Store
  Store
  Store
  Store
  Store
  Store

கடவுள் காட்டும் கிரீன் சிக்னல்...!


   நேற்று தெருவிலே நடந்து போனான் இன்று பார்கிறேன் காரில் பறந்து போகிறான் என்ன மாயம் எப்படி இவன் உயர்ந்தான் எல்லாம் அவனுக்கு கிடைத்த அதிஷ்டம்

நான் பார்க்கும் போது சிறிய பெட்டிக்கடையாகத்தான் தொழிலை துவங்கினான் பின்னர் அது மளிகை கடையாகி பல்பொருள் அங்காடியாக விரிந்து பறந்து விட்டது அவனுக்கு நல்ல அதிஷ்டம் தொட்டது எல்லாம் துலங்குகிறது

எங்கள் ஊருக்கு பஞ்சம் பிழைக்க வந்தவர்தான் இவன் தாத்தா கால்காணி நிலத்தில் குடும்பமே பாடுபட்டு இன்று ஊரிலேயே பெருந்தனக்காரன் இவன்தான் ஆயிரம் உழைப்பு முயற்சி அது இது என்று ஏகப்பட்ட காரணங்களை சொன்னாலும் எதற்கும் அதிஷ்டம் வேண்டும் அதிஷ்டம் இல்லை என்றால் ஆடு மேய்த்தால் கூட அவைகளை நரிகள் கொண்டு போய்விடும்


இப்படி தினம்தினம் எத்தனையோ முனங்கல்களையும் முனுமுனுப்புகளையும் காது புளித்து போவும் வண்ணம் கேட்கிறோம் அதிஷ்டம் அதிஷ்டம் என்கிறார்களே அப்படி என்றால் என்ன? அதிஷ்டம் என்பது எங்காவது பதிங்கி இருந்து ஆள்பார்த்து தாவி பிடித்துக் கொள்ளும் குரங்கு கூட்டமா? அது பத்து பேரில் ஒருவருக்கு மட்டுமே கையில் சிக்கும் விலாங்கு மீனா? அல்லஅல்லவே அல்ல

அதிஷ்டம் என்பது கடவுளாக பார்த்து கொடுக்கின்ற சந்தர்ப்பம் இந்த சந்தர்ப்பத்தை யாரோ ஒருவருக்கு மட்டும் தனியாக கூப்பிட்டு கொடுக்க கடவுள் என்ன ஓரவஞ்சனை கொண்டவனா? நிச்சயம் கடவுளின் முன்னால் மனிதர்கள் எல்லோரும் சமமே ஒரு தாயின் வயிற்றில் பிறந்த ஒன்பது குழந்தைகளையும் பேதா பேதத்துடன் பார்ப்பாளா அன்னை மாட்டாள் தாயைவிட சாலப்பரிவுடயவன் இறைவன் இதனால் அவன் ஒரே ஒருவனுக்கு மட்டும் தான் அதிர்ஷ்டத்தை கொடுக்க வேண்டும் என்று நினைக்கவே மாட்டான் அவன் உனக்கு எனக்கு அதோ தெருவிலே சாக்கடையில் தலையை வைத்துக்கொண்டு உல்லாசமாக உறங்குகிறானே அந்த குடிகாரன் அவனுக்கும் கூட அதிர்ஷ்டத்தை சமபங்காகவே தருகிறான்.




கடவுள் கொடுக்கும் சந்தர்ப்பத்தை கெட்டியாக பிடித்து சளைக்காமல் உழைப்பவனே அதிர்ஷ்டசாலியாகிறான் தனக்கு கிடைத்திருப்பது சந்தர்ப்பமா அல்லது தடுமாற்றமா என்று குழம்பி கிடப்பவன் அல்லது நாளைக்கு பார்த்துக் கொள்ளலாம் என சோம்பி கிடப்பவன் துரதிஷ்டசாலியாகிறான்.

வாழ்க்கையில் சந்தர்ப்பங்கள் கிடைக்காதா என்று தேடி அலைபவர்கள் பலர் விபரம் தெரிந்த நாள் முதலே நல்ல வாய்ப்புக்காக அலைந்து கொண்டிருக்கிறேன் நான் கயிறு என்று பிடிப்பது அனைத்தும் பாம்பாக இருக்கிறது நான் பொன் என்று தொடுவது எல்லாமே மண்ணாக இருக்கிறது இன்றுவரை எந்த சந்தர்ப்பமும் முன்னேற எனக்கு கிடைக்கவே இல்லை என்று அலுப்புடன் சொல்வார்கள் அவர்கள்

அப்படி பட்டவர்களே தூர நின்று பார்க்காமல் சற்று அருகில் சென்று பார்த்தால் உண்மையான கரணம் என்னவென்று நமக்கு தெரியும் தனக்கு தகுதி இருக்கிறதோ இல்லையோ ஆனால் நான் இந்த வேலையில் தான் சேருவேன் இந்த தொழிலை தான் செய்வேன் என்று வீண் பிடிவாதம் பிடித்து வாழ்க்கையை கெடுத்தவர்களாக இருப்பார்கள் வெள்ளி கிழமை சந்தையில் கத்தரிக்காய் வாங்கி கிராமத்தில் கொண்டு விற்றால் பத்துரூபாய் லாபம் கிடைக்கும் என்று உறுதியாக தெரிந்தால் அதை தயங்காமல் உடனே செய்ய வேண்டும் லாபமாக உன் கைக்கு வரும் பணம் தன்னை இரட்டிப்பாக்கிக் கொள்ள ஆயிரம் வழிகளை காட்டும் அதை விட்டு விட்டு நான் எப்பேர் பட்ட குடும்பத்தை சேர்ந்தவன் நான் போய் காய்கறி விற்பதா என்று வீம்பு பேசினால் உன் வாசல் வரை வரும் அதிஷ்டம் கதவை தட்டாமலே திரும்ப போய்விடும்




அதிஷ்ட தேவதை என்னை மாலை சூட்டி மணாளனாக ஏற்றுக் கொள்ள ஓடோடி வந்தாள் அந்த நேரம் பார்த்து எதிரே வந்த ஒரு குருட்டு கிழவன் அவள் பாதையை மறித்து விட்டான் என்று தனக்கு கிடைத்த சந்தர்ப்பம் மற்றவர்களால் கெடுக்கப்பட்டுவிட்டது என்று புலம்புகிறார்கள் சிலர் இவர்கள் பத்து மணி இரயிலுக்கு பத்து மணிக்கு தான் வீட்டில் இருந்தே கிளம்பும் அதிகபிரசங்கிகள் தன்னுடைய தகுதியும் திறமையும் மற்றவர்களால் தாக்கப்படுகிறது தான் எப்போதுமே தோற்கடிக்க பட்டவனாகவே இருக்கிறேன் என அழுதுகொண்டு அலைவார்கள் அழுவதிலும் அடுத்தவர்களை குறை கூறுவதிலும் காட்டும் அக்கறையை தன் பக்கத்திலேயே உட்காந்து இருக்கும் அதிர்ஷ்டத்தை அடையாளம் கண்டு கொள்வதில் காட்டி இருந்தால் தோல்வி என்பதே இவர்கள் பக்கத்தில் வந்திருக்காது

இதனால் தான் கிடைகின்ற வாய்ப்பையும் சந்தர்ப்பத்தையும் பயன் படுத்திக்கொள்ளாத அல்லது பயன் படுத்த தெரியாத மனிதர்களை தெளிவில்லாதவர்கள் என்று உலகத்தவர் சொல்கிறார்கள் கடவுள் கொடுத்த வாய்ப்பை இன்னதென்று அறிந்து பயன்படுத்திக் கொண்ட முட்டாள் கூட வெற்றியாளன் ஆவதுண்டு பயன் படுத்த தெரியாத புத்திசாலிகள் கூட தோற்று போய் வீதியில் அலைவதுண்டு எனவே வாய்ப்பு என்பது கடவுள் மனிதனுக்கு அவ்வபோது காட்டுகின்ற பச்சை விளக்கு என்பதை புரிந்து கொள்ளுங்கள்


நெற்கதிர் அரிசியைதான் தரும் சாதத்தை தராது நீதான் சமைத்துக் கொள்ள வேண்டும் கைகாட்டி மரம் வழியைதான் காட்டும் நீதான் பயணப்பட வேண்டும் கடவுள் சந்தர்ப்பத்தை தான் தருவான் நீதான் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் கடவுள் தருகின்ற வாய்ப்பு எது என்று எனக்கு அடையாளம் தெரியவில்லையே என நீ அழுது புலம்பினால் இந்த உலகத்தில் முட்டாள்களின் மூத்த தலைவன் நீனாகவே இருப்பாய்

உன் முன்னால் மலர்ந்து கிடக்கின்ற எல்லா மலர்களையும் உன்னால் முடிந்த வரை பறித்து மாலையாக தொடு அதில் எதாவது ஒன்று பாரிஜாத மலராக இருக்கும் உன் முன்னால் மேய்கின்ற எல்லா மாட்டையும் கருத்துடன் பாதுகாத்து நில் அதில் எதாவது ஒரு மாடு காமதேனாக இருக்கும் உன் முன்னால் உயர்ந்து நிற்கும் எல்லா மறத்திற்கும் வாய்க்கால் வெட்டி தண்ணீர் விடு அதில் எதாவது ஒன்று கற்பகதருவாக இருக்கும்

அதாவது கிடைக்கும் வாய்ப்புகளில் உனக்கு பழக்கப்பட்ட எதையும் விடாதே அத்தனையும் முயன்று பார் அயராது பாடுபடு உழைப்பை கடமையே என்று உணர்ச்சி இல்லாமல் ஆர்வம் இல்லாமல் ஒரு பிணம் போல செய்யாதே கபடியாடும் இளைஞனை போல காதலிக்கும் காதலர்களை போல உற்சாகத்தோடு செய் ஆர்வத்தோடு செயல் படு நிச்சயம் கடவுள் தரும் அதிஷ்டம் உனக்கு மணிமகுடம் சூட்டும் உழைத்தவன் எவனும் தோற்று போனதை நான் பார்த்ததில்லை அதே நேரம் வெற்றியை கண்டவுடன் துள்ளி குதிக்காதே பணிவோடு இரு அது உன்னை இன்னும் வலுபடுத்தும்




காரணம் ஹிட்லருக்கு கிடைத்த உலகத்தை ஆளும் வாய்ப்பு அவனது ஆணவத்தால் அழிந்து போனது நம் மன்மோகன் சிங்கிற்கு கிடைத்த இந்தியை ஆளும் வாய்ப்பு அவரது பயத்தால் கேலி கூத்தானது அதனால் நீ ஆணவம் கொள்ளாதே பயந்தும் சாகாதே நிதானமாக இரு அது தான் அதிஷ்டத்தை நிரந்தரமாக்கி உன்னை சரித்திரமாக்கும்

சரித்திரமாகும் வரை உழைப்பேன் உழைத்துக் கொண்டே இருப்பேன் என்று உறுதியோடு எவன் போராடுகிறானோ அவனே கடவுளுக்கு பிடித்தமானவன் அவன் கழுத்தில் தான் அதிஷ்ட மாலை வந்து விழும்




Contact Form

Name

Email *

Message *