( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

நாயை கண்டால் கல்லை காணோம் !


  •    ருவரோடு ஒட்டி உறவாடி அவருக்கு துரோகம் செய்வதை எந்த தர்மமும் ஏற்காது எந்த நாட்டு சட்டமும் அதை ஒத்துக்கொள்ளாது இது தான் நாகரீக சமூகத்தின் மனித நேய நிலை தமிழனும் அவன் பண்பாடும் மிக உயர்ந்தது என்று நாம் கருதுகிறோம் அப்படி பட்ட தமிழனே பகைவனை உறவாடி கெடு என்று பழமொழி பேசுகிறான் எதிரியை நேருக்கு நேராக மோதி வெற்றி கொள்வது தான் வீரமே தவிர தோளின் மேல் கைபோட்டு கழுத்தை நெரிப்பது சரியான வீரத்திற்கு அழகல்ல எனவே தமிழனின் பகைவனை உறவாடி கெடு என்ற பழமொழியை ஒழித்து கட்டுவது சரி என்று நான் நினைக்கிறேன் நீங்கள் என்ன நினைக்கீறீர்கள் 

புலவர்.புவியரசன் M.A Med ,மேட்டுப்பாளையம்    ரப்பின் மீது நடந்து போகும் போது நம்ம மாணிக்க நாடாரை பாம்பு கடித்துவிட்டது சரியான வைத்தியம் செய்வதற்கு முன்பே முக்கால் பங்கு பயத்தாலும் கால்பங்கு விஷத்தாலும் மனிதன் போய் சேர்ந்துவிட்டார் என் அப்பாவை பாம்பு கடித்து கொன்றுவிட்டது அதனால் ஊரில் உள்ள பாம்புகளை எல்லாம் கொல்லபோகிறேன் என்று மாணிக்க நாடார் மகன் கிளம்பி விட்டால் அவனை புத்திசாலி என்று நம்மால் ஏற்று கொள்ள முடியுமா? 

பாம்பாக இருக்கட்டும் அல்லது வேறு எந்த விஷ பூச்சிகளாக இருக்கட்டும் ஒவ்வொரு படைப்பிற்கும் அர்த்தம் இருக்கிறது பயனும் இருக்கிறது ஒரு நாடு வளமாக இருக்கிறதா இல்லையா என்பதை அந்த நாட்டில் உள்ள புலிகளின் எண்ணிக்கையை வைத்து சொல்லிவிடலாம் என்பார்கள் மனுஷயனை பார்த்தால் கடித்து குதறும் புலிக்கும் நாட்டு வளர்ச்சிக்கும் என்ன சம்பந்தம் இருக்குகிறது என்று நமக்கு தோன்றும் புலிகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தால் அவைகள் வேட்டையாடும் மான்கள் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கவேண்டும் அதிகமாக இருக்கும் மான்கள் செழிப்பாக வளர நிறைய புற்களும் நல்ல தண்ணீரும் வேண்டும் இவை இரண்டும் பஞ்சமில்லாமல் கிடைக்கிறது என்றால் அந்த பகுதியில் மழைக்கு குறைவில்லை என்று அர்த்தம் மழை வந்தால் மகசூல் பெருகும் அது தானே நாட்டின் வளர்ச்சி 


அதே போலவே உலகில் உள்ள அனைத்தும் எதாவது ஒரு காரணத்திற்க்காக படைக்கபட்டிருக்கிறது எனக்கு அது தொல்லையாக தெரிகிறது என்பதற்காக ஒவ்வொன்றையும் அழிக்க போனால் கடேசியில் எதுவும் மிஞ்சாது அதுவும் குறிப்பாக பண்பாடு கலாச்சாரம் போன்ற நுணுக்கமான விஷயங்களில் சீர்திருத்தம் பண்ணுகிறேன் புதுமையை செய்திறேன் மனித நேயத்தை வளர்கிறேன் என்று ஏடா கூடமாக எதாவது செய்ய போனால் கடேசியில் எந்த பண்பாடும் மிச்சமில்லாமல் அழிந்து போகும் எனவே ஒன்றை மாற்றி இன்னொன்றை செய்வதற்கு பதிலாக புதிதாக ஒன்றை உருவாக்க பாருங்கள் அது பழமையை விட பயனுள்ளதாக இருந்தால் எல்லோரும் ஏற்று கொள்வார்கள் பழமையும் அழியாமல் வாழும் 

தமிழன் எப்படி பண்பாட்டில் கெட்டிக்காரனோ அதே போலவே ஒன்றை தப்பாக புரிந்து கொள்வதிலும் தான் புரிந்து கொண்டது சரி என்று வாதிடுவதிலும் கெட்டிக்காரன் எந்த ஊரிலாவது பெரியமனுஷன் என்று பெயரெடுத்தவன் உண்ட வீட்டுக்கு இரண்டகம் பண்ணு நம்ப வச்சி கழுத்தறு என்று சொல்வானா? அப்படி சொன்னால் அவன் பெரிய மனுஷனா நம்ம பழைய கால தமிழன் இருக்கானே அவன் நிஜமாகவே பெரிய மனுஷன் அவன் இப்படி பட்ட குதர்க்க புத்தியை யாருக்கும் சொல்லித்தர மாட்டான் என்னென்றால் அவனுக்கு அது தெரியாது 


பல பழமொழிகளை தப்பாகவே நாம் புரிந்து கொண்டிருக்கிறோம் பயன் படுத்தியும் வருகிறோம் அப்படி பட்ட ஒன்றுதான் பகைவர் குடியை உறவாடி கெடு என்ற பழமொழியாகும் உதாரணமாக அடியாத மாடு படியாது என்ற பழமொழியை அடிக்கடி கேட்டிருக்கிறோம் இதற்கு அர்த்தம் சண்டித்தனம் பண்ணுகின்ற மாட்டை திருத்த வேண்டுமென்றால் அடித்து உதைக்க வேண்டும் அப்போது தான் வலிக்கு பயந்து வேலையை ஒழுங்காக செய்யும் என்று நாம் நினைத்து கொண்டிருக்கிறோம் உண்மையில் இந்த பழமொழிக்கு இது அர்த்தமல்ல 

அடியாத மாடு படியாது என்றால் ஒவ்வொரு வார்த்தைக்கும் தனித்தனி பொருளை காண வேண்டும் அடி என்பது உதைப்பதை மட்டும் குறிக்காது நீளம் முடிவு என்ற பொருட்களோடு கஷ்டம் பாடுபடுதல் என்ற பொருளையும் குறிக்கும் அதே போல பழமொழியின் அடுத்த வார்த்தை மாடு என்பது நாலு காலுள்ள ஜீவனை மட்டும் சுட்டிக்காட்டாது மனித வாழ்க்கைக்கு தேவையான பொருள் வளத்தையும் அதாவது செல்வத்தையும் மாடு என்ற வார்த்தை குறிக்கும் அடுத்தது படியாது என்றால் அது பணிந்து போகாது என்று பொருள் கொள்ள கூடாது நிலைக்காது பதியாது என்பது அர்த்தமாகும் அதாவது கஷ்டப்பட்டு சேர்க்காத செல்வம் நிலைக்காது என்பது தான் அடியாத மாடு படியாது என்ற பழமொழியின் உண்மை பொருள் அதை விட்டு விட்டு தமிழன் ஜீவகாருண்யமே இல்லாமல் போதனை செய்கிறான் என்பது அறிவுடைமை ஆகாது 


வேறொரு உதாரணத்தையும் இங்கு சொல்ல வேண்டும் நாயை கண்டால் கல்லை காணோம் கல்லை கண்டால் நாயை காணோம் என்ற பழமொழியை எடுத்து கொள்வோம் இதற்கு நாயும் கல்லும் ஒரே நேரத்தில் கிடைக்காது என்பதா பொருள்? அப்படி பட்ட பழமொழியை சொல்வதனால் என்ன பயன் இருக்கிறது நிச்சயம் இந்த பழமொழியின் பொருள் இதுவல்ல ஆலயத்தில் சிலையாக இருக்கும் இறைவனை கல்லாக பார்த்தால் அது கல்தான் உலகத்தை படைத்த இறைவனான நாயகனை பார்த்தால் அது கல்லாக தெரியாது கடவுளாகவே தெரியும் நாயகன் என்ற வார்த்தை நாய் என்று மருவி விட்டதே இதன் அர்த்தம் அனர்த்தனம் ஆன கதை 

அதே போன்று தான் பகைவர் குடியை உறவாடி கெடு என்ற பழமொழியும் நம்மால் தவறுதலாக பொருள் கொள்ளப்படுகிறது ஒருவன் உன்னை பகைவனாக எதிரியாக நினைத்து வன்மம் பாராட்டினால் அவன் மீது பதிலுக்கு பதில் நீயும் வன்மம் பாராட்டாதே மாறாக அவனோடு உறவாடு அவன் உன்னை சரியாக புரிந்து கொள்ளுமாறு அவன் மனதிற்குள் வளர்ந்து நிற்கும் பகைமை என்ற தீய எண்ணம் கெடுமாறு அதாவது இல்லாது போகுமாறு அன்பு பாராட்டி அவனையும் நல்வழி படுத்து என்பதே இந்த பழமொழியின் உண்மை பொருள் இதில் வருகின்ற குடி என்ற வார்த்தை பகைவரின் குடும்பத்தாரையும் சேர்த்து அவர்களுக்குள்ளும் பகமை இல்லாதவாறு செய் என்று தான் பொருளே தவிரே அவர்கள் குடும்பத்தையே அழித்து விடு என்று என்பதல்ல 

நம் நாட்டிலும் சரி வீட்டிலும் சரி பல பிரச்சனைகள் உருவாவதே தவறுதலாக சில விஷயங்களை புரிந்து கொள்ளுதலே ஆகும் நின்று நிதானமாக சிந்தித்து சரியாக எதையும் புரிந்து கொள்ள முயற்சி செய்தோம் என்றால் எந்த இடத்திலும் சண்டை சச்சரவுகள் வராது ஆனால் இதை பல நேரங்களில் நாம் மறந்து விடுகிறோம் இதனாலேயே அவஸ்தையும் படுகிறோம்.


+ comments + 13 comments

நிறைய பழமொழிகளை இப்படித்தான் தவறாக எடுத்துக் கொள்கிறோம். அருமையான தகவலுக்கு நன்றி!

குருஜி,

மிகவும் அருமையான விளக்கம்.
இப்பொழுதுதான் எல்லோர்க்கும் இதன் உண்மையான பொருள் விளங்கும்.

மிக்க நன்றி.

அன்புடன்
பொடியன்

Anonymous
14:37

குருஜி உங்களுடைய ஆழ்ந்த தமிழ் புலமையை நினைத்தால் வியப்பாக இருக்கிறது...உண்மையில் நீங்கள்தான் உண்மையான தமிழ் அறிஞர்....தற்போது நாட்டில் தமிழ் அறிஞர்கள் என்று கூறி கொண்டு திரியும் பலபேருக்கு தமிழ் பழ மொழியின் உண்மையான அர்த்தம் தெரியுமா என்பது சந்தேகம் தான்.....உங்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்...

Anonymous
15:09

நன்றி ஐயா, மிகவும் அருமையான விளக்கம். நீங்கள் எழுதியதை முழுமையாக வாசிக்கும் வரை, இந்த பல மொழிகளின் உண்மையான அர்த்தத்தை தெரிந்து இருக்க மாட்டோம். அன்புடன்... ஜெர்மனி யில் இருந்து ராஜேந்தரம்

dr,shakila
17:48

mega nalla pathivu

vvs
17:55

good

சாத்தானின் வேதங்கள் !
சாத்தானின் வேதங்கள் !

உலகில் தோன்றிய மதங்கள் ,சமயங்கள் சாதிகள் சாத்திரங்கள் யாவும் சாத்தானின் வேதங்களாகும் .சாத்தான் .சைத்தான் மாயை என்பது அனைத்தும் ஒன்றையே குறிப்பதாகும் இவைகளில் சிக்குண்டவர்கள் எழுதியதுதான் உலகில் உள்ள அனைத்து வேதங்களும்ஆகும். மாயையில் சிக்குண்டவர்க்ளால் சுத்தமான உண்மையை தெரியப் படுத்த முடியாது /

சாத்தானின் வேதங்கள் என்று இஸ்லாம் மதத்தை பற்றி இஸ்லாம் மதத்தை சேர்ந்த சாலமன் ருஷ்டி என்பவர் தெளிவாக விளக்கி உள்ளார்.அவர் அப்படி எழுதி உள்ளதால் அவரை எங்கு இருந்தாலும் சுட்டு கொலை செய்ய அரேபிய நாட்டு இஸ்லாம் மதத தலைவர்கள் ஆணை இட்டார்கள் அதனை கேள்வியுற்ற சாலமன் ருஷ்டி தலை மறைவானார் அவர் எழுதிய புத்தகத்தை வெளியே வராமல் அழித்து விட்டார்கள் உண்மையை சொல்பவர்களை இந்த உலகம் அழித்து விடுகிறது .

சமயங்கள் மதங்கள் யாவும் கொல்லும் கொலைககாரக் கடவுளையே அறிமுகப் படுத்தி உள்ளது கொல்லும் கடவுளைப் பற்றியே பேசுகிறது அந்த கடவுள் யாவும் கோபம உடையது என்றும் கூறுகிறது .இதற்கு சமய ,மத வேதங்களும் சாத்திரங்களே ஆதாராமாகும்.

எல்லா மதங்களும் கடவுளுக்கு களங்கம் கற்பித்து உள்ளன உண்மையான கடவுளை யாரும் கண்டதில்லை காரணம் அனைவரும் மாயையில் சிக்குண்டவர்கள் அவர்கள் கண்டது எழுதியது அனைத்தும் குற்றம் உடையதே .உண்மையான கடவுளை கண்டவர்களுக்கு மரணம் வராது, எந்த சக்தியாலும் அவர்களை அழிக்க முடியாது .மரணம் அடைந்தவர்கள் எழுதியது அனைத்தும் சாத்தானின் வேதங்கள் என்பதை மனிதகுலம் அறிந்து கொள்ள வேண்டும் .

இன்றுவரை சாதியிலே மதங்களிலே சமய நெறிகளிலே சாத்திரச சந்தடிகளிலே கோத்திர சண்டையிலே ஆதியிலே அபிமாநித்து அலைகின்ற உலகீர் அலைந்து அலைந்து வீணே அழிதல் அழகலவே என்று வள்ளலார் அனைத்து மதங்களையும் சாடி உள்ளார்.

நமது வள்ளல பெருமான் அவர்கள் உண்மையான கடவுளை அறிந்து உணர்ந்து கண்டு கலந்து இந்த உலகத்திற்கு அறிமுகப் படுத்தி உள்ளார் என்பது மாபெரும் உண்மையாகும்

அந்த உண்மையானக் கடவுள்தான் '''அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெரும்ஜோதி என்பதாகும் .

.ஏன் அவர் மட்டும் உண்மையான கடவுளைக் கண்டார் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.அவர் மாயையில் அதாவது சாத்தானின் வழியில் வலையில் சிக்க வில்லை .உலகில் உள்ள எந்த பொருளையும் அவர் அனுபவிக்கவில்லை என்றும் அழியாமல் காக்கும் அருள் என்னும் பொருளை அருட்பெரும் ஜோதி ஆண்டவரிடம் முழுமையாக பெற்றுக் கொண்டவர் வள்ளலார் அந்த அருளைப் பெற்றவர்கள்தான் உண்மையை உணரமுடியும் உரைக்க முடியும் எழுத முடியும் ..அப்படி அவர் எழுதியதுதான்,''திருஅருட்பா' என்னும் ஞான நூலாகும்.

வள்ளலாருக்கு மரணம் என்பது கிடையாது கடவுள் நிலை அறிந்து அம்மயமானவர் அதாவது ஒளி தேகம் பெற்றவராகும்.அவர் அருள் ஞானத்தால் மக்களுக்கு காட்டிய தெய்வம் அருளாகவும் கருனையாகவும் விளங்கிக் கொண்டு உள்ளது அதுவே அருட்பெரும்ஜோதி என்னும் கடவுளாகும் .அது எங்கும் உள்ளது அது எல்லா உயிர்களிலும் உயிர் ஒளியாக இயங்கிக் கொண்டு உள்ளது ஆதலால் எல்லா உயிர்களையும் தம் உயிர்போல் பாவிக்க வேண்டும் .அதற்கு ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமை என்னும் பெயர் வைத்தார் வள்ளலார் .

ஆதாலால் கொல்லாமையும் புலால் உண்ணாமையும் வேண்டும் என்று மிகவும் கடுமையாக வலியுறுத்தி உள்ளார் அதுவே கடவுளை அறிய முக்கிய திறவு கோலாகும் என்றார் .அவர் காட்டிய மார்க்கம் புனிதமானது உண்மையானது .

சுத்த சன்மார்க்கம் ;--சமயம் மதம் கடந்த மார்க்கம் .
சுத்த சன்மார்க்கம் ;--ஞான மார்க்கம் .
சுத்த சன்மார்க்கம் ;--ஒப்பற்ற உயர்ந்த மார்க்கம் .
சுத்த சன்மார்க்கம் ;--சத்திய மார்க்கம் .
சுத்த சன்மார்க்கம்;---சாகாக் கல்வி கற்கும் மார்க்கம்.

ஆதலால் சாத்தானின் வேதங்களை ஓதாமல் உணராமல் ,உண்மையான சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தை சார்ந்து உணர்ந்து ஆன்ம நேயத்தோடு ஜீவ காருண்யத்தோடு.உயிர்க் கொலை செய்யாமலும் புலால் உண்ணாமலும் மகிழ்ச்சியுடன் வாழ்வோம் .

வள்ளலார் அழியாத் தேகம் பெற்ற பாடல் ஒன்று ;--

காற்றாலே புவியாலே ககனம் அதனாலே
கனலாலே புனாலே கதிர் ஆதியாலே
கூற்றாலே பிணியாலே கொலைக கருவியாலே
கோளாலே பிறர இயற்றும் கொடுஞ் செயல் களாலே
வேற்றாலே எஞ்ஞான்றும் அழியாதே விளங்கும்
மெய் அளிக்க வேண்டும் என்றேன் விரைந்து அளித்தான் எனக்கே
ஏற்றாலே இழிவு என நினையாதீர் உலகீர்
என் தந்தை அருட்பெரும் ஜோதி இறைவனைச சார்வீரே !

எல்லாருக்கும் பொதுவான உண்மையான அருட்பெரும் ஜோதிஆண்டவரை நினைந்து நினைந்து உணர்ந்து உணர்ந்து நெகிழ்ந்து நெகிழ்ந்து அன்பே நிறைந்து நிறைந்து ஊற்று எழும் கண்ணீரால் அழுது அழுது தேடுங்கள் எல்லா நன்மைகளும் கிடைக்கும் .

அன்புடன் ஆன்மநேயன் கதிர்வேலு .

மீண்டும் பூக்கும் .

Anonymous
18:27

@செ.கதிர்வேலு

கிறிஸ்துவர்களும் முஸ்லிம்களும் மட்டும்தான் மதவெறி பிடித்தவர்கள் என்று நினைத்திருந்தால் வள்ளலாரை வணங்குபவர்களும் மதவெறி பிடித்தவர்கள் என்பதை உங்கள் பதிவின் மூலம் தெரிந்து கொண்டேன்...கதிர்வேலு வள்ளலாரை பற்றி உயர்வாக பேசுவதும் அவருடைய கருத்துக்களை கூறுவதும் உங்கள் உரிமை ஆனால் மற்ற மதங்களை மற்ற மதங்களின் வேதங்களை குறை கூறுவதற்கு உங்களுக்கு உரிமை இல்லை.. இந்துகளிடமே மாயை பற்றியும் ஆத்மாவின் தத்துவம் நீங்கள் கூறுவது வேடிக்கையாக உள்ளது..மேலும் வள்ளலார் எதையும் புதியதாக கூறவில்லை இந்து மதத்தின் கருத்துகளைதான் வள்ளலார் எடுத்து கூறியுள்ளார்..எனவே எனவே வள்ளலாருடைய ஆன்மிக கருத்துகள் ஏதும் அவருக்கு சொந்தமில்லை...

M.Natrayan
21:09

கடவுளை இதுவரை யாரும் கண்டதில்லை! ஆனால் சாத்தான் என்றும் சைத்தான் என்றும் இருப்பது மட்டும் எப்படி தெரியும்!! கடவுள் இருப்பரேயானால் மனிதர்கள் எப்படி வாழவேண்டும் என்பதை சொல்லி இருப்பார். ராமாயணம் மகாபாரதம் போன்ற இதி காசங்களில் மக்களின் வாழ்க்கை முறை காட்டப்படுகிறது. இராமாயணத்தில் கடவுள் தானே பிறந்து வந்து மனிதர்கள் எப்படி வாழவேண்டுமென்று வாழ்ந்து காட்டி உள்ளார். அதனை அனைவரும் பின்பற்ற வேண்டும். மற்ற மதங்களில் கடவுளாக சித்தரிப்பவர்கள் மனிதனுக்கு உகந்த வாழ்க்கை முறையில் வாழ்ந்ததாக தெரியவில்லை. கிருஸ்து திருமணமாகாமல் வாழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது. முகமதுவின் வாழ்க்கை மனிதசமுதாயத்திற்கு ஏற்புடையதல்ல. கணவன் மனைவி எப்படி ஒருமித்த கருத்தோடு வாழவேண்டும் என்பதை உலகிற்கு எடுத்துகாட்டியவர்கள் ராமனும் சீதையுமே. ஒருவனுக்கு ஒருத்தி என்பதுதான் உலகில் நல்ல உயர்ந்த பண்பாடு. மேற்கத்திய நாகரீகமும் அரபு நாகரீகமும் மனித சமுதாயத்திற்கு ஏற்புடையதல்ல.

M.Natrayan
21:19

கிருஷ்துவர்களும் முஸ்லீம்களும் மதவெறி பிடித்தவர்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. உலகநாடுகள் முழுவதிலும் இன்று இஸ்லாமிய பயங்கரவாதம் ஆட்டிப்படைக்கிறது. மக்கள் அச்சத்துடன் வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள். இது அனைவரும் அறிந்த உண்மை. கிருஸ்தவர்கள் மதமாற்றம் என்ற பெயரில் மக்களை இம்சைக்கு உள்ளக்குகிரார்கள். இந்து மதத்தில் அப்படி எதுவும் இல்லை. கோவிலுக்கு சென்று வந்தால் ஆண்டவனை தரிசிக்க மட்டுமே. ஆனால் மசூதிகளிலும் சர்ச்களிலும் அரசியல் பிரச்சாரம்தான் நடக்கிறது. அதுவும் இந்துமதத்தை பலிப்பதையே குறிக்கோளாக உள்ளனர்.

வணக்கம் குருஜி
ஒரு சிறிய சந்தேகம். தெரிந்து கொள்வதற்காக கேட்கின்றேன் . தற்காலத்தில் மூளைச் சாவு [brain death ] என்று பத்திரிக்கைகளில்
பரவலாக வருகிறது. இது சமயம் நமது மகான்கள் [சித்தர்கள் ] தெரிவிப்பது என்ன ? விரிவாக கூறவும்.
அன்புடன் s . v .

Anonymous
13:33

பழமொழிகள் வாழ்க்கை அனுபவங்களைத் தெரிவிப்பவை அனுபவ மொழிகள் உயர்வான கருத்தைத் தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை. அவற்றுக்கு வலிந்து பொருள் கொடுப்பது சரியன்று. ----ராமா


Next Post Next Post Home
 
Back to Top