( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

புதன் திசையால் கண்டம் ஏற்படுமா...?


  • ஐயா எனக்கு தற்போது புதன் தசையில் புதன் புத்தி நடக்கிறது என் பிறந்த ஜாதகத்தின் அடிப்படையில் புதன் ஆயுள் மற்றும் ஆரோக்கிய ஸ்தானங்களின் அதிபதி ஆவார் இதனால் எனக்கு கண்டம் ஏற்படுமா?
அசோகன் சென்னை


   பொதுவாக எந்த கிரகத்தின் தசையிலும் சுய புத்தி நடக்கும் போது நல்ல பலன்கள் அவ்வளவாக கிடைக்குமென்று சொல்ல முடியாது

உங்களை பொருத்தவரை புதன் ஜனன ஜாதகத்தில் மறைவு ஸ்தானாதிபதியாகவே இருக்கிறார்

இவரது திசை காலத்தில் உங்களுக்கு பல நன்மைகள் நடை பெறுவதற்கான சூழல் உள்ளது என்றாலும் தற்போதைய புதன் புத்தி முடியும் வரை ஆரோக்கியத்தில் பல இடர்பாடுகள் ஏற்படும்

சிறிய நோய் கூட பெரியளவில் தொல்லையை கொடுக்கும் எனவே உடல்நலத்தை அசட்டை செய்யாமல் உடனுக்குடன் கவனிப்பது பல வகையிலும் சிறந்ததாகும் 


இந்த கிரக சூழலிருந்து உங்களை தற்காத்து கொள்ள எளிய பரிகாரங்கள் இருக்கிறது

நீங்கள் உறங்கும் அறையின் சுவற்றில் இளம் பச்சை வர்ணம் தீட்டுங்கள் அணியும் ஆடையில் சிறிதளவாவது பச்சை நிறம் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்

வலது கை சுண்டுவிரலில் மரகத பச்சை கல் பதித்த தங்கம் அல்லது வெள்ளி மோதிரம் அணிவது மிகவும் சிறப்புடையது ஆகும்

தினசரி காலையில் விஷ்ணு சகஸ்ரநாமம் அல்லது நாராயண சூத்தகம் பாராயணம் செய்யுங்கள் 

இது முடியாதவர்கள் விஷ்ணு காயத்திரி மந்திரத்தை நூற்றியெட்டு முறை உச்சாடனம் செய்யலாம்

அதுவும் இயலாது என்பவர்கள் ராம நாம ஜபம் செய்யலாம்

இப்படி செய்தால் புதன் புத்தியால் ஏற்படும் ஆரோக்கிய குறைபாடுகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம் 
+ comments + 1 comments

Anonymous
14:06

"கண்ணுக்கு தெரிந்த தெரியாத நல்ல மற்றும் தீய சக்திகளின் தாக்கத்தையும் மீன்கள் தங்களுக்குள் ஈர்த்து கொள்ளும்.
வீடுகளில் மீன்களை வளர்ப்பதனால் வீட்டுக் சொந்தக்காரன் பல வகையில் நன்மை அடைகிறான்.
குடும்பத்தில் உள்ள யாருக்காவது பெரிய அபாயங்கள் வந்தால் அதை வீட்டு பிராணிகள் வாங்கி கொண்டு தன்னை பலி கொடுத்துக் கொள்ளும் என்பார்கள்."
அருமையான பதிவு.
எங்கள் வீட்டில் இதுபோல மீன்கள் பலி கொடுத்து கொண்டுள்ளன.

அரசு,
சென்னை.


Next Post Next Post Home
 
Back to Top