( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

தமிழ்நாட்டின் அணுகுண்டு கூடங்குளம் !


  சில நாட்களுக்கு முன்பு இடிந்தகரை மக்களின் பட்டினி போராட்டத்தை ஆதரித்து நான் எழுதியதை கண்டு பல நேயர்கள் கூடங்குளம் அணுமின் நிலையம் நாட்டு வளர்ச்சிக்கு மிகவும் தேவை நமது வளர்ச்சியை விரும்பாத சில நாடுகள் இந்த போராட்டத்தை தூண்டிவிட்டு இருக்கின்றன என்றும் இந்த போராட்டத்திற்கு பாதிரியார்கள் மட்டுமே முக்கிய பங்குபணி ஆற்றுவதில் உள்நோக்கம் இருக்கிறது என்றும் எனக்கு எழுதியிருந்தார்கள் 

சிலர் டெல்லியில் அன்னாஹசாரே ராம்தேவ் போன்றவர்கள் உண்ணாவிரதம் இருக்கும்போது இறங்கிவராத மத்திய சர்க்கார் இந்த போராட்டத்திற்கு உடனடியாக ஒரு அமைச்சரை அனுப்பியது கிறிஸ்தவ மீனவர்களை மனதில் வைத்தே என்றும் கருத்து சொன்னார்கள் வேறு சிலர் தேர்தலில் தோற்று போய் அருமை மகளையும் சிறைக்கு அனுப்பி விட்டு மனச்சோர்வின் உச்சத்தில் இருக்கும் கலைஞர் அவர்களே தூண்டி விடுகிறார்கள் தமிழ்நாடு அரசுக்கு நெருக்கடி ஏற்பட வேண்டும் என்பதற்காக என்றும் சொன்னார்கள் வேறு சிலரோ இந்த போராட்டமே அமெரிக்க சதி பாதிரிகள் அனைவருமே அமெரிக்க ஏஜென்ட் என்று பகிரங்கமாக கருத்துக்களை சொல்லியிருந்தார்கள்முதலில் கூடங்குளம் அணுமின் நிலையம் நாட்டு வளர்ச்சிக்கு பேருதவியாக இருக்கும் என்பதை நான் நம்பவில்லை அந்த திட்டத்தில் பாரத பிரதம மந்திரி ராஜுவ் காந்தி கையெழுத்திட்ட உடனே இது அபாயத்தை சிவப்பு கம்பளம் விரித்து நாட்டுக்குள் வரவேற்பதற்கு சமமாகும் என்று தினமலரிலும் தினதூது என்ற உள்ளூர் பத்திரிக்கையிலும் நான் எழுதியிருந்தேன் அதற்கு காரணம் இருக்கிறது நாம் எல்லோரும் நினைப்பது போல அணுமின் நிலையம் என்பது மின்சாரம் எடுப்பதற்காக மட்டும் உருவாக்கப்படுவது அல்ல அணுகுண்டு தயாரிப்பதற்கும் இந்த மின் நிலையங்களையே உலகில் பல நாடுகள் பயன்படுத்துகின்றன அணுகுண்டு என்பது எவ்வளவு பெரிய மனித எதிரி என்பது உலகறிந்த ரகசியம் 

மேலும் கூடங்குளத்தில் அமைந்துள்ள அணுமின் நிலைய பார்முலா ரஷ்யாவில் தோற்றுப்போன பல்லாயிரக்கணக்கான உயிர்களை காவு வாங்கிய பார்முலாவாகும் இதில் விபத்து ஏற்படாது என்று எந்த உறுதியையும் மனசாட்சி உடைய யாரும் தரமாட்டார்கள் அது மட்டும் அல்ல கூடங்குளம் பகுதி நில அதிர்வு வளைவிற்குள் வருகின்ற பகுதி இங்கே எந்த நிமிடம் வேண்டுமென்றாலும் பூமி அதிர்ச்சி ஏற்படலாம் பூமி அதிரும் போது அதிராதே நில் என்று துப்பாக்கியை காட்டி கட்டளை போடும் அதிகாரம் எந்த அரசாங்கத்திற்கும் இல்லை 


மேலும் இந்த போராட்டத்தில் அந்நிய தலையிடோ அல்லது பரிதாபகரமான கலைஞர் அவர்களின் தூண்டுதலோ இருப்பதாக நான் நம்ப வில்லை காரணம் இந்த அணுமின் திட்டம் துவங்கிய காலமுதலே எழுத்தாளர் ஜெயமோகன் உட்பட பல இயற்க்கை ஆர்வலர்களும் அதை எதிர்த்தார்கள் ஆனால் அந்த பகுதி மக்கள் அந்த எதிர்ப்பு குரலை காதில் வாங்கி கொள்ளவில்லை காரணம் நயவஞ்சகமான அரசாங்கம் அந்த அப்பாவி மக்களுக்கு வேலை தருகிறேன் பணம் தருகிறேன் புதிய நிலம் தருகிறேன் என்று ஆசை வார்த்தை கூறி மயக்கி வைத்திருந்தது 

யாரவது ஒரு புத்திசாலி மின்சாரம் எடுக்கும் இடத்தில் மீன் பிடிப்பவனுக்கும் பனை ஏறுபவனுக்கும் என்ன வேலை கிடைக்கும் இந்த வாக்குறுதி எல்லாம் ஏமாற்று வேலை நம்பாதிர்கள் என்று சொன்னால் நாங்கள் முன்னேறுவது உனக்கு பிடிக்க வில்லையா எங்களுக்கு வரும் பிரகாசமான வாழ்வை கெடுக்கவா வந்தாய் என்று கழுத்தை பிடித்து வெளியில் தள்ளியிருப்பார்கள் இப்படி பல சம்பவங்கள் அந்த பகுதியில் நடந்ததை நான் நன்கறிவேன் இயற்க்கை பேரிடர் என்றால் எப்படி இருக்கும் என்பதை தமிழக மக்கள் சுனாமி வந்த பிறகே அறிய துவங்கினார்கள் அதுவும் குறிப்பாக சுனாமி அலைகள் ஜப்பான் அணுமின் நிலையங்களை புரட்டி போட்டதை தொலைகாட்சிகளில் பார்த்த பிறகு அதிர்ந்தே போய் விட்டார்கள் அதன் பிறகுதான் இயற்க்கை ஆர்வலர்களின் குரல்கள் மக்கள் காதில் விழ ஆரம்பித்தது பாதுகாப்பு நடவடிக்கைக்காக ஊரை காலி செய்ய அரசாங்கம் மக்களை வற்புறுத்திய போது அவர்களுக்கு நிலைமையின் அபாயம் விளங்க ஆரம்பித்து கொதித்து போனார்கள் 

இந்த போராட்டத்தில் கிறிஸ்தவ பாதிரிமார்கள் முன்னணி வகிப்பதை நான் உள்நோக்கம் கொண்டதாக கருதவில்லை காரணம் போராட்டத்தில் ஈடு பட்டதில் நிறைய பேர் கத்தோலிக்க கிறிஸ்தவ மீனவர்கள் இவர்கள் எந்த பிரச்சனையாக இருந்தாலும் தங்களது பாதிரிகளின் ஒத்துழைப்பை பெற்றே செய்வது வழக்கம் இதை நான் அந்த பகுதிகளில் வாழ்ந்தவன் என்ற முறையில் நன்கு அறிவேன் கூடங்குளம் அணுமின் நிலையத்தால் உடனடியாக பாதிப்படைவது மீனவ மக்களே அவர்கள் தங்களது வழிகாட்டிகளாக பாதிரிகளை அழைத்ததில் மத சாயம் பூசுவதற்கு முகாந்திரமே இல்லை  மேற்கு வங்காளத்தில் ஹரிப்பூர் பகுதியில் வரயிருந்த அணுமின் நிலையத்தை அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தடுத்தது போல் ஜெயலலிதா அவர்களும் தடுக்க வேண்டும் என்று புகழ் பெற்ற சமூக சேவகி மேதா பட்கர் கூறியுள்ளார் இதை தமிழக முதல்வரால் நிச்சயம் ஏற்க்க இயலாது காரணம் இந்த அணுமின் நிலையம் அமைவதற்கு இந்நாள் முதல்வரும் முன்னாள் முதல்வரும் மாறி மாறி ஆதரவும் ஒத்துழைப்பும் கொடுத்தவர்களே ஆவார்கள் இவர்களால் துணிச்சலுடன் இது வேண்டாம் என்று மத்திய அரசாங்கத்தை பார்த்து சொல்ல முடியாது 

அது மட்டுமல்ல ஹரிபூர் அணுமின் நிலைய திட்டம் ஆரம்பத்திலேயே முதலமைச்சரால் தடுக்கப்பட்டு விட்டது கூடங்குளம் அணுமின் நிலைய வேலைகளோ நிறைவு பெற்று இயங்கும் நிலைக்கு வந்து விட்டது இப்போது இதை நிறுத்தினால் பண நஷ்டம் என்பது பெரிய அளவில் இருக்கும் மேலும் இந்தியா ரஷ்யா ஆகிய இரண்டு நாடுகளும் ஒப்பந்தம் செய்து திட்டத்தை கொண்டுவந்து இருப்பதினால் அது நிறைவேற்றப்படாமல் போனால் இரு நாட்டு உறவிலும் பெரிய விரிசல் ஏற்பட்டுவிடும் இது தான் கூடன்குள விஷயத்தில் யதார்த்த நிலையாகும் 


நிலைமை இப்படி இருப்பதை அவதானிக்கும் போது அப்பாவி மீனவ மக்கள் ஆயிரம் போராடினாலும் அரசாங்கம் அவர்களை திசை திருப்பும் வேலையை செய்யுமே அல்லாது திட்டத்தை கைவிடாது அதனால் ஒட்டு மொத்த மக்களும் நாட்டு வளர்ச்சி முன்னேற்றம் என்ற அரசாங்கத்தின் போலி பிரச்சாரத்தை கண்டு மயங்காமலும் மதம் அந்நிய தலையீடு அரசியல் என்று பேசி பிளவு படாமலும் இருக்க வேண்டியது மிகவும் அவசியம் இதில் நாம் உறுதியை கைவிட்டால் இன்று இல்லை என்றாலும் என்றாவது ஒருநாள் நம் தமிழ்நாடு ரஷ்யாவின் செர்னோபில் போலவோ ஜப்பானின் புகுஷிமா போலவோ ஆகிவிடும் ஜாக்கிரதை!

+ comments + 9 comments

நல்ல விளக்கம் ஐயா...

எத்தனைபேர் செத்தாலும் பரவாயில்லை ...எனக்கு மின்சாரம் வேண்டும் என்று நினைக்கும் மனிதாபிமானமற்றவர்கள் நம் மாநிலத்தில் அதிகம் உள்ளனர் ...

போராட்டத்தில் பாதிரியார்கள் மட்டுமல்லாது தென்னகத்தின் முக்கிய இந்து மத தலைவர் பால பிரஜாபதி அடிகளாரும் முக்கிய பங்கு வகித்தார் ...போராட்டத்திற்கு தலைமை தாங்குவதும் இந்து மதத்தை சார்ந்த டாக்டர் உதயகுமார்தான் ....இடிந்தகரை பகுதியில் வாழ்பவர்கள் பெரும்பாலோனோர் கிறிஸ்தவர்கள் என்பதால் பாதிரியார்களின் பங்களிப்பு தவிர்க்க முடியாதது ...

M.Natrayan
20:59

அப்படியானால் கல்பாக்கம் அணுமின் நிலையத்தை முதலில் முடவேண்டும். அங்கெல்லாம் மீனவர்கள் மீன்பிடிப்பதிலையா? அந்த மின்நிலையம் மட்டும் இல்லாவிட்டால் தமிழ் நாடு இருட்டில் மிதக்கும். இப்போதே மின்வெட்டினால் தமிழகம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது என்பது தெரியாதா? கூடங்குளம் பகுதியில் உள்ள மீனவர்களுக்கு கதிவீச்சு என்றால் என்ன என்று கூட தெரியாது. ஆகையால் அமெரிக்க உளவு அமைப்பைச்சேர்ந்த கிருஸ்துவ பாதிரிகள்தான் முழுமுதற் காரணம் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. அரசியல் வாதிகளைப்போல் சிறுபான்மையானர்களை திருப்திபடுத்துவது சரியல்ல. தாஜா செய்வதை சற்று நிறுத்துங்கள்!!!!

கூடங்குளம் அணுமின் நிலையம் முன்றாம் தலைமுறை தொழில்நுட்பம் சார்ந்தது. ஜப்பான்-இல் நடந்தது போல் இங்கு நடக்க வாய்ப்பு இல்லை. மேலும் ஒரு தீமையை கருத்தில் கொண்டு வரப்போகும் பல நன்மைகளை உதறி தள்ள கூடாது. அந்த தீமை வராமல் தடுக்க என்னென்ன வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டும் என பார்க்கவேண்டும்.

நம் நாட்டில் அரசு பணியாற்றுவோரில் பெரும்பாலானோர் நேர்மை (Sincerity), முனைப்பு (initiative / proactiveness) மற்றும் தொழில் கவனம் (attention) குறைந்தவர்கள். அதுதான் பாதிப்பு ஏற்படுத்த கூடியது. அதை எப்படி சரி செய்ய வேண்டும் என பார்க்கவேண்டும்.

shakila
01:12

kalpakkam does not have these problems guruji?

Anonymous
11:13

பால பிரஜாபதி இப்பொழுது போராட்ட குழுவில் இருந்து விலகி விட்டார்.

Anonymous
13:51

///பால பிரஜாபதி இப்பொழுது போராட்ட குழுவில் இருந்து விலகி விட்டார்///
நன்றி

கொஞ்சம் எனது பதிவுகளை பாருங்கள்


Next Post Next Post Home
 
Back to Top