( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )21 ஞாயிறு ஜூலை அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

பாஜக ஆட்சியை பிடிக்குமா?

  அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக ஆட்சியை பிடிக்குமா? 

  •    ந்தியா முழுவதும் எந்த மாநிலத்திலும் காங்கிரஸ் கட்ச்சிக்கு செல்வாக்கு என்பதே கிடையாது தமிழகத்தில் எப்படி அவர்களின் அஸ்திவாரம் ஆட்டம் கண்டிருக்கிறதோ அதே போல தான் எல்லா இடத்து கதையும் இருக்கிறது பல ஊழல் குற்ற சாட்டுகளினாலும் தேச பாதுகாப்பில் அக்கறை மிகுந்த நடிவடிக்கை எதுவும் எடுக்காததினாலும் பிரதமரின் கோழைத்தனமான செயல்பாடுகளினாலும் சோனியாவின் அராஜக அத்துமீறல்களாலும் மிகப்பெரிய சரிவை நோக்கியை சென்று கொண்டிருக்கிறது இந்த நிலைமை எதிர்கட்சியான பாஜகவிற்கு புத்துணர்ச்சியை கொடுத்திருக்க வேண்டும் ஆனால் நமது காதுகளை பாஜக வீட்டுப் பக்கம் சற்று திருப்பினோம் என்றால் பானை சட்டி உடைகின்ற சத்தமும் மேஜை நாற்காலிகள் பறக்கின்ற சத்தமும் அலங்கார கண்ணாடிகள் நொறுங்குகின்ற சத்தமும் கிழிந்த வேட்டியும் கலைந்த தலையும் குடுமி பிடி சண்டை போட்டு வேர்த்து விறுவிறுத்து போன முகம்களையும் தான் காண முடிகிறது அதாவது உட்கட்சி சண்டை தான் அங்கே உற்சாகமாக நடைபெறுகிறதே தவிர ஆட்சியை பிடிப்பதற்கான எந்த முயற்சியையும் எடுத்ததாக இந்த நிமிஷம் வரை நம்மால் அறிய முடிய வில்லை இப்படியே சூழல் போனால் காங்கிரஸ் கோட்டையில் தான் வெற்றி கொடி பறக்கும் என்று நமது நீலா பாட்டி பேரன் கூட குச்சி மிட்டாயை சூப்பி கொண்டே சொல்வான் 
   குமாரப்பா எடியூரப்பா இருவரும் பரஸ்பரம் சத்தியம் செய்து கொண்டது எதைக் காட்டுகிறது?
  •   நான் சின்ன குழந்தையாக இருந்த போது என் பாட்டி ஒரு கதை சொல்லுவாங்கள் அது உண்மையோ பொய்யோ நடந்ததோ இல்லையோ எனக்கு தெரியாது ஆனால் அது இந்த விஷயத்திற்காக நடை முறையில் இருந்திருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன் திருட்டு குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்களை நிரபராதிகள் என நிரூபிக்க கொப்பரையில் எண்ணெய் ஊற்றி கொதிக்க வைத்து கையை உள்ளே விட சொல்வார்களாம் சுத்தவாளி என்றால் சுடதாம் குற்றவாளி என்றால் சுட்டு விடுமாம் அதே போல ஒரு ஏற்பாட்டை செய்து இருவரையும் கைவைக்க சொல்லியிருக்க வேண்டும் இரண்டு பேருமே அந்த பக்கம் தலைவைத்து படுத்திருக்க மாட்டார்கள் கிராமத்தில் யதார்த்தமாக சொல்வார்கள் சாமி முன்னால் பொய் சத்தியம் செய்தால் குலம் விளங்காது என்பார்கள் இரண்டு பேருமே இதை மறந்து விட்டதனால் வருங்காலம் நல்ல பதிலை சொல்லும் 
 ராகுல் காந்திக்கு பிரதமராகும் தகுதி வந்துவிட்டதாக கங்கிரஸ் காரர்கள் சொல்கிறார்களே நிஜமாகவே ராகுலுக்கு அந்த தகுதி வந்துவிட்டதா?

  •    ன்னை கேட்டால் இந்தியாவில் இதுவரை தகுதியான பிரதமர்கள் என்று லால்பகதூர் சாஸ்திரி,இந்திரா காந்தி,மொரார்ஜி தேசாய்,நரசிம்மராவ்,வாஜ்பாய் என்று தான் சொல்வேன் மற்றவர்கள் அனைவரும் பிரதமர் பதவியை ஒரு அலங்கார பொம்மையாக அலங்கரித்தார்களே தவிர நாட்டிற்கு உருப்படியாக எதையும் செய்தது இல்லை சரண்சிங்,சந்திரசேகர்,தேவகவுடா,மன்மோகன்சிங் போன்றோர்களை பிரதம ஜோக்கர்கள் என்று கூட அழைக்கலாம் இப்படி பட்ட சூழலில் ராகுல் காந்தி ஒரு வேளை பிரதமராக வந்தால் இந்த ஜோக்கர்கள் வரிசையில் ஒருவராக இருப்பாரே தவிர வேறு எதையும் அவரிடம் எதிர் பார்க்க இயலாது துரதிஷ்டவசமாக அப்படி ஒரு நிலை இந்தியாவிற்கு வந்தால் அது இந்தியா சந்தித்த பல இருண்ட காலங்களில் ஒன்றாக இருக்கும்

   ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் விலகபோவதால் ஏற்பட கூடிய விளைவு எப்படி இருக்கும்?
  •   மெரிக்க தலைவர்கள் எப்படியோ ஆனால் அந்த நாட்டு மக்கள் தங்கள் நாட்டு படைவீரர்கள் அந்நிய தேசத்தில் ரத்தம் சிந்துவதை விரும்ப மாட்டார்கள் அந்த வகையில் படைகளை வாபஸ் பெறுவதால் அதிபர் ஒபாமாவிற்கு மக்களின் ஆதரவு கிடைக்கும் ஆனால் அது ஆப்கான் அரசியல் களத்தை முற்றிலுமாக மாற்றி போடக்கூடிய விளைவாகவும் அமையலாம் ஆப்கான் மக்களின் அடிப்படை தேவைகள் இன்னும் முழுமையாக பூர்த்தி செய்யப்பட வில்லை அதற்கு இன்னும் சிலகாலம் ஆகலாம் அதுவரை அடிப்படைவாத சக்திகள் தலை எடுக்காமல் இருக்க வேண்டும் ஆப்கானை விட்டு அமெரிக்க துருப்புகள் வெளியேறுவதால் இந்தியாவில் கூட பயங்கரவாதிகளின் நடவடிக்கைகள் மேலோங்கலாம் இதை நமது அரசாங்கமும் கவனத்தில் கொள்ள வேண்டும்


+ comments + 10 comments

GOBI
09:13

ஒரு முக்கியமான செய்தி

26 லட்சம் கோடி ரூபாய் நிலகரி ஊழல் நடந்துள்ளது ஆனால் இதை முழுவதுமாக மறைத்து விட்டார்கள் ,

நமந்து மதிப்பு மிகு பிரதமரை திட்டுவதற்கு வார்த்தையே இல்லை

நாட்டில் கருப்பு பணம் , ஊழல் பிரச்னைகள் மிக மிக அதிகமாகி விட்டன

கருப்பு பணம் வைத்திருபோர்கள் பட்டியலை இன்னும் பதினான்கு மாதங்கள் கழித்து வெளியிடுகிறார்கலாம்

ஏன் இன்னும் பதினைத்து வருடங்கள் கழித்து வெளியிட்டால் நாடு முற்றிலும் அளிந்த பின் வெளியிடலமே

இது ஒரு புறம் இருக்க வெளிநாட்டு நிறுவனகளுக்கு ஒரு நாளைக்கு 360கோடி ருபாய் மானியம் கொடுக்கபடுகிறது.

magaprapu
13:20

நிச்சயம் ஆட்சியை பிடிக்கும்

ஐயா,நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை .பா.ஜ.க .,முற்றிலும் தன்னை சுய பரிசோதனை செய்து கொண்டாலொழிய அது ஆட்சிக்கு வருவது என்பது குதிரைக் கொம்புதான்.காங்கிரஸ் போன்ற ஓட்டுபொறுக்கி அரசியல் கட்சிகளின் முட்டாள்தனமான கொள்கையினால் பாரத நாட்டில் ஹிந்துக்கள் இரண்டாந்தர குடிமக்கள் ஆகிவிடுவார்களோ என்று ஆர்.எஸ்.எஸ்.இயக்கம் பயந்ததன் வெளிப்பாடுதான் ஜனசங்கம் இதுவே காலபோக்கில் பா.ஜ.க.என்றானது . 1991 வரை டில்லி, உ.பி.,பீகார்,ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் ஆட்சியில் இருக்கும் வரை ஒழுங்காகத்தான் இருந்தது 1991 ல் மத்திய அட்சியைப் பிடித்தவுடன்தான் அதற்கு அதன் தலைவர்களாலேயே அழிவுகாலம் தொடங்கியது.அடல்பிகாரி வாஜ்பாய் அவர்கள் தன்னை பா.ஜ.க. வி தலைவராக நினைக்காமல் காந்தியின் வாரீசாகவே தன்னை நினைத்துகொண்டு செயல்பட்டார். கட்சிக்காக உழைத்தவர்களை கைவிட்டு கொள்ளைக் கும்பல்களான தி.மு.க., தெலுங்கு தேசம் .,மக்கள் மத்தியில் கொஞ்சம் கூட செல்வாக்கில்லாத,இன்றுவரை பாரதீய ஜனதாவை தூற்றிக் கொண்டிருக்கும் ராம் விலாஸ் பாஸ்வானை மந்திரியாக்கியது போன்ற செயல்களின் மூலம் தன்னை "மிஸ்டர் கிளீன்" ஆகவே காட்டிக்கொள்ள முனைந்தாரே தவிர தனக்கு வாக்களித்த ஹிந்துக்களை அவர் கைவிட்டு விட்டார் அதன் விளைவால் அந்த கட்சி இன்றுவரை ஹிந்துக்களிடம் முழுமையான நம்பிக்கையைப் பெற முடியவில்லை. மேலும் 1991 ல் பா.ஜ.க.ஆட்சிக்கு வருவதற்கு ஓட்டளித்தவர்கள் 99 .99 % ஹிந்துக்கள்தான் என்பதை மறந்து பா.ஜ.க. வினர் ஆட்சி போதையிலே காங்கிரஸ்காரர்களைப் போல் தடுமாறினார். ஹிந்துக்களுக்கு கொடுத்த பல வாக்குறுதிகளை மறந்தனர். உதாரணத்திற்கு நாடு முழுவதற்கும் ஒரே சிவில் சட்டம், காஷ்மீர் மாநிலத்தை இந்தியாவிலிருந்து வேறுபடித்திக்காட்டும் சட்டம் 370 ஐ நீக்குதல், அயோத்தியில் ராமருக்கு கோயில் கட்டுதல் போன்ற விஷயங்களில் அவர்களின் செயல்பாடுகள் ஹிந்துக்களுக்கு திருப்தி அளிக்கவில்லை , மேலும் அதன் தலைவர்கள் பதவியைப் பிடிப்பதற்காக நடந்துகொண்ட முறைகள் மஹா கேவலம். வரும் தேர்தலுக்குள் இதெல்லாம் மாற்றிக்கொண்டு ஹிந்துக்களுக்கு நம்பிக்கையானவர்களாக மாறினால் ஒழிய அவர்கள் மீண்டும் ஆட்சியைப் பிடிப்பது சந்தேகமே.............

காங்கிரஸ் ஆட்சியில் நம் நாடு மிகவும் தரம் தாழ்ந்து போய்விட்டது.இதை எதிர்கட்சியான பாஜக ,எப்படி உபயோகித்திருக்கவேண்டும்.இந்த சூழ்நிலையை அநேக பத்திரிகைகள் எடுத்துரைத்திருவிட்டன.ஆனால் பாஜக இன்னும் சுதாரிக்கவில்லை.பாஜகவில் அருமையான நிர்வாகத்திறமையுள்ள பல தலைவர்கள் இருக்கிறார்கள்.ஆனால்,சூழ்நிலையை உணர்ந்து யாரும் செயல்படக்காணோம்.பிற கட்சிகள் பாஜகவுடன் கூட்டணி சேர தயங்குகின்றன.காரணம் இந்த கட்சி மதவாத கட்சி என்று முத்திரை குத்தப்பட்டுவிட்டது.உண்மையில் பாஜக மதவாதகட்சியா?.அந்த கட்சி ஹிந்துக்களுக்கு மட்டும் தான் நாங்கள் போராடுவோம் என்று சொல்கிறதா?உண்மையில் மற்றகட்சிகள் அல்லவா ,அப்பட்டமான ஹிந்துக்களின் விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன.முஸ்லீம்களும் கிறிஸ்தவர்களும் எந்த தேச விரோத செயல்களில் ஈடுபட்டாலும் அல்லது பயங்கரவாதத்தில் ஈடுபட்டாலும்,கண்களையும்,காதுகளையும்,வாயையும் மூடிக்கொள்ளும் மற்ற அனைத்து கட்சிகளல்லவா மதவாத கட்சிகள்.இதை ஒவ்வொரு தெருவிலும்,நாடு முழுவதும் தொடர்ந்து ,விடாமல் பிரச்சாரம் செய்யவேண்டும்.அப்பொழுதான் ,சொரணை இல்லாமல் தூங்கிக்கொண்டிருக்கும் ,பெரும்பான்மையான ஹிந்துக்களுக்கு சிறிதாவது செய்தி போய்சேரும்.கம்முநிஷ்டைப் பாருங்கள்(அதுதான் நம்பர் ஒன் மதவாதகட்சி),ஒரு செய்தியை மக்களிடம் எடுத்துசொல்லவெண்டுமானால் பெரிய தலைவர்களை கூப்பிட மாட்டார்கள்,பெரிய பெரிய மேடை போட மாட்டார்கள்.நாலு பேர்தான் போவார்கள் ,ஒரு மைக்கை வைத்துகொண்டு கத்திக்கொண்டு கிடப்பார்கள்.தாங்கள் சொல்வது முற்றிலும் பொய் என்று தெரிந்தாலும்,யாராவது வந்து அடிப்பார்களே என்று கொஞ்சம்கூட பயமில்லாமல் தொடர்ந்து தெருமுனைப் பிரச்சாரம் செய்துகொண்டே இருப்பார்கள்.அதுபோன்று மற்ற கட்சிகளின் ஹிந்து விரோதப்போக்கை தொடர்ந்து ,நாடு முழுவதும்,ஒரு வருசத்திற்கு தெருமுனைப் பிரச்சாரம் செய்யவேண்டும்.இதை செய்யாமல்.டில்லியிலும்,மும்பையிலும் ஏசி அறையில் உட்கார்ந்து ,அடுத்து ஆளப்போவது நாங்கள் தான் என்று பகல் கனவு கண்டுகொண்டிருந்தால்,இத்தாலிக்கு கொஞ்சநாளில் இந்தியா அடிமையாகிவிடும்.

Anonymous
23:29

@jairamesh
நண்பரே நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை..

திரு.தியாகராஜன் அவர்கள் சொல்ல்வது முற்றிலும் சரியே... நமக்கு தேவை இன்னும் ஒரு காங்கிரஸ் அல்ல. ப.ஜ.க மட்டுமே.. ஆனால் இவர்கள் ஓவர் ஆக நடிக்க ஆரம்பித்தார்கள்.

சாயம் வெளுத்த காங்கிரஸ் ஆக மாறிவிட்டார்கள். பிரமோத் மகாஜன் , திருநாவுக்கரசு
இன்னும் பல கொள்கையே தெரியாதவர்களுக்கு மட்டுமே பலன் கிடைத்தது. கூட்டணி இல்லாமல் மோடி பிரதமர் ஆனால் மட்டுமே உண்மையான ப.ஜ.க. ஆட்சியாக அது இருக்கும். வரும் தேர்தலில் கூட அதற்கு முயற்சி செய்யாமல் மீண்டும் சுஷ்மா முகமுடியை முன்னிருத்துவார்கள்....

அதுவரை
நம் தலை எழுத்து இத்தாலி சூனியக்காரி கையிலோ , அவள் மகன் கையிலோ .....

Anonymous
20:22

நீங்கள் சொல்லுவது அனைத்தும் உண்மை.

Anonymous
17:53

"என்னை கேட்டால் இந்தியாவில் இதுவரை தகுதியான பிரதமர்கள் என்று லால்பகதூர் சாஸ்திரி,இந்திரா காந்தி,மொரார்ஜி தேசாய்,நரசிம்மராவ்,வாஜ்பாய் என்று தான் சொல்வேன்"

ஆமாம், எல்லோரும் உங்களுடைய ஜாதியைச் சேர்ந்தவர்கள். அதனால் தகுதியான பிரதமர்களாகத்தான் இருப்பார்கள். இதர ஜாதியினருக்கு எந்த தகுதியுமே இருக்க முடியாது.

Anonymous
19:32

matra jathikku nangal janathipathi koduthome? nandri kettavargal. ippol parungal kerlavin azhagai. mulsim league in attahasam.

Anonymous
12:55

We Want Narendramodi Become A next PM............We DON'T WANT ANY OTHERs..............


Next Post Next Post Home
 
Back to Top