( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

மேடையில் பேச ஜாதகம் தடையா...?


  •    ன்மீக யோகி ஸ்ரீ ராமானந்த குரு அவர்களுக்கு என்னுடய பணிவான வணக்கங்கள் உங்களுடைய ஒவ்வொரு பதிவுகளும் அனைவருக்கும் எளிதில் புரியும் வண்ணமும் பயனுள்ளதாகவும் அமைந்துள்ளது நான் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு சிறிய கிராமத்தில் வாழ்ந்து வருகிறேன் நான் Bsc படித்து முடித்துளேன் .என்னுடைய பிறந்த நாள் 26-05-1990 .நான் வேலை தேடி கொண்டிருக்கிறேன் எனக்கு உடனே வேலை கிடைக்குமா ,மேலும் எனக்கு Stage fear அதிகமாக இருக்கிறது அதன் காரணத்தையும் தெரிந்து கொள்ள ஆசை படுகிறேன் .நான் முன்பு பேச்சு போட்டிகளில் பேசி இருக்கிறேன் எனக்கு எப்படி Stage fear வந்தது என்று தெரியவில்லை ,நான் ஒரு ஜோதிடரிடம் விசாரித்ததற்கு ராகு தோஷம் இருப்பதாக கூறினார் .தாங்கள் தயவு செய்து என்னுடைய நிலையை எனக்கு கூறுங்கள்.

biju siva கன்னியாகுமரி    ன்புடைய நண்பரே நீங்கள் அசைக்க முடியாத மன உறுதி படைத்தவர் என்றாலும் கோபம் வரும் போதும் முன்பின் யோசிக்காமல் முரட்டுத்தனமாக பேசி விடுவீர்கள் இதனால் கொடூரமான மனம் படைத்தவர் என்று மற்றவர்கள் உங்களை தப்புகணக்கு போடுவார்கள் மேலும் பெற்றவர்களாக இருந்தாலும் மற்றவர்களாக இருந்தாலும் உங்களை புரிந்து கொள்வது சற்று கடினம் அதற்கு காரணம் யாரிடமும் மனமிட்டு பேசாத உங்கள் இயல்பே ஆகும் திருடனாக இருந்தாலும் கன்னக்கோல் சார்த்த ஒரு இடம் வேண்டும் என்பார்கள் அதாவது நமக்குள் உற்பத்தியாகும் எண்ணங்களை உள்ளுக்குள்ளேயே போட்டு அழுத்தி வைத்தால் தேவையற்ற மன உளைச்சலும் நரம்பு தளர்ச்சியும் ஏற்படும் எனவே நல்ல நண்பர்களிடம் மனமிட்டு பேசுங்கள் 

உங்களுக்குள் நாம் உயர்ந்தவர் என்ற எண்ணம் வலுவாக இருக்கிறது இதனால் மற்றவர்களிடம் இருந்து விலகி தனியாக இருக்கிறீர்கள் இந்த தனிமையில் தேவையற்ற சிந்தனையும் நேரம்கெட்ட உறக்கமும் தான் உங்களுக்கு மிச்சமாக இருக்கிறது இதனாலேயே ஒரு சாரார் உங்களை சோம்பேறி என்கிறார்கள் 

கல்வியில் சிற்சில தடை ஏற்பட்டாலும் படிப்பதிலும் வேலை செய்வதிலும் நல்ல திறமை உங்களிடம் இருக்கும் ஞாபக மறதி அடிக்கடி ஏற்படுவதால் நல்ல வாய்ப்புகளை தவறவிடும் சூழல் உருவாகும் தனியார் உத்தியோகம் உங்களுக்கு அமையும் இரண்டாயிரத்து பன்னிரண்டு மார்ச் மாதத்திற்கு மேல் உங்களுக்கு வாழ்க்கையின் உயர்வு ஆரம்பிக்கும் 

நீங்கள் பிறந்த நேரத்தை குறிப்பிட வில்லை என்பதனால் உங்கள் ஜாதகத்தில் ராகு தோஷம் உண்டா இல்லையா என்று சொல்ல முடியவில்லை பேச்சி போட்டிகளில் கலந்து கொள்ளும் ஆர்வமுடைய உங்களுக்கு மேடை கூச்சம் தற்போது அதிகம் ஏற்படுவது உங்களது படபப்பான புத்தியாலே ஆகும் அதனால் மனதை நிதானத்தில் வைக்க தியானம் பழகுங்கள் எல்லாம் நல்ல படியாக இருக்கும்.


+ comments + 1 comments

M.Natrayan
21:51

இந்த ஜாதகம் என்பதெல்லாம் உன்மைதான என்பது புரியவில்லை. இது இந்துக்களுக்கு மட்டும்தான் பொருந்துமா அல்லது அனைத்து மதத்தவர்களுக்கும் பொருந்துமா? கிருஸ்துவ நாடுகளில் அடிக்கடி விவாகரத்து செய்து கொள்ளுகிறார்கள். ஒருவனுக்கு ஒருத்தி என்ற பண்பாடு இல்லை. இஸ்லாமிய நாடுகளில் 4 மனிவியர் வரை ஒரு ஆண் செய்துகொள்ளலாம் என்று உள்ளது. நபிகள்நாயகம் மட்டும் ஆறு மனிவியரை மணந்துள்ளார். இந்த கிருஸ்துவ இஸ்லாமியர் ஜாதகங்க்ளிலும் இது இருக்கிறதா? குழந்தை பிறந்த நாள் மற்றும் நேரம் மற்றும் அப்போதைய கிரக நிலைகளை வைத்து ஜாதகம் கணிக்கப்படுகிறது. எல்லா மதங்களிலும் குழந்தைகள் பிறந்கின்றன. அனைவருக்கும் பொருந்துமானால் எத்தனை மனைவியரை/ கணவர்களை ஒருவர் மணப்பார் என்பதை எப்படி ஜாதகத்தில் தெரிந்து கொள்ளுவது.


Next Post Next Post Home
 
Back to Top