( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

காலை கட்டி ஓடியது ஏன்...?

  • திருச்சி இடைதேர்தலில் நேருவின் தோல்வி பற்றி கால்களை கட்டி ஓட்டப்பந்தயத்தில் விட்டது போல என்று கருணாநிதி கூறியுள்ளாரே?

    இவர் கால் தான் கட்டப்பட்டிருக்கிறதே பிறகு எதற்கு பந்தயத்தில் கலந்து கொள்ள வேண்டும் குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று சொல்வது போல் இருக்கிறது  • பிரதமர் மன்மோகன்சிங் பலகீனமானவர் என்று எல்.கே.அத்வானி காட்டமாக விமர்சிக்கிறாரே...?

    பிரதமர் மட்டுமா பலகீனமானவர் இதை சொல்லுகின்ற அத்வானி அவர்களின் கட்சியும் கூட பலகீனமானது தான் பிரதமர் வேட்பாளர் பதவிக்கு இவர்கள் கட்சியில் நடக்கும் போட்டா போட்டியே மக்களை சிரிக்க வைக்கிறது முதலில் தங்கள் கட்சியை பலபடுத்தி விட்டு மற்றவர்களை குறைசொல்லலாம்

  • உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க அடைந்துள்ள அசுரத்தனமான வெற்றி எதை காட்டுகிறது?

   ஒன்றையும் பிரம்மாதமாக காட்டவில்லை உண்மையில் இந்த தேர்தல் கட்சிகளுக்கு மத்தியில் நடக்கும் பலபரிச்சையே அல்ல தனிமனிதர்களின் செல்வாக்கு இதில் மிகவும் முக்கியம் இதை வைத்து கொண்டு வென்றவர்கள் ஆடுவதும் தோற்றவர்கள் ஓடுவதும் சரியானது அல்ல

  • ஈராக் யுத்தம் முடிந்துவிட்டதாக ஒபாமா அறிவித்துள்ளாரே...?

    முதலில் ஈராக் யுத்தம் எதற்க்காக துவங்கியது ரசாயன ஆயுதங்களை அவர்கள் வைத்திருப்பதாக சொல்லித்தானே அமெரிக்க நட்புநாடுகள் போர்பிரகடனம் செய்தன போர் முடிந்து விட்ட இன்றைய நிலையில் எத்தனை ரசாயன ஆயுதக்களை இவர்கள் கண்டெடுத்தார்கள முதலில் இது யுத்தமே அல்ல அராஜகமான ஆக்கிரமிப்பாகும் லட்சக்கணக்கான அப்பாவி ஈராக்கியர்களை கொன்று விட்டு ஒன்றுமே நடக்காதது போல் அமெரிக்க நடத்தும் பாசாங்கு நாடகத்திற்கு நாளை பதில் சொல்லியே ஆக வேண்டும் எளியவனை வலியவன் தாக்கினால் வலியவனை இறைவன் தாக்குவான்.


+ comments + 4 comments

08:46

ஈராக்கியர்களை கொன்று விட்டு.....எளியவனை வலியவன் தாக்கினால் வலியவனை இறைவன் தாக்குவான். yes

arumayaana pathivu gurujikku vanakkam

//ஈராக்கியர்களை கொன்று விட்டு.....

எளியவனை வலியவன் தாக்கினால்
வலியவனை இறைவன் தாக்குவான்.//

very nice line

What was done by America is wholly wrong. had Sadam hussain not attacked Kuwait America would not have entered Iraq. American
military entered Iraq only on the invitation of Govt.of Kuwait- to save its soverginity.


Next Post Next Post Home
 
Back to Top