( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

நோய்களை விரட்டும் விளக்கு பூஜை !


   ருட்பிரகாச வள்ளலார் கடவுளை ஜோதி வடிவமாக கண்டார் நாயன்மார்களும் ஆழ்வார்களும் கூட நோக்கும் இடமெல்லாம் நீக்கமற நிறைந்திருக்கும் நிர்மல பொருளான இறைவனை ஜோதியன் என்றே அழைக்கிறார்கள் சனாதன தர்மமான நமது இந்து மதத்தில் ஜோதி வழிப்பாடு என்ற திருவிளக்கு வழிப்பாடு இதனால் சிறப்பு மிக்க இடத்தினை பெறுகிறது அக்னி வளர்த்து யாகம் செய்வது கூட ஒரு வித ஜோதி வழிப்பாடுதான் தீப வழிப்பாட்டை தத்துவ நோக்கில் அறியாமை என்ற இருளை நீக்க ஞானம் என்ற தீபம் ஏற்றப்படுகிறது என்று பலவாறு சிறப்பித்து ஞானிகளும் அருளாளர்களும் சொல்கிறார்கள்

இந்துக்களின் இல்லங்களில் தினசரி மாலை நேரத்தில் தீபம் ஏற்றப் படுவது முக்கிய நிகழ்வாகும் பிறப்பு சடங்கில் துவங்கி இறப்பு சடங்கு வரை ஒவ்வொரு இந்துவின் வாழ்விலும் தீபம் என்பது கூடவே வருவதாகும் வீட்டுக்கு வருகின்ற குலமகளான மருமகளை விளக்கேற்ற வந்தவள் என்று அழைப்பதும் கிரக லக்ஷ்மி என்று போற்றுவதும் இதனால்தான் பெண் என்பவள் ஒரு குடும்பத்தின் அடுத்த தலைமுறையை உருவாக்குபவளாக இருக்கிறாள் இதானாலே அவள் இல்ல விளக்கு அதாவது குடும்பத்தில் உள்ள தேக்கம் என்ற இருளை போக்கி வளர்ச்சி என்ற வெளிச்சத்தை கொண்டு வருபவள் என்று அழைக்கப்படுகிறாள் 


 நமது இந்து மதத்தில் கடைபிடிக்கப் படும் சடங்குகளுக்கும் அதில் பயன்படுத்தப்படும் பொருட்களுக்கும் எதாவது ஒரு தத்துவம் பின்னணியாக இருக்கும் இந்த விளக்கேற்றும் சடங்குக்கு பின்னணி எது என்று மேலே பார்த்தோம் இந்த சடங்கில் பயன் படுத்தப் படும் குத்து விளக்கு என்ற பொருளுக்கும் ஆழ்ந்த கருத்தமைந்த பின்னணி உள்ளது குத்து விளக்கின் அடிப்பாகம் மலர்ந்த தாமரை பூவை போல அகன்று வட்டமாக இருப்பதனால் இது திருப்பாற் கடலில் பாம்பணை மேல் பள்ளிகொண்டுள்ள திருமாலின் திருநாபியில் முளைத்த தாமரை பூவில் அமர்ந்திருக்கும் படைப்பு கடவுளான பிரம்ம தேவனை குறிக்கிறது

அடிப்பாகத்தில் இருந்து மேல் நோக்கி வளருகின்ற தண்டு பாகம் ஓங்கி வளர்ந்து நிற்பதனால் ஈரடியால் பூமியையும் ஆகசத்தையும் அளந்த திருவிக்கிரமனான மகா விஷ்ணுவை குறிக்கிறது அதற்கு மேல் இருக்கின்ற அகல் விளக்கு பாகம் என்ற விளக்கின் மேல் பகுதி குழி விழுந்து எண்ணெயை உள் வாங்கி கொள்வதனால் கங்கையை தலைபாகத்தில் அடக்கிய மகேஸ்வரனை குறிப்பதாகும் மேல் பகுதியில் திரி ஏற்றுவதற்காக உள்ள ஐந்து முகங்களும் சிவ பெருமானையே அடையாளப் படுத்துவதாகும் 


குத்து விளக்கின் மேல் பகுதியில் உள்ள காம்பு பகுதி கும்ப கலசம் போல இருக்கும் இது உருவமாகவும் அருவமாகவும் உள்ள சதாசிவ தத்துவத்தை குறிப்பதாகும் இந்த விளக்கில் இடுகின்ற எண்ணெய் அல்லது நெய் உலக முழுவதும் பரவியுள்ள நாத பிரம்மத்தை குறியீடாக காட்ட வல்லதாகும் வெள்ளை நிற பஞ்சு திரி அன்னை சரஸ்வதி தேவியையும் அதில் பிரகாசிக்கும் ஒளி ஞானத்தையும் சுடர் மகா லட்சுமியையும் அதன் சூடு ருத்திரனின் தேவியான பராசக்தியையும் குறிப்பதாகும்

இது தவிர விளக்கில் உள்ள கலை நயம் மிக்க சித்திர வேலைப்பாடுகள் கணபதி முருகன் ராமன் கிருஷ்ணன் போன்றோர்களை குறிப்பதாகும் சுருக்கமாக சொல்வது என்றால் காமதேனு என்ற பசுவின் உடலில் சகல தேவதைகளும் வசிப்பது போல திருவிளக்கான குத்து விளக்கிலும் சர்வ தேவர்களும் தேவதைகளும் காட்சி தந்து தத்துவ வடிவமாக குடி கொண்டிருக்கிறார்கள் என்றே சொல்லலாம் 


இந்து மதத்தோடு மிக நெருங்கிய தொடர்பு கொண்ட ஜோதிட சாஸ்திரத்தில் விளக்கேற்றி வழிப்படுவதால் பல தனி மனித பிரச்சனைகள் நீங்குவதாக சொல்லப் பட்டிருக்கிறது தீபம் ஏற்றுவதிலுள்ள மகத்துவத்தை ஆரம்ப காலத்தில் நான் உணராததால் எனக்கு அதில் அவ்வளவான நம்பிக்கை அப்போது இல்லை இருந்தாலும் எதையும் பரிசோதனை செய்து பார்க்காமல் தவறு என்று ஒதுக்கி விடுவதோ சரி என்று ஏற்று கொள்வதோ அறிவுக்கு பொருந்தி வரக்கூடிய சங்கதியாகாது

எனவே தீப பரிகாரத்தை பரிட்ச்சித்து பார்க்க விரும்பினேன் எனக்கு மிகவும் நெருக்கமான நண்பர் ஒருவர் அடிக்கடி நோய்களால் துன்பப்பட்டு வந்தார் அவரை ஒரு மண்டல காலத்திற்கு வைத்திய நாதனான திரு முருகன் சன்னதியில் வேப்ப எண்ணெய் விட்டு விளக்கேற்ற சொன்னேன் அவரும் நான் சொன்னப்படி செய்தார் முடிவு எனக்கு பெரிய ஆச்சரியத்தை கொடுத்தது அடிக்கடி நோய்வாய் படும் அவர் சிறிது சிறிதாக அந்த தொல்லையிலிருந்து விடுபடலானார் இதன் மூலம் தீபம் ஏற்றுவதில் ஜோதிட சாஸ்திரம் சொல்வது மிக சரி என்று எனக்கு பட்டது  நமது ஜோதிட சாஸ்திரம் இல்லங்களில் தீபம் ஏற்றி வழிப்படுவதற்கு காலை நான்கு மணி முதல் ஆறு மணிவரை சிறந்த நேரம் என்கிறது இந்த நேரத்தில் தீபம் ஏற்றினால் குடும்பத்தில் சர்வ மங்களமும் ஏற்படும் என்று சொல்லப்பட்டிருக்கிறது அதே போல மாலை ஆறு மணி முதல் ஏழு மணிக்குள் தீபம் ஏற்றினால் லஷ்மி கடாட்சம் உண்டாகும் என்றும் சொல்லப்பட்டுள்ளது இதை போலவே கிழக்கு திசையில் தீபம் ஏற்றினால் துன்பம் அகலும் வீட்டில் உள்ள பீடைகள் ஒழியும் என்றும் மேற்கு திசையில் தீபம் ஏற்றினால் கடன் தொல்லை மற்றும் சனி தோஷம் விலகும் என்றும் சாஸ்திரம் சொல்கிறது

செல்வம் பெருகுவதற்கும் குடும்பத்தில் உள்ள கன்னிப் பெண்கள் இளைஞர்கள் ஆகியோரின் திருமண தடைகள் விலகி சுபகாரியங்கள் நடப்பதற்கும் குழந்தைகள் நல்ல விதமாக கல்வியில் தேறி வெற்றி பெறுவதற்கும் வடக்கு முகமாக தீபம் ஏற்ற வேண்டும் என்றும் தெற்கு முகமாக ஏற்றினால் பாவம் ஏற்படும் மரணபயம் உண்டாகும் என்றும் சாஸ்திரம் சொல்கிறது


 திசையை மட்டும் சாஸ்திரம் தீர்மானிக்க வில்லை திபம் ஏற்றுவதற்கு பயன் படுத்தும் திரியில் கூட கிடைக்கும் பலாபலன்களை சாஸ்திரம் விவரிக்கிறது வெள்ளை நிற துணியை திரியாக போட்டால் கல்வி வளரும் என்றும் மஞ்சள் நிற துணியை திரியாக பயன் படுத்தினால் மங்களம் நிகழும் என்றும் வீட்டிற்குள் தீய சக்திகளின் நடமாட்டம் பேய் பிசாசுகளின் தொல்லை ஏவல் பில்லி சூனியத்தால் பாதிப்பு போன்றவைகள் அண்டாமல் இருக்க எருக்கம் பஞ்சு திரி உதவும் என்றும் பஞ்சு திரி சகல செளபாக்கியம் தரும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது மேலும் செம்மை நிற திரியால் செல்வம் பெருகும் வறுமை ஒழியும் என்றும் அறிவுறுத்தப் படுகிறது

இதே போல மகா லஷ்மியின் அனுக்கிரகம் பெறுவதற்கு நெய் தீபம் ஏற்றினால் சுகத்தோடு அருளும் கிடைக்கும் என்றும் நல்லெண்ணெய் கொண்டு தீபம் ஏற்றினால் பீடைகள் அகன்று ஸ்ரீ மத் நாராயணனின் அருள் கிடைக்கும் என்றும் இலுப்பை எண்ணெய் பயன் படுத்தினால் ருத்ராதி தேவதைகளின் அனுக்கிரகம் வாய்க்கும் என்றும் தேங்காய் எண்ணெய் தீபம் கணபதியின் அருளை பெற்று தரும் என்றும் வேப்ப எண்ணெய் தீபம் ஆரோக்கியம் தரும் என்றும் ஜோதிட சாஸ்திரத்தின் பரிகார நூல்கள் தெளிவாக சொல்கிறது

 தீபம் ஏற்ற பயன் படுத்தும் விளக்கின் வகையில் கூட பல பலன்கள் இருக்கின்றன மண்ணால் ஆன விளக்கில் தீபம் ஏற்றினால் பீடை விலகும் வெள்ளி விளக்கில் தீபம் ஏற்றினால் திருமகளின் அருள் கிடைக்கும் பஞ்சலோக விளக்கில் தீபம் ஏற்றினால் தேவதை வசியம் ஏற்படும் வெண்கல விளக்கில் தீபம் ஏற்றினால் ஆரோக்கியம் உண்டாகும் இரும்பு விளக்கில் தீபம் ஏற்றினால் சனிகிரக தோஷம் விலகும் என்றும்

 குத்து விளக்கில் உள்ள ஐந்து முகத்திலும் தீபம் ஏற்றினால் ஐஸ்வரியம் ஏற்படும் நான்கு முகத்தில் தீபம் ஏற்றினால் பசுக் கூட்டம் வளரும் மூன்று முகத்தில் தீபம் ஏற்றினால் புத்திர பாக்கியம் கிடைக்கும் இரண்டு முகத்தில் தீபம் ஏற்றினால் குடும்ப சச்சரவுகள் நீங்கி ஒற்றுமை ஏற்படும் ஒரு முகத்தில் தீபம் ஏற்றினால் சமமான பலன் கிடைக்குமென்றும் சொல்லப்பட்டுள்ளது

பொதுவாக குத்து விளக்கில் ஐந்து முகங்கள் இருப்பதை நாம் சாதரணமாக பார்த்திருப்போம் இந்த ஐந்து முகமும் மனிதனுக்கு வேண்டிய ஐந்து விதமான பண்புகளை குறிக்கிறது அன்பு அறிவு உறுதி நிதானம் பொறுமை ஆகிய ஐந்து பண்புகளை மனிதன் பெற்றால் அவன் வாழும் மண்ணுலகிலும் வாழப்போகும் வின்னுலகிலும் நற்கதியை பெறுவான் என்பதே இதன் பொருளாகும்

பொதுவாக தீபம் பூஜை அறையில் மட்டும் தான் ஏற்றப் படுகிறது ஆனால் வீட்டின் நடு முற்றம் சமயலறை துளசி மாடம் போன்ற இடத்திலும் தீபங்களை ஏற்றலாம் மாலை நேரம் நடு முற்றத்தில் மாக்கோலம் போட்டு மஞ்சள் திரி வைத்து நெய் தீபம் ஏற்றினால் அந்த குடும்பம் வறுமையின் ஆழத்தில் கிடந்தாலும் மிக கண்டிப்பாக செல்வ செழிப்பின் உச்சத்திற்கு வருமென்று சாஸ்திரங்கள் உறுதியாக சொல்லுகின்றன இதில் எதையாவது ஒன்றை பரிசோதனைக்காகவாவது நீங்கள் செய்து பாருங்கள் சர்வ நிச்சயமாக நல்ல பலன் கிடைப்பதை கண்கூடாக காண்பீர்கள்.


+ comments + 6 comments

இன்றைய பதிவு மிகவும் அருமை குருஜி,
சேமித்து வைக்க வேண்டிய பொக்கிஷம்!

விளக்கால் விளக்குவார் வல்லனாட்டார் ....வல்லனாட்டுசித்தரை குறிப்பிடுவார் .....விளக்குகே விளக்கும் ....நல்லது குருஜி

Anonymous
14:03

இன்றைய பதிவு மிகவும் அருமை.
எருக்கம் பஞ்சு திரி எல்லா இடத்திலும் கிடைக்குமா.
தகவல் கிடைத்தால் நன்றாக இருக்கும்.

அரசு
சென்னை.

நமஸ்காரம் குருஜி .தங்களது பரிகாரம் எளிய முறையில் அனைவரும் பின்பற்றும் வகையில் அமைந்துள்ளது .தங்களுக்கு நன்றி

நமஸ்காரம் குருஜி .தங்களது பரிகாரம் எளிய முறையில் அனைவரும் பின்பற்றும் வகையில் அமைந்துள்ளது .தங்களுக்கு நன்றி

Thank you for your valuable information in the topic Nooigalai verattum vilakku poojai. Please tell me what do you mean by erukkam panju thiri do you mean the dried stem of erukkam plant please tell me. And one more thing muttrum means entrance or the middle hall please tell me.


Next Post Next Post Home
 
Back to Top