Store
  Store
  Store
  Store
  Store
  Store

குழந்தை பாக்கியம் பெற எளிய பரிகாரம்

  • யா எனக்கு திருமணமாகி ஒன்பது வருடங்கள் முடிந்து விட்டது இன்னும் குழந்தை பாக்கியம் இல்லை எனக்கும் என் மனைவிக்கும் ஜாதகம் இல்லை இருவரின் பிறந்த தேதி கூட சரிவர தெரியாது எங்களால் முடிந்த வரை மருத்துவம் பார்த்து விட்டோம் எல்லா டாக்டர்களும் இருவரின் உடலிலும் எந்த பாதிப்பும் இல்லை என்கிறார்கள் ஆனால் குழந்தை தான் பிறக்க மாட்டேன் என்கிறது இதனால் என் மனைவி அனுபவிக்கும் கஷ்டங்களும் அவமானங்களும் சொல்லி மாளாது மன அழுத்த நோயே அவளுக்கு வந்துவிடும் போலிருக்கிறது நான் தான் ஆறுதல் சொல்லி தேற்றி வருகிறேன் சில நாட்களாக உங்கள் இணையதளத்தை படித்து வருகிறேன் இதில் நீங்கள் எழுதும் விஷங்கள் அனைத்துமே பயனுடையதாகவும் வியப்பானதாகவும் இருக்கிறது உங்களால் எங்கள் கஷ்டம் தீர வழிக்காட்ட முடியும் என்ற நம்பிக்கையுடன் இந்த மினஞ்சலை அனுப்புகிறேன் நாங்கள் குழந்தை பாக்கியம் பெற என்ன செய்ய வேண்டும் எதுவானாலும் செய்ய தயாராக இருக்கிறோம் தயவு செய்து வழிக்காட்டுங்கள்
பாலசுப்ரமணியம் தாம்பரம்


மழை பெய்த வாசலில் மண் அளைய பிள்ளை இல்லை
வழித்தரைக்கும் தேங்காயை கையேந்த பிள்ளை இல்லை


   ன்ற பாடல் வரியை கேட்கும் போது உண்மையாகவே பிள்ளை இல்லாத குறை எவ்வளவு பெரியது என்று தெரியும்

இதனால் தான் நமது முன்னோர்கள் தாம்பத்திய வாழ்வின் மணிமகுடம் மக்கட்பேறு என்று சொன்னார்கள்

கிரீடம் இல்லாத ராஜா எப்படி மதிப்பில்லாதவனோ அதே போல குழந்தை இல்லாதவனும் மதிப்பில்லாதவனாக நமது சமூகத்தில் கருதப்படுகிறான்

குழந்தை இல்லாத பெண்கள் அனுபவிக்கும் கஷ்டங்களும் அவமரியாதைகளும் வார்த்தைகளால் சொல்ல முடியாது

நல்ல விஷேசமாகட்டும் கெட்ட காரியங்களாகட்டும் எதிலும் இவர்களால் சகஜமாக கலந்துக் கொள்ளும் சூழ்நிலை இதுவரையிலும் கிடையாது என்றே சொல்லலாம்

பாவம் செய்தவன் தவறு செய்தவன் ஒதுக்கப்படுவது போல உறவுகளாலும் நட்புகளாலும் இத்தகைய தம்பதிகள் ஒதுக்கப்படுவது மிகவும் கண்டிக்க தக்கது ஆகும்

குழந்தைகள் இல்லையே என்று வருத்தப்படும் பெரியவர்கள் ஒருபுறம் என்றால் அம்மா அப்பா இல்லாமல் அனாதைகளாக கிடைக்கிறோமே என்று ஏங்கி தவிக்கும் குழந்தைகள் மறுபுறம் இருக்கிறார்கள்

என்னை கேட்டால் குழந்தை பாக்கியம் இல்லை என்று வருத்தப்படுவது முட்டாள் தனமாகும்

நம் வயிற்றில் பிறந்தால் தான் பிள்ளை என்று கருதுவது அறிவீனம் பத்து மாதம் சுமந்து பெற்ற பிள்ளைகளே பெற்றோர்களை நடுத்தெருவில் விட்டு விட்டு செல்லமும் கதையை நாளும் கேட்கிறோம்

அதனால் சுமந்து பெற முடியா விட்டால் ஆதரவற்ற குழந்தையை தத்தெடுப்பது சால சிறந்ததாகும்

இருந்தாலும் உங்களுக்கு நான் சொல்லும் அறிவுரை அல்லது பரிகாரம் ஒன்றுண்டு

திருச்செந்தூர் முருகன் ஆலயத்தில் தம்பதிகள் இருவரும் தங்கியிருந்து கந்தசஷ்டி விரதம் இருங்கள்

அல்லது குழந்தை பிறந்தவுடன் குருவாயூர் கிருஷ்ணன் ஆலயத்திற்கு வந்து குழந்தையின் எடைக்கி எடை நேந்திரம் பழம் வைத்து துலாபாரம் கொடுப்பதாக வேண்டிக் கொள்ளுங்கள்

அதிகபச்சமாக இரண்டு வருடங்களில் குழந்தை பாக்கியம் நிச்சயம் கிடைக்கும்

அப்படி கிடைக்காதப் போதும் மன துணிச்சலுடன் ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வாருங்கள்

அந்த குழந்தை உங்கள் வீட்டில் வளரும் ராசியில் உங்களுக்கு குழந்தை பிறக்க வாய்ப்பு வரும்

இரண்டு குழந்தைகளையும் ஒன்றாக பாவித்து அன்பு காட்டுங்கள் எல்லாம் நாராயணன் அருளால் நல்லதாக நடக்கும்



Contact Form

Name

Email *

Message *