொண்டு வந்தார்


பாபுராவ் படேல் அதில் ஜோதிடமும் எழுதிக்கொண்டிருந்தார் அந்த பழைய இதழில் சஞ்சய்காந்தி இன்னும் இரண்டு ஆண்டுகளில் ஒரு விமான விபத்தில் உயிர் இழக்ககூடும்...என்று தன்னுடைய ஜோதிட குறிப்புகளில் பாபுராவ் பட்டேல் கூறியிருந்தார்

எப்படி, இந்த மாதிரி அவரால் சொல்ல முடிந்தது..?ஜாதகத்தை கணித்து அவர் சொன்ன முடிவு அப்படியே பலித்து விட்டது எப்படி..?
குருட்டாம்போக்கு என்று சொல்லி விடலாம்..அப்படி சொல்வது சுலபம்...ஆனால் இந்த மாதிரி ஒரு விசயத்தில் இப்படி முன்கூட்டியே கணிக்க முடிந்தது என்பது ஜோதிட சாஸ்திரத்தின் வலிமையைத்தான் காட்டுகிறது...

இன்னொரு நிகழ்ச்சி...சி.என்.அண்ணாத்துரையின் மரணம்...,தி.மு.க பிரிவினை (எம்.ஜி.ஆர் வெளியேற்றப்பட்டது )இரண்டையுமே 1967 லேயே ஒரு ஜோதிட நிபுணர் கூறியிருந்தார் அவர் பெயர் சுந்தர்ராஜன் (என்னுடன் பள்ளியில் படித்தவர்)அவர் தி அஸ்ட்ரலாஜிக்கல் மாகஸின் என்ற பிரபல ஜோதிட பத்திரிக்கையில் ..1967 ல் தி.மு.க பெரிய வெற்றி பெற்ற போதே ,’’இன்னும் ஒரு சில ஆண்டுகளில் தி.மு.க பிளவுபடும்..அதன் நிறுவனதலைவர்களில் முக்கியமானவர் மரணம் அடைவார் ‘’என்று எழுதியிருந்தார்..

இந்த கணிப்பு வெளியான இதழை 1972-ல் அவர் என்னிடம் காட்டியபோது ,எனக்கு ஆச்சர்யமாக இருந்தது தி.மு.க ஆரம்பிக்கப்பட்ட நேரத்தை வைத்துக்கொண்டு தான் இதை கணித்ததாக அவர் என்னிடம் விளக்கினார்

இன்னுமொரு நிகழ்ச்சி,என் நண்பன் ஒருவன் பெரிய கடனில் சிக்கியிருந்தான் எதுவும் அவன் வாங்கிய கடன் இல்லை ஷ்யூரிட்டி கையெழுத்து போட்டு அவன் சந்தித்த பிரச்சனை அது.......பித்து பிடித்தவன் போல அவன் மாறிவிட்டான் தற்கொலை செய்து கொள்ளவும் முயன்றான் அவனுடைய நண்பர்களாகிய நாங்கள் ஏதோ உதவி செய்தோம்...அதுவும் போதவில்லை திண்டாடிக்கொண்டிருந்தான்...

இந்த நிலையில் என்னை ஒரு ஜோதிடர் சந்தித்தார் என் ஜாதகத்தை பற்றி கூறினார் நான் அவரிடம் என்னை பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கும்..அதனால் சரியாக சொல்ல முடிகிறது..என் நண்பர் ஒருவர் இருக்கிறார் அவரது ஜாதகத்தை பார்த்து சொல்ல முடியுமா..? என்று கேட்டேன்...அவரும் சம்மதித்தார்.

என் நன்பன் ,கடனில் சிக்கியது,அவனுடைய தற்கொலை முயற்சி என்று எல்லா விவரத்தையும் சரியாக சொல்லி கொண்டே வந்தார் ..பிறகுதான் அதிசயமாக அவர் ஒன்று சொன்னார்


கவலைவேண்டாம் இவருக்கு நல்ல காலம்தான் இவருடைய கவலை முழுமையாக தீர்ந்து விடும் இரண்டே மாதத்தில் எல்லா கஸ்டங்களும் மறைந்து விடும் என்று அவர் சொன்னார் நாங்கள் இதை நம்ப முடியாமல் இருந்தோம்...ஏன் என்றால் ,அவன் சிக்கியிருந்த குழப்பம் அப்படிப்பட்டது...

ஆனால் இரண்டு மாதத்திற்குள்ளேயே அந்த நண்பரின் மகன்,தனக்கு தெரிந்த ஒரு அரசியல்வாதியின் உதவியுடன் கடன் கொடுத்திருந்த சிலரின் உதவியுடன் ,கடன் கொடுத்திருந்த சிலரை சந்தித்து பெரும் வட்டி கொடுத்ததையெல்லாம் கணக்கில் எடுத்துக்கொள்ளுமாறு செய்து முழு கடனையும் பைசல் செய்து விட்டான்...எல்லோருக்கும் நிம்மதி......

இப்படி எல்லாம் கணிக்க வழி சொல்கிற ஜோதிடத்தை பொய் என்று கூறுவது சரியாக இருக்காது..
ஆனால் ஒன்று.. மிக நன்றாக கற்றறிந்த ஜோதிடர் கூட எதிர்காலத்தை துல்லியமாக கணித்து விடுவார் என்று உறுதியாக சொல்லிவிட முடியாது

வராஹிமிஇரரே கிரகங்களின் போக்கை வைத்து சூசகமாக பலன் சொல்லலாம் ஆனால் என்ன நடக்கும் என்பது பிரம்மனுக்கு மட்டுமே துல்லியமாக தெரியும் என்று கூறியிருந்தார் ஆகையால் ஜோதிடத்தை நம்பியே ஒவ்வொரு காரியத்தையும் செய்வது புத்திசாலித்தனமல்ல...’’

Anonymous
20:17

"ஹிந்து சமூகத்தினர் திருமணம் செய்யும்போது சொல்லுகிற சம்ஸ்கிருத மந்திரத்தின் தமிழாக்கம் குறித்து திராவிட கழக நண்பர்கள் என்னென்னவோ சொல்கிறார்களே!? அது எந்த அளவிற்கு உண்மை என்பதை தெளிவுபடுத்தவும் "

தமிழன் அவர்களே இதற்கான உண்மையான தமிழ் விளக்கமும் சமஸ்கிருத சொல்லும் அறிய விரும்புகிறேன் விளக்குவீர்களா

@Anonymous , அவர்களிடம் அது எந்த மந்திரம் எந்த வேதத்தில் இருக்கிறது என்று கேட்டுச்சொல்லுங்கள்.

எனக்கு ஹிந்தி கூட தெரியாது.. சரி அதனால் என்ன .. ஜாகிர் நாயக் மாதிரி சொல்ல வேண்டியது தான். :)

RAJAN
07:39

சந்தோசமாக இருக்கும் ஒருவன் ஜாதகம் பார்ப்பது குறைவு , துன்ப படுகிறவன் அதிகம் ஜாதகம் பார்க்கிறான் ,

ஜோதிடர்கள் பெருபாலும் சொலுவது இபொழுது நேரம் சரிஇல்லை இன்னும் 2-3 மாதத்தில் எல்லாம் சரியாகி விடும் , இந்த நம்பிக்கை வார்த்தை அவன் ஆழ்மனதில் நன்றாக பதிகிறது , அவன் அதற்கான முயற்சி எடுக்கும்போது வெற்றி பெறுகிறான் , இது ஒரு உளவியல் சார்த்து. ஜாதகம் பொய்யே !

Anonymous
10:46

ஜாதகம் பார்க்காமல் திருமணம் செய்தவர்கள் இன்று நல்லமுறையில் வாழ்கிறார்கள்..!

பூஜிதா
11:22

அருமயான தகவல் சூப்பருங்க

இப்போ இருக்கும் கால சூழ்நிலையில் மனப்பொருத்தம் என்பது அவசியமாகிறது

சஞ்சய்காந்தி இன்னும் இரண்டு ஆண்டுகளில் ஒரு விமான விபத்தில் உயிர் இழக்கக்கூடும்... என்று ஜோதிடம் சொல்பவர்கள், "உயிர் இழப்பார்" என்று ஏன் நிச்சயமாக சொல்ல முடியவில்லை??

"உயிர் இழக்கக்கூடும்" என்று சொல்லியுள்ள நிலை, அவர் அவ்வாறே இறந்ததால், "பார்த்தீர்களா?? நான்தான் முன்கூட்டியே சொன்னேனே! அவ்வாறே நடந்து விட்டது பார்த்தீர்களா?" என்பார்கள். ஒருவேளை, சஞ்சய் காந்தி அவ்வாறு உயிர் இழக்காமல் இருந்திருந்தால், "உயிர் இழக்கக்கூடும்..." என்று அனுமானமாகத்தானே சொன்னேன். "உயிர் இழப்பார்" என்று நிச்சயமாக சொல்லவில்லையே!! என்று மறுப்பு தெரிவிப்பார்கள். இவையெல்லாம் தற்செயலாக நடக்கின்ற Coincidence சம்பவங்கள்.

சஞ்சய் காந்தியைப் பற்றி அனுமானிக்க தெரிந்தவருக்கு அவரது தாயார் இந்திரா காந்தியைப் பற்றி, அவரது படுகொலையைப் பற்றி, ஏன் முன்கூட்டியே கணிக்க முடியவில்லை???

விடுதலைப் புலிகளின் தலைவர் ஒரு சிறந்த போர் வீரர் என்பது எல்லோரும் நன்கு அறிந்ததே! அதேசமயம், சாஸ்திரம், சம்பிரதாயம், ஜோசியம் என்பதில் மிக ஆழமாக நம்பிக்கை வைத்து இருப்பவர் என்பது சிலருக்குத்தான் தெரியும். இன்னும் சொல்லப் போனால் அவர் வீரத்தின் மீது அவர் வைத்து இருந்த நம்பிக்கையை விட, அவரது ஜாதகத்தின் மீதுதான் அதிக நம்பிக்கை வைத்து இருந்தார்.

தனக்கும் தன்னை நம்பியுள்ள போராளிகள் / பொது மக்கள் இவர்களுக்கு ஒரு பேரழிவு காத்து இருக்கிறது என்று ஏன் அவரால் கணிக்க முடியவில்லை?? அவர் ஜாதகம் உண்மையாக இருந்து இருந்தால், ஆயிரம் ஆயிரம் உயிர்களை காப்பாற்றி இருக்கலாமே!!!!

ஆக, அந்த மாவீரனுக்கும் ஜாதகம் என்ற ஒரு "மடமை" இருந்தே இருக்கிறது!!!

ஒரு கட்சிக்குள், உட்கட்சி பூசல் வருவதும், கட்சிக்குள் பிளவு ஏற்படுவதுவதும், தலைவர்களின் / தொண்டர்களின் அகால மரணங்கள் ஏற்படுவது என்பது மிக சாதாரணமான ஒன்று. இன்றும்கூட இப்போது இருக்கும் கட்சிகளுக்குள்கூட எத்தனையோ பிரச்னைகள் இருப்பதை நாம் கண்கூடாக காணலாம். இதை சொல்வதற்கோ / கணிப்பதற்கோ ஆருடமோ அல்லது ஜோசியமோ தேவையில்லையே!!

கடன் தொல்லையில் வாடியவரைப் பற்றி நண்பர் ராஜன் மிக அழகாக சொல்லிவிட்டார். ///இந்த நம்பிக்கை வார்த்தை அவன் ஆழ்மனதில் நன்றாக பதிகிறது , அவன் அதற்கான முயற்சி எடுக்கும்போது வெற்றி பெறுகிறான், இது ஒரு உளவியல் தீர்வு!!!

உதாரமாக, படித்துக் கொண்டு இருக்கும் ஒரு மாணவனை உன் ஜாதகம் சரியில்லை. இந்த வருடம் நீ பெயிலாகி விடுவாய் என்று ஒரே ஒரு தடவை சொல்லிப் பாருங்கள். அந்த பயமே அவனை ஆட்கொண்டு, அவனது திறமையை எல்லாம் வீணடித்து, அந்த பயமே அவனை தோல்வியடைய செய்யும்.

மாறாக, "நீ இந்த வருடம் வெற்றி பெற்று விடுவாய், இன்னும் கொஞ்சம் கவனமாக படி" என்று சொல்லிப் பாருங்கள். அந்த வார்த்தைகளே அவனுக்கு உற்சாகத்தை ஊட்டி, ஒரு புது தன்னம்பிக்கையுடன் செயல் பட்டு வெற்றி பெறுவான்.

இவையெல்லாம் ஓர் உளவியல் சார்பானது!!!

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்கள், அவரது அறிவால், வீரத்தால் சாதித்ததைவிட, தைரியத்தால் பெற்ற வெற்றிகளைவிட, "பொய்யான ஜாதகத்தை" நம்பி மோசம் போய் இழந்தவைகளே அதிகம்.

நண்பர் அப்துல் ரஹ்மான் அவர்களே, நான் கொடுத்த கட்டுரையில் இறுதியில் உள்ள 2 பத்திகளை நன்றாக படித்திருந்து , சிறிது யோசித்திருந்தால் , தேவையில்லாமல் மீண்டும் ஒரு பின்னோட்டம் எழுதியிருக்க மாட்டிர்கள்.

M.Natrayan
20:46

ஜாதகம் என்பது கிரகங்களின் பார்வையை அடிப்படையாக கொண்டது. ஜாதகத்தை ஓரளவாவது தெரிந்திருந்தால் அது தவறு என்று யாரும் சொல்லமாட்டார்கள். ஒருவனுக்கு ஒருத்தி என்ற பண்பாட்டை கொண்டது இந்து சமுதாயம். அதனை உறுதிபடுத்தவே ஜாதகம். கிறிஸ்துவா நாடுகளில் ஆண்களும் பெண்களும் அடிக்கடி விவாகரத்து செய்துகொண்டு பல திருமணங்கள் செய்துகொள்ளுகிறார்கள். முஸ்லீம்கள் 4 மனைவிகள் வரை வைத்துக்கொள்ளலாம். சமீபத்தில் அரபுநாட்டை சேர்ந்த ஒருவர் 28 மனைவிகளுடன் வாழ்ந்து வந்தார். இஸ்லாம் அமைப்பில்லிருந்து அவருக்கு நோட்டீஸ் வந்தது. உடனே அவர் தனக்கு 4 மனைவிகள்தான் என்றும் மீதி உள்ள 24 பெரும் தனது வேலைக்கார பெண்கள் என்றும் கூறிவிட்டார். இதெல்லாம் நமக்கு பொருந்தாது. எது சரி என்பதை நமது நாட்டில் உள்ள மக்கள்தான் முடிவுசெய்யவேண்டும்.

M.Natrayan
21:03

எனக்கு தெரிந்த கிருஸ்துவ மற்றும் இஸ்லாமிய நண்பர்கள் இருவர் ஜாதகம் பொய் என்று நிருபிப்பதற்காக ஜாதகத்தை படித்தார்கள். படித்துமுடித்ததும் கிருஸ்த்தவ நண்பர் அதனையே தொழிலாக வைத்து தனது வாழ்க்கையை ஓட்டிக்கொண்டு இருக்கிறார். முஸ்லீம் ஆசிரிய நண்பர் பலருக்கும் ஜாதகம் சொல்லிவருகிறார். இப்படி மாறிப்போனார்கள் இவர்கள் இருவரும்!! தனது மகள் திருமணத்திற்கு பின் ஒரு மனைவியை கொண்ட கணவனுடனே வாழவேண்டும் என்று பெற்றோர்கள் எண்ணுகிறார்கள். அதனால் பொருத்தம்பார்த்து திருமணம் செய்கிறார்கள். பொருத்தம் பார்த்தவைகளில் ஒன்று அல்லது இரண்டு சதம் மட்டும் தோல்வியை தழுவியிருக்கலாம். கிருஸ்துவ முஸ்லீம்கள் போல் பெண்களை சுகபோக அடிமைகளாக வைத்துக்கொள்ள கூடாது. இந்த புதிய அறிவியல் உலகத்தில் அறிவியலைபோல் ஜாதகமும் வளர்ந்து வருகிறது. நாத்திகம் பேசும் நண்பர்கள் பலர் கையில் தங்கள் மகள் மற்றும் மகன்களின் ஜாதகத்துடன் அலைகிறார்கள்.

Anonymous
23:17

அய்யா M.Natrayan அவர்களுக்கு.
@M.Natrayan
//இந்து மதத்தில் ஒருவனுக்கு ஒருத்தி என்ற பண்பாடு! இதுதான் வாழ்க்கையின் அர்த்தமான பண்பாடு.//

//ஒருவனுக்கு ஒருத்தி என்ற பண்பாட்டை கொண்டது இந்து சமுதாயம். அதனை உறுதிபடுத்தவே ஜாதகம்.//

கிருஷ்ண பரமாத்மா, முருகப் பெருமான், இரு கடவுள்களுக்கும் இரண்டு மனைவிகள் இந்துமத கலாச்சாரத்தின் அடிப்படையான ஒருவனுக்கு ஒருத்தி என்பதின் அடையாளம் எங்கே???

அறுபதிணாயிரம் மனைவிகளுடன் வாழ்ந்த தசரத மகாராஜா!!!!

மாமன்னன் இராசராச சோழன் அவரது மகன் இராசேந்திர சோழன், கலிங்க மன்னன் அசோக சக்ரவர்த்தி, இவர்கள் அனைவரும் நான்கு மனைவியர்களுடன் வாழ்ந்துள்ளார்கள் இந்த மன்னர்கள் இந்துக்களா?? அல்லது முஸ்லிம்களா???

இன்றும் எத்தனையோ இந்து சகோதரர்கள் பல மனைவியருடனும், சிலர் சின்ன வீடு, செட்டப்பு வைப்பாட்டி என வாழ்கிறார்களே???

இந்து மத கடவுள்களும், இந்து மத அரசர்களும், இன்றைய மக்களும், பலதார மணம் சரி என்பதற்கு சான்றாக வாழ்ந்து காட்டிய பிறகு அதென்ன இந்து மதத்தில் ஒருவனுக்கு ஒருத்தி என்ற பண்பாடு???

என்றும் அன்புடன்,
அ. ஹாஜாமைதீன்.

Anonymous
23:23

அய்யா M.Natrayan அவர்களுக்கு.
@M.Natrayan
//கிறிஸ்துவா நாடுகளில் ஆண்களும் பெண்களும் அடிக்கடி விவாகரத்து செய்துகொண்டு பல திருமணங்கள் செய்துகொள்ளுகிறார்கள்.//

விவாகரத்தே இல்லாத இந்து மதத்தில், இன்றைய
பெண்களின் நிலை...... விடுமுறை நாட்களிலும் குடும்ப நல நீதிமன்றம் செயல்படும் என்ற அறிவிப்பு, அந்தளவுக்கு விவாகரத்து செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை பெருகிவிட்டது என்பது அய்யா அவர்களுக்கு தெரியாது என நினைக்கின்றேன்.

//முஸ்லீம்கள் 4 மனைவிகள் வரை வைத்துக்கொள்ளலாம்.//

இல்லை அய்யா, முஸ்லீம்கள் நான்கு திருமணம் வரை செய்து கொள்ளலாம்.
"4 மனைவிகள் வரை வைத்துக்கொள்ளலாம்" என்ற வாசகம் தவறான பொருள் தருவதாக உள்ளது.

முஸ்லிம்கள் அனைவரும் கண்டிப்பாக நான்கு திருமணம் முடிக்க வேண்டும் என இஸ்லாம் கட்டளையிடவில்லை அனுமதி மட்டும்தான். விரல் விட்டு எண்ணுக் கூடிய அளவில்தான் இஸ்லாமியர்கள் இரு மனைவிகளுடன் வாழ்கிறார்கள்.

//இஸ்லாம் அமைப்பில்லிருந்து அவருக்கு நோட்டீஸ் வந்தது.//

அது என்னங்கய்யா இஸ்லாம் அமைப்பு?

என்றும் அன்புடன்,
அ. ஹாஜாமைதீன்

@Abdul Rahman - Dubai

சமஸ்கிருதம் யார் வேண்டுமானாலும் படிக்கலாம் அதற்குத்தடை ஏதும் இல்லை. தாங்கள் கூடப் படிக்க விரும்பினால் கீழ்க்கண்ட இணைப்பில் விபரங்கள் பெறலாம்
http://samskritabharati.in/archives/269

M.Natrayan
21:04

இந்துமதத்தில் நடைமுறையில் உள்ளவ்ற்றைமட்டுமே எடுத்துக்கொள்ளவேண்டும். முஸ்லீம்கள் இரண்டு மனைவிகளுடன் வாழ்கிறார்களாம். இஸ்லாமியசட்டத்தில் என்ன உள்ளது என்பதை புரிந்து கொள்ளவேண்டும். இந்தியாவில் முஸ்லீம்களிக்கென்று தனி சட்டம் உள்ளது. அனைவருக்கும் ஒரேசட்டம் என்பதை அவர்கள் ஏற்றுக்கொள்வதில்லை. இஸ்லாமிய நாடுகளில் என்ன நடக்கிறது என்பதை பார்க்கவேண்டும். ஒசாமா பின்லாடன் பல மனைவிகளுடன் வாழ்ந்து வந்துள்ளான். அதேபோல் அரபு நாட்டு முஸ்லீம்களும் வாழ்ந்து வருகிறார்கள். இந்த அறிவியல் உலகத்திக்கும் பகுத்தறிவிற்கும் இந்த முறை சரிதான என்பதை சமூகவியலாளர்கள் ஆய்வுசெய்து அறிவிக்க வேண்டும். ஒருசில இடங்களில் நடக்கும் சம்பவங்களை கொண்டு இந்து சமுதாயத்தை எடைபோடக்கூடாது. இன்று இந்தியாவில் ஒருவனுக்கு ஒருத்தி என்ற பண்பட்ட முறைதான் இந்து சமுதாயத்தில் உள்ளது. முஸ்லீம் மற்றும் கிருஸ்த்துவ சமுதாயத்திலும் ஓரளவு இந்த முறைதான் கடைப்பிடிக்கப்படுகிறது. பூவுடன் சேர்ந்து நாறும் மனம் பெறுகிறது.

M.Natrayan
21:20

ஒரு முஸ்லீம் பெண் ஒரு முஸ்லீம் ஆணை மணமுடிக்கிறார். அந்த முஸ்லீம் தனது மத கோட்பாடின்படி இன்னும் ஒருபெண்ணை மணமுடிக்க ஆயுத்தமாகிறார். அப்போது முதல் மனைவியின் பெற்றோர் என்ன நினைப்பார்கள். அப்பெண்ணின் சகோதரர்கள் என்ன நினைப்பார்கள்! இதை கொடுமை என்றுதானே நினைப்பார்கள். அல்லது மேலும் இரண்டு பெண்களை முஸ்லீம் சட்டப்படி மணமுடிக்க ஆதரிப்பார்களா? இங்கு இஸ்லாமிற்கு சாதகமாக எழுதுபவர்களுக்கு எத்தனை மனைவிகள்? தங்கள் தந்தையார் எத்தனை மனிவிகளுடன் வழ்ந்துவருகறார்? நபிகள் நாயகத்தின் கொள்கைகளை கடைப்பிடிக்கிறார்களா? அதாவது நான்கு மனைவிகள்!
அதைகடைப்பிடிக்காவிட்டால் இஸ்லாமிற்கு விரோதிகலாவார்கள். நபிகளின் கொள்கைகளை கடைப்பிடிப்பது அனைத்து இஸ்லாமியர்களின் கடமை என்பதை உணரவேண்டும். தங்கள் சகோதரிகளை ஏற்கனேவே மூன்று மனைவிகளுடன் வாழ்ந்துவரும் ஒருவருக்கு மணமுடித்து கொடுப்பார்களா?

Anonymous
01:27

அய்யா M.Natrayan அவர்களுக்கு.

//இந்து மதத்தில் ஒருவனுக்கு ஒருத்தி என்ற பண்பாடு! இதுதான் வாழ்க்கையின் அர்த்தமான பண்பாடு.//
என்ற தங்களது வாதத்திற்கு எதிராக சில வினாக்களை தொடுத்திருந்தேன், அதற்கு எந்த பதிலும் தெரிவிக்காமல், குறைந்த பட்சம் மறுக்கவும் செய்யாமல் வசதியாக மறைத்து விட்டு, மீண்டும் இஸ்லாமியர்களைப் பற்றியும், பலதார மணம் பற்றியும் குறை கூறிக் கொண்டிருப்பதை கானும் போது, தாங்களுக்கு இஸ்லாம் கூறும் பல தாரம் பற்றியும் தெரியவில்லை, இந்தியாவின் (பண்டைய, அன்றைய, இன்றைய) நடைமுறையும் புரியவில்லை.

என்றும் அன்புடன்,
அ. ஹாஜாமைதீன்

நான் காதலிகிரேன் ஆனால் ஒரு ஜோதிடர் நட்சத்திர பொருதம் இல்லை மாங்கல்ய பொருத்தம் வராது என்று கூறி உள்ளார் இதானால் நான் மன பாதிப்புக்கு உள்ளாகியுல்லேன் . இதை பற்றி உங்கள் கருத்து என்ன ?

u loving truly u did not see horoscope so u believe love r horoscope.............

அய்யா ,


பெருபாலனா சோதிடர்கள் , வெறும் நட்சத்திர பொருத்தம் மட்டும் பார்கின்றனர் . அது மிக பெரிய தவறு .ஆண் , பெண் , இருவரின் ஜாதகத்தை ஆராயும் பொழுது முதலில் 1 . லக்கணம் நட்பாக உள்ளதா .( உதாரணம் . ஆண் லக்னம் மீனமாக இருந்தால் , பென்லக்னம் ,கடகம் , தனுசு , இப்படி இருந்தால் ,தம்பதியர் அன்பாகா இருப்பார்கள் .)2 . இதே போல் ராசி , லக்கனதுக்கு 2 ஆம் இடம் ,4 ஆம் இடம் பார்க்கவேண்டும் . 3 . இலக்கணத்துக்கு 5 ஆம் இடம் கெடமால் இருக்கவேண்டும் . 4 . மற்றும் 7 ,8 , ம் இடம் சுத்தமாக இருக்கவேண்டும் . அதுக்கு அப்புறம்தான் நஷத்திர பொருத்தம் பார்க்கவேண்டும் .

16:35

Nenga solrathu sari than.
Yannudaiya thai mama ponna yanaku pudikkum ana jathagam set agumanu therila


Next Post Next Post Home
 
Back to Top