( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

மனைவின் ஜாதகம் சாதகமாக இருந்தால்...


யா வணக்கம்!

      உங்களது தளத்தினை பல நாட்களாக வாசித்து வருகிறேன். இந்த மின்னஞ்சல் என் தனிப்பட்ட கேள்விக்காக. இங்கு உங்கள்து தளத்தில் பிரசுரக்கப்படும் கேள்விகளைப் பார்க்கும் போது நான் கேட்கப் போகும் கேள்வி சிறுபிள்ளைத்தனமாகவோ விளையாட்டாகவோ தெரியலாம். ஆனால் அவ்வாறு நினையாமல் தயவுசெய்து என் வினாவை கருத்தில் கொள்ள வேண்டுகிறேன்.

நான் சுதாகர். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் 18/11/1984 ல் 15:26 க்குப் பிறந்தேன். இப்போது பொதுத்துறை தொலைதொடர்பு நிறுவனத்தில் இளநிலை பொறியாளராக பணிபுரிகிறேன். எனது பெற்றோர் எனக்கு பெண் பார்த்து வருகின்றனர். ஆனால் எனது பிரச்சனை அதுவல்ல. அரசாங்கத்தில் உயர் பதவி வகிக்க வேண்டும் என்பது எனது சிறு வயது கனவு. அது நிஜமாகுமா? நான் இப்போது IAS தேர்வுக்கு படித்து வருகிறேன். நான் IAS ஆவேனா? அல்லது அரசு உயர் பதவிகாளகப் கருத்ப்படும் Engineering Service, Railway Service போன்ற ஏதேனும் ஒன்றிலேனும் நான் எனது திருமணத்திற்கு முன் அதிகாரியாக (As a Gazetted Officer) அமர முடியுமா? 

தயவு செய்து விடையளிக்க வேண்டுகிறேன். உங்களது பதிலை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். 

சுதாகர். ஈரோடு
   ன்புள்ள சுதாகர் ஒரு விஷயம் முக்கியம் பெறுவதும் பெறாததும் அது நடைபெறுகின்ற நேரத்தை பொறுத்தே அமையும் என்பது என் கருத்து எனவே உங்கள் கேள்வியை நான் சிறுபிள்ளை தனமாக எடுத்துக்கொள்ள வில்லை 

சாதாரண உலக வாழ்வில் ஈடுபட்டிருக்கும் மனிதனுக்கு வேலையும் அதற்கான அங்கீகாரமும் மிகவும் முக்கியம் வாய்ந்தவையாகும் அதனால் தான் நமது பெரியவர்கள் உத்தியோகம் புருஷ லட்சணம் என்று சொன்னார்கள் 

உங்கள் ஜாதகத்தை துல்லியமாக கணக்கிட்டு பார்த்ததில் உங்களுக்கு அரசாங்கத்தில் மிக உயர்ந்த பதவி கிடைப்பதற்கான வாய்ப்புகள் நிறையவே உள்ளன உங்கள் ஜாதகத்தில் தற்போது ராகு திசையில் சனி புத்தி 2014 ஜனவரி வரையில் நடக்கிறது அந்த காலகட்டம் வரை உத்தியோகம் பெறுவதில் சிற்சில தடைகள் ஏறபடலாம் 

எனவே அதுவரை திருமணத்தை தள்ளிபோடவேண்டிய அவசியம் இல்லை என்பது என் கருத்து ஒருவேளை உங்களுக்கு வரப்போகும் மனைவின் ஜாதகம் சாதகமாக இருந்தால் உடனடியாக நீங்கள் எதிர்பார்க்கும் வேலை கிடைக்க இறைவன் துணை செய்யலாம் 

ஆனாலும் உங்கள் ஜாதகம் மிகவும் சிறப்பு வாய்ந்த அமைப்புகளை கொண்டிருக்கிறது நீங்கள் உங்கள் வம்சத்திலேயே யாரும் அடையாத மிக உயர்ந்த நிலையை அடைவீர்கள் என உங்கள் பூர்வ புண்ணிய ஸ்தானம் சொல்கிறது அம்மாவாசை தோறும் யாராவது அடுத்த வேளை சோறு கிடைக்காத ஏழைக்கு உணவு கொடுத்து வாருங்கள் வாழ்வில் மிகபெரும் ஏற்றத்தை காண்பீர்கள்.


+ comments + 5 comments

Anonymous
04:58

வணக்கம் அய்யா,
உங்களின் ஒவ்வொரு பதிவும் அற்புதம்.

18/11 - அன்பர் சுதாகர், advance பிறந்த நாள் நல் வாழ்துக்கள்
Micheal Rajnath/ Malaysia

10:51

வணக்கம் குருஜி,

தங்களின் கணிப்புகள் சரியாக உள்ளன. சுதாகரின் பிறப்பு விபரங்கள் உள்ளதால் நானும் சில கருத்துகளை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

10ல் லக்னாதிபதியும் 10ம் அதிபதியுமான குரு ஆட்சி பலத்துடன் உள்ளார். இது ஹம்சயோகத்தை தரும். மேலும் பாக்கியாதிபதி உச்சம் பெற்று 11ல் இருந்து 2,5,6 ஆகிய வீடுகளை பார்ப்பதும் சிறப்பு. எனவே உத்தியோகத்தில் உயர்வை தர ஜாதக அமைப்புகள் பலமாக இருக்கின்றன. ஆனாலும் 3, 8க்குடைய சுக்கிரன் குருவுடன் 10ல் இணைவு பெற்றதும், குருவானவர் 8க்குடைய சுக்கிரன் சாரம் பெற்றதும் கடினமான பணியே ஜாதகருக்கு அமையும். மேலும் பணியில் பல இடைஞ்சல்களை சந்திக்க வேண்டிய நிலையும் ஏற்படும் என நினைக்கிறேன்.

மேலும் 11, 12க்குடைய சனி 8ல் இருந்து தற்போது புக்தியை நடத்துவதால் இக்காலகட்டத்தில் திருமணம் நடைபெறுவதும் கடினமே. முயன்று நடத்திவைத்தாலும் குடும்பத்தில் பல்வேறு பிரச்சினைகள் குழப்பங்களை ஜாதகர் சந்திக்க வாய்ப்புகள் இருக்கின்றது என்பதையும் நாம் மறுப்பதற்கில்லை. எனவே அடுத்து வரும் புதன் புக்தி காலத்தில் திருமணம் நடைபெற்றால் ஓரளவிற்கு மகிழ்ச்சியுடன் இருக்கலாம் என்பது எனது கருத்து.

Anonymous
22:03

அன்புள்ள குருஜி,
ப்ளீஸ் வாசகர் முகவரி & தேதி முதலிவை போடவேண்டாம்,
(நான் சுதாகர். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் 18/11/1984 ல் 15:26 க்குப் பிறந்தேன்).

மணி சொன்ன ஜெனரல் கருத்து 50 % உண்ன்ம எல்லா சரியாக வராது.
yours
மணிவண்ணன்

@Anonymous vidhiyaium matrum pala pathikangal nalval saiva kuravarkalidam irunthu namakku kidaikirathu. matram varum athanai earkum thunivum varum


Next Post Next Post Home
 
Back to Top