Store
  Store
  Store
  Store
  Store
  Store

பாராளுமன்றத் தவளைகள்!


   வளை கத்தினால் மழை வருமென்று நிறைய பேர் சொல்கிறார்கள் மழை மேகம் கூடி வருவதை கண்டு மயில் தோகை விரித்து ஆடுகிறது என்றால் அதில் அர்த்தம் இருக்கிறது இதில் என்ன அர்த்தம் இருக்கிறதோ தெரிய வில்லை

இரவு நேரங்களில் சுற்றுபுறம் அமைதியாக இருக்கும் போது தவளைகள் கத்துவதை கேட்டால் ஒரு தாளவாத்திய கச்சேரியே நம்மை சுற்றி நடப்பது போல் இருக்கும். 

நவீன பாஷையில் சொல்லுவது என்றால் இதை தவளைகளின் பாராளுமன்ற கூட்டம் எனலாம்.

பாராளுமன்றத்தோடு தவளை கச்சேரியை ஒப்பிடுவதற்கு ஒரு காரணம் இருக்கிறது.  பொதுவாக தவளைகள் சோறு வேண்டும் என்றோ, ஊருக்கு போய் வரட்டுமா என்றோ கத்துவது இல்லை.  தனது காதல் துணையை வேண்டி தான் கத்துகிறது. 


அதாவது காம பசியில் கத்துகிறது நமது நாடாளுமன்ற உறுப்பினர்களும் நிதி ஒதுக்கீடு வேண்டி நிதி பசியில்தான் கத்துகிறார்கள்.

ஆகவே இரண்டும் ஒன்றுதான்.  இன்னொரு முக்கியமான விஷயம்.  எந்த தவளையும் கத்துவது கிடையாது.  பின்னர் எப்படி அந்த சத்தம் வருகிறது என நீங்கள் கேட்கலாம்.

தவளை ஒலி எழுப்பும் போது அதன் வாயிக்கு கீழ் பகுதியில் பலூன் போன்ற ஒரு தசை விரிந்து சுருங்குவதை பார்த்திருப்பீர்கள். 

தவளை நுரையீரலில் இருந்து காற்றை வெளியிடும்.  அதன் தொண்டையிலுள்ள சில நாளங்கள் அதிர்வடைகின்றன.  அதனால் சத்தம் வருகிறது.  

உண்மையில் தவளைகள் குறிப்பிட்ட நாளில் சத்தமாக மூச்சு விடுகிறது என்றே இதை சொல்ல வேண்டும்.

பாம்பு வாயில் அகப்பட்ட போதும் மூச்சு விட திணறுவதனால் தான் தவளையிடம் இருந்து சத்தம் வருகிறது.   


இந்த சத்தத்திற்கும் இணை தேடும் சத்தத்திற்கும் பல வேறுபாடு உண்டு. 

அதுதான் பய மூச்சிக்கும், காதல் மூச்சிக்கும் உள்ள வித்தியாசம். 

எல்லாம் சரி தவளை கத்தினால் மழை வரும் என்று சொல்பவர்கள் ஒரு விஷயத்தை யோசிக்க மறந்து விட்டார்கள் என்று தோன்றுகிறது

மழை வருவதற்கு முன்பு எந்த தவளை கத்தி கேட்டுயிருக்கிறீர்கள்?

குண்டுமணி அளவிலுள்ள தவளை கூட மழை வருவதற்கு முன்பு கத்தாது.  வந்த பிறகு தான் கத்தும். 

எனவே மழைக்கும் தவளைக்கும் எந்த தொடர்பும் இல்லை.

நம் நாட்டில் நல்ல விஷயங்களை பரப்புவது தான் மிகவும் கஷ்டம்.  இந்த மாதிரியான விஷயங்களை சுலபமாக பரப்பி விடலாம்.

அண்ணன்மார் எல்லாம் தங்கைகளுக்கு பச்சை புடவை எடுத்து கொடுக்காவிட்டால் செத்துவிடுவார்கள் என்று கட்டிய கதையை நம்பும் மக்கள் தவளை கத்தினால் மழை வரும் என்று நம்புவதில் வியப்பில்லை.




Contact Form

Name

Email *

Message *