( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )



வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post





உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

சினிமா ஆபாச வியாபாரமா...?

   மீபத்தில் பிரபல திரைப்பட இயக்குனரான எனது நண்பர் ஒருவர் என்னை சந்திக்க வந்திருந்தார் அவருடன் நெடுநேரம் பல விஷயங்களை பற்றி பேசி விட்டு கடேசியில் இப்போது வெளிவருகின்ற திரைப்படங்கள் எவற்றிலும் கதைகளே இருப்பது இல்லையே கதைகள் இல்லாமல் எப்படி உங்களால் படம் எடுக்க முடிகிறது என்று கேட்டேன் இப்படி நான் கேட்டதும் சிரித்து பிரகாசமாக இருந்த அவர் முகம் கருத்து விட்டது ஐயோ பாவம் நாம் கேட்க கூடாத கேள்வியை கேட்டு அவர் மனதை புண்படுத்தி விட்டோமோ என்ற வருத்தம் எனக்கு ஏற்ப்பட்டது 

ஆனால் அவர் சில வினாடிகளில் சகஜ நிலைக்கு வந்து விட்டார் மிட்டாய் கடையில் உட்கார்ந்து கொண்டு ஈ மொய்கிறதே என்று வருத்தப்படுபவனை போல இன்றைய இயக்குனர்களின் நிலை இருக்கிறது நாங்கள் பணத்திற்க்காகதான் படம் எடுக்கிறோம் என்றாலும் அந்த தொழிலில் முன்பெல்லாம் எங்களது திறமையை அறிவை அனுபவத்தை காட்ட முடிந்தது அதனால் மனதிருப்தியும் சந்தோசமும் நிறையவே எங்களிடம் இருந்தது ஆனால் இப்போது இயக்குனர்களின் திறமைக்கோ அனுபவத்திற்கோ மதிப்பு கிடையாது 


தயாரிப்பாளர்களின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ற படியும் நடிகர்களின் இமேஜிக்கு தக்கப்படியும் தான் படம் எடுக்க வேண்டிய சூழல் உள்ளது இதில் கதை லாஜிக் அது இதுவென பேசிக்கொண்டிருந்தால் ஓரம் கட்டிவிடுவார்கள் பிறகு பிழைப்பை நடத்துவது பெரும்பாடாகிவிடும் என்று வருத்தத்தோடு சொன்னார் அதன் பிறகு தான் அவர் முகம் கருத்தது என் கேள்வியை கேட்டு அல்ல தன் நிலையை உணர்ந்து என்பது புரிந்தது

திரைப்படம் என்பது எவ்வளவு சக்திவாய்ந்த மக்கள் ஊடகம் என்பது நமக்கு தெரியும் பக்க பக்கமாக எழுதி குவித்தாலும் எதோ ஒரு சிலர்தான் படிப்பார்கள் சினிமாவில் ஒரு காட்சியில் அல்லது ஒரு சிறிய வசனத்தில் சொல்ல வேண்டிய கருத்தை சொல்லி விட்டால் அது ஒட்டு மொத்த மக்கள் மத்தியில் மிக சுலபமாக சென்று விடும் அப்படி பட்ட ஊடகத்தை கையில் எடுத்துக் கொண்டால் ஒரு நாட்டின் அரசியல் தலை எழுத்தையே மாற்றி அமைத்து விடலாம் என்பதற்கு தமிழ் நாடு நல்ல உதாரணம் அண்ணாதுரை துவங்கி இன்றைய விஜயகாந்த் வரையிலும் திரைப்பட ஊடகத்தால் உருவான அரசியல் பார்மூலாக்கள் என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்க முடியாது 


அன்றைய திரைப்படங்கள் அரசியலை பற்றி மட்டுமே பேசியிருந்தால் முழு வெற்றியை அடைந்திருக்காது காரணம் நாட்டில் உள்ள சிலர் தவிர பலர் அரசியலை விரும்புவது இல்லை அவரவரும் அவரவர்க்கு தக்கப்படி விஷயங்களை தேடும் மனப்பாங்கும் ரசனையும்  உண்டு அதற்கு ஏற்ற வாறே திரைப்பட பிரம்மாக்கள் பல்வேறுப்பட்ட கருத்துக்களை மக்கள் மத்தியில் கொண்டு வந்தார்கள் அதனால் தான் அக்கால திரைப்படங்கள் எழுதப்படாத இதிகாசங்களாக இன்றும் பலர் கருத்துகிறார்கள்

ஆனால் தற்போதைய திரைப்படங்களில் நல்ல விஷயங்களை பூதக்கண்ணாடிக் கொண்டு தான் தேட வேண்டி உள்ளது சிலர் பாகவதர் காலத்து திரைப்படங்கள் சொன்னக் கருத்துக்கள் வேறு சிவாஜி காலத்து திரைப்படங்கள் சொன்னக் கருத்துக்கள் வேறு இரண்டிற்கும் பெரிய வேறுபாடு உண்டு வளர்ச்சியும் உண்டு காலம் தோறும் சூழலுக்கு ஏற்றவாறு மாற வேண்டிய நிலை சினிமாவிற்கு உண்டு

நான் சிவாஜி காலத்தில் இருந்தது போல் தான் இப்போதும் இருப்பேன் என்று சினிமா பிடிவாதம் பிடித்தால் அது புறப்பட்ட இடத்திலேயே நிற்க வேண்டியது தான் ஒருகாலத்தில் பாடல்கள் கதையை நகர்த்தியது என்றால் மற்றொரு காலத்தில் கதையும் வசனமும் அந்த வேலையை செய்தது இப்போது நவீன தொழில்நுட்பம் வந்துவிட்டதனால் மாறியே ஆகவேண்டிய நிலை சினிமாவின் கட்டாயமாகி விட்டது

மேலும் அன்று சில திரைப்பட நிறுவனங்கள் தான் இருந்தன இன்று அப்படி அல்ல பல கோணத்தில் போட்டிகள் உதயமாகி விட்டன அதற்கு ஈடு கொடுக்கும் போது சினிமாவின் பழைய நடைமுறை மாறித்தான் ஆகும் என்று சொல்கிறார்கள் 


இந்த கருத்தை யாரும் மறுக்க இயலாது பழைய விஷயங்களையே மீண்டும் மீண்டும் பேசிக்கொண்டிருந்தால் கேட்பவனுக்கு சலிப்பு தட்டிவிடும் எதிலும் மாற்றம் என்பது அவசியமானது தவிர்க்க முடியாதது ஆனால் இங்கே பேசுகின்ற விஷயம் சினிமாவில் கதை இல்லையே அது ஏன் என்பது தான்

நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்துவது தவறல்ல காட்சி அமைப்பில் ஒலி ஒளி அமைப்பில் டிஜிட்டல் முறையை கொண்டு வரலாம் அதுவும் தவறல்ல ஆனால் கதையே இல்லாமல் படம் எடுப்பதில் யாருக்கு என்ன லாபம் என்பது தான் நமது கேள்வி

ஒருவன் சினிமா பார்க்க இரண்டரை மணி நேரம் தியேட்டருக்கு வருகிறான் அவனை அந்த நேரத்தில் சந்தோஷப்படுத்தி அனுப்புவது தான் கலைஞர்களின் நோக்கமே தவிர உபதேசம் செய்வது அல்ல என்று சிலர் விளக்கம் தருகிறார்கள் இது சரிதானா நியாயம் தானா என்று அவர்கள் மனசாட்சி கேட்காமல் இருந்தால் சரி 

 எனது இயக்குனர் நண்பர் சொன்னார் நல்ல கதையை எழுதி தயாரிப்பாளரிடமோ பெரிய நடிகர்களிடமோ கொண்டு காட்டினால் அவர்கள் கேட்பது ஒன்றே ஒன்று தான் இதில் கதை இருக்கிறது சரி காசுப் பண்ண வழி இருக்கிறதா என்கிறார்கள்

நடிகர்களோ கதையில் தனது முத்திரையை பதித்தே ஆக வேண்டும் என்று பிடிவாதம் செய்கிறார்கள் இதனால் கலைக்காக கதை எழுதப்போய் பணத்திற்காகவும் நடிகர்களின் தனி முத்திரைக்காகவும் கதையின் கழுத்தை அறுக்க வேண்டிய நிலை ஏற்ப்படுகிறது

சிவாஜி கணேசன் போன்ற நடிகர்கள் கதைக்காக தங்களை மாற்றிக் கொள்வார்கள் தற்க்கால நடிகர்களோ தங்களுக்காக கதையை மற்ற சொல்கிறார்கள் பிறகு எப்படி தரமான படத்தை தரமுடியும் என்று கேட்டார் அதிலும் நியாயம் இருக்கிறதல்லவா


தமிழ் திரைப்பட உலகில் முதல் தர வரிசையில் இருக்கும் நடிகர் ஒருவர் சில காலத்திற்கு முன்பு எடுத்த திரைப்படம் ஒன்றில் தன்னை மிகைப்படுத்தி காட்டிக் கொள்ளவும் தாம்தான் எல்லோரையும் விட மேலானவன் வித்தியாசமானவன் என்று விளம்பரம் படுத்திக் கொள்ளவும் தேவையற்ற பல பாத்திரங்களை உருவாக்கி நடித்திருப்பார் அந்த படம் எடுப்பதற்கு ஆன செலவை விட விளம்பரப்படுத்த ஆன செலவு நிச்சயம் அதிகமாக இருக்கும் கடைசியில் அந்த படம் மக்களுக்கு சொன்ன செய்தி என்ன வென்றே இதுவரை யாருக்கும் புரிய வில்லை கடைசியில் பல கோடி செலவில் உருவான படம் வந்த வேகத்தில் சில லாபத்தை கொடுத்து விட்டு பெட்டியில் தூங்குகிறது

திரைப்பட நடிகர்கள் நடிகைகள் நடிப்பது சம்பளம் வாங்குவது புகழின் உச்சிக்கு ஏறி கொட்டம் அடிப்பதற்கு அல்ல அவர்கள் தயாரிப்பாளர்களிடம் இருந்து சம்பளம் வாங்கினாலும் அந்த பணம் கணிப்பொறியாளன் முதல் மூட்டை தூக்கும் தொழிலாளி வரை கொடுக்கும் பணம் என்பதை மறந்து விடக்கூடாது  


பள்ளிக்கூட ஆசிரியர்களுக்கு எத்தகைய சமூக பொறுப்பு உள்ளதோ அதே அளவு சமூக பொறுப்பு கலைஞர்களுக்கு உண்டு அவர்கள் தங்களது நடிப்பால் இசையால் புலமையால் மக்களை செம்மை படுத்த பாடுபட வேண்டுமே தவிர கீழ்த்தரமான உணர்ச்சிகளை தூண்டிவிட்டு குளிர்காய நினைக்க கூடாது அப்படி நினைப்பவர்கள் நிச்சயம் சமூக விரோதிகளே ஆவார்கள்

பாசமலர்,பாகப்பிரிவினை,படிக்காத மேதை போன்ற படங்கள் இன்றுவரை கூட கொட்டகைகளில் ஓடி கணிசமான வருவாயை ஈட்டி தருகிறது என்றால் அது சிவாஜி என்ற மாபெரும் நடிகருக்காக மட்டும் அல்ல நல்ல அழுத்தமுள்ள அர்த்தமுள்ள கதைக்காகவும் தான் என்பதை உணர வேண்டும் வெறும் நடனம் சண்டை கவர்ச்சி என்று நேற்று காலையில் எடுக்கப்பட்ட படம் இன்று மாலையே பெட்டியில் குறட்டை விடுவது கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படாததே என்பதையும் உணர வேண்டும்

மக்கள் கவர்ச்சியை விரும்புகிறார்கள் அதனால் தான் இத்தகைய படங்களை எடுக்க வேண்டிய நிலை இருக்கிறது என்று சில திரைத்துறையினர் பேசுகிறார்கள் இது தவறு என்று அவர்களுக்கே தெரியும் எந்த சினிமா ரசிகனும் அரைகுறை ஆடையோடு படம் எடுங்கள் என்று எந்த தயாரிப்பாளருக்கும் இயக்குனருக்கும் கடிதம் போடுவது கிடையாது இவர்களாகவே அப்படி முடிவு செய்து திட்டமிட்டு மக்களின் ரசனையை பாழ் படுத்துகிறார்கள்

 அந்த கால சினிமாவில் கவர்ச்சியும் ஆபாசமும் இல்லவே இல்லை என்று நான் சொல்ல வரவில்லை இருந்தது ஆனால் அது கதை என்ற உடம்பில் முழைத்த உறுப்பாக இருந்ததே தவிர வீங்கிய கட்டியாக இருக்க வில்லை  பழங்கால சிற்ப கலையிலும் ஓவியங்களிலும் பாலுணர்வை தூண்டக் கூடிய வடிவமைப்புகள் இருந்தன ஆனால் அவைகள் ரசிக்க கூடியதாக ரசிப்பவனின் கலை உணர்ச்சியை மேம்படுத்த கூடியதாக இருந்ததே தவிர கண்களை கூசி அருவறுத்து மூடக்கூடிய்தாக இருந்ததில்லை

ஜனரஞ்சக கலை என்று வரும்போது அதில் நாலாவித விஷயங்கள் கலந்திருப்பது இயல்பு அதை குறை சொல்வது கலைஞனின் கற்பனை திறனை தடை போடுவது போலாகும் கற்பனை சுகந்திரம் என்பதற்க்காக எவருக்கும் தங்களது வக்ர புத்தியை விளம்பரப் படுத்திக் கொள்ள உரிமை கிடையாது ஒண்டவந்த பிடாரி ஊர் பிடாரியையும் கெடுத்தது போல இவர்களது வக்ர எண்ணம் மக்களையும் கெடுத்து விடும் இது முற்றிலும் தர்ம விரோதமாகும்

எனவே திரைப்பட துறையினர் நல்ல கதை உள்ள படைப்புகளை மக்களுக்கு தரவேண்டும் தற்க்கால இந்திய மக்கள் கொடுமையை கண்டு மெளனமாக போகும் நிலையில் இல்லை இன்று ஊழலின் நெஞ்சுக்கு நேராக நீட்டப்பட்டிருக்கும் ஈட்டி நாளை காலையில் ஆபாச வியாபாரிகளான திரைதுரையினரை நோக்கி நீட்டப்படலாம் வெட்டும் வாள் வருவதற்கு முன்பே வெட்டப்படும் சூழலை தடுத்து கொள்பவனே புத்திசாலி





+ comments + 12 comments

Anonymous
09:30

கொச்சையாகச் சொல்லப்போனால் இன்றைய படங்கள் எதை வேண்டுமானாலும் பாருங்கள் அனைத்துமே ஏதோ ஒரு வகையில் 'காதல்’ 'Love' என்ற பெயரில் "பொம்பளை பொறுக்கி" படமாகத்தான் இருக்கும். கதாநாயகனுக்கு பொம்பளை பொறுக்குவதுதான் முக்கியத்தொழில். அதில் தடைவந்தால் நோஞ்சான் கதாநாயகன் நூறுபேரை அடித்து நொறுக்குவான். அவனுக்கும் அவன் நண்பர்களுக்கும் தண்ணி அடித்தல், புலால் தின்னல், புகைபிடித்தல்,ஸைட் அடித்தல், பொம்பளை பொறுக்கல், ஆனந்தக் கூத்தாடல், தெருக்கூத்தாடால்,நூறு ஆடை மாற்றினாலும் தொப்புளும், பாதி மார்பும் எப்போதும் தரிசனம் தரும் கதாநாயகியோடு, நூறு தோழி்யோடு டூயட்பாடல( ஒரு பாடல் முடிவதற்குள் ஒரு பத்து வெளிநாடுகளுக்காவது போய் உல்லாசமாக இருந்திருக்க வேண்டும்)
ஆக,காமவெறியைய்க் கிளறிவிடுதல், குடிவெறியைத் தூண்டிவிடுதல், ஹிம்சையைத் தூண்டிவிடுதல், புகைபிடித்தலைத் தூண்டிவிடுதல் - இத்தகைய மகா புண்ணியமான அம்சங்களோடு படம் எடுப்பதால்தானே இரசிகர்கள், மேற்கண்டவாறு மேலான சேவை செய்யும் நடிகர்களுக்கு பாலபிஷேகம், நடிகைகளுக்குக் கோயில் கட்டுதல், நடிகர்கள் நல்லா இருக்க அலகு குத்தல், காவடி எடுத்தல், கோயிகளில் சிறப்பு பூஜை செய்தல் முதலியவைகளோடு கூடிய பக்திமார்க்கம் தளிர்விட்டு வளர்கிறது. இதை விட என்ன வேண்டும் நாட்டுக்கு சுவாமிஅவர்களே? கதை கதை என்று போனால் இப்படி பக்தி மார்க்கம் செழிக்குமா.Discovery net work channel களைத்தவிர, எந்த டீவி channelகளை வேண்டுமானாலும் பாருங்கள்,எந்த நல்ல நாளிலேயும் பாருங்கள் காலை 6 முதல் மறுநாள் 6 வரை மேற்கண்ட பக்திமார்க்க அம்சங்களாகத்தான் இருக்கும்;இதற்கு ’மக்கள் டிவி’ விதிவிலக்கு.இப்படி டிவிக்களும் மேற்படி பக்திமார்க்கத்தைப் பரப்புவதில் பெரும்பங்கு வகிக்கின்றன. இதனால் இப்பக்தி பாதிப்பு பட்டி தொட்டிகள், பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் அலுவலகங்கள் என்று எங்கும் நீக்கமறப்பரவி மக்களைப் பரவசப்படுத்தி வருகின்றன. இதை எல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் கதை கதை என்று கதைக்கிறீர்களே சுவாமிஜி!

நல்ல அலசல் ! அருமையான பதிவு!

சினிமா ஒரு நல்ல மீடியாதான். 300 அத்தியாயத்தில் படிக்கவேண்டிய ஒரு கதையை மூன்று மணிநேர சினிமாவாகப் பார்த்து விடலாம். சினிமாவால் நல்லதும் உண்டு கெட்டதும் உண்டு.ஹிந்து மத எதிர்ப்பாளர்கள் (தங்களை நாத்திகர்கள் என்று சொல்லிக்கொள்ளும் இவர்கள்,உண்மையில் ஹிந்துமதத்தை மட்டும் எதிர்ப்பார்கள்),தமிழ் சினிமாவில் புகுந்து,கடந்த 70 வருடங்களாக ஹிந்து மதத்திற்கு எதிராக விசவிதையைத் தூவி தமிழகத்தையே கெடுத்து குட்டிச்சுவர்ராக்கி விட்டார்கள்.பொய் சொல்லி ஆட்சியப்பிடித்த இவர்களிடம் தமிழகம் மாட்டிகொண்டு மீளவே முடியவில்லை.புதிதாக கட்சியை ஆரம்பிப்பவர்களும்,தங்கள் கட்சிப் பெயரில் "திராவிட"என்று போடத்தவறுவதில்லை.அண்ணா,ஈவேரா பெயர்களை உச்சரிப்பதை விடுவதில்லை.ஆக தேச பக்தி ஊட்ட எந்த மாநில கட்சிகளும் தயாராக இல்லை.அதுமட்டுமல்லாமல் இன்றைய தயாரிப்பாளர்களிடம் ,உங்கள் படத்தின் மூலம் இளைஞர்களுக்கு ஏதாவது நல்லது சொலக்கூடாதா என்றுகேட்டால் நாங்களென்ன மாரல் சினிமாவா எடுக்கிறோம் என்று கேட்கிறார்கள்.மக்கள் ரசனைக்கேற்றவாருதான் நாங்கள் படமெடுக்கிறோம் என்கிறார்கள்.மக்கள் என்ன இந்த கன்றாவியையா கேட்கிறார்கள்?ரொம்ப மோசம்ஜி.

Anonymous
11:07

"தமிழ் திரைப்பட உலகில் முதல் தர வரிசையில் இருக்கும் நடிகர் ஒருவர் சில காலத்திற்கு முன்பு எடுத்த திரைப்படம் ஒன்றில் தன்னை மிகைப்படுத்தி காட்டிக் கொள்ளவும் தாம்தான் எல்லோரையும் விட மேலானவன் வித்தியாசமானவன் என்று விளம்பரம் படுத்திக் கொள்ளவும் தேவையற்ற பல பாத்திரங்களை உருவாக்கி நடித்திருப்பார் அந்த படம் எடுப்பதற்கு ஆன செலவை விட விளம்பரப்படுத்த ஆன செலவு நிச்சயம் அதிகமாக இருக்கும் கடைசியில் அந்த படம் மக்களுக்கு சொன்ன செய்தி என்ன வென்றே இதுவரை யாருக்கும் புரிய வில்லை கடைசியில் பல கோடி செலவில் உருவான படம் வந்த வேகத்தில் சில லாபத்தை கொடுத்து விட்டு பெட்டியில் தூங்குகிறது" உண்மையில் தசாவதாரம் என்னும் படம் என்ன சொல்லவருகிறது என்பதே புரியவில்லை. கடவுள் இருக்கிறார் அல்லது இல்லை இதைச் சரியாகச் சொல்ல முடியவில்லை ஒரு பெரும் நடிகரால் ஏனெனில் தயாரிப்பாளர் கடவுளை நம்பித்தானே பணத்தைப் போடுகிறார்.

அன்புள்ள ஆசிரியருக்கு,

தாங்கள் வெறுமனே சினிமாவை பற்றி மட்டும் எழுதியிருந்தால் பரவாயில்லை.நானும் தங்கள் கருத்துகளோடு ஒத்த கருத்து உடையவன்தான். ஆனால் தசவாதாரம் படம் பற்றி தாங்கள் கூறியவை சற்றும் உண்மையில்லாதவை. படத்தின் ஆரம்பத்தில் இருந்தே சமூகத்தின் மீதான அவரது எண்ணங்கள் பிரதிபலிக்க ஆரம்பிக்கின்றன.
உதாரணமாக சைவர்கள் வைணவர்கள் இடையேயான மோதல்.அதன் பின் இன்று உலகமே அஞ்சும் பயோ உயிரி ஆயுத பெருக்கம்.இன்று தமிழ் நாட்டையே ஆட்டிபடைக்கும் மணல் மாபியா.இறுதி காட்சியில் தீண்டாமைக்கு எதிரான ஒரு வலுவான செய்தி.
இன்னும் உண்டு. ஆனால் நான் கொஞ்சம் சோம்பேறி.தமிழில் தட்டச்சு செய்வது அதுவும் இத்தனை நீளமாக.
மேற்கண்டவை எல்லாம் தங்கள் சிந்தனைக்கு எட்டாதது தாங்கள் குற்றம் சொல்வதற்கே இந்த படத்தை பார்த்தீர்களோ என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது.
மற்றபடி மேற்படி கட்டுரையில் தாங்கள் கூறியவை பெரும்பாலும் உண்மையே.
ஏதும் தவறாக இருந்தால் மன்னிக்கவும்.

மற்றவர்களுக்கு அறிவுரை சொல்வதென்றால் அதற்கு சில தகுதிகள் தேவை.தராதரமின்றி தினம் ஒரு பெண்களைத தேடும் கமல ஹாசனுக்கு அந்த தகுதி கிஞ்சித்தும் இல்லை.அவன் கருணாநிதியைப் போன்று போலிப் பகுத்தறிவுவாதி

Anonymous
08:49

பொம்பளை பொறுக்கிறது, பொம்பளை பொறுக்கத்தடையா வருபவனைத் தட்டி எறிவது, தண்ணி அடிப்பது, புலால் தின்பது, மலஜலம் கழிப்பதைக்காட்டிக் கூட தமாஸ் செய்வது,தொப்புள் டான்ஸ் ஆடுவது, கோடிக்கணக்கில் செலவு செய்து சல்லாபப் பெண்களோடு உலகமெல்லாம் சுத்தி, குத்து டான்ஸ் ஆடுவது,ஆபாச டூயட் பாடுவது, புகை பிடிப்பது
சுறுக்கமாக SEX AND VIOLENCE WITH THE HELP OF DRINKING, SMOKING AND MEAT EATING.---- இதுதான் இன்றைய இந்திய சினிமா இளைஞர்களுக்குப் புகட்டி வருவது. இந்தப் பொம்பளை பொறுக்கி தண்ணி அடித்துப் புலால் தின்று புகை பிடிக்கும் பீத்தைக் கதாநாயகன்களுக்கு இலட்சியம் வேறு ஒரு கேடு. கமலஹாஸன், சத்தியராஜ் போன்ற போலிகள் நாறும் வாயில் நாத்திக தத்துவங்கள் பேசி நல்ல சிரிப்புகளை வரவழைக்கும் தெருக்கூத்துக் கோமாளிகள். தமிழ்நாட்டு இரசிகர்கள் குறிப்பாக இளைஞர்கள் முழுமூட முட்டாள்கள்; 150 கோடி அன்னிய நாட்டில் செலவழித்து, அன்னியநாட்டிலேயே பாடல்வெளியீடு என்றபெயரில் கொள்ளை அடித்த பணத்தில் கூத்தடித்து மீண்டும் தமிழ்நாட்டில் அதை வெளியிட்டடுக் கொள்ளை அடித்துக் கூத்தடிக்கும் கூத்தாடிகளுக்கு பாலபிஷேகம் நெய்யபிஷேகம், அலகு குத்தல் முதலிய முட்டாள் கூத்தடிக்கும் கூத்து தமிழ்நாடு தவிர வேறு எங்கேனும் உண்டா?
ஒரு கொப்பறைப் பாலில் ஒரு துளி விஷம் கலந்தால் அக்கொப்பறைப்பாலெல்லாம் விஷம் என்றுதான் சொல்லப்படும். இந்திய சினிமாவில் முக்கால் கொப்பறை விஷம் போல SEX MEAT EATING DRINKING, SMOKING AND VIOLENCE, கால் கொப்பறைப் பால் போல நல்லவிஷயங்கள; அதனால் இந்திய சினிமா, இளைஞர்கள் தின்னும் கொடிய விஷம்; இனியொரு விஷம் கிரிகட். இந்த இரண்டடு விஷங்களையும் இந்திய இளஞர்கள் தின்பதால்தான் நாடு சுடுகாடுபோல் மாறிக்கொண்டிருக்கிறது என்று பெரியவர்கள் சொல்கிறார்கள். ஆனால் தியாகமே வடிவான பிரம்மச்சாரி அன்னாஹஜாரே எனும் இரண்டாவது காந்தியின்பால் இந்திய இளஞர்களின் ஆர்வம் திரும்பி இருப்பது என்னமோ ஆறுதல் அளிக்கிறது

Anonymous
08:58

வாசகர்களே! நீங்கள் உங்கள் மனைவியுடன் தெருவில் டூயட் பாடுவீர்களா? அல்லது உங்கள் அப்பா அம்மா அல்லது நண்பர் அல்லது வேறு யாரேனும் சரி தெருவில் டூயட் பாடித் தெருவில் குத்து டான்ஸ் ஆடுவதை உங்கள் உள்ளம் ஏற்கிறதா? கேவலமாக நினைக்கிறதல்லவா? இந்தக் கேவலங்கள் நிறைந்ததுதான் இந்திய சினிமா!இதோடு தண்ணி அடிப்பது, புகைபிடிப்பது, புலால் தின்பது,காட்டுமுராண்டிச் சண்டைபோடுவது, போலித்தத்துவங்கள் பேசுவது வேறு! எல்லாம் கலிகாலக் கொடுமை!

Please read the following books . 1. Sane sex Order by Pitrim A.Sorokin. published by Bharatiya Vidya Bhavan 2. Self-indulgence or self-control by M.K.Gandhiji - the preface .
Cinnema is an ugly social evil, diverting young and impressionable mind to Sex only. Heros wore full dresses like full pants, court full hand shirts etc exposing their face and hand only. Heroines expose 90% of their body -without dress. What else is obscene/ social evil than this ? In Sri Ramakrishna Vijayam - monthly Journal published by Sri Ramakrishna Math, Mylapore,Chennai - an article was published condemning the nude and semi-nude idols in our temple as obscene. When it comes to cinnema Films are " IRON " are far better,there will be no nude, semi-nude dresses.

Anonymous
11:45

anakku oru visayam acheriyama erukku sar udamba veththu kasu pakkura nadekaiya poei kadavul vesam podavakkeriigkalay uigkalukku vekkameillaya

Anonymous
11:48

anakku oru visayam acheriyama erukku sar udamba veththu kasu pakkura nadekaiya poei kadavul vesam podavakkeriigkalay uigkalukku vekkameillaya

Anonymous
11:49

anakku oru visayam acheriyama erukku udamba veththu kasu pakkura nadekaiya poei kadavul vesam podavakkeriigkalay uigkalukku vekkameillaya


Next Post Next Post Home
 
Back to Top