( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

கடன்கார ஜாதகம் எது...?

   ராமாயணத்தின் கடேசி காட்சி ஆயுதங்களை இழந்து நிராயுதபாணியாக தனது எதிரியான ராமன் முன் ராவணன் நிற்கிறான் அந்த நிலையில் அவன் மனம் எதை எதையெல்லாமோ நினைத்து கலங்குகிறது மயங்குகிறது அந்த நிலையை கம்பன் கடன் பட்டால் நெஞ்சம் போல் கலங்கி நின்றான் லங்கை வேந்தன் என்று வர்ணிப்பதாக வாய்மொழி வழக்கில் சொல்வார்கள் 

ராவணன் இலங்கைக்கு மட்டும் அரசன் அல்ல பதினாலு உலகங்கள் என்று சொல்லப்படுகிற அனைத்திற்கும் அவனே ஏக சக்ரவர்த்தி நம் வீட்டில் காற்றுவரவில்லை என்றால் மின்விசிறி போடுவோம் அதுவும் இல்லை என்றால் பனைஓலை விசிறி கொண்டு வீசுவோம் ஆனால் ராவணனோ கட்டுக்கே அடங்காத வாயுபகவானே பிடித்து வந்து தென்றலாக வீச செய்தவன் பன்னீர் தெளிக்க வருனனையே வரவழைத்தவன் ராவணன் வீட்டு அடுப்பங்கரையில் நெருப்புக்குச்சி அடுப்பு பத்தவைக்க வில்லை சாட்சாத் அக்னி தேவனே வந்து தீ மூட்டினான் அவ்வளவு பாராக்கிரமம் வாய்ந்தவன் ராவணன் 

உடல் பலத்தில் மட்டுமா அவன் உயர்ந்தவன் நான்கு வேதத்தையும் கற்று கரை சேர்ந்து அறிவால் இமயம் போல் உயர்ந்து நிற்பவன் யுத்தகளத்தில் எத்தனை வீயுகங்கள் உண்டோ அத்தனையையும் வகுக்கவும் உடைக்கவும் தெரிந்தவன் நாட்டிய சாஸ்திரம் சங்கீத சாஸ்திரம் அனைத்தையும் கரைத்து குடித்தவன் அவன் வீணை எடுத்து வாசித்தால் மலைகூட மெழுகுபோல் உருகி விடும் மிகபெரிய கட்டிட பொறியாளன் ஆதிகால விமானங்களின் ரகசியம் தெரிந்தவன்தனக்காக உயிரை கொடுக்கும் விசுவாசமிக்க படைவீரர்களையும் படை தலைவர்களையும் கொண்டவன் அவன் உடன் பிறந்தோரும் சரி அவன் பெற்ற மக்களும் சரி அவனுக்காக எதைவேண்டுமானாலும் செய்வார்கள் ராமன் படை முன்னால் ராவண படை பெரிய சமுத்திரம் யுத்த நுணுக்கங்கள் மாயா ஜால மந்திர சித்திகள் அனைத்தையும் பெற்ற ஏராளமான வீர நிபுணர்கள் அவனிடம் உண்டு 

ஆனால் ஒரு பெண் மீது கொண்ட மோகத்தால் பலம் இழந்து மதி இழந்து படை இழந்து உறவு இழந்து நாடு நகரம் அத்தனையும் இழந்து மொட்டை மரமாக நிற்கிறான் இத்தனை இழப்பை பெறுவதும் கடன் படுவதும் ஒன்று தான் என்பது நமது மூத்தோர்களின் அனுபவ வாக்கியம் 

உலகத்திலேயே மிக பெரிய கஷ்டம் கடன் படுவதுதான் அது புத்திர சோகத்தை விட கொடியது குழந்தை பிராயத்தில் தாய் தகப்பனை இழந்து அனாதையாக திரிவதை விட கேடுடயது வாங்கிய கடனை கொடுக்க முடியாமல் வெறுங்கையை பிசைந்து கொண்டு கடன் கொடுத்தவன் முன்னால் தலைகுனிந்து நிற்கும் வேதனை இருக்கிறதே அது ஆயிரம் முறை தூக்கில் தொங்குவதற்கு சமமாகும் நாளைக்கு தருகிறேன் எப்பாடு பட்டாவது அடுத்தமாதம் அடைத்துவிடுகிறேன் என்று சமாதானம் சொன்னாலும் கேட்காத மனிதர் முன்னால் வயிற்றை கலக்கி உடல் நடுங்க நிற்கும் அவலத்தை வார்த்தைகளால் வடித்துவிட முடியாது அனுபவ பட்டவர்களுக்கே அந்த வலி தெரியும்நிறைய பேர் சொல்கிறார்கள் மனிதனின் ஆசைகள் தான் கடன்பட காரணமாக இருக்கிறது எனவே நிலைமைக்கு தக்க நடந்து கொள்வதே புத்திசாலி தனமென்று கடன் வாங்குவதில் முக்கால் வாசிபேர் கடன்பட வேண்டும் என்ற ஆசையோடு வாங்குவது இல்லை வீட்டில் பிள்ளை நோயால் படுத்து கிடக்கிறான் இது வரை கூடாத கல்யாணம் மகளுக்கு கூடிவந்திருக்கிறது என்ற மாதிரியான இக்கட்டுகள் வரும்போதே நிறையே பேர் கடன்வாங்க வேண்டிய நிற்பந்தத்திற்கு ஆளாகிறார்கள் இவர்களை ஆசையால் கடன்வாங்கியவர்கள் என்று பொத்தாம் பொதுவாக சொல்லிவிட முடியாது 

ஏராளமான கடன் சுமை இருக்கிறது வருகின்ற வருமானம் அனைத்துமே வட்டிக்கு போய்விடுகிறது நிம்மதியாக ஒரு பிடி சாதம் கூட சாப்பிட முடியவில்லை எனக்கு எப்போதுதான் கடன் என்ற பாரம் இல்லாத வாழ்க்கை அமையும் என்று என்னிடம் நிறைய பேர் வருவார்கள் அவர்களிடம் கடன் பட்டதற்கான சூழல்களை கேட்டுப்பார்த்தால் எல்லாமே தவிர்க்க முடியாத காரணங்களால் உருவானது என்பது தெளிவாக தெரியும் அப்படி பட்டவர்களின் ஜாதகங்களை புரட்டி பார்த்தால் அவற்றில் ஒரு பொதுவான தன்மை இருப்பதை என்னால் அறிந்து கொள்ள முடிந்தது 

அவர்கள் ஜாதகத்தில் செவ்வாய் சனி கேது போன்ற கிரகங்கள் ஒன்றுக்கொன்று சேர்ந்தோ அல்லது பார்வை பட்டோ இருக்கிறது அதாவது சனி கிரகம் ஒருமனிதனின் பூர்வ ஜென்ம கர்மாவின் பலனை தரக்கூடியதாக இருக்கிறது அதே போல இதனோடு செவ்வாய் சம்பந்தப்படும்போது இக்கட்டான கொடிய வறுமை மனிதனை பிடித்துக்கொள்கிறது இந்த இரண்டு கிரகங்களோடு கேதுவும் சேரும் போது அது பிரச்சனைகளில் இருந்து தப்பிக்க கடன் வாங்க மனிதனை தூண்டுகிறது என்பதை புரிந்து கொண்டேன்


வேறு சிலர் இருக்கிறார்கள் இவர்களுக்கு அதிகப்படியான வருவாய் வந்துகொண்டே இருக்கும் வியாபாரமோ தொழிலோ நஷ்டம் இல்லாமல் லாபத்திலேயே போகும் ஆனாலும் கடன் சுமை குறையவே குறையாது ஆயிரம் வருவாய் வந்தாலும் கடனை அடைக்க முடியாது வரவு எட்டணா செலவு பத்தணா என்பது போல செலவினங்கள் தவிர்க்கவே முடியாத அளவு கூடி கொண்டே போகும் இவர்கள் ஜாதகத்தை ஆராய்ந்தால் சனியும் செவ்வாயும் சேர்ந்தோ அல்லது சனியும் கேதுவும் இணைந்தோ இருக்கும் இப்படி கிரக நிலை அமைந்த ஜாதகர்கள் கோடிஸ்வரர்களாக இருந்தாலும் கடன்காரர்களாகவே வாழ்நாள் முழுவது இருப்பார்கள் 

சரி ஐயா எங்கள் ஜாதகம் இப்படி அமைந்து விட்டது அதற்கு நாங்கள் பொறுப்பல்ல ஜாதகத்தை இனி மாற்றி அமைக்கவும் முடியாது நாங்கள் வாழ்நாள் முழுவது கடன் பட்டே சாகவேண்டியது தானா என்று சிலர் கேட்பது என் காதில் விழுகிறது ஜாதகத்தில் விதியை காட்டிய இறைவன் அந்த விதியை மாற்ற வழியை காட்டாமலா இருப்பான் நிச்சயம் கடன் தொல்லையில் இருந்து படிப்படியாக விலகுவதற்கு சில வழிவகைகளை நமது முன்னோர் மூலம் நமக்கு இறைவன் காட்டியுள்ளான் அவைகளை நம்பிக்கையோடு பின்பற்றினாலே நல்ல பலன் கிடைக்கும் 

நமது முந்தைய பதிவு ஒன்றில் கடன் தொல்லை தீர எளிய வழி ஒன்றை சொல்லியிருந்தேன் அதையும் மீண்டும் ஒரு முறை படித்து பாருங்கள் சில குழப்பங்களுக்கு விடைகிடைக்கும் (அந்த பதிவை படிக்க இங்கே கிளிக் செய்யவும்) அளவுக்கு அதிகமான கடன் தொல்லையில் இருப்பவர்கள் சத்ரு வசிய குபரே வசிய அஞ்சனங்களையும் பயன்படுத்தலாம் அப்படி பயன் படுத்தி நிறைய பேர் பலன் கண்டிருக்கிறார்கள்.


+ comments + 3 comments

Anonymous
15:03

எங்கள் மகனின் ஜாதகத்தில் ஏழாம் இடத்தில் சனி, செவ்வாய்,சுக்கிரன் உள்ளது. செவ்வாய் உச்சம், சுக்கிரன் நட்பு, சனி ஆட்சி மூன்று கிரகமும் சேர்ந்து இருந்தாலும் கடன் பட வருமா? என்ன தொழில் செய்யலாம்?

நுகர்வு கலாச்சாரத்தில்,இதுபோன்ற விசித்திரங்கள் சகஜமாகும்!

Anonymous
12:36

Hello guruji, iam proud of you. BLESS me guruji. சத்ரு வசிய குபரே வசிய அஞ்சனம் How to get this yantra? tell me guruji. whats one word mantra tell me in tamil. please tell me guruji

My Email id is santhamanisivasrii@gmail.com


Next Post Next Post Home
 
Back to Top