Store
  Store
  Store
  Store
  Store
  Store

மறைக்காமல் மழுப்பாமல் பதில் சொல்லவும்

  • ண்மையை  மறைக்காமல் மழுப்பாமல் பதில் சொல்லவும் கடவுள் இருக்கிறாரா? இல்லையா?
ராபர்ட், தூத்துக்குடி


   டவுள் என்பது கேள்வி கேட்டோ பதில் சொல்லியோ அறிந்து கொள்ளும் விஷயம் அல்ல

இருக்கிறார் என்று சொன்னால் ஏன் அவர் இல்லாமல் இருக்கக் கூடாது என்று தோன்றும் இல்லை என்றாலும் ஒரு வேளை இருக்கக் கூடுமோ என்று சந்தேகம் வரும்

உங்கள் வாழ்க்கையையும் உங்களுக்கு முன்னால் வாழ்ந்தவர்களின் வாழ்க்கையையும் ஆழமாக பாருங்கள்

அதில் எத்தனை ஆசைகள் நிறைவேறி இருக்கிறது நிறைவேறிய வற்றில் எத்தனை எதிர் பார்த்தது விரும்பியது என்பதை சிந்தித்தீர்கள் என்றால் கடவுள் இருப்பதும் இல்லாததும் தெரியவரும்

கார் டயரில் ஒரு சிறிய ஆணி குத்தினாலும் காற்று வெளியேறிவிடும் நமது உடம்பில் ஒன்பது ஓட்டைகள் இருக்கின்றன ஆனாலும் உயிர் மூச்சி ஓடி கொண்டிருக்கிறது அது எப்படி?

 இரண்டு கால் உள்ள எந்த பொருளும் சரிந்து விழுந்து விடும் மனிதன் இரண்டு கால்களிலும் ஒவ்வொரு வினாடியும் சரிந்தாலும் விழாமல் இருக்கிறான் அது எப்படி?

பத்து மாதத்தில் பிள்ளை பிறப்பது எல்லோருக்கும் தெரியும் இபோதைய குழந்தைகள் அவசரப்பட்டு எட்டு மாதத்திலும் பிறந்து விடுகிறது ஆனால் யாருக்காவது எந்த குழந்தையாவது ஏன் பிறக்கிறது என்று தெரியுமா? அந்த ரகசியத்தை அறிய முடிய வில்லையே அது எப்படி?

இப்படி ஆயிரம் எப்படி என்ற கேள்விகளை அடிக்கிக் கொண்டே போனாலும் அதற்கு விதவித மான பதில்கள் கிடைத்தாலும் நாமாக உணர்ந்து முடிவுக்கு வரும் வரை திருப்தி ஏற்படாது

எனவே கடவுள் உண்டா இல்லையா என்பதை அனுபவத்தில் உணர தலைப்படுங்கள்  அந்த உணர்வின் முடிவு என்ன பதிலை தருகிறதோ அதை ஏற்று கொள்ளுங்கள்

நான் உணர்ந்த வரை கடவுள் இருந்தார் இருக்கிறார் இருப்பார்.


  • யா நிம்மதியாக தூங்க என்ன வழி?
திருமதி காமிலா பேகம் அக்பர், திருவனந்தபுரம்


   தூங்குவதற்கு என்ன வழி என்று கேட்டால் சுலபமாக சொல்லிவிடலாம் இதில் நிம்மதியாக என்ற ஒரு பதம் இருக்கிறது அதில் தான் சிக்கலே உள்ளது

காரணம் நிம்மதி என்பது மனிதனுக்கு மனிதன் மாறுபடுகிறது

பசியால் இருப்பவன் வயிறு நிறைந்தால் நிம்மதி என்கிறான்

நோயாளியோ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்கிறான்

சிலருக்கு பணம் கிடைத்தால் நிம்மதி சிலருக்கு பதவி வந்தால் நிம்மதி இன்னும் சிலருக்கு பெண் கிடைத்தால் குழந்தை கிடைத்தால் நிறைய நிலம் கிடைத்தால் நிம்மதி என்கிறார்கள்

ஆனால் எல்லோருக்கும் எல்லாமும் எப்போதும் கிடைத்து விடுவது இல்லை இதனால் பல மனிதர்களுக்கு நிம்மதி என்பதே இல்லை

உண்மையில் நிம்மதி எதில் தான் இருக்கிறது?

ஆயிரம் விளக்கம் சொல்லிக் கொண்டே போனாலும் கடைசியில் போதும் என்ற திருப்தி தான் நிஜமான நிம்மதி என்பது தெரியவரும்

எனவே எதிலும் நிதானத்தோடு வாழபழகினாலே நிம்மதியான உறக்கம் தானாக வரும்


  • மந்திர அனுபவங்கள் படிக்க இங்கு செல்லவும்


Contact Form

Name

Email *

Message *