( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )21 ஞாயிறு ஜூலை அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

கடவுளுக்கு பிடித்த தொழில்

   நான் பிறந்தது புது டெல்லி என்றாலும் எனது வாழ்நாள் இந்தியா முழுவதும் சுற்றுவதிலேயே கழிந்திருக்கிறது

இப்போது நான் நினைத்தாலும் சுற்ற முடியாது காரணம் இனம் புரியாத அல்லது தெரியாத ஒரு நோயின் தாக்கத்தால் என் இரண்டு கால்களும் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டு விட்டது

 இதை நான் இழப்பாக கருத வில்லை இறைவன் எனக்கு இளைப்பாற கொடுத்த நேரமாகவே கருதுகிறேன்

 இன்னும் சில காலம் தான் வாழ்வேன் என்றாலும் அந்த வாழ்வை எனக்கும் என் குடும்பத்துக்கும் சமூகத்துக்கும் பயனுடையதாக ஆக்கி கொள்ள விரும்புகிறேன்

 அது நடக்குமா? அதற்கு நான் செய்ய வேண்டியது என்ன? என்பதை தயவு செய்து ஜோதிடம் ரீதியாக விளக்கம் தர வேண்டுகிறேன்
டாக்டர்.மனோரஞ்சன் முகர்ஜி 
    மும்பை                  
      ங்கள் ஜாதகத்தை திருக்கணித பஞ்சாங்கப் படி கணித்து பார்த்ததில் உங்களுக்கு ஏற்ப்பட்டுள்ள உடல் உறுப்பு இழப்பு என்பது ஆறாவது இடத்தில் உள்ள கேதுவால் ஏற்ப்பட்டது எனலாம்

 இந்த நோய் உங்களுக்கு ஏற்பட உங்களது தவறான பழக்க வழக்கங்களும் அசட்டை போக்குமே காரணம் என்று சொல்லலாம்

 சனி வீட்டில் உள்ள கேது உடல் நலத்தையும் மற்றவர்கள் சொல்லும் நல்ல அறிவுரைகளையும் அவ்வளவு சீக்கிரம் கவனிக்க விடாது காலம் கடந்த ஞானத்தை தான் தரும்

உங்கள் ஜாதகத்தில் பிரம்ம யோகம்,தன யோகம், மாத்ரூ மூலதன யோகம் இருக்கிறது

 இதனால் நல்ல உத்தியோகம் நல்ல பொருளாதார பலம் ஆகியவைகள் உங்களுக்கு உண்டு என்றாலும் உங்களது சுதந்திரமான யாருக்கும் அடங்காத மன போக்கால் அவைகளை பல நேரங்களில் இழக்கவும் நேரிடும்

 மேலும் உங்கள் லக்கினத்திலேயே மிக முக்கிய ஐந்து கிரகங்கள் இருபது மிகவும் விஷேசமாகும்

 பாரம்பரியம் மிக்க குடுமத்தில் பிறந்தவராகவும் சிறந்த அறிவாற்றல் உடையவராகவும் அதே  நேரம் குடும்பத்தில் குழந்தைகளால் பல துயரங்களை அனுபவிப்பவராகவும் இருப்பிர்கள்

ஒரே நாளில் ராஜ வாழ்வு பிச்சைகார வாழ்வும் கூட வாழ்ந்திருப்பிர்கள்

 இனி உங்கள் ஜாதகப்படி மோசமான கால கட்டம் என்பது இல்லை

 உங்களது அறிவையும் திறமையையும் அனுபவத்தையும் இளைய தலைமுறையினருக்கு போதனை செய்யுங்கள்

 அதாவது பேராசிரியர் என்ற பதவியில் இருந்து டியூசன் ஆசிரியர் என்ற நிலைக்கு வாருங்கள் அது உங்களது புகழையும் பொருளையும் பலப்படுத்தும்

அடுத்ததாக உங்கள் ஜாதகத்தில் பூர்வ புண்ணிய ஸ்தானம் ஜெய்மினி ஜாதக கணிதப்படி பித்துரு தோஷம் ஸ்திரி தோஷம் போன்றவைகள் இருப்பதை காட்டுகிறது

 இது உங்களது குடும்ப வாரிசுகளின் வாழ்க்கையை நிலையற்றதாக மாற்றி அமைத்து கொண்டு இருக்கிறது

 இதற்கு பரிகாரமாக மாஹா சண்டி ஹோமமும் ஒன்பது சுமங்கலிகளுக்கு வஸ்திர தானமும் மகர சங்கராந்தி அன்று செய்யுங்கள்

 உங்களது குழந்தைகளின் வாழ்க்கை வளமடையும்

 மேலும் உங்கள் ஜாதகம் உங்களுக்கு நீண்ட ஆயுள் என்று சொல்கிறது எனவே இன்னும் குறைந்தது பதினைந்து வருடமாவது மாணவர்களுக்கு நீங்கள் தொண்டு செய்யலாம்

 நமது கடவுளுக்கு பிடித்தமான தொழில்கள் இரண்டு ஒன்று உலகத்தை காக்கும் மரம் வளர்த்தல் மற்றொன்று மனிதனை காக்கும் அறிவு வளர்த்தல் நீங்கள் இதில் ஒன்றை செய்தாலும் மற்றொன்று வாழும்

 தினசரி காயத்திரி ஜபம் செய்வதால் உங்கள் மனோ தைரியம் அதிகரிக்கும்


+ comments + 4 comments

ஸ்ரீ
09:50

ஐயா மஹா சண்டி ஹோமம் என்றால் என்ன? இதை எல்லோரும் செய்யலாமா?

Anonymous
21:08

காயத்ரி ஜபம் செய்வது எப்படி என்றும் அதன் வரிகளையும் தயவு செய்து பிரசுரிக்கவும்

Anonymous
01:12

நல்ல கட்டுரை...வாழ்த்துக்கள் ...

Anonymous
01:13

எனக்கு தொடர்ந்து வாக்களித்தமைக்கு என் மனமார்ந்த நன்றி...


Next Post Next Post Home
 
Back to Top