( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

சினிமாவில் ஜெயிக்கும் ஜாதகம் எது...?


   ன்றாக மலர்ந்து மனம் வீசுகின்ற மலர்கள் தேனீக்களை கவர்ந்து இழுப்பது போல அனைத்து தரப்பு மக்களையும் தன்பால் ஈர்க்க வல்லது சினிமா திரைப்படத்தின் மீது கவர்ச்சிக் கொள்வது தமிழர்களுக்கோ இந்தியர்களுக்கோ மட்டுமே உள்ள விஷேச குணம் அல்ல உலக மக்கள் அனைவருக்குமே சினிமாவின் மீது ஒரு காதல் எப்போதும் மாறாத வண்ணம் உள்ளது மரணப் படுக்கையில் கிடக்கும் கிழவன் கூட அவனை சினிமா பிடிக்க வருகிறார்கள் என்றால் எழுந்து உட்கார்ந்து கொள்வான் ஓடி விளையாடும் குழந்தைகள் கூட சின்னத்திரையில் ரஜினிகாந்த் வந்தால் விளையாட்டை விட்டுவிட்டு படம் பார்க்க அமர்ந்து விடும் அந்த அளவு சினிமாவின் மீது ஒரு வெறியே எல்லா மக்களுக்கும் இருக்கிறது

சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இல்லாத மனிதர்களும் குறைவு சிலர் அதற்கான முயற்சிகளில் பகிரங்கமாக ஈடுப்படுகிறார்கள் பலர் ஆசையை அடக்கி கொண்டு நடமாடுகிறார்கள் அவ்வளவு தான் வித்தியாசம் சினிமாவில் நடிக்க வேண்டும் சினிமாவை எடுக்க வேண்டும் என்று விரும்புகிற அனைவராலும் அந்த இலக்கை அடைய முடிகிறதா என்றால் இல்லை என்ற பதிலை தவிர்கவே முடியாது


சென்னையில் கோடம்பாக்கம் வடப்பழனி போன்ற பகுதிகளில் சினிமா கனவோடு சுற்றி திரிகின்ற இளைஞர்கள் பலரை காணலாம் இவர்களின் பலருக்கு ஒரு வேளை உணவு கூட கிடைப்பது இல்லை ஊரில் அம்மா அப்பாவிடம் அண்டி வாழ்ந்தாலாவது ஒரு கவளம் சோறு கிடைக்கும் இங்கே வயிறும் காய்ந்து மனதும் காய்ந்து படுக்க இடம் கூட இல்லாமல் அலைகிறார்கள் ஆனால் அவர்களின் சினிமா ஆசை மட்டும் கொஞ்சம் கூட குறைவதே இல்லை எப்படியாவது யார் காலில் விழுந்தாவது சினிமா துறைக்குள் நுழைந்து விட வேண்டும் என பிடிவாதம் பிடிக்கிறார்கள்

சென்னை மத்திய இரயில் நிலையத்தில் ஒரு நாளைக்கு வந்திறங்கும் நபர்களில் நூற்றுக்கு இருபது பேர்கள் சினிமாவில் பங்கேற்க வேண்டும் என்றே கிராமங்களில் இருந்து வருகிறார்கள் ஹோட்டலில் சர்வர் வேலை கிளீனர் வேலை என்று செய்து கொண்டே ஸ்டியோக்களில் ஏறி இறங்கும் பலரும் சென்னை மாநகரில் உண்டு இப்படி சினிமாவில் ஜெயிக்க வேண்டும் என்று பிடிவாதம் பிடிப்பவர்களில் எத்தனை பேர்களால் வெற்றி வாகை சூட முடிகிறது? ஒரு லட்சம் நபர்களில் ஒருவர் என்றால் அதுவே அதிகமான கணக்கு தான் 


வேலை செய்தால் சினிமாவில் தான் வேலை செய்வேன் இல்லை என்றால் பட்டினி கிடந்தது கூட சாவேன் என்ற வறட்டு பிடிவாதத்தால் ஊரில் உள்ள சொந்த பந்தங்களை இழந்து தனக்கென்று கிடைக்கும் நல்ல வாய்ப்புகளையும் இழந்து தனது வாழ்க்கையை கூட பலிக்கொடுத்து சுய கவுரவம் என்பதே என்னவென்று அறியாமல் வாழும் அப்பாவி மனிதர்கள் எத்தனையோ பேர். இவர்களும் சரி இவர்களை போல ஆகாமல் திரைப்பட துறையில் கால் பதித்து வெற்றி பெற வேண்டும் என்று நினைப்பவர்களும் சரி முதலில் தங்களுக்கு சினிமா வாய்க்குமா தான் அதில் வெல்ல முடியுமா என்பதை அறிந்து கொண்டு செயல் பட்டால் யாருக்கும் எந்த தொல்லையும் இருக்காது

சினிமா தொழிலாகட்டும் அல்லது மற்ற எந்த தொழிலாகட்டும் அதை செய்ய நினைப்பவர்கள் வெறும் ஆர்வத்தையும் எதிர்பார்ப்பையும் மையமாகக் கொண்டு முயற்சிகளில் ஈடுபடுகிறார்களே தவிர தங்களால் அது முடியுமா அது தங்கள் இயல்புக்கு ஒத்து வருமா என்பதை யோசிப்பதே கிடையாது இப்படி யோசிக்காமல் பல செயல்களை செய்து வாழ்க்கை என்ற இன்ப ரசத்தை உடைந்த பாத்திரத்தில் ஊற்றி வீணாக்கி விடுகிறார்கள் 


யார் யார் என்னென்ன தொழில் செய்யலாம் அந்த தொழிலில் எந்த அளவு வெற்றி பெறலாம் பத்தோடு பதினொன்றாக சராசரியாக போக முடியுமா அல்லது தனி வெற்றியாளராக ஜொலிக்க முடியுமா என்பதை எல்லாம் நமது பிறந்த ஜாதகம் மிக தெளிவாக கணித்து தந்து விடுகிறது அதை அறிந்து அதன் படி செயல் பட்டாலே போதும் நிச்சயம் வாழ்க்கை முழுவதும் நிம்மதி என்ற தென்றல் காற்று வீசும்

சிலர் நான் சினிமாவில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் ஆனால் எனது ஜாதகமோ நீ நடிகனாக முடியாது மின்சார பொருட்களை இயக்குகின்ற வேலையை தான் செய்ய முடியும் என்கிறது எனது ஆர்வத்தை குழி தோண்டி புதைக்கவும் முடியாது புதியதாக எலக்ட்ரிக்கல் வேலையை கற்றுக் கொள்ளவும் முடியாது என்று சொல்லி சினிமாவில் நடிக்கவே மீண்டும் மீண்டும் முயற்சிக்கிறார்கள் இதானால் அவர்களால் எதிலும் வெற்றி பெற முடியாமல் போய் விடுகிறது நடித்தால் மட்டு தான் கலைச்சேவை என்பது மூட நம்பிக்கை சினிமாவிற்கு தேவையான எலக்ட்ரிகல் வேலையை சற்று சிரமப் பட்டு கற்றுக் கொண்டாலும் கலைக்கு செவையாற்றியது போலவும் இருக்கும் வாழ்க்கயை நல்லப்படியாக நடத்துவதாகவும் இருக்கும் இதை சம்பந்தப் பட்டவர்கள் யோசிக்க வேண்டும்

இன்னும் சிலர் எனக்கு ஜோதிடம் கடவுள் சகுனம் இவற்றில் எல்லாம் நம்பிக்கை கிடையாது நம்முடைய திறமையும் அனுபவமும் மட்டுமே நமக்கு வெற்றி தோல்விகளை தரவல்லது எனவே எத்தனை இடர்பாடுகள் வந்தாலும் போராடுவேனே தவிர சோர்ந்து போகமாட்டேன் என்கிறார்கள் இவர்களின் உழைப்பிற்கு நாம் தலைவணங்க் வேண்டியது தான் அதற்காக சென்னைக்கு போக வேண்டும் என்று பெங்களூர் சாலையில் பயணப்படுவது போல் வீணாக தவறான இடத்தில் தவறான் நேரத்தில் உழைப்பவர்களை நம்மால் புத்தி சொல்லி திருத்த முடியாது

வேறு சிலர் ஜோதிடம் பார்த்து தொழிலை தேர்ந்தெடு என்பது அனுபவ பூர்வமாக ஏற்றுக் கொள்ள வேண்டிய விஷயம் தான் ஆனால் இன்று எத்தனை பேருக்கு முழுமையாக ஜோதிடம் தெரிகிறது லாரி வாங்கலாமா என்று ஜோதிடம் கேட்டால் ஹோட்டல் நடத்து என்கிறார்கள் இவர்கள் பேச்சை நம்பி ஹோட்டல் நடத்தி நஷ்டப்பட்டு வேறொரு ஜோதிடரிடம் போய் கேட்டால் எந்த மடையன் உன்னை ஹோட்டல் நடத்த சொன்னது உனக்கு பூ வியாபாரம் தான் உகந்தது என்கிறார்கள் இப்படி ஆள் ஆளுக்கு மனதில் பட்டதை சொல்லி குழப்புகிறார்களே தவிர தெளிவான வழியை காட்ட யாரும் இல்லையே என்கிறார்கள்


இன்னும் சிலர் ஓரளவு நன்றாக ஜோதிடம் அறிந்தவர்களை சந்திக்க வேண்டும் என்றால் நாள் கணக்கில் காத்திருக்க வேண்டியுள்ளது அப்படியே சந்தித்தாலும் பெரும் தொகையை காணிக்கையாக் கொடுக்க வேண்டியுள்ளது அதற்கெல்லாம் எங்களுக்கு சக்தி இல்லையே கடவுள் பெயரில் பாரத்தை போட்டு செய்வதை செய்வோம் நடப்பது நடக்கட்டும் என்கிறார்கள் இதுவும் நியாயமாகத்தான் தெரிகிறது

இருந்தாலும் நமது ஜாதகத்தில் சினிமா துறையில் வெற்றி பெற முடியுமா அதுவும் எந்த பிரிவில் வெற்றியடையலாம் என்பதை சுலபமாக அறிந்து கொள்ள ஒரு வழி இருக்கிறது வராகமிகிரர் தாம் எழுதிய நூலில் இந்த வழியை நமக்கு காட்டுகிறார் சற்று பொறுமையும் நிதான புத்தியும் இருந்தாலே ஜோதிடர்களை நாடி செல்லாமல் ஓரளவு நாமே தெரிந்து கொள்ளாம்

உங்கள் ஜாதக நோட்டை எடுத்துக் கொள்ளுங்கள் அதில் ராசி கட்டத்தில் குரு எங்கே இருக்கிறது என்பதை பாருங்கள் குரு இருக்கும் இடத்திலிருந்து எண்ணிக் கொண்டே வந்தால் ஐந்து ஒன்பது மூன்று ஏழு பதினொன்று இரண்டு பனிரெண்டு ஆகிய இடங்களில் சூரியன் மற்றும் சுக்கிரன் இருந்தால் நீங்கள் நடிப்பு துறையில் புகழ் பெற்றவராக வர வாய்ப்புள்ளது குருவோடு சூரியன் சேர்ந்திருந்தாலும் இந்த வாய்ப்பு உங்களுக்கு கிட்டும் 


அதே போல குரு இருக்கும் ராசிக்கு மூன்று ஐந்து ஏழு ஒன்பது பதினொன்று ஆகிய இடங்களில் சுக்கிரன் இருந்தால் திரைப்பட இயக்குனராக வளருவதற்கு வாய்ப்பு உள்ளது குரு கிரகத்திலிருந்து ஒன்று மூன்று ஐந்து ஏழு ஒன்பது பதினொன்று ஆகிய இடங்களில் சுக்கிரனும் சந்திரனும் இருந்தால் நீங்கள் புகழ்பெற்ற திரைப்பட கதாசரியராக வர வாய்ப்பு உள்ளது இதே போல குரு இருக்கும் இடத்திலிருந்து மூன்று ஏழு பதினொன்று ஆகிய இடங்களில் சுக்கிரனும் புதனும் சேர்ந்திருந்தால் திரைப்பட கவிஞனாக வலம் வருவீர்கள் இசை அமைப்பாளராக வருவதற்கு குரு இருக்கும் இடம் முதல் ஒன்று ஐந்து ஒன்பது ஆகிய இடங்களில் சுக்கிரனும் ராகுவும் அல்லது சுக்கிரனும் சூரியனும் இருக்க வேண்டும் பாடகராக வருவதற்கு இரண்டு பனிரெண்டு ஆகிய இடங்களில் சுக்கிரனும் புதனும் இருக்க வேண்டும்

இது தவிர பாட்டு குழுவினர் ஒளிப்பதிவாளர் தயாரிப்பாளர் பட தொகுப்பாளர் சண்டை பயிற்சியாளர் விநியோகஸ்தர் விளம்பரத்தாரர் திரை அரங்கு உரிமையாளர் இவர்களின் ஜாதகங்களில் குரு சுக்கிரன் செவ்வாய் புதன் ஆகிய கிரகங்கள் ஒன்றை ஒன்று பார்த்தோ சம்மந்தப் பட்டோ இருக்கும் இவர்கள் நிச்சயமாக சினிமாவை மூலதனமாக கொண்டு வாழ்க்கை நடத்துபவர்களாக இருப்பார்கள்

இவைகளை எங்களால் கணிக்க முடியுமா என்று கவலை படுபவர்கள் அல்லது எங்களுக்கு வேறு வேலை இல்லையா என அங்கலாய்ப்பவர்கள் தங்களது சோம்பேறி தனத்தை சற்றேனும் விட்டு எதாவது ஒரு ஜோதிட புத்தகத்தை வாங்கி அதில் உள்ள விஷயங்களை படித்து புரிந்து கொள்ளாம் அவைகளை புரிந்து கொள்ள பெரிதாக ஜோதிட அறிவு தேவை இல்லை சராசரி மனிதர்களே அறியும் வண்ணம் தான் பல நூல்கள் எளிமையாக தமிழில் உள்ளது


இந்த கிரகங்கள் எல்லாம் இப்படி அமைந்திருந்தும் சினிமா துறையிலேயே பல காலங்கள் அனுபவபட்டும் புகழும் பணமும் சம்பாதிக்க முடிய வில்லையே என வருந்துபவர்கள் சித்தர்கள் கண்டுபிடித்து பயன் படுத்திய ஜனதன வசிய மூலிகை அஞ்சனத்தை பயன் படுத்தி நல்ல பலனை பெறலாம் இன்று சினிமா துறையில் கொடி கட்டி பறக்கும் பலர் இந்த அஞ்சனத்தை ரகசியமான முறையில் பயன் படுத்துபவர்களாகவே இருக்கிறார்கள்

நீங்களும் உங்கள் ஜாதகத்தை ஒரு முறைக்கு இரு முறை ஏன் சில முறை கூட நன்றாக கவனித்து ஆராய்ந்து பாருங்கள் அதில் கலை சம்பந்தப் பட்ட வாய்ப்பும் வாழ்க்கையும் உங்களுக்கு இல்லை என்பது தெளிவாக தெரிந்தால் அடுத்த வேலையை கவனித்து வெற்றி பெற பாடு படுங்கள் அதை விட்டு விட்டு தலையால் பாறையை மோதி பிளந்து விடலாம் என்று வீண் முயற்சி செய்து உங்கள் வாழ்வையும் உங்களை நம்பி இருப்பவர்களின் வாழ்வையும் துன்ப படுத்தாதீர்கள.


+ comments + 4 comments

kumba lakkinam simma rasiyil 7 idam kuru,sukiran,suriyan,chandren and puthan ena 5 kirakangal irunthal nallatha kettatha?

entha field ok vakum. sani chevvai nesam. ragu rendil, kethu ettil kala charpa thosam ullathu.

ithuthan en motha jathakam.

M.Natrayan
20:34

சினிமா என்பது ஒரு விளம்பரத்தை தரவல்லது தான். புகழை அல்ல. சினிமாத்துறையில் ஈடுபட விரும்பி சென்னைக்கு படைஎடுப்பவர்கள் மன நோயாளிகள்தான். தன உழைப்பால் முன்னேறவேண்டும். சினிமாவில் நடிப்பதற்காக சென்னைக்கு சென்றவர்கள் பலர் தனது வாயிற்று பிழைபிர்காக கொல்லைகாரர்களாக மாறிவிடுகிறார்கள். ஆகையால் சொந்த ஊரிலேயே உழைத்து முன்னேற பாடுபட வேண்டும். இதற்கெல்லாம் ஜோதிடம் பார்ப்பது சரியல்ல. என்ன தொழில் தனக்கு ஏற்புடையது என்று வேண்டுமானால் கேட்கலாம். அதைவிடுத்து சினிமா தனக்கு ஒத்துவருமா என்று கேட்கக்கூடாது. ஜோதிடர்கள் நமக்கு தகுந்தாற்போல் பதில் சொல்லிவிடுவார்கள். அப்போதுதான் அவர்களுக்கு வருமானம் வரும்! நல்லதையே நினைப்போம்!!!

என்னுடைய ஜாதகத்தில் குரு-சூரியன்-புதன்-சனி ஆகிய 4 கிரகங்களும் ஒன்றாக கன்னியில் (12ஆம் வீடு) இருக்கின்றார்கள்.

குருவுக்கு 3ல் சுக்கிரன், 5ல் சந்திரன், கேது இருக்கிறார்கள்.

நான் சிறுகதை எழுத்தாளர். ஒரு சில குறும்படங்களில் உதவி இயக்குனராக பணியாற்ற எனக்கு வாய்ப்பு தேடி வந்தது.

குரு கிரஹ யுத்தத்தில் சிக்கியிருப்பதால் பெரிய அளவில் கிடைப்பது தடைபட்டு சிற்சில அளவில் கதைகள் பிரசுரமாகிறதோ என்னவோ.

thisai mayakee ,mathimayakee,anjanathai enaku antha maai venumey sir what can i do for thai????
becool.surya@gmail


Next Post Next Post Home
 
Back to Top