( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

பிரதமர் ஐயா இந்த கடிதத்தை படிங்க...!

   திப்பிற்கும் மரியாதைக்குறிய இந்திய நாட்டின் பிரதமர் அவர்களுக்கு உங்களால் ஆளப்படும் நாட்டின் கடைகோடியில் வாழுகின்ற ஒரு சராசரி இந்தியன் எழுதும் கடிதம்

    வணக்கம் ஐயா! 

         லமாக இருக்கிறீர்களா நீங்களும் உங்களது அமைச்சரவை சகாக்களும் நலம் தானா வேளாவேளைக்கு உணவு அருந்தி உடம்பை ஜாக்கிரதையாக கவனித்து கொள்ளுங்கள் வயதான காலத்தில் நீங்கள் நன்றாக இருந்தால் தான் உங்கள் மக்களாகிய நாங்கள் நலமுடன் வாழ இயலும்

ஐயா சில விசயங்களை உங்களிடம் மனம் விட்டு பேச விரும்புகிறேன் நீங்கள் விவசாயம் மட்டுமே வாழ்வாதாரமாக கொண்ட பஞ்சாப்பில் பிறந்தவர் ஒவ்வொரு அடித்தட்டு மக்களின் ஆசை கனவு என்னவென்று உங்களுக்கு தெரிந்திருக்கும் சாதரணமாக ஒரு பசுமாட்டையும் ஒரு ஏக்கர் நிலத்தையும் வைத்துக் கொண்டு வயிற்றை கழுவும் அப்பாவி குடியானவன் என்ன நினைப்பான்? தனது கொட்டகையில் அதிக மாடுகள் வேண்டும் இன்னும் கொஞ்சம் அதிகமாக நிலம் வேண்டும் மனைவி மக்களுக்கு நகை நட்டு செய்து போட்டு அழகு பார்க்க வேண்டும் என்று ஆசை படுவான் 


குளிர்சாதன அறையிலிருக்கும் கனவான்கள் போல் அவனால் கால்களை தூக்கி மேஜைமேல் போட்டுக் கொண்டு கனவு கண்டு கொண்டிருக்க இயலாது தனது ஆசைகளை நிறைவேற்றி கொள்ள கடினமாக உழைக்க வேண்டும் என்பது அவனுக்கு தெரியும் அப்படி உழைத்து சிறுக சிறுக சேமித்து கடேசியில் கையில் மிஞ்சும் பணத்தை யாரவது வந்து பறித்துக் கொண்டு போனால் அவன் மனம் எவ்வளவு பாடு படும் வயிறு எரிந்து சாபம் கொடுப்பான் தானே

அந்த அப்பாவியின் துயரத்தை துடைக்க ஊர் தலைவர்கள் முயற்சிக்க வேண்டும் ஏழையின் உழைப்பிற்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்பது தானே சட்டம் அதுதானே தர்மமும் கூட மெத்தப் படித்த உங்களுக்கு இந்த சின்ன விஷயம் தெரியாதா என்ன நான் சொல்லி விளங்க வைக்க வேண்டிய அவசியம் இல்லை

ஆனாலும் நீங்கள் மறந்து போய் விட்டிற்களோ என்ற எண்ணத்தில் ஞாபகப் படுத்த விரும்புகிறேன் நம் நாடு சுதந்திரம் அடைந்த போது நம்மிடம் இருந்த சொத்துக்கள் என்ன? கோடிக்கணக்கான இந்தியர்கள் கைகளில் திருவோடும் இந்த பாழ்பட்ட ஜனங்களுக்கு எதாவது நன்மைகள் செய்ய வேண்டும் என்ற தலைவர்களின் நல்ல எண்ணமும் தவிர வேறு என்ன நம்மிடம் இருந்தது...? 


பொன்னும் மணியும் கொட்டிக்கிடந்த இந்திய தேசத்தை அந்நியர்கள் வந்து சுரண்டி கொண்டு போய்விட்டார்கள் கொள்ளையடித்து போய்விட்டார்கள் மூட்டை மூட்டையாக கடத்திக் கொண்டு போய்விட்டார்கள் என்று எல்லா தரப்பு மக்களும் பரவலாக பேசினார்கள் இழந்ததை மீண்டும் பெற வேண்டும் என ஜப்பானிய மக்களை போல் நமது தேசத்தவர் அதிகமாக பாடுபட வில்லை என்றாலும் கூட ஓரளவு உழைத்து முப்பது வருடத்தில் நாட்டின் பொருளாதாரத்தை ஓரளவு சீர் படுத்தினார்கள்

அதன் பிறகு வந்த இந்த முப்பது வருடங்களில் நமது நாடு வளர்ச்சி கண்டிருக்கிறது என்பதை நான் மறுக்க வில்லை ஆனால் அந்த வளர்ச்சி அடித்தட்டு மக்களை சென்றடைய வில்லை என்பதை நீங்களும் மறுக்க மாட்டிர்கள் அதற்கு காரணம் என்ன எதாவது மாய சக்தி அந்த மக்களை மேலெழும்ப விடாமல் தடுக்கிறதா என்றால் அது நிச்சயம் இல்லை என்று உங்களுக்கு தெரியும்

ஊழலும் கருப்பு பணமும் இந்த நாட்டின் வளர்ச்சியை புற்று நோயை போல அரித்திருக்கிறது தடுத்திருக்கிறது என்பதை யாரும் மறைத்து பேசி விட இயலாது நீங்கள் கூட சுகந்திர தின விழாவில் கோட்டையில் கொடியேற்றும் போது ஊழல் மிகப் பெரிய தடைக்கல் என்று அழகாக சொல்லி இருக்கிறீகள் பிறகு என்ன தடை இருப்பதும் தடைக்கு காரணமாக இருப்பதும் எது என்று உங்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கிறது பிறகு அதை ஒழிப்பதற்கு செய்ய வேண்டியதை செய்வதில் உங்களுக்கென்ன கஷ்டம்...?


நீங்களே சொல்கிறீர்கள் மக்களின் நலத்திட்டதிற்காக ஒதுக்கப் படும் பணம் மக்களிடம் சென்று சேர்வதில்லை அதிகாரிகளின் சட்டை பைக்குள் தான் போகிறது என்று பிறகு அதை தடுப்பதில் கால தாமதம் செய்ய வேண்டிய அவசியம் என்ன? உங்களை அதை செய்ய விடாமல் யாரவது தடுக்கிறார்களா? அப்படி தடுப்பவர்கள் யாராக இருந்தாலும் பயப்படாமல் அடையாளம் காட்டுங்கள் இந்திய நாடே உங்களை சூழ்ந்து பாது காக்கும் தேசத்திற்கு பாதகம் செய்பவரை மோதி மிதித்து விட எழுந்து நிற்கும்

ஆனால் நீங்கள் தேச துரோகிகளை அடையாளம் காட்ட மாட்டீர்கள் அவர்களை தண்டிக்க மாட்டீர்கள் ஏனென்றல் அதற்கான துணிச்சலும் தைரியமும் உங்களிடம் இல்லை என்று மக்கள் பேசுகிறார்கள் நீங்கள் நடந்து கொள்ளும் விதமும் அப்படிதான் இருக்கிறது ஒரு பொருளாதார மேதையாக அப்பழுக்கற்ற மனிதராக உங்களை பார்த்த காலம் மலையேறி விட்டதாகவே தோன்றுகிறது ஒரு சாதாரண அடிமட்ட அரசியல்வாதி எப்படி பதவிக்காக நடந்து கொள்வானோ அப்படி தான் நீங்களும் செயல் படுகிறிர்கள்

ஊழலை ஒழிக்க வேண்டுமென்று நீங்கள் சொல்வதை தானே அன்னா ஹசாரே சொல்கிறார் அதை ஆதரிப்பதில் உங்களுக்குள்ள நடை முறை சிக்கல் என்ன என்று தான் எங்களுக்கு புரிய வில்லை ஹசாரே உங்களையோ உங்களது அரசாங்கத்தையோ வீட்டுக்கனுப்ப வேண்டும் என்று சொல்ல வில்லை நீங்கள் மகராசனாய் நூறு ஆண்டுகள் அரசாளுங்கள் நாங்கள் குறுக்கே வரவில்லை ஊழலை மட்டும் ஒழியுங்கள் என்று தானே சொல்கிறார் அதில் தவறு இருப்பதாக அந்த நோக்கத்தில் குற்றம் இருப்பதாக தெரிய வில்லையே 


தானொரு திட்டத்தை வகுத்து அதைத்தான் அரசாங்கம் செயல்படுத்த வேண்டும் என்று பிடிவாதம் பிடிப்பதில் ஹசாரே பேரில் குறையாக சொல்லலாம் அது ஜனநாயக மரபும் அல்ல என்பது அனைவருக்கும் தெரியும் ஆனால் அதற்கு உங்கள் அரசாங்கம் சொல்லுகின்ற பதில் ஆணவத்தோடும் அதிகார மமதையோடும் இருக்கிறது என்பதை நீங்கள் உணர வேண்டும்

ஊழலை ஒழி என்று சொல்பவன் பெயரிலேயே ஊழல் குற்ற சாட்டை சுமத்தி விட்டால் அவன் வாயடைத்து விடுவான் மக்களும் அதை நம்பி விடுவார்கள் எல்லாம் மாறும் எல்லாம் மறக்கப் படும் என்று உங்கள் அமைச்சரவை நினைப்பதாக தெரிகிறது தயவு செய்து அந்த எண்ணத்தை மாற்றி கொள்ளுங்கள் இப்போது நீங்கள் மாற்றி கொள்ளவில்லை என்றால் வருங்காலத்தில் அதற்க்காக மிகவும் வருத்தப் படுவீர்கள் உங்கள் கட்சியும் உங்களை பலிகடா ஆக்கும் நீங்களும் அவமான சின்னமாக மாற வேண்டிய நிலை வரும்

ஜனநாயக நாட்டில் அறவழி போரட்டத்தை இத்தனை நாட்கள் தான் நடத்த வேண்டும் என்று விதி முறை வகுப்பது கேலி கூத்தாகும் உங்கள் அரசு போடும் நிபந்தனை போல பிரிட்டிஷ் அரசாங்கம் இந்திய சுகந்திர போருக்கு நிபந்தனை போட்டிருந்தால் வரலாறு எப்படியாகி இருக்கும் என்பதை சற்று சிந்தியுங்கள் ஒரு அந்நிய அரசாங்கம் நடந்து கொண்ட நாகரீக நடைமுறை கூட உங்களிடம் இல்லாதது வேதனையாக இருக்கிறது 


நீங்கள் சொல்விர்கள் இந்திய நாட்டில் அரசியல் சாசனப் படி எந்தவொரு குடிமகனும் பட்டினிகிடக்க கூடாது அது சட்டப் படி குற்றம் என்று நெஞ்சை தொட்டு சொல்லுங்கள் நம் நாட்டு மக்களில் எத்தனை பேர் தினசரி முறைப்படி உணவருந்துகிறார்கள்? அனைவருக்குமே உணவு தன்னிரைவாக கிடைக்கிறது என்று தைரியமாக சொல்ல முடியுமா? நிச்சயம் உங்களால் முடியாது சாலை ஓரங்களில் சத்திரம் சாவடிகளில் மரத்தடிகளில் தினம் தினம் நம் நாட்டில் நடைபெறும் பட்டினி சாவை உங்கள் அரசியல் சாசனம் தீர்த்து வைத்துள்ளதா? அப்படி தீர்த்து வைத்துள்ளது என்று நீங்கள் ஊறுதியாக சொன்னால் அதன் பிறகு உண்ணா விறதங்களை தடை செய்யுங்கள் அது வரை அதை தடை செய்யும் யோக்கியதை உங்களில் யாருக்கும் கிடையாது

ஒரு சிறிய நெருப்பு துண்டு தான் அடர்ந்த காட்டையே எரித்து சாம்பலாக்கும் லட்சோப லட்சம் இந்தியர்களின் மனக் கொதிப்பின் சிறிய அடையாளம் தான் அன்னா ஹசாரே அவரை தனிமனிதர் என்று அசட்டையாக நினைத்து நடவடிக்கை எடுத்திர்கள் என்றால் கொள்ளிக்கட்டையால் தலையை சொரிந்து கொண்ட வானரம் போல் ஆகி விடுவிர்கள் ஒரு ஹசாரேயை தடுக்க நினைத்தால் ஒழிக்க நினைத்தால் உங்கள் அரசாங்கத்தின் இரும்பு கரங்கள் அதை சுலபமாக செய்து முடித்து விடும் ஆனால் அதன் பிறகு மூலை மூலைக்கு கிளம்பும் ஹசாரேக்களை உங்களால் தடுத்து நிறுத்த முடியாது சுனாமி அலை முன்னால் தவிடு பொடியாகும் பல மாடி கட்டிடங்கள் போல உங்கள் கதையும் ஆகி விடும் 


எங்களது தாய்த்திரு நாடு விடுதலை என்பதை விலை கொடுத்து வாங்க வில்லை! எண்ணற்ற தியாகிகளை பலி கொடுத்து வாங்கியது எங்கள் மக்களின் எலும்புகள் ஓடிகின்ற சத்தம் தான் ஆங்கில அரசாங்கத்தின் செவிப்பறையை கிழித்தது அவர்கள் சிந்திய ரத்தம் தான் ஏகாதிபத்தியத்தின் மூச்சை திணறடித்தது எங்கோ ஒரு மூலையில் வேலூர் கோட்டைக்குள் நடந்த சின்னஞ்சிறிய சிப்பாய் கலகம் தான் நாடு முழுவதும் சுதந்திர வேள்வியாக கொழுந்து விட்டு எரிந்தது

அதே நிலைமை இன்னொரு முறை நடை பெறாது என்று கனவு காணாதிர்கள் முந்தைய அந்நிய அரசாங்கம் ஓடி ஒழிய அவர்களுக்கென்று ஒரு நாடு இருந்தது உங்களுக்கும் உங்கள் கூட்டத்தாருக்கும் இந்த நாட்டை விட்டால் வேறு கதி இல்லை எனவே உங்களை காப்பாற்றி கொள்ளவதற்காவது இன்னொரு சுதந்திர போராட்டம் நடை பெறுவதற்கு முன்பு திருந்துங்கள் அல்லது திருந்துவதற்காவது ஆசை படுங்கள்

ஐயா பிரதமரே! இந்த நாட்டின் சிறந்த பிரதமர் நீர் ஒருவர் மட்டும் தான் என்று உலகமும் மக்களும் ஒன்றாக கருதுவதற்கு மாளிகையில் இருந்து இறங்கி வந்து மக்களோடு தோள் கொடுங்கள் இல்லை என்றால் மாளிகைகுள் மக்கள் புகுந்து விடுவார்கள் அது உங்களது தகுதியை மிகவும் சீரழித்து விடும் 

இதில் கவனமாக செயல் படுங்கள் மீண்டும் சொல்கிறேன் உடல் நலத்தை நல்லபடியாக கவனித்து கொள்ளுங்கள் எங்கள் கிராமத்தில் புத்தி நன்றாக இருந்தால் சரீரம் நன்றாக இருக்கும் என்று சொல்வார்கள் ஆகவே முன்னதை நலப்படுத்துங்கள் பின்னது தானாக சரியாகும்  

இப்படிக்கு உங்கள் குடிமகன்+ comments + 7 comments

GOBI
07:48

இந்தியர்களின் மனதில் இருந்த குறைகளை கொட்டிவிட்டீர்கள்

தாங்கள் ஒரு பொம்மையிடம் கோவித்துகொள்கிறீர்கள்.

முன்பு சொல்வார்கள் ஒரு தீவு ஒரு நாட்டையே ஆள்கிறது என்று .ஆனால் இன்றும் அதே நிலைமை தான் .

இத்தாலி என்ற தீவில் இருந்து வந்த பெண் இந்தியாவை தன் இஷ்டத்திற்கு ஆட்சி செய்கிறார் .

நீங்கள் கூறியதை கேட்டு மன்(மண்)மோகன்சிங்க் பதில் இது தான்

அடுத்த பத்து ஆண்டுகளுக்கு நாட்டின் ஆட்சி பொறுப்பை எங்களிடம் கொடுங்கள் பொற்(போர்) காலமாக மாற்றி தருகிறோம்?????????????


இந்த கலியுகத்தில் மிருகங்களும் அவசர உலகத்திற்கு ஏற்றவாறு மாறிவருகின்றன

முன்பெல்லாம் பசு தன் கன்று தன் அருகில் இருந்தால் மட்டுமே மற்றவர்களை பால் கறக்க அனுமதிக்கும்

ஆனால் இன்று கன்றை பிறந்த அன்றே விற்றுவிடுகிறார்கள்

ஆனாளும் பசு எந்த மறுப்பும் தெரிவிக்காமல் பால் கொடுக்கிறது

இது பற்றி தாங்கள் ஒரு பதிவு கண்டிப்பாக போடவும்

M.Natrayan
12:10

சாதாரண மக்கள் நடையாய் நடக்கிறார்கள் அரசாங்க அலுவலகங்களுக்கு. ஏன் தெரியுமா அரசாங்கம் கொடுக்கும் சில சலுகைகளைபெருவதற்கு. அதற்காக எவ்வளவு லஞ்சம் கொடுக்கவேண்டி இருக்கிறது. அரசு ஊழியர்கள் திருந்தப்போவதில்லை. திருத்தவேண்டியது அரசின் கடமை. அண்ணா ஹசாரே துவக்கிய இந்த போராட்டத்தை ஏன் அவமதிக்கவேண்டும். ஒரு சட்டத்தால் சிறு நன்மை அடைந்தாள் கூட நல்லதுதான். அதன்பிறகு தேவையான பிற மாற்றங்களை செய்துகொள்ளலாம். தனக்கு என்ன வியாதி என்று இந்தியர்கள் தெரிந்து கொள்ள கூடாது என்பதற்காக வெளி நாட்டில் சிகிச்சைக்கு போயிருக்கும் சோனியாவிற்கு நமது நாட்டைப்பற்றி என்ன தெரியும். தனக்கு பாதுகாப்பாக இத்தாலி போலிசை வைத்துக்கொண்டு இந்திய போலிசை அவமதிக்கும் இவருக்கு நம்மில் சிலர் வக்காலத்து வாங்குகிறார்கள். என்ன கொடுமை இது! காலத்தை வீணாக்காமல் நல்லதை செய்ய நமது பிரதமர் முன் வர வேண்டும்.

Anonymous
15:22

எல்லோரும் போராடுவோம்
எல்லோரும் போராடுவோம்
அண்ணாவின் வழியில் நின்று
நல்லோர்கள் வாழ்வை எண்ணி
எல்லோரும் போராடுவோம்
எல்லோரும் போராடுவோம்

ஆடையின்றி பிறந்தோமே
ஆசையின்றி பிறந்தோமா
ஆடி முடிக்கையில் அள்ளி சென்றோர் யாருமுண்டோ..ஓ


படைத்தவன் சேர்த்து தந்தான்
எடுத்தவன் மறைத்து கொண்டான்
கொடுத்தவன் தெருவில் நின்றான்
எடுத்தவன் கொடுக்க வைப்போம்
கொடுத்தவன் எடுக்க வைப்போம்
இன்று போல் முடியும் வரை ஒன்றாய் கூடுவோம்..

எல்லோரும் போராடுவோம்
எல்லோரும் போராடுவோம்

சென்னை நீ கி ராமஜயம்

Anonymous
17:02

ayya enda kaditham enmanathil ulladai appadiye pradibalikiradu edai thayavo seidu anda mundasu ayyaukku anupiveiyunga pls

Anonymous
09:02

நாட்டையே கொள்ளை அடித்து அயல்நாட்டில் சொத்து, பணம் குவித்து, வைத்திருப்பவர்கள் வேறு யாரும் அல்ல காங்கிரஸ் அரசியல்வாதிகள்தான், கடுமையான, வலிமையான லோக்பால் சட்டத்தை இயற்றினால் முதலில் தூக்கில் தொங்குபவர்கள் இந்த அரசியல்வாதிகள்தான். அப்படி இருக்கும்போது தன் தலையிலேயே கொள்ளி வைத்துக்கொள்ள அவர்கள் என்ன ஏமாளிகளா? முட்டாள்களா? மூளைகழண்டவர்களா? அப்படி இருக்கும்போது லோக்பால் சட்டம் அன்னா சொல்வதுபோல் வரவிடுவார்களா? அவர்கள் மண்டையில் அடிவிழப்போகிறது, குடும்பமே நாசமாகப்போகிறது என்ற நிலை வந்தாலொழிய இந்தத் திருட்டு அயோக்கிய அரசியல்வாதிகள் வலிய லோக்பால் சட்டத்தை இயற்றமாட்டார்கள்.

Anonymous
19:00

அன்னா ஹசாரேவையும் நாட்டு மக்களையும் உதாசீனபடுத்தினால், லிபியாவை போல புரட்சி நடப்பது வுறுதி,இதைத்தான் இந்த அரசாங்கம் விரும்புகிறது போலும்.
தேவை இல்லாமல் கருத்துகணிப்பு நடத்துவோம் என்று காலம் தாழ்த்துவதை பார்த்தால் இவங்கள் படாமல் திருந்த போவதில்லை என்றுதான் தெரிகிறது.

Anonymous
08:58

அகங்காரமும் பணவெறியும் யாரையும் எதையும் சட்டை செய்யாது.
அதிகாரம் தன் கையில், வலிமையான லோக்பால் கொண்டுவந்தால் தாங்கள் மாட்டுவதுமல்லாமல், கொள்ளையடித்து அயல்நாட்டில் குவித்து வைத்துள்ள் 4 லட்சம் கோடியும் நாட்டுக்குப் போய்விடுமே என்றுதான் இந்தப்பாவிகள் இப்படி முட்டுக்கட்டை போட்டுத் தன்நாசத்திற்குத் தானே குழி தோண்டிக்கொண்டிருக்கிறார்கள். இரண்டாவது சுதந்தரப்போராட்டத்தைத் தோற்றுவித்து வழிநடத்தி வரும் அன்னாவுக்கு ஏதேனும் நிகழ்ந்தால், அன்னாபோல அஹிம்சையைக் கடைப்பிடித்துக் கொண்டிருக்கமாட்டார்கள் மக்கள்; இந்தப்பாவிகளின் கொட்டம் அடியோடு அழியுமாறு மக்கள் புரட்சி ஏற்பட்டுவிடும்.அப்போது too late ஆகி இந்தப்பாவிகள் துடிதுடித்துத் தம் குடும்பத்தோடு நாசமாகப் போவார்கள்.


Next Post Next Post Home
 
Back to Top