( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

தீக்குளிக்க சொன்ன ஆவி !


   அந்த பெண்ணிற்கு வயது இருபது என்று அவள் தந்தையார் சொன்னார் ஆனால் நம்ப முடியவில்லை உருவ தோற்றமும் சரி முக அமையும் சரி அவளுக்கு பதினைந்து வயத்திற்கு மேல் இருக்காது என்று சொல்லியது குழந்தை தனமான பார்வை விளையாட்டு தனமான சிரிப்பு பார்த்தவுடன் எல்லோருக்கும் அவளை பிடிக்கும்படியான ஒரு தோற்றம் 

அவள் தந்தையார் அழுகின்ற குரலில் என் மகளை எப்படியாவது காப்பாற்றுங்கள் என்று சொன்னார் ஏன் உங்கள் மகள் நன்றாகத்தானே இருக்கிறாள் அவளுக்கென்ன பிரச்சனை என்று கேட்டேன் ஒருவருட காலமாக என்மகளை கொடிய ஆவி ஒன்று பிடித்து துன்புறுத்துகிறது பார்க்காத வைத்தியம் இல்லை போகாத மாந்திரீகர் இல்லை எல்லோருமே கையை விரித்து விட்டார்கள் நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும் என்று கெஞ்சினார் 

உங்கள் மகளை பிடித்திருக்கும் ஆவி என்னத்தொல்லை செய்கிறது அதனால் ஏற்படும் கஷ்டங்கள் என்ன? என்று அவரிடம் கேட்டேன் அதற்கு அவர் இவள் பெயர் காயத்திரி கணினி பொறியியல் படிப்பில் இரண்டாம் ஆண்டு படித்து கொண்டிருந்த போது தீடிர் என இரவு உறக்கத்தில் யாரோ தன்மீது விழுந்து அழுத்துவதாக உணர்திருக்கிறாள் இரண்டு நாள் கழித்தும் அதே போலவே உணர்வு ஏற்பட்டிருக்கிறது அன்று முதல் மிக தீவிரமான ஜுரத்தில் பத்து நாட்கள் அவதிபட்டாள் உடல்நிலை ஓரளவு தேறிய பிறகு மீண்டும் கல்லூரிக்கு செல்ல ஆரம்பித்தாள் அதிலிருந்து யாரோ காதுக்கறுகில் பேசுவது போல் இருந்திருக்கிறது முதலில் அவள் அதை பெரியதாக எடுத்துக்கொள்ள வில்லை நாளடைவில் அந்த பேச்சு சத்தம் அதிகரித்திருக்கிறது சில நேரம் இரண்டு மூன்று பேர் பேசுவது போலவும் தன்னை எங்கேயோ அழைப்பது போலவும் உணர்திருக்கிறாள் 

இதை வெளியில் சொல்லமுடியாமல் சொல்ல தெரியாமல் தனக்குள்ளேயே போட்டு குமைந்திருக்கிறாள் இரவில் உறக்கம் வராமல் தவித்திருக்கிறாள் இவள் தவிப்பதையும் வித்தியாசமான முறையில் நடந்து கொள்வதையும் கவனித்த உடனிருந்த தோழிப்பெண்கள் எங்களிடம் தொலைபேசியில் தகவல் சொன்னார்கள் நானும் இவள் அம்மாவும் பதறி போய்விட்டோம் எங்களுக்கு இருபது ஒரே மகள் அவளுக்கு இப்படி ஒரு பிரச்சனையை என்றால் தாங்கி கொள்ள முடியுமா?

எனவே பெண்ணை வீட்டுக்கு கூட்டிவந்து விட்டோம் அப்போது தான் தனக்கு நடப்பதை எங்களிடம் சொன்னாள் இது நிச்சயம் காத்துகருப்பு வேலையாகத்தான் இருக்கும் என்று நினைத்து விபூதி மந்திரித்து போட்டோம் ஒன்றும் பயனில்லை என் தம்பி தனக்கு தெரிந்த ஒரு மந்திரவாதியிடம் குழந்தையை அழைத்து போகலாம் என்றான் அங்கும் போனோம் 

அந்த மந்திரவாதி இவள் தங்கியிருந்த விடுதியில் தற்கொலை செய்து கொண்ட சில ஆவிகளின் நடமாட்டம் இருப்பதாகவும் அதில் இரண்டு ஆவி இவளை பிடித்து துன்புறுத்துவதாகவும் சொல்லி அதற்க்கான பூஜைகள் செய்து ஆவிகளை விரட்டி விடலாம் என்றும் சொன்னார் எப்படியாவது மகள் குணமானால் சரி என்று அந்த பூஜைகளையும் செய்தோம் நிலைமையில் எந்த முன்னேற்றமும் இல்லை 

அந்த வேளையில் என் நண்பர் ஒருவர் இவளின் மன நிலையில் இறுக்கம் ஏற்பட்டு இப்படி இருக்கலாம் எனவே மனோதத்துவ டாக்டரை பார்ப்பது நல்லது என்றார் நோய்க்கும் பார் பேய்க்கும் பார் என்ற பழமொழிக்கு இணங்க டாக்டரிடம் சென்றோம் அவர் இரண்டு மூன்று முறை கவுன்சிலிங் கொடுத்து மாத்திரைகளையும் தந்தார் அவர் சொல்லியப்படி மருந்துகளை கொடுத்து வந்தோம் அது அவளுக்கு நிறைய உறக்கத்தையும் மயக்கத்தையும் கொடுத்ததே தவிர நிவாரணத்தை தரவில்லை அந்த மருந்தை சாப்பிட சாப்பிட நரம்புகள் தளர்ந்து உடலும் மெலிந்து விட்டாள் 

வேறொருவர் இது நரம்பு கோளாறால் வந்த தொல்லையாக இருக்கலாம் எனவே நரம்பியல் மருத்துவரை பாருங்கள் என்றார் அப்படியும் செய்தோம் நாளுக்கு நாள் தொல்லை அதிகரித்ததே தவிர குறைய வில்லை தனக்குள் கேட்கின்ற மாய குரலால் பயித்தியம் பிடித்தவள் போல் நடக்க ஆரம்பித்து விட்டாள் ஒரு நாள் அந்த குரல் உடம்பில் நெருப்பு வைத்துக்கொண்டு செத்து போ என்று மீண்டும் மீண்டும் சொல்லியிருக்கிறது 

அந்த குரல் சொல்லியப்படி செய்தாலாவது தனது துயரம் நீங்காதா என்று நினைத்து உடம்பில் மண்ணெண்ணை ஊற்றி நெருப்பு வைத்துக்கொள்ள போய்விட்டாள் சதாநேரமும் அவளை கண்காணித்து கொண்டே இருந்ததினால் ஆபத்து இல்லாமல் காப்பாற்றி விட்டோம் ஆனாலும் எங்களையும் மீறி இப்படி எதாவது அசம்பாவிதம் நடந்து விடுமோ என்ற பயம் எங்களை வாட்டி வதைக்க ஆரம்பித்து விட்டது 

இந்த நேரத்தில் உங்கள் பதிவுகளை இணையதளத்தில் தொடர்ந்து படித்து வரும் என் நண்பர் உங்களை பற்றிய விவரங்களை சொல்லி எங்களை அனுப்பி வைத்தார் என் மகளின் கஷ்டத்தை நீங்கள் போக்குவீர்கள் என்று மலைபோல் நம்பி வந்திருக்கிறோம் எப்படியும் காப்பாற்றி விடுங்கள் என்று தழுதழுத்த குரலில் என்னிடம் கேட்டுக்கொண்டார் 

நான் அந்த பெண்ணின் ஜாதகத்தை கணித்து பார்த்தேன் ஜாதக ரீதியில் அமானுஷ்யமான சக்திகளின் தொல்லை அந்த பெண்ணிற்கு இல்லை என்பதை அறிய முடிந்தது பொதுவாக ஒரு ஜாதகத்தில் ராகு சந்திரன் செவ்வாய் ஆகிய கிரகங்கள் ஒரே ராசியில் சேர்க்கை பெற்று இருந்தாலோ அல்லது திரிகோணத்தில் இந்த கிரகங்கள் இருந்தாலோ ஆவி மற்றும் துஷ்ட தேவதைகளின் பாதிப்பு மனிதனுக்கு ஏற்படும் ஆனால் இந்த பெண்ணின் ஜாதகம் அப்படி எதையும் காட்டவில்லை 

ஆனாலும் அதை இன்னும் தெளிவாக உறுதி படுத்திக்கொள்ள முடிவு செய்த நான் அவர்களை வேறொரு நாள் வரசொல்லி விட்டு பிரசன்ன ஜோதிட முறையிலும் ஜைமினி ஜாதக முறையிலும் ஆராய்ந்து பார்த்தேன் அவைகள் அந்த பெண் மிக தீவிரமான மன நோயால் பாதிக்கப்பட்டு இருக்க வேண்டுமே தவிர ஆவிகளின் பாதிப்பு இல்லை என்றே உறுதிபடுத்தியது நான் அறிந்த இந்த உண்மையை அந்த பெண்ணிடமோ அல்லது அவள் பெற்றோரிடமோ சொன்னால் நம்பும் நிலையில் அவர்கள் இல்லை என்பது எனக்கு நன்றாக புரிந்தது காரணம் இந்த நோய்க்கான மூலம் ஆவி என்றே அவர்கள் உறுதியாக நம்பிக்கொண்டு இருக்கிறார்கள் அதை மாற்றி சொல்லும்போது அவர்கள் மனம் முதலில் ஈடுபாட்டுடன் ஏற்காது நான் சொல்லும் சிகிச்சை முறைகளையும் நம்பிக்கையுடன் செய்ய மாட்டார்கள் 

எனவே அவர்களிடம் பொய் சொல்வது என்று முடிவு செய்தேன் அவர்களை அழைத்து உங்கள் மகளுக்கு இரண்டு ஆவிகளின் தொல்லை அதிகமாக இருக்கிறது அவகளின் சக்தி அவள் உடம்பில் ஊறி போய்விட்டது எனவே உடம்பிற்குள் இருக்கும் தீய சக்தியை சில அமானுஷ்ய மூலிகைகளின் துணையோடு வெளியேற்ற வேண்டும் அதற்கு மூன்று மாதம் நான் சொல்லியப்படி நடக்க வேண்டும் என்றேன் அவர்களும் ஒத்துக்கொண்டார்கள் 

மருளுமத்தை என்ற மூலிகையை பொடிசெய்து விபூதியில் கலந்து அந்த பெண்ணை மூன்று மாதம் தண்ணீரில் கலக்கி சாப்பிட சொன்னேன் சில யோகாசன முறைகளையும் சொல்லி இவைகளையும் கண்டிப்பாக செய்ய வேண்டும் என்று கட்டளையிட்டேன் இத்தோடு ஜெர்மன் நாட்டில் தயாரிக்கப்படும் மலர்களை வைத்து செய்யப்படும் மருந்துகளையும் கொடுத்தேன் ஆனால் இவை எதையும் நான் மருந்து என்று அவர்களிடம் சொல்லவில்லை மாந்திரீக பொருட்கள் என்றே சொன்னேன் 

என்ன அதிசயம் பாருங்கள் ஒரு மாதத்திலேயே அந்த பெண்ணிற்கு நல்ல முன்னேற்றம் தெரிய ஆரம்பித்தது நான் வைத்திருந்த மூன்று மாத கால கெடுவிற்கு முன்பே அவள் நல்ல குணமாகிவிட்டாள் இப்போது விட்டிருந்த படிப்பையும் தொடர ஆரம்பித்தது விட்டாள் பொதுவாக நம்மால் புரிந்து கொள்ளமுடியாத பிரச்சனைகள் வந்தவுடன் அதை பேய் தொல்லை ஏவல்,சூனிய பாதிப்பு என்று முடிவு செய்து விடுகிறோம் இது தவறு எல்லோரையும் பேய்பிடிக்காது சூனியம் பாதிக்காது அதற்கென்று உள்ள கிரக நிலை உள்ளவர்களுக்கே அத்தகைய அமானுஷ்ய தொல்லை ஏற்படும் அந்த ஜாதக அமைப்புகள் எப்படி இருக்கும் என்று வேறொரு நாளின் சிந்திப்போம்.
+ comments + 10 comments

நல்ல வைத்தியம் செய்தீர்கள்.

இதிலிருந்து தெரிவது என்னவென்றால்.... இறுதியில் நன்மை நடக்குமானால், தர்மத்தை மீறுவதில் தவறே இல்லை! துரோணரை கொல்ல,பகவான் கிருஷ்ணர் இதைதான் செய்தார்.வாலி விசயத்தில் ராமர் செய்ததும் இதுதான்.

சில வியாதிகள் வந்தால்.. உடனே பேய் , ஆவி,சூனியம் என்று மனதை குழப்பி கொள்வது ஆபத்து..! பாமர மக்கள் இதைதான் செய்கிறார்கள். அதை சரியாக பயன்படுத்தி பணம் சம்பாதிகிரார்கள் சில போலி சாமியார்கள்.

எனக்கு தெரிந்த ஒரு அம்மாவுக்கும் அவரின் தம்பிக்கும்,சொத்து விசயத்தில் சில பிரச்சனைகள். உறவினர்கள் மத்தியில் பேச்சுவார்த்தை நடந்து கொண்டு இருந்தது.தாயாரின் நிலத்தை விற்க தம்பி சம்மதிக்கவில்லை. மூத்த அக்காவுக்கு, அந்த நிலத்தை விற்று, மற்ற சகோதர சகோதரிகளுக்கு பகிர்ந்து அளிக்க விருப்பம்.

இந்த நேரத்தில்தான் அந்த அம்மாவுக்கு சொரியாசிஸ் என்ற நோய் வந்தது.உடனே மூட்டு வழியும் வந்தது. யார் சொனார்களோ தெரியவில்லை. தன் தம்பிதான் தனக்கு சூனியம் விட்டு விட்டான் என்று நம்பி, சில சாமியார்களை கண்டு, பணத்தை விரயமாகி உள்ளார்கள். பிறகு, நோய் முற்றவே...ஒரு ஆயுர்வேத மருத்துவரை கண்டு சிகிச்சை பெற்று பல நாட்கள் சென்று குணமானார்கள்.

இதில் ஒரு அநியாயம் என்னவென்றால்.. ஒரு சாமியார்.. உன் தம்பி.. மிகவும் கொடியவன், உன்னை கொலை செய்ய கூட தயங்க மாட்டான் என்றெல்லாம் கூறியிருக்கிறான். சிலர் சொல்லி நான் கேள்வி பட்டேன்.

நான் சொல்வது உண்மை.. ஏன் என்றால்... அந்த அம்மா வேறு யாரும் அல்ல.. என்னை பெற்ற அம்மாதான்.

பல தடவை நான் அவரிடம் சண்டை போட்டு, சாமியாரிடம் போகாதீர் பணத்தை இப்படி வீணாக செலவு செய்யாதிர்கள் என்று சொன்ன போதெல்லாம், என் பேச்சை கேட்க வில்லை அவர்.

பிறகு இறுதியாக, உண்மையை உணர்ந்தார்.


ஆகவே... பேய் ஆவி,சூனியம் என்பதெல்லாம் பொய் என்று நான் சொல்லவரவில்லை. அனால், உடம்பில் நமக்கு என்ன வியாதி வந்தாலும் , அவைகள்தான் காரணம் என்று நம்பி கொண்டு இருப்பது மிகவும் அறிவீனம்.

ஐயா அவர்களின் சேவைக்கு எமது நன்றிகள்.

Super treatment Guruji!

Anonymous
22:36

Very good service to Humanity

Gopalakrishnan.P

Very Very ... Super treatment Guruji!

Anonymous
19:27

Mokka treatment Guruji.

v good guruji . thanks alot

Anonymous
22:37

guru avargale ennudaiya raasikku aavi ,pilli,sooniyam ivaigalin thaakkam earpada vaaippu ullatha enakku kadaga raasi poosa nakshathram DOB 11-04-1992 thaivu seithu enakku reply pannunga my mail id is goodguy1028@yahoo.com

ungaludaya padaipugalai aaraindhu paarkaiyul en ull unarvu ithai kerkka murpadukirathu athe pol ennudaiya kalvi nilamaiyum sollunga guruji

Nice you or grate

23:28

கணபதி என்றிடக் கலங்கும் வல்வினை
கனபதி என்றிடக் காலனும் கைதொழும்
கனபதி என்றிடக் கருமம் ஆதலால்
கனபதி என்றிடக் கவலை தீருமே
வணக்கம் ஐயா
திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளம் தொகுதி நல்லூர் ஊராச்சி காசியாபுரம் கிராமம் எங்களுடைய ஊர். நாங்க 800 வீட்டு காரங்க எங்களோட குல தெய்வம் பெரும்படை சாஸ்த. எங்க குடும்பத்து பெயர் சுரன்டையான் வகையார். எங்க குடும்பத்த சார்ந்தவர் காந்தி. இவர் மிக பெரிய கரி தொழில் (ஏவல், பில்லி, சூனியம், செய்வினை) செய்யும் மந்திரவாதி . இவரால் பாதிப்பு அடைந்தவர்கள் ஏராளம். இவர் செய்யும் தொழில் வீட்டு மனை, நிலம் பட்டா வாங்கி கொடுத்தல். தனது மாந்திரத்தால் ஏவல், பில்லி, சூனியம், செய்வினை போன்ற தீயசக்திகள் மூழம் தொழில் போட்டி காரணமாகவோ இல்லை கருத்து வேறுபாடு காரணமாகவோ தன்னை எதிர்ப்பவர்களின் குடும்பத்தில் விரிசல்களை ஏர்படுத்துதல், பணச்செலவு, நேரவிரயம், ஏமாற்றம், தோல்வி,நோய்கள், சமாதனம் சீர்குலைவு,பயம்,சண்டைகள், ,கொள்ளைகள், அடுத்தவர் தம்மீது அதிருப்தியை ஏற்படுத்த செய்தல், அகால மரணம் (வெட்டுப்பழி, குத்துப்பழிகள் ஏற்படுதல்,கொலைகள் விபத்து, தற்கொலை), உடல்பாதிப்பு, மனநோய், போன்ற பல கொடுரமான சித்து விளையாட்டுகளை செய்கிறார்.
இந்த மாதிரியான கரி தொழில் செய்வதருக்கு சுரன்டையார் வகையார் கோயிலில் வடகிழக்கு திசையில் உள்ள இசக்கி அம்மன் மற்றும் காவல் தெய்வங்களையும் அவருடைய மந்திர கட்டுக்குள் வைத்து உள்ளார். அதே குலதெய்வ கோவிலில் திருவிழா அன்று போலியாக சாமி ஆடி மக்களை ஏமாத்துறான். நாங்க அனைவரும் இந்த பிரச்சனைல இருந்து தப்பிக்க பொய் மந்திரவாதிகளிடம் பொய் பணத்த இழந்ததுதான் மிச்சம். இதில் கொடுமை என்னவென்றால் இந்த உண்மை எங்க குடும்பத்தை சார்ந்த மக்களுக்கு தெரிஞ்சு இருந்தாலும் அவர எதிர்க்க பயப்படுறாங்க. பத்திரிக்க (invitation) வைக்காமையே எல்லா நல்ல விசேசங்ககளுக்கும் கலந்து கொள்கிறான். எல்லாத்துகிட்டயும் நல்லவன் மாதிரி பேசி அவனுக்கு தேவயானாத சாதிக்கிறான். நிறைய மக்கள் நம்ம குடும்பத்துக்கு இவனால எந்த பாதிப்பும் வர கூடாதுன்னு பழகுறாங்க. ஆனா அவங்க தான் அதிகமா பாதிக்கிறங்க. எல்லாரும் ஒன்னு சேர்ந்து ஏதாவது பண்ணனும்னு நினச்ச கூட எல்லாரும் கடவுள் பார்த்துபார்னு சொல்லி ஏதுவும் பண்ண முடியல. கடவுள கட்டி போட்டு கடவுள் பார்த்துபார்னு சொன்னா எப்படி ஐயா ?? இவனுக்கு பயந்துபோய் பாதி பேர் கிறித்தவ மதத்துக்கு மாறிட்டாங்க. எப்படியாவது சுரன்டையான் குடும்பத்து மக்கள காபாத்துங்க ஐயா. உங்கள கெஞ்சி கேக்குறேன் ஐயா.


Next Post Next Post Home
 
Back to Top